புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழையின் தவறு அல்ல... மனிதனின் தவறு! Poll_c10மழையின் தவறு அல்ல... மனிதனின் தவறு! Poll_m10மழையின் தவறு அல்ல... மனிதனின் தவறு! Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
மழையின் தவறு அல்ல... மனிதனின் தவறு! Poll_c10மழையின் தவறு அல்ல... மனிதனின் தவறு! Poll_m10மழையின் தவறு அல்ல... மனிதனின் தவறு! Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழையின் தவறு அல்ல... மனிதனின் தவறு! Poll_c10மழையின் தவறு அல்ல... மனிதனின் தவறு! Poll_m10மழையின் தவறு அல்ல... மனிதனின் தவறு! Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
மழையின் தவறு அல்ல... மனிதனின் தவறு! Poll_c10மழையின் தவறு அல்ல... மனிதனின் தவறு! Poll_m10மழையின் தவறு அல்ல... மனிதனின் தவறு! Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழையின் தவறு அல்ல... மனிதனின் தவறு!


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Dec 13, 2015 6:04 pm

சென்னை மூழ்க என்ன காரணம்?
 

‘சென்னையை மூழ்கடித்தது கொட்டித் தீர்த்த பெருமழை அல்ல... திட்டமிடாமல் செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளில் தண்ணீர் திறந்துவிட்டதுதான் காரணம். ஏரிகளின் நீர்மட்டத்தைக் கையாள்வதில் நிகழ்ந்த குளறுபடிகள் பேரழிவுக்குக் காரணமாகிவிட்டன’ எனப் பரவும் தகவல்கள் அதிர வைத்திருக்கின்றன.

சென்னை குன்றத்தூர் அருகே 6,250 ஏக்கரில் பரந்து விரிந்திருக்கிறது செம்பரம்பாக்கம் ஏரி. சென்னை மக்களின் குடிநீர்த் தேவையையும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு பகுதி விவசாயத்துக்கும் பயனளிக்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர்தான் சென்னை மக்களின் மீளாத் துயரத்துக்குக் காரணம். செம்பரம்பாக்கம் ஏரியின் உயரம் 24 அடி. மொத்தமாக 3,645 மில்லியன் கன அடி நீரைத் தேக்கிவைக்கலாம். உபரிநீரை 11 மதகுகள் வழியாக வெளியேற்ற முடியும். இப்படி வெளியேற்றப்படும் நீர் குன்றத்தூர், திருநீர்மலை, அனகாபுத்தூர், மணப்பாக்கம், ராமாபுரம், ஜாஃபர்கான்பேட்டை, சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், அடையாறு முகத்துவாரம் வழியாகக் கடலில் கலக்கிறது. இதில் எங்கே தவறு நடந்தது?



சென்னையை வெள்ளம் சூழ்ந்தது டிசம்பர் 1-ம் தேதி. அதற்கு முந்தைய தினம் நவம்பர் 30-ம் தேதி ஏரியில் 3,126 மில்லியன் கன அடி நீர் இருந்தது. செம்பரம்பாக்கத்தில் அந்த நாளில் 500 கன அடி நீர் ஏரிக்கு வந்துகொண்டிருந்தது. வெளியேற்றப்பட்ட நீர் 600 கன அடி நீர். இதுதான் 30-ம் தேதி நிலவரம். 1-ம் தேதி செவ்வாய்கிழமை பெருமழை பெய்தது. அன்றைய நிலவரத்தைப் பார்ப்போம். அன்றைய தினம் 3,141 மில்லியன் கன அடி நீர் இருந்தது. வினாடிக்கு 960 கன அடி தண்ணீர் ஏரிக்கு வந்துகொண்டிருந்தது. இதை ஏரி தாங்காது என்று சொல்லி 2-ம் தேதியன்று வினாடிக்கு 29 ஆயிரம் கன அடி வீதம் வெளியேற்றி விட்டார்கள். ஒரே நாளில் இவ்வளவு திறந்தால் என்ன ஆவார்கள் மக்கள்?

பருவ மழை ஆரம்பித்த நாளில் இருந்து  அதிக அளவு  நீர் திறந்துவிடப்பட்டது 2-ம் தேதிதான். மறுநாள் 3-ம் தேதி வினாடிக்கு 11 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிட்டிருக்கிறார்கள்.

‘டிசம்பர் 1-ம் தேதியில் இருந்து கனமழை பெய்யும்’ என நவம்பர் 25-ம் தேதியே அறிவித்துவிட்டது சென்னை வானிலை ஆய்வு மையம். இதுதவிர, பிறநாட்டு வானிலை ஆய்வகங்களும் சென்னையில் அதிக மழை பெய்யும் என எச்சரிக்கை செய்திருந்தன. ஆனால், இதையெல்லாம் அரசு அக்கறையோடு கவனத்தில் கொள்ளவில்லை. நவம்பர் 20-ம் தேதி செம்பரம்பாக்கம் ஏரியில் 3,268 மில்லியன் கன அடி நீர் இருந்தது. கிட்டத்தட்ட ஏரி நிரம்பிவிட்டது. அதன்பிறகு 10 நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்து வந்தது. அதற்காகத் தினமும் குறைந்தபட்சம் 500 அடியில் இருந்து அதிகபட்சம் 4 ஆயிரம் கன அடி வரையில் தினமும் தண்ணீரைத் திறந்துவிட்டார்கள். ஆனால், 1-ம் தேதி பெருமழை பெய்யும் என முன்கூட்டியே தெரிந்து அதற்கு ஏற்றார்போல தண்ணீரைத் திறந்துவிட்டிருந்தால், ஏரிக்கு வரும் நீர்வரத்தை எதிர்கொண்டிருக்க முடியும். ஏரி நிரம்பியிருந்த நிலையில், நீர்பிடிப்புப் பகுதியில் பெய்த மழையால் ஏரியின் அளவு தாங்க முடியாத அளவுக்கு உயர என்ன செய்வது எனத் தெரியாமல் அதிகபட்சமாக வினாடிக்கு 29 ஆயிரம் கன அடியை முதல் நாளிலும், 11 ஆயிரம் கன அடியை அதற்கு அடுத்த நாளிலும் திறந்துவிட்டு பெரு வெள்ளத்துக்குக் காரணமாகிவிட்டார்கள் என்பதுதான் குற்றச்சாட்டு. இப்படி திறந்து விடப்பட்ட நீர் அடையாற்றில் பாய்ந்து வந்து சென்னை நகருக்குள் புகுந்து, பல லட்சம் வீடுகளை துவம்சம் செய்தது. 



தண்ணீர் திறப்பில் அரசு காட்டிய மெத்தனத்துக்கு காரணம் ஒன்று சொல்லப்படுகிறது.

கன மழையை எதிர்பார்த்து சென்னை மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி, ‘செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் 5 ஆயிரம் கன அடி வெளியேற்றப்படுகிறது. ஏரிக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால் வெளியேற்றப்படும் அளவு 7,500 கன அடியாக அதிகரிக்கப்படலாம். அடையாறு கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும்’ என்பதை டிசம்பர் 1-ம் தேதியிட்ட தன்னுடைய உத்தரவில் அவசர செய்தியாகக் கொடுத்து இருந்தார். சுந்தரவல்லி சொன்னதுபோல 7,500 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. 2-ம் தேதி 29 ஆயிரம் கன அடி நீரை வெளியேற்றியிருக்கிறார்கள். இதை சென்னை குடிநீர் வழங்குதல் மற்றும் கழிவுநீர் அகற்றுதல் வாரியமே தனது இணைய தளத்தில் சொல்லியிருக்கிறது. கலெக்டர் சுந்தரவல்லி அறிவிப்பது ஒன்று என்றால், அரசின் பொதுப்பணித் துறை செய்தது வேறு. இப்படி அரசுத் துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்புக்கூட இல்லாமல், உயிர்களோடும் உடமைகளோடும் விளையாடியிருக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு எழுந்து நிற்கிறது. இங்கே சொன்னது எல்லாம் அரசின் கணக்குகளை வைத்து. ஆனால், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 29 ஆயிரம் கன அடியைத் தாண்டி அதிகளவில் திறந்துவிட்டதாக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.

இப்படித்தான் பூண்டி ஏரியின் நிலையும். அதையும் பார்ப்போம்.

திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் பூண்டி ஏரியின் மொத்த உயரம் 35 அடி. மொத்த கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடி. 2-ம் தேதி செம்பரம்பாக்கம் ஏரியைவிட, பூண்டி ஏரியில் திறந்துவிடப்பட்ட தண்ணீரின் அளவு அதிகம். அதாவது வினாடிக்கு 30,200 கன அடி தண்ணீரை அன்றைய தினம் திறந்துவிட்டிருக்கிறார்கள். சென்னையில் மழை கொட்டியபோது ஆந்திராவில் மழை கொட்டியது. அந்த நீரும் பூண்டிக்கு வந்தது. எனவே, 2-ம் தேதி 30,200 கன அடி திறந்துவிட்டிருக்கிறார்கள். அதற்கு அடுத்த நாள் 3-ம் தேதி பூண்டியில் இருந்து திறந்துவிடப்பட்டது அதைவிட அதிகம் 36,484 கன அடி. செம்பரம்பாக்கமும் பூண்டியும் சேர்த்து டிசம்பர் 2 மற்றும் 3 தேதிகளில் திறந்துவிட்ட அதிகாரபூர்வ மொத்த நீரின் அளவு மட்டும் வினாடிக்கு 1 லட்சத்து 6 ஆயிரத்து 684 கன அடி. இந்தத் தண்ணீர்தான் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை மூழ்கடித்தது. 

அதிகாரபூர்வமற்ற முறையில் கணக்கிட்டால் இரண்டு நாட்களில் இந்த இரண்டு ஏரிகளில் இருந்து வினாடிக்கு ஒன்றரை லட்சம் கன அடிக்கும் அதிகமாகத் தண்ணீரைத் திறந்துவிட்டிருக்கிறார்கள் என்கிற பகீர் குற்றச்சாட்டை வைக்கின்றன எதிர்க் கட்சிகள். ‘‘செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகள் தவிர அடையாற்றுடன் இணைக்கப்பட்ட 50 ஏரிகள் நிரம்பியதால், அவற்றிலிருந்து உபரி நீர் பல ஆயிரம் கன அடி வெளியேறியது. இதனால், ஒரே  நேரத்தில் 65 ஆயிரம் கன அடி உபரி நீர் அடையாற்றில் கலந்தது. இந்த நீர் அடையாற்றில் கடல்போல பெருக்கெடுத்தது. அது சென்னை நகரையும் நாசம் செய்தது. மொத்தத்தில் சொதப்பியது அரசின் பொதுப்பணித் துறைதான்’’ என்கிறார்கள். இந்தத் துறையின் அமைச்சராக இருப்பவர் ஓ.பன்னீர்செல்வம். பொதுவாக, மழைக்காலங்களில் ஏரிகள் நிரம்பி வரும்போது கடந்த காலங்களில் துறையின் அமைச்சர் ஏரிகளுக்கு விசிட் அடித்து ஆய்வுசெய்வது வழக்கம். அப்படி மழைக்கு முன்பே பன்னீர்செல்வம் போய் பார்க்கவில்லை என்கிற குற்றச்சாட்டும் படிக்கப்படுகிறது.



செம்பரம்பாக்கம் ஏரிக்கரையில் ‘பசுமை நடை’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் நடராஜன், ‘‘மக்களின் தாகம் தீர்க்க குடிநீரையும், வயிற்றுப் பசிக்கு உணவையும் கொடுத்து வரும் ‘ஹீரோ’ செம்பரம்பாக்கம் ஏரி. ஆனால், அந்த ஏரிதான் பாதிப்பை உண்டாக்கி விட்டது என ‘வில்லன்’போல பழி தூற்றுகிறார்கள். நீர் போக்குவரத்துகளைச் சீர் செய்யாமல் ஆக்கிரமிப்பு செய்துவிட்டு, ஏரியைக் குறை சொல்வதில் பயனில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தால் என்ன நடக்கும் என்பதை இயற்கை நமக்குப் பாடம் புகட்டி இருக்கிறது. மூன்று சுற்று மழை பெய்து, முதல் சுற்றிலேயே செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பிவிட்டது. வரலாறு காணாத மழை பெய்யும் என்று வானிலை வல்லுநர்கள் சொல்லியும் அரசு கவனத்தில் எடுக்காதது ஏன்? முதல் மழைக்கே விவரங்களைக் கணக்கிட்டு அதற்கு ஏற்றாற்போல முன்கூட்டியே திட்டமிடாமல், கண்மூடிக் கிடந்ததை என்னவென்று சொல்வது? மனித மெத்தனமே, இந்தப் பேரழிவுக்குக் காரணம்’’ என்கிறார்.

அலட்சியமும், ஆக்கிரமிப்பும் சென்னையை மூழ்கடித்தது என்பதே உண்மை!

- எஸ்.முத்துகிருஷ்ணன், பா.ஜெயவேல், அ.சையது அபுதாஹிர்
படங்கள்: எம்.உசேன்

‘‘முறையாகத்தான் நடந்தது!’’

பொதுப்பணித் துறைச் செயலாளர் பழனியப்பனிடம் பேசினோம். ‘‘24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 22 அடி வரையில் தண்ணீரைத் தேக்கலாம். ஆனால், அதிகப்படியான மழை மற்றும் நீர்வரத்து இருந்ததால் 22 அடிக்கு மேல் வந்த தண்ணீரை வெளியேற்றினோம். சென்னை கலெக்டர் 1-ம் தேதி காலைதான் 7,500 கன அடி நீர் திறக்கப்படும் என அறிவித்தார். ஆனால் இரவுதான் அதிக மழை பெய்தது. அதுகுறித்து முறையான தகவல்கள் அளித்து வருவாய்த் துறை மூலம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கையும் செய்துவிட்டோம். அதேபோல்தான் பூண்டி ஏரியில் அதிகமான நீரை வெளியேற்றினோம். ஏரியைத் திறந்துவிட மேலிடத்தின் அனுமதியை எதிர்பார்த்து காத்திருந்ததாகச் சொல்வது எல்லாம் சுத்தப் பொய். உதவிச் செயற்பொறியாளரே தண்ணீரின் வரத்தைப் பொறுத்து நீரைத் திறந்துவிட்டார். அவர்களுக்கே ஏரியைத் திறந்துவிடும் அதிகாரம் உண்டு. அளவுக்கு அதிகமாக பெய்த மழைக்கு அதிகாரிகளால் என்ன செய்ய முடியும்?” என்றார்.

‘‘ரெட் அலார்ட் எங்கே போனது?’’

ஏரிகள் நீர் திறப்பில் அரசு காட்டிய அலட்சியத்தை எல்லா கட்சிகளும் கண்டித்திருக்கின்றன. தி.மு.க. முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன், ‘‘ ‘ரெட் அலார்ட்’ எனச் சொல்வார்கள். அதைச் செயல்படுத்தவே இல்லை. கூடுதலான தண்ணீரைத் திறந்துவிட்டு மக்களை வெள்ளத்தில் மிதப்பதை வேடிக்கை பார்த்தது இந்த அரசாங்கம்’’ என்கிறார். ‘சுப்ரீம் கோர்ட் நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்’ எனச் சொல்லியிருக்கிறார் கொங்குநாடு தேசிய மக்கள் கட்சித் தலைவர் ஈஸ்வரன். ‘பேரிடரும், பெரும் துயரமும் இயற்கையின் சீற்றத்தைவிட அதிகார அமைப்பின் அவசரத் தலையீடு இல்லாத தன்மையால் ஏற்பட்டது’ என குற்றம்சாட்டியிருக்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன். ‘‘இத்தனை அழிவுக்கும் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்’’ எனச் சொல்லியிருக்கிறார் அன்புமணி.

நன்றி விகடன்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 13, 2015 6:15 pm


கர்நாடகம் காவிரி ஆற்றில் தண்ணீர் விட மறுக்கிறது
-
அதில் வெள்ளம் வந்தால் தமிழ்நாடுதான் வடிகாலாக
மாறி துயரத்தை அனுபவிக்கிறது
-
அது போல இயற்கை பேரிடர் என்று ஆன பின்
ஒருவரை ஒருவர் தூற்றிக் கொள்வதை நிறுத்த
வேண்டும்...
-
இனி என்ன செய்ய வேண்டும் என்பதில்தான் தீவிரம்
காட்ட வேண்டும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 6:43 pm

ayyasamy ram wrote:
அது போல இயற்கை பேரிடர் என்று ஆன பின்
ஒருவரை ஒருவர் தூற்றிக் கொள்வதை நிறுத்த
வேண்டும்...
இனி என்ன செய்ய வேண்டும் என்பதில்தான் தீவிரம்
காட்ட வேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1180222
மழை அளவு அதிகரித்தது தான் காரணம் என்பதை ஏற்க மறுத்து ஆதாயம் தேட பார்ப்பவரை பார்க்கும்
போது ??????

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக