புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு ஊழிகால சென்னைவாசியின் நியாயமான கோரிக்கை! Poll_c10ஒரு ஊழிகால சென்னைவாசியின் நியாயமான கோரிக்கை! Poll_m10ஒரு ஊழிகால சென்னைவாசியின் நியாயமான கோரிக்கை! Poll_c10 
56 Posts - 73%
heezulia
ஒரு ஊழிகால சென்னைவாசியின் நியாயமான கோரிக்கை! Poll_c10ஒரு ஊழிகால சென்னைவாசியின் நியாயமான கோரிக்கை! Poll_m10ஒரு ஊழிகால சென்னைவாசியின் நியாயமான கோரிக்கை! Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
ஒரு ஊழிகால சென்னைவாசியின் நியாயமான கோரிக்கை! Poll_c10ஒரு ஊழிகால சென்னைவாசியின் நியாயமான கோரிக்கை! Poll_m10ஒரு ஊழிகால சென்னைவாசியின் நியாயமான கோரிக்கை! Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
ஒரு ஊழிகால சென்னைவாசியின் நியாயமான கோரிக்கை! Poll_c10ஒரு ஊழிகால சென்னைவாசியின் நியாயமான கோரிக்கை! Poll_m10ஒரு ஊழிகால சென்னைவாசியின் நியாயமான கோரிக்கை! Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு ஊழிகால சென்னைவாசியின் நியாயமான கோரிக்கை! Poll_c10ஒரு ஊழிகால சென்னைவாசியின் நியாயமான கோரிக்கை! Poll_m10ஒரு ஊழிகால சென்னைவாசியின் நியாயமான கோரிக்கை! Poll_c10 
221 Posts - 75%
heezulia
ஒரு ஊழிகால சென்னைவாசியின் நியாயமான கோரிக்கை! Poll_c10ஒரு ஊழிகால சென்னைவாசியின் நியாயமான கோரிக்கை! Poll_m10ஒரு ஊழிகால சென்னைவாசியின் நியாயமான கோரிக்கை! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
ஒரு ஊழிகால சென்னைவாசியின் நியாயமான கோரிக்கை! Poll_c10ஒரு ஊழிகால சென்னைவாசியின் நியாயமான கோரிக்கை! Poll_m10ஒரு ஊழிகால சென்னைவாசியின் நியாயமான கோரிக்கை! Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஒரு ஊழிகால சென்னைவாசியின் நியாயமான கோரிக்கை! Poll_c10ஒரு ஊழிகால சென்னைவாசியின் நியாயமான கோரிக்கை! Poll_m10ஒரு ஊழிகால சென்னைவாசியின் நியாயமான கோரிக்கை! Poll_c10 
8 Posts - 3%
prajai
ஒரு ஊழிகால சென்னைவாசியின் நியாயமான கோரிக்கை! Poll_c10ஒரு ஊழிகால சென்னைவாசியின் நியாயமான கோரிக்கை! Poll_m10ஒரு ஊழிகால சென்னைவாசியின் நியாயமான கோரிக்கை! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஒரு ஊழிகால சென்னைவாசியின் நியாயமான கோரிக்கை! Poll_c10ஒரு ஊழிகால சென்னைவாசியின் நியாயமான கோரிக்கை! Poll_m10ஒரு ஊழிகால சென்னைவாசியின் நியாயமான கோரிக்கை! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஒரு ஊழிகால சென்னைவாசியின் நியாயமான கோரிக்கை! Poll_c10ஒரு ஊழிகால சென்னைவாசியின் நியாயமான கோரிக்கை! Poll_m10ஒரு ஊழிகால சென்னைவாசியின் நியாயமான கோரிக்கை! Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஒரு ஊழிகால சென்னைவாசியின் நியாயமான கோரிக்கை! Poll_c10ஒரு ஊழிகால சென்னைவாசியின் நியாயமான கோரிக்கை! Poll_m10ஒரு ஊழிகால சென்னைவாசியின் நியாயமான கோரிக்கை! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஒரு ஊழிகால சென்னைவாசியின் நியாயமான கோரிக்கை! Poll_c10ஒரு ஊழிகால சென்னைவாசியின் நியாயமான கோரிக்கை! Poll_m10ஒரு ஊழிகால சென்னைவாசியின் நியாயமான கோரிக்கை! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஒரு ஊழிகால சென்னைவாசியின் நியாயமான கோரிக்கை! Poll_c10ஒரு ஊழிகால சென்னைவாசியின் நியாயமான கோரிக்கை! Poll_m10ஒரு ஊழிகால சென்னைவாசியின் நியாயமான கோரிக்கை! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு ஊழிகால சென்னைவாசியின் நியாயமான கோரிக்கை!

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Dec 03, 2015 4:58 pm

தன்னலமற்ற சென்னை:ஒரு ஊழிகால சென்னைவாசியின் நியாயமான கோரிக்கை!

தொடரும் அடை மழை, வீட்டை மூழ்கடித்திருக்கும் வெள்ளம், ’இன்னும் மழை பொழியும்’ என்ற  கலவர நிலவரம் என சென்னை ஊழிக்காலத்தை எதிர்கொண்டிருக்கிறது. வெள்ளத்தில் சிக்கியிருக்கும் ஒவ்வொருவருக்கும் அவசர கவனிப்பு தேவை என்பதால், எவருக்கு முதலில் உதவுவது, எவருக்குப் பின்னர் உதவுவது என்ற குழப்பமும் பதட்டமும் நிவாரணக் குழுவினரையே சோர்வடையச் செய்கிறது. வெள்ளம் புகுந்ததால் வீட்டை விட்டு வெளியேறிய பதட்டம், தண்ணீரில் வரும் பாம்பு உள்ளிட்ட உயிரினங்ள் அளிக்கும் பயம்.

சாப்பாடு-தண்ணீர் இல்லை... இயற்கை உபாதைகள் கழிக்க முடியாத அவஸ்தை, ’ஏரி உடைந்துவிட்டது’ என்று வரும் மிரட்டல் வதந்திகள், பைக், கார் உள்ளிட்ட வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கி செயலிழந்த வேதனை, மின்வெட்டு, சார்ஜ் போட கூட வழியில்லாத நிலை. கிடைக்காதமொபைல் சிக்னல்கள் என எந்த தலைமுறை சென்னைவாசியும் சந்திக்காத இன்னல்களை இன்று சந்தித்து கொண்டிருக்கிறோம்.

தொழில்நுட்பம் இத்தனை முன்னேறியும் அதீத மழைப் பொழிவைக் கணிக்கவோ, வெள்ள சேத முன்னேற்பாடு நடவடிக்கைகளில் களமிறங்கவோ நம்மால் முடியவில்லை. ஆனால், எத்தனை இன்னல்கள் வந்தாலும் சென்னை மக்கள் அதிலிருந்து மீண்டு விடுவார்கள். அதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை. அதுவரை நம்மாலான ஆதரவை அவர்களுக்கு வழங்க வேண்டியது அவசியம். ஆதரவு வழங்காவிட்டாலும் அவர்களுக்கு சங்கடங்களை ஏற்படுத்தாமலேனும் இருக்கலாம். அது எப்படி?

* முதற்காரியமாக சென்னையில் வெள்ளத்தில் மூழ்கியிருப்பவர்களின் அலைபேசிக்கு தேவையில்லாமல் தொடர்பு  கொண்டு பதட்டம் விதைக்காதீர்கள். ‘என்னப்பா... டி.வில ஏரி உடைஞ்சிருச்சுனு சொல்றான். உன் வீட்டுக்குப் பின்னாடிதானே அது இருக்கு’ என்றெல்லாம் பீதி கிளப்பாதீர்கள். தகவல் தொடர்பு, மின்சாரம் என அனைத்தும் துண்டிக்கப்பட்டு அலைபேசி சார்ஜும் குறையும் சூழ்நிலையில் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருப்பவர்களை இது போன்ற யூக செய்திகளை  பரப்புவரை தவிர்க்கவும்.

* சென்னைவாசிகளின் வாட்ஸ்அப்களுக்கு தேவையில்லாத ஃபார்வர்ட் மெசேஜ், மழை மீம்ஸ், மொக்கை ஜோக்குகளை இரண்டொரு நாட்களுக்கு அனுப்பாதீர்கள். அத்யாவசிய தகவல்கள் வாட்ஸ்அப் மூலமே பரவும் இந்நேரத்தில், அப்படியான அநாவசிய தகவல்கள் அலைபேசி சார்ஜை குறைக்கும், டேட்டாவை காலி செய்யும். இந்த தருணத்தில் ஒவ்வொரு மெசேஜும் ஒவ்வொரு அழைப்புமே அத்தியாவசியம்!

* ‘இவர் வெள்ளம் பாதித்த மக்களுக்கு உதவுகிறார். தொடர்பு கொள்ளவும்’ என்று வரும் வாட்ஸ்அப், குறுந்தகவல்களை அப்படியே பரப்பாதீர்கள். சம்மந்தப்பட்ட எண்ணுக்கு அழைத்து, அந்த தகவல் உண்மைதானா என்று பரிசோதித்துவிட்டு, பின்னர் ‘ஊர்ஜிதமான தகவல்’ என்ற தலைப்புடன் அதை அனுப்புங்கள். ஏனெனில், அப்படி குவியும் தகவல்களில் வதந்திகளே அதிகம். அவற்றில் சிலவற்றையேனும் உங்கள் பங்குக்கு குறைக்கலாம்.

*  ’சென்னையில் என் மகள், மகன் படிக்கிறார்/வேலை பார்க்கிறார். அவர்களுக்கு உதவச் செல்கிறேன்’ என்று உடனே கிளம்பி வருவதை முடிந்தவரை தவிர்க்கலாம். நீங்கள் சென்னைக்கு வருவதே சிரமம். ஒருவேளை வந்துவிட்டாலும், கோயம்பேடு/எக்மோர்/தாம்பரம்/சென்ட்ரல் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சென்னைக்குள் வருவது கடினமான காரியம். வழி தெரியாமல் வெள்ளத்தில் சிக்கி நீங்கள் திண்டாடினால், உங்களை மீட்பது அவர்களுக்குப் பெரும் சிரமமாகிவிடும். உங்கள் மகன்/மகளை சென்னையில் பாதுகாப்பான இடங்களில் அமைந்திருக்கும் உறவினர் வீடுகளில் சென்று தங்க சொல்லுங்கள். தேவையில்லாமல் நீங்கள் இங்கு வந்து அவர்களுக்கு மேலும் கஷ்டத்தை உருவாக்க வேண்டாம்.

* அதே போல சென்னையில் இருப்பவர்களையும் உடனே கிளம்பி ஊருக்கு வரச் சொல்லாதீர்கள். செங்கல்பட்டுக்கு அந்தப் பக்கம் சாலை வசதி இல்லை. எக்மோரிலிருந்து கிளம்பும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. விமான சேவைகள் கூட செயலிழந்துள்ளன. அதனால் சென்னையிலிருந்து கார், பேருந்து, ரயில், விமானம் வழியாக எங்கும் நகர முடியாத நிலை உள்ளது.

* ஃபேஸ்புக்/ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில், மழையையும் அரசாங்கத்தையும் சபித்துக் கொண்டிருக்காதீர்கள்.வெறுப்பை விதைக்காதீர்கள். உணவு, இருப்பிட வசதிகளை அளிப்பவர்களைப் பற்றிய ஊர்ஜிதமான தகவல்கள் #VERIFIED  என்ற ஹேஷ்டேக்குடன் பகிரப்பட்டு வருகிறது. அதை முடிந்தவரை ஷேர்/ரீட்விட் செய்யுங்கள்.

* பொதுப்பணித்துறை, சுகாதாரத் துறை, வெள்ள நிவாரணக் குழு என அரசு இயந்திரத்தில் பணி புரிபவர்களாகவோ, அல்லது அதோடு தொடர்பில் இருப்பவர்களாகவோ இருந்தால், மீட்புப் பணி குறித்த ஊர்ஜிதமான தகவல்களைப் பகிரலாம். அல்லது உதவி தேவைப்படுபவர்கள் பற்றிய விவரங்களை சம்மந்தப்பட்ட துறையினரிடம் சேர்ப்பிக்கலாம்!

* மிக முக்கியமாக ’மழை சென்னையை சுத்தம் செஞ்சுட்டுப் போகும்னு பார்த்தா, சுத்தமா  செஞ்சுட்டுதான் போகும் போல’ என்பது போன்ற மழை மீம்ஸ், ’ஏய் மழையே... ஏன் செய்கிறாய் இந்தப் பிழையை’ என்பது போன்ற மழை கவிதைகளை உருவாக்கிப் பரப்பாதீர்கள்.ஏனென்றால் மழையில்லாத வாழ்வை நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.

இத்தகைய இக்கட்டான சூழலிலும் சென்னைவாசிகள் தன்னலமற்று சேவையாற்றுவதை பார்க்க முடிகிறது.  நம்பிக்கையும் எதையும் எதிர்கொள்ளும் தைரியத்தையும் கொண்ட மக்களை சென்னை பெற்றிருக்கிறது எனவே தேவையில்லாத வதந்திகளை பரப்பி அவர்களது தன்னம்பிக்கையை சீர் குலைக்க வேண்டாம்.

- இப்படிக்கு ஊழிகால சென்னைவாசி    

நன்றி விகடன்

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 03, 2015 6:56 pm

இக்கட்டான சூழலிலும் சென்னைவாசிகள் தன்னலமற்று சேவையாற்றுவதை பார்க்க முடிகிறது..!
-
சூப்பருங்க

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக