உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் by ayyasamy ram Today at 2:55 pm
» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by ayyasamy ram Today at 2:48 pm
» சிறுவர்களுக்கான கவிதைகள் (பாம்பு & எதிர்பார்ப்புகள்)
by ayyasamy ram Today at 10:59 am
» விலங்குகளின் நடை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 10:58 am
» காலம் கற்றுக் கொடுக்கும் ‘பாடம்’
by ayyasamy ram Today at 9:36 am
» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Today at 7:07 am
» SSLV: திடீரென கட் ஆன சிக்னல்; தோல்விக்கு காரணம் என்ன?
by ayyasamy ram Today at 7:02 am
» இந்திய வம்சாவளி அழகி தேர்வு
by ayyasamy ram Today at 6:27 am
» ஜம்பு மகரிஷி - படம் விரைவில் வெளியாகிறது
by ayyasamy ram Today at 6:19 am
» தங்கப்பல்- ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:08 am
» வெடிக்கப் போகிறது -ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:05 am
» தெளிவு-ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:02 am
» மிர்சி சிவா படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 5:57 am
» சூர்யா எடுக்கும் புதிய முயற்சி.. பாராட்டும் ரசிகர்கள்
by ayyasamy ram Today at 5:55 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/08/2022
by mohamed nizamudeen Yesterday at 5:45 pm
» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:50 pm
» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Yesterday at 3:48 pm
» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Yesterday at 3:47 pm
» ஆடித்தள்ளுபடி!
by ayyasamy ram Yesterday at 3:46 pm
» பொறுமை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» குட்டி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:44 pm
» நிறைகுடம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:43 pm
» அப்போதான் ஆணுக்கு சுதந்திரம்!
by ayyasamy ram Yesterday at 11:07 am
» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by ayyasamy ram Yesterday at 11:02 am
» கருமேகங்கள் கலைகின்றன
by Dr.S.Soundarapandian Yesterday at 9:25 am
» உடல் நலக்குறைவு
by Dr.S.Soundarapandian Yesterday at 9:22 am
» தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:19 am
» நடிகை வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Yesterday at 8:29 am
» ரத்தம்
by ayyasamy ram Yesterday at 8:27 am
» மாயத்திரை
by ayyasamy ram Yesterday at 8:26 am
» நிதர்சனமான உண்மை!
by ayyasamy ram Yesterday at 5:15 am
» சதுரங்கத்தில் ராஜா இல்லேன்னா ராணிக்கு அதிகாரம் இல்லை… அதுதான் மேட்டரு…
by ayyasamy ram Yesterday at 4:21 am
» கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய லெஸ்பியன் ஜோடி படம்...! நிழல் கதைகளும் ...! நிஜ கதையும்...!
by ayyasamy ram Yesterday at 4:16 am
» அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 4:09 am
» விமானம் தாங்கி போர்க்கப்பல், நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்
by ayyasamy ram Yesterday at 4:03 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Yesterday at 4:01 am
» ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னது -செய்தது …
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:14 pm
» இறைவனைக் கண்டுவிட்டால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பெண்கள் பயன்படுத்தும் அர்த்தம் உள்ள வார்த்தைகள்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:50 pm
» பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது...!-
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:48 pm
» பார்வை சரியில்லை...!!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:42 pm
» சாணக்கியன் சொல்
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:40 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:38 pm
» வாழ்க்கையின் ரகசியம்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:37 pm
» தினம் ஒரு மூலிகை- கொடிக்கள்ளி
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:09 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
» நூற்றுக்கணக்கான வழிகளில் அருள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
» ஆத்மார்த்தமாக அழைத்தால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:06 am
» எல்லாமே கடவுள்தான்!
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:05 am
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
selvanrajan |
| |||
heezulia |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்!
+3
பழ.முத்துராமலிங்கம்
M.Jagadeesan
சாமி
7 posters
கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்!
First topic message reminder :
கி.மு., கி.பி (கிறித்துவுக்கு முன்; கிறித்துவுக்கு பின்) வேண்டாம்...................... தி.மு., தி.பி (திருவள்ளுவருக்கு முன்; திருவள்ளுவருக்குப் பின்) எனச் சொல்வோம்

ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டா? - வ.வேம்பையன் எழுதிய கட்டுரை
நம் வாழ்வில் திரும்பப் பெற முடியாதவை மூன்று. ஒன்று காலம். மற்றவை மானம். உயிர். குடும்பம். குமுகாயம். ஊர், நகர், நாடு, உலகம் பற்றிய நிகழ்ச்சிகளைக் கணக்கிடுவதற்குக் கால அளவை இன்றியமையாத ஒன்றாகிறது.
'நாளென ஒன்று போல் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்
என்ற குறள் மூலமும் காலம் அறிதல் என்ற அதிகாரத்தின் வழியும் காலத்தின் அருமையைத் திருவள்ளுவர் உணர்த்துகிறார்.
காலத்தைக் கணக்கிடுவதில் இத்துணைக் கவனம் செலுத்திய தமிழர்கள் வாழ்க்கை, வரலாற்று நிகழ்ச்சிகளைத் தமிழ்மொழி, தமிழ் இனம், தமிழ் நாடு ஆகியவற்றுக்குப் பொதுவான தொடர் ஆண்டுக்கணக்கால் குறிப்பிடும் வழக்கத்தைப் பின்பற்றவில்லை என்பது வியப்பாக இருக்கிறது; வருத்தம் தருகிறது.
இந்தச் சூழ்நிலையையும் தமிழர்களிடம் மண்டிக் கிடந்த கடவுள், மதம், சாதி,மூட நம்பிக்கைச் செல்வாக்கையும் அரசர்களிடம் பெற்றுள்ள நெருக்கத்தையும் பயன்படுத்திப் 'பிரபவ முதல் 'அட்சய வரை உள்ள 60 ஆண்டு முறையைப் புகுத்திவிட்டது ஆரியம்.
அறுபது ஆண்டுகளின் பெயர்களில் ஒன்று கூடத் தமிழ் இல்லை. 60 ஆண்டுகள் பற்சக்கர முறையில்இருப்பதால் 60 ஆண்டுகளுக்கு மேல் உள்ள காலத்தைக் கணக்கிடுவதற்கு உதவியாகவும் இல்லை. அதற்கு வழங்கும் கதையோ ஆபாசமாகவே இருக்கிறது. அந்தக் கதை வருமாறு˜
கண்ணனும் நாரதரும் கலவி செய்து பெற்றெடுத்த குமாரர்கள்தாம் 60 தமிழ் வருடங்கள் என்பது கதை. எல்லாரும் குமரர்கள்; குமரியே இல்லை. ஆண்டுக்கதையிலும் ஆண் ஆதிக்கமே! ஆணும் ஆணும் கலவி செய்தால் பிள்ளை பிறக்குமா? 'எய்ட்சு (ஹனைள) நோய் பிறக்குமா?
இந்தக் கதையே அருவருக்கத்தக்கது; ஆபாசமானது; அறிவுக்கும் அறிவியலுக்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்தம் இல்லாதது; கருத்துக்கும் காலத்துக்கும் ஒத்துவராதது; மானமும் அறிவும் உள்ள மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாதது.
இந்த 60 ஆண்டு முறையால் தமிழர் மொழி, மரபு, மானம், பண்பு, வாழ்வு முதலியவற்றுக்கு ஏற்பட்டுள்ள அழிவும் இழிவும் எண்ணிப்பார்த்து, உணர்ந்து தெளிந்த தமிழ்அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921 ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில்தமிழ்க் கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடிய மாநாட்டில் ஆராய்ந்தார்கள். பேராசிரியர் கா. நமச்சிவாயர் அந்த மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.
திருவள்ளுவர் இயேசு கிறித்துப் பிறப்பதற்கு 31 ஆண்டுகள் முன்பு பிறந்தவர் என்றும் அவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது என்றும் அதையே தமிழ்ஆண்டு எனக் கொள்வது என்றும் முடிவு செய்தார்கள்.
இந்த முடிவு செய்தவர்களில் தலையான தமிழ் அறிஞர்கள் தமிழ்க் கடல் மறைமலை அடிகள், தமிழ்த்தென்றல் திரு.வி. கலியாண சுந்தரனார், தமிழ்க்காவலர் கா. சுப்பிரமணியப் பிள்ளை, சைவப்பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் ஆவார்கள்.
திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை; இறுதி மாதம் மார்கழி; புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள். கிழமைகள் வழக்கில் உள்ளவை. திருவள்ளுவர் காலம் கி.மு. 31 எனவே, ஆங்கில ஆண்டுடன் 31 ஐக் கூட்டினால் வருவது திருவள்ளுவர் ஆண்டு. 2007 + 31 = 2038
தமிழ் நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்று 1971 முதல் தமிழ் நாடு அரசு நாட்குறிப்பிலும் 1972 முதல் தமிழ் நாடு அரசிதழிலும் 1981 முதல் தமிழ் நாடு அரசின் அனைத்து அலுவல்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது.
தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் தை மாதம் முதல் நாள்
பழந்தமிழகத்தில் ஆண்டுத் தொடக்கம் தை மாதமாக இருந்தது. பின்னர் ஆவணி, ஆண்டின் முதல் மாதமாகக் கொள்ளப்பட்டது. பின்பு சித்திரை ஆண்டின் முதல் மாதமாக மாற்றப்பட்டது.
இழந்த தொன்மைச் சிறப்புக்குரிய தை மாதம் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்பதை நடைமுறைப் படுத்தி வருகின்றோம்.
வானநூல் பொருத்தமும் வயல் விளைவுப் பொருத்தமும் ஒருங்கே அமையப் பெற்ற தை மாதம் முதல் நாளைத் தமிழர் தம்ஆண்டுத் தொடக்கமாகப் பெற்றிருந்தனர் எனின் அவர்தம் அறிவினை என்னெனக் கூறி வியப்போம் என்பது நாவலர் சோமசுந்தர பாரதியாரின் நற்சான்றாகும்.
முன்னாளில் தமிழ் ஆண்டு தை முதல் மாதத்தில் தான் இருந்தது என்பது சா. கணேசன் கருத்தாகும்.
சிந்து வெளி மக்கள் தம் ஆண்டுத் தொடக்கம் தை மாதம் முதல் நாள் என்று வழங்கினர். பிற்காலத்தில் இதுவே திருவள்ளுவர் ஆண்டுப் பிறப்பும் ஆயிற்று என்கிறார் விஞ்ஞானி நெல்லை சு. முத்து
தையே முதற்றிங்கள்; தைம் முதலே ஆண்டு முதல்
பத்தன்று; நூறன்று; பன்னூறன்று;
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு, தைம்முதல்நாள், பொங்கல் நன்னாள்

Re: கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்!
அரசியல் மட்டும் அல்ல - அரசியல் வாதிகளும் ஒரு சாக்கடை தான் - ஏன்
இங்குதான் அரசியல் வியாதி ஒளிந்திருக்கிறது .
தமிழுக்கு சங்கம் வைத்து வளர்த்தான் பழந் தமிழன்
தமிழையே சங்கமாய் வைத்து தன்னை வளர்த்தான் நிகழ்கல தமிழன்.
இவர்களுக்கு தமிழ் என்பது அரசியல் மொழி - ஆம்
தன்னை வெளிபடுதிகொள்ளமட்டும் பயன்படும் ஆயுதம் --
இவர்கள் தமிழை வளர்க்கவில்லை - எம் தமிழனையின் பெயரை கொண்டு
தன்னை வளர்க்கும் அரசியல் வியாதிகள்
நன்றி --
பின் குறிப்பு ( வள்ளுவர் தந்தை கழகம் என்பதற்கு --சூதாடுகலம் என்று பொருள் தருகிறார் )

கார்த்திக் செயராம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
மதிப்பீடுகள் : 447
Re: கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்!
கழகம் = சூதாடு களம்
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482
Re: கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்!
மேற்கோள் செய்த பதிவு: 1174991கார்த்திக் செயராம் wrote:பின் குறிப்பு ( வள்ளுவர் தந்தை கழகம் என்பதற்கு --சூதாடுகலம் என்று பொருள் தருகிறார் )
கழகம் என்ற சொல்லுக்கு ....
கல்வி பயில் களம்,
சூது பயில் களம்,
நாவலர் வாய்ந்த இடம்,
படை பயில் களம்,
மல் பயில் களம்,
வல்லுநர் வாய்ந்த இடம்.
என தி.பி 9 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த திவாகரம் நிகண்டு பொருள் கூறுகிறது.
பின்குறிப்பு: நிகண்டு = செய்யுள் வடிவில் உள்ள அகராதி
Re: கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்!
மேற்கோள் செய்த பதிவு: 1174991கார்த்திக் செயராம் wrote:அரசியல் மட்டும் அல்ல - அரசியல் வாதிகளும் ஒரு சாக்கடை தான் - ஏன்
இங்குதான் அரசியல் வியாதி ஒளிந்திருக்கிறது .
தமிழுக்கு சங்கம் வைத்து வளர்த்தான் பழந் தமிழன்
தமிழையே சங்கமாய் வைத்து தன்னை வளர்த்தான் நிகழ்கல தமிழன்.
இவர்களுக்கு தமிழ் என்பது அரசியல் மொழி - ஆம்
தன்னை வெளிபடுதிகொள்ளமட்டும் பயன்படும் ஆயுதம் --
இவர்கள் தமிழை வளர்க்கவில்லை - எம் தமிழனையின் பெயரை கொண்டு
தன்னை வளர்க்கும் அரசியல் வியாதிகள்
நன்றி --
பின் குறிப்பு ( வள்ளுவர் தந்தை கழகம் என்பதற்கு --சூதாடுகலம் என்று பொருள் தருகிறார் )
அருமை அருமை கார்த்திக்..
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மதிப்பீடுகள் : 312
Page 2 of 2 •
1, 2

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|