ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்று சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்!

2 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

வரலாற்று சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்! - Page 2 Empty வரலாற்று சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 04, 2015 5:09 pm

First topic message reminder :

வரலாற்று சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்! - Page 2 EbgAjneoQRW5Q81zC6Xc+dharamangalam
வரலாற்று சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்!

கடந்த ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழகத்தில் புதிதாக கோயில் கட்டுவதற்காவோ
அல்லது சிற்பங்கள் செய்வதற்காகவோ கோயில் நிர்வாகிகளிடம், சிலைவடிக்கும்
சிற்பிகள் ஒப்பந்தம் செய்து தாம்பூலம் வாங்கும் போது, தாரமங்கலம்,
தாடிக்கொம்பு, பேரூர், பெரியபாளையம் கோயிலில் உள்ள
சிற்பங்கள் நீங்கலாக மற்ற கோயில்களில் உள்ளதை
போன்ற சிற்பங்களை நாங்கள் செய்து
கொடுக்கிறோம் என்று என்று சொல்லித்தான்
இன்றளவும் ஒப்புதல் கொடுக்கிறார்கள்.
நன்றி-முகநூல்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down


வரலாற்று சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்! - Page 2 Empty Re: வரலாற்று சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 04, 2015 5:54 pm

வரலாற்று சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்!
அவினாசியப்பர் ஆலயத்தின் அருகில், ஒன்பதே கற்களால் செய்யப்பட்ட
சிறியதொரு கற்கோயில் உள்ளது, ஒருமுறை கல்லில் சிற்பவேலை
செய்யும் சிற்பிகளுக்கும், சுண்ணாம்பு சுதையில் கோபுரங்கள்
அமைப்போருக்கும் ஒரு போட்டி ஏற்பட்டதன் விளைவாக
நாங்கள், உங்களின் துணையில்லாமலே கல்லில்
கோபுரம் அமைக்க முடியும் என்று கூறி கற்சிற்பிகள்
அமைத்த ஒரு சிறிய கற்கோயில் இங்கு உள்ளது.
இது தற்காலத்தில் “சித்திவினாயகர்” கோயில்
என்று அழைக்கப்படுகிறது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

வரலாற்று சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்! - Page 2 Empty Re: வரலாற்று சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 04, 2015 5:56 pm

வரலாற்று சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்!
கைலாசநாதரின் பிரகாரத்துக்குள், நுழையும் வாயிலின் முன்புறம் திண்ணைபோல
அமைக்கப்பட்டுள்ள மண்டபத்தில், மேல் தளம் 13 கற்களை கொண்டு அமைத்துள்ளனர்.
அதில் குரங்கு, அணில் போன்ற விலங்குகள் விளையாடும் காட்சிகள் இடம்
பெற்றுள்ளன. மேற்கு பார்த்தபடி ஒரே கல்லிலான 13 அடி உயரத்தில் ஆறு
கற்தூண்களில் குதிரையின் மீது அமர்ந்து வேட்டைக்குச் செல்லும் ஒரு
வீரன் புலியை குத்தி கொள்ளும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது. இதில்,
புலித்தலையில் ஏறியிருக்கும் வேல் மறுபக்கம் வெளியே வரும்
காட்சியை அழகாக செதுக்கியுள்ளனர்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

வரலாற்று சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்! - Page 2 Empty Re: வரலாற்று சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 04, 2015 5:59 pm

வரலாற்று சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்!
ஒவ்வொரு தூணின் வலது புறம் ஒரு அமைப்பிலும், இடதுபுறம் ஒரு வேறு
அமைப்பிலும் இந்த குதிரையும் அதன் மீதுள்ள வீரரும் இருக்கும்
வகையில் சிலை வடிக்கப்பட்டுள்ளது. சிலையில் உள்ள
குதிரையின் திறந்திருக்கும் வாயில் உள்ள பற்களுக்கு
உள்ளே ஒரு கற்பந்தை (கல்லில் செய்யப்பட்ட பந்து)
நம் விரலால் தள்ளி உருட்டி விளையாடும்
வகையில் அமைத்துள்ளனர்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

வரலாற்று சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்! - Page 2 Empty Re: வரலாற்று சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 04, 2015 6:02 pm

வரலாற்று சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்!
இதே மண்டபத்தின் வடக்கு ஓரத்தில், எறும்புகள் நுழைந்து வரும் அளவுக்கு மட்டுமே
துவாரம் உள்ள ஒரு மனிதனின் முகம் அமைக்கப்பட்டுள்ளது. எறும்பு காது, மூக்கு,
பிறகு தாடியில் நுழைந்து மறுபக்கம் சென்று மற்றொரு காது வழியாக வெளியே
செல்லும் வகையில் சிறிய துவாரங்களை அமைத்து கல்லில் சிலை செதுக்கியுள்ளனர்.
மண்டபத்தை சுற்றிலும் கண்ணகியின் கால் சிலம்பை போன்ற சிலம்புகளை
கொண்டு அடுக்கப்பட்ட சங்கிலித்தொடர் அலங்கார வேலைப்பாடு
செய்துள்ளார்கள், ஒவ்வொரு சிலம்புக்கு இடையிலும் சிறிய
துவாரங்கள் கொடுத்து சிலை வடித்துள்ளார்கள்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

வரலாற்று சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்! - Page 2 Empty Re: வரலாற்று சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 04, 2015 6:05 pm

வரலாற்று சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்!
மண்டபத்தில் நுழையும் இரண்டாவது கதவும் “வேங்கை” மரத்தில்
செய்யப்பட்டுள்ளது, உள்ளே இடது பக்கத்தில் ரிஷிபத்தினி சிலை
வடிக்கப்பட்டுள்ளது. பெண்ணுக்கு பெரியது மானமா..? தர்மமா..?
என்பதை தெரிந்து கொள்வதற்காக இறைவன்
மாறுவேடத்தில் வந்து ஒரு குடியானப்
பெண்ணிடம் “பிச்சை” கேட்கிறார்.

கேட்டவருக்கு “இல்லை” என்று சொல்லாத “தமிழ்குடியில்” பிறந்த
அந்தப்பெண், அகப்பையில் அன்னத்தை எடுத்துக்கொண்டு
வீட்டுக்கு வெளியே வரும்போது, காற்று வேகமாக
வீசியதால் அந்த பெண்ணின் மார்புச் சேலை
விலகிவிடுகிறது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

வரலாற்று சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்! - Page 2 Empty Re: வரலாற்று சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 04, 2015 6:07 pm

வரலாற்று சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்!
தானத்தைவிட “மானமே” பெரிதெனக் கருதிய அந்தப்பெண், தன்னுடைய
இடக்கையால் மார்புச் சேலையை இழுத்து மூடுகிறார், அப்போது பறந்து
வந்த ஒரு கிளி பெண்ணின் வலது கையிலிருக்கும் அகப்பை
சாதத்தை எச்சம் செய்து விடுகிறது.

அந்த பெண் இறைவனுக்கு உணவு கொண்டு செல்லும் காட்சி முகமலற்சியோடும்,
கிளி சாப்பிட்டு எச்சமாகிவிட்டதால், அந்த பெண் கோபத்தில் இருக்கும் காட்சியும்
இரண்டு சிலைகளாக அழகாக அமைக்கப்பட்டுள்ளது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

வரலாற்று சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்! - Page 2 Empty Re: வரலாற்று சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 04, 2015 6:10 pm

வரலாற்று சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்!
இடதுபக்க மூலையில், பொன், பொருளை பாதுகாத்து வைப்பதற்காக ஒரு
பாதாள அரை அமைத்து வைத்துள்ளார்கள், இதில், இப்போது ஒரு
சிறிய லிங்கத்தை வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. பக்தர்கள்
உள்ளே சென்று தரிசனம் செய்ய வழி செய்யப்பட்டுள்ளது.

இந்த மண்டபத்தில் இருக்கும் ஒவ்வொரு தூண்களும், ஒரே கல்லில். செய்யப்பட்டவை.
முன்னால் இரண்டு சிறிய தூண்களும், பின்னால், ஒரு பெரிய தூணும் இருக்கும்
வகையில் அடிக்கப்பட்ட இருபத்தி மூன்று தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில்,
கணக்கிடமுடியாத சிற்ப வேலைப்பாடுகளை காணமுடிகிறது. சிவனின் பல
தோற்றங்களும், பிரம்மாவின் அவதாரங்களும் கல்லில் சிலையாக
வடிக்கப்பட்டுள்ளன. ரதி, மன்மதன் சிலையும், ராமர் அம்புவிடும்
காட்சியும் மிகவும் நுணுக்கமாக அமைத்துள்ளனர்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

வரலாற்று சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்! - Page 2 Empty Re: வரலாற்று சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 04, 2015 6:14 pm

வரலாற்று சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்!
அதாவது, இராமன் அம்புடன் பதுங்கியிருக்கும் இடத்திலிருந்து பார்த்தால், வாலியும்,
சுக்ரீவனும் இருப்பது தெளிவாகத்தெரியும், ஆனால், வாலி இருக்குமிடத்திலிருந்து
பார்த்தால், இராமர் பதுங்கியிருப்பது தெரியாது.

அதுபோலவே, ரதியை, மன்மதன் மறைந்திருந்து பார்க்கும் காட்சியும் அமைந்துள்ளது, அன்னப்பறவையின் மீது அமர்ந்திருக்கும் ரதி இருக்குமிடத்திலிருந்து மன்மதனை
காணமுடியாது, ஆனால், கிளியின் மீது அமர்ந்திருக்கும் மன்மதன் பார்த்தால்,
ரதியை தெளிவாக காணமுடியும் வகையில் இந்த சிற்பங்களை
அமைத்துள்ளார்கள். இதுதவிர இன்னும் பல வரலாற்று
செய்திகளையும் இந்த கற்சுவர்களில் செதுக்கியுள்ளார்கள்.
அதை வரலாற்று ஆய்வாளர்கள் பார்த்தால் பொருள்
புரிந்து கொள்ளமுடியும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

வரலாற்று சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்! - Page 2 Empty Re: வரலாற்று சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 04, 2015 6:17 pm

வரலாற்று சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்!
ஆற்றிலிருக்கும் மணலை சிவலிங்கமாக பிடித்து வைத்து பார்வதி பூஜை செய்து
கொண்டிருக்கும் காட்சி, சாப விதிப்படி ஐந்து தலையுடன் இருக்கும் பிரம்மாவின்
தலையை சிவபெருமான் ஒரு தலையை கிள்ளி எடுத்தபிறகு நான்கு முகங்களுடன்
இருக்கும் காட்சியும் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. முதலில் ஐந்து தலையுடன்
இருக்கும் பிரம்மா அடுத்த சிற்பத்தில் நான்முகனாக காட்சி கொடுக்கிறார்.

மகா மண்டபத்தில் மூலவராக இருக்கும் கைலாசநாதரின் சன்னதிக்கு முன்புறம்
சிவனுக்கும், பார்வதிக்கும் நடக்கும் திருமணக்காட்சி செதுக்கப்பட்டுள்ளது,
பிரம்மா பார்வதியை சிவனுக்கு கரம்பிடித்து கொடுக்கும் காட்சி மூலவர்
சன்னதியின் மேலே சிறப்பாக செதுக்கப்பட்டுள்ளது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

வரலாற்று சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்! - Page 2 Empty Re: வரலாற்று சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 04, 2015 6:20 pm

வரலாற்று சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்!
மூலவருக்கு முன்புறம் உள்ள மண்டப மேற்க்கூறையில், ஏழு அடி நீளமும் அகலமும்
கொண்ட ஒரே கல்லில், விரிந்த எட்டு தாமரை இதழ்கள் காணப்படுகிறது,
ஒவ்வொரு தாமரை இதழின் மீதும் தன் வாளால் ஒட்டிப் பிடித்தபடி ஒரு
கிளிகள் தொங்கிக்கொண்டு தாமரை பூவின் நடு தண்டின் மீது போட்டிருக்கும்
ஒரு கல் வளையத்தை தன் அலகால் பிடித்துக்கொண்டிருக்கும் வண்ணம்
செதுக்கப்பட்டுள்ளது. அந்த கல் வளையத்துக்கு கீழே இன்னொரு கல்
வளையம் போட்டுள்ளனர், அந்த இரண்டாவது கல் வளையத்தை
நீலமான கம்பு இருந்தால் நாம் சுற்றிவிட்டுப்பார்க்க முடியும். இந்த
தாமரை இதழை சுற்றிலும் எட்டு திசைகளிருந்தும் வரும் துவார
பாலகர்கள் தங்களின் வாகனங்கள் மீது அமர்ந்திருக்கும் காட்சியும்,
அவர்களுக்கு அருகில் பணிப்பென்கள் நிற்கும் காட்சியும் செதுக்கப்பட்டுள்ளது.
இவற்றின் நடுவே எட்டு கற்சங்கிலிகள் தொங்கவிடப்பட்டுள்ளது.
கற்பனைக்கும் எட்டாத இந்த காட்சியை பார்த்து பிரமிக்காதவர்கள்
யாரும் இருக்கமுடியாது. சரியான பராமரிப்பு இல்லாமல் இந்த
சிற்பங்கள் எல்லாம் சிதைந்து கொண்டிருக்கிறது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

வரலாற்று சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்! - Page 2 Empty Re: வரலாற்று சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum