புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றே செய்க, நன்றே செய்க! Poll_c10இன்றே செய்க, நன்றே செய்க! Poll_m10இன்றே செய்க, நன்றே செய்க! Poll_c10 
87 Posts - 64%
heezulia
இன்றே செய்க, நன்றே செய்க! Poll_c10இன்றே செய்க, நன்றே செய்க! Poll_m10இன்றே செய்க, நன்றே செய்க! Poll_c10 
29 Posts - 21%
E KUMARAN
இன்றே செய்க, நன்றே செய்க! Poll_c10இன்றே செய்க, நன்றே செய்க! Poll_m10இன்றே செய்க, நன்றே செய்க! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
இன்றே செய்க, நன்றே செய்க! Poll_c10இன்றே செய்க, நன்றே செய்க! Poll_m10இன்றே செய்க, நன்றே செய்க! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
இன்றே செய்க, நன்றே செய்க! Poll_c10இன்றே செய்க, நன்றே செய்க! Poll_m10இன்றே செய்க, நன்றே செய்க! Poll_c10 
3 Posts - 2%
sram_1977
இன்றே செய்க, நன்றே செய்க! Poll_c10இன்றே செய்க, நன்றே செய்க! Poll_m10இன்றே செய்க, நன்றே செய்க! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
இன்றே செய்க, நன்றே செய்க! Poll_c10இன்றே செய்க, நன்றே செய்க! Poll_m10இன்றே செய்க, நன்றே செய்க! Poll_c10 
2 Posts - 1%
prajai
இன்றே செய்க, நன்றே செய்க! Poll_c10இன்றே செய்க, நன்றே செய்க! Poll_m10இன்றே செய்க, நன்றே செய்க! Poll_c10 
1 Post - 1%
Guna.D
இன்றே செய்க, நன்றே செய்க! Poll_c10இன்றே செய்க, நன்றே செய்க! Poll_m10இன்றே செய்க, நன்றே செய்க! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றே செய்க, நன்றே செய்க! Poll_c10இன்றே செய்க, நன்றே செய்க! Poll_m10இன்றே செய்க, நன்றே செய்க! Poll_c10 
423 Posts - 76%
heezulia
இன்றே செய்க, நன்றே செய்க! Poll_c10இன்றே செய்க, நன்றே செய்க! Poll_m10இன்றே செய்க, நன்றே செய்க! Poll_c10 
75 Posts - 13%
mohamed nizamudeen
இன்றே செய்க, நன்றே செய்க! Poll_c10இன்றே செய்க, நன்றே செய்க! Poll_m10இன்றே செய்க, நன்றே செய்க! Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
இன்றே செய்க, நன்றே செய்க! Poll_c10இன்றே செய்க, நன்றே செய்க! Poll_m10இன்றே செய்க, நன்றே செய்க! Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
இன்றே செய்க, நன்றே செய்க! Poll_c10இன்றே செய்க, நன்றே செய்க! Poll_m10இன்றே செய்க, நன்றே செய்க! Poll_c10 
8 Posts - 1%
prajai
இன்றே செய்க, நன்றே செய்க! Poll_c10இன்றே செய்க, நன்றே செய்க! Poll_m10இன்றே செய்க, நன்றே செய்க! Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
இன்றே செய்க, நன்றே செய்க! Poll_c10இன்றே செய்க, நன்றே செய்க! Poll_m10இன்றே செய்க, நன்றே செய்க! Poll_c10 
6 Posts - 1%
sram_1977
இன்றே செய்க, நன்றே செய்க! Poll_c10இன்றே செய்க, நன்றே செய்க! Poll_m10இன்றே செய்க, நன்றே செய்க! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றே செய்க, நன்றே செய்க!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84938
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 01, 2015 5:16 am

வயது வந்தவர்களுக்கான வகுப்பு அது. ஆசிரியர் ஒருநாள் அவர்களுக்கு ஒரு வீட்டுப்பாடம் கொடுத்தார். ‘நீங்கள் மிக விரும்பும் ஒருவரிடம் போய் நீங்கள் அவரை மிகவும் விரும்புவதாகச் சொல்லவேண்டும். யாரிடம் நீங்கள் இதுவரை இந்த வார்த்தைகளைச் சொன்னதில்லையோ அவரிடம் சொல்லுங்கள். அல்லது யாரிடம் நீண்ட நாட்களாக இந்த வார்த்தைகளைச் சொல்ல வேண்டும் என்று நினைத்து ஆனால் சொல்லத் தயங்குகிறீர்களோ அவரிடம் போய் சொல்லுங்கள்’ என்பது தான் அந்த வீட்டுப் பாடம்.

இது என்ன பெரிய கஷ்டமான காரியமா என்று நமக்குத் தோன்றலாம். அந்த ஆசிரியரின் வகுப்பில் முக்கால்வாசிப்பேர் 35 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள். முன் தலைமுறையை சேர்ந்த ‘ஆண் என்பவன் தன் உணர்வுகளைக் காண்பித்துக் கொள்வது தவறு என்ற கொள்கையில் வளர்க்கப்பட்டவர்கள். உணர்வுகளை வெளிக்காட்டிக் கொள்வது அல்லது வாய்விட்டு அழுவது (என்ன பெண் மாதிரி அழுகிறாய்?) என்பது அவர்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாதது. சிலருக்கு இந்த வீட்டுப் பாடம் மனதில் ஒருவித பயத்தை உண்டாக்கியது.

அடுத்தமுறை வகுப்பு ஆரம்பிக்கும்போது ஆசிரியர் கேட்டார்: ‘உங்களுக்கு மிகவும் பிடித்தமானவர்களிடம் சென்று அவர்களை நீங்கள் விரும்புவதாகச் சொன்னபோது என்னவாயிற்று என்று உங்களில் யாராவது சொல்லத் தயாரா?’ என்று. அங்கிருந்த பெண்களில் யாரவது ஒருவர் எழுந்து ஏதாவது ஒரு அழுகை கதையைச் சொல்லுவார் என்று நினைத்திருந்த ஆசிரியைக்கு ஆண்களில் ஒருவர் கையைத் தூக்கியது வியப்பை அளித்தது.

அவர் மெதுவாக தன் நாற்காலியைவிட்டு எழுந்திருந்து வந்தார். ‘போனவாரம் இந்த வீட்டுப்பாடத்தை நீங்கள் கொடுத்தபோது எனக்கு உங்கள் மேல் மிகுந்த கோபம். எனக்கு. இந்த வார்த்தைகளைச் சொல்ல என்று எவருமில்லை என்பதுடன், இதெல்லாம் மிகவும் அந்தரங்கமான விஷயம். இதை ஒருவரிடம் சொல் என்று சொல்ல நீங்கள் யார்? என்று. ஆனால் நான் வீட்டிற்கு செல்லும் வழியில் என் மனசாட்சி என்னிடம் சொல்லியது: ‘உனக்குத் தெரியும், நீ யாரிடம் உங்களை நான் ரொம்ப நேசிக்கிறேன் என்று சொல்ல வேண்டும் என்று’

ஐந்து வருடங்களுக்கு முன் எனக்கும் என் தந்தைக்கும் இடையில் முடிவில்லாத ஒரு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அன்றிலிருந்து அது அப்படியே இருந்தது. குடும்ப நிகழ்வுகள் தவிர மற்ற நேரங்களில் இருவரும் ஒருவரையொருவர் பார்ப்பதையே தவிர்த்தோம். எதிர்பாராத சந்திப்பின் போதும் பேசுவதைத் தவிர்த்தோம். சென்ற வாரம் வகுப்பு முடிந்து வீட்டிற்குப் போவதற்குள், என் அப்பாவிடம் போய் நான் அவரை நேசிப்பதாகச் சொல்ல வேண்டும் தீர்மானித்தேன்.

விநோதமாக இருந்தாலும் உண்மையில் அந்த முடிவை எடுத்தவுடன் என் மனதில் இருக்கும் பாரம் இறங்கியதுபோல உணர்ந்தேன். காரிலிருந்து இறங்கியவுடன் வீட்டிற்குள் ஓடினேன். என் மனைவி உறங்கி விட்டாள். அவளை உலுக்கி எழுப்பி நான் செய்யவிருக்கும் காரியத்தை சொன்னேன். அவள் விருட்டென்று படுக்கையை விட்டு எழுந்து வந்து என்னை அப்படியே கட்டிக்கொண்டாள். எனது திருமண வாழ்க்கையில் முதன் முறையாக நான் அழுவதைப் பார்த்தாள். இரவு முழுவதும் இருவரும் விழித்திருந்தோம். காப்பி குடித்துக் கொண்டே நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.

அடுத்த நாள் காலையில் வெகு சீக்கிரம் எழுந்துவிட்டேன். மனம் முழுவதும் ஒரு பரபரப்பு அதனால் அதிகம் தூங்க முடியவில்லை. அலுவலகத்திலும் மிகவும் உற்சாகமாக எனது வேலைகளை துரிதமாக முடித்தேன். எனது தந்தையைக் கூப்பிட்டேன். ‘இன்றைக்கு அலுவலக வேலை முடிந்து இரவு நான் அங்கு வரலாமா? எனக்கு உங்களிடம் பேசவேண்டும்’ என்றேன். எனது தந்தை எரிச்சலுடன் ‘இப்போ என்ன?’ என்றார். ‘நான் அதிக நேரம் எடுத்துக் கொள்ளமாட்டேன்’ என்றவுடன் என்னைப் பார்க்க சம்மதித்தார்.

மாலை ஐந்து முப்பதுக்கு நான் எனது பெற்றோர்களின் வீட்டில் இருந்தேன்.காலிங் பெல்லை அழுத்திவிட்டு, என் தந்தை வந்து கதவைத் திறக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தபடி நின்றிருந்தேன். அம்மா வந்து திறந்துவிடக் கூடாதே என்ற பதட்டம் பரவியது என் உடலில். என் அதிர்ஷ்டம் என் அப்பாவே வந்து திறந்தார்.

நான் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. ஒரு காலை வீட்டினுள் வைத்தவன், ‘அப்பா நான் உங்களை நேசிக்கிறேன் என்பதைச் சொல்லவே இங்கு வந்தேன்’ என்றேன்.

என் வார்த்தைகளைக் கேட்டவுடன் என் அப்பாவிடம் மிகப் பெரிய மாறுதல். அவர் முகம் மென்மையாக மாறி அதிலுள்ள சுருக்கங்கள் எல்லாம் கரைந்து போவது போல அழத் தொடங்கினார். என் அருகில் வந்து என்னைத் தழுவிக்கொண்டு ‘நானும் உன்னை நேசிக்கிறேன், மகனே! ஆனால் அதை சொல்ல என்னால் முடியவில்லை’ என்றார்.

அந்த நிமிடம் எனக்கு ஒரு பொக்கிஷமாகத் தோன்றியது. நான் அவரது பிடியிலிருந்து என்னை விலக்கிக் கொள்ளவில்லை. என் அம்மா எங்களிருவரையும் பார்த்துவிட்டு கண்களில் கண்ணீருடன் நின்றார். நான் அவரைப் பார்த்து கை அசைத்தேன். நானும் என் அப்பாவும் அப்படியே சற்று நேரம் நின்றோம். நான் விடை பெற்றுக் கொண்டேன். மனதில் ஏற்பட்ட சந்தோஷத்திற்கு எல்லையேயில்லை!

நான் இப்போது சொல்ல வந்தது இது இல்லை. இந்த விஷயம் நடந்து இரண்டு நாட்களுக்கெல்லாம் என் தந்தைக்கு மாரடைப்பு வந்து மருத்துவ மனையில் நினைவற்றுப் படுத்திருக்கிறார். மீண்டு வருவாரா தெரியாது.

நான் உங்களுக்குச் சொல்லிக் கொள்வதெல்லாம் இது தான்: உடனடியாக செய்ய வேண்டிய வேலைகளை தள்ளிப் போடாதீர்கள். என் தந்தையிடம் அவரை நேசிப்பதை சொல்ல நாள் கடத்தியிருந்தால் ஒருவேளை சொல்லாமலேயே போயிருப்பேனோ? எனக்கு அதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்காமலேயே போயிருக்குமோ? செய்ய வேண்டியதைச் செய்ய நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் செய்ய வேண்டும் என்ற முடிவு எடுத்தவுடன் செய்து முடியுங்கள்’.

ரஞ்சனி நாராயணன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Dec 01, 2015 7:34 am

யதார்த்தமான உண்மை .
பல நேரங்களில் , சொல்ல வேண்டியதை ,
சொல்லவேண்டியவர்களிடம்
சொல்ல தயங்குவதும்
சொல்வதற்கு செல்லும் போது ,
காலம் மிகவும் கடந்துவிட்டது என்பதும்
நமக்கு நாமே விதித்துக் கொள்ளும் தண்டனை .

நல்ல பதிவு --ayyasami ram / ரஞ்சனி நாராயணன்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 01, 2015 11:13 am

அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாள்? நன்றி ஐயா.
ayyasamy ram wrote:
நான் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. ஒரு காலை வீட்டினுள் வைத்தவன், ‘அப்பா நான் உங்களை நேசிக்கிறேன் என்பதைச் சொல்லவே இங்கு வந்தேன்’ என்றேன்.
என் வார்த்தைகளைக் கேட்டவுடன் என் அப்பாவிடம் மிகப் பெரிய மாறுதல். அவர் முகம் மென்மையாக மாறி அதிலுள்ள சுருக்கங்கள் எல்லாம் கரைந்து போவது போல அழத் தொடங்கினார். என் அருகில் வந்து என்னைத் தழுவிக்கொண்டு ‘நானும் உன்னை நேசிக்கிறேன், மகனே! ஆனால் அதை சொல்ல என்னால் முடியவில்லை’ என்றார்.
மேற்கோள் செய்த பதிவு: 1177905

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 01, 2015 12:11 pm

அட்டகாசம் ராம் அண்ணா புன்னகை.............சூப்பர் பதிவு !............. இன்றே செய்க, நன்றே செய்க! 3838410834 இன்றே செய்க, நன்றே செய்க! 3838410834 இன்றே செய்க, நன்றே செய்க! 3838410834

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக