புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹிட்லரைத் தோற்க வைத்தது எது? Poll_c10ஹிட்லரைத் தோற்க வைத்தது எது? Poll_m10ஹிட்லரைத் தோற்க வைத்தது எது? Poll_c10 
21 Posts - 84%
heezulia
ஹிட்லரைத் தோற்க வைத்தது எது? Poll_c10ஹிட்லரைத் தோற்க வைத்தது எது? Poll_m10ஹிட்லரைத் தோற்க வைத்தது எது? Poll_c10 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
ஹிட்லரைத் தோற்க வைத்தது எது? Poll_c10ஹிட்லரைத் தோற்க வைத்தது எது? Poll_m10ஹிட்லரைத் தோற்க வைத்தது எது? Poll_c10 
1 Post - 4%
viyasan
ஹிட்லரைத் தோற்க வைத்தது எது? Poll_c10ஹிட்லரைத் தோற்க வைத்தது எது? Poll_m10ஹிட்லரைத் தோற்க வைத்தது எது? Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹிட்லரைத் தோற்க வைத்தது எது? Poll_c10ஹிட்லரைத் தோற்க வைத்தது எது? Poll_m10ஹிட்லரைத் தோற்க வைத்தது எது? Poll_c10 
213 Posts - 42%
heezulia
ஹிட்லரைத் தோற்க வைத்தது எது? Poll_c10ஹிட்லரைத் தோற்க வைத்தது எது? Poll_m10ஹிட்லரைத் தோற்க வைத்தது எது? Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
ஹிட்லரைத் தோற்க வைத்தது எது? Poll_c10ஹிட்லரைத் தோற்க வைத்தது எது? Poll_m10ஹிட்லரைத் தோற்க வைத்தது எது? Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஹிட்லரைத் தோற்க வைத்தது எது? Poll_c10ஹிட்லரைத் தோற்க வைத்தது எது? Poll_m10ஹிட்லரைத் தோற்க வைத்தது எது? Poll_c10 
21 Posts - 4%
prajai
ஹிட்லரைத் தோற்க வைத்தது எது? Poll_c10ஹிட்லரைத் தோற்க வைத்தது எது? Poll_m10ஹிட்லரைத் தோற்க வைத்தது எது? Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஹிட்லரைத் தோற்க வைத்தது எது? Poll_c10ஹிட்லரைத் தோற்க வைத்தது எது? Poll_m10ஹிட்லரைத் தோற்க வைத்தது எது? Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
ஹிட்லரைத் தோற்க வைத்தது எது? Poll_c10ஹிட்லரைத் தோற்க வைத்தது எது? Poll_m10ஹிட்லரைத் தோற்க வைத்தது எது? Poll_c10 
8 Posts - 2%
Guna.D
ஹிட்லரைத் தோற்க வைத்தது எது? Poll_c10ஹிட்லரைத் தோற்க வைத்தது எது? Poll_m10ஹிட்லரைத் தோற்க வைத்தது எது? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஹிட்லரைத் தோற்க வைத்தது எது? Poll_c10ஹிட்லரைத் தோற்க வைத்தது எது? Poll_m10ஹிட்லரைத் தோற்க வைத்தது எது? Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஹிட்லரைத் தோற்க வைத்தது எது? Poll_c10ஹிட்லரைத் தோற்க வைத்தது எது? Poll_m10ஹிட்லரைத் தோற்க வைத்தது எது? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹிட்லரைத் தோற்க வைத்தது எது?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 08, 2015 10:48 am

ஒரு ராணுவம் எப்போதும் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.
அதன் சகல அம்சங்களும் ஒழுங்கான நிலையிலும்,
நேர்கோட்டுப் புள்ளியிலும் அணி வகுத்து நிற்கும்.

அந்தக் கட்டுப்பாடும், ஒழுங்கு முறையும் இருக்கும்
நிறுவனங்களே வர்த்தகத்தில் வெற்றிபெறமுடியும்.

ராணுவத்தின் தலைமை எந்த முடிவெடுத்து உத்தரவிட்டாலும்,
கேள்வி எதுவும் கேட்காமல் அதை உயிரைக் கொடுத்தேனும்
செயல்படுத்திக் காட்டுபவர்களே படைவீரர்கள்.
அங்கு தர்க்கத்துக்கோ, விவாதத்திற்கோ இடமில்லை.

ராணுவத்தில் எல்லா முடிவுகளும் தன்னிச்சையாக எடுக்கப்
படுவதில்லை. விரிவான விவாதம் நடைபெறும். சகல
விளைவுகளைப் பற்றியும் நுணுக்கமாக எடுத்து வைக்கப்படும்.
எப்படித் தாக்குதல் நடத்துவது, எங்கிருந்து முன்னேறுவது என
அனைத்து சாத்தியக்கூறுகளும் அக்குவேறு, ஆணி வேறாக
அலசப்படும்.

ஆனால், முடிவு எடுத்த பிறகு அங்கு சின்ன முணுமுணுப்புக்குக்
கூட இடமில்லாமல் அனைவரும் முழுவதுமாகத் தங்களை
ஒப்படைக்க வேண்டும்.

சரித்திரத்தில் சர்வாதிகாரியாக சித்திகரிக்கப்பட்ட தைமூர்
போன்றவர்களும் தங்கள் முக்கிய தளபதிகளைக் கலந்தாலோசித்த
பின்பே வியூகங்களை வகுப்பார்கள்; போர் முறைகளை முடிவு
செய்வார்கள்.

பாபர் போன்றவர்களும் மற்ற போர்த் தளபதிகளின்
ஆலோசனைகளை செவிமடுப்பார்கள். ‘இதுதான் அணுகுமுறை’
என்ற முடிவை அனைவரும் ஒப்புக் கொண்ட பிறகு முன்வைத்த
காலைப் பின்வைக்கும் பேச்சுக்கே இடமில்லை.

மேற்கத்திய நிறுவனங்களில் மேலதிகாரிகளுக்கும்,
பணியாளர்களுக்கும் இணக்கமான சூழல் இருக்கும்.
பெயரைச் சொல்லி மேலதிகாரியை அழைப்பது சகஜம்.
ஆனால், பிறப்பிக்கும் ஆணைகளுக்குச் சார்நிலை அலுவலர்
கட்டுப்படாவிட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 08, 2015 10:49 am

நான் சில மாதங்கள் ஓர் ஐக்கிய நாடுகள் அமைப்பில் பணி செய்தேன்.
அந்த மண்டல அதிகாரி சில நேரம் நம்மிடம் தொலைபேசியில் தொடர்பு
கொண்டு ‘நான் உங்கள் அறைக்கு வரலாமா?’ என்று கேட்டுவிட்டுத்தான்
வருவார்.

மேலதிகாரியின் அறைக்க மற்றவரகள் செல்ல வேண்டும் என்கிற
நியதியெல்லாம் அங்கு கிடையாது. ஒருமுறை ஓர் அலவலர் அனுப்பிய
பயணக் குறிப்பில் அந்த மண்டல அதிகாரி ‘இப்பயணத்தைத் தவிருங்கள்’
எனக் குறிப்பு எழுதித் திருப்பி அனுப்பினார்.

அந்த அலுவலரோ அதை லேசாக எடுத்துக் கொண்டு பயணம் சென்று
விட்டார். மேலதிகாரிக்கு அது அவமானமாகப் போய்விட்டது.
நற்பண்பாளர்கள் சமாதானங்களில் சாந்தியடைந்து விடுவதில்லை.
மண்டல அதிகாரி அந்த ஒழுங்கின்மையை தில்லியில் உள்ள தேச
அலுவலகத்துக்கு எடுத்துச் சென்றார்.

அந்தப் பிரச்னையை அவர் மிகப் பெரிய ஒழுங்கீனமாக ஆக்கினார்.
உண்டு இல்லைஎன்று செய்துவிட்டார். தொடர்புடைய அலவலர் எவ்வளவு
மன்னிப்புக் கேட்டும் அவர் மசியவில்லை. அவர் வரும்போது அவருக்கு
ஒதுக்கப்பட்ட ஒரு துறையை தில்லி தலைமையகம் பிடுங்கிவிட்டது.
ஒழுங்கீனம் கீறலாகத் தொடங்கி, விரிசலாகப் பரவி, பிளவாக மாறி
கட்டடத்தையே தரைமட்டமாக்கிவிடக்கூடிய அபாயம் உள்ளது.

கட்டுப்பாட்டை ராணுவம் பயிற்சியின்போது ஏற்படுத்த எல்லா
நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது. அணிவகுப்பின்போது காலணிகள்
பளபளப்புடன் இருக்கிறதா, சட்டை சரியாக சலவை செய்யப்பட்டிருக்கிறதா,
சவரம் செய்து கொண்டு காலை அணிவகுப்புக்கு வந்திரக்கிறாரா என்று
அவர்களுடைய தோற்றம் அளவிடப்படுகிறது.

ஒவ்வொரு அம்சமும் முக்கியம்; சமரசத்துக்கு இடமே இல்லை என்பது
முதல் நாளிலேயே கடுமையாகப் புரியவைக்கப்படுகிறது.

‘மற்றவர்கள் எழுவதற்கு முன்பு நீ எழவேண்டும்;
ஏனென்றால் நீ மற்றவர்களைக் காட்டிலும் முக்கியமானவன்’

‘நீ எப்படி வேண்டுமானாலும் உடையணிய முடியாது’

‘நீ மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும்’

‘நீ எப்போதும் கம்பீரமாக நடக்க வேண்டும்’

‘நாட்டைக் காக்கிற நீ அசிரத்தையாக இருக்கக்கூடாது’

‘நாமே உயர்ந்த பணி புரிகிறவர்கள்’

இப்படி அவர்களுடைய ஆழ்மனத்தில் எண்ணங்கள் எல்லாக் கட்டங்களிலும்
விதைக்கப்படும். அவர்கள் பிறகு தன்னிச்சையாக இவற்றை உள்வாங்கிக்
கொண்டு பின்பற்ற துவங்கி விடுவார்கள்.

உயர்நிலை அலுவலர்களுக்குப் பயிற்சியளிக்கும் போதும் இது போன்ற
மனநிலையை ஏற்படுத்துவது அவசியம். சராசரியான வாழ்க்கைக்கும்,
சாதாரணமான நோக்கங்களுக்கும், சாமானியமான இலக்ககளுக்கும்
அவர்கள் ஒப்படைத்துக் கொண்டால், நிர்வாகம் நிலை குலைய நேரிடும்.
நாங்கள் குடிமைப் பணி பயிற்சியில் இருக்கும் போது உணவு விடுதிக்கு
எப்படிச் செல்ல வேண்டும் என்பதிலும் உடைக் கட்டுப்பாடு உண்டு. ‘

உணவு விடுதி உண்பதற்காக மட்டுமல்ல’ என எங்களுக்குச் சொல்வார்கள்.
சட்டையை மடித்துக் கட்டிக் கொண்டு நம் கல்லூரி விடுதிகளில் மாணவர்கள்
நுழைவதைப் பார்க்கலாம். ‘நீ எப்போதும் உதாரணமாகத் திகழ வேண்டும்’
என உரக்கச் சொல்வதே உயர்ந்த ஊக்குவிப்பாக இருக்க முடியும்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 08, 2015 10:49 am

ஹிட்லரைப் பற்றிய ஒரு சம்பவத்தை நான் படித்திருக்கிறேன்…

ஹிட்லர் குழந்தைகளுக்கு விளையாட்டு பொம்மைகளையெல்லாம்
முழுவதுமாகத் தடை செய்தார். மான், மயில், கார், யானை, சைக்கிள்
போன்ற பொம்மைகள் தயாரிக்கப்படவே கூடாது என்று தடை உத்தரவு.
அவற்றுப் பதிலாக பீரங்கி, டாங்கி, கத்தி போன்ற பொம்மைகளையே
உருவாக்க வேண்டும். அவற்றையே குழந்தைகளுக்கு விளையாடக்
கொடுக்கவேண்டும். ஊஞ்சலில் கிலு கிலுப்பைக்கு பதிலாக டாங்கி
பொம்மையைக் கட்டி வைக்க வேண்டும்.

அவற்றையே பார்த்து வளருகிற குழந்தைகள் அசாத்தியமான
துணிச்சலுடன் திகழ்வார்கள். அவர்கள் மனத்தில் மரணபயம் துளியும்
இருக்காது என்பது அவருடைய அனுமானம்.

ரத்தத்தை கண்டு உறையாதவர்களே ராணுவத்தில் சேர்ந்து எதிரிகளை
துவம்சம் செய்ய முடியும் என்பது அவருடைய சித்தாந்தம்.

நாஸி தலைவர்கள் கான்சென்ட்ரேஷன் முகாம் போன்றவற்றுக்குத்
தேவையானவர்களைப் பயிற்றுவிக்க வித்தியாசமான முறையை
கையாண்டார்கள்.

இளைஞர்களுக்கு நாய்க்குட்டிகளைத் தருவார்கள்.
அவர்களும் அவற்றை சிரத்தையுடன் வளர்ப்பார்கள். நன்றியும் பாசமும்
நிறைந்த நாய்கள் வளர்ப்பகளிடம் சீக்கிரமே ஒட்டிக் கொள்ளும்.
நம்மைச் சற்றி வாலாட்டிக் கொண்டு வாஞ்சையுடன் வலம் வருகின்ற
நாய்களிடம் நமக்கும் பாசம் ஏற்பட்டுவிடும்.

ஆதிகாலத்திலிருந்தே மனிதனிடம் தோழமையுடன் இருக்கும் வரலாறு
நாய்களுக்கு உண்டு. அப்படி வளர்ந்த நாய்கள், அந்த இளைஞனிடம்
மிகவும் நெருக்கமானதும், பொது இடத்தில் அவனிடம் ஒரு கைத்
துப்பாக்கியைக் கொடுத்து அந்த நாயைச் சுடச் சொல்வார்கள்.

இந்தப் பரிசோதனையில் தேர்ச்சி பெறுகிறவர்களை கான்சென்ட்ரேஷன்
முகாமில் வார்டனாக நியமிப்பார்கள். அப்போது அவன் சித்ரவதை
செய்யவோ, சுடவோ, யூதர்களை விஷவாயு அறைக்கு அனுப்பவோ
தயங்கமாட்டான் என்பதால் இப்படியொரு வழிமுறை.

வர்த்தக நிறுவனங்களில் இப்படியெல்லாம் குரூரமான பயிற்சிகள்
ஏதுமில்லை. ஆனால், ராணுவத்தைப் போன்ற கடுமையான சட்ட
திட்டங்கள் பன்னாட்டு நிறுவனங்களில் உண்டு.
மேலதிகாரி கூட்டம் நடத்தும்போது கவனம் பிசகாமல் அதை உற்று
நோக்க வேண்டும். சிறிதும் பதறாமல் கொடுக்கப்படும் ஆணைகளை
நிறைவேற்ற வேண்டும்.

எந்தப் பணியை ஒப்படைத்தாலும் சரி என்று சொல்லிவிட்டு களத்தில்
இறங்க வேண்டும். மறுபேச்சுக்கு இடமினறி உடனடியாக அதைச்
செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

ராணுவத்தில் கட்டளைகளை சிப்பாய்கள் மீறுகிறார்கள் என்றால்
தோல்வி தொடங்கிவிட்டது என்று பொருள். தோல்வி வருகிறபோது
எல்லா ஆணைகளும் காற்றில் பறக்கவிடப்படும்.

ஹிட்லர் ரஷிய ராணுவமும், விமானப்படையும் கையை உயர்த்தி
அடிக்கத் தொடங்கும்போது கதிகலங்கிப் போகிறார்.

அவருடைய அடுத்த நிலை அதிகாரிகளை அழைத்து அவர்களுக்கு
அந்தப் படையை முன்னகர்த்து இந்தப் படையை தாக்கு என
ஆணைகளைச் சரமாரியாகப் பிறப்பிக்கிறார். அவர்களோ மறுத்து
விடுகிறார்கள். கோபாக்னியாகக் கத்தும் ஹிட்லரை அவர்கள் சிறிதும்
லட்சியம் செய்யாமல் செல்வதைப் பார்த்த ஹிட்லர் இனி ஜெர்மனி
ஜெயிக்க வாய்ப்பே இல்லை என்று முடிவு செய்கிறார்.

குண்டுகளோ பெர்லினில் விழுந்த வண்ணம் இருக்கின்றன.
ஹிட்லர் வேறு வழியில்லாமல் தற்கொலை செய்து விட முடிவெடுக்கிறார்.

வெற்றி பெறுகிறவர்களுடைய கட்டளைகளை நிறைவேற்றவே எந்தப்
படையும் தயாராக இருக்கும். இங்கு எந்தத் தனி நபருக்கும்
மரியாதையில்லை. அவர் வகிக்கும் பதியைப் பொருத்துமே மரியாதையும்,
செல்வாக்கும். இந்த நுட்பத்தைப் பலர் சரியாகப் புரிந்து கொள்வதில்லை.

மக்களுக்கு ஒரு மனோபாவம் உண்டு.

வெற்றி பெறுகிற அணியிலேயே மக்கள் இணைய விரும்புகிறார்கள்.
பிரபலமான பொருளையே வாங்குவதற்கு விரும்புகிறார்கள்.
ஒரு நிறுவனத்தின் பொருள் தரமானதாக இருந்தாலும், அது சந்தையில்
சரிவை சந்தித்தால் மக்கள் அப்பொருளைப் புறக்கணிக்கத் தொடங்கி
விடுகிறார்கள்.

மக்கள் தரத்துக்கு மக்கியத்துவம் கொடுத்தாலும், அது
பெரும்பான்மையானோரால் உபயோகப்படுத்தப்படுகிறதா என்பதையும்
சில நேர்வுகளில் கணிக்கிறார்கள்.

ராணுவத்தில் வெற்றி பெறுவோம் என்ற ஊக்கம் முக்கியமானது.
எவ்வளவு பெரிய படையாக இருந்தாலும் நமக்கு வெற்றி கிடைக்காது
என்று ஒரு கட்டத்தில் எண்ண நேரிட்டால் சிப்பாய்கள் சிதறி ஓடத்
தொடங்குகிறார்கள். அவர்களை மறுபடியும் படைக்குத் திருப்புவது கடினம்.
வர்த்தகத்திலும் இழந்த வாடிக்கையாளர்களை மீண்டும் பெறுவது கடினம்.

———————————-

– வெ. இறையன்பு
கல்கி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 08, 2015 1:20 pm

ayyasamy ram wrote:
ராணுவத்தில் வெற்றி பெறுவோம் என்ற ஊக்கம் முக்கியமானது.
எவ்வளவு பெரிய படையாக இருந்தாலும் நமக்கு வெற்றி கிடைக்காது
என்று ஒரு கட்டத்தில் எண்ண நேரிட்டால் சிப்பாய்கள் சிதறி ஓடத்
தொடங்குகிறார்கள். அவர்களை மறுபடியும் படைக்குத் திருப்புவது கடினம்.
வர்த்தகத்திலும் இழந்த வாடிக்கையாளர்களை மீண்டும் பெறுவது கடினம்.
– வெ. இறையன்பு
கல்கி
மேற்கோள் செய்த பதிவு: 1179214
ஹிட்லரைத் தோற்க வைத்தது எது? 3838410834 ஹிட்லரைத் தோற்க வைத்தது எது? 3838410834 ஹிட்லரைத் தோற்க வைத்தது எது? 103459460 ஹிட்லரைத் தோற்க வைத்தது எது? 1571444738

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 08, 2015 2:01 pm

நல்ல பதிவு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Dec 08, 2015 3:26 pm

அருமையான பதிவு ஐயா



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக