புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவசர கால முதல் உதவி  சிகிச்சை  Poll_c10அவசர கால முதல் உதவி  சிகிச்சை  Poll_m10அவசர கால முதல் உதவி  சிகிச்சை  Poll_c10 
336 Posts - 79%
heezulia
அவசர கால முதல் உதவி  சிகிச்சை  Poll_c10அவசர கால முதல் உதவி  சிகிச்சை  Poll_m10அவசர கால முதல் உதவி  சிகிச்சை  Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
அவசர கால முதல் உதவி  சிகிச்சை  Poll_c10அவசர கால முதல் உதவி  சிகிச்சை  Poll_m10அவசர கால முதல் உதவி  சிகிச்சை  Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
அவசர கால முதல் உதவி  சிகிச்சை  Poll_c10அவசர கால முதல் உதவி  சிகிச்சை  Poll_m10அவசர கால முதல் உதவி  சிகிச்சை  Poll_c10 
8 Posts - 2%
prajai
அவசர கால முதல் உதவி  சிகிச்சை  Poll_c10அவசர கால முதல் உதவி  சிகிச்சை  Poll_m10அவசர கால முதல் உதவி  சிகிச்சை  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
அவசர கால முதல் உதவி  சிகிச்சை  Poll_c10அவசர கால முதல் உதவி  சிகிச்சை  Poll_m10அவசர கால முதல் உதவி  சிகிச்சை  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அவசர கால முதல் உதவி  சிகிச்சை  Poll_c10அவசர கால முதல் உதவி  சிகிச்சை  Poll_m10அவசர கால முதல் உதவி  சிகிச்சை  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
அவசர கால முதல் உதவி  சிகிச்சை  Poll_c10அவசர கால முதல் உதவி  சிகிச்சை  Poll_m10அவசர கால முதல் உதவி  சிகிச்சை  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அவசர கால முதல் உதவி  சிகிச்சை  Poll_c10அவசர கால முதல் உதவி  சிகிச்சை  Poll_m10அவசர கால முதல் உதவி  சிகிச்சை  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அவசர கால முதல் உதவி  சிகிச்சை  Poll_c10அவசர கால முதல் உதவி  சிகிச்சை  Poll_m10அவசர கால முதல் உதவி  சிகிச்சை  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவசர கால முதல் உதவி சிகிச்சை


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Fri Nov 20, 2015 1:33 pm

இப்பதிவின் நோக்கம் முதல் உதவி மற்றும் அவசர கால உயிர் மீட்ப்பு முறை பற்றி வழிப்புணர்வு ஏற்படுத்துவதே எனது முதல் நோக்கம் ..
இந்த கட்டுரையில் அவசர சிகிச்சை எப்படி செய்வது என்பதை பற்றி எனது மருத்துவமனை சிறப்பு மருத்துவர்கள் கருத்துக்களை கேட்டறிந்து பதிவிடுகிறேன் ..

நம்மை விட பொருளாதரத்தில் முன்னேறிய நாடுகளில் அவசர கால உயிர் மீட்ப்பு முறை என்பது அனைவரும் தெரிந்த ஒன்றே ..

இக்கட்டுரையை எழுதிட ஆலோசனை வழங்கிய  

மருத்துவர் . ச .சந்கேசுவரன் MBBS.,MD.,DA ( அவசர சிகிச்சை உயிர் மீட்ப்பு சிகிச்சை நிபுணர் )
மருத்துவர் . பி.அர். செந்தில் ராஜா MBBS.,MS ., எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் .,
மருத்துவர் .ம . பாவாணன் – குழந்தைகள் நல பொது மருத்துவர் .
திரு . சு . சத்தியமூர்த்தி – கதிரியக்க நிபுணர் .

மருத்துவம் பற்றி தொடர் பதிவாக பதிய உள்ளேன் உங்களுக்கு ஏதேனும் மருத்துவம் தொடர்பாக சந்தேககங்கள் இருப்பின் இத்தொடர் பதிவின் ஊடே தெளிவு பெறலாம் .

மேலும் மருத்துவ காப்பீடு போன்ற விளக்கங்களும் இப்பதிவில் கிடைக்கும்
உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருப்பின் , எமது மருத்துவ குழுவை ஆலோசித்து விளக்கம் அளிக்கவும் உள்ளேன் ...

வீட்டில் வைத்திருக்க வேண்டிய முதல் உதவிப் பொருட்கள்:
டி.வி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், செல்போன்கள் என வீடு முழுக்க நிறைந்துகிடக்கும் பொருட்கள் அதிகம். ஆனால், உயிர் காக்கும் முதல் உதவிப் பொருட்கள் ஏதேனும் நம் வீட்டில் இருக்கிறதா? இதோ அத்தியாவசியமாக வீட்டில் வைத்திருக்க வேண்டிய முதல் உதவிப் பொருட்கள். வீட்டில் மட்டும் அல்ல, வாகனங்களிலும் இதை வைத்திருக்கலாம்.

கிருமிநாசினி(Antisepticliquid): தினசரி வாழ்க்கையில் உடலில் நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க, கை கழுவும்போது கிருமிநாசினி பயன்படுத்தலாம். உடலில் காயம் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக கிருமிநாசினி பயன்படுத்திக் காயத்தைச் சுத்தப்படுத்துவது பாக்டீரியா மற்றும் கிருமித் தொற்றுகள் வராமல் தடுக்கும். இதேபோல் டிங்சர் வைத்திருப்பதும் முக்கியம்.
பாராசெட்டமால் மாத்திரை (Antiseptic liquid):பொதுவாக நாம் பயன்படுத்திவரும் வலி நிவாரண மாத்திரை இது. டாக்டரைச் சந்திக்க முடியாத அசாதாரணச் சூழ்நிலைகளில் ஏற்படும் காய்ச்சல், தலைவலி, கால்வலி, உடல்வலி போன்ற உடல்நலக் குறைவுகளுக்கு நிவாரணம்.

பருத்தி பஞ்சு (Cotton wool) – காயம்பட்ட இடத்தைப் பஞ்சின் மூலம் சுத்தம் செய்வதே சிறந்தது. காயம்பட்ட இடத்தில் இருக்கும் மண், தூசிகள் படிவதைத் தவிர்ப்பது எவ்வளவு அவசியமோ அதேபோல், வேறு ஏதேனும் துணிகள் மூலம் சுத்தப்படுத்துவதைத் தவிர்ப்பதும் அவசியம். எனவே, சுகாதாரம் நிறைந்த சுத்தமான பஞ்சினால் மட்டுமே காயத்தை சுத்தம் செய்யவேண்டும். ‘அப்சார்பென்ட் காட்டன் உல்’ (Absorbent cotton wool) ரத்தத்தையோ, மருந்தையோ உறிஞ்சும் தன்மை கொண்ட சுத்தமான பஞ்சு.

ஆஸ்பிரின் மாத்திரை (Aspirin Tablet)  தலைவலி மற்றும் இதர உடல் வலிகளுக்கான நிவாரணியாகச் செயல்படுவதோடு, ரத்தம் உறைதலைத் தவிர்த்து ரத்த ஓட்டத்தைச் சீராக்கும் தன்மை கொண்டது ஆஸ்பிரின். இதயத்தின் ரத்த ஓட்டம் பாதிக்கும்பட்சத்தில் மாரடைப்பு ஏற்படக்கூடும் என்பதால், அந்த நிமிடத்தில் ஆஸ்பிரின் சிறந்த முதல் உதவியாகப் பயன்படும். ஆனால், மருத்துவரின் ஆலோசனையோடு எடுத்துக் கொள்வதே நல்லது. நெஞ்சு எரிச்சல் ஏற்படுவதைத் தவறுதலாக, நெஞ்சு வலி என நினைத்து ஆஸ்பிரின் எடுத்துக்கொள்வது பக்க விளைவுகளை உண்டாக்கும். குறிப்பாக சர்க்கரை நோயாளிகள், பக்கவாதம், ரத்த அழுத்தம், மாரடைப்பு, ரத்தம் உறைவதில் பிரச்னை உள்ளவர்கள் மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல் ஆஸ்பிரினைப் பயன்படுத்தக் கூடாது.

ஆன்டிபயாட்டிக் க்ரீம் (Antibiotic cream)- காயங்களைக் குணப்படுத்த முதல் உதவியாக இந்த க்ரீமைப் பயன்படுத்தலாம்.

ஆன்டி-இன்ஃபிளமேட்டரி மருந்து (Anti – inflammatory ointment)    – உடல்வலி, முதுகுவலி, சுளுக்கு போன்றவற்றுக்கு நிவாரணமாகப் பயன்படும் ஆயின்ட்மென்ட். இவை அடிக்கடி வரும் உடல் உபாதைகள் என்பதால், வீட்டில் இருப்பது நல்லது.

கத்தரிக்கோல் – கட்டுப் போட வேண்டிய பஞ்சு, பேண்டேஜ் போன்றவைகளை வெட்டியெடுக்க பிரத்யேகமாக, சுகாதாரமாக ஒரு கத்தரிக்கோல் இருப்பது நல்லது .

முதல் உதவி என்றால் என்ன?
காயம் அல்லது நோய் காரணமாக உடல் நலப் பாதிப்பு அடைந்த ஒருவருக்கு, முறையான மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வரை, இருப்பதை வைத்துக்கொண்டு, அவசரநிலைப் பராமரிப்பை மேற்கொண்டு உயிரைக் காப்பாற்றுவதே முதல் உதவி. காயங்கள் மோசமான நிலையை அடையாமல் தடுப்பதும் முதல் உதவியே.



முதல் உதவி செய்யும்போது தவிர்க்க வேண்டியவை:
ஒருவருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது என்றால், உடனடியாக அவரைச் சூழ்ந்துகொண்டு நிற்பது தவறு. காற்றோட்டத்திற்கு வழி செய்ய வேண்டும்.
ஒருவர் மயக்க நிலையை அடைந்துவிட்டால், அவருக்கு சோடா, தண்ணீர் போன்றவற்றைக் கொடுக்கக் கூடாது. தண்ணீரானது உணவுக் குழாய்க்குப் பதில், மூச்சுக் குழாய்க்குள் சென்று அடைத்து, அதனால் உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உருவாகும்.
கை, கால்களில் ரத்தம் வந்துகொண்டு இருந்தால், ரத்தம் வரும் பகுதியை மேல் நோக்கி உயர்த்திப் பிடித்து, ஒரு துணியால் அந்த இடத்தை அழுத்திப் பிடித்துக் கட்ட வேண்டும். இதனால் ரத்தப்போக்கு குறையும்.
முதல் உதவியில் இருக்கும் அடிப்படை விஷயங்கள்:
முதலில், பாதிப்பு அடைந்தவர் உணர்வுடன் இருக்கிறாரா என அவரின் இரண்டு பக்கத் தோள்களின் மீதும் தட்டிப் பரிசோதிக்க வேண்டும்.
மற்றவர்களை உதவிக்கு அழையுங்கள். இதனால், பாதிப்பு அடைந்த நபரை உடனடியாகக் காப்பாற்றுவதுடன், உங்களுக்கு இருக்கும் மனப் பதட்டத்தையும் தணித்துக்கொள்ள முடியும்.
ஆம்புலன்ஸ் அல்லது அவசர உதவிக்கு 108 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளுங்கள்.
ஆம்புலன்ஸ் வர எவ்வளவு நேரம் ஆகும் என்பதைப் பொருத்து முதல் உதவி செய்வதற்கு முயற்சியுங்கள்.

ம்புலன்ஸ் உதவி மிக விரைவாகக் கிடைக்கும் என்றால், அவர்கள் வரும் வரை காத்திருங்கள். நேரம் ஆகும் என்றால் அல்லது நிலைமை மோசம் அடைந்தால், அவருக்கு ‘கேப்’ (CAB – C: CIRCULATION, A:AIRWAY, B:BREATHING) எனப்படும், அடிப்படை விஷயங்கள் உள்ளதா எனப் பார்க்க வேண்டும். அவை, ரத்த ஓட்டம், சுவாசப் பாதையில் அடைப்பு, சுவாசம் உள்ளதா எனப் பார்க்க வேண்டும்.
இந்த மூன்று சோதனைகளும் அடிப்படையானவை. எந்த வகையான பாதிப்பாக இருந்தாலும் இந்த மூன்று சோதனைகளையும் செய்த பின்னரே, முதல் உதவி செய்ய வேண்டும்.


எப்படிச் செய்ய வேண்டும்?
AVPU
A- அலெர்ட் – பாதிப்படைந்தவர் சுயநினைவுடன் உள்ளார ?
V- வேர்பெல் ரெஸ்போன்ஸ்- கூப்பிடும் போது பதிளிகிறாரா ?
P- PAINFUL STUMULATION- உடலில் வலி உண்டாக்கும் போது
U- UNRESPONSE- எவ்வித உணர்வும் இல்லாமல் மயங்கிய நிலையில் இருப்பது

வாழ்வில் நாம் முதலில் கற்றுகொள்ளவேண்டியது ABC????
A- AIRWAY- சுவாச மண்டல பரிசோதனை
B- BREATHING- சுவாச பரிசோதனை
C- CIRCULATION- இரத்தவோட்டமண்டலம்

சுவாசப் பாதை சோதனை:
பாதிப்பு அடைந்தவரை சமதளத்தில் படுக்கவைத்து அவர் நெற்றியின் மீது ஒரு கையை வைத்துக்கொண்டு மறு கையால் தாடையைச் சிறிது மேல் நோக்கி உயர்த்தவும். இதனால் சுவாசப் பாதையில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் சீராகும்.

1.பார்ப்பது ,-பதிப்படைந்தவரின் மார்பு (சுவாசிக்கும் பொது ஏறி , இறங்கும் ) கவனிக்கவேண்டும்
2.கேட்பது  –மூச்சுவிடும் சப்தங்கள்
3.உணர்வது  – மூக்குபகுதியில் முகத்தை வைத்து சூடான காற்று வருகிறதா என்று உணர வேண்டும்

சுவாச சோதனை:
பாதிப்பு அடைந்தவரை சமதளத்தில் படுக்க வைத்து வாய் அருகே உங்களது காது மடல்களைக் கொண்டுசென்று, சுவாசத்திற்கு உரிய ஏதேனும் சத்தம் வருகிறதா என்பதைக் கவனிக்கவேண்டும். அதே சமயம், பாதிப்பு அடைந்தவரின் மார்பு ஏறி, இறங்குகிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்.
இந்தப் பரிசோதனையில் பாதிப்பு அடைந்தவருக்குச் சுவாசம் இருப்பது தெரிய வந்தால், உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து, சிகிச்சைக்கு அனுப்ப வேண்டும்.
ஒருவேளை சுவாசம் இல்லை என்றால், சி.பி.ஆர் (Cardio-pulmonary Resuscitation) எனப்படும் இதய செயற்கை சுவாசமூட்டல் முதல் உதவியைச் செய்ய வேண்டும்.


ரத்த ஓட்ட சோதனை:
இரத்த ஓட்ட நாடிகளை பரிசோதனை செய்வது :-

பாதிப்பு அடைந்தவரை சம தளத்தில் படுக்கவைத்து அவரது குரல்வளையின் மத்தியில் இருந்து, வலது அல்லது இடதுபக்கமாக இரண்டு அங்குலம் அளவு தள்ளி இதயத்திற்கு மிகவும் நெருக்கமான பகுதியில், உங்களது இரண்டு விரல்களை வைத்தால், ரத்த ஓட்டம் இருப்பதை உணர முடியும்.

சி.பி.ஆர். இதய சுவாசமூட்டல்:
பாதிப்பு அடைந்தவருக்கு சுவாசம் நின்றுபோனாலோ, நாடித்துடிப்பு இல்லாமல் இருந்தாலோ, சி.பி.ஆர். செய்வதன் மூலம் அவரது உடலில் ரத்த ஓட்டத்தை இயல்பு நிலைக்குக் கொண்டுவர முடியும். இதனால் ஆக்சிஜன் இழப்பால் ஏற்படும் இறப்பு மற்றும் மூளை சேதத்தையும் தடுக்க முடியும்.

எப்படிச் செய்வது?

பாதிப்பு அடைந்தவரைச் சமதளத்தில் படுக்கவைத்து, அவருக்குப் பக்கவாட்டில் அமர்ந்துகொண்டு, இடது மார்புப் பகுதியில், நம்முடைய இரண்டு கைகளின் உள்ளங்கைப் பகுதியை ஒன்று சேர்த்து அரை செ.மீ. அளவுக்கு மென்மையாக அழுத்த வேண்டும்.
மூன்று முறை அழுத்திய பிறகு அவரது வாயோடு வாய்வைத்துக் காற்றை ஊத வேண்டும். (மீட்பு சுவாசம் பார்க்கவும்) இதேபோன்று தொடர்ந்து செய்ய வேண்டும்.
அழுத்தும்போது வேகமாக அழுத்தினால் விலா எலும்பு உடைவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே கவனம் தேவை.

குழந்தைகளுக்கு: குழந்தைகளுக்கு சி.பி.ஆர். முதல் உதவி செய்யும்போது, உள்ளங்கையைக் கொண்டு அழுத்தம் கொடுக்காமல், இரண்டு விரல்களால் கொடுக்க வேண்டும். அதேபோல 15 முறை மட்டும்தான் அழுத்தம் தர வேண்டும்




மீட்பு சுவாசம்:
பாதிப்பு அடைந்தவரைப் படுக்கவைத்துத் தாடையைச் சிறிது உயர்த்தி, அவரது மூக்கின் நுனிப்பகுதியை மூடி அழுத்திப் பிடித்துக்கொண்டு, அவரது வாயை நன்கு திறந்துகொள்ளவும்.

பிறகு உங்களது வாயை நன்கு திறந்து, காற்றை நன்கு உள் இழுத்துக்கொண்டு, அவரது வாயோடு வாய்வைத்து மூடி பிறகு உள் இழுத்த காற்றை வெளிவிடவும். இதனால் பாதிப்பு அடைந்தவருக்குச் சுவாசம் கிடைக்கும்.

தொடர் கட்டுரையே ..ஒரே பதிவில் பதிவிட முடியாது

தொடரும் ...



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Fri Nov 20, 2015 4:31 pm

நன்றி கார்த்திக் அருமை.மிகவும் பயனுள்ள பதிவு



மெய்பொருள் காண்பது அறிவு
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Fri Nov 20, 2015 8:23 pm

மிக உபயோகமான பதிவு...
மேலும் தொடருங்கள்




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Nov 21, 2015 2:05 pm

மின்சாரம் தாக்கினால்:-
************************************

பவர்கட் பிரச்னை இருந்தாலும், பவர் இல்லாமல் நம்மால் இருக்க முடிவது இல்லை. எங்கேயும், எதிலும் மின்சாரத்தின் தேவை என்பது நீக்கமறக் கலந்து விட்டது. கரன்ட் ஷாக் வாங்காத நபர்கள் ஒருவர்கூட இருக்க மாட்டார். சிறிய அளவில் நாம் அனை வரும் ஷாக் வாங்கியிரு ப்போம்.

மின்சாரம் தாக்கியவர்களுக்கு முதலில் மின் இணைப்பைத் துண்டி ப்பதே, நாம் செய்யும் முதல் உதவி.
மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளானவர் மின் கம்பியைத் தொட்டுக் கொண்டு இருந்தால், முதலில் ‘மெயின் ஸ்விட்ச்’-ஐ அணைக்க வேண்டும்.

ஸ்விட்ச் எது எனக் கண்டறிய முடியவில் லை என்றால், மொத்த மின் இணைப்பையே துண்டிக்கலாம்.

அதுவும் முடியவில்லை என்றால், நன்கு உலர்ந்த மரக்கட்டை போன்ற மின் கடத் தாப் பொருட்களைப் பயன்படுத்தி, மின் கம்பியில் இருந்து அவரது கையை நகர்த்தி மின் ஓட்டத்தைத் தடை செய்யலாம்.
.
மின் கடத்தாப் பொருட்களைக்கொண்டு மின் ஓட்டத்தைத் தடைச் செய்யும்போது, அப்படிச் செய்கி றவர் கண்டிப்பாக ரப்பர் செருப்பு அல்லது ரப்பர் கையுறைகளை அணிந்து இருக்கவேண்டும்.

உலோகப் பொருட்களைக் கொ ண்டு மின் இணைப்பைத் துண்டிக்க க் கூடாது.

பிறகு பாதிக்கப்பட்டவரின் நாடித்துடிப்புப் பரிசோதனை, சுவாசப் பாதை சோதனை போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

மின்சாரத்தால் கருகிப்போன உடல் பாகத்தைச் சுமார் 10 நிமிடங் கள் சுத்தமான ஈரத் துணியால் மூடி வைக்க வேண்டும். பின்னர் நீர் உறிஞ்சும் சுத்தமான துணி யால் ஒன்றால் மூடிக் கட்ட வேண்டும்.

கழுத்துப் பகுதியைத் தொங்க விடாமல், சீரான முறையில் முட் டுக் கொடுத்து மருத்துவ மனை க்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

ஷாக் அடிபட்டவருக்கு வெளிப்படையாகப்பாதிப்பு ஏதும் தெரியா மல் இருக்கலாம். மின்சாரம் நம் உடலில் பாயும்போது, உள் உறுப்புகளைப் பாதிக்கச் செய்யலாம். எனவே, டாக்டரைச் சந்தித் து ஆலோசனை பெறுவது நல்லது.

இடி மின்னல் தாக்கல்:-
*********************************
மின்சாரம் தாக்கினால் ஒருவருக்கு என்ன முதல் உதவி செய்யப் படுகிறதோ, அதேதான் மின்னலு க்கும்!

மின்னலில் காயம்பட்டால், முதல் உதவி செய்வதாக நினைத்து அவர் கள் மீது இங்க், டூத் பேஸ்ட், தோலில் தடவப்படும் மருந்து போன்றவற் றைச் சிலர் தடவுவார்கள். இதனால் காயத்தின் தன்மை அறிய முடியாமல் போய் சிகிச்சை தாமதம் ஆகக்கூடும். எனவே, மின்னலில் காயம் அடைந்தவரை அப்படி யே மருத்துவமனைக்குக் கொண்டு வருவதுதான் அவருக்கு நாம் செய்யும் முதல் உதவி.

வெட்டவெளியில் மின்னல் தாக்காது. மின்னல் பாய அதற்கு ஒரு கடத்தி தேவை. எனவே, மழைக்கு மரத்தடியில் ஒதுங்க வேண்டாம்.

மழை பெய்யும்போது வெறும் காலுடன் நடக்க வேண்டாம். செருப்பு அணிந்து நடக்கும்போது பூமிக்கும் உங்களுக்கும் இடையே தொடர்பு துண்டிக்கப்படுவ தால், இடி உங்கள் மீது விழுவதற்கான வாய்ப் பு குறைகிறது.

குடை பிடிப்பவர்கள் குடையின் பிளாஸ் டிக் பகுதியை மட்டுமே பிடிக்க வேண் டும். இரும்பு பகுதியில் மின்னல் பாய வாய்ப்பு உள்ளது.

இடி மின்னல் சமயத்தில் மின்சாரத்தை அதிகம் பயன்படுத்த வேண் டாம்.

அவசர கால முதல் உதவி  சிகிச்சை  5XSbxZFvQZiDxg3qtzA8+cpr_guide

அவசர கால முதல் உதவி  சிகிச்சை  Qr0M77hxSZScC0peXSEx+images(1)

அவசர கால முதல் உதவி  சிகிச்சை  VK7bkj9RS6aygOpZse9I+images

தொடரும்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக