புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பென்ஸ் காரை உருவாக்கிய மேதை! Poll_c10பென்ஸ் காரை உருவாக்கிய மேதை! Poll_m10பென்ஸ் காரை உருவாக்கிய மேதை! Poll_c10 
5 Posts - 63%
mohamed nizamudeen
பென்ஸ் காரை உருவாக்கிய மேதை! Poll_c10பென்ஸ் காரை உருவாக்கிய மேதை! Poll_m10பென்ஸ் காரை உருவாக்கிய மேதை! Poll_c10 
1 Post - 13%
Barushree
பென்ஸ் காரை உருவாக்கிய மேதை! Poll_c10பென்ஸ் காரை உருவாக்கிய மேதை! Poll_m10பென்ஸ் காரை உருவாக்கிய மேதை! Poll_c10 
1 Post - 13%
kavithasankar
பென்ஸ் காரை உருவாக்கிய மேதை! Poll_c10பென்ஸ் காரை உருவாக்கிய மேதை! Poll_m10பென்ஸ் காரை உருவாக்கிய மேதை! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பென்ஸ் காரை உருவாக்கிய மேதை! Poll_c10பென்ஸ் காரை உருவாக்கிய மேதை! Poll_m10பென்ஸ் காரை உருவாக்கிய மேதை! Poll_c10 
59 Posts - 82%
mohamed nizamudeen
பென்ஸ் காரை உருவாக்கிய மேதை! Poll_c10பென்ஸ் காரை உருவாக்கிய மேதை! Poll_m10பென்ஸ் காரை உருவாக்கிய மேதை! Poll_c10 
4 Posts - 6%
prajai
பென்ஸ் காரை உருவாக்கிய மேதை! Poll_c10பென்ஸ் காரை உருவாக்கிய மேதை! Poll_m10பென்ஸ் காரை உருவாக்கிய மேதை! Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
பென்ஸ் காரை உருவாக்கிய மேதை! Poll_c10பென்ஸ் காரை உருவாக்கிய மேதை! Poll_m10பென்ஸ் காரை உருவாக்கிய மேதை! Poll_c10 
2 Posts - 3%
Balaurushya

1 Post - 1%
Karthikakulanthaivel
பென்ஸ் காரை உருவாக்கிய மேதை! Poll_c10பென்ஸ் காரை உருவாக்கிய மேதை! Poll_m10பென்ஸ் காரை உருவாக்கிய மேதை! Poll_c10 
1 Post - 1%
Shivanya
பென்ஸ் காரை உருவாக்கிய மேதை! Poll_c10பென்ஸ் காரை உருவாக்கிய மேதை! Poll_m10பென்ஸ் காரை உருவாக்கிய மேதை! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பென்ஸ் காரை உருவாக்கிய மேதை!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 08, 2015 11:06 am

பென்ஸ் காரை உருவாக்கிய மேதை! AfnwTAiSAeO0i0KudEag+E_1447917457

இன்று இந்தியாவில், 'கார்களின்' பெருக்கம் அபரிமிதமாக வளர்ந்திருக்கிறது. பணக்காரர்கள் மட்டும் கார் வைத்திருந்த நிலை மாறி நடுத்தர மக்களும் கார் வாங்கும் நிலை வந்து விட்டது.

உலக அளவில் போர்டு, பென்ஸ், பி.எம்.ஐ... ஆர்டிக் என வரிசையாய் பல விலை உயர்ந்த கார்கள் வலம் வருகின்றன.
இதில், 'பென்ஸ்' காருக்கு தனித் தன்மை உண்டு. மிகவும் விலை உயர்ந்த வாகனம் அது. அக்காரை வைத்திருப்பவர்கள் பெரும் பணக்காரர்கள். கோடீஸ்வரர்களாக மட்டுமே இருக்க முடியும். இன்று கோடிகளில் விளையாடும் கார் இது.

மதிப்பு வாய்ந்த சொகுசு பென்ஸ் காரின் பிதாமகன் 'கார்ல் பென்ஸ்.' இவர் ஜோஹனன் ஜார்ஜ் பென்ஸ் என்பவருக்கும், ஜோசபைன் வாலேவயலண்ட் அம்மையாருக்கும் 1844ம் ஆண்டு, நவம்பர் 25ம் தேதி ஜெர்மனியில் பிறந்தார். இவரின் முழுப் பெயர் கார்ல் பிரடரிக் மைக்கேல் பென்ஸ்.

லோகோமோடிவ் டிரைவரான இவரின் தந்தை, இரண்டரை வயது மகனையும், இளம் மனைவியையும் விட்டு விட்டு ஒரு விபத்தில் மறைந்தார்.

வறுமையின் பிடியில் குடும்பம் தள்ளாடினாலும், கார்லினின் தாய் மகனை படிக்க வைப்பதில் பின் தங்கவில்லை. கார்லும் தாயின் கஷ்ட, நஷ்டங்களை புரிந்து நன்கு படித்தார். அவருக்கு சிறு வயதிலேயே இயந்திரங்களை இயக்கும் ஆர்வம் ஏற்பட்டது. அவரின் 15வது வயதில் மெக்கானிக்கல் இஞ்ஜினியரிங் படிக்க தொடங்கினார்.

சுமார் நான்காண்டுகள் படிப்பிற்குப்பின், கல்லூரியை விட்டு, திறன் வாய்ந்த இஞ்ஜினியராக வெளியே வந்தார்.
அவருக்கு மாட்டு வண்டிகள்... குதிரை வண்டிகள்... இரு சக்கர சைக்கிள் போவது போல நான்கு சக்கர வாகனத்தையும் இயக்க வேண்டும் என்று எண்ணி, கற்பனையில் பல வரைபடங்களை வரைந்து தள்ளினார்.

கார்ல் 1863ல் கல்லூரியை விட்டு வெளியே வந்து, பல இஞ்ஜினியரிங் நிறுவனங்களில் பணியாற்றினார். 'ஆக்சைடு இரிட்டர்' என்ற நண்பர் ஒருவரோடு சேர்ந்து இயந்திரவியல் பட்டறையை துவக்கினார். இயந்திரங்களின் சுழற்சிகளை அறிந்தார்.
தானே ஒரு நான்கு சக்கர வண்டியை தயார் செய்தார். அது மெல்ல நகருமாறு இயந்திரங்களை இணைத்தார். அதை தனது கை சுழற்சியால் சிறிது தூரம் தானாகவே ஓடும்படி செய்தார். அவரின் எண்ணம், பெட்ரோலால் தானாக இயங்கும் இஞ்ஜினை உருவாக்க வேண்டும் என்பதே.

பெர்தா ரிங்கர் என்பவரை 1872ல் மணந்தார். மனைவிக்கும் இயந்திரவியலில் ஆர்வம் இருப்பதைக் கண்டார். இருவரும் இணைந்து செயலாற்றும் ஒரு சிறு தொழில் நிறுவனத்தை ஆரம்பித்தார்.

இருவரும் இரவும், பகலும் உழைத்து பல இஞ்சின் வடிவங்களை உருவாக்கினர் என்றாலும் 1879ம் ஆண்டு மிகவும் அருமையான இரு ஸ்ட்ரோக் இஞ்ஜினை வடிமைத்தனர். இதற்கு காப்புரிமையும் பெற்றனர்.

மேலும், இவர்கள் வாகனங்களுக்கு தேவையான வாட்டர் ரேடியேட்டர், மின்கலம் மூலம் தீப்பொறி உண்டாக்கும் கருவி ஸ்பார்க்பிளக், கிளட்ச், கியர் ஷிப்ட் போன்ற முக்கிய கருவிகளை கண்டு பிடித்தனர். தங்களது கண்டுபிடிப்புகள் மூலம் நான்கு சக்கர வாகனம் சாலையில் பெட்ரோலின் சக்தி மூலம் இயங்க முடியும் என்பதை அறிந்து மகிழ்ந்தனர்.

மார்க்ஸ் ரோஸ் மற்றும் பிரிட்டிக் எஸ்லிங்கர் உடன் பென்ஸ் அண்டு கம்பெனி, ரெயினிசி காஸ்மோட் ரைன் பேட்ரி, என்னும் பென்ஸ் சி என்ற கம்பெனியை 1883ம் ஆண்டு நிறுவினர். அந்த நிறுவனத்தின் மூலம் 1886ம் ஆண்டு உலகில் முதல் பெட்ரோலால் இயங்கும் வாகனம் கண்டுபிடிக்கப்பட்டு சாலையில் ஓட, அறிஞர்கள் முதல், சாதாரண மக்கள் வரை அந்தக் காரை (வாகனம்) ஆச்சரியத்தோடு பார்த்து மகிழ்ந்தனர்.

அக்காரின் உபயோகத்தைக் கண்டு உலகமே வியந்தது. கார்ல் பென்ஸின் வாகனத்தை பாராட்டிய உலகம், அது தங்கள் பயன்பாட்டிற்கு மிகவும் உதவும் என்று போற்றவும் செய்தது.

மக்கள் சிரமமின்றி பயணம் செய்ய காரைக் கண்ட கார்ல் 1895ம் ஆண்டு உலகின் முதல் டிரக்கை கண்டுபிடித்தார். ஆம், உலகின் முதல் லாரியையும் அவரே கண்டுபிடித்தார்.

பென்சிசோனே என்ற புதிய நிறுவனத்தை 1906ம் ஆண்டு உருவாக்கினார். புதிய புதிய வடிவங்களில் கார்களை உருவாக்கினார்.

கசோலின் என்ற பெட்ரோல் மூலம் முதல் காரை உருவாக்கிய அவர், சொகுசான சாலையில் செல்வதே தெரியாத அளவிலான காரை உருவாக்கி பேரும் புகழும், செல்வமும் குவித்தார்.

ஓய்வே அறியாமல் உழைத்து உலகிற்கு கார்களையும், லாரிகளையும் உருவாக்கிய அவர், தனது சொத்துக்களை மகன்களுக்கு பகிர்ந்து கொடுத்து விட்டு 1929ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி உடல் நலிவின் காரணமாய் இவ்வுலகை விட்டு மறைந்தார் என்றாலும் பென்ஸ் காரும், லாரியும் இவ்வுலகில் இயங்கும்வரையில் இவரின் பெயரும் உலகில் வாழும் என்பது உண்மைதானே!

நன்றி சிறுவர் மலர் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84574
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 08, 2015 11:10 am

பென்ஸ் காரை உருவாக்கிய மேதை! 103459460

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 08, 2015 1:03 pm

krishnaamma wrote:

மக்கள் சிரமமின்றி பயணம் செய்ய காரைக் கண்ட கார்ல் 1895ம் ஆண்டு உலகின் முதல் டிரக்கை கண்டுபிடித்தார். ஆம், உலகின் முதல் லாரியையும் அவரே கண்டுபிடித்தார்.

பென்சிசோனே என்ற புதிய நிறுவனத்தை 1906ம் ஆண்டு உருவாக்கினார். புதிய புதிய வடிவங்களில் கார்களை உருவாக்கினார்.

கசோலின் என்ற பெட்ரோல் மூலம் முதல் காரை உருவாக்கிய அவர், சொகுசான சாலையில் செல்வதே தெரியாத அளவிலான காரை உருவாக்கி பேரும் புகழும், செல்வமும் குவித்தார்.

மேற்கோள் செய்த பதிவு: 1179219
இவர் கண்டுபிடிப்பு பெரிய சாதனை,நன்றி அம்மா.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக