Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18by ayyasamy ram Today at 13:51
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:50
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:23
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகை பயமுறுத்தும் குட்டிப்பையன்... எல் நினோவைப் பற்றிய 10 தகவல்கள்!
4 posters
Page 1 of 1
உலகை பயமுறுத்தும் குட்டிப்பையன்... எல் நினோவைப் பற்றிய 10 தகவல்கள்!
-
சென்னையின் பெருமழைக்கு முன்பும் சரி, பிறகும் சரி எல் நினோ
(El Nino) என்ற பெயர் அதிகமாக அடிபடத் துவங்கியிருக்கிறது.
அதிலும் ஐ.நா சபையின் சமீபத்திய அறிக்கைக்குப் பிறகு எல்
நினோவைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
-
இதோ, எல் நினோவை பற்றிய பத்து தகவல்கள்...
-
1. 'எல் நினோ' என்பது ஸ்பானிய மொழி வார்த்தை.
'குட்டிப் பையன் அல்லது சிறுவன்' என்பது இதன் பொருள்.
டிசம்பர் மாதத்தை ஒட்டி அதாவது கிறிஸ்துமசை ஒட்டி நிகழும்
வளிமண்டல மாற்ற நிகழ்வாதலால் குட்டிப் பையனைப்
பொதுவாக 'குழந்தை ஏசு' என்ற பொருள்படும்படியும்
அழைக்கிறார்கள்.
-
பசுபிக் பெருங்கடலின் கிழக்குப் பகுதியின் மேற்பரப்பில் நடை
பெறும் வெப்பநிலை மாறுபாடு மற்றும் இதன் உப விளைவாக
உலகின் பெரும்பகுதியில் ஏற்படும் வானிலை மாற்றங்கள்
ஆகியவற்றின் ஒட்டுமொத்தத் தொகுப்பே 'எல் நினோ.'
-
2. சுருக்கமாக எல் நினோ என அழைக்கப்பட்டாலும்,
'எல் நினோ தெற்கத்திய அலைவு'
(El Nino Southern Oscillation – ENSO) என முழுமையாக
அழைக்கப்படுவதே சரியானது.
கிழக்கு பசுபிக் பெருங்கடலில் எல் நினோ நிகழ்வு ஏற்படும் போது
வழக்கமாக கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி வீசும் காற்றின்
திசையானது அதற்கு நேர்மாறாக மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி
திசை மாறுகிறது, காற்று வீசும் திசையின் இந்த ஊசலாட்டத்தின்
காரணமாகவே 'எல் நினோ தெற்கத்திய அலைவு' என்று அழைக்கப்
படுகிறது.
3. இத்தகைய காற்றின் திசைமாற்றத்தின் காரணமாக பசிபிக்
பெருங்கடலின் காலநிலை முற்றிலுமாக மாற்றமடைகிறது.
வழக்கமான ஈரப்பதம் மற்றும் மித வெப்பம் கொண்ட பசிபிக்கின்
மேற்குப் பகுதியானது எல் நினோவிற்குப் பிறகு ஈரப்பதம் இல்லாமல்
குறைந்த மழையும் வறண்ட நிலையும் கொண்டதாக மாறுகிறது.
-
இதேபோல எல் நினோ நிகழ்வால் வழக்கமாக வறண்ட குளிர் மற்றும்
குறைந்த மழையைக் கொண்ட பசிபிக்கின் கிழக்குப் பகுதியானது
ஈரப்பதமும் மித வெப்பமும் அதிக மழையும் கொண்டதாக
மாற்றமடைகிறது.
-
4. எல் நினோ நிகழ்வைப் பற்றிய முறையான அறிவியல்
ரீதியான விளக்கம் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு முன்பாகவே
மனிதனின் பட்டறிவின் மூலமாக இந்நிகழ்வு கவனிக்கப்பட்டே
வந்தது. பெரு நாட்டின் கடல் பகுதி மீனவர்களும்
கப்பலோட்டிகளும் சில ஆண்டுகள் இடைவெளியில் கடலில்
நீரோட்டம் வழக்கத்தை விட வெப்பமடைவதையும், மீன்களின்
அளவு குறைந்து வருவதையும் கண்டறிந்தனர்.
இத்தகைய நிகழ்வுகளை அடுத்து வானிலையில் மாற்றம்
அடைவதையும் கவனித்தே வந்தனர்.
-
Re: உலகை பயமுறுத்தும் குட்டிப்பையன்... எல் நினோவைப் பற்றிய 10 தகவல்கள்!
-
5. தெற்கத்திய அலைவோட்டம் பற்றி அறிவியல் ரீதியான
விளக்கத்தை முதன் முதலாக அளித்தவர் இங்கிலாந்தைச் சேர்ந்த
'சர் கில்பர்ட் வாக்கர்'. 1923 -ம் ஆண்டு அவர் இதை கண்டறிந்தார்.
1904 -ம் ஆண்டு இந்திய வானவியல் ஆராய்ச்சி மையங்களின்
தலைமை இயக்குநராக பணிபுரிந்த அவர் இந்திய வானிலை
ஆராய்ச்சியில், தான் பயின்ற கணிதம் மற்றும் புள்ளியியலை
பொருத்தி ஆய்வுகள் மேற்கொண்டார்.
-
இந்திய பருவ கால மழைகளை ஆராய்ந்ததில் சில குறிப்பிட்ட
நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்வதை அவர் கண்டறிந்தார். பதினைந்து
ஆண்டுகள் இந்திய வானிலை மாற்றங்கள் மற்றும் பசிபிக்
பிராந்திய வானிலையைக் கண்காணித்து வந்ததில் பசிபிக் மற்றும்
இந்தியப் பெருங்கடல் பகுதிகளின் வளிமண்டல அழுத்தத்தில்
ஏற்படும் ஊசலாட்டம் போன்ற நிகழ்வு தெற்காசியா, இந்தோனேசியா,
ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கப் பகுதிகளின் வானிலையில்
மாற்றம் ஏற்படுத்துவதைக் கண்டறிந்தார்.
இந்த நிகழ்வுகளையே 'எல் நினோ தெற்கு அலைவு' என்று அழைத்தார்.
-
Re: உலகை பயமுறுத்தும் குட்டிப்பையன்... எல் நினோவைப் பற்றிய 10 தகவல்கள்!
-
6. எல் நினோவைப் பொறுத்த வரை, முன்கூட்டியே நம்மால் அதை
துல்லியமாக இதுவரை கணிக்க முடிந்ததில்லை. இரண்டு முதல் ஐந்து
ஆண்டு களுக்கு ஒரு முறை இந்நிகழ்வு ஏற்படுகிறது.
இந்த கால இடைவெளியில் எல் நினோ நிகழ்வு சில வாரங்கள் முதல்
மாதம் வரை நீடிக்கிறது.
-
சில சமயங்களில் எல் நினோ நிகழ்வானது மூன்று ஆண்டு முதல் ஏழு
ஆண்டு வரையிலான கால இடைவெளியில் காணப்படுகிறது. இத்தகைய
சமயங்களில் சில மாதங்கள் வரை கூட எல் நினோ நிகழ்வு தொடர்ந்து
நடைபெறும்.
-
7. எல் நினோ நிகழ்வின் விளைவாக தென் அமெரிக்காவை ஒட்டிய கடல்
பகுதிகளில் முக்கியமாக பெரு நாட்டின் கடல் பகுதிகளில் கடல் நீரின்
வெப்ப நிலை அதிகரிக்கிறது. இதனால், மீன்களின் உணவூட்டப்
பொருட் கள் குளிர்ச்சியான நீரின் அடிப்பகுதியில் தங்கிவிடுவதால்
மேற்பகுதியின் வெப்பநீரில் ஊட்டப்பொருட்களின் தட்டுப்பாடு ஏற்படுகிறது,
இதனால் மீன்கள் மடிகின்றன. இதனால் இக்கடல் பகுதிகளில் எல் நினோ
நிகழ்வுக் காலத்தில் மீன்களின் எண்ணிக்கை குறைவாகக் காணப்படும்.
-
8. 1982 மற்றும் 1983 ம் ஆண்டு ஏற்பட்ட எல் நினோ நிகழ்வின் விளைவாக
உலகம் முழுக்க 2000க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர். பொருளாதார
ரீதியாகவும் ஆயிரம் கோடிக்கும் மேலான இழப்பு ஏற்பட்டது.
1990-1995 -ம் ஆண்டு வரை மிக நீண்ட எல் நினோ நிகழ்வு ஏற்பட்டது.
இக்காலப்பகுதியில் மிகப்பெரும் வெள்ளம், புயல் போன்றவை சில
பகுதிகளிலும் பஞ்சம், காட்டுத்தீ போன்றவை சில பகுதிகளிலும் நிகழ்ந்தது.
ஆயிரம் ஆண்டுகாலத்தின் பெரும் பேரழிவாக இது கருதப்படுகிறது.
-
1997-1998 -ம் ஆண்டு எல் நினோ நிகழப்போவதை முன்கூட்டியே நம்மால்
கணிக்க முடிந்தது என்றாலும், உலகம் முழுவதும் ஏற்பட்ட 2000க்கும்
மேற்பட்ட உயிரிழப்பை தடுக்க முடியவில்லை.
-
9. எல் நினோ நிகழ்வால் உலகின் பல பகுதிகளில் பெரு மழை, வறட்சி
போன்றவை நிலவி பெரும் சேதத்தை ஏற்படுத்தினாலும் எல் நினோ நிகழ்வால்
சில நன்மைகளும் இருக்கின்றன. வளி மண்டலத்தின் உயரத்தில் வேகமாக
கிழக்கு நோக்கி வீசும் 'ஜெட் காற்றோட்டங்கள்' இக்காலப் பகுதியில்
பெரும்பாலான புயல்களை வழி நடத்துவதாக இருக்கின்றன.
-
எல் நினோ நிகழ்வால் இந்த ஜெட் காற்றோட்டங்கள் மாற்றம் பெறுகின்றன.
இதனால் பெரும் புயல்கள் வலுவிழக்கின்றன.
சில பகுதிகளில் வானிலை மாற்றங்களில் நல்ல விளைவை ஏற்படுத்துகின்றன.
-
Re: உலகை பயமுறுத்தும் குட்டிப்பையன்... எல் நினோவைப் பற்றிய 10 தகவல்கள்!
-
10. எல் நினோ நிகழ்விற்கு அப்படியே எதிர்மாறானது லா நினா ஆகும்.
எல் நினோ எவ்வாறு சிறுவன் எனப் பொருள் கொண்டதோ அதே போல
லா நினா என்றால் ' சிறுமி' என்று பொருள் ஆகும். லா நினா நிகழ்வால் தென்
அமெரிக்க கடல் பகுதியில் வழக்கத்துக்கு மாறாக அதிக வறட்சியும்
குளிர்ச்சியும் ஒருங்கே நிகழும். மேற்கு பசுபிக் கடல் பகுதி மிதவெப்பமாகவும்
அதிக ஈரப்பதமும் மற்றும் அதிக மழையும் இருக்கும்.
-
பொதுவாக எல் நினோ வை அடுத்து லா நினா நிகழும்.
ஆனால், எல்லா நேரங்களில் சிறுவனை அடுத்து சிறுமி வரமாட்டாள்.
-
-----------------------------------------
- இனியன் (மாணவப் பத்திரிகையாளர்)
விகடன்.காம்
Re: உலகை பயமுறுத்தும் குட்டிப்பையன்... எல் நினோவைப் பற்றிய 10 தகவல்கள்!
சென்னையில் பெய்த கன மழைக்கும் எல் நினோவுக்கும் சம்பந்தமில்லை என்பது மாதிரியான செய்திகள் பரப்பப்படுகின்றன. ஆனால், நேரடியாக எல் நினோ தாக்கம் இல்லாவிட்டாலும் தமிழகத்தின் வானிலையில் ஏற்பட்ட பெரும் மாற்றத்தை எல் நினோவின் பாதிப்பு மேலும் அதிகரித்துவிட்டதாக நாஸா தெரிவித்துள்ளது.
அது என்ன எல் நினோ:
பசிபிக் கடலில், குறிப்பாக பூமத்திய ரேகை பகுதியில், கடல் பரப்பிலும் அதன் மேல் பகுதியில் உள்ள வான் பரப்பிலும், வெப்ப நிலையில் ஏற்படும் மாற்றம் தான் எல் நினோ. El Niண்o-Southern Oscillation (ENSO) என்பது இதன் விரிவாக்கம். எல் நினோ என்றால் ஸ்பானிஷ் மொழியில் குட்டிப் பையன் என்று அர்த்தம்.
லா நினா..:
எல் நினோவுக்கு எதிர்மறையாக இதே கடல்- வான் பகுதியில் ஏற்படும் இன்னொரு மாற்றம் லா நினா. அதாவது கடலின் சராசரி வெப்ப நிலை சரியும் போது ஏற்படும் விளைவு இது. லா நினா என்பது குட்டிப் பெண்.
இந்த இரு வெப்ப நிலை மாற்றங்களும், இப்போது தான் ஏற்படும் என்று உறுதியாக சொல்வதற்கு இல்லை. சராசரியாக 2 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகளுக்கு ஒரு முறை எல் நினோவும் லா நினாவும் நிகழ்கிறது. இந்த வெப்ப மாற்றம் 9 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை, சில நேரங்கள் சில வருடங்கள் வரை கூட நீடிக்கும். லா நினாவை விட எல் நினோ தான் அடிக்கடி உருவாகிறது.
சர்வதேச அளவில் நேரத்தை கணக்கிட உதவும், டேட் லைன் பகுதிக்கு 120 டிகிரி மேற்கில் பசிபிக் கடலின் இந்த மாற்றங்கள் நிகழும்போதெல்லாம் கடல் பகுதி உள்பட, உலகெங்கும் தரைப் பகுதிகளிலும் வானிலையில் பெரும் மாற்றங்கள் உருவாகின்றன.
400 வருடங்களுக்கு முன்பே... எல் நினோ உருவாகும்போதெல்லாம் கடுமையான மழையும், தாங்க முடியாத வறட்சியும் என எதிர்மறையான தட்ப வெப்பத்தை பல பகுதிகளில் உருவாக்குகிறது. லா நினா காலத்தில் உலகின் வட மேற்கு பகுதிகளில் குளிர்காலம் தாங்க முடியாத அளவுக்கு குளிருடன் இருக்கும். அதே நேரத்தில் தென் கிழக்கு பகுதிகளில் குளிர் வழக்கத்தைவிட குறையும்.
இந்த எல் நினோ விவகாரம் 400 வருடங்களுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. தென் அமெரிக்க மீனவர்கள் கடல் பகுதியின் வெப்பம் அளவுக்கு அதிகமாக இருப்பதை அப்போதே கண்டுபிடித்தனர். இப்போது உலகின் பல நாடுகளையும் சேர்ந்த அதி நவீன செயற்கைக் கோள்கள் இந்த மாற்றத்தை மிகத் துல்லியமாக கணக்கிட்டு வருகின்றன. இவை தரும் தகவல்களை ஒருங்கிணைப்பது நாஸா. இந்தப் பணியில் உள்ள நாடுகள்- செயற்கைக் கோள்கள் படம் கீழே..
இஸ்ரோவும் நாஸாவும் சேர்ந்து...
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸா தனது Global Precipitation Measurement (GPM) mission திட்டத்தின் கீழ் வரும் இஸ்ரோவின் செயற்கைக் கோள்கள் உள்பட உலகின் டாப் 12 வானிலை ஆய்வு செயற்கைக் கோள்கள் தந்த டேட்டாவை வைத்து கடந்த நவம்பர் 17ம் தேதி ஒரு விவரத்தை வெளியிட்டது. அதில் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் உலகெங்கும் நிலவிய கடல் பகுதி வெப்பத்தின் அளவு தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்தப் படம் கீழே..
இதில் தமிழகத்தை சுற்றியுள்ள வங்கக் கடல், அரபிக் கடல், இந்தியப் பெருங்கடல் ஆகியவற்றில் வெப்பத்தின் அளவு வழக்கத்தை விட மிக மிக அதிகமாக, அதாவது ரெக்கார்ட் அளவில் இருப்பது தெரியவந்தது. இது போன்ற பல விவரங்களை நாஸாவும் இந்திய வானிலை ஆய்வு மையமும் நிச்சயம் பகிர்ந்து கொண்டிருக்கும். இதனால் தான் தமிழகத்தில் வழக்கத்தை விட அதிக மழை பெய்யும் என எச்சரித்தோம் என இஸ்ரோ கூட கூறுகிறது.
இந் நிலையில் கடந்த டிசம்பர் 1 முதல் 2ம் தேதி வரை தமிழகத்தில் பெய்த மழையின் உக்கிரத்தை காட்டும் இன்னொரு அனிமேஷனையும் நாஸா வெளியிட்டுள்ளது. அது கீழே..
இதன்படி 48 மணி நேரத்தில் 500 மி.மீ வரை, அதாவது 20 இன்ச் அளவுக்கு இங்கே மழை கொட்டித் தீர்த்திருப்பதை நாஸாவின் பல செயற்கைக் கோள்கள் காட்டுகின்றன. இது குறித்து நாஸாவின் கோடார்ட் ஸ்பேஸ் பிளைட் சென்டர் விஞ்ஞானிகள் கூறுகையில், தமிழகத்தில் பெய்த இந்த பெரு மழைக்கு மிகத் தீவிரமான வட கிழக்கு பருவமே காரணம். இந்த பருவ காலத்தில், நாட்டின் வட கிழக்கில் இருந்து, குறிப்பாக வங்கக் கடலில் இருந்து ஆவியான நீருடன் சூடான காற்றை தென் மேற்கு நோக்கி வீசும். இதனால் நாட்டின் உள் பகுதிகளில் வான் பகுதிகள் காய்ந்து போய், காற்றளவின் அழுத்தம் குறையும். இந்த அழுத்தம் குறைவான பகுதிக்குள் மேலும் காற்று வந்து சேரும்போது அந்தக் காற்று, ஏற்கனவே வந்து சேர்ந்த நீராவியை குளிர வைத்து, புயலாக மாறி கன மழையைக் கொட்டும். இது தான் வட கிழக்குப் பருவ மழை.
ஆனால், இந்த ஆண்டு எல் நினோ காரணமாகவும் தமிழகத்தை சுற்றிய கடல் பகுதி வெப்பம் மிக மிக அதிகமாக இருந்ததாலும் பருவ மழையின் அளவும் பெரும் அளவு அதிகரித்துவிட்டது என்கின்றனர் விஞ்ஞானிகள்.
இந்த மாதிரியான தகவல்கள் எல்லாம் கிடைத்தவுடன் மேற்கு நாடுகளில் முன்னெச்சரிக்கை என்று சொல்வார்களே, அந்த ஒரு நடவடிக்கையில் ஒட்டு மொத்த அரசு எந்திரமும் குதிக்கும், முடிந்தவரை சேதத்தை தவிர்க்கும்.
நன்றி தமிழ் ஒன் இந்தியா

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
Re: உலகை பயமுறுத்தும் குட்டிப்பையன்... எல் நினோவைப் பற்றிய 10 தகவல்கள்!
நல்லத் தகவல் சேகரிப்பு /பகிர்வு .
நன்றி ayyasami ram / கார்த்திக் செயராம் .
ரமணியன்
நன்றி ayyasami ram / கார்த்திக் செயராம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: உலகை பயமுறுத்தும் குட்டிப்பையன்... எல் நினோவைப் பற்றிய 10 தகவல்கள்!
நல்ல பதிவு, நன்றி ..............இருவருக்கும்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» MTA பற்றிய சில தகவல்கள்
» தீ பற்றிய தகவல்கள்!!
» USB 3 பற்றிய சில முக்கிய தகவல்கள்
» AGPS பற்றிய சில தகவல்கள்
» கண்ணாடி பற்றிய தகவல்கள்
» தீ பற்றிய தகவல்கள்!!
» USB 3 பற்றிய சில முக்கிய தகவல்கள்
» AGPS பற்றிய சில தகவல்கள்
» கண்ணாடி பற்றிய தகவல்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum