புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 1:16 pm

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 12:50 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மா படமும் கட்சி சின்னமும் Poll_c10அம்மா படமும் கட்சி சின்னமும் Poll_m10அம்மா படமும் கட்சி சின்னமும் Poll_c10 
87 Posts - 65%
heezulia
அம்மா படமும் கட்சி சின்னமும் Poll_c10அம்மா படமும் கட்சி சின்னமும் Poll_m10அம்மா படமும் கட்சி சின்னமும் Poll_c10 
29 Posts - 22%
E KUMARAN
அம்மா படமும் கட்சி சின்னமும் Poll_c10அம்மா படமும் கட்சி சின்னமும் Poll_m10அம்மா படமும் கட்சி சின்னமும் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
அம்மா படமும் கட்சி சின்னமும் Poll_c10அம்மா படமும் கட்சி சின்னமும் Poll_m10அம்மா படமும் கட்சி சின்னமும் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
அம்மா படமும் கட்சி சின்னமும் Poll_c10அம்மா படமும் கட்சி சின்னமும் Poll_m10அம்மா படமும் கட்சி சின்னமும் Poll_c10 
3 Posts - 2%
sram_1977
அம்மா படமும் கட்சி சின்னமும் Poll_c10அம்மா படமும் கட்சி சின்னமும் Poll_m10அம்மா படமும் கட்சி சின்னமும் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அம்மா படமும் கட்சி சின்னமும் Poll_c10அம்மா படமும் கட்சி சின்னமும் Poll_m10அம்மா படமும் கட்சி சின்னமும் Poll_c10 
1 Post - 1%
Shivanya
அம்மா படமும் கட்சி சின்னமும் Poll_c10அம்மா படமும் கட்சி சின்னமும் Poll_m10அம்மா படமும் கட்சி சின்னமும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மா படமும் கட்சி சின்னமும் Poll_c10அம்மா படமும் கட்சி சின்னமும் Poll_m10அம்மா படமும் கட்சி சின்னமும் Poll_c10 
423 Posts - 76%
heezulia
அம்மா படமும் கட்சி சின்னமும் Poll_c10அம்மா படமும் கட்சி சின்னமும் Poll_m10அம்மா படமும் கட்சி சின்னமும் Poll_c10 
75 Posts - 13%
mohamed nizamudeen
அம்மா படமும் கட்சி சின்னமும் Poll_c10அம்மா படமும் கட்சி சின்னமும் Poll_m10அம்மா படமும் கட்சி சின்னமும் Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
அம்மா படமும் கட்சி சின்னமும் Poll_c10அம்மா படமும் கட்சி சின்னமும் Poll_m10அம்மா படமும் கட்சி சின்னமும் Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
அம்மா படமும் கட்சி சின்னமும் Poll_c10அம்மா படமும் கட்சி சின்னமும் Poll_m10அம்மா படமும் கட்சி சின்னமும் Poll_c10 
8 Posts - 1%
prajai
அம்மா படமும் கட்சி சின்னமும் Poll_c10அம்மா படமும் கட்சி சின்னமும் Poll_m10அம்மா படமும் கட்சி சின்னமும் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
அம்மா படமும் கட்சி சின்னமும் Poll_c10அம்மா படமும் கட்சி சின்னமும் Poll_m10அம்மா படமும் கட்சி சின்னமும் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அம்மா படமும் கட்சி சின்னமும் Poll_c10அம்மா படமும் கட்சி சின்னமும் Poll_m10அம்மா படமும் கட்சி சின்னமும் Poll_c10 
3 Posts - 1%
sram_1977
அம்மா படமும் கட்சி சின்னமும் Poll_c10அம்மா படமும் கட்சி சின்னமும் Poll_m10அம்மா படமும் கட்சி சின்னமும் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
அம்மா படமும் கட்சி சின்னமும் Poll_c10அம்மா படமும் கட்சி சின்னமும் Poll_m10அம்மா படமும் கட்சி சின்னமும் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மா படமும் கட்சி சின்னமும்


   
   

Page 1 of 2 1, 2  Next

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Sun Dec 06, 2015 7:32 am

இருவர் நிவாரணம் கொடுக்க
நான்கு பேர் கைகளில்...
அம்மா படமும் கட்சி சின்னமும். - ம. ரமேஷ் சென்ரியு



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84938
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 06, 2015 7:45 am

அம்மா படமும் கட்சி சின்னமும் 3838410834
-
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு 1 லட்சம் ரயில் நீர் பாட்டில்களை அனுப்பி வைக்குமாறு மத்திய ரயில்வே அமைச்சகம் ஐஆர்சிடிசிக்கு உத்தரவிட்டது.
-
அதன்படி ஒரு லட்சம் பாட்டில்கள் சென்னைக்கு வந்துள்ளன. சென்னைக்கு வந்துள்ள பாட்டில்களை மக்களுக்கு வழங்க விடாமல் அதிமுகவினர் பிரச்சனை செய்து வருகிறார்களாம். பாட்டில்கள் அனைத்திலும் அம்மா ஸ்டிக்கர் ஒட்டி அவர் பெயரில் தான் மக்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறி அவற்றை பறித்துக் கொண்டுள்ளார்களாம்.
-
இதனால் தாகத்தில் தவிக்கும் மக்களுக்கு தண்ணீர் பாட்டில்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதே போன்று வெளிமாநிலங்களில் இருந்து நிவாரணப் பொருட்களை ஏற்றி வரும் லாரிகளையும் அதிமுகவினர் மறித்து பொருட்களில் அம்மா ஸ்டிக்கரை ஒட்டியனுப்பி வருகிறார்கள்.
-
அதிமுகவினரின் இந்த செயலால் வெளி மாநிலங்களில் இருந்து நிவாரணப் பொருட்களை கொண்டு வரும் நபர்கள் எரிச்சல் அடைந்துள்ளனர்.
-

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Dec 06, 2015 4:04 pm

சென்னையில் இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டது. மக்கள் சகஜமாகத் தங்கள் பணிகளை மேற்கொள்ள  தொடங்கி விட்டனர். சாலைகள் துடைத்து வைத்ததைப் போல் பளிச்சென்று இருக்கின்றன. இயற்கையின் சீற்றத்தை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் சீர்மிகு ஆட்சி பெருமளவில் எதிர்கொண்டு சமாளித்துவிட்டது.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின் படி பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து விதமான நிவாரண உதவிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழக அரசின் சீர்மிகு செயல்பாடுகளால் தமிழக மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்“

- கதவை நன்றாக மூடிவிட்டு, கட்டிலில் படுத்துக்கொண்டு வேளாவேளைக்கு ஃபில்டர் காபியும் மசாலா தேநீரும் பருகியபடி ஜெயா டிவியை மட்டுமே 24 மணி நேரமும் பார்த்துக்கொண்டிருக்கும் ஒருவரால் மட்டுமே இந்த நிலவரத்தை நம்பி ஏற்க முடியும்.

மற்ற அனைவருக்கும் உண்மை தெரியும். காரணம் அவர்கள் ஜெயா டிவிக்கு வெளியில் விரிந்திருக்கும் நிஜ உலகில் 24 மணி நேரமும் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள். அவர்களை இந்த மழை முற்றாகப் புரட்டிப்போட்டிருக்கிறது. அவர்களுடைய குடியிருப்புகளையும் வாழ்வாதாரத்தையும் வாழ்வின் மீதும் அரசின் மீதும் அவர்கள் கொண்டிருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையையும் இந்த மழை சிதைத்துப் போட்டிருக்கிறது.  அவர்களுடைய குரலைக் கேட்க நீங்கள் உங்கள் காதுகளையும் கண்களையும் சற்று நேரம் திறந்து வைத்திருந்தாலே போதும்.

இதுவரை எந்தவொரு அரசியல் கட்சித் தலைவரும் எங்கள் பகுதிக்கு வரவில்லை என்கின்றனர் வட சென்னை, மத்திய சென்னை பகுதிகளைச் சேர்ந்த மக்கள்.

'பிச்சைக்காரர்களைப் போல் மொட்டை மாடியில் ஹெலிகாப்டருக்காகக் காத்துக்கொண்டிருக்கிறோம். இதுவரை அரசு எங்கள் பகுதியைச் சீந்தக்கூட இல்லை' என்கிறது மாம்பலம் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்துவரும் ஒரு குடும்பம். வெள்ள அபாய எச்சரிக்கை இல்லை. ஏரிகள் திறந்துவிடப்படுவது குறித்து எந்தவித அறிவிப்பும் வந்து சேரவில்லை. உறக்கம் கலைந்து எழுந்திருக்கும்போது வீட்டுக்குள் முட்டிவரை வெள்ளம் பெருகிவிட்டது என்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள்.



உணவு, நிவாரணம் வழங்கக் கோரி விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் உள்ள 4 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சாலை மறியல் செய்து வருகின்றனர். இறந்துபோன ஒரு முதியவரின் சடலத்தை வீட்டுக்குள் வைத்துக்கொண்டு இரண்டு தினங்களாக ஒரு குடும்பம் தத்தளித்திருக்கிறது. கவுன்சிலரின் உதவியைப் பலமுறை நாடியபோதும் எந்த உதவியும் கிடைக்கவில்லை.

மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக வரவழைக்கப்பட்ட ராணுவ அதிகாரிகள் வெளிப்படையாகவே சலித்துக்கொள்கின்றனர். எந்தப் பகுதிக்குச் செல்லவேண்டும், எத்தகைய உதவிகளை அளிக்கவேண்டும் உள்ளிட்ட விவரங்கள் அளிக்கப்படவில்லை. பொதுமக்களை விட்டுவிட்டு முக்கிய விஐபிக்களின் உறவினர்களை முதலில் காப்பாற்றுங்கள் என்று நச்சரிக்கிறார்கள்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய பகுதிகளுக்கு உதவிப் பொருள்களுடன் செல்லும் வாகனங்களை ஆளுங்கட்சி ஆட்கள் தடுத்து நிறுத்தி தகராறு செய்துகொண்டிருக்கிறார்கள். எங்களிடம் வாகனங்களைக் கொடு, நாங்களே உதவி செய்துகொள்கிறோம் என்று மிரட்டுகிறார்கள்.

யார் உதவிப் பொருள்கள் கொண்டுவந்தாலும் அவற்றில் முதல்வரின் படத்தை ஒட்டியாகவேண்டும் என்று உத்தரவிடப்படுகிறது. ஆம்புலன்ஸ் கூட அம்மா படம் ஒட்டியபிறகே அனுமதிக்கப்படுகிறது.

சில இடங்களில், நிவாரணப் பொருள்களை யார் கொண்டுவந்தாலும் அவற்றை அதிமுக பிரமுகர்கள் இடைமறித்துப் பறித்து அவர்களே விநியோகிப்பதுபோல் போஸ் கொடுக்கிறார்கள்.



அவர்களும் உதவி செய்யவில்லை, எங்களையும் உதவி செய்ய அனுமதிப்பதில்லை என்று தன்னார்வத் தொண்டர்கள் புகார் தெரிவிக்கின்றனர். கட்சிக்காரர்களை மீறி மக்களுக்கு உதவுவது சிரமமாக இருக்கிறது என்கிறார்கள் காஞ்சிபுரத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கும் (அல்லது பணியாற்றமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கும்) அரசு சாரா தொண்டு நிறுவன ஊழியர்கள்.

இன்று காலை வரை ஒரு பாக்கெட் பால் 100 ரூபாய்க்கு பல இடங்களில் விற்கப்பட்டு வருகிறது. பிரெட் கிட்டத்தட்ட அதே விலை. பல பகுதிகளில் குடிநீர் இல்லை. மழை நீரைச் சேகரித்துப் பலர் குடித்து வருகிறார்கள். இதுவரை அதிகாரபூர்வமாக 245 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். எஞ்சியிருப்பவர்களில் பெரும் பகுதியினர் உயிரைத் தவிர அனைத்தையும் இழந்தவர்கள். ஆம், அப்படித்தான் அவர்கள் தங்களை இப்போது அறிமுகம் செய்துகொள்கிறார்கள். இதுதான் அவர்களுடைய புதிய அடையாளம்.

இந்தப் பதிவுகள் நமக்கு உணர்த்தும் அழுத்தமான செய்திகள் இரண்டு.

1. இனி, நாம் நமக்குள் உதவிக்கொண்டால்தான் எந்தவொரு பேரவலத்தில் இருந்தும் மீளமுடியும்.

2. அரசு முற்றாகச் செயலிழந்துவிட்டது மட்டுமின்றி, மக்களின் முதல் பெரும் இடையூறாகவும் மாறியிருக்கிறது.



இந்த இரு பெரும் உண்மைகளையும் உணர்ந்திருந்தவர்கள் மட்டுமே களத்தில் இறங்கி பாதிக்கப்பட்டவர் களுக்கு உதவிக்கரம் நீட்டியிருக்கிறார்கள். அவர்களால்தான் சென்னை இன்று மீண்டுக்கொண்டிருக்கிறது.  கிடைத்த காலி டிரம்களை உருட்டைக் கட்டைகள் மீது வைத்து கட்டி அதன்மீது வெள்ளத்தால் மூழ்கி யிருக்கும் மக்களை அமர வைத்து இழுத்துச் சென்றவர்கள்தான் அதிகம் பேரைக் காப்பாற்றியிருக்கிறார் கள். கப்பல் படையும் பேரிடர் மீட்புப் படையும் ராணுவமும் அதற்குப் பிறகே மிதந்து வந்து சேர்ந்தன.

ஒரு முதியவர் இரண்டு தினங்களாக உண்ண உணவின்றி தவித்து இறுதியில் அருகிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் நாய்க்கு வைக்கப்பட்டிருந்த தட்டில் மிச்சமிருந்த உணவை எடுத்துச் சாப்பிட்டிருக்கிறார். செய்தித்தாளில் வெளிவந்த இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு தாம்பரம் அஸ்தினாபுரத்தில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த ஒரு குழந்தை மனமுடைந்து அழுதிருக்கிறது. உடனே அந்தக் குடும்பத்தில் இருந்தவர்களும் அக்கம் பக்கத்தினரும் ஒன்றுசேர்ந்து அதிகளவு உணவு தயாரித்து பல பொட்டலங்களாக்கி அருகிலுள்ள முடிச்சூர் பகுதிக்கு விரைந்து எடுத்துச் சென்றிருக்கிறார்கள்.

எனக்குத் தெரிந்து, கிடைத்த ஒரு பாக்கெட் பாலை வாங்கி ஏழாகப் பிரித்து ஏழு குடும்பங்களுடன் பகிர்ந்து பருகியவர்கள் பலர். முழங்கால் தண்ணீருடன் தவிக்கும் முகங்களையும் பீறிட்டு அழும் குழந்தைகளையும் டிவியில் பார்த்துக்கொண்டு நான் மட்டும் எப்படிச் சாப்பிடுவது என்று தவித்தவர்கள் பலர்.  சமூக வலைத்தளங்கள் பிரமாண்டமான ஒரு நெட்வொர்க்காக விரிவடைந்து நேசக்கரம் நீட்டுபவர்களையும் பாதிக்கப்பட்டவர்களையும் ஒருங்கிணைத்ததை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.



பாதிக்கப்பட்ட பல பகுதிகளுக்கு நிவாரண உதவியுடன் முதலில் சென்றவர்கள் இவர்களே. இப்போதும் ஃபேஸ்புக்கையும் ட்விட்டரையும் வாட்ஸ் அப்பையும் திறந்தால் அங்குமிங்கும் உத்தரவுகளும் செய்திகளும் பறந்துகொண்டிருப்பதைப் பார்க்கமுடிகிறது.

கோட்டூர்புரத்தில் மெழுகுவர்த்தியும் கொசுவர்த்தி சுருளும் தேவை! எங்களிடம் ஆயிரம் சப்பாத்திகள் இருக்கின்றன, எங்கே கொண்டு வரட்டும்? குப்பைகளைத் தள்ள பெரிய கைப்பிடியுடன்கூடிய மாப் ஸ்டிக் தேவை! உணவு போதும், டெட்டாலும் பினாயிலும் மாற்று உடைகளும் கிடைக்குமா...? பெண்களுக்கு சானிட்டரி நாப்கின்கள் தேவைப்படுகிறது.

சென்னை இந்த நிமிடம் வரை உயிர்த்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம் பெரும்பாலும் முகமற்றவர் களைக் கொண்டு துடிப்புடன் இயங்கும் இந்த நெட்வொர்க்தான்.

நிலைமை இப்படியிருக்க, சென்னையில் இயல்பு வாழ்க்கை திரும்பிவருகிறது என்று தமிழக அரசால் நொடிக்கொருமுறை எப்படிப் பெருமிதத்துடன் அறிவிக்கமுடிகிறது?  இந்த இயல்புநிலை திரும்புவதற்கு தானே காரணம் என்று எப்படி சுயதம்பட்டம் அடித்துக்கொள்ள முடிகிறது? பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன என்று எப்படிக் கூசாமல் சொல்லமுடிகிறது?



புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சி பற்றி எப்படி அமைச்சர்களால் பரவசத்துடன் இப்போதும் எப்படி பேட்டியளிக்கமுடிகிறது? அனைவருக்கும் நிவாரண உதவி சென்று சேர்கிறதா என்று கண்காணிப்பதை விட்டுவிட்டு எல்லாப் பொட்டலங்களிலும் அம்மா படம் ஒட்டப்பட்டிருக்கிறதா என்று எப்படி இவர்களால் கவலைப்படமுடிகிறது?

தமிழக மக்களின் நலனும் தமிழக அரசின் நலனும் வெவ்வேறானவை மட்டுமல்ல எதிரெதிரானவை என்பதை அதிகார வர்க்கத்தின் இந்தப் போக்கு பளிச்சென்று நமக்கு உணர்த்தியிருக்கிறது. மக்கள் நம்பி வாக்களித்து தேர்ந்தெடுத்த ஓர் அரசு நம் கண் முன்னால் அவர்களைக் கைவிட்டிருக்கிறது. மட்டுமின்றி, மக்களுக்கு விரோதமாகவும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

இடர்பாடுகளிலும் இக்கட்டுகளிலும் சிக்கிச் சீரழிந்துள்ள மக்களை மீட்பதும் அவர்களை மீள்குடியமர்த்து வதும் அவர்கள் வாழ்வாதாரத்தை மீட்டுத் தருவதும் ஓர் அரசின் அடிப்படைக் கடமையாகும். இந்தக் கடமையைச் செய்யத் தவறிவிட்டது தமிழக அரசு. சந்தேகமில்லாமல், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோல்வி இது. இந்தத் தோல்வியின் கசப்பால்தான் அமைச்சர்களும் அதிமுக அடிப்பொடிகளும் மெய்யான அக்கறையுடன் நிவாரண உதவிகள் அளித்துவருபவர்கள்மீது பொறாமையுடன் பாய்கிறார்கள். 



நாங்கள் செய்திருக்கவேண்டியதை நீங்கள் எப்படிச் செய்யலாம் என்னும் கோபத்தின் வெளிப்பாடுதான் நிவாரணப் பொருள்களைச் சுமந்துவரும் வண்டிகளை நிறுத்தி வைப்பது, அதில் அம்மாவின் படத்தை ஒட்டுவது ஆகியவை. கோபத்தின் வெளிப்பாடு என்பதைவிட இயலாமையின் வெளிப்பாடு என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.

இதை யார் சுட்டிக்காட்டினாலும் அவர்கள்மீது பாய்கிறார்கள். முதல்வரின் செல்வாக்கைச் சீரழிக்க சதி நடக்கிறது என்று குற்றம் சாட்டுகிறார்கள். நான் உழைத்துச் சம்பாதித்து கட்டிய வரிப்பணம் சேர வேண்டியவர்களுக்குப் போய்ச் சேர்வதில்லை என்று தெரிகிறது என்று நடிகர் கமல்ஹாசன் வருத்தம் தெரிவித்தபோது, வெள்ளத்தைக் காட்டிலும் பலமடங்கு சீற்றத்துடன் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெடித்திருப்பதற்குக் காரணம் இந்த இயலாமைதான்.

வெள்ளம் குறித்தோ, வெள்ள நிவாரணம் குறித்தோ விரிவாக விளக்கமளிக்காத அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கமல்ஹாசனைத் திட்ட மட்டும் முழ நீள அறிக்கையை வெளியிடுவதன் தேவை என்ன? புரையோடியிருக்கும் நிர்வாகத்தின் போக்கை வெளிப்படையாக ஒருவர் சுட்டிக் காட்டுகிறார் என்பதாலா..?

தமிழகம் தத்தளித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு  அரசு அளித்திருப்பது ஓர் வெற்றிடத்தை மட்டுமே. இந்த வெற்றிடத்தையும் பாதிக்கப்பட்ட மக்களே இட்டு நிரப்பிக்கொண்டிருக்கிறார் கள்.  இனியும் இதே போக்குதான் தொடரப்போகிறது என்றால் அரசு என்றொரு அமைப்பு இருக்கவேண்டி யதன் அவசியம்தான் என்ன?

இடர்பாடுகளில் கைகொடுக்காத, பாதிக்கப்பட்டவர்களுக்குத்  துணையிருக்காத ஓர் அரசை வேறு எதற்காக நாம் சார்ந்திருக்கவேண்டும்? எதற்காக முட்டுக்கொடுத்து தூக்கி நிறுத்தவேண்டும்?
இதை எழுதிக்கொண்டிருக்கும்போது ஜெயா டிவியில் இப்போது ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் செய்தி இதுதான். சென்னையில் இலவசப் பேருந்து விடப்பட்டது குறித்து மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்களாம்.

யார்? உயிரைத் தவிர அனைத்தையும் இழந்துநிற்கும் மக்களா? முழங்கால் வரை தண்ணீரில் வீட்டுக்கு உள்ளே இடிந்துபோய் அமர்ந்திருப்பவர்களா? பிஸ்கெட், பால் இன்றி கைக்குழந்தையுடன் தவித்துக் கொண்டிருப்பவர்களா? அக்கம் பக்கத்தினர் உதவியிருக்காவிட்டால் உயிரையும் இழந்திருக்கக்கூடியவர் களா? இலவசப் பேருந்து விடப்பட்டதற்காக அவர்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்களா?

இப்படிச் சொன்னதற்காகவே தமிழக அரசின்மீது ஒரு மான நஷ்ட வழக்கு போடலாம்!



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Dec 06, 2015 5:28 pm

நன்றி கார்த்திக். உண்மையை உள்ள படியாக கூறியுள்ளீர்கள். நிவாரண பணத்தில் ஆயிரம் ரூபாய் எடுத்து கொண்டு தான் தருகிறார்கள். எங்கள் பகுதிக்கு அருகாமையில். மக்கள் பேராட்டம் நடத்தினால்இது தான் தர முடியும் விருப்பம் இருந்தால் பெற்று கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர். மக்கள் பெரும் கோபத்தில் இருக்கின்றனர்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Dec 06, 2015 5:34 pm


இதையெல்லாம் மன்னிக்கவே கூடாது..
அங்கே.. ஒருவேளை சோத்துக்கு குழந்தைகள் கையேந்தி நிற்பதை கண்டு மனம் வேகிறது..
சோத்துல என்ன அரசியல் வேண்டி கெடக்கு..
இன்னும்  ஐயாயிரம்  கோடி வாங்கி  அதில் அரைவாசிய ஆட்டையை  போட்டு  மிச்சத்திற்கு இந்த  ஊழலியின் படம்  போட்டு  மக்களுக்கு  கிடைக்கிறதுக்குள்ள எல்லாரும் பட்டினி  வந்து  செத்துடுவாங்க.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Dec 06, 2015 6:12 pm

சசி wrote:நன்றி கார்த்திக். உண்மையை உள்ள படியாக கூறியுள்ளீர்கள். நிவாரண பணத்தில் ஆயிரம் ரூபாய் எடுத்து கொண்டு தான் தருகிறார்கள். எங்கள் பகுதிக்கு அருகாமையில். மக்கள் பேராட்டம் நடத்தினால்இது தான் தர முடியும் விருப்பம் இருந்தால் பெற்று கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர். மக்கள் பெரும் கோபத்தில் இருக்கின்றனர்.
நன்றி கார்த்திக் & சசியின் கருத்தை அப்படியே ஆமோதிக்கிறேன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 06, 2015 8:37 pm

கவியருவி ம.ரமேஷ் wrote:இருவர் நிவாரணம் கொடுக்க
நான்கு பேர் கைகளில்...
அம்மா படமும் கட்சி சின்னமும். - ம. ரமேஷ் சென்ரியு
அந்த இருவர் கூட   நிவாரணம் தர வரலை ரமேஷ், போட்டோக்கு  போஸ் தரவும், அடுத்தவன் தரும் நிவாரணத்தை தன் பேரைப்போட்டு விநியோகிக்கவும், வரும் நிவாரண பணத்தை தன் கணக்கில் போடவும் மட்டுமே இருக்கிறார்கள் .......... கோபம் கோபம் கோபம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 06, 2015 8:38 pm

ayyasamy ram wrote:அம்மா படமும் கட்சி சின்னமும் 3838410834
-
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு 1 லட்சம் ரயில் நீர் பாட்டில்களை அனுப்பி வைக்குமாறு மத்திய ரயில்வே அமைச்சகம் ஐஆர்சிடிசிக்கு உத்தரவிட்டது.
-
அதன்படி ஒரு லட்சம் பாட்டில்கள் சென்னைக்கு வந்துள்ளன. சென்னைக்கு வந்துள்ள பாட்டில்களை மக்களுக்கு வழங்க விடாமல் அதிமுகவினர் பிரச்சனை செய்து வருகிறார்களாம். பாட்டில்கள் அனைத்திலும் அம்மா ஸ்டிக்கர் ஒட்டி அவர் பெயரில் தான் மக்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறி அவற்றை பறித்துக் கொண்டுள்ளார்களாம்.
-
இதனால் தாகத்தில் தவிக்கும் மக்களுக்கு தண்ணீர் பாட்டில்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதே போன்று வெளிமாநிலங்களில் இருந்து நிவாரணப் பொருட்களை ஏற்றி வரும் லாரிகளையும் அதிமுகவினர் மறித்து பொருட்களில் அம்மா ஸ்டிக்கரை ஒட்டியனுப்பி வருகிறார்கள்.
-
அதிமுகவினரின் இந்த செயலால் வெளி மாநிலங்களில் இருந்து நிவாரணப் பொருட்களை கொண்டு வரும் நபர்கள் எரிச்சல் அடைந்துள்ளனர்.
-
ஆமாம் அண்ணா, face  book  இல் கூட ன் நிறைய  பேர் இப்படி குமுறி இருக்கிறார்கள்.................இதுபோல உள்ள கேடு கெட்டவர்களால் , கேவலமாய் இருக்கு தமிழன் என்று சொல்லிக்கவே...............சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 06, 2015 9:04 pm

அருமையான பகிர்வு கார்த்திக்..எல்லோரின் மனக்குமுறல்களையும் வார்த்தைகளில் வடித்து இருகீங்க......மக்களுக்கு கொஞ்சமாவது மனசாட்சி இருந்தால் வரும் தேர்தலில் அனைவருமே "NOTA " பட்டனை  அழுத்தட்டும்.............இவ்வளவு லட்சணமாய் ஆட்சி நடத்தும் தற்பெருமையாளர்களுக்கு சரியான பதிலடியாக அது அமையும் ................ கோபம் கோபம் கோபம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Dec 06, 2015 9:25 pm

என்னை பொருத்தவரையில் என்னுடைய வாக்கு ஒரு கீழ்த்தரமான அரசை கொன்டுவருமேயானால் அப்படி பட்ட ஓட்டுரிமை என்னுடைய க டமையே யானாலும் அந்த கடமையைச் செய்ய நான் வெட்கப்படுகிறேன்.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக