ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..!

2 posters

Go down

மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Empty மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..!

Post by Powenraj Sat Nov 14, 2015 8:02 pm

மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! 12208730_752778088161027_4918724073883474522_n

‘தத்தளிக்கிறது தமிழகம்…மிதக்கிறது சென்னை..’ என அலறிக் கொண்டே இருக்கின்றன ஊடகங்கள். போக்குவரத்து முடங்கி, அத்தியாவசிய தேவைக்குக் கூட வெளியே செல்ல முடியாமல் குருவிகளைப் போல கூண்டுகளில் அடைந்து கிடக்கிறார்கள் மனிதர்கள்.

சாதாரண சென்னையை ‘சிங்கார சென்னை'(!)யாக்கிய திமுக அரசும், காணொளிக் காட்சி மூலம் தினம் தோறும் பாலங்களை யும், கட்டடங்களையும் திறந்து வைத்துக் கொண்டிருக்கும் அதிமுக அரசும், தமிழகத்தை பலமுறை ஆட்சி செய்தும் முறையான உள்கட்டமைப்பைக் கூட இதுவரை அமைத்து தரவில்லை என்பதற்கு ஆகச் சிறந்த எடுத்துக்காட்டு.

‘சுனாமி’, ‘தானே’ என தொடர் எச்சரிக்கைகளை இயற்கை கொடுத்துக் கொண்டே இருந்தாலும், அதிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வழிவகைகளை கண்டறியவும், நடைமுறைபடுத்தவும் இந்த இரண்டு கட்சிகளும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆர்.கே நகர் இடைதேர்தலுக்கு அத்தனை அமைச்சர்களையும் அனுப்பிய முதலமைச்சர் ஜெயலலிதா, கடலூர் வெள்ள நிவாரணப் பணிகளை பார்வையிட ஐந்தே அமைச்சர்களை அனுப்பியதில் இருந்தே இவர்களின் மக்கள் நலனை புரிந்துக்கொள்ள முடியும்.

‘தானே’ ஏற்படுத்திய கடுமையான பாதிப்புகளில் முக்கியமானது மின் இணைப்பு துண்டிப்பு. மின்கம்பங்கள் பல இடங்களில் சாய்ந்தது சில நாட்களாக இருளில் தவித்தது கடலூர். பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த அதிகாரிகள் குழு, எதிர்காலத்தில் இதுபோன்ற இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்ள வசதியாக, தரைவழியாக, நிலத்திற்குள் குழாய் பதித்து அதன் மூலமாக மின்சாரத்தை வினியோகம் செய்யலாம்.” என அரசுக்கு பரிந்துரை செய்தது. அரசும், உடனடியாக அதற்கான திட்டம் தயாரித்து, ஒரு பெரும் தொகையையும் ஒதுக்கியது.

ஆனால், ஓட்டபந்தயத்தில் துவக்கத்தில் ஓடிய முயல், ஆமை வரும் வரை ஓய்வெடுத்த கதையாக, அதிவேகமாக துவங்கிய திட்டம், சுணக்கமானது. இதோ புயல் வடிவில் ஆமை வென்று விட்டது. மீண்டும் இருளில் தவிக்கிறது கடலூர்.

ஆண்டுக்கு சிலநாட்கள் இது போன்ற கனமழையை சென்னை சந்திப்பது தொடர்கதையாகி விட்டது. அமைச்சர்கள் பார்வையிட்டு, அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவு செய்து முடிப்பதற்குள் வெள்ளம் வடிந்து விடும். அதிகாரிகளும், நாமும் அதை பற்றி மறந்து விட்டு அடுத்த பணிகளில் மூழ்கிவிடுவோம்..அடுத்த வெள்ளத்தில் வீடுகள் மூழ்கும் வரை அதைப்பற்றி யாரும் சிந்திப்பதே இல்லை.

சென்னையில் வீதிகளிலும், சாலைகளிலும் ஏன் வீடுகளை சுற்றியுள்ள காலி இடங்கள் வரை சிமெண்ட் பூசி மெழுகி வைத்துவிட்டு, ‘வெள்ள நீர் வடியவில்லையே’ என கூப்பாடு போட்டு என்ன பிரயோசனம்?

அலட்சியமாக வீதிகளில் தூக்கி எறியும் பிளாஸ்டிக் பைகள், சாக்கடை மற்றும் நீர் வெளியேறும் துளை களை அடைத்துக் கொண்டால், மழைநீர் வீதிகளிலும், சாலைகளிலும் தானே தேங்கி நிற்கும். எத்தனை மழை வந்தாலும், ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்கி நிற்காமல், பூமிக்குள் வழிந்தோடி, அருகிலுள்ள நீர்நிலைகளுக்கு செல்லும் நுட்பங்களை கோவில்கள் தோறும் அமைத்திருந்தார்கள் முன்னோர்கள். தமிழகத்தின் பிரசித்தி பெற்ற பல கோவில்களில் இதை இன்றைக்கும் காண முடியும்.

ஆனால், ஒரு நாளில் சென்னையில் பெய்த 15 செ.மீ. மழைக்கே இடியாப்ப சிக்கலில் கிடக்கிறது இயல்பு வாழ்க்கை. அதே நேரம் ஆண்டு முழுவதும் மழை பெறும் கேரளா போன்ற மாநிலங்கள் எத்தனை கனமழைக்கும் கலங்குவதில்லையே..ஏன்? சிறந்த உள்கட்டமைப்பு வசதியும், வரத்து வாய்க்காலை ஆக்கிரமிக்க நினைக்காத மனநிலையும் தான்
காரணம்.

இத்தனை அறிவியல் முன்னேற்றம், நவீன தொழில்நுட்பங்கள் இருந்தும், எந்த அரசும் நிலையான தீர்வுக் கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பது வேதனையானது. மணல் குவாரிகளை, மதுக்கடை களை நடத்துவதில் அரசு காட்டும் ஆர்வத்தில் பத்தில் ஒரு பங்கு செலுத்தினாலே உள்கட்டமைப்பை செம்மை படுத்திவிட முடியும். சென்னை போன்ற பெருநகரங்களின் தற்போதைய தேவை, சிறந்த வடிகால் வசதி. அதை செய்து தருவதுதான் ஆளும் கட்சியின் ஆகச் சிறந்த சாதனையாக இருக்க முடியும்.

எந்த சம்பவத்தில் இருந்தும் பாடம் கற்றுக்கொள்ளாத அரசியல்வாதிகள் தான் தமிழகத்தின் அத்தனை துயருக்கும் ஒட்டு மொத்த காரணம் என குற்றம்சாடி விடவும் முடியாது.

அதில் பெரும்பங்கு மக்களாகிய நமக்கும் இருக்கிறது. ‘ஆத்துல யார் மணல் அள்ளுனா எனக்கென்ன? ‘வரத்து வாய்க்காலை யார் வளைச்சுப் போட்டா நமக்கென்ன..”என்ற எல்லை மீறல்களை சகித்துக்கொள் ளும் குணமும், எத்தனை நெருப்பு வைத்தாலும் வெடிக்கவே செய்யாத வெத்து வேட்டு மனநிலையும் கூட இதற்கு முக்கிய காரணம். அதிகாரிகளை, அரசை மட்டும் குறை சொல்லாமல், நாமும் இதில் அக்கறை செலுத்த வேண்டும்.

வரப்பு, வாய்க்கால்களை பராமரித்தல், குளம், குட்டைகளை பாதுகாத்தல், ஆறுகளில் மணல் கொள்ளை களை தடுத்தல் என ஊர்கள் தோறும் ‘ தன்னார்வ தண்ணீர் அமைப்புகள்’ உருவாக வேண்டும். சுருக்கமாகச் சொன்னால், இனியொரு சுதந்திர போராட்டத்திற்கு ஆயத்தமாக வேண்டும். அது, நமது நீர் நிலைகளை பாதுகாப்பதாகவும், கிராம, நகரங்களின் உள்கட்டமைப்பை சீர்செய்வதாகவும் இருக்க வேண்டும்.

செய்வீர்களா..? நீங்கள் செய்வீர்களா..?


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Empty Re: மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..!

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Nov 14, 2015 9:52 pm

ஒவ்வொரு மழைக்காலமும் இப்படித்தான் இருக்கும் இது இயற்கை என்ன செய்வது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum