ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீதிக்கு வாருங்கள் முதல்வரே!

+2
ayyasamy ram
கார்த்திக் செயராம்
6 posters

Go down

வீதிக்கு வாருங்கள் முதல்வரே! Empty வீதிக்கு வாருங்கள் முதல்வரே!

Post by கார்த்திக் செயராம் Thu Dec 17, 2015 7:01 am

வீதிக்கு வாருங்கள் முதல்வரே!

வீதிக்கு வாருங்கள் முதல்வரே! FD011CifSxlAN9019iJy+avcartoon_vc1

வெள்ளம் ஓரளவு வடிந்துவிட்டது. ஆனால், அதன் சுவடுகள் அத்தனை எளிதில் மறைந்துவிடாது. சென்னையும் கடலூரும் வெள்ளத்தின் பாதிப்பில் இருந்து முழுமையாக விடுபட நீண்ட நெடுங்காலம் ஆகும். ஆயிரமாயிரம் மனிதர்கள் உதவிப் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர். ஆனால், இவை எல்லாம் நிவாரணம்தான். இந்த வரலாறு காணாத பேரழிவில் இருந்து மக்களை மீட்டெடுக்க, நிவாரணம் மட்டுமே போதாது. மறுவாழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

லட்சக்கணக்கான மக்கள் தங்களின் வாழ்வாதாரங்கள் அனைத்தையும் இழந்து நிற்கின்றனர். குடிசையில் வசித்தோருக்கு வீடே இல்லை; வீட்டில் வசித்தோருக்கு வீட்டில் எந்தப் பொருளும் இல்லை. முதல் தலைமுறையாக நகரத்துக்கு வந்து, பல ஆண்டுகள் கடுமையாக உழைத்து வாழ்வைத் தொடங்கிய பல்லாயிரக்கணக்கானோர் இப்போது வீதிக்கு வந்துவிட்டனர். அடுத்த நாள் வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களைக்கூட, இனி மீண்டும் உழைத்துத்தான் ஒவ்வொன்றாகச் சேர்க்க வேண்டும். மக்களின் அகவாழ்வும் புறவாழ்வும் கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், மக்களுடன் இணைந்து நிற்கவேண்டியது அரசின் கடமை. ஆனால் நடப்பது என்ன?




அடி முதல் நுனி வரை சூறையாடப்பட்டிருக்கும் லட்சக்கணக்கானோரின் வாழ்க்கை குறித்து, முதலமைச்சர் ஜெயலலிதா கொஞ்சமும் கவலைப்பட்டவராகவே தெரியவில்லை. ‘மூன்று மாதங்கள் பெய்யவேண்டிய மழை மூன்றே நாட்களில் பெய்யும்போது இப்படிப்பட்ட பாதிப்புகளைத் தவிர்க்க முடியாது’ என்று சொல்லத்தெரிந்த ‘மக்கள்’ முதல்வருக்கு, ‘இந்தப் பேரிடர் காலத்தில் எப்போதும் நான் மக்களுடன் இருப்பேன்’ எனக் காட்ட முடியவில்லை. யாரோ கொடுக்கும் நிவாரணப் பொருட்களில் தன் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளும் ஆற்றல்படைத்த முதல்வரே... ‘பேரிடர் நேரத்தில் எங்களைக் கைவிட்டவர்’ என, மக்கள் மனங்களில் பதிந்திருக்கும் உங்கள் சித்திரத்தை என்ன செய்வீர்கள்? அதை மறைக்க எந்த ஸ்டிக்கரை ஒட்டுவீர்கள்?

பதில் சொல்ல ஓர் அதிகாரி இல்லை; விளக்கம் கூற ஓர் அமைச்சர் இல்லை. ஊடக கேமராக்களைக் கண்டால் எல்லோரும் ‘அம்மாவின் ஆணைக்கிணங்க’ அலறி ஓடுகின்றனர். வரலாறு காணாத பேரழிவு மாநிலத்தில் நிகழ்ந்திருக்கும் இந்த நேரத்தில், தினம் ஒருமுறையேனும் முதலமைச்சர் மக்களைச் சந்தித்திருக்க வேண்டாமா? குறைந்தபட்சம் ஊடகங்களை அழைத்து ‘இதுதான் உண்மை நிலவரம். இன்னென்ன மீட்புப் பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன’ என நிலைமையை விளக்க வேண்டாமா? ஒரே ஒருமுறை ஹெலிகாப்டரில் பறந்து வான்வழியாக சென்னையின் வெள்ளச் சேதங்களைப் பார்வையிட்டதைத் தவிர, ஜெயலலிதா செய்தது என்ன?
 
‘ஒரு குடும்பத்துக்கு ஐந்தாயிரம் பணம் தந்துவிட்டால் எல்லாவற்றையும் சரிக்கட்டிவிடலாம்’ என ஜெயலலிதா நினைக்கிறார். அதில் தேர்தல் கணக்கும் இருக்கிறது. ஆனால், அது தப்புக்கணக்கு. ஏனெனில், மக்களிடம் இப்போது இழப்பதற்கு எதுவும் இல்லை. இருந்ததை இழந்தது யாரால் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். அரசியல், அதிகாரக் கூட்டின் லாபவெறிப் பேராசைக்கு, தங்கள் வாழ்வு பலி கொடுக்கப்பட்டிருக்கும் உண்மையை வீதிக்கு வீதி, வீடுக்கு வீடு  பேசுகின்றனர். அந்த உண்மையின் சூட்டை எதிர்கொள்ள ஜெயலலிதா, ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி வீதிக்கு வர வேண்டும். ஏனெனில், அங்குதான் ‘வாக்காளப் பெருமக்கள்’ எனும் மக்கள் வசிக்கிறார்கள். வீதிக்கு வாருங்கள் தமிழக முதல்வர் அவர்களே!

நன்றி விகடன் செய்தி


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

வீதிக்கு வாருங்கள் முதல்வரே! Empty Re: வீதிக்கு வாருங்கள் முதல்வரே!

Post by ayyasamy ram Thu Dec 17, 2015 8:45 am


பிரபலங்கள் வீதிக்கு வந்தால் மட்டும் பிரச்னை
தீர்ந்து விடுமா...?
-
அமுதா இ.ஆ.பா, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீர்நிலை
ஆக்ரமிப்புகளை பல எதிர்ப்புகளுக்கிடேயே வெற்றிகரமாக
அகற்றி வருகிறார் என்ற செய்தி ஊடகத்தில் படித்தோம்...
-
எல்லா அதிகாரிகளுமே நல்லவர்கள்தான்...

தன் கீழ் பணிபுரியும் அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும்
சுதந்திரமாக பணி புரிய வாய்ப்பு கொடுத்தாலே பாதி
பிரச்னை தீரும்....
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வீதிக்கு வாருங்கள் முதல்வரே! Empty Re: வீதிக்கு வாருங்கள் முதல்வரே!

Post by மாணிக்கம் நடேசன் Thu Dec 17, 2015 9:34 am

முதல்வர் வீதிக்கு வர மாட்டாங்க, மக்கள் தான் வர வைக்கனும், அடுத்த தேர்தலோடு அவுங்க எப்பவும் வீதியில தான் இருக்க வேணும்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

வீதிக்கு வாருங்கள் முதல்வரே! Empty Re: வீதிக்கு வாருங்கள் முதல்வரே!

Post by M.Jagadeesan Thu Dec 17, 2015 10:15 am


வீதியிலே இறங்கி நடப்பதற்கு நம்முதல்வர்
...விதியற்ற கண்ணகியா விளக்கிடுவீர் விகடனாரே !
.பாதிக்கு மேலே சென்னை அழிந்தாலும்
...பயங்கொள்ளா நம்முதல்வர் வீரமங்கை அன்றோ !
மேதினியில் உதிக்கின்ற கதிரவனும் அம்மாவின்
... மேன்மைமிகு ஆணைக்குக் காத்திருந்தே உதித்திடுவான் !
பூதங்கள் ஐந்தும் தலைவணங்கும் அம்மாவின்
...புகழ்கெடுத்த இம்மழையை சேர்ந்தே தண்டிப்போம் !




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

வீதிக்கு வாருங்கள் முதல்வரே! Empty Re: வீதிக்கு வாருங்கள் முதல்வரே!

Post by T.N.Balasubramanian Thu Dec 17, 2015 10:32 am

ayyasamy ram wrote:
பிரபலங்கள் வீதிக்கு வந்தால் மட்டும் பிரச்னை
தீர்ந்து விடுமா...?
-
அமுதா இ.ஆ.பா, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீர்நிலை
ஆக்ரமிப்புகளை பல எதிர்ப்புகளுக்கிடேயே வெற்றிகரமாக
அகற்றி வருகிறார் என்ற செய்தி ஊடகத்தில் படித்தோம்...
-
எல்லா அதிகாரிகளுமே நல்லவர்கள்தான்...

தன் கீழ் பணிபுரியும் அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும்
சுதந்திரமாக பணி புரிய வாய்ப்பு கொடுத்தாலே பாதி
பிரச்னை தீரும்....

-

மேற்கோள் செய்த பதிவு: 1181014

sub delegation என்ற மந்திரம் தெரிந்து இருந்தாலே போதும் .
கொடுக்க வேண்டிய அதிகாரத்தை கொடுத்து , தவறினால் தண்டியுங்கள் .

வி பொ பா , ayyasami ram வீதிக்கு வாருங்கள் முதல்வரே! 3838410834

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வீதிக்கு வாருங்கள் முதல்வரே! Empty Re: வீதிக்கு வாருங்கள் முதல்வரே!

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Dec 17, 2015 8:27 pm

ayyasamy ram wrote:
பிரபலங்கள் வீதிக்கு வந்தால் மட்டும் பிரச்னை
தீர்ந்து விடுமா...?
-
அமுதா இ.ஆ.பா, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீர்நிலை
ஆக்ரமிப்புகளை பல எதிர்ப்புகளுக்கிடேயே வெற்றிகரமாக
அகற்றி வருகிறார் என்ற செய்தி ஊடகத்தில் படித்தோம்...
-
எல்லா அதிகாரிகளுமே நல்லவர்கள்தான்...

தன் கீழ் பணிபுரியும் அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும்
சுதந்திரமாக பணி புரிய வாய்ப்பு கொடுத்தாலே பாதி
பிரச்னை தீரும்....
-
மேற்கோள் செய்த பதிவு: 1181014
வேலை நடந்தால் சரி யாரும் வீதிக்கு வரவேண்டாம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

வீதிக்கு வாருங்கள் முதல்வரே! Empty Re: வீதிக்கு வாருங்கள் முதல்வரே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum