Latest topics
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்by heezulia Today at 12:01 pm
» 10 மில்லியன் டாலர் மதிப்பிலான சாமி சிலைகள் கடத்தல்: இந்தியாவிடம் ஒப்படைத்த அமெரிக்கா
by ayyasamy ram Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்குறள் தாத்தா
2 posters
Page 1 of 1
திருக்குறள் தாத்தா
-
தலையில் ஒரு விக், குர்தா உடை, காதில் கடுக்கண் என, அவர் வந்து நின்றதும் மழலைகளிடம் பொங்குகிறது உற்சாகம். விண்ணை முட்டுகிறது கரவொலி.
தேனி மாவட்டம், வடுகபட்டி மார்க்கண்டேயர் நெசவாளர் நடுநிலைப் பள்ளியில் திருக்குறள் நிகழ்ச்சியை நடத்த வந்திருந்தார், சுந்தர மகாலிங்கம். ஓய்வுபெற்ற தலைமையாசிரியரான இவரை, திருக்குறள் தாத்தா என்றே எல்லோரும் அழைக்கிறார்கள்.
மாணவர்களே, உங்க எல்லோருக்கும் திருக்குறள் பற்றி தெரியும்தானே? அதான், தமிழ்ப் பாடப் புத்தகத்தில் படிச்சு தேர்வு எழுதுறோமேன்னு சொல்வீங்க. அதோடு முடிய வில்லை திருக்குறளின் வேலை. ஒண்ணே முக்கால் அடிகள் உடைய ஒவ்வொரு குறளிலும் அற்புதமான கருத்துகள் இருக்கின்றன. வெறுமனே மனப்பாடம் செய்து தேர்வில் எழுதினால், வெளியே வந்ததும் மறந்து போயிடும். நம்ம வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை விஷயங்களும் இருக்கும் குறளை, மறக்காம இருக்க என்ன செய்யணும்?
10 வருஷத்துக்கு முன்னாடி கேட்ட ஒரு சினிமா பாட்டு ஞாபகத்தில் இருக்கு. ஒரு சினிமா காட்சி ஞாபகத்தில் இருக்கு. அந்த மாதிரி இசையாகவும், நடனமாகவும், நாடகமாகவும் ரசிச்சுப் படிச்சா, திருக்குறளும் மறக்கவே மறக்காது. அதைத்தான் செய்யப்போறோம். இப்போ பாடலாமா? ஆடலாமா? எனக் கேட்டார் திருக்குறள் தாத்தா.
ஆடுங்க..ஆடுங்க.. என்று சிலரும், பாடுங்க..பாடுங்க’’ என்று சிலரும் குதூகலக் குரல் கொடுத்தார்கள்.
பாடுவோம் ஆடுவோம் பாடிக்கிட்டே ஆடுவோம். நீங்களும் என்னோடு சேர்ந்து ஆடிப் பாடலாம், என்றதும் எல்லோரின் முகங்களும் மலர்ந்தன. தொடங்கியது திருக்குறள் பயிற்றுவிக்கும் நிகழ்ச்சி.
எண்கள் பற்றி வரும் குறள் ஒண்ணு சொல்லுங்க பார்ப்போம். என்றார் திருக்குறள் தாத்தா.
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
என்று சொல்லி சபாஷ் வாங்கினர் மாணவர்கள். இந்த மாதிரி எண்கள் வரும் திருக்குறள்களை, எண் விளையாட்டு எனப் பெயர்வைத்து, சில குறள்களைச் சொல்கிறார். மாணவர்களும் சேர்ந்து சொல்கிறார்கள்.
அடுத்து, எழுத்து விளையாட்டு. முதல் எழுத்து எதில் துவங்குகிறதோ, அதே எழுத்தில் முடியும் குறளைச் சொல்ல வேண்டும். உதாரணமாக, கற்க கசடற குறளின் இறுதியில், அதற்குத் தக என முடியும். இப்படியே சொல் விளையாட்டு, இசை விளையாட்டு, நாடக விளையாட்டு எனக் குறள்களைப் பிரித்து, ஒவ்வொரு குறளையும் ராகத்தோடு சொல்லச் சொல்ல, மாணவர்களும் சொக்கிப்போய் சொல்கிறார்கள்.
இதோ, ஒரு குறளை நடனம் ஆடிக்கிட்டே சொல்றேன். நீங்களும் என்னோடு ஆடலாம் என்று சொல்லி ஆரம்பிக்கிறார் திருக்குறள் தாத்தா.
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.
என்ற குறளுக்கு அவர் காட்டும் அபிநயம், அவ்வளவு அழகு. ‘இனிய உளவாக’ என்கிறபோது முகத்தில் மலர்கிறது சிரிப்பு. ‘இன்னாத கூறல்’ எனும்போது, முகத்தைச் சுருக்கியும் காதுகளை இரு கரங்களால் பொத்தியும் அபிநயம் பிடித்து ஆடிக் காட்ட, எல்லோரிடமும் உற்சாகம் தொற்றிக்கொள்கிறது.
அடுத்த திருக்குறளுக்கு மாணவர்கள் சிலர் முன்வந்து, அபிநயம் பிடித்து, அவரையே ஆச்சர்யப்படுத்தினார்கள்.
நிகழ்ச்சி முடிந்ததும் நடன ஆடையை மாற்றிக்கொண்டு சாதாரண தாத்தாவாக வந்தார்.
பொருள் உணர்ந்து படிக்கும் எதுவும் மறக்காது. இளம்வயதில் நல்ல பண்புகள் மனதில் பதிந்தால், எதிர்காலம் ஒளிவீசும். திருக்குறளை நன்கு புரிந்துகொண்டால், வாழ்வை எளிதில் வெல்லலாம். இதற்கான முயற்சிதான் இந்தப் பயிற்சி. கடந்த 15 ஆண்டுகளாக, 1,700-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்குச் சென்று நடத்திவருகிறேன். தலைமை ஆசிரியராகப் பணியில் இருந்தபோதே, இதைத் தொடங்கிவிட்டேன்.
இதற்காக, எந்தவித பொருள் உதவியும் எதிர்பார்ப்பது இல்லை. ஒரு பள்ளியில் நிகழ்ச்சி நடத்தியதைக் கேள்விப் பட்டு, இன்னொரு பள்ளியில் அழைப்பார்கள். தமிழ்நாடு முழுவதும் சென்று, திருக்குறள் கற்பித்தல் நிகழ்ச்சியை நடத்திவருகிறேன். என் உடம்பில் தெம்பு உள்ளவரை இதைச் செய்வேன் என்று புன்னகையோடு சொல்கிறார் சுந்தரமகாலிங்கம் என்கிற திருக்குறள் தாத்தா
-முக நூல்
Re: திருக்குறள் தாத்தா
மேற்கோள் செய்த பதிவு: 1180761ayyasamy ram wrote:
பாடுவோம் ஆடுவோம் பாடிக்கிட்டே ஆடுவோம். நீங்களும் என்னோடு சேர்ந்து ஆடிப் பாடலாம், என்றதும் எல்லோரின் முகங்களும் மலர்ந்தன. தொடங்கியது திருக்குறள் பயிற்றுவிக்கும் நிகழ்ச்சி.
எண்கள் பற்றி வரும் குறள் ஒண்ணு சொல்லுங்க பார்ப்போம். என்றார் திருக்குறள் தாத்தா.
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
அருமையான பதிவு,நன்றி ஐயா.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Similar topics
» தாத்தா பாட்டி பார்த்திருப்போம்.... ஒரு தாத்தா, பாட்டியானதை பார்த்திருக்கீங்களா?
» என் தாத்தா
» தாத்தா
» தாத்தா
» தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
» என் தாத்தா
» தாத்தா
» தாத்தா
» தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum