புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:11 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Thu Nov 21, 2024 2:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Tue Nov 19, 2024 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_c10வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_m10வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_c10 
87 Posts - 67%
heezulia
வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_c10வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_m10வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_c10 
29 Posts - 22%
E KUMARAN
வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_c10வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_m10வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_c10வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_m10வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_c10வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_m10வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_c10 
3 Posts - 2%
sram_1977
வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_c10வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_m10வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_c10 
2 Posts - 2%
Shivanya
வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_c10வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_m10வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_c10 
1 Post - 1%
Guna.D
வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_c10வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_m10வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_c10வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_m10வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_c10 
423 Posts - 76%
heezulia
வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_c10வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_m10வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_c10 
75 Posts - 14%
mohamed nizamudeen
வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_c10வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_m10வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_c10 
18 Posts - 3%
Dr.S.Soundarapandian
வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_c10வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_m10வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_c10 
8 Posts - 1%
E KUMARAN
வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_c10வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_m10வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_c10 
8 Posts - 1%
prajai
வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_c10வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_m10வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_c10வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_m10வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_c10 
6 Posts - 1%
Balaurushya
வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_c10வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_m10வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_c10வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_m10வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_c10 
3 Posts - 1%
sram_1977
வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_c10வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_m10வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Dec 16, 2015 6:16 am

நல்லாத்தூர் என்ற கிராமத்தில் வடிவேலன் என்பவன் வசித்துவந்தான். வயதான தாயாரும் மனைவியும் உடன் வசித்து வந்தனர். வடிவேலனின் மனைவிக்கு மாமியாரைக் கண்டாலே ஆகாது. சதா கரித்துக் கொட்டுவாள். வடிவேலன் ஒரு வாயில்லா பூச்சி. மனைவியை எதிர்த்து ஒரு வார்த்தை பேச மாட்டான்.

   ஒரு நாள் வடிவேலனிடம் அவன் மனைவி, "இந்த கிழத்துக்கு வடித்துக் கொட்ட என்னால் ஆகாது. பேசாமல் கொண்டுபோய் நம்ம ஊரை அடுத்திருக்கும் காட்டில் விட்டுவிட்டு வந்துவிடுங்கள்!"என்றாள்.

   வடிவேலன் முதல் முறையாக வாய் திறந்து, "பாவம்! அவர்கள் என்ன செய்தார்கள்? கண் வேறு தெரியாது! நீ போட்டதை சாப்பிட்டுவிட்டு ஒரு மூலையில் விழுந்துகிடக்கிறார்கள்! அவரைப் போய் காட்டில் விடச் சொல்கிறாயே?"என்று கேட்டான்.

  அவனது மனைவியோ மிகவும் மூர்க்கமாக, "நான் சொல்வதை கேட்பதாக இருந்தால் இந்த வீட்டில் இருப்பேன்! இல்லையென்றால் என் அம்மா வீட்டிற்கு போய்விடுவேன்! நீங்களும் உங்கள் அம்மாவும் எப்படியோ இங்கே இருந்து கொள்ளுங்கள்" என்றாள்.

   இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அந்த கண் தெரியாத தாய், வடிவேலனை கூப்பிட்டு, "வேலா! என் காலம் முடிந்துவிட்டது! நீங்கள் வாழ வேண்டியவர்கள்! என்னால் நீங்கள் பிரிய வேண்டாம்! என்னை கொண்டுபோய் காட்டில் விட்டுவிடு!"என்று கண்ணீருடன் கூறினாள்.

   வேறு வழியின்றி வடிவேலன், தாயைக் கூட்டிக்கொண்டு காட்டிற்கு சென்றான். காட்டினுள் வெகு தூரம் சென்ற பின் ஓர் பாழடைந்த மாளிகை ஒன்று தென்பட்டது. அங்கே தன் தாயை உட்கார வைத்துவிட்டு உண்பதற்கு கொஞ்சம் உணவுகளை கொடுத்துவிட்டு, "அம்மா! என்னை மன்னித்துவிடு! என் மனைவியை அடக்க வழியில்லாமல் உன்னை இங்கே கொண்டுவிட்டேனே!"என்று அழுதான்.

    அவன் தாய் அவனை தேற்றி, "மகனே! அழாதே! அவரவர் விதியை யாரால் மாற்றமுடியும்? நான் இங்கேயே மடிய வேண்டும் என்று விதி இருந்தால் அதன்படி நடக்கட்டும்! நீ போய்வா!" என்று வழி அனுப்பினாள்.
   பின்னர் கண் தெரியாத அந்த அம்மாள் அங்கிருந்த ஒரு தூணின் மறைவில் ஒடுங்கிப் படுத்துக் கொண்டார். 

நேரம் கடந்தது. நள்ளிரவு நேரத்தில் அந்த மண்டபத்தில் வசிக்கும் இரண்டு பூதங்கள் அங்கே வந்தன. அவை இரண்டும் அந்த மண்டபத்தின் படியில் அமர்ந்து கொண்டன.
   "எனக்கு ஒரு ரகசியம் தெரியும்!" என்றது முதல் பூதம்!
"என்ன என்ன சொல்லு?"என்றது இரண்டாவது பூதம்.

   "இந்த மண்டபத்தின் முன்னே இருக்கிற செடியில் இருக்கிற இலைகளை பறித்து கசக்கி கண்ணில் விட்டால் கண்பார்வை கிடைக்கும். அரியவகை மூலிகை இது!"என்றது முதல் பூதம்.

   "அப்படியா! இது யார்க்கும் தெரியாது போயிற்று! இல்லாவிட்டால் இந்த ஊர் ராஜகுமாரியின் பார்வைக்கோளாறை சரி பண்ணி நல்ல சன்மானம் வாங்கி கொண்டிருப்பார்களே!" என்றது இரண்டாவது பூதம்.
   ”ஆமாம் ஆமாம் அந்த ராஜகுமாரி வாழ்க்கை முழுக்க பார்வையில்லாமல்தான் இருக்க போகிறாள்!” என்று சிரித்தது முதல் பூதம்

  ”சரி சரி! பேசியது போதும்” என்று சொல்லிவிட்டு இரண்டு பூதங்களும் கிளம்பி விட்டன.

   பொழுதுவிடிந்ததும் அந்த அம்மாள் மெல்ல தட்டுத் தடுமாறி வெளியே வந்தாள். அங்கே தடவி தடவி எதிரே இருந்த செடியை கண்டுபிடித்து அதன் இலைகளை பறித்து கசக்கி கண்ணில் விட்டுக் கொண்டாள். 

சற்று நேரத்தில் அவள் கண்களில் ஒளி பிறந்தது. நல்ல பார்வை கிடைத்தது. அருகே இருந்த செடியில் இருந்து கொஞ்சம் இலைகளை பறித்துக் கொண்டாள். அந்த ஊரின் அரண்மனை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
    “மன்னா! ராஜகுமாரியின் கண்களை நான் குணப்படுத்துகிறேன்! பார்வை கிடைக்கச் செய்கிறேன்!”சொல்லும் மூதாட்டியை வியப்பாக பார்த்தான் மன்னன்.

   “பெரிய பெரிய வைத்தியர்கள் எல்லாம் பார்த்துவிட்டார்கள்! நீ என்ன செய்ய போகிறாய்?”

    “ஏதோ எனக்கு தெரிந்த வைத்தியம் செய்கிறேன் மன்னா! நான் வைத்திருக்கும் மூலிகை அபூர்வமானது! கண்டிப்பாக பார்வை கிடைக்கும்.”
    “சரி! முயன்று பாருங்கள்!”

  கிழவி அந்தப் புரம் சென்றாள். ராஜகுமாரியின் கண்களில் பச்சிலையை கசக்கி சாறு பிழிந்தாள். சற்று நேரத்தில் கண் திறந்த ராஜ குமாரி!  “அப்பா! என்னால் பார்க்க முடிகிறது!”என்று தந்தையைக் கட்டிக் கொண்டாள்.
   “பெரிய பெரிய வைத்தியர்கள் குணப்படுத்த முடியாததை நீங்கள் குணப்படுத்தி விட்டீர்கள்! நீங்கள் யார்?”
    “வயதான அனாதை! பிள்ளையும் மருமகளும் கைவிட்ட ஏழை நான்.”

    “பரிதாபம்! சரி நீங்கள் தங்க ஒரு வீடு ஒதுக்கி தருகிறேன்! உங்களுக்கு தேவையான அனைத்தும் கிடைக்கச் செய்கிறேன்.” என்ற மன்னன். அந்த அம்மாவிற்கு ஒரு வீட்டை ஒதுக்கி தந்து சகல வசதிகளையும் செய்து கொடுத்தான்.

  அவர் அந்த வீட்டில் தங்கிக் கொண்டு தன்னிடம் இருந்த மூலிகை மூலம் கண்பார்வை இழந்தோரை குணப்படுத்தி வந்தாள்.

    இந்த செய்தி வடிவேலன் மனைவிக்கு எட்டியது. அவளுக்கு பொறாமை தீ புகைந்தது. நாம் துரத்திவிட்ட கிழவி வசதியாக வாழ்வதா? என்று புகைந்தாள்.

   கணவனை அழைத்து, போய் அம்மாவை அழைத்துவாருங்கள்! இனி நம்முடனே இருக்கட்டும்! அப்படி வரமாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள் என்றால் காட்டில் என்ன நடந்தது என்றாவது தெரிந்து வாருங்கள்! என்று சொல்லி அனுப்பினாள்.

   வடிவேலனும் தாயின் வீட்டிற்கு வந்து,  “அம்மா! என் மனைவி திருந்தி விட்டாள் தங்களை அழைத்துவரும்படி கூறினாள்” என்றான். மருமகளின் குணம் அறிந்த அந்த அம்மாள் ”வடிவேலா! இனி நான் அங்கு வருவதற்கு இல்லை! வேறு ஏதாவது இருந்தால் பேசு!” என்றார்.

    “சரி அம்மா! உங்களுக்கு எப்படி திடீரென கண் வைத்தியம் செய்யும் திறமை வந்தது?”
   ”அது ரகசியம்!”

 “என்னிடம் கூடவா சொல்ல மாட்டீர்கள்?”
  “ உன்னிடம் சொன்னால் உலகத்துக்கே சொன்ன மாதிரி ஆகிவிடுமே?”
   ”நான் யாரிடமும் சொல்ல மாட்டேன்! சொல்லும்மா!”

   “நீதான் காரணம்! நீ என்னை அந்த மண்டபத்தில் விட்டுவிட்டு வந்தாயா?” அப்புறம்…. நடந்ததை சொல்லி முடித்தார் அவர்.

   வடிவேலன் விடைபெற்று மனைவியிடம் வந்து அம்மா சொன்னதை அப்படியே சொல்லி முடிக்க,  “அப்படியா சங்கதி! பூதங்கள் தான் இந்த ரகசியத்தை சொல்லுச்சா!”

    “இதோ பாருங்கள்! உங்கள் அம்மா வைத்தியம் செய்வது போல எங்கள் அம்மாவும் வைத்தியம் செய்ய வேண்டும்! அரசரிடம் பரிசு வாங்க வேண்டும். இப்போதே என் அம்மாவை அந்த மண்டபத்தில் கொண்டு போய் விடுங்கள்! விடிகாலையில் மீண்டும் அழைத்து வாருங்கள்” என்றாள்.

   வடிவேலனும் தன் மாமியாரை அழைத்து சென்று அந்த மண்டபத்தில் விட்டான். வழக்கம் போல அன்றும் அந்த இரண்டு பூதங்கள் நள்ளிரவில் வந்தன.

    “நண்பா! நம் ரகசியத்தை யாரோ அறிந்து கொண்டார்கள். அந்த ராஜ குமாரிக்கு பார்வை திரும்பி விட்டது! அது மட்டுமில்லாமல் நிறைய பேருக்கு பார்வை வரவழைத்து விட்டார்கள்.”

   “ஆம் நண்பா! அன்றே எனக்கு சந்தேகம்! இங்கே மனித வாடை வீசுவது போல் ஓர் நினைவு!”
  ”நினைவு இல்லை நண்பா! மனித வாடைதான் வீசுகிறது! அதோ பார் யாரோ மண்டபத்தில் படுத்திருப்பது போல தெரியவில்லை!”

    “ஆம்! யாரங்கே!” பூதம் குரல் கொடுக்க

மாமியார் எழுந்தார்! ”பூதங்களே வந்து விட்டீர்களா? சொல்லுங்கள்! ரகசியத்தை சொல்லுங்கள்!”
  பூதங்கள் சிரித்தன!

  “நீதானா! எங்கள் ரகசியங்களை தேடி வந்தது! உனக்கு ரகசியம் வேண்டுமா?”என்றன.
    “ஆம்! ஆம்! சொல்லுங்கள்!”

 “விடிந்தால் கழுதையாக போ! இதுதான் ரகசியம்! எங்கள் ரகசியத்தையா திருடுகிறாய்? உனக்கு இதுதான் சரியான தண்டனை!”என்று சாபம் கொடுத்த பூதங்கள் பறந்து சென்றன.

  விடியற்காலையில் வந்த வடிவேலன் மாமியாரை கூட்டிக் கொண்டு நடந்தான். பொழுது பொல பொலவென விடிய விடிய மாமியார் கொஞ்சம் கொஞ்சமாக கழுதையாக மாறலானாள்.
   வீடு வந்து சேர்ந்தான்.

 “என்னங்க! எங்க அம்மாவை கூட்டி வரச் சொன்னா கழுதையை கூட்டி வந்திருக்கீங்களே?”
   ”ம்.. இதுதான் உங்க அம்மா!”

   “என்னங்க சொல்றீங்க?”
   “வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!” என்றான் வடிவேலன்.
  “ஐயோ! அம்மா!”என்று தலையில் அடித்துக் கொண்டு அழலானாள் அவன் மனைவி.

நீதி: கெடுவான் கேடு நினைப்பான்.

 நன்றி தளிர் சுரேஷ்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 16, 2015 11:33 am

கார்த்திக் செயராம் wrote:
நீதி: கெடுவான் கேடு நினைப்பான்.
நன்றி தளிர் சுரேஷ்
மேற்கோள் செய்த பதிவு: 1180739
அருமை கார்த்தி நல்ல கதை.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84938
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 16, 2015 11:40 am

வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  103459460 வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  3838410834
-
வர வர மாமியார் கயிதை போல ஆனார்
என்பதே சரியான பழமொழியாம்...

-
இந்த பழமொழியில் கயிதை என்பது காலப்
போக்கில் மாறி கழுதை என்று ஆகி விட்டது.

கயிதை என்றால் ஊமத்தம் பூச்செடியில் உள்ள
காய்.(ஊமத்தங்காய்).

இதில் ஊமத்தம்பூ பூத்து நாளடைவில் விஷத்
தன்மை கொண்டதாக அதாவது ஊமத்தங்காய்
ஆக மாறுவதையே அப்படி சொல்கிறோம்.
-
-----------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84938
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 16, 2015 2:09 pm

பூதங்கள் சிரித்தன!
-
வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  S8yWGOQS16u6FknkeVqC+bootham

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 16, 2015 8:14 pm

ayyasamy ram wrote:
இந்த பழமொழியில் கயிதை என்பது காலப்
போக்கில் மாறி கழுதை என்று ஆகி விட்டது.
கயிதை என்றால் ஊமத்தம் பூச்செடியில் உள்ள
காய்.(ஊமத்தங்காய்).
மேற்கோள் செய்த பதிவு: 1180835
அப்படியா ஐயா,நன்றி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 16, 2015 10:08 pm

ayyasamy ram wrote:வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  103459460 வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  3838410834
-
வர வர மாமியார் கயிதை போல ஆனார்
என்பதே சரியான பழமொழியாம்...

-
இந்த பழமொழியில் கயிதை என்பது காலப்
போக்கில் மாறி கழுதை என்று ஆகி விட்டது.

கயிதை என்றால் ஊமத்தம் பூச்செடியில் உள்ள
காய்.(ஊமத்தங்காய்).

இதில் ஊமத்தம்பூ பூத்து நாளடைவில் விஷத்
தன்மை கொண்டதாக அதாவது ஊமத்தங்காய்
ஆக மாறுவதையே அப்படி சொல்கிறோம்.
-
-----------------------
நல்ல விவரம் ராம் அண்ணா புன்னகை..........நன்றி !  அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 16, 2015 10:16 pm

நல்ல கதை கார்த்திக் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக