புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Today at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காதலிக்க மரம் வளர் Poll_c10காதலிக்க மரம் வளர் Poll_m10காதலிக்க மரம் வளர் Poll_c10 
87 Posts - 45%
ayyasamy ram
காதலிக்க மரம் வளர் Poll_c10காதலிக்க மரம் வளர் Poll_m10காதலிக்க மரம் வளர் Poll_c10 
83 Posts - 43%
mohamed nizamudeen
காதலிக்க மரம் வளர் Poll_c10காதலிக்க மரம் வளர் Poll_m10காதலிக்க மரம் வளர் Poll_c10 
7 Posts - 4%
prajai
காதலிக்க மரம் வளர் Poll_c10காதலிக்க மரம் வளர் Poll_m10காதலிக்க மரம் வளர் Poll_c10 
7 Posts - 4%
Ammu Swarnalatha
காதலிக்க மரம் வளர் Poll_c10காதலிக்க மரம் வளர் Poll_m10காதலிக்க மரம் வளர் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
காதலிக்க மரம் வளர் Poll_c10காதலிக்க மரம் வளர் Poll_m10காதலிக்க மரம் வளர் Poll_c10 
2 Posts - 1%
Barushree
காதலிக்க மரம் வளர் Poll_c10காதலிக்க மரம் வளர் Poll_m10காதலிக்க மரம் வளர் Poll_c10 
2 Posts - 1%
Jenila
காதலிக்க மரம் வளர் Poll_c10காதலிக்க மரம் வளர் Poll_m10காதலிக்க மரம் வளர் Poll_c10 
2 Posts - 1%
jairam
காதலிக்க மரம் வளர் Poll_c10காதலிக்க மரம் வளர் Poll_m10காதலிக்க மரம் வளர் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
காதலிக்க மரம் வளர் Poll_c10காதலிக்க மரம் வளர் Poll_m10காதலிக்க மரம் வளர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதலிக்க மரம் வளர் Poll_c10காதலிக்க மரம் வளர் Poll_m10காதலிக்க மரம் வளர் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
காதலிக்க மரம் வளர் Poll_c10காதலிக்க மரம் வளர் Poll_m10காதலிக்க மரம் வளர் Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
காதலிக்க மரம் வளர் Poll_c10காதலிக்க மரம் வளர் Poll_m10காதலிக்க மரம் வளர் Poll_c10 
11 Posts - 4%
prajai
காதலிக்க மரம் வளர் Poll_c10காதலிக்க மரம் வளர் Poll_m10காதலிக்க மரம் வளர் Poll_c10 
9 Posts - 4%
Jenila
காதலிக்க மரம் வளர் Poll_c10காதலிக்க மரம் வளர் Poll_m10காதலிக்க மரம் வளர் Poll_c10 
4 Posts - 2%
Rutu
காதலிக்க மரம் வளர் Poll_c10காதலிக்க மரம் வளர் Poll_m10காதலிக்க மரம் வளர் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
காதலிக்க மரம் வளர் Poll_c10காதலிக்க மரம் வளர் Poll_m10காதலிக்க மரம் வளர் Poll_c10 
2 Posts - 1%
Barushree
காதலிக்க மரம் வளர் Poll_c10காதலிக்க மரம் வளர் Poll_m10காதலிக்க மரம் வளர் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
காதலிக்க மரம் வளர் Poll_c10காதலிக்க மரம் வளர் Poll_m10காதலிக்க மரம் வளர் Poll_c10 
2 Posts - 1%
jairam
காதலிக்க மரம் வளர் Poll_c10காதலிக்க மரம் வளர் Poll_m10காதலிக்க மரம் வளர் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலிக்க மரம் வளர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82070
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 05, 2015 4:40 pm

சிலர் வருவதும் போவதுமாக இருந்தது அந்தப் பேருந்து நிறுத்தம். அந்த பேருந்து நிறுத்தத்தில் தான் தீபாவும் நின்றுகொண்டிருந்தாள் கையில் சிறிய மரக்கன்றுடன்.
-
இன்று எப்படியேனும் தீபாவிடம் தனது காதலை வெளிப்படுத்திவிடவேண்டும் என்ற வேகத்தில் வழக்கம் போல அந்தப் பேருந்து நிறுத்தத்திற்கு விரைந்து கொண்டிருந்தான் ரியாஸ். இதுவரை ஒரு வார்த்தை கூட பேசியது கிடையாது. ஆனாலும் தினமும் அதே பேருந்து நிலையத்தில் இவன் தீபாவை பார்ப்பது வழக்கம். அவளும் அடிக்கடி இவனைப் பார்த்து புன்னகைப்பதால் அவளும் தன்னைக் காதலிப்பதாக இவன் கருதினான்.
-
ஆதலால் இன்று எப்படியும் அவளிடம் தனது காதலை சொல்லியே தீருவதென அவளருகில் சென்றான். மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு நேரடியாகவே சொல்லிவிடலாமெனத் தீர்மானித்து ,
-
“தீபா ஐ லவ் யூ” என்றான்..
-
அதனைக் கேட்டவுடன் தீபா கையிலிருந்த மரக்கன்றினை இவனது கைகளில் கொடுத்து விட்டு ” வீட்டுல நட்டு வைங்க, ஒரு மாதம் கழித்துப் பார்க்கலாம் ” என்றாள்.
-
“தீபா எனக்கு புரியல ..? நீ என்ன சொ..” என்று அடுத்த கேள்விக்குப் போவதற்குள் அவளது பேருந்து வந்துவிடவே அவள் இவனிடம் எதுவும் கூறாமல் பேருந்தில் ஏறிச்சென்று விட்டாள். ஆனால்  ரியாசிற்கு குழப்பமாக இருந்தது. இருந்தாலும் அவனுக்கு ஒன்று புரிந்தது. இந்த மரக்கன்றினை வீட்டில் நட்டு வளர்த்தினால் அது ஒரு மாதத்தில் எவ்வளவு வளர்கிறதோ அவ்வளவு அன்பு நான் அவள் மேல் வைத்திருக்கிறேன் என்று கண்டுபிடிக்க இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டான்.
-
ரியாஸ் மற்றும் நண்பர்கள் ஜெய் , அருண் , சௌந்தர் , விஜய் ஆகியோர் சென்னையில் ஒரு பிரபல மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். இவர்கள் ஐவரும் சென்னையின் புறநகர்ப் பகுதியொன்றில் ஒரு வீட்டினை வாடகைக்கு எடுத்து வசித்து வருகின்றனர்.
-
ரியாஸ் சந்தோசத்துடன் வீட்டிற்குள் நுழைவதைப்பார்த்த நால்வரும்
“என்னாச்சு மச்சா ..ஓ கே வா …?” என்றனர்.
“ஓ கே னு தான் நினைக்கிறேன்.” என்றபடி மரக்கன்றினை டேபிள் மேலே வைத்தான்.
“இதெதுக்கு மச்சி ..?” என்றான் சௌந்தர்.
ரியாஸ் அங்கு நடந்தவற்றை விவரித்துவிட்டு ” அவ எதுக்கு குடுத்திருப்பான்னு  நினைக்கிற ..? ” என்றான்.
” ஓ . என்னமோ ஓகே னு சொன்ன..? ” அவ இத கொடுத்ததே உன்ன போட்டு தள்ளுறதுக்குத்தான்..” என்றான் விஜய்.
-
“என்ன சொல்ற மச்சி ..? ” என்று கொஞ்சம் பதட்டத்துடன் கேட்டான் ரியாஸ்.
” ஆமா மச்சி ., இத வளர்த்துனா பெருசா வளருமா .. அத வெட்டி அப்படியே உன்ன சுடுகாட்டுல வச்சு எரிசிடுவேன் அப்படின்னு சொல்லிருக்கா..! ” புது விளக்கம் தந்தான்.
” ஆமால்ல , மரம் விறகா  கூட பயன்படும் ..”
” அப்படியில்ல மச்சி இவன கொன்னு ஒரு சவப்பெட்டிக்குள்ள வச்சு அனுப்பிடுவேன் அப்படின்னு சொல்லிருக்கா.. அதுக்கு சிம்பாலிக்கா தான் இந்த மரக்கன்று. “
-
” அட ஆமா மரத்துல தான இத்தன பெட்டி , அலமாரி இன்னும் எத்தனையோ சாமான்களெல்லாம் செய்யுறோம். ஆனாலும் மரம் வளர்க்கரக்கு தயங்குறோம்..” என்றான் ரியாஸ்.
-
“என்னடா ஆச்சு உனக்கு , இப்பூடி எல்லாம் பேசுற..? ” என்றான் சௌந்தர்.
“அது ஒண்ணும் இல்ல மச்சி , பயபுள்ள காதலிக்குதாம்ல ..? ” இனிமேல் பாரு கவிதை , தத்துவம்னு நம்ம உசுர எடுக்கப் போறான் .” இது ஜெய். பேசியவாறே அனைவரும் உறங்கச்சென்றனர்.
-
மறுநாள் காலையில் மூவரும் எழுந்து ரியாஸ் எங்கடா போனான் , நம்மளுக்கு முன்னாடி ஒரு நாள் கூட எழுந்திரிக்க மாட்டானே என்று பேசிக்கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் ரியாஸ் கையில் ஒரு பெட்டியுடன் உள்ளே வந்து கொண்டிருந்தான். அதைப் பார்த்த விஜய் ” டேய் , என்ன மச்சி இது ..? ” என்றான் .
” பிஸ்லேரி வாட்டர் ..”
-
“எதுக்கு ..? நமக்குத்தான் இங்கே தண்ணி வருதுல்ல ..? “
“இது நமக்கு இல்ல மச்சி , செடிக்கு ..! “
அனைவரது முகத்திலும் ஆச்சர்யம் .. ” டேய் , லூசாடா நீ ..? செடிக்கெல்லாம் எதுக்குடா பிஸ்லேரி வாட்டர் .. பிஸ்லேரி வாட்டர் தான் குடிப்பேன்னு  அது உன்கிட்ட கேட்டுச்சா..? “
-
“நீ என்ன வேணா சொல்லிட்டு போ மச்சி , இந்த செடிலதான் என்னோட லைபே இருக்கு ..”
“அட விடு மச்சி அவனுக்குத்தான் லவ் வந்திடுட்சுல்ல இனிமேல் பாரு , இன்னும் எத்தனயோ இருக்கு ..? ” என்றான் ஜெய்.
-
---------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82070
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 05, 2015 4:41 pm


இரண்டு நாட்கள் நகர்ந்திருந்தது. காலையில் 5 மணி அளவில் ரியாஸ் அனைவரையும் எழுப்பி ” மச்சி செடி ஒரு இலை விட்டுருக்கு ” என்றான் சந்தோசமாக.!
-
இரவு தூங்குவதற்கு நேரமானதால் அனைவரும் தூக்க கலக்கத்தில் இருந்தனர். ” டேய் உன் பிகர் , உன் செடி .. அதுல இலை வந்தா என்ன தலை வந்தா என்ன ..? எங்க உசுர ஏன்டா எடுக்குற ..? ” என்றான் விஜய்.
-
“சரி விடு மச்சி .. ஆல் தி பெஸ்ட் .. என்று கைகுலுக்கி விட்டு மீண்டும் தூங்கிவிட்டனர் மற்ற இருவரும்..
-
“அடச்சே என்னோட பீலிங்க்ஸ யாருமே புரிஞ்சிக்க மாட்டீங்கறீங்க. ” என்று அலுத்துக்கொண்டே அந்த செடியைப் பார்த்தான் ரியாஸ்.
-
நாட்கள் நகர்ந்தது. 8 ஆம் நாள் செடி கொஞ்சம் வாடி இருந்தது . அலுவலகத்திலிருந்து வந்த ரியாஸ் ” மச்சி , செடி வாடிப் போச்சு .. என்ன பண்ணலாம் ..? ” என்றான் .
-
“டாக்டர் கிட்ட கூட்டிட்டு போ . ஒரு ஊசி போட்டார்னா சரியாய்டும் .? ” என்று கோபமாக கூறிவிட்டு வெளியே சென்று விட்டன சௌந்தர். அவனது கோபத்திலும் நியாயம் இருந்தது. அந்தச் செடி வந்ததிலிருந்து கடந்த 8 நாட்களாக கவிதை சொல்கிறேன் என்று அனைவரின் உறக்கத்தையும் கெடுத்து வந்தான். இதை விட நேற்று மருத்துவர்கள் பயன்படுத்தும் stethoscope ஐ எடுத்து வந்து அவளது இதயத்துடிப்பினை கேட்கிறேன் என்று சொல்லிக்கொண்டிருந்தது இவர்களிடையே பெரும் எரிச்சலை உண்டாக்கியிருந்தது.
-
நாளாக நாளாக அந்தச் செடி மேலும் வாடிக் கொண்டிருந்தது . ரியாசும் என்னவெல்லாமோ செய்து பார்த்தான். ஆனாலும் 15 ஆம் நாள் சுத்தமாக வறண்டு போனது . தண்ணீர் அதிகமாக ஊற்றியதால் வேரழுகல் நோயினால் வறண்டு போனது. இதனைப் பார்த்த ரியாசிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
-
“மச்சி என் லைபே முடிஞ்சு போச்சு மச்சி..” என்று அழுதுகொண்டே அவர்களிடம் வறண்டு போன செடியைக் காண்பித்தான்.
-
என்னதான் கோபம் இருந்தாலும் அவனைப் பார்க்க கஷ்டமாக இருந்தது. ” விடு மச்சி .. அவ என்னமோ பிளான் போட்டுத்தான் உன்கிட்ட கொடுத்திருக்கா.” என்று ஏதேதோ சொல்லி அவனை தேற்ற முயன்றனர்.
-
” இல்ல மச்சி .. அவ ஒரு மாசத்துக்கு அப்புறம் வந்து இந்தச் செடியப் பார்த்தா நான் எப்படி காமிக்கிறது . பெருசா வளர்ந்திருந்தா சந்தோசமா காமிக்கலாம் ..என்ன பண்ணுறதுனே தெரியல ..? என்றான்.
-
“சரி விடு மச்சி ..” எதாவது ஐடியா கிடைக்காமலா போய்டும்..” என்று ஆதரவு கூறினான் ஜெய். இரவு உணவிற்குப் பின்னர் அனைவரும் உறங்கச்சென்றனர். இரவு 1 மணியளவில் ரியாஸ் வேகமாக அனைவரையும் எழுப்பினான்.. அனைவரும் தடுபுடளாக எழுந்து என்ன என்ன என்றனர்..
-
“மச்சி ஒரு சின்ன உதவி . 2 வது வீதில ஒரு மரம் பார்த்தேன் அதைய எப்படியாவது நம்ம வீட்டுக்கு கொண்டு வந்திட்டா போதும் ..!” என்றான்.
-
“சரி மச்சி காலைல புடுங்கிட்டு வந்திடலாம் ..”
“இல்ல .. இப்பவே புடிங்கிட்டு வந்தாத்தான் யாரும் பாக்க மாட்டாங்க .. ப்ளீஸ் மச்சி எனக்காக ..” என்றான் கெஞ்சலாக.
“சரி எப்படி பிடுங்கறது .. மண்வெட்டி , கடப்பாரை எல்லாம் வேணும்ல ..?”
” எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டேன் மச்சி ..” என்றான் ஒரு அசட்டுச் சிரிப்புடன்.
“சரி வா போலாம் , சௌந்தர், ஜெய் நீங்க ரூம்ல இருங்க வந்திடறோம் ” என்று மூவரும் கிளம்பினர்.
-
இரண்டாவது தெருவை அடைந்ததும்
“மச்சி இந்த மரம் தான்டா ..! ” என்று ஒரு மரத்தினைக் காட்டினான்.
“அதற்குக் கீழே ஒரு சிறிய செடி ஒன்றும் இருந்தது . அதனைப் பிடுங்கப்போன விஜயை
“அது இல்ல மச்சி , இது ..! ” என்றான்.
“அதைப் பார்த்ததும் விஜய்க்கு தூக்கி வாரிப்போட்டது.. அப்படியே இரண்டடி பின்னால் வந்தான் .. டேய் என்ன சொல்ற ..? உனக்கு கிறுக்கு புடிச்சுப்போச்சா..? ” என்றான்.
-
ஆமாம் அவன் காட்டியது ஒரு பெரிய மரம். எப்படியும் 4 வருடம் இருக்கும். ஒரு மின்கம்பத்தின் உயரம் இருந்தது.
” ப்ளீஸ் மச்சி , இத பிடுங்கி கொண்டு போயிட்டா பிரச்சினையே இல்ல ..?”
“போடா வெண்ண , உன்ன நம்பி இத்தன தூரம் வந்தேன் பாரு ..! ” என்று கூறி விட்டு அவனையும் பிடித்து இழுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றனர்.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82070
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 05, 2015 4:43 pm

வீட்டிருக்குச் சென்றதும் ரியாஸ் தனது லேப்டாப்பை எடுத்து கூகுளில் எதையோ தேட ஆரம்பித்தான். ” டேய் , இனிமேல் ஏதாவது மரத்தைப் புடுங்கலாம் , மயிரப் புடுங்கலாம் அப்படின்னு கூப்பிட்டுப் பாரு …?? ” என்ற படியே உறங்கச் சென்று விட்டனர் இருவரும்.

ரியாஸ் கூகுளில்  மரங்களைப் பற்றித் தேடியது அவனை வியப்பில் ஆழ்த்தியது.
-
“ஒரு மரம் ஒரு வருடத்தில் 27 kg pollution ஐக் கட்டுப்படுத்தக் கூடியது. நாம் ஒவ்வொருவரும் நமது வீட்டில் ஒரு இரு சக்கர வாகனமும் நான்கு சக்கர வாகனமும் அவசியம் என்று நினைக்கிறோம். ஆயினும் அவற்றால் ஏற்படும் மாசினை தடுக்க ஒரு மரம் வளர்ப்பதும் அவசியம் என்பதைப் புரிந்து கொண்டான்.”

-
மரம் வளர்ப்பதால் நாம் இழப்பது ஒன்றும் இல்லை . வளரும் வரை தண்ணீர் ஊற்றினாலே போதுமானது. மேலும் எண்ணற்ற பயன்கள் இருப்பதை உணர்ந்து கொண்டான் .


மறுநாள் காலை ரியாஸ் உற்சாகமாகக் காணப்பட்டான். இதனைப் பார்த்த மற்ற மூவரும் வியப்பில் வாயடைத்துப் போயினர்.
“மச்சி நாளைக்கு உன்னோட பிறந்த நாள் வருதுல்ல ..? ட்ரீட் எங்க வச்சுக்கலாம் ..? ” என்றான் விஜய்.
-
” இந்த பிறந்த நாளுக்கு ட்ரீட் கிடையாது , ஏன் இனி எந்தப் பிறந்தநாளுக்குமே ட்ரீட் கிடையாது..!!” என்றான் ரியாஸ்.
“அட பாவி ., என்னாச்சு மச்சி .. இதுக்கும் அவ ஏதாவது வேட்டு வச்சிட்டாளா  ..? இது சௌந்தர்.
“அது நாளைக்குத் தான் தெரியும் ..! ” சிரித்த படியே கூறினான் ரியாஸ்.

மறுநாள் காலை ரியாஸ் ஒரு ஆட்டோவில் 100 மரக்கன்றுகளுடன் வந்திறங்கினான். மூவரையும் எழுப்பிவிட்டு ” வாங்கடா , ரோடுக்குப் போய் எல்லாருக்கும் இந்த மரக்கன்றுகளை இலவசமா கொடுக்கலாம் ..! ” என்றான்.
“ஓ .. இப்பூடிஎல்லாமா காதல் பேய் பண்ணுது .. பரவால்லியே ..” என்றன் அருண்.
-
நால்வரும் சாலையில் நின்று சாலையில் வருவோர் போவோருக்கு மரக்கன்றுகளை வழங்கிகொண்டிருந்தனர். தீபாவும் அந்த வழியாக வந்துகொண்டிருந்தாள் . இவர்களைப் பார்த்ததும் வண்டியை நிறுத்திவிட்டு அருகில் வந்தாள்.
-
“வாங்க மேடம் ., இன்னிக்கு எங்க நண்பனோட பிறந்தநாள் . அதுக்காக எல்லோருக்கும் இலவசமா மரக்கன்றுகள தரான். இந்தாங்க ” என்று நீட்டினான் சௌந்தர். அதனைப் பார்த்த ரியாஸ் தீபாவின் அருகில் வந்து
” நீங்க கொடுத்த மரம் வறண்டு போச்சு ..! ” என்று சோகத்துடன் கூறினான்.
“அப்பா ஊருக்கு போய்ட்டார்..” என்றாள் தீபா .
-
ரியாசுக்கு ஒன்றும் புரியவில்லை. ” அதில்லீங்க , அந்த செடி வறண்டு போச்சுன்னு சொன்னேன் ..”
“ஆமா , மீனா என்னோட friend தான் ..! சரி வரேங்க ” என்று கூறிவிட்டு வண்டியை நோக்கி போய்விட்டாள்.
என்னடா நாம ஒண்ணு சொன்ன இவ ஒண்ணு சொல்லுறா என்று நினைத்துக்கொண்டிருந்தான் ரியாஸ்.
-
அப்பொழுது பக்கத்தில் நின்றுகொண்டிருந்த இன்னொருவர் ” இந்தப் பொண்ணுக்கு காது கொஞ்சம் கேக்காது. அந்த மிசின் வச்சிருப்பா மறந்துட்டு வந்திட்டா போல ..” என்று கூறிவிட்டு ஒரு மரக்கன்றினை வாங்கிக்கொண்டு சென்றுவிட்டார்.
“மச்சி நீ பேசுறதப் பார்த்தா இதுதான் அந்த பிகரா..? ” என்றான் ஜெய்.
-
“ஆமாண்டா..! ஆனா அவளுக்கு காது கேக்காதுன்னு எனக்குத் தெரியாது ..!! “
-
” அட பாவி ., அப்ப அவ எதுக்கு உன்கிட்ட அந்த செடிய கொடுத்தாளோ…? நீ அத கொண்டு வந்து எங்க உசுர வாங்கிட்டியே ..? “
“விடு மச்சி .. இருந்தாலும் நான் மரங்களோட நன்மைகளைப் பத்தி தெரிஞ்சிக்கிட்டேன்ல.. இருந்தாலும் அவ என்ன லவ் பண்ணுறானு தான் நினைக்கிறேன்..”
-
“ஆமா மச்சி ., அப்படித்தான் தெரியுது.. நாங்களும் உதவி செய்யுறோம் ..! ” என்றனர் மூவரும்.!
-
========================================
கோமாளி செல்வா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 05, 2015 5:31 pm

ஒவ்வொரு காதலரும் பின் பற்றினால்!!!!!!!
ayyasamy ram wrote:
“தீபா ஐ லவ் யூ” என்றான்..
-
அதனைக் கேட்டவுடன் தீபா கையிலிருந்த மரக்கன்றினை இவனது கைகளில் கொடுத்து விட்டு ” வீட்டுல நட்டு வைங்க, ஒரு மாதம் கழித்துப் பார்க்கலாம் ” என்றாள்.
-
மேற்கோள் செய்த பதிவு: 1178693

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 05, 2015 5:39 pm

மரம் பற்றிய காதல் கதை அருமை நன்றி ஐயா.
ayyasamy ram wrote:
மறுநாள் காலை ரியாஸ் ஒரு ஆட்டோவில் 100 மரக்கன்றுகளுடன் வந்திறங்கினான். மூவரையும் எழுப்பிவிட்டு ” வாங்கடா , ரோடுக்குப் போய் எல்லாருக்கும் இந்த மரக்கன்றுகளை இலவசமா கொடுக்கலாம் ..! ” என்றான்.
கோமாளி செல்வா
மேற்கோள் செய்த பதிவு: 1178695

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக