புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்ஷூரன்ஸ்: கிரேஸ் பீரியடில் க்ளெய்ம் கிடைக்குமா? Poll_c10இன்ஷூரன்ஸ்: கிரேஸ் பீரியடில் க்ளெய்ம் கிடைக்குமா? Poll_m10இன்ஷூரன்ஸ்: கிரேஸ் பீரியடில் க்ளெய்ம் கிடைக்குமா? Poll_c10 
366 Posts - 49%
heezulia
இன்ஷூரன்ஸ்: கிரேஸ் பீரியடில் க்ளெய்ம் கிடைக்குமா? Poll_c10இன்ஷூரன்ஸ்: கிரேஸ் பீரியடில் க்ளெய்ம் கிடைக்குமா? Poll_m10இன்ஷூரன்ஸ்: கிரேஸ் பீரியடில் க்ளெய்ம் கிடைக்குமா? Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
இன்ஷூரன்ஸ்: கிரேஸ் பீரியடில் க்ளெய்ம் கிடைக்குமா? Poll_c10இன்ஷூரன்ஸ்: கிரேஸ் பீரியடில் க்ளெய்ம் கிடைக்குமா? Poll_m10இன்ஷூரன்ஸ்: கிரேஸ் பீரியடில் க்ளெய்ம் கிடைக்குமா? Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
இன்ஷூரன்ஸ்: கிரேஸ் பீரியடில் க்ளெய்ம் கிடைக்குமா? Poll_c10இன்ஷூரன்ஸ்: கிரேஸ் பீரியடில் க்ளெய்ம் கிடைக்குமா? Poll_m10இன்ஷூரன்ஸ்: கிரேஸ் பீரியடில் க்ளெய்ம் கிடைக்குமா? Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
இன்ஷூரன்ஸ்: கிரேஸ் பீரியடில் க்ளெய்ம் கிடைக்குமா? Poll_c10இன்ஷூரன்ஸ்: கிரேஸ் பீரியடில் க்ளெய்ம் கிடைக்குமா? Poll_m10இன்ஷூரன்ஸ்: கிரேஸ் பீரியடில் க்ளெய்ம் கிடைக்குமா? Poll_c10 
25 Posts - 3%
prajai
இன்ஷூரன்ஸ்: கிரேஸ் பீரியடில் க்ளெய்ம் கிடைக்குமா? Poll_c10இன்ஷூரன்ஸ்: கிரேஸ் பீரியடில் க்ளெய்ம் கிடைக்குமா? Poll_m10இன்ஷூரன்ஸ்: கிரேஸ் பீரியடில் க்ளெய்ம் கிடைக்குமா? Poll_c10 
6 Posts - 1%
sugumaran
இன்ஷூரன்ஸ்: கிரேஸ் பீரியடில் க்ளெய்ம் கிடைக்குமா? Poll_c10இன்ஷூரன்ஸ்: கிரேஸ் பீரியடில் க்ளெய்ம் கிடைக்குமா? Poll_m10இன்ஷூரன்ஸ்: கிரேஸ் பீரியடில் க்ளெய்ம் கிடைக்குமா? Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
இன்ஷூரன்ஸ்: கிரேஸ் பீரியடில் க்ளெய்ம் கிடைக்குமா? Poll_c10இன்ஷூரன்ஸ்: கிரேஸ் பீரியடில் க்ளெய்ம் கிடைக்குமா? Poll_m10இன்ஷூரன்ஸ்: கிரேஸ் பீரியடில் க்ளெய்ம் கிடைக்குமா? Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
இன்ஷூரன்ஸ்: கிரேஸ் பீரியடில் க்ளெய்ம் கிடைக்குமா? Poll_c10இன்ஷூரன்ஸ்: கிரேஸ் பீரியடில் க்ளெய்ம் கிடைக்குமா? Poll_m10இன்ஷூரன்ஸ்: கிரேஸ் பீரியடில் க்ளெய்ம் கிடைக்குமா? Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
இன்ஷூரன்ஸ்: கிரேஸ் பீரியடில் க்ளெய்ம் கிடைக்குமா? Poll_c10இன்ஷூரன்ஸ்: கிரேஸ் பீரியடில் க்ளெய்ம் கிடைக்குமா? Poll_m10இன்ஷூரன்ஸ்: கிரேஸ் பீரியடில் க்ளெய்ம் கிடைக்குமா? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்ஷூரன்ஸ்: கிரேஸ் பீரியடில் க்ளெய்ம் கிடைக்குமா?


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Nov 15, 2015 8:26 pm

இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தபிறகு அந்த பாலிசிக்கான பிரீமியத்தை ஒவ்வொரு முறையும் குறித்த காலத்தில் செலுத்துவது அவசியம். சில தவிர்க்க முடியாத காரணங்களினால் சிலரால் குறித்த காலத்துக்குள் பிரீமியம் செலுத்த முடியாமல் போக வாய்ப்புண்டு. அது மாதிரியான சமயங்களில் பாலிசிதாரர் கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பிரீமியம் கட்டுவதற்கு குறிப்பிட்ட நாட்கள் அவகாசம் அளிக்கப்படும். இந்த சலுகைக் காலம்தான் கிரேஸ் பீரியட். இந்த கிரேஸ் பீரியட் காலத்தில் பாலிசிதாரர்களுக்கு அசம்பாவிதம் நிகழ்ந்தால், அவருக்கு க்ளெய்ம் கிடைக்குமா என்கிற கேள்வி பல பாலிசிதாரர்களின் மனதில் இருக்கிறது. இந்த கேள்விக்கான பதில் என்ன?
இன்ஷூரன்ஸ்: கிரேஸ் பீரியடில் க்ளெய்ம் கிடைக்குமா? P19a
ஏன் கிரேஸ் பீரியட்?

காப்பீட்டுக்கான பிரீமியத்தை பலர் கடைசி தேதிக்குள் செலுத்தத் தவறி விடுகிறார்கள். அதாவது, பிரீமியம் கட்டும் தேதியை மறந்துவிடுவது, வெளியூருக்குச் சென்றுவிடுவது, உடல்நலம் பாதிப்படைவது போன்ற பல்வேறு காரணங்களினால் சிலர் குறித்த காலத்துக்குள் பிரீமியம் செலுத்த முடியாமல் போக வாய்ப்புள்ளது. குறிப்பிட்ட தேதியில் பிரீமியம் செலுத்த முடியவில்லை எனில், பாலிசி காலாவதி ஆகிவிடும். இதனால் பாலிசிதாரர்கள் இழப்பீடு பெற முடியாத சூழ்நிலை ஏற்படும். இதைத் தவிர்ப்பதற்காகத்தான் கிரேஸ் பீரியட்.

கிரேஸ் பீரியடுக்கான விதிமுறைகள் ஹெல்த் இன்ஷூரன்ஸ், லைஃப் இன்ஷூரன்ஸ் என ஒவ்வொரு இன்ஷூரன்ஸுக்கும் மாறுபடும்.

எவ்வளவு நாள்?

கிரேஸ் பீரியட் என்பது 15, 30 நாட்கள் என ஒவ்வொரு பாலிசிக்கும் வித்தியாசப்படும். கிரேஸ் பீரியட் கால அளவை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் முடிவு செய்யும். இந்த விவரம் பாலிசி பத்திரத்தில் இருக்கும். எனவே, பாலிசி வாங்கும்போதே கிரேஸ் பீரியடின் கால அளவைத் தெரிந்துகொள்வது முக்கியம்.

பிரதி மாதம், காலாண்டு, அரையாண்டு, வருடத்துக்கு ஒருமுறை எப்படி பிரீமியம் செலுத்தினாலும் கிரேஸ் பீரியட் தரப்படும். ஒவ்வொரு மாதமும் பிரீமியம் செலுத்தும் முறையில் மட்டும் கிரேஸ் பீரியட் 15 நாட்கள் மட்டுமே.



லைஃப் இன்ஷூரன்ஸ்!

லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசியில் கிரேஸ் பீரியட் க்ளெய்ம் நடைமுறைகள் குறித்து பார்தி ஆக்ஸா லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் சி.எல்.பரத்வாஜிடம் கேட்டோம்.

“லைஃப் இன்ஷூரன்ஸில் எண்டோவ்மென்ட் பாலிசி, யூலிப் பாலிசி, டேர்ம் பாலிசி என பலவகையான பாலிசிகள் உள்ளன. அதாவது, எண்டோவ்மென்ட் பாலிசி, டேர்ம் பாலிசிகளுக்கு கிரேஸ் பீரியடில் நடக்கும் அசம்பாவிதங்களுக்கு க்ளெய்ம் கிடைக்கும்.

ஆனால், யூலிப் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகையில் ஒரு பகுதி இன்ஷூரன்ஸ் பாலிசியின் கவரேஜுக்கும், மற்றொரு பகுதி பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கும் ஒதுக்கப்படுகிறது. இதில் இன்ஷூரன்ஸில் கவரேஜின் முழுத் தொகை கிடைத்துவிடும். மேலும், பங்குச் சந்தை முதலீடுகளின் மூலமாகக் கிடைக்கும் மதிப்பும் (அன்றைய மார்க்கெட் நிலவரத்துக்கேற்ப) கிடைக்கும். கிரேஸ் பீரியடில் க்ளெய்ம் வழங்க வேண்டும் என்பது ஐஆர்டிஏவின் விதிமுறை. எனவே, க்ளெய்ம் கட்டாயம் கிடைக்கும்” என்றார்.

ஹெல்த் இன்ஷூரன்ஸ்!

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில் கிரேஸ் பீரியடில் க்ளெய்ம் கிடைக்குமா என்பது குறித்து நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் சேகர் சம்பத்திடம் கேட்டோம்.

“ஹெல்த் இன்ஷூரன்ஸை பொறுத்தவரை, கிரேஸ் பீரியடில் எந்த வகையிலும் க்ளெய்ம் கிடைக்காது. ஏனெனில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி ஒரு வருட பாலிசியாகும். இந்த பாலிசியை பாலிசிக் காலம் முடிந்த அதே நிறுவனத்தில் தொடர வேண்டும் என்ற அவசியமும் இல்லை. எனவே, கிரேஸ் பீரியடில் க்ளெய்ம் கிடைக்க வாய்ப்பில்லை. ஆனால், ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில் இருக்கும் கூடுதல் சலுகைகளான நோ க்ளெய்ம் போனஸ், காத்திருப்புக் காலம், ஏற்கெனவே உள்ள நோய்களுக்கான கவரேஜ் ஆகியவை கிரேஸ் பீரியடில் பிரீமியம் செலுத்தி பாலிசியைப் புதுப்பித்துக் கொள்ளும்போது அப்படியே தொடரும்.

உதாரணமாக, ஒரு நிறுவனத்தில் மூன்று வருடமாக ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி வைத்திருக்கிறார் ஒருவர். நான்காவது வருடத்துக்கான பிரீமியத்தைக் குறிப்பிட்ட தேதிக்குள் அவரால் செலுத்த முடியவில்லை. அந்த சமயத்தில் அவருக்கு விபத்து அல்லது ஏதாவது உடல்நலம் பாதிப்படைகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த சமயத்தில் அவருக்கு க்ளெய்ம் கிடைக்காது. விபத்து நிகழ்ந்த அடுத்த நாள் அவர் பிரீமியம் செலுத்தினால்கூட அந்த க்ளெய்ம் கிடைக்காது.

ஹெல்த் இன்ஷூரன்ஸில் கிரேஸ் பீரியட் சமயத்தில் கேன்சர், மூட்டு சார்ந்த பிரச்னை மற்றும் இதுபோன்ற குறிப்பிட்ட நோய்களுக்கு க்ளெய்ம் கிடைக்கும். ஏனெனில் இந்த நோய்கள் ஒரே நாளில் வந்துவிடாது. எனவே, அந்த நோய்க்கு க்ளெய்ம் கிடைக்கும்” என்றார்.



கிரேஸ் பீரியட் என்பது பாலிசி தாரருக்கு தரப்படும் கூடுதல் சலுகைக் காலம்தான். எனவே, கிரேஸ் பீரியடில் பிரீமியம் செலுத்தலாம் என நினைப்பதே தவறு. ஏனெனில், கிரேஸ் பீரியட் என்பது அதிகபட்சம் 30 நாட்கள்தான்.

சிலர் ஒரு மாத கால அவகாசம் இருக்கிறது என நினைத்து 31-வது நாள் பிரீமியம் செலுத்தப் போவார்கள். அந்த சமயத்தில் பாலிசி காலாவதி ஆகியிருக்கும். இதனால் மீண்டும் புது பாலிசி எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். இதனால் மீண்டும் காத்திருப்புக் காலத்தை கடக்க வேண்டியிருக்கும்.

எனவே, தவிர்க்க முடியாத காரணங்கள் இருந்தால் மட்டுமே, கிரேஸ் பீரியடில் பிரீமியம் செலுத்தலாம். மற்ற நேரங்களில் குறிப்பிட்ட தேதியில் பிரீமியம் செலுத்துவது நல்லது.

லைஃப் இன்ஷூரன்ஸை பொறுத்த வரை, கிரேஸ் பீரியட் சமயத்தில் க்ளெய்ம் வரும்போது இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் ஏன் குறிப்பிட்ட நேரத்தில் பிரீமியம் செலுத்தவில்லை என்ற கேள்வியை எழுப்ப வாய்ப்புள்ளது. இதற்கு சரியான பதில் தராதபட்சத்தில் க்ளெய்ம் கிடைக்க தாமதமாகலாம்.

இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதே எதிர்பாராத நேரங்களில் ஏதாவது அசம்பாவிதம் நிகழும்போது நம் குடும்பத்தைக் காத்துக் கொள்வதற்காகத் தான். இதற்கான பிரிமீயத்தை குறித்த காலத்துக்குள் கட்டாமல் போவதால், எதிர்காலத்தில் குடும்ப உறுப்பினர்கள் கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.

எனவே, கிரேஸ் பீரியட் காலத்தை மனதில் கொள்ளாமல், குறித்த காலத்திலேயே இன்ஷூரன்ஸுக்கான பிரீமியத்தைக் கட்டிவிடுவது நல்லது.

முதலீட்டாளர்களுக்கு சேவை மையம்!

பொருளாதார முன்னேற்றத்துக்கு முக்கிய தேவையாகக் கருதப்படுவது முதலீடு. பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றுவதை சந்தைக் கட்டுப்பாட்டு வாரியமான செபி தனது முக்கிய கடமையாக நினைக்கிறது.

எனவே, புதிய பங்கு வெளியீடு, கமாடிட்டி டெரிவேட்டிவ் உள்பட சந்தை சார்ந்த முதலீட்டாளர்களின் தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் அளிக்கும் வகையில் ஒரு சேவை மையத்தை அமைக்க செபி திட்டமிட்டுள்ளது. முதலீட்டாளர்களுக்கு உதவும் வகையில் இருக்கும் இந்த சேவை மையத்தை அமைக்க, பிபிஒ மற்றும் கால்சென்டர் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

நன்றி -நாணய விகடன்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Nov 16, 2015 4:53 am

சிறந்த பதிவு நன்றி



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக