ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதைகளால் ஒரு தமிழ் விருந்து ! (இயைபுத் துளிப்பாக்கள்) நூல் ஆசிரியர் : வெண்பா வேந்தர் புலவர் இராம. வேதநாயகம் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி.

3 posters

Go down

கவிதைகளால் ஒரு தமிழ் விருந்து ! (இயைபுத் துளிப்பாக்கள்) நூல் ஆசிரியர் : வெண்பா வேந்தர் புலவர் இராம. வேதநாயகம் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Empty கவிதைகளால் ஒரு தமிழ் விருந்து ! (இயைபுத் துளிப்பாக்கள்) நூல் ஆசிரியர் : வெண்பா வேந்தர் புலவர் இராம. வேதநாயகம் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி.

Post by eraeravi Sat Dec 19, 2015 7:28 pm

கவிதைகளால் ஒரு தமிழ் விருந்து !
(இயைபுத் துளிப்பாக்கள்)
நூல் ஆசிரியர் : வெண்பா வேந்தர் புலவர் இராம. வேதநாயகம்
அணிந்துரை : கவிஞர் இரா. இரவி.
*****
நூலாசிரியர் அவர்களின் இயற்பெயர் இராம. வேதநாயகம். புனைபெயர் மறைமுதல்வன். இந்த நூல் படித்து விட்டு, ‘மரபு முதல்வன்’ என்றே பட்டம் கொடுக்கலாம். அந்த அளவிற்கு இயைபுத் துளிப்பாவை குற்றால அருவி போல கொட்டி உள்ளார். கல்வி, மது, வெண்சுருட்டு என்று, பாடாத பொருள் இல்லை எனுமளவிற்கு அனைத்து பொருளிலும் பாடி உள்ளார்.
மரபு அறிந்த மரபுக்கவிஞரின் புதுக்கவிதை இது. பல்வேறு பட்டங்கள் பெற்று, தமிழாசிரியராகப் பணியாற்றி, ஓய்வு பெற்ற பின்னரும், இலக்கியத்திலிருந்து ஓய்வு பெறாமல் தொடர்ந்து இயங்கி வரும் படைப்பாளி. படிப்பாளி. அறிவாளி இவர். ஜப்பானில் புகழ்பெற்ற வடிவங்களான ஹைக்கூ, லிமரைக்கூ இவை பற்றிய புரிதல் வந்துவிட்டால் அற்புதமாக அழகு தமிழில் வடிக்கலாம். லிமரைக்கூ என்பதை தமிழில் ‘இயைபுத் துளிப்பா’ என்றும் அழைக்கலாம். மரபு அறிந்தவரின் புதுப்பா மணக்கும். இப்பா இனிக்கும்.
ஹைக்கூ கவிதைகளுக்கு தலைப்பு தரக்கூடாது என்பார்கள். இவர் தலைப்பை எழுதி விட்டு அது தொடர்பாகவே சிந்தித்து வடித்துள்ளார். 100 தலைப்புகளில், தலைப்புக்கு 5 பாடல்கள் வீதம் மொத்தம் 500 பாடல்கள் உள்ளன. நூலாசிரியரின் தமிழ்ப்புலமை தான் இந்த நூலின் வெற்றிக்கு காரணம். சொல் விளையாட்டு விளையாடி உள்ளார். இறைவன் என்ற தலைப்பில் தொடங்கி கைப்பேசி என்ற தலைப்பு வரை அற்புதமாக வடித்துள்ளார். மரபுக்கவிதை தான் இதுவும். மரபின் வாசனம் மதுரை மல்லிகைப்பூ போல வீசுகின்றது. உதிர்த்த முத்துக்கள் அனைத்தும் தமிழின் சொத்துக்கள். உலகில் உள்ள எந்த மொழிக்கும் இல்லாத சொல்வளம் நம் தமிழ்மொழி ஒன்றுக்கே உண்டு.
உலகின் முதல்மொழியான தமிழ் பற்றி பாடிய லிமரைக்கூ மிக நன்று.
தமிழ்
மொழிகளுக்கெல்லாம் ஆதி
எல்லா மொழியும் தமிழின் பின்தான்
எல்லாம் அறிவோம் சேதி!
மொழிஞாயிறு தேவ நேயப் பாவாணர் அவர்கள் ஆராய்ந்து அறிவித்த கருத்தை வழிமொழிந்து லிமரைக்கூ வடித்துள்ளார். பாராட்டுக்கள்.
மனதில் கவலை இருந்தால், வானத்தை அன்னார்ந்து பார்த்தால் கவலை காணாமல் போகும். நூலாசிரியர் கவிஞர் அவர்களும் வானத்தை, இயற்கையை ரசிக்கும் குணம் உடையவர். அதனால் தான் அவரால் இயற்கை பற்றி லிமரைக்கூ வடிக்க முடிகின்றது.
வானம்!
எல்லை இல்லா வானம்
எழிலை எல்லாம் உள்ளில் கொண்டே
அடக்கம் தன்னைப் பூணும்!
நிலவை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம். பார்க்க, சலிக்காத வனப்பு மிக்க நிலவு பற்றி கவிதை பாடுவது என்பது கவிஞர்களுக்கு கற்கண்டு போன்றது. இவரும் நிலவு பற்றி லிமரைக்கூ வடித்துள்ளார்.
நிலவு!
அம்புலி யாக வலம் வரும்
கவிஞர் நெஞ்சில் கவிதை யாகி
இலக்கியந் தன்னில் நலம் பெறும்!
இப்படி நூல் முழுவதும் பல்வேறு தலைப்புகளில், பல்வேறு விதமாக சிந்தித்து தமிழ் விருந்து வைத்துள்ளார்கள். வளரும் கவிஞர்கள் அனைவரும், படிக்க வேண்டிய நூல். புதிய சொற்கள் அறிந்து கொள்ள வாய்ப்பாக உள்ள சொற்களஞ்சியமாக நூல் உள்ளது. பாராட்டுக்கள். நூலாசிரியருக்கு இது ஏழாவது நூல். ஏழாவது அறிவை பயன்படுத்தி வடித்துள்ளார்கள்.
உலகப்பொதுமறை படைத்த திருவள்ளுவர் வழியில் அறம் பற்றியும், லிமரைக்கூ வடித்துள்ளார். அறவழி நடந்தால் நாட்டில் அமைதி நிலவும், அன்பு மலரும். அறம் தவறினால் துன்பம் சூளும் என்பது உணமை.
அறம்
அறத்தால் பெறுவதோ இன்பம்
பொருந்தாச் செயல்கள் புரிந்து மேலும்
அறநெறி தவறின் துன்பம்!
சிலர் பணத்தாசை காரணமாக, அறநெறி தவறி, தவறான செயல்களில் ஈடுபட்டு பணம் சேர்த்தால், பின்னால் தண்டனை என்ற துன்பம் வரும் என்பதை நன்கு உணர்த்தி உள்ளார்.
மரணம் பற்றிய அச்சம் அனைவருக்கும் உண்டு. இறப்பினை மிக இயல்பாக அறிவியல் உண்மையோடு லிமரைக்கூவாக வடித்துள்ளார். மரண பயம் நீக்கி உள்ளார்.
இறப்பு !
செல்களின் இயக்கம் இன்மை
உழைத்த செல்களின் தேய்மா னத்தால்
உயிர்கள் அழியும் உண்மை!
இசையால் பயிர்கள் வளர்கின்றது என்று ஆய்வுகள் சொல்கின்றன. பயிர்களே வளரும் போது இசையால் மனிதர்களுக்கு ஏற்படும் மனமகிழ்ச்சியை சொல்லவும் வேண்டுமோ? இசை பற்றிய லிமரைக்கூ மிக நன்று.

இசை!
இன்பம் நல்கும் அருங்கலை
இசையால் மயங்கா உயிர்கள் இல்லை
அதனால் இசையோ பெருங்கலை!
கொடுத்துச் சிவந்த கரங்கள் என்பார்! முடிந்த வரை பிறருக்கு வழங்க, வாழ வேண்டும். பிறர் வழங்குவதை தடுக்காமல் வாழ வேண்டும் என்கிறார்.
ஈகை!
ஈவதை என்றும் விலக்காதே,
மற்றவர் அன்பாய் பிறருக் களிப்பதை
எந்த நாளும் தடுக்காதே!
தந்தை பெரியார் சொல்வார். பக்தி என்பது தனி சொத்து. ஒழுக்கம் என்பது பொது சொத்து. ஒழுக்கத்தை உயிருக்கு மேலாக உணர்த்தியவர் திருவள்ளுவர். அந்த வழியில் வடித்த லிமரைக்கூ.
ஒழுக்கம்
தனிமனித ஒழுக்கம் அவசியம்,
அடையாளம் காட்டும் கருவியாய் இருப்பதால்
ஒழுக்கம் தேவை அவசரம்!
அறிவியல் வளர்ச்சியின் காரணமாக வந்த கைப்பேசி பற்றியும் லிமரைக்கூ வடித்துள்ளார்.
நாமெலாம் இருப்பதோ தென்துருவம்
உலகில் எவ்விடம் யாராய் இருப்பினும்
எப்போதும் பேசலாம் வடதுருவம்!
பதச்சோறாக சில மட்டும் எழுது உள்ளேன். இது தோரண வாயில் தான். நூலின் உள்ளே சென்று படித்துப் பாருங்கள். தமிழ் விருந்து காத்திருக்கின்றது.
நூலாசிரியர் புலவர் வெண்பா வேந்தர் இராம. வேத நாயகம் அவர்கள் லிமரைக்கூ வேந்தராகவும் முத்திரை பதித்துள்ளார். பாராட்டுக்கள். தன் சிந்தையில் உதிர்த்த முத்துக்களை கோர்த்து முத்துமாலை வழங்கி உள்ளார்.



--

.
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

கவிதைகளால் ஒரு தமிழ் விருந்து ! (இயைபுத் துளிப்பாக்கள்) நூல் ஆசிரியர் : வெண்பா வேந்தர் புலவர் இராம. வேதநாயகம் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Empty Re: கவிதைகளால் ஒரு தமிழ் விருந்து ! (இயைபுத் துளிப்பாக்கள்) நூல் ஆசிரியர் : வெண்பா வேந்தர் புலவர் இராம. வேதநாயகம் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி.

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 20, 2015 8:18 am

eraeravi wrote:. உலகில் உள்ள எந்த மொழிக்கும் இல்லாத சொல்வளம் நம் தமிழ்மொழி ஒன்றுக்கே உண்டு.
உலகின் முதல்மொழியான தமிழ் பற்றி பாடிய லிமரைக்கூ மிக நன்று.
தமிழ்
மொழிகளுக்கெல்லாம் ஆதி
எல்லா மொழியும் தமிழின் பின்தான்
எல்லாம் அறிவோம் சேதி!
.
மேற்கோள் செய்த பதிவு: 1181584
அருமையான பதிவு, நன்றி இரவி.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கவிதைகளால் ஒரு தமிழ் விருந்து ! (இயைபுத் துளிப்பாக்கள்) நூல் ஆசிரியர் : வெண்பா வேந்தர் புலவர் இராம. வேதநாயகம் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Empty Re: கவிதைகளால் ஒரு தமிழ் விருந்து ! (இயைபுத் துளிப்பாக்கள்) நூல் ஆசிரியர் : வெண்பா வேந்தர் புலவர் இராம. வேதநாயகம் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி.

Post by Dr.S.Soundarapandian Sun Dec 20, 2015 12:50 pm

இராம. வேதநாயகம் , இரா.இரவி ஆகியோர்க்கு நன்றி !
நல்ல முயற்சி!
வளர்க!
மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics
» உதிர்த்த முத்துக்கள் ! (லிமரைக்கூ இயைபுத் துளிப்பாக்கள்) நூல் ஆசிரியர் : வெண்பா வேந்தர் புலவர் இராம. வேதநாயகம் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி.
» அமிழ்தினும் இனிது! நூல் ஆசிரியர் : கவிஞர் புலவர் இராம. வேதநாயகம் நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
» தேன் சுவைத் துளிப்பாக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார் நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி .
» நம்மை மீட்டும் வீணை ! நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி ! நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி !
» புன்னகைச் சிறகுகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் சாந்தா வரதராசன் ! நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum