ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்!

+4
ராஜா
பழ.முத்துராமலிங்கம்
ayyasamy ram
சாமி
8 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்! - Page 2 Empty மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்!

Post by சாமி Sat Dec 05, 2015 9:57 pm

First topic message reminder :

மிகவும் வெட்கப்படுகின்றேன்... மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல் காட்டம்!


மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்! - Page 2 FLsQlCbNSSaHYzNv0D7Y+cartoon_kamal

சென்னையின் சொகுசு ஏரியா ஒன்றான எல்டாம்ஸ் ரோடு பகுதியில் கமல் வசித்து வந்தாலும், நகரின் பிற பகுதிகளில் மக்கள் படும் துன்பங்களால் சற்று கோபமடைந்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள சிறப்பு பேட்டியில் கமல் கூறியுள்ளதாவது: இந்த சேதத்தை, இயற்கை பேரிடர் என்று கூறுவது மிகவும் குறைவான வார்த்தை. சென்னைக்கே இந்த நிலைமை எனில், தமிழகத்தின் பிற பகுதிகளின் நிலைமையை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. ஏழைகளும், மத்திய வர்க்கத்தினரும் கடுமையான அச்சத்திலுள்ளனர்.சென்னையில் ஒட்டுமொத்த, நிர்வாகமும் உருகுலைந்து கிடக்கிறது. மீண்டும் சென்னை இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப இன்னும் பல மாதங்கள் தேவைப்படும்.

மக்கள் செலுத்திய வரிப் பணம் அனைத்துக்கும் எங்கே சென்றது? ஆளும் அரசாங்கங்கள், அது எந்த கட்சியுடையதாக இருந்தாலும், ஒரு கார்பொரேட் திட்டத்திற்கு ரூ.4000 கோடியை செலவிட முடிகிறது. இந்த நாட்டில் 120 கோடி மக்கள் இருக்கிறோம். அந்த 4000 கோடியை எங்கள் மத்தியில் வினியோகித்திருந்தால், எத்தனையோ இந்தியர்கள் கோடீஸ்வரர்களாக மாறியிருக்க முடியும்நான் முற்றிலுமாக கவலையில் ஆழ்ந்துள்ளேன்.

நான் வசதியான ஒரு வீட்டில் உட்கார்ந்திருப்பதற்காக வெட்கப்படுகிறேன். அரசுடன் ஒப்பிட்டால் எனது வருமானம் மிகவும் சொற்பம். ஆனால், அரசோ, வெள்ள நிவாரணத்திற்கு மக்களிடம்தான் பணம் கேட்கிறது. பிறகு அரசு என்னதான் செய்யும்? இருப்பினும், நான் பணம் கொடுக்கவே செய்வேன். நான் பணக்காரன் என்று நினைத்துக்கொண்டு பணம் கொடுக்கப்போவதில்லை. நான் எனது மக்களை நேசிக்கிறேன். பணக்காரன், ஏழை என நன்கொடைக்காக இப்போது பேசப்படும் அனைத்துமே நாடகம்தான். அரசியல் வாதிகள் பதவியில் இருக்கும்வரை சமூக ஏற்றத்தாழ்வை நீக்குவோம் என்றுதான் பேசிக்கொண்டிருக்க போகிறார்கள். இவ்வாறு கமல்ஹாசன் காட்டமாக தெரிவித்துள்ளார். (நன்றி - சினியுலகம் இணையம்)


Last edited by சாமி on Sat Dec 05, 2015 10:04 pm; edited 1 time in total
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down


மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்! - Page 2 Empty Re: மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்!

Post by krishnaamma Sun Dec 06, 2015 7:56 pm

சசி wrote:பொதுப்பணித்துறை சரியாக செயல்பட்டு இருந்தால் இந்த அளவுக்கு இழப்பு ஏற்ப்பட வாய்ப்பு இல்லை. அதை கருத்தில் கொண்டு கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். அதனால் தான் பன்னீர் செல்வத்துக்கு கோபம் கொப்பளித்து கொண்டு வருகிறது.
பொதுப்பணித்துறை பன்னீர் செல்வம் ஆச்சே! இவ்வளவு பெரிய அறிக்கை தயார் செய்ய இவருக்கு இந்த பேரிடரில் நேரம் இருக்கிறது என்றால் மக்களின் கேள்விகளுக்கு உடனே பதில் அளிக்கிறாராம். இன்னும் திருந்தவே இல்லை. தமிழ் நாட்டின் தலையெழுத்தை மாற்ற எப்பொழுது காலம் வரும் என்று தெரியவில்லை.
உடனடியாக பதில் வரலையே சசி......அம்மா எழுதித்தந்ததை வாங்கி வர நேரம் ஆகிவிட்டது பாவம் அவருக்கு............ கோபம் கோபம் கோபம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்! - Page 2 Empty Re: மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்!

Post by கார்த்திக் செயராம் Sun Dec 06, 2015 10:15 pm

40 ஆண்டுகளாக அதிகாரத்தில் இருந்த அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளின் செயலற்ற, பொறுப்பற்ற தன்மையால் சென்னை நகரம் சீரழிக்கப்பட்டு இன்று சந்திக்கும் பேரிடருக்கு அடித்தளமிட்டிருக்கிறார்கள்.

மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்! - Page 2 UosiF9W9QCukLi9xbQJi+IMG-20151206-WA0011


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்! - Page 2 Empty Re: மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்!

Post by krishnaamma Sun Dec 06, 2015 10:57 pm

கார்த்திக் செயராம் wrote:40 ஆண்டுகளாக அதிகாரத்தில் இருந்த அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளின் செயலற்ற, பொறுப்பற்ற தன்மையால் சென்னை நகரம் சீரழிக்கப்பட்டு இன்று சந்திக்கும் பேரிடருக்கு அடித்தளமிட்டிருக்கிறார்கள்.

மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்! - Page 2 UosiF9W9QCukLi9xbQJi+IMG-20151206-WA0011
மேற்கோள் செய்த பதிவு: 1178865


ம்ம்....சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்! - Page 2 Empty Re: மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்!

Post by ராஜா Mon Dec 07, 2015 11:17 am

கார்த்திக் செயராம் wrote:40 ஆண்டுகளாக அதிகாரத்தில் இருந்த அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளின் செயலற்ற, பொறுப்பற்ற தன்மையால் சென்னை நகரம் சீரழிக்கப்பட்டு இன்று சந்திக்கும் பேரிடருக்கு அடித்தளமிட்டிருக்கிறார்கள்.

மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்! - Page 2 UosiF9W9QCukLi9xbQJi+IMG-20151206-WA0011
ஊடகங்கள் + சமூக வலைத்தளங்கள் , செயலிகள் மூலம் இவர்களின் குணம் இப்ப உடனுக்குடன் பொதுமக்களுக்கு தெரிந்துகொண்டிருக்கிறது புன்னகை

கூடிய விரைவில் இவர்களை பொதுமக்களே ரோட்டில் விட்டு அடிக்க போகிறார்கள்....
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்! - Page 2 Empty Re: மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்!

Post by மாணிக்கம் நடேசன் Mon Dec 07, 2015 11:44 am

குனிந்து கும்பிடு போடும் கேவல அ.தி.மு.க குள்ளநரிகளைத் தான் கேட்கனும்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்! - Page 2 Empty Re: மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்!

Post by சாமி Wed Dec 09, 2015 8:52 am

புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்க கடமைப்பட்டிருக்கிறேன்: கமல்ஹாசன்

மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்! - Page 2 VhV9sIvITl6B8LHhkWfy+anbe_sivam_1371882524

தான் சொன்னதாக சொல்லப்பட்ட வார்த்தைகள் யாரையேனும் புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்க கடமைப்பட்டிருக்கிறேன் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

சென்னை வெள்ள பாதிப்பு குறித்து நடிகர் கமல்ஹாசன் அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வரிப் பணம் குறித்துக் கேட்கவில்லை: நான் கட்டிய வரிப் பணம் என்னவாயிற்று என்று நான் கேள்வி எழுப்பியதுபோல சில ஊடகங்களில் சில நாள்களுக்கு முன்பு வந்த செய்தி நான் அந்த ஊடகங்களுக்கு அளித்த பேட்டி அல்ல. மின்னஞ்சல் வழியாக எனது வட நாட்டு பத்திரிகையாளர் நண்பருக்கு எழுதிய ஆங்கிலக் கடிதம். அந்தக் கடிதத்தின் தோராயமான தமிழாக்கமே சில ஊடகங்களில் வெளியானது.
என் கடிதம் தமிழகத்துக்கு நேர்ந்த பேரிடர் பற்றியும் மக்களின் அவதியைப் பற்றியுமான புலம்பலே. கடிதத்தில் எங்கும் தமிழக அரசு என்ற குறிப்போ, என் வரிப் பணம் என்னவாயிற்று என்ற கேள்வியோ இல்லை. அவ்வளவு சந்தேகம் இருந்திருந்தால் இவ்வளவு ஆண்டுகள் தொடர்ந்து முழு வருமானத்தையும் சொல்லி அத்தனை வரி கட்டியிருக்கவே மாட்டேன். எந்த நிலையிலும் என் கடமையைச் செய்ய வேண்டும் என்று நினைப்பவன் நான்.

என் வீட்டுக்கு சில நாள்களாக செய்தித்தாள் விநியோகம் இல்லை. விட்டு விட்டு வரும் தொலைபேசித் தொடர்பும், எப்போதோ வரும் வலையதள தொடர்பினாலும் என்னைப் பற்றி ஊடகங்களில் வரும் வாதப் பிரதிவாதங்களை நண்பர்கள் சொல்லியே தெரிந்து கொண்டேன்.

தொடர் முகநூல் வாசியல்ல நான்: எனது சில நண்பர்களைப் போல எப்போதும் ஒரு கண்ணை முகநூலில் வைத்திருக்கும் முகநூல் வாசியல்ல நான். பதில் ஏதும் பேசாமல் இருந்தால் உண்மை தன்னால் வெளிப்படும்; என் உண்மை நிலை புரியும் என்று நான் எண்ணியது தவறு என உணர்கிறேன்.
என் நற்பணி இயக்கத்தாருடன் தொலைபேசி தொடர்பு கிடைக்கும்போதெல்லாம் பேசி வருவதாலும், அவர்களை எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி மக்களுக்கு உதவ அன்புக் கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்ததாலும் அவையே முக்கியம் இந்த வாதங்களைப் பிறகு வைத்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டேன். அது தவறு; அந்தத் தவறு இப்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

பதில் அறிக்கை அல்ல: இது நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் அறிக்கைக்கு பதில் அறிக்கை அல்ல. களத்தில் இறங்கி பணியாற்றிக் கொண்டிருக்கும், பல வேறு கட்சிகளுக்கும் ஓட்டு போடும் தன்னுரிமை உள்ள எங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் குழப்பத்தில் நற்பணி செயல்களில் தடுமாற்றம் கண்டுவிடக் கூடாது என்பதற்கே இந்த விளக்கம்.

மன்னிப்பு கேட்பது கடமை: பக்தரும் பகுத்தறிவாளரும் பல மதத்தாரும் எங்கள் இயக்கத்தில் உண்டு. இந்த நேரம் கட்சிகளுக்கு அப்பாற்பட வேண்டிய நேரம். தனி மனிதக் கோபங்களைத் தவிர்த்துச் செயல்பட வேண்டிய பேரிடர் காலம். களமிறங்கி வேலை செய்யும் யார் மனதையும் நான் சொன்னதாக சொல்லப்பட்ட வார்த்தைகள் புண்படுத்தியிருந்தால் கூட மன்னிப்புக் கேட்க கடமைப்பட்டிருக்கிறேன்.

வாதப் பிரதிவாதங்களைப் புறந்தள்ளி ஆக்க வேலையில் முன்பு போல முனையுங்கள். எனக்காக வாதாடும் எனது பல நெருங்கிய நண்பர்களும் என்னைக் கடுமையாக விமர்சிப்பவர்களும் அதையெல்லாம் விடுத்து செய்யும் உங்கள் நற்பணிகளைத் தொடர்ந்து செய்ய மன்றாடுகிறேன்.  கோபதாபங்களைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.  தண்ணீரும் கண்ணீரும் வடிந்த பிறகும் கூட, சூழக்கூடும் என அஞ்சும் அபாயங்கள் அண்டாதிருக்க ஆவன செய்வோம். ஆளும் அரசு எதுவாக இருந்தாலும் அவர்களுடன் இணைந்து நற்பணிகளை 36 ஆண்டுகளாக எங்கள் இயக்கம் செய்து வருகிறது.

நான் எந்த அரசியல் கட்சியிலும் சேராமல் எல்லோருடனும் சேர்ந்து ஒத்துழைப்பதே நற்பணிச் சேவைகளைத் தொடரும் அந்த சந்தோஷத்துக்காகவும் சௌகரியத்துக்காகவும்தான் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். (நன்றி தினமணி 8-12-15)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்! - Page 2 Empty Re: மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்!

Post by கார்த்திக் செயராம் Wed Dec 09, 2015 9:00 am

கழிவு நீர், கரன்ட் கட், கெடுபிடி! - பழிவாங்கப்படுகிறாரா கமல்?!

 
கமலின், ’என் வரிப்பணம் என்ன ஆச்சு?’ என்ற அறிக்கைக்கும் ‘களத்தில் இறங்கி வேலை செய்யும் யார் மனதையும் புண்படுத்தியிருந்தால், மன்னித்துக் கொள்ளுங்கள்!’ என்ற அறிக்கைக்கும் இடையில் என்ன நடந்தது? என்ன நடந்ததோ தெரியவில்லை... ஆனால், கமலின் ஆழ்வார்பேட்டை அலுவலகம் அருகே சில வேலைகள் நடக்கவில்லை என்பது மட்டும் தெரிகிறது.

மழை வெள்ளம் காரணமாக சென்னையே பாதிக்கப்பட்டு நிவாரண, மீட்புப் பணிகள் நடைபெற்றன. ஆனால், கமல் அலுவலகம் அமைந்திருக்கும் எல்டாம்ஸ் ரோடு பகுதி மட்டும் கடந்த ஒருவார காலமாக அரசாங்கத்தால் கைவிட்டப்பட்ட பகுதியாக இருந்தது. காரணம், என்னவென்று தெரியவில்லை. ஆனால், அந்த காலகட்டத்தில்தான் கமலின் ‘வரிப்பணம்’ அறிக்கை வெளியாகியிருந்தது. இதனால் கமல் பாதிக்கப்பட்டாரா என்பது இரண்டாவது பிரச்னை. அப்பகுதி மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டார்கள். அதுதான் பிரச்னை!

ஆழ்வார்பேட்டையில் உள்ள எல்டாம்ஸ் ரோடு சாலைகளில் கழிவு நீர் கலந்து ரோடு முழுக்கவே கழிவு நீர் குட்டை போல காட்சி அளித்தது. வாகனத்தில் சென்றாலே வயிற்றை பிடுங்கி இழுக்கிறது குடல் நாற்றம். கடந்த வாரம் புதன்கிழமை மதியம் அடைமழைக்கு சாலையில் விழுந்த புங்கை மரத்தை ஞாயிற்றுக் கிழமை வரை அகற்றாமல் இருந்திருக்கிறார்கள். பொதுமக்கள் பொங்கியெழவும் சம்பிரதாயத்துக்கு மரத்தை அகற்றியிருக்கிறார்கள் அதிகாரிகள். இன்னமும் மரத்தின் சில பகுதிகள் சாலையிலே கிடக்கின்றன.



கமலின் அலுவலகத்துக்கு அருமையில் வசிக்கும் ஒருவர், "என்ன ஆச்சுனு தெரியலை... திடீர்னு இந்தப் பக்கம் போலீஸ் ஏக கெடுபிடி காட்டுறாங்க. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யறவனையே பிடிச்சு அடிச்சு மிரட்டுறாங்க. நாங்கள்லாம் சாதாரண ஆளுங்க. எங்க மேல ஏன் இவ்வளவு கெடுபிடி காட்டணும்? போன வாரம் மழை ஆரம்பிச்சதுமே கரன்ட் கட் பண்ணிட்டாங்க.  எல்லாரும் கூப்பிட்டு புகார் பண்ணினோம். யாரும் எட்டிக்கூட பார்க்கலை. அதோட மரமும் விழுந்திருச்சு. அந்த ரோட்ல டூ-விலர் கூட போகமுடியலை. மழை நின்ன பிறகு எல்லாம் சரி பண்ணிடுவாங்கனு நினைச்சோம். ஆனா, அப்புறம் அதிகாரிகள் வந்து எட்டிக் கூட பார்க்கலை. நாலு நாளாச்சு. கமல் ஆபிஸ் இருந்த ரோடு முன்னாடி இடுப்பளவு தண்ணீ சேர்ந்துடுச்சு. அதுல கழிவு நீரும் கலந்து வாடை அடிக்க அரம்பிச்சுடுச்சு.



தண்ணியை அகற்ற யாரும் வந்து பார்க்கலை. ஒருகட்டத்துல பொறுமை இழந்து, நாங்கள்லாம்  போராட்டம் பண்ணுவோம்னு சொன்ன பிறகுதான் அதிகாரிகள் வந்தாங்க. கடமைக்கு கொஞ்சம் தண்ணியை அகற்றிட்டு மரத்தை அறுத்து அப்புறப்படுத்தினாங்க. ஆனா, இன்னும் குப்பை மாதிரிதான் இருக்கு. கழிவு நீரும் சாலைகளில் ஓடுது. ஆறு நாளைக்கு அப்புறம் நேத்துதான் கரன்ட் விட்டாங்க. ஆனா, இன்னமும் கமல் ஆபிஸுக்கும் அதைச் சுத்தியிருக்கிற நாலு வீடுகளுக்கு மட்டும் கரன்ட் விடலை. அது பத்தி விசாரிச்சா இதுவரை சரியான பதில் இல்லை. அப்படி பதில் சொல்லாததாலேயே, கமல் கொடுத்த அறிக்கைதான் இதுக்கெல்லாம் காரணமோனு நினைக்கத் தோணுது. ஆனா, என்ன நடந்தாலும் எங்க சப்போர்ட் கமல் சாருக்குத்தான். எத்தனை நாளைக்கு கரன்ட் விடாம இருப்பாங்கனு பார்க்கலாம்!'' என்றார் ஆதங்கமும் கோபமுமாக!



கமல்ஹாசன் அலுவலகத்தில் எட்டிப் பார்த்தோம். மின்சாரம் இல்லாமல் இருளாக இருந்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்டு இன்றோடு ஏழு நாட்கள் ஆகிறதாம்.

ஹூம்.... ‘முதல்வன்’ படத்தில் அர்ஜுனை அரசாங்கம் விரட்டி அடித்ததை சினிமாவாகப் பார்த்தோம். இப்போது அதை நேரிலேயே பார்த்துக் கொண்டிருக்கிறோம்!

நன்றி விகடன்


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்! - Page 2 Empty Re: மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்!

Post by ayyasamy ram Wed Dec 09, 2015 9:36 am

கமலின் ரசிகர் படையில் தன்னார்வ தொண்டர்கள்
இல்லையா...?
-
தெருவில் தண்ணீர் இடுப்பளவு இருந்தால் கரண்ட்
கொடுக்க மாட்டார்கள் என்பது விகடனாருக்குத் தெரியாதா...?
-
பத்திரிகை விற்றாகணுமே...என்பதற்காக
எதேனும் பரபரப்பு செய்தி போடணுமா...என்ன?
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84139
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்! - Page 2 Empty Re: மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்!

Post by ராஜா Wed Dec 09, 2015 10:45 am

கேவலமான அரசும் அதற்கு ஜால்ரா தட்டும் கூட்டமும் இருக்கும் வரைக்கும் தமிழ்நாடு இப்படி தான் இருக்கும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்! - Page 2 Empty Re: மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்!

Post by கார்த்திக் செயராம் Wed Dec 09, 2015 12:32 pm

மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்! - Page 2 R2J7mO7SXCAV76SVzrsg+IMG-20151209-WA0004


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்! - Page 2 Empty Re: மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum