ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
 வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  Poll_c10 வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  Poll_m10 வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  Poll_c10 
heezulia
 வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  Poll_c10 வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  Poll_m10 வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  Poll_c10 
mohamed nizamudeen
 வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  Poll_c10 வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  Poll_m10 வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !

5 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

 வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  Empty வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !

Post by krishnaamma Sat Dec 19, 2015 11:55 pm

ஏகாதசி விரதம் இருப்பவர்கள் ,  இரவு முழுவதும் விரதம் இருப்பது நல்லது!

 வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  HacEXii9QbqmhOvMmarL+8b641484-2f6f-43fc-8731-45d55c6d0419_S_secvpf


ஏகாதசி விரதம் இருப்பவர்கள் ஏகாதசிக்கு முதல் நாள் தசமி அன்று பகலில் ஒரு வேளை மட்டும் உணவு சாப்பிட்டு மற்றும் ஏகாதசியன்று அதிகாலையில் கண்விழித்து குளித்துவிட்டு, பூஜை செய்து விரதம் இருக்க வேண்டும். இரவு முழுவதும் கண்விழித்து புராண நூல்களை படிப்பதும், பகவான் நாமங்களை சொல்லுவதுமாக இருக்க வேண்டும். 

ஏகாதசிக்கு மறுதினம் துவாதசி என்பர். துவாதசி அன்று உணவு அருந்துவதை பாரணை என்று கூறுவர். துவாதசியன்று அதிகாலையில் உப்பு, புளிப்பு முதலிய சுவையற்ற உணவாக சுண்டைக்காய், நெல்லிக்கனி, அகத்திக்கீரை இவைகளைச் சேர்த்து பல்லில் படாமல் “”கோவிந்தா! கோவிந்தா!, கோவிந்தா!!!’’ என்று மூன்று முறை கூறி ஆல் இலையில் உணவு இட்டு சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும். உணவு சாப்பிடும் முன் அதை பெரியோர்களுக்கு வழங்க வேண்டும். 

அன்று பகலில் தூங்காமல் இருக்க வேண்டும். 8 வயதிற்குட்பட்ட குழந்தைகள், 80 வயதிற்குட்பட்ட பெரியவர்கள் ஆகியோர் விரதம் மேற்கொள்ளத் தேவையில்லை என்று சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. விரத மகிமை  வைகுண்ட ஏகாதசி விரதம் பக்தியிலும், புண்ணியத்திலும் உயர்ந்து சிறந்து விளங்குகிறது. ‘’மார்கழி மாதம் ஏகாதசி விரதம் இருந்து வழிபடுவோருக்கு யாம் வைகுண்ட பதவி அளித்து ஆட்கொள்வோம்‘’ என்பது திருமால் வாக்கு. இதனால் இவ்விரதம் மகிமை வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

ஆண், பெண் அனைவரும் பின்பற்ற வேண்டிய பெருமைமிக்க விரதமானது வைகுண்ட ஏகாதசி விரதம். பதினைந்து நாட்கள் கொண்ட ஒரு காலப்பகுதியை ஒரு பட்சம் என்கிறோம். தேய்பிறை, வளர்பிறை ஆகிய இந்த இரண்டு பட்சங்களில் ஒவ்வொன்றிலும் 11வது நாளின் (திதியில்) வருவது ஏகாதசி ஆகும். இதில் மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியை நாம் வைகுண்ட ஏகாதசியாக வணங்குகிறோம். 

கர்மேந்திரியங்கள் ஐந்து, ஞானேந்திரி யங்கள் ஐந்து, மனம் ஆகிய இந்த பதினொரு இந்திரியங்களால் செய்யபடும் தீவினைகள் எல்லாம் இந்த பதினோராவது திதியில் ஏகாதசி விரதம் இருந்தால் அழிந்து விடுவது உறுதி என்று முன்னோர்கள் கூறுவர். ஏகாதசி அன்று இரவும், பகலும் விரதம் இருந்து மஹாவிஷ்ணுவை துதிப்போருக்கு இந்தப் பிறவியில் நிலைத்த புகழ், நோயற்ற வாழ்வு, நன்மக்கட்பேறு முதலியவற்றை பகவான் அளிப்பதோடு, மறுபிறவியில் வைகுண்டவாசம் “சொர்க்கவாசல்” வழங்குவதாக புராணங்களில் கூறப்படுகிறது.

மாலை மலர்  


Last edited by krishnaamma on Sat Dec 19, 2015 11:58 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  Empty Re: வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !

Post by krishnaamma Sat Dec 19, 2015 11:57 pm

நிலைத்த புகழ், வளரும் செல்வம் தரும் வைகுண்ட ஏகாதசி !


 வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  8uVc7tgTHiM0s6s6OMbg+c8766995-f5a5-42dd-a992-57fffdbb91e6_S_secvpf



ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி நாட்களிலிருந்து 11-ஆம் நாள் ஏகாதசி. அவை சுக்லபட்ச ஏகாதசி, கிருஷ்ணபட்ச ஏகாதசி என அழைக்கப்படுகின்றன. அந்த நாட்களில் முழு உபவாசம் இருந்து, மறுநாள் துவாதசியில், பூஜை முடித்த பின்பே காலை உணவு உட்கொள்வது வழக்கம். ஒரு வருடத்தில் 24 அல்லது 25 ஏகாதசிகள் வரும். 

அனைத்து ஏகாதசிகளிலும் விரதமிருந்து வழிபடுவோர் பிறவித்துயர் நீங்கி வைகுண்ட பதவி அடைவர் என்பது நம்பிக்கை. வருடம் முழுவதும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்க இயலாதவர்கள், மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசியில் மட்டுமாவது விரதம் மேற்கொள்வது சிறப்பான பலன் தரும். மூன்று கோடி ஏகாதசிகளில் விரதம் இருந்த பலனைத் தரக்கூடியது என்பதால் வைகுண்ட ஏகாதசி ’முக்கோடி ஏகாதசி’ என்றும் அழைக்கப்படுகிறது. முரன் என்ற அரக்கன் தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான். அவர்கள் ஸ்ரீவிஷ்ணுவிடம் சென்று முறையிட, பகவான் முரனுடன் போரிட்டு அவனது படைகளை அழித்தார். 

பின்னர் பத்ரிகாசிரமம் சென்று அறிதுயில் கொண்டார். அவரைத் தேடிச்சென்ற முரன் பள்ளிகொண்டிருந்த பெருமாளைக் கொல்ல வாளை ஓங்கியபோது, அவர் தன் உடலிலிருந்து ஒரு மோகினியைத் தோற்றுவித்தார். அவள் எரித்து சாம்பலாக்கினாள். முரனை எரித்த மோகினிக்கு ’ஏகாதசி’ என்று பெயர் சூட்டிய திருமால், அன்றைய தினம் ஏகாதசி என வழங்கப்படும் என்றும், அன்று தன்னை வழிபடுவோர்க்கு வைகுண்டப் பதவி அளிப்பதாகவும் கூறி அருளினார். அந்த தினமே வைகுண்ட ஏகாதசி என்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அனைத்து பெருமாள் கோயில்களிலும் அதிகாலையில் சொர்க்கவாசல் திறக்கப்படும். ஸ்ரீரங்கம், திருப்பதி, காஞ்சீபுரம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் உள்பட அனைத்துப் பெருமாள் கோயில்களிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். ஆலயத்தின் வடக்கு திசையில் என்றும் மூடப்பட்டிருக்கும் வாசலை தான் சொர்க்கவாசல் என்பார்கள். ஆண்டுக்கு ஒருமுறை வைகுண்ட ஏகாதசியன்று மட்டுமே சொர்க்கவாசல் திறக்கப்படும். 

இந்த நாளில் பெருமாளும் இந்த வாசல் வழியாக சென்று அருள் பாலிப்பார். சொர்க்க வாசல் வழியாக சென்றால் பாவங்கள் தீரும், இறைவன் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. திருப்பதி, ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், மதுரை அழகர்கோவில் உள்பட பல கோயில்களிலும் அதிகாலையில் சொர்க்க வாசல் திறக்கப்படும். அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படும். 

அப்போது வேத மந்திரங்கள், நாலாயிர திவ்ய பிரபந்தம் ஓதப்படும். 4.35 மணி முதல் 5.15 மணி வரை சொர்க்க வாசலில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார். அந்த சமயத்தில். ’கோவிந்தா கோவிந்தா’ கோஷத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள்.



மாலை மலர் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  Empty Re: வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !

Post by krishnaamma Sat Dec 19, 2015 11:59 pm

சொர்க்கவாசல் திறப்பது ஏன்?


 வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  Z3aGDZcISmiStegzk5o6+cf54163f-30c3-489a-b00d-9ef28b05e72e_S_secvpf



விஷ்ணுவிடம் போரிட்டு, அவரின் அருள் பெற்ற மதுகைடவர்கள் என்ற அரக்கர்கள் இருவர், தாம் பெற்ற வைகுண்ட இன்பத்தை உலகில் உள்ள எல்லோரும் பெற வேண்டும் என்று விரும்பினார்கள். ஆண்டவனிடம் வைகுண்ட ஏகாதசி தினத்தில் திருவரங்க வடக்கு வாசல் வழியாக தாங்கள் அர்ச்சாவதாரத்தில் வெளிவரும்போது தங்களை தரிசிப்பவர்களும், தங்களை பின்தொடர்ந்து வருபவர்களும் அவர்கள் எத்தகைய பாவங்கள் செய்து இருந்தாலும் அவர்களுக்கு முக்தி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். 

அவர்களின் வேண்டுகோளை பெருமான் ஏற்றுக் கொண்டார். அதன் காரணமாகவே வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் பவனி வரும் நிகழ்ச்சி ஏற்பட்டது. ஏகாதசி நாளில் தாய், தந்தையருக்கு சிரார்த்தம் முதலிய பிதுர்கடன் இருந்தால், அதை நிறுத்திவைத்து ஏகாதசிக்கு மறுநாளான துவாதசியன்றே செய்ய வேண்டும் என்று விரதசாஸ்திரம் கூறுகிறது.

மாலை மலர் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  Empty Re: வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !

Post by krishnaamma Sun Dec 20, 2015 12:00 am

ஸ்ரீரங்கப் பெருமை !

 வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  2qcjvQsLQNm7achd14Ta+a32432f8-eaeb-4148-a783-9467305c947f_S_secvpf

எல்லா ஊர்களிலும் உள்ள விஷ்ணு ஆலயங்களிலும் வைகுண்ட ஏகாதசித் திருநாள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். என்றாலும், ஸ்ரீரங்கத்துக்கு தனிச் சிறப்பு உண்டு. பிரம்மோற்சவம் என்றால் திருப்பதி எப்படி விசேஷமோ, தீபம் என்றால் திருவண்ணாமலை எப்படி விசேஷமோ, அப்படி வைகுண்ட ஏகாதசி விசேஷம் கொண்டது ஸ்ரீரங்கம். 

திருமாலுக்குரிய சுயம்புத் தலங்களில் ஸ்ரீரங்கமும் ஒன்று. ஏழு உலகங்களைக் குறிக்கும் வண்ணம் ஏழு பிரகாரங்களைக் கொண்டது. விஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீராமனால் பூஜிக்கப்பட்டவருமான ஸ்ரீரங்கநாதப் பெருமான் இங்கு அருள்பாலிக்கிறார். இத்தலம் ஆழ்வார்கள் அனைவராலும் ஒரு குரலாகக் கொண்டாடப்பட்டது. இப்படி திருவரங்கத்தின் பெருமைகளை சொல்லிக் கொண்டே போகலாம். இந்தப் பெருமைக்கும் பெருமை சேர்ப்பது வைகுண்ட ஏகாதசி உற்சவம். 

வைகுண்ட ஏகாதசி தினத்தன்று பக்தர்களின் உற்சாக முழக்கங்கள், வாத்திய இசை எல்லாமாகக் கலந்து ஸ்ரீரங்கம் கோவில் தெய்வீக லயத்தை எழுப்பும். ரத்தின அங்கியில் தன் பேரெழில் துலங்குமாறு புறப்பட்டு வருவார் பெருமாள். வேதங்களை சுவாசமாகக் கொண்ட பகவான், பக்தர் வெள்ளத்தினூடே பரமபத வாசலுக்கு முன்பாக எழுந்தருள்வார். பரமபத வாசலின் மணிகள் ஒலிக்க கதவுகள் திறக்கப்படும். ரங்கா ரங்கா என்ற கோஷம் திசைகளை அதிர வைக்கும் பக்தவத்சலனான பரமன், தன் பக்தர்களோடு பரமபத வாசல் வழியே பிரவேசிப்பார். 

அதிகாலை வேளையில் தன்னுடைய பக்தர்களுக்கு அருள் புரிதல் வேண்டும் என்ற கருணையின் வடிவாக ரங்கநாதன் வீற்றிருப்பார். பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து தரிசனம் பெறுவார்கள். வைகுண்ட ஏகாதசி தினத்தன்று மட்டும் ஓய்வில்லாமல் வீற்றிருந்து தரிசனம் அருள்வார். அதன் பிறகு மூலஸ்தானத்தை சென்று சேர்வார். 

வைகுண்ட ஏகாதசி அன்று மட்டும் தான் காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை பரமபத வாசல் திறந்திருக்கும். இந்த ஏகாதசி நாளிலும், அதையடுத்தும் மூலவரான சயனக் கோலப் பெருமாள் முத்துக்களால் ஆன அங்கியை அணிந்தவராகக் காட்சி தருவார். ’முத்தங்கி சேவை’ என்று விசேஷமாகச் சொல்வது இதைத்தான்! வைகுண்ட ஏகாதசி விழாவை ஸ்ரீரங்கத்தில் பார்த்தால், அதை ’பூலோக வைகுண்டம்’ என்று சொன்னது எவ்வளவு நிஜம் என்பது புரியும். 


மாலை மலர் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  Empty Re: வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !

Post by krishnaamma Sun Dec 20, 2015 12:01 am

பரமபதம் விளையாடலாம் !


 வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  G7ox7WYTvq3zZlgUf1no+c3d5697d-54b4-49ff-8e40-601c853647d7_S_secvpf



வைகுண்ட ஏகாதசியன்று இரவு கண்விழித்து பரமபதம் விளையாடுவது ஒரு முக்கியமான சம்பிரதாயமாகக் கருதப்படுகிறது.

இண்டர்நெட்டிலும் பரமபதம் இருப்பது நம் சம்பிரதாயத்தின் தனிச்சிறப்பு.

விளையாட்டின் ஏணி வழியே ஏறிச்சென்றால் சொர்க்கம். சறுக்கி பாம்பின் வாயில் விழுந்தால் மறுபடியும் அடிப்பகுதிக்கே

வரநேரிடும்.

ஏணி என்பது புண்ணியம். பாம்பு என்பது பாவம்.

வைகுண்ட ஏகாதசியன்று இரவு ழுமுவதும் கண் விழித்திருக்கும் பொருட்டு இவ்விளையாட்டை பெரும்பான்மையான பக்தர்கள்

விடியும் வரை விளையாடுவர்.

பாவம் செய்தவர்கள் வாழ்வில் கீழே இறங்குவர் என்பதையும், புண்ணியம் செய்தால் சொர்க்கமாகிய திருமாலின் வைகுண்டத்தை

எளிதாக அடையலாம் என்பதையும் வலியுறுத்தும் ஆன்மிக விளையாட்டு இது! 

ஏகாதசி என்பது திதிகளில் பதினொன்றாவதாக வருவது.

அந்த நாளில் நாமும் நம்முடைய கர்மேந்திரியங்கள் ஐந்து, ஞானேந்திரியங்கள் ஐந்து, மனம் ஒன்று- ஆக இந்தப் பதினொன்றையும்

பகவானோடு ஒன்றச் செய்ய வேண்டும்.

இந்த ஒன்றுதல், அவனோடு என்றுமே ஒன்றுவதாக உருப்பெறும் என்பது தான் இந்த ஏகாதசி விரதத்தின் உட்பொருள். அந்த

உட்பொருளின் வெளிவடிவாக நடைபெறுவதுதான் பரமபத வாசல் திறப்பும், வைகுண்ட ஏகாதசித் திருநாளும்!



மாலை மலர் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  Empty Re: வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 20, 2015 9:34 am

krishnaamma wrote:
ஏகாதசி விரதம் இருப்பவர்கள் ஏகாதசிக்கு முதல் நாள் தசமி அன்று பகலில் ஒரு வேளை மட்டும் உணவு சாப்பிட்டு மற்றும் ஏகாதசியன்று அதிகாலையில் கண்விழித்து குளித்துவிட்டு, பூஜை செய்து விரதம் இருக்க வேண்டும். இரவு முழுவதும் கண்விழித்து புராண நூல்களை படிப்பதும், பகவான் நாமங்களை சொல்லுவதுமாக இருக்க வேண்டும். 
மேற்கோள் செய்த பதிவு: 1181696
ஏகாதசி விரதம் பற்றிய அரிய தகவலுக்கு நன்றி அம்மா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

 வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  Empty Re: வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 20, 2015 9:37 am

krishnaamma wrote:
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அனைத்து பெருமாள் கோயில்களிலும் அதிகாலையில் சொர்க்கவாசல் திறக்கப்படும். ஸ்ரீரங்கம், திருப்பதி, காஞ்சீபுரம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் உள்பட அனைத்துப் பெருமாள் கோயில்களிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். ஆலயத்தின் வடக்கு திசையில் என்றும் மூடப்பட்டிருக்கும் வாசலை தான் சொர்க்கவாசல் என்பார்கள். ஆண்டுக்கு ஒருமுறை வைகுண்ட ஏகாதசியன்று மட்டுமே சொர்க்கவாசல் திறக்கப்படும். 
மேற்கோள் செய்த பதிவு: 1181697
வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு பற்றிய தகவலுக்கு நன்றி அம்மா,அருமை.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

 வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  Empty Re: வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 20, 2015 9:41 am

krishnaamma wrote:
அதிகாலை வேளையில் தன்னுடைய பக்தர்களுக்கு அருள் புரிதல் வேண்டும் என்ற கருணையின் வடிவாக ரங்கநாதன் வீற்றிருப்பார். பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து தரிசனம் பெறுவார்கள். வைகுண்ட ஏகாதசி தினத்தன்று மட்டும் ஓய்வில்லாமல் வீற்றிருந்து தரிசனம் அருள்வார். அதன் பிறகு மூலஸ்தானத்தை சென்று சேர்வார். 
மேற்கோள் செய்த பதிவு: 1181699
ஸ்ரீ ரங்கநாதர் பெருமை பற்றிய தகவலுக்கு நன்றி அம்மா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

 வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  Empty Re: வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 20, 2015 9:49 am

krishnaamma wrote:பரமபதம் விளையாடலாம் !
வைகுண்ட ஏகாதசியன்று இரவு ழுமுவதும் கண் விழித்திருக்கும் பொருட்டு இவ்விளையாட்டை பெரும்பான்மையான பக்தர்கள்

விடியும் வரை விளையாடுவர்.
மேற்கோள் செய்த பதிவு: 1181700
பரம்பதம் சாதாரண நாட்களிலும் விளையாடுவார்கள் , ஆனால் இன்று தூக்கம் போக்க அதை மட்டும்
விளையாடுவது மரபு என்று நினைக்கிறேன் அம்மா,சரி தானே,நன்றி அம்மா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

 வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  Empty Re: வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !

Post by T.N.Balasubramanian Sun Dec 20, 2015 10:28 am

Krishnaammaa wrote:ஆலயத்தின் வடக்கு திசையில் என்றும் மூடப்பட்டிருக்கும் வாசலை தான் சொர்க்கவாசல் என்பார்கள். ஆண்டுக்கு ஒருமுறை வைகுண்ட ஏகாதசியன்று மட்டுமே சொர்க்கவாசல் திறக்கப்படும்.

மேற்கு மாம்பலத்தில் சத்யநாராயனர் கோயில் இருக்கிறது .
வடக்கு நோக்கி தலைவாசல் .
கிழக்கு நோக்கி இருக்கும் வாசலை தான் ,
வைகுண்ட ஏகாதசி அன்று திறக்கிறார்கள் .
ஆகம விதிப்படி கட்டிய கோயிலா என்பது கேள்விக்குறியே !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  Empty Re: வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum