உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்by ayyasamy ram Today at 10:10 am
» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Today at 10:04 am
» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ayyasamy ram Today at 9:47 am
» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Today at 9:46 am
» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Today at 9:45 am
» கடவுளின் ஆசி – கற்பனைக் கதை
by ayyasamy ram Today at 9:37 am
» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Today at 9:36 am
» மச்சு பிச்சு
by ayyasamy ram Today at 9:35 am
» அழும் கடலாமை
by ayyasamy ram Today at 9:35 am
» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Today at 9:33 am
» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Today at 9:32 am
» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Today at 9:31 am
» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:30 am
» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am
» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 10/08/2022
by mohamed nizamudeen Today at 8:02 am
» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Today at 5:38 am
» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 4:50 am
» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Today at 4:37 am
» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Today at 4:35 am
» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Today at 4:31 am
» வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம்
by ayyasamy ram Today at 4:23 am
» விரல் முத்திரை - பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» அறிவியல் அறிவோம்
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» வட துருவப் பனிப்பிரதேசம்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» ஒட்டகச்சிவிங்கி
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» உலகம் முழுவதும் கல்வி
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கண்ணனுக்கு கொழுக்கட்டை
by ayyasamy ram Yesterday at 7:45 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்காவின் மிக நீளமான கடற்படைக் கப்பல்!
by mohamed nizamudeen Yesterday at 6:54 pm
» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by கண்ணன் Yesterday at 3:36 pm
» மொக்க படத்திற்கு விசில் சத்தம் காதக் கிழிக்குதே…!
by ayyasamy ram Yesterday at 9:58 am
» ஒரே வித சிரிப்புதான்…!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» செக்கில் ஆட்டிய மண்ணென்ணை!!
by ayyasamy ram Yesterday at 9:52 am
» வடை திருடிய காகம்!
by ayyasamy ram Yesterday at 9:49 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» தினம் ஒரு மூலிகை – செந்நாயுருவி
by ayyasamy ram Yesterday at 9:42 am
» சுதந்திர கொடி ஏற்ற வீடு வேணுமாம்...!
by T.N.Balasubramanian Yesterday at 9:40 am
» பரத் நடித்த லாஸ்ட் 6 அவர்ஸ் திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 9:40 am
» மன அழுத்தத்தால் வந்த தற்கொலை எண்ணம்
by ayyasamy ram Yesterday at 9:34 am
» மீண்டும் விஜய் ஜோடியாக த்ரிஷா
by ayyasamy ram Yesterday at 9:33 am
» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by T.N.Balasubramanian Yesterday at 9:32 am
» காமன்வெல்த் போட்டி நிறைவு
by T.N.Balasubramanian Yesterday at 9:30 am
» சீதாராமம்- சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 9:29 am
» இந்திரனுக்கு ஒரு குகைக்கோயில்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» திருமண வரம் அருளும் திருப்பழனம் ஈசன்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» அர்த்தநாரீஸ்வரரை தாங்கும் ஆதிசேஷன்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» ஆச்சரியமூட்டும் அம்மன்கள்
by ayyasamy ram Yesterday at 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
கண்ணன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
Rajana3480 |
| |||
selvanrajan |
| |||
heezulia |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தூது செல்வாய் வெண்ணிலவே !
5 posters
தூது செல்வாய் வெண்ணிலவே !
நினைவெல்லாம் அவளாக நித்தமும் தவிக்கின்றேன்
...நித்திரை தொலைத்துவிட்டேன் நிம்மதி இழந்துவிட்டேன்
மனையிலுள்ள சுவரெல்லாம் மங்கையவள் பேரெழுதி
...மதியிழந்து நிற்கின்றேன் மாற்றுவழி அறியாமல்
எனையாளும் தெய்வங்கள் என்னைக் கைவிட்டதுவே
...என்னுயிரை மாய்த்திடவே எண்ணுகின்ற வேளையிலே
கனைகுரல் பல்லியொன்று காதோரம் சொல்லியதே
...காதல் நிறைவேற தூதனுப்பு என்றதுவே !
சுந்தரனாம் சூரியனைத் தூதனுப்ப முடிவெடுத்தேன்
...சுட்டுவிடும் கிரணங்கள் அவனுக்கு இருப்பதனால்
இந்திரனைத் தூதனுப்ப முடிவெடுத்த வேளையிலே
...இராமாயண அகலிகை நினைவுக்கு வந்ததுவே
தொந்தியுள்ள கணபதியைத் தூதனுப்ப எண்ணுகையில்
...தாரமற்ற கடவுளுக்குத் தகுதியில்லை என்பதனால்
விந்தைமிகு வெண்ணிலவே உன்னைத் தேர்ந்தெடுத்தேன்
...விரைந்துவா வெண்ணிலவே தூதுசெல்ல விரைந்துவா !
அவளழகை எடுத்துரைக்க வெண்ணிலாவே !
...ஆயிரம்நா போதாது வெண்ணிலாவே !
குவளைமலர்க் கண்ணழகி வெண்ணிலாவே !
...குங்குமத்தின் பொட்டழகி வெண்ணிலாவே !
துவள்கின்ற இடையழகி வெண்ணிலாவே !
...தும்பைப்பூ சிரிப்பழகி வெண்ணிலாவே !
பவளம்போல் உதட்டழகி வெண்ணிலாவே !
...பார்ப்பதற்கு ரம்பையடி வெண்ணிலாவே !
உடல்மெலிந்து போனதடி வெண்ணிலாவே !
...ஊணுறக்கம் இல்லையடி வெண்ணிலாவே !
கடலன்ன காமத்தால் வெண்ணிலாவே !
...கருத்தழிந்து போனேனே வெண்ணிலாவே !
திடமாகச் சொல்லுகிறேன் வெண்ணிலாவே !
...திருமணமும் அவளுடனே வெண்ணிலாவே !
மடலேறும் என்முடிவை வெண்ணிலாவே !
...மங்கையிடம் சொல்லிவிடு வெண்ணிலாவே !
வஞ்சமிலா என்இதயம் வெண்ணிலாவே ! – அந்த
...வஞ்சியிடம் இருக்குதடி வெண்ணிலாவே !
கெஞ்சினால் மிஞ்சுகிறாள் வெண்ணிலாவே ! – அவள்
...கேட்பதெல்லாம் தருகின்றேன் வெண்ணிலாவே !
தஞ்சமென உனையடைந்தேன் வெண்ணிலாவே ! – என்
...தாபத்தை சொல்லிவிடு வெண்ணிலாவே !
மஞ்சத்தில் அவளுடனே வெண்ணிலாவே ! – நான்
...மகிழ்ந்திடவே துணைநிற்பாய் வெண்ணிலாவே !
...நித்திரை தொலைத்துவிட்டேன் நிம்மதி இழந்துவிட்டேன்
மனையிலுள்ள சுவரெல்லாம் மங்கையவள் பேரெழுதி
...மதியிழந்து நிற்கின்றேன் மாற்றுவழி அறியாமல்
எனையாளும் தெய்வங்கள் என்னைக் கைவிட்டதுவே
...என்னுயிரை மாய்த்திடவே எண்ணுகின்ற வேளையிலே
கனைகுரல் பல்லியொன்று காதோரம் சொல்லியதே
...காதல் நிறைவேற தூதனுப்பு என்றதுவே !
சுந்தரனாம் சூரியனைத் தூதனுப்ப முடிவெடுத்தேன்
...சுட்டுவிடும் கிரணங்கள் அவனுக்கு இருப்பதனால்
இந்திரனைத் தூதனுப்ப முடிவெடுத்த வேளையிலே
...இராமாயண அகலிகை நினைவுக்கு வந்ததுவே
தொந்தியுள்ள கணபதியைத் தூதனுப்ப எண்ணுகையில்
...தாரமற்ற கடவுளுக்குத் தகுதியில்லை என்பதனால்
விந்தைமிகு வெண்ணிலவே உன்னைத் தேர்ந்தெடுத்தேன்
...விரைந்துவா வெண்ணிலவே தூதுசெல்ல விரைந்துவா !
அவளழகை எடுத்துரைக்க வெண்ணிலாவே !
...ஆயிரம்நா போதாது வெண்ணிலாவே !
குவளைமலர்க் கண்ணழகி வெண்ணிலாவே !
...குங்குமத்தின் பொட்டழகி வெண்ணிலாவே !
துவள்கின்ற இடையழகி வெண்ணிலாவே !
...தும்பைப்பூ சிரிப்பழகி வெண்ணிலாவே !
பவளம்போல் உதட்டழகி வெண்ணிலாவே !
...பார்ப்பதற்கு ரம்பையடி வெண்ணிலாவே !
உடல்மெலிந்து போனதடி வெண்ணிலாவே !
...ஊணுறக்கம் இல்லையடி வெண்ணிலாவே !
கடலன்ன காமத்தால் வெண்ணிலாவே !
...கருத்தழிந்து போனேனே வெண்ணிலாவே !
திடமாகச் சொல்லுகிறேன் வெண்ணிலாவே !
...திருமணமும் அவளுடனே வெண்ணிலாவே !
மடலேறும் என்முடிவை வெண்ணிலாவே !
...மங்கையிடம் சொல்லிவிடு வெண்ணிலாவே !
வஞ்சமிலா என்இதயம் வெண்ணிலாவே ! – அந்த
...வஞ்சியிடம் இருக்குதடி வெண்ணிலாவே !
கெஞ்சினால் மிஞ்சுகிறாள் வெண்ணிலாவே ! – அவள்
...கேட்பதெல்லாம் தருகின்றேன் வெண்ணிலாவே !
தஞ்சமென உனையடைந்தேன் வெண்ணிலாவே ! – என்
...தாபத்தை சொல்லிவிடு வெண்ணிலாவே !
மஞ்சத்தில் அவளுடனே வெண்ணிலாவே ! – நான்
...மகிழ்ந்திடவே துணைநிற்பாய் வெண்ணிலாவே !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482
Re: தூது செல்வாய் வெண்ணிலவே !
மடல் ஒன்றை எழுதி
மங்கையிடம் சேர்க்க சொல்லி
மதி மகளை தூதனுப்பும்
மன்னனே ... கவிதை ..அருமை..
மங்கையிடம் சேர்க்க சொல்லி
மதி மகளை தூதனுப்பும்
மன்னனே ... கவிதை ..அருமை..
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மதிப்பீடுகள் : 312
Re: தூது செல்வாய் வெண்ணிலவே !
நன்றி ! செந்தில் குமார் .
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482
Re: தூது செல்வாய் வெண்ணிலவே !
கவிதை , காதலன் ஒருவன் , வெண்ணிலவைக் காதலியிடம் தூது அனுப்புவதுபோல் அமைந்துள்ளது. ஆதலால் தங்கள் படத்தில் காதலிக்குப் பதிலாகக் , காதலன் இருந்தால் பொருத்தமாக இருக்கும் .
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482
Re: தூது செல்வாய் வெண்ணிலவே !
அருமை!
ரமணி
ரமணி
ரமணி- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
மதிப்பீடுகள் : 634
Re: தூது செல்வாய் வெண்ணிலவே !
வெண்ணிலாவே,வெண்ணிலாவே ஜெதீஸ் அருமையோ அருமை நன்றி.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797
Re: தூது செல்வாய் வெண்ணிலவே !
ரமணி ,பழ . முத்து ராமலிங்கம் ஆகியோருக்கு நன்றி .
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|