ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்த் தாயின் ஜப்பான் புதல்வன்!!

4 posters

Go down

தமிழ்த் தாயின் ஜப்பான் புதல்வன்!! Empty தமிழ்த் தாயின் ஜப்பான் புதல்வன்!!

Post by சாமி Thu Dec 03, 2015 3:01 pm

தமிழ்த் தாயின் ஜப்பான் புதல்வன்!! TrGegKo0RAShNuk22lZ2+TH23_OPED_KARASHIMA_149139f

நொபொரு காரசிமா (Noboru கரஷிமா) 24 ஏப்ரல் 1933 - 26 நவம்பர் 2015
சப்பானிய வரலாற்றாசிரியரும், எழுத்தாளரும், தமிழறிஞரும் ஆவார். இவர் சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கத்தின் (IATR) முன்னாள் தலைவர் (1989-2010) ஆவார்.

நொபொரு கராஷிமா 1995 ல் தஞ்சாவூரில் நடைபெற்ற 8 வது உலகத்தமிழ் மாநாட்டை முன்னின்று நடத்தியவர். இவர் 2010ல் கோயம்புத்தூரில் நடைபெற்ற 9வது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை புறக்கணித்தார்; தமிழ் மாநாடுகளில் அரசியல் தலையீடுகள் அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் புறக்கணிப்பதாக கூறினார். 2013ஆம் ஆண்டு இவருக்கு பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.

உலகத் தமிழ் ஆய்வு மன்றத்தின் தலைவராக 1989-ஆம் ஆண்டு முதல் 2010 வரை பணியாற்றிய நொபுரு கரஷிமா தனது 82-ஆவது வயதில் ஜப்பானில், 26 நவம்பர் 2015 அன்று (வியாழக்கிழமை) மறைந்தார்.

எழுதிய நூல்கள்:-
Ancient Medieval South Indian Society in Transition (Oxford Collected Essays)-2010
A Concise History of South India: Issues and Interpretations (2014)
A Concordance of Nayakas: The Vijayanagar Inscriptions in South India (2002)
Towards a New Formation: South Indian Society under Vijayanagar Rule (1993)

...................................................................................................................

நொபோரு கரஷிமா ஒரு வரலற்று அறிஞர். தமிழக வரலாற்றை வித்தியாசமான கோணத்தில் பார்த்து எழுதிய அறிஞர். - கட்டுரையாளர் - டாக்டர் இ.அண்ணாமலை, வருகைதரு பேராசிரியர், தமிழ்த்துறை, சிகாகோ பல்கலைக்கழகம்

சமூகம் எப்படி இயங்கியது, எப்படி மாறியது என்பது தெரியாமல் அரசியல் வரலாற்றை – ஆட்சி வரலாற்றை- புரிந்துகொள்ள முடியாது என்னும் கொள்கையில் ஆழமான நம்பிக்கை கொண்டவர்.

தமிழகத்தின் மன்னர் ஆட்சிகளைப் பேரரசுகளின் ஆட்சிகளாகப் பார்த்து வரலாறு எழுதிய பழைய தலைமுறை வரலாற்று ஆய்வாளர்களிடமிருந்து வேறுபட்டுத் தமிழக வரலாற்றைப் பார்த்தவர். இன்றைய தமிழ்த் தேசியத்துக்கு உரம் போடும் செய்திச் சுரங்கமாக அவர் தமிழக வரலாற்றைப் பார்க்கவில்லை.
அன்றைய தமிழ்ச் சமூகத்தின் வாழ்முறையை அறிந்துகொள்ளும் செய்திச் சுரங்கமாகவே அவர் கல்வெட்டுகளைப் பார்த்தார்.

அரசர்களின் போர் வெற்றிகளைப் பறைசாற்றும் சாதனமாக மட்டும் அவற்றை அவர் பார்க்கவில்லை.
கல்வெட்டுகளிலிருந்து அரச வெற்றிகள் பற்றி நாம் கேட்கும் உரத்த குரலை மட்டுமல்லாமல், அவற்றிலிருந்து வரும் முனகல்களையும் கேட்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். இந்த முனகல்களில்தான் சாதாரண மக்களின் குரலைக் கேட்கலாம்.

அதே நேரத்தில், தமிழகத்தின் வணிக உறவுகள், கலாச்சார உறவுகள் தூரத்து நாடுகளிலும் நிலைபெற்றிருந்ததை உலகுக்கு எடுத்துச் சொன்னார். சீனாவில் தமிழ்க் கல்வெட்டு இருப்பதைக் கண்டு சொன்னவர் கரஷிமா. அவருடைய ஆய்வு பெரும்பாலும் சோழர் காலத்தைச் சார்ந்தது. ஆனாலும், அது சிங்கநோக்காக சோழருக்கு முந்திய காலத்தையும் பிந்திய காலத்தையும் பார்க்க இன்றியமையாதது. கரஷிமாவின் விஜயநகர ஆட்சி பற்றிய ஆராய்ச்சியில் இதைக் காணலாம்.

தமிழ் மீது காதல் கொண்ட கரஷிமா
இவருடைய ஆராய்ச்சியின் தரவுகள் பெரும்பாலும் கல்வெட்டுகளிலிருந்து வருபவை. தொடர்ந்து கல்வெட்டுகளில் மற்ற ஆய்வாளர்களும் இளம் தலைமுறை ஆய்வாளர்களும் ஈடுபடப் பல தரவுகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார் கரஷிமா. இவற்றைப் பயன்படுத்தாமல் செய்யும் எந்தத் தமிழக வரலாற்று ஆராய்ச்சியும் மேலோட்டமானதாகவே இருக்கும்.

கரஷிமா தமிழ்க் கலாச்சாரத்தின்மீதும் மக்களின் மீதும் காதல் கொண்டவர். தமிழ்க் கலாச்சாரத்தைப் பற்றித் தன்னுடைய ஜப்பானிய மாணவர்களுக்காக ஒரு ஆவணப்படம் எடுத்திருக்கிறார். இந்தப் படம் தமிழ்ப்படுத்தப்பட்டுத் தமிழர்களின் பார்வைக்குக் கொண்டுவரப்படவேண்டும்.

கரஷிமா உலகப் புகழ்பெற்ற டோக்கியோ பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி ஒய்வு பெற்றவர். அந்தத் துறையில் தென்னிந்திய வரலாற்றைப் படிக்க இடம் தேடித் தந்தவர். இந்த ஆராய்ச்சிக்குப் பல ஜப்பானிய மாணவர்களை உருவாக்கியவர், ஐரோப்பா, அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் பெயர்போன தென்னிந்திய ஆய்வாளர்கள் பலர் உண்டு. அவர்களின் செல்வாக்கு இந்தியாவில் உள்ள வரலாற்று அறிஞர்களிடம் அதிகம், அந்த மேல்நாட்டு அறிஞர்களின் ஆராய்ச்சிப் போக்கில் கரஷிமாவின் அணுகுமுறையின் தாக்கத்தைக் காணலாம். இந்தத் தாக்கம் தமிழ் நாட்டு வரலாற்று அறிஞர்களிடமும் நேரடியாக ஏற்பட வேண்டும்.

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத் தலைவர்
கரஷிமா உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக இருந்தபோது நான் அதன் செயலாளாராக இருந்தேன். அப்போது அவரோடு நெருங்கிப் பழகியிருக்கிறேன். அவர் மனம் செயல்படும் விதம் தெரியும். தஞ்சை மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய பிறகு அடுத்த மாநாட்டை நடத்தக் காலம் தாழ்த்தியதற்கு அவரிடம் வலுவான காரணங்கள் இருந்தது எனக்குத் தெரியும். உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் எதிர்காலம் பற்றிச் சில சிந்தனைகள் அவரிடம் இருந்தன. தமிழ் ஆய்வை இக்காலத் தமிழ் அரசியலிலிருந்து பிரிப்பது அவற்றில் ஒன்று. அதையே அவருடைய வாழ்க்கைச் செய்தியாக நாம் கொள்ளலாம்.

கரஷிமா என்னுடைய அறிவுலக நண்பர் மட்டுமல்ல; குடும்ப நண்பரும்கூட. அவரை நான் கடைசியாக 2013 டிசம்பரில் டோக்கியோவில் அவர் வீட்டில் பார்த்தேன். ஜப்பானிய கலாச்சாரமும் தமிழ்க் கலாச்சாரமும் கலந்த வீடு அது. அவருடைய மனைவி தக்காக்கோவோடும் மூன்று மகன்களோடும் கரஷிமாவை இழந்த துயரத்தை பகிர்ந்துகொள்கிறோம். (நன்றி பிபிசி)


Last edited by சாமி on Thu Dec 03, 2015 3:11 pm; edited 1 time in total
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தமிழ்த் தாயின் ஜப்பான் புதல்வன்!! Empty Re: தமிழ்த் தாயின் ஜப்பான் புதல்வன்!!

Post by சாமி Thu Dec 03, 2015 3:10 pm

Tamil scholar who inspired a generation

Noboru Karashima, the distinguished scholar and historian of South Asia, whose body of research has rewritten the economic and social history of medieval South India, died in Tokyo on Thursday. He was 82. At the time of his death, Professor Karashima was Professor Emeritus at the University of Tokyo and Taisho University.

Professor Karashima was the recipient of the Padma Shri in 2013 for his contributions in building India-Japan ties. As he could not travel to New Delhi to receive the award, former Prime Minister Manmohan Singh, in a gesture of recognition and respect, personally presented the award to him in Japan.

From his first study — a small but ground-breaking essay that he published almost 55 years ago on land control in the two Cauvery delta villages of Allur and Isanamangalam, based on the study of Chola inscriptions — Professor Karashima had to delve deeper into understanding land relations and social relationships in medieval Tamil Nadu. His seminal contribution to South Indian history was his use of statistical techniques to distil information from a mass of inscriptions, thereby lending his interpretations and conclusions a more sound and reliable base. His last major book is A Concise History of South India, published last year.

Professor Karashima was instrumental in setting up the International Association of Tamil Research, and had been its president from 1989 to 2010. He was the principal organiser of the 8th World Tamil Conference in Thanjavur in 1995, although he dissociated himself from its 9th edition on the ground that the conference had been hijacked by the political establishment. He had been the president of the Japan Association for South Asian Studies from 1996 to 2000, helping to build it into a vibrant and scholarly organisation it currently is.

In Japan, Professor Karashima was a popular figure on television where he commented on South Asian culture, including Indian cuisine.

A steadfast friend and admirer of India in general, and Tamil Nadu in particular, Professor Karashima has exercised a strong intellectual influence on a generation of Tamil scholars, both in Japan and India.

He is survived by his wife, Takako Karashima, who is the author of a popular book on India that has run into several editions, three sons and three grandchildren. (thehindu27nov2015)

என்ன கொடுமை சார் இது :- தமிழ் பத்திரிக்கைகள் இவரின் மறைவு குறித்து செய்தி வெளியிட்டுள்ளதா?!?! என்ன கொடுமை சார் இது
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தமிழ்த் தாயின் ஜப்பான் புதல்வன்!! Empty Re: தமிழ்த் தாயின் ஜப்பான் புதல்வன்!!

Post by சாமி Thu Dec 03, 2015 3:17 pm

ஜூனியர் விகடன் 6.12.2015 இதழில் வந்த கட்டுரை:-

தமிழ்த் தாயின் ஜப்பான் புதல்வன்!! SsdS5BqQ6mYTY6sZ4i8x+scan0001

தமிழ்த் தாயின் ஜப்பான் புதல்வன்!! UrIkmaTZRPGqu8XPXRD7+scan0002
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தமிழ்த் தாயின் ஜப்பான் புதல்வன்!! Empty Re: தமிழ்த் தாயின் ஜப்பான் புதல்வன்!!

Post by ayyasamy ram Thu Dec 03, 2015 7:01 pm

தமிழ்த் தாயின் ஜப்பான் புதல்வன்!! 103459460 தமிழ்த் தாயின் ஜப்பான் புதல்வன்!! 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82741
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழ்த் தாயின் ஜப்பான் புதல்வன்!! Empty Re: தமிழ்த் தாயின் ஜப்பான் புதல்வன்!!

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Dec 03, 2015 10:35 pm

தமிழ்த் தாயின் ஜப்பான் புதல்வன்!! 3838410834 தமிழ்த் தாயின் ஜப்பான் புதல்வன்!! 103459460 தமிழ்த் தாயின் ஜப்பான் புதல்வன்!! 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தமிழ்த் தாயின் ஜப்பான் புதல்வன்!! Empty Re: தமிழ்த் தாயின் ஜப்பான் புதல்வன்!!

Post by muthu86 Wed Dec 09, 2015 11:23 am

ஆமா பாஸ் நானும் படிச்சு பீல் பண்ணினேன் .அதே மாதிரி சைனா வுல ஒருத்தர் தமிழ் பாட்டு எல்லாம் பாடி யு டிஉப் ல அப்லோட் பண்ணிருக்கதா டைம் பாஸ் ல போடுருந்துசு


வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Back to top Go down

தமிழ்த் தாயின் ஜப்பான் புதல்வன்!! Empty Re: தமிழ்த் தாயின் ஜப்பான் புதல்வன்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியில் தங்கிநிற்கும் தமிழ்த் தேசியத்தின் பலம்.
» ஜப்பான்: 4வது அணு உலை வெடித்தது; பெருமளவு கதிர்வீச்சை உறுதி செய்த ஜப்பான்!
» ஜப்பான் நீர் பரப்புக்குள் சீன ரோந்து கப்பல்கள் அத்துமீறி நுழைந்ததால் பரபரப்பு சீனாவுக்கு ஜப்பான் கடும் கண்டனம்
» தமிழ்த் தாய்
» தமிழ்த் தேசியம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum