ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்து பெண்ணின் பிரசவத்திற்கு உதவிய முஸ்லிம் தொழில் அதிபர்: பிறந்த குழந்தையின் கல்வி செலவை ஏற்பதாக அறிவிப்பு

4 posters

Go down

இந்து பெண்ணின் பிரசவத்திற்கு உதவிய முஸ்லிம் தொழில் அதிபர்: பிறந்த குழந்தையின் கல்வி செலவை ஏற்பதாக அறிவிப்பு Empty இந்து பெண்ணின் பிரசவத்திற்கு உதவிய முஸ்லிம் தொழில் அதிபர்: பிறந்த குழந்தையின் கல்வி செலவை ஏற்பதாக அறிவிப்பு

Post by ராஜா Wed Dec 09, 2015 11:49 am

மழை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றிய முஸ்லிம் தொழில் அதிபரின் பெயரை, தங்கள் குழந்தைக்கு சூட்டியுள்ளனர், ஓர் இந்து தம்பதியர். அந்த குழந்தையின் கல்வி செலவை ஏற்பதாக அந்த தொழில் அதிபர் கூறினார்.

சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர் யூனுஸ். எம்.பி.ஏ. பட்டதாரியான இவர், தொழில் அதிபர் ஆவார். கடந்த 2-ந் தேதி இரவு, ஊரப்பாக்கம் பகுதியில், மழை வெள்ளத்தில் சிக்கிய சித்ரா என்ற கர்ப்பிணி பெண்ணையும், அவருடைய கணவர் மோகனையும் யூனுசும், அவருடைய நண்பர்களும் மீட்டனர்.

இருவரையும் படகில் ஏற்றி, பெருங்களத்தூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு பத்திரமாக கொண்டு போய்ச் சேர்த்தனர்.

அங்கு சித்ராவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தங்களைக் காப்பாற்றி ஆஸ்பத்திரியில் சேர்த்த யூனுசுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, தங்களுக்குப் பிறந்த பெண் குழந்தைக்கு யூனுஸ் என்று பெயர் சூட்டி உள்ளனர், மோகன்-சித்ரா தம்பதியர்.

இருவரும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் என்ற போதிலும், தங்களைக் காப்பாற்றிய முஸ்லிம் தொழில் அதிபரான யூனுசின் பெயரை தங்கள் குழந்தைக்கு சூட்டியுள்ளனர்.

மதங்களைக் கடந்த மனித நேயமிக்க இந்த செயல் குறித்து யூனுஸ் கூறியதாவது:-

மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஊரப்பாக்கம் பகுதியில் என்னுடைய நண்பர்களை மீட்பதற்காக நானும், என்னுடைய குழுவினரும் 2-ந்தேதி இரவு அங்கு சென்றோம். கழுத்தளவு தண்ணீர் இருந்த ஓரிடத்தில், ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது. சிறிது நேரத்துக்குப் பிறகுதான், அது பிரசவ வலி என்று தெரிந்துகொண்டோம்.

அப்பெண்ணையும், அவருடைய குடும்பத்தினரையும் பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்வதே எனது நோக்கமாக இருந்தது. அவர்களை படகு மூலம் பெருங்களத்தூருக்கு கொண்டு சென்றோம். அந்த 15 நிமிட பயணம், மறக்க முடியாத அனுபவம் ஆகும். இந்த பெருமை முழுவதும், என் நண்பர்களையும், பெசன்ட்நகரைச் சேர்ந்த மீனவர்களையுமே சாரும்.

தற்போது, என்னை ஆச்சரியப்படுத்தும் விதமாக, பிறந்த குழந்தைக்கு எனது பெயரை சூட்டி இருப்பதாக மோகன் தகவல் தெரிவித்துள்ளார். இன்னும் மீட்பு பணியில் இருப்பதால், அந்த குழந்தையை இன்னும் நான் பார்க்கவில்லை.

விரைவில் சென்று பார்ப்பேன். அந்த குழந்தையின் கல்விச் செலவு முழுவதையும் நான் ஏற்றுக்கொள்வேன் என்று உறுதி அளிக்கிறேன்.

இவ்வாறு யூனுஸ் கூறினார்.

இதுபோல், இந்து கோவில்களை முஸ்லிம் அமைப்பினர் சுத்தம் செய்த மெய்சிலிர்க்க வைக்கும் சம்பவமும் சென்னையில் நடந்துள்ளது.

ஜமாத் இ இஸ்லாமி என்ற தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர், கோட்டூர்புரம் மற்றும் சைதாப்பேட்டையில் 2 கோவில்களையும், மசூதிகளையும் சுத்தம் செய்தனர். இந்த வழிபாட்டுத் தலங்கள், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சிதிலமடைந்த நிலையில் இருந்தன.

இந்த அமைப்பைச் சேர்ந்த முதுகலை பொறியியல் மாணவர் பீர் முகமது கூறுகையில், ‘இந்துக்கள், கோவில்களுக்குள் சென்று வழிபாடு நடத்த முடியாத நிலையில் இருப்பதை பார்த்து, அவற்றை சுத்தம் செய்தோம். வரும் வாரங்களில் மற்ற பகுதிகளுக்கும் சென்று அங்கிருக்கும் வழிபாட்டுத் தலங்களை சுத்தம் செய்வோம்’ என்றார். -malaimalar
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இந்து பெண்ணின் பிரசவத்திற்கு உதவிய முஸ்லிம் தொழில் அதிபர்: பிறந்த குழந்தையின் கல்வி செலவை ஏற்பதாக அறிவிப்பு Empty Re: இந்து பெண்ணின் பிரசவத்திற்கு உதவிய முஸ்லிம் தொழில் அதிபர்: பிறந்த குழந்தையின் கல்வி செலவை ஏற்பதாக அறிவிப்பு

Post by கார்த்திக் செயராம் Wed Dec 09, 2015 1:01 pm

நெஞ்சை நெகிழ வைத்த பதிவு


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

இந்து பெண்ணின் பிரசவத்திற்கு உதவிய முஸ்லிம் தொழில் அதிபர்: பிறந்த குழந்தையின் கல்வி செலவை ஏற்பதாக அறிவிப்பு Empty Re: இந்து பெண்ணின் பிரசவத்திற்கு உதவிய முஸ்லிம் தொழில் அதிபர்: பிறந்த குழந்தையின் கல்வி செலவை ஏற்பதாக அறிவிப்பு

Post by ராஜா Wed Dec 09, 2015 1:24 pm

கார்த்திக் செயராம் wrote:நெஞ்சை நெகிழ வைத்த பதிவு
சென்னை மழைவெள்ளத்தால் பாதிப்புகள் அதிகமிருந்தும் இது போல செய்திகள் மனதிற்கு ஆறுதலாய் இருக்கு கார்த்திக் , நம் மக்களின் மனதில் இன்னும் ஈரம் மிச்சமிருக்கு என்றே காட்டுகிறது இந்த செய்திகள் ,

அதனால் தான் கண்ணில் படுவதையெல்லாம் , இங்கு பதிகிறேன்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இந்து பெண்ணின் பிரசவத்திற்கு உதவிய முஸ்லிம் தொழில் அதிபர்: பிறந்த குழந்தையின் கல்வி செலவை ஏற்பதாக அறிவிப்பு Empty Re: இந்து பெண்ணின் பிரசவத்திற்கு உதவிய முஸ்லிம் தொழில் அதிபர்: பிறந்த குழந்தையின் கல்வி செலவை ஏற்பதாக அறிவிப்பு

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Dec 10, 2015 10:29 am

ராஜா wrote:மழை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றிய முஸ்லிம் தொழில் அதிபரின் பெயரை, தங்கள் குழந்தைக்கு சூட்டியுள்ளனர், ஓர் இந்து தம்பதியர். அந்த குழந்தையின் கல்வி செலவை ஏற்பதாக அந்த தொழில் அதிபர் கூறினார்.
-malaimalar
மேற்கோள் செய்த பதிவு: 1179445
இந்த மழை செய்த பல நல்ல விசயங்களில் மத நல்லிணக்கம் ,உயர்ந்து ஓங்கிய மனித நேயம் ,எதுவும் உதவாது- நன்மக்களை தவிர மற்றும் உதவும் பண்புகளை தவிர.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இந்து பெண்ணின் பிரசவத்திற்கு உதவிய முஸ்லிம் தொழில் அதிபர்: பிறந்த குழந்தையின் கல்வி செலவை ஏற்பதாக அறிவிப்பு Empty Re: இந்து பெண்ணின் பிரசவத்திற்கு உதவிய முஸ்லிம் தொழில் அதிபர்: பிறந்த குழந்தையின் கல்வி செலவை ஏற்பதாக அறிவிப்பு

Post by ayyasamy ram Thu Dec 10, 2015 10:35 am

மனித நேயம் ஓங்கட்டும்...
-
இந்து பெண்ணின் பிரசவத்திற்கு உதவிய முஸ்லிம் தொழில் அதிபர்: பிறந்த குழந்தையின் கல்வி செலவை ஏற்பதாக அறிவிப்பு 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்து பெண்ணின் பிரசவத்திற்கு உதவிய முஸ்லிம் தொழில் அதிபர்: பிறந்த குழந்தையின் கல்வி செலவை ஏற்பதாக அறிவிப்பு Empty Re: இந்து பெண்ணின் பிரசவத்திற்கு உதவிய முஸ்லிம் தொழில் அதிபர்: பிறந்த குழந்தையின் கல்வி செலவை ஏற்பதாக அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum