5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» தலையில் கூடை சுமந்து சாதாரண வேலையாள் போல தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறித்த பிரியங்கா காந்தி..!!by சக்தி18 Today at 1:12 am
» அனுமதியின்றி பிரசாரம்: காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது துணை வட்டாட்சியர் விஜயா புகார்
by சக்தி18 Today at 1:09 am
» நின்னயே ரதி என்று நினைகிறேனடி கண்ணம்மா!
by சக்தி18 Today at 1:08 am
» பல்சுவை - இணையத்தில் ரசித்தவை
by T.N.Balasubramanian Yesterday at 10:15 pm
» சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்று தான்..!
by ayyasamy ram Yesterday at 10:09 pm
» - பொய் சொல்லக்கூடாது காதலி...
by ayyasamy ram Yesterday at 9:41 pm
» தமிழகத்தில் ஹேமமாலினி பிரசாரம்; பா.ஜ., திட்டம்
by krishnaamma Yesterday at 8:45 pm
» 37 வருடங்களுக்கு பின் ‘முந்தானை முடிச்சு’ படம் மீண்டும் தயாராகிறது
by krishnaamma Yesterday at 8:34 pm
» மகிழ்ச்சியே இளமையின் ரகசியம்
by krishnaamma Yesterday at 8:33 pm
» எதுக்கும் ஐ ஏ எஸ் தேர்வுக்கு பீஸ் கட்டி வைப்போம்..!!
by krishnaamma Yesterday at 8:19 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» செல்வராகவன் இயக்கியுள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தை வெளியிட இடைக்கால தடை...!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» வரும் 22ம் தேதிக்குள் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை தர வேண்டும்: கட்சிகளுக்கு சத்ய பிரதா சாகு உத்தரவு
by ayyasamy ram Yesterday at 4:07 pm
» நேரு உயிரியல் பூங்கா எங்குள்ளது? (பொது அறிவு-கேள்விகள்)
by சக்தி18 Yesterday at 2:05 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கனிந்த சாறு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:08 pm
» கேர் ஆஃப் காதல் - விமரிசனம்
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» தமிழ்நாட்டில் தாவரங்கள் (379)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 pm
» ஆரோக்கியமான உடல் தான் சிறந்த செல்வம்..!!
by ayyasamy ram Yesterday at 12:50 pm
» சரியானவற்றைச் செய்ய, எந்த நேரமும் சரியான நேரமே!
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» லெட்டர்பேடு கட்சிகளுக்கு மானியம்...!!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:36 pm
» பொது அறிவு தகவல்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:35 pm
» பெட்ரோல், டீசல் விலை உயர்வு தர்ம சங்கடம் என்றால் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும்; சிவசேனா வலியுறுத்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:28 pm
» உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை!
by ayyasamy ram Yesterday at 12:17 pm
» பஞ்சாப் முதல்வரின் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமனம்
by T.N.Balasubramanian Yesterday at 10:31 am
» 7 வாரங்களுக்கு பிறகு உலக அளவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 10:27 am
» பதுங்கு குழிகளைச் சுற்றி என்ன வெள்ளை வட்டம்?
by ayyasamy ram Yesterday at 9:29 am
» இனிய பாட்டு! -
by ayyasamy ram Yesterday at 9:24 am
» நகை - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am
» சொத்து - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:55 am
» துரோகம் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:54 am
» மருமகள் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:03 am
» முடிவு - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:00 am
» பாஸ்வேர்ட் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:58 am
» நயன்தாராவுக்கு விரைவில் திருமணம்
by ayyasamy ram Yesterday at 6:14 am
» நான் விஜய்க்கு ஜோடியா? பூஜா ஹெக்டே விளக்கம்
by ayyasamy ram Yesterday at 6:11 am
» யோகி பாபு படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 6:08 am
» புதுவை ஆரோவில் சர்வதேச நகர உதய தினம்; தீ மூட்டி வெளிநாட்டினர் கூட்டு தியானம்
by ayyasamy ram Yesterday at 5:59 am
» ஓட்டின் மகிமையை என்று உணர்வார்களோ..
by ayyasamy ram Mon Mar 01, 2021 10:30 pm
» மைசூர்பாகு ! - சிறு கதை !
by krishnaamma Mon Mar 01, 2021 9:25 pm
» நிர்ஜல ஏகாதசி ! - மஹா பெரியவா....
by T.N.Balasubramanian Mon Mar 01, 2021 8:57 pm
» சுரங்க பாதை அமைத்து 400 கிலோ வெள்ளி கொள்ளை
by T.N.Balasubramanian Mon Mar 01, 2021 8:52 pm
» துரோகி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Mar 01, 2021 8:49 pm
» கடன் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Mar 01, 2021 8:48 pm
» பெருந்தன்மை - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Mar 01, 2021 8:46 pm
» யார் கிட்ட??? நாங்க கும்பகோணத்துகாரங்க :)
by T.N.Balasubramanian Mon Mar 01, 2021 8:44 pm
» ஒரு பத்து நிமிடங்கள் முன்னதாக......
by ayyasamy ram Mon Mar 01, 2021 8:08 pm
» அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு.......
by ayyasamy ram Mon Mar 01, 2021 8:06 pm
» ரஜினி முதலமைச்சரானா என்ன பண்ணுவீங்க?
by krishnaamma Mon Mar 01, 2021 7:11 pm
» ஸ்ரீரங்கத்தில் கணக்கூடிய அதிசயம் !
by krishnaamma Mon Mar 01, 2021 6:59 pm
Admins Online
கனவுகளோ நினைவுகளோ (கவிதை)
கனவுகளோ நினைவுகளோ (கவிதை)
*******************************
கானம்பாடும் ஞானம்கொண்டு காணும்குயில் கீதமொன்று
காதினிலே கேட்பதுவும் கனவுகளாமோ
பானமென்று தேனுங்கொண்டு பாலிலிட்ட பழமின்துண்டு
பார்த்துப் பசி தீரக்கொள்ளப் பிரமையென்றாமோ
வானம்நின்று`கேட்பவர்க்கு வாரிஅளித்தாளும் சக்தி
வாடிமனம் சோரவிடா வண்ண மிட்டாளோ
தேனழகுப் பொன்னிலவு தேவையின்றிக்,காட்டினிலே
தோற்றுமொளி வீச்செனவே தொலைவது நானோ
மானுமுண்டு சிங்கமுண்டு மாந்தரிலே பாம்புமுண்டு
மாயவலை போட்டு மனம் மயக்கியதாரோ
ஊனு முண்டு உள்ளிருந்து ஓடியெழும் உணர்வுக்கொண்டு
ஓங்குமிருள் ஊடொளியை தேடிடுவேனோ
மீனுங்கொண்டு மேலெழும்நீர் மேவுமலை ஆழியிலே
மெல்லக் கரைவிட்ட கயல் துடிப்பது போலே
நானுமுண்டு வாழவென்று நானிலத்தில் கேட்டழவும்
நாலும் புரியாதநிலை நிறுத்துவதேனோ
சேனைகொண்டு அரசபடை செல்லும்வழி காவல்கொள்ளா
சீரழிகும் செய்கை அறம் சேர்ந்திடப்போமோ
பானை மொண்டு நீர்சுமந்தே பாதிவழி பார்த்துவந்தும்
பற்றியகை விட்டிடறிப் போட்டுடைப்பேனோ
ஆனையுடன் வேங்கை நரி அத்தனையும் கானகத்தில்
ஆகும் இவையாளும் மனம் எடுத்திடலாமோ
பூனயும்தான் காணுமெலி போட்டலைத்துச் சீண்டிவிடும்
போலமனம் தூண்டும்வகை புலப்படலேனோ
தேவி உனைக் கைதொழுதேன் தீ ஒளிரும் தாய்மனமே
தேகம் மனம் கொள்ளுரமும் தந்திடு வாயே
மேவி வரும் துன்பமெனை மீண்டும் மீண்டும் பற்றுவதால்
மேனி படும் இன்னல்களை நீக்கிடுவாயே
காவி மனத் துன்பங்களைக் காலமெலாம் கண்டுலைந்தேன்
காதல்கொண்ட வாழ்வினிமை கண்டிடுமாமோ
ஓவியமும் நீவரைந்தாய் உள்ளஉயிர் நீகொடுத்தாய்
ஓடிவருந் தென்றல் சுகம் உளமெடுக்காதோ
******************
Re: கனவுகளோ நினைவுகளோ (கவிதை)
துன்பத்தில் காணும் இன்பங்கள்
-**********************************************
இன்பமலர்த் தோட்டமென்றே இவ்வுலகாக்கி - அதில்
. ஏரியொடு ஆறு மலை புல்வெளி கூட்டி
மென்மலர்கள் பூவனமும் மாமரச்சோலை - யென
. மேதினியில் இன்பம் நிலைக்காட்சி யமைத்தாள்
அன்புவழி செல்லும்வலைக் காந்தமமைத்து - அதில்
. ஆடியோடும் போதுமுள்ளே பாசமிழைத்து
தன்னுணர்வில் கூடுமொரு இனபமும்செய்தாள் - பின்
. தவித்திருக்கப் பிரியுமொரு வேதனைதந்தாள்
எங்கும் ஒளி பாயும் இளஞ் சூரியோதயம் - பின்
. ஏகாந்த நிலவொளிரும் பொன்னெழில் தோற்றம்
மங்கைமனம் சேர்ந்திசைக்க மன்மதராகம் - என
. மாற்றங்களும் மாறுதலில் மாமகிழ்வீந்தாள்
பொங்கிவரும் ஆறெனவே பூம்புன லூற்று - அது
. போகும்வழி கூடல்மரம் பூந்தளிர் நீட்சி
தொங்கும்சுவை மாங்கனிகள் தின்றிடும் பட்சி - கூட்டித்
தேமதுர கோலமென வாழ்வை யமைத்தாள்
சிங்கமொடு சீறும்கொடுபாம்புகள் காணும் - இன்னும்
. சொல்லடங்கா கோரமுக தோற்றங்கள்தானும்
பங்குபெறும் காட்டிடையே புள்ளியிட்ட மான்
. பதுங்கி வாழச் செய்யும் வகை அச்சமு மீந்து
இங்கவைகள் ஒன்றெனவே வாழவும் விட்டாள் - அதில்
. இனிமைதனை. தேடும்வழி இடர்களும்செய்தாள்
அங்கம் அறுத்தழிவில் இன்பம் காண்பர் தம்மைக்
. ஆதரித்துக் காப்பதிலே ஆனந்தமுண்டோ
எங்கெதுதான் இல்லையென்றால் ஏக்கமுண்டாகும் -மனம்
. எண்ணியது கையில்வர இன்பமென்றாகும்
பொங்குமின்பம் கண்டுமனம் ஆனந்தம்மேவ - இந்தப்
. பூமியிலே துன்பம்தனை கொஞ்சமாக்கினாள்
தொங்குமுயர் வானிடையே தோரணங்களாய் - முகில்
.. துரத்தமதி ஓடியொளித் தேகவிட்டவள்
கங்குல் விடி காலையிலே கதிரினை ஓட்டி -ஒளி
. காணும்பல மாற்றங்களாய் கணித்தபின் ஏனோ
தோற்றம் பெறும் மேனிதனும் இன்பம் காணவே என்று
,. துன்பம் தனை கொள்ள விடக் குவலயமாந்தர்
தூற்றியேவே றினமழித்து துடிதுடிக்கையில்`
. துன்பமுறும் வலிமரண ஓலம்கேட்டதில்
வீற்றிருக்கும் மன்னர் படை குடிகள்யாவுமே
. வெறிபிடித்து இன்பங்கண்டே வெற்றியென்றாறடி
ஆற்றும்செயல் அகிலமதில் எப்படி வந்தே
. அன்பழித்து இன்பமும்கொன் றெழுச்சிகொண்டதோ
-**********************************************
இன்பமலர்த் தோட்டமென்றே இவ்வுலகாக்கி - அதில்
. ஏரியொடு ஆறு மலை புல்வெளி கூட்டி
மென்மலர்கள் பூவனமும் மாமரச்சோலை - யென
. மேதினியில் இன்பம் நிலைக்காட்சி யமைத்தாள்
அன்புவழி செல்லும்வலைக் காந்தமமைத்து - அதில்
. ஆடியோடும் போதுமுள்ளே பாசமிழைத்து
தன்னுணர்வில் கூடுமொரு இனபமும்செய்தாள் - பின்
. தவித்திருக்கப் பிரியுமொரு வேதனைதந்தாள்
எங்கும் ஒளி பாயும் இளஞ் சூரியோதயம் - பின்
. ஏகாந்த நிலவொளிரும் பொன்னெழில் தோற்றம்
மங்கைமனம் சேர்ந்திசைக்க மன்மதராகம் - என
. மாற்றங்களும் மாறுதலில் மாமகிழ்வீந்தாள்
பொங்கிவரும் ஆறெனவே பூம்புன லூற்று - அது
. போகும்வழி கூடல்மரம் பூந்தளிர் நீட்சி
தொங்கும்சுவை மாங்கனிகள் தின்றிடும் பட்சி - கூட்டித்
தேமதுர கோலமென வாழ்வை யமைத்தாள்
சிங்கமொடு சீறும்கொடுபாம்புகள் காணும் - இன்னும்
. சொல்லடங்கா கோரமுக தோற்றங்கள்தானும்
பங்குபெறும் காட்டிடையே புள்ளியிட்ட மான்
. பதுங்கி வாழச் செய்யும் வகை அச்சமு மீந்து
இங்கவைகள் ஒன்றெனவே வாழவும் விட்டாள் - அதில்
. இனிமைதனை. தேடும்வழி இடர்களும்செய்தாள்
அங்கம் அறுத்தழிவில் இன்பம் காண்பர் தம்மைக்
. ஆதரித்துக் காப்பதிலே ஆனந்தமுண்டோ
எங்கெதுதான் இல்லையென்றால் ஏக்கமுண்டாகும் -மனம்
. எண்ணியது கையில்வர இன்பமென்றாகும்
பொங்குமின்பம் கண்டுமனம் ஆனந்தம்மேவ - இந்தப்
. பூமியிலே துன்பம்தனை கொஞ்சமாக்கினாள்
தொங்குமுயர் வானிடையே தோரணங்களாய் - முகில்
.. துரத்தமதி ஓடியொளித் தேகவிட்டவள்
கங்குல் விடி காலையிலே கதிரினை ஓட்டி -ஒளி
. காணும்பல மாற்றங்களாய் கணித்தபின் ஏனோ
தோற்றம் பெறும் மேனிதனும் இன்பம் காணவே என்று
,. துன்பம் தனை கொள்ள விடக் குவலயமாந்தர்
தூற்றியேவே றினமழித்து துடிதுடிக்கையில்`
. துன்பமுறும் வலிமரண ஓலம்கேட்டதில்
வீற்றிருக்கும் மன்னர் படை குடிகள்யாவுமே
. வெறிபிடித்து இன்பங்கண்டே வெற்றியென்றாறடி
ஆற்றும்செயல் அகிலமதில் எப்படி வந்தே
. அன்பழித்து இன்பமும்கொன் றெழுச்சிகொண்டதோ
Re: கனவுகளோ நினைவுகளோ (கவிதை)



மேற்கோள் செய்த பதிவு: 1177506@kirikasan wrote: துன்பத்தில் காணும் இன்பங்கள்
-**********************************************
எங்கும் ஒளி பாயும் இளஞ் சூரியோதயம் - பின்
. ஏகாந்த நிலவொளிரும் பொன்னெழில் தோற்றம்
மங்கைமனம் சேர்ந்திசைக்க மன்மதராகம் - என
. மாற்றங்களும் மாறுதலில் மாமகிழ்வீந்தாள்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15340
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3792
Re: கனவுகளோ நினைவுகளோ (கவிதை)
அருமை அனைத்தும் தேன் சுவை கவிதைகள் நன்றி.
மேற்கோள் செய்த பதிவு: 1177505@kirikasan wrote:
மானுமுண்டு சிங்கமுண்டு மாந்தரிலே பாம்புமுண்டு
மாயவலை போட்டு மனம் மயக்கியதாரோ
ஊனு முண்டு உள்ளிருந்து ஓடியெழும் உணர்வுக்கொண்டு
ஓங்குமிருள் ஊடொளியை தேடிடுவேனோ
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15340
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3792
Re: கனவுகளோ நினைவுகளோ (கவிதை)
மேற்கோள் செய்த பதிவு: 1177506@kirikasan wrote: துன்பத்தில் காணும் இன்பங்கள்
-**********************************************
சிங்கமொடு சீறும்கொடுபாம்புகள் காணும் - இன்னும்
. சொல்லடங்கா கோரமுக தோற்றங்கள்தானும்
பங்குபெறும் காட்டிடையே புள்ளியிட்ட மான்
. பதுங்கி வாழச் செய்யும் வகை அச்சமு மீந்து
இங்கவைகள் ஒன்றெனவே வாழவும் விட்டாள் - அதில்
. இனிமைதனை. தேடும்வழி இடர்களும்செய்தாள்
அங்கம் அறுத்தழிவில் இன்பம் காண்பர் தம்மைக்
. ஆதரித்துக் காப்பதிலே ஆனந்தமுண்டோ
அருமையான வரிகள் ! நன்றி.
நாகசுந்தரம்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 360
இணைந்தது : 27/12/2011
மதிப்பீடுகள் : 144
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|