ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:40 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

Top posting users this week
ayyasamy ram
மார்கழி மாதம் பிறப்பு Poll_c10மார்கழி மாதம் பிறப்பு Poll_m10மார்கழி மாதம் பிறப்பு Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மார்கழி மாதம் பிறப்பு

3 posters

Go down

மார்கழி மாதம் பிறப்பு Empty மார்கழி மாதம் பிறப்பு

Post by கார்த்திக் செயராம் Thu Dec 17, 2015 1:47 pm

பெருமை நிறைந்த மார்கழி மாதப் பிறப்பு…!

மாதங்களில் மிகவும் உயர்ந்தது மார்கழி என்பார்கள்.
அதனால்தான், ‘மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்!’
என்று ஸ்ரீகிருஷ்ணனே கூறியிருக்கிறார்.

மேலும் அவரே, கீதையில் “மார்கழி மாதத்தை தேவர்களின் மாதம்” என்று சொல்கிறார்.
அத்தனை சிறப்புகள் வாய்ந்தது இந்த மார்கழி மாதம்.

அதிகாலை எழுந்து கோலம் இட்டு அதில் சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து கோலத்தை பூக்களால் அலங்கரித்து மார்கழியை வரவேற்கிறோம்.

‘பீடு’ என்றால் ‘பெருமை’ என்று பொருள். பெருமை நிறைந்த மாதம் என்பதே மருவி ‘பீடை’ என்றானது.
அதுவரை இருந்த எல்லா கஷ்டங்களும் நீங்கி வரும் தைத் திங்களில் இருந்து புது வாழ்க்கை அமைய வேண்டும் என பிரார்த்திக்கப்படும் மாதமும் இது தான்.

மார்கழி முப்பது நாட்களும் பாவை விரதம் இருந்து தானே ஆண்டாள் அந்த பெருமாளையே மணாளனாகக் கொண்டாள்.
இதிலிருந்தே அந்த மாதத்தின் பெருமையை உணரலாம்.

விடியற்காலையில் இருந்தே, ஆலயங்களில் வழிபாடுகள் தொடங்கிவிடும்.
அதுபோலவே பல ஆலயங்களில் திருப்பள்ளி எழுச்சி பூஜை தொடங்கி விடும்.
மார்கழி மாதத்தில் கோலத்தில் பூ வைப்பதற்கும், சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைப்பதற்கும் முன்னோர்கள் காரணங்கள் சொல்லிச் சென்றுள்ளனர்.

பூ வைப்பது ஏன் ?

அக்காலத்தில், திருமணத் தரகர்களோ, மாப்பிள்ளை – பெண் தேவை என்பதற்காக வெளியிடப்படும் கல்யாண விளம்பரங்களோ கிடையாது.

எந்த வீட்டில் பெண் அல்லது பிள்ளை திருமணத்துக்குத் தயாராக இருக்கிறார்களோ,
அந்த வீட்டின் வாயிலில் மட்டும் கோலத்தின் மேல் பூசணிப் பூ வைப்பார்கள்.
ஒட்டு மொத்தமாக எல்லா வீடுகளிலும் வைக்க மாட்டார்கள்.

மார்கழி மாத அதிகாலையில் வீதி பஜனையில் வருபவர்களின் பார்வையில் இந்தப் பூக்கள் தென்படும்.
விவரத்தைப் புரிந்து கொள்வார்கள். தை மாதம் பிறந்த உடனே பேசி, கல்யாணத்தை முடிப்பார்கள்.
இதன் காரணமாகவே மார்கழி மாதத்தில் வீட்டு வாயிலில் இருக்கும் கோலத்தில் பூக்களை வைத்தார்கள்.
அது போலவே மார்கழி மாதத்தில் பல புராதன நிகழ்வுகளும் நடந்துள்ளன.

மகாபாரத யுத்தம் மார்கழி மாதத்தில் நடைபெற்றதாக இதிகாசம் கூறுகிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக ஆண்டாள் நாள்தோறும் வைகறையில் எழுந்து ,
{ஒவ்வொரு பாசுரமாகப் பாடி, திருமாலை திருப்பாவையால் திருவடித் தொழுது, திருமணம் புரிந்ததும் மார்கழி மாதம்} என்னும் சிறப்பு மிக்க மார்கழி மாதத்தில் தான்.

இவ்வாறு பல மகத்துவத்தை தன்னுள் அடக்கி வைத்துள்ளது மார்கழி மாதம்.
சிதம்பரத்தில் மார்கழி மாதத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசனமும், ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசியும் மிக முக்கியமான விசேஷங்களுள் ஒன்று.

ஆன்மிக மலர்ச்சிக்கு சிறந்த மாதமாக கருதப்படும் இந்த{மார்கழி மாதத்தில்} இறைவனை எண்ணத்தால் துதித்துப் போற்றுங்கள்…..

அனைத்து செல்வங்களையும் பெறுங்கள்…..

மார்கழி மாதம் அதிகாலை எழுந்து ஏன் கோலம் போட வேண்டும்?

இந்த மாதத்தில்தான் சூரியன் தட்சிணாயணத்திலிருந்து உத்தராயணத்திற்கு நகர்கிறான்.

அதாவது டிசம்பர் முதல் மே வரை சூரியன் தெற்கிலிருந்து வடக்கிற்கும்,
ஜுன் மாதத்திலிருந்து நவம்பர் வரை வடக்கிலிருந்து தெற்கு நோக்கியும் நகர்கிறான்.
சூரியனின் ஓட்டத்தில் இந்த மாற்றம் நிகழும்போது,பூமியினுடைய சக்தி சூழ்நிலையிலும் பல மாற்றங்கள் நிகழ்கின்றன.

குறிப்பிட்ட விதத்தில் கோலம் இடுவதன் மூலம் அந்தச் சக்தியை நம் வீட்டிற்குள் கிரகித்துக் கொள்ள முடியும்.
இதனை நீங்கள் விஞ்ஞானப்பூர்வமாக செய்தால் உங்களுக்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.

குறிப்பாக பூமத்திய ரேகையிலிருந்து 32 டிகிரி அட்சரேகையில் (Latitude) பெரிய மாற்றங்கள் நடைபெறுகின்றன.
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்கள் இந்தப் பரப்பில்தான் உள்ளன.
இந்த மாற்றங்கள் நிகழ்கின்றபோது அதனை பயன்படுத்திக் கொள்ள பல கருவிகள் உருவாக்கப்பட்டன.

யோக முறைகளிலும் பலவிதமான பயிற்சிகள் வகுக்கப்பட்டுள்ளது. நீங்கள் மஹாபாரதக் கதை கேட்டிருப்பீர்கள்.
அதில் பீஷ்மர், தன் உடலில் அத்தனை அம்புகள் ஏறியிருந்தாலும் தன் உயிரை உத்தராயணத்தில் தான் துறக்க வேண்டும் என்று விடாமல் பிடித்து வைத்திருந்தது உங்களுக்கு தெரிந்திருக்கும்.

உத்தராயணத்தில் உடலை நீத்தால் முக்தி கிடைக்கும் என்னும் நம்பிக்கையே இதற்குக் காரணம்.
எனவே முக்தி நோக்கிலுள்ள மக்களுக்கு மார்கழியில் தொடங்கும் உத்தராயணம் முக்கியமானதாக இருக்கிறது.

எனவே சூரியனின் போக்கில் மாற்றங்கள் நிகழும் போதும், பூமிக்கும் சூரியனுக்குமான தொடர்பில் மாற்றங்கள் ஏற்படும்போதும்,தேவையான { அறிவு, ஞானம் } இருந்தால், அப்போது ஏற்படும் சக்தி சூழ்நிலையை, நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

{ அதில் ஒன்று தான் கோலம் இடுவதும். }

குறிப்பிட்ட விதத்தில் கோலம் இடுவதன் மூலம் அந்தச் சக்தியை நம் வீட்டிற்குள் கிரகித்துக் கொள்ள முடியும்.
இதனை நீங்கள் விஞ்ஞானப் பூர்வமாக செய்தால் உங்களுக்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.
உங்களுக்கும், உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கும், உங்கள் வீட்டு சூழ்நிலைக்கும் நன்மையைக் கொண்டு வர முடியும்.

இந்த மாதத்தில் அதற்கான வாய்ப்பு மிகத் தீவிரமாக உள்ளது…

நன்றி நடராஜன்.


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

மார்கழி மாதம் பிறப்பு Empty Re: மார்கழி மாதம் பிறப்பு

Post by krishnaamma Thu Dec 17, 2015 5:31 pm

கார்த்திக், இதை 'இந்து' வில் போடுவது சாலப்பொருந்தும்................நீங்கள் 'திண்ணைப் பேச்சு  ' பகுதி இல் போட்டு இருக்கீங்க ...பார்த்து பதிவுகளை போடுங்கோ புன்னகை.சரியா?..இப்போ நான் மாற்றி விடுகிறேன் !
.
.
.
மேலும் 'பத்தி பத்தியாக 'பிரித்து போடுங்கோ படிக்க வசதியாக இருக்கும்.அதையும் நான் இப்போ செய்து விடுகிறேன் புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மார்கழி மாதம் பிறப்பு Empty Re: மார்கழி மாதம் பிறப்பு

Post by கார்த்திக் செயராம் Thu Dec 17, 2015 8:50 pm

நன்றி , பதிவு செய்யும் முன்பு நான் யோசித்து போட்டிருக்கலாம்.இனிமே நான் சரியான தலைப்பில் பதிவு செய்கிறேன்.நன்றி


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

மார்கழி மாதம் பிறப்பு Empty Re: மார்கழி மாதம் பிறப்பு

Post by ayyasamy ram Fri Dec 18, 2015 5:47 am

மார்கழி மாதம் பிறப்பு 103459460 மார்கழி மாதம் பிறப்பு 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82830
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மார்கழி மாதம் பிறப்பு Empty Re: மார்கழி மாதம் பிறப்பு

Post by krishnaamma Fri Dec 18, 2015 4:55 pm

கார்த்திக் செயராம் wrote:நன்றி , பதிவு செய்யும் முன்பு நான் யோசித்து போட்டிருக்கலாம்.இனிமே நான் சரியான தலைப்பில் பதிவு செய்கிறேன்.நன்றி
குட் !.......... அருமையிருக்கு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மார்கழி மாதம் பிறப்பு Empty Re: மார்கழி மாதம் பிறப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum