புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடாரம் வென்ற சோழன் கப்பல் சென்ற கடல்!! Poll_c10கடாரம் வென்ற சோழன் கப்பல் சென்ற கடல்!! Poll_m10கடாரம் வென்ற சோழன் கப்பல் சென்ற கடல்!! Poll_c10 
15 Posts - 83%
mohamed nizamudeen
கடாரம் வென்ற சோழன் கப்பல் சென்ற கடல்!! Poll_c10கடாரம் வென்ற சோழன் கப்பல் சென்ற கடல்!! Poll_m10கடாரம் வென்ற சோழன் கப்பல் சென்ற கடல்!! Poll_c10 
1 Post - 6%
Barushree
கடாரம் வென்ற சோழன் கப்பல் சென்ற கடல்!! Poll_c10கடாரம் வென்ற சோழன் கப்பல் சென்ற கடல்!! Poll_m10கடாரம் வென்ற சோழன் கப்பல் சென்ற கடல்!! Poll_c10 
1 Post - 6%
kavithasankar
கடாரம் வென்ற சோழன் கப்பல் சென்ற கடல்!! Poll_c10கடாரம் வென்ற சோழன் கப்பல் சென்ற கடல்!! Poll_m10கடாரம் வென்ற சோழன் கப்பல் சென்ற கடல்!! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடாரம் வென்ற சோழன் கப்பல் சென்ற கடல்!! Poll_c10கடாரம் வென்ற சோழன் கப்பல் சென்ற கடல்!! Poll_m10கடாரம் வென்ற சோழன் கப்பல் சென்ற கடல்!! Poll_c10 
69 Posts - 84%
mohamed nizamudeen
கடாரம் வென்ற சோழன் கப்பல் சென்ற கடல்!! Poll_c10கடாரம் வென்ற சோழன் கப்பல் சென்ற கடல்!! Poll_m10கடாரம் வென்ற சோழன் கப்பல் சென்ற கடல்!! Poll_c10 
4 Posts - 5%
kavithasankar
கடாரம் வென்ற சோழன் கப்பல் சென்ற கடல்!! Poll_c10கடாரம் வென்ற சோழன் கப்பல் சென்ற கடல்!! Poll_m10கடாரம் வென்ற சோழன் கப்பல் சென்ற கடல்!! Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
கடாரம் வென்ற சோழன் கப்பல் சென்ற கடல்!! Poll_c10கடாரம் வென்ற சோழன் கப்பல் சென்ற கடல்!! Poll_m10கடாரம் வென்ற சோழன் கப்பல் சென்ற கடல்!! Poll_c10 
2 Posts - 2%
prajai
கடாரம் வென்ற சோழன் கப்பல் சென்ற கடல்!! Poll_c10கடாரம் வென்ற சோழன் கப்பல் சென்ற கடல்!! Poll_m10கடாரம் வென்ற சோழன் கப்பல் சென்ற கடல்!! Poll_c10 
2 Posts - 2%
Barushree
கடாரம் வென்ற சோழன் கப்பல் சென்ற கடல்!! Poll_c10கடாரம் வென்ற சோழன் கப்பல் சென்ற கடல்!! Poll_m10கடாரம் வென்ற சோழன் கப்பல் சென்ற கடல்!! Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
கடாரம் வென்ற சோழன் கப்பல் சென்ற கடல்!! Poll_c10கடாரம் வென்ற சோழன் கப்பல் சென்ற கடல்!! Poll_m10கடாரம் வென்ற சோழன் கப்பல் சென்ற கடல்!! Poll_c10 
1 Post - 1%
Shivanya
கடாரம் வென்ற சோழன் கப்பல் சென்ற கடல்!! Poll_c10கடாரம் வென்ற சோழன் கப்பல் சென்ற கடல்!! Poll_m10கடாரம் வென்ற சோழன் கப்பல் சென்ற கடல்!! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடாரம் வென்ற சோழன் கப்பல் சென்ற கடல்!!


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Nov 17, 2015 1:59 pm

இந்திய சரித்திரத்தின் வீரப்புருஷர்கள் தற்காப்பு யுத்தத்தையே தூக்கிப் பிடித்தபோது, எதிரிகள் மீது படையெடுத்து அவர்களைப் பந்தாடிய இரண்டு தமிழர்கள் இருந்தார்கள். வடக்குப் படையெடுப்புகளால் முடக்கப்பட்டபோது, தெற்கை எட்டுத்திக்கிலும் பட்டொளி வீசிப் பறக்கும் பளபளக்கும் சாம்ராஜ்யத்தை உருவாக்கி தகதகவென மின்னும் தந்தையும், மகனும் வந்தார்கள். அவர்கள் வாள் வீச்சு வடக்கையும் தாக்கி
ய து, கடல் கடந்தும் தாவியது. வேழம் அவர்களுக்கு வெள்ளாடாகவும், மலைகள் அவர்களுக்கு மண்மேடாகவும் காட்சியளித்தன.

‘வடமேற்கில் தொடர்ந்து கஜினி முகமது படையெடுத்துக் கொண்டிருந்த அதே நேரத்தில்தான் ஒரு மாவீரன் இந்தியாவின் தெற்குப் பகுதியிலிருந்து ஒரு பெரும் படையுடன் கிளம்பி வடக்கு நோக்கி வந்து சேர்ந்தான். அவனுடைய வீரர்களை யாராலும் எதிர்த்து நிற்க முடியவில்லை. இன்றைய ஹைதராபாத், ஒடிஸா, வங்காளம் எல்லா நாடுகளும் அந்த மன்னன் வீரத்தின்முன் மண்டியிட்டன’ என்று, ‘வந்தார்கள்-வென்றார்கள்’ என்ற சரித்திரம் படைத்த சரித்திர நூலில் மதன் குறிப்பிடுகிறார். அவர் எழுப்பியுள்ள வினாவைப்போல கஜினியும், ராஜேந்திர சோழனும் சந்தித்திருந்தால், இந்தியாவின் வரலாறு வேறு விதமாக எழுதப்பட்டிருக்கும். ஆனால் ராஜேந்திரனின் ஆர்வமோ மலேயா, சுமத்திராவைக் கைப்பற்ற வேண்டும் என்பதாக இருந்தது.

எவரும் சிந்திக்காத திசையில் ராஜேந்திர சோழனால் மட்டும் எப்படி யோசிக்க முடிந்தது? வாளைச் சுழற்றிக்கொண்டு வான் முட்டும் வீரமுழக்கம் இட்டுக்கொண்டு எப்படி வங்கம் வரை செல்ல முடிந்தது? காரணம் எளிது. எதிரியாய் எண்ணி அவர்கள் பலங்களைத் துல்லியமாகக் கவனித்து, அவற்றை உடைக்கும் வலிமையை உருவாக்கிக் கொண்டான். வெளிநாடுகளில் சிம்ம கர்ஜனை புரிந்து சீறி எழுந்து அந்நாட்டு வீரர்களை துவம்சம் செய்ய அவனால் எளிதில் முடிந்ததற்கு அவனுடைய இந்த உத்தியே காரணம்.

போர் என்பது உடல்களுக்குள் நடக்கிற யுத்தம் மட்டுமல்ல, அது மனங்களிடையேயும் நிகழும் மல்யுத்தம் என்பதை அவன் துல்லியமாகத் தெரிந்து வைத்திருந்தான். அவர்களின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் அனைத்தையும் முன்கூட்டியே ஊகித்து அவற்றைக் கச்சிதமாக உடைத்துத் தகர்த்தவன் அவன்.

தந்தை ராஜராஜன் என்கிற மாபெரும் நிர்வாகி உருவாக்கித்தந்த அடித்தளமும், ஈட்டிய செல்வப்பொதியும், உண்டாக்கிய நிலநிர்வாக முறையும், அடிக்கல் நாட்டிய கடற்படையும் அவனுக்குப் பரந்துபட்ட வாய்ப்பை உருவாக்கியது. அதில் மளமளவென கட்டுமானம் செய்து உயர்ந்த கோபுரத்தை அவனால் எழுப்ப முடிந்தது.
ராஜேந்திரசோழனின் சாகசங்கள் சுவாரசியமானவை. அவனும் அவன் தந்தையும் ராஷ்டிரகூடர்களைப் போர்க்களத்தில் ஓட ஓட விரட்டியவர்கள். வடமேற்குக் கர்னாடகா, தெற்கு மகாராஷ்டிரம் ஆகியவற்றில் சோழ சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தினர். துங்கபத்ராவைத் தாண்டி சாளுக்கியர்களை வீழ்த்தினார்கள். பனவாசி, மனயகேடா நாட்டு மன்னர்கள் சோழர் படைகள் வருவதைக்கண்டதும் பயந்துபோய் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் ஒளிந்து கொண்டார்கள். வடக்கு ஹைதராபாத்தையும் கைப்பற்றினர்.

பராந்தகன், பாண்டியர்களைப் பந்தாடிய போது, பயந்து ஓடிய பாண்டிய மன்னன் இலங்கை மன்னனிடம் மகுடத்தை ஒப்படைத்து ஓடிப்போனான். அதைத் தன் படையெடுப்பில் மீட்டான் ராஜேந்திரன். சிங்களமன்னனின் மகுடத்தைத் தட்டிப்பறித்து அவனைக் குறுகச் செய்தான். சிங்கள மன்னன் ஐந்தாம் மஹிந்தனைக் கைது செய்ய... அவன் 12 ஆண்டுகள் சோழர் சிறையில் இருந்து இறந்துபோனான்.
பாண்டியர்களையும், சேரர்களையும் அமுக்கி வைத்துக் கப்பம் கட்டும் நாடுகளாக மாற்றினான். பிறகு தன் மகனை ஜயவர்மன் சுந்தர சோழ பாண்டியன் என்கிற பெயரில் மதுரையின் ஆளுநராக நியமித்தான். ராஜேந்திரன் கலிங்கத்தை வென்றான். அப்போது கோதாவரிக்கரையின் படையின் பின்வரிசையில் அவனே நின்று பகைவர்கள் தாக்காதபடி பாதுகாப்பு வளையம் அமைத்தான். வங்க மன்னன் மஹிபாலாவை போர்க்களத்தில் வென்றான்.

ராஜேந்திரசோழன் இயல்பாகவே துணிச்சலும், வீரமும் கொண்ட தளபதி. போரின் நுணுக்கங்களையும், அசைவுகளையும் சரியாகக் கணிக்கும் ஆற்றல் பெற்றவன். எதற்கும் அஞ்சாத தைரியம் கொண்ட அவன் எப்படிப் போர்க்களத்தில் அவனை எதிர்த்து வந்த மதம் பிடித்த யானையை தனியொரு வீரனாக வெட்டிச் சாய்த்தான் என்பதை ஏற்கெனவே எழுதியிருக்கிறேன். அதுவரை தமிழகத்தில் படை திரட்டுவது என்கிற பழக்கமே இருந்தது. ஆனால் ராஜராஜன் நிலையான படையை உருவாக்கி, அதில் இருக்கும் வீரர்களை செதுக்கி செதுக்கி சிறந்த திறன் கொண்டவர்களாக மாற்றினான். அவனுடைய மகனும் அவர்கள் எப்போதும் கூர்மைப்படுத்தப்பட்ட குத்தீட்டியாகத் திகழும்படி போர்களை வடிவமைத்தான். ராஜேந்திரன் காலத்தில் சோழப்படை துளியும் ஓய்வின்றி தொடர்ந்து போர்க்களத்திலேயே கழித்தது. ஆனாலும் அவர்கள் அலெக்ஸாண்டருடைய வீரர்களைப்போல ‘ஹோம் சிக்’ என்று அடம்பிடிக்கவில்லை.

ராஜேந்திரனுடைய வங்கப்படையெடுப்பு அவனுடைய கடற்படை தெற்காசிய நாடுகளுக்குப் படையெடுப்பதற்கான முன்னோட்டமாகவே இருந்தது. பிற்காலச் சோழர்கள் இந்தியப் பெருங்கடலையும், வங்காள விரிகுடாவையும் நிலப்பரப்பாக நினைக்குமளவு கப்பல் கட்டும் பணியில் தேர்ந்து விளங்கினர். கடலும், காற்றும் அவர்கள் கலங்களுக்குக் கட்டுப்பட்டன. அவர்கள் கடல்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இரவும் பகலும் சோழக் கப்பல்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டு, வணிகக்கப்பல்கள் பத்திரமாகப் பயணிக்கப் பாதுகாப்பு அளித்தன. அதுவரை அப்படியொரு அமைப்பு தமிழகத்தில் விரிவாக ஏற்படுத்தப்படவில்லை. வர்த்தகம் செழிக்க ஏற்படுத்தப்பட்ட நாவாய், விரிவுபெற்று சக்தி வாய்ந்த கடற்படையாக உருவம் பெற்றது. ‘சோழர்கள் கடலின் தோழர்கள்’ என்ற நிலை ஏற்பட்டது.

பத்தாம் நூற்றாண்டின் பின்பாதியில் மூன்று புதிய சக்தி வாய்ந்த பேரரசுகள் உலகில் உதயமாயின. எகிப்தில் பாட்டிமிட்ஸ், சீனத்தில் சாங், இந்தியாவில் சோழர்கள். மூவருமே இந்தியப் பெருங்கடல் வணிகத்தில் பெருமளவு ஈடுபட்டனர். வரலாற்று ஆசிரியர்கள், சோழர்கள் தெளிவாகவும், உறுதியாகவும் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்து கடற்படையெடுப்பை நடத்தியதாக சிலாகிக்கிறார்கள். அவர்கள் ஒருபோதும் அவசரக் கோலத்தில் படையெடுப்பு நிகழ்த்தவில்லை. எந்தப் போர்க்களத்திலும் சின்ன சிராய்ப்புகூட ஏற்படாமல் சோழப்படை தொடர்ந்து வெற்றிக்கொடியையே நாட்டியது. இலங்கையும், மாலத்தீவுகளும் அவர்களுடைய கடல் வணிகத்திற்கு முக்கிய மையங்களாகத் தேவைப்பட்டன. ஒரிஸா, வங்கம் போன்ற நாடுகளும் அவர்களுடைய கடல்வணிகத்தைத் தடைசெய்து அவ்வப்போது வியாபாரிகளுக்குத் தொந்தரவு கொடுத்து வந்ததால் ஏற்பட்ட எரிச்சலால் அவற்றை அடித்து நொறுக்கி, ‘வாலைச் சுருட்டிக்கொண்டு இருங்கள், இல்லாவிட்டால் நான் வாளை உயர்த்தவேண்டியிருக்கும்’ என்று எச்சரிப்பதற்காகவே ராஜேந்திரன் படைகளுடன் திக்விஜயம் செய்தான்.

சோழர்களை அனுசரித்துச் சென்றால் மட்டுமே அமைதியாக வாழமுடியும் என்கிற சூழல் தெற்காசிய நாடுகளுக்கு ஏற்பட்டது. ஆர்ப்பரிக்கும் அலைகள் வழியிலுள்ள நாடுகளில் ஆழிப்பேரலை வந்ததைப்போல் ஆரவாரம் நிகழ்த்தும். பிரளயம் போன்ற பேரோசையுடன் கம்பீரமாய் நீரைக் கிழித்துச் செல்லும். சோழர்கள் நாவாய் புறப்பட்டால், கடலையே ஆக்கிரமித்துக்கொண்டு மீன்கள் நீந்தக்கூட இடமில்லாத அளவு மரக்கலங்கள் அணிவகுக்கும். அவற்றைப் பார்த்த மாத்திரத்திலேயே எதிரிநாட்டு மன்னர்கள் நடுங்கி ஒளியுமளவு அவை காட்சியளித்தன. அங்கோர்வாட் மன்னன் முதலாம் சூர்ய வர்மன் விசுவாசத்தை நிரூபிக்க, எதிரிகளை வதைக்க உபயோகப்படுத்திய அவனுடைய சொந்தத்தேரை ராஜேந்திரனுக்குப் பரிசாக அளித்து தாஜா செய்தான்.

கடாரத்தை ஆண்ட ஸ்ரீவிஜய ராஜ்ஜியத்திற்கும் சோழர்களுக்குமிடையே நட்புறவு இருந்துவந்தது. ராஜராஜன் காலத்திலிருந்து விலையுயர்ந்த பரிசுகளைச் சோழர்களுக்கு அளித்து, அவர்களிடம் கடார மன்னர்கள் கடமைப்பட்டவர்களாகவே காட்டிக்கொண்டனர். 1016ம் ஆண்டு ஸ்ரீவிஜயம் ஜாவாவை வீழ்த்தியவுடன், சீனத்துடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு பெரும் சக்தியாக ஊடுருவப் பார்த்தார்கள். ராஜேந்திரன் சீனத்திற்கு 1020ம் ஆண்டு ஒரு தூதுக்குழுவை அனுப்பி, சாங் சாம்ராஜ்ய மன்னன் எந்த வகையிலும் கடற்படையெடுப்புக்கு ஊறு விளைவிக்காதவாறு பார்த்துக்கொண்டான். அதுதான் அவனுடைய ராஜதந்திரம். ஏற்கெனவே 1022-23ம் ஆண்டுகளில் கலிங்கம் மூலமாக கங்கைவரை சென்று எச்சரிக்கை செய்து, தான் எடுக்கவிருக்கும் படையெடுப்புக்கு இடைஞ்சலில்லாமல் பார்த்துக்கொண்டான். புலிவேட்டைக்குப் போகும்போது, எலிகள் வந்தால் அவற்றை நசுக்க சக்தி விரயமாகுமே என்பதால்தான்.

1025ம் ஆண்டு ஸ்ரீவிஜயம் நாட்டிற்குச் சோழக் கடற்படை புறப்பட்டது. ஒவ்வொரு கப்பலிலும் திறம் வாய்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட சோழ வீரர்கள். வாளைச் சுழற்றுவதிலும், அம்பில் பந்தத்தைச் சுற்றி நெருப்புக்கோளங்களை குறி தவறாமல் எறிவதிலும் அவர்கள் கில்லாடிகள். உணவு, உடை, ஆயுதம் என்று நுணுக்கமாகச் செய்யப்பட்ட அத்தனை ஏற்பாடுகளுடன் அந்தப் படையெடுப்பு முடுக்கிவிடப்பட்டது. ஏற்கெனவே பரிச்சயமான வழியில், ஏதோ பள்ளிக்குப் போவதைப்போல பதற்றமில்லாமல் பயணம். சோழர்கள் வழியில் மலாய, சுமத்ரா என்று அவர்கள் அத்தனை துறைமுகங்களையும் அடித்து நொறுக்கியவாறு முன்னேறினர். சீனத்துடன் தொடர்பில்லாமல் இருந்த அந்த நாடுகள், சீன உதவியையும் கோரமுடியவில்லை.

நேர்த்தியாக வாள் வீசும் வாள் பெற்ற கைக்கோளர்களும், குறி தப்பாமல் அம்பை இலக்கில் சரமாரியாகச் செலுத்தும் வில்லிகளும் எதிரிகளை வெட்டிச்சாய்த்தும், குத்திக்கிழித்தும் கடலைச் சிவப்பாக்கும் வேலைகளைச் செய்தனர். கடாரம் படையெடுப்பின்போது ராஜேந்திரனே சோழப் படையின் தளபதியாய் இருந்தான். ஸ்ரீவிஜய சாம்ராஜ்யம் சோழப் படையெடுப்பில் ஆடிப்போனது. சோழர்களின் மரக்கலங்களை எதிர்த்து புறப்பட்டு வந்த ஸ்ரீவிஜயக் கப்பல்கள் மின்னல் வேகத்தில் பாய்ந்துவந்த எரியம்புகளாலும், தீப்பந்தங்களாலும் சேதமடைந்து சின்னாபின்னமாயின. ராஜேந்திரனின் வீரர்கள் விட்ட அம்புகள் கப்பல் செலுத்தியவர்களின் கழுத்திற்குக் குறி வைத்தன. சீறிப் பாய்ந்த சோழவீரர்கள் அந்தப் படகில் இருந்த கடார சிப்பாய்களைக் கண்டந்துண்டமாக வெட்டினர். கடார சிப்பாய்களின் கால்சராய் நனைய கடல் மட்டம் உயர்ந்தது. சோழப்படையின் வேகமும், புயல் போன்ற தாக்குதலும் அவர்களை கதிகலங்க வைத்தன. கடாரத்தையும், ஸ்ரீவிஜயத்தையும் சோழர்படை சூறையாடியது.

அந்நாட்டு மன்னனே கைதியாகும் சூழல் ஏற்பட்டது. சங்க்ரம விஜயதுங்கவர்மன் சிறைபிடிக்கப்பட்டான். ராஜேந்திரனின் கால்களில் விழுந்து விடுதலை பெற்றான். கப்பற்படை திரும்பி வரும் வழியில் மலேயா, சமிரி, நிக்கோபார் தீவுகளையெல்லாம் வெற்றிபெற்றுத் திரும்பியது.

ராஜேந்திரனுடைய தொடர் வெற்றி, படை பலத்தாலோ உணர்ச்சியும், உள்ளுணர்வு மிக்க வீரர்களாலோ மட்டும் விளையவில்லை. அது நேர்த்தியான ஒருங்கிணைப்பின் பலன். பல்லாண்டுகள் சிறிது சிறிதாக வடிவமைக்கப்பட்ட வெற்றிக்கோட்டை. எதிரிகள் என்ன செய்வார்கள் என்பதை முன்கூட்டியே ஊகித்து அந்தத் தடைகளை அப்புறப்படுத்திவிட்டு சுற்றுலா போவதைப்போல அவன் படைகள் சென்றுவர ஏற்பாடுகள் செய்தான். அவனுக்கு அவனே எதிரியாய் எண்ணி செயல்பட்டதால், எதிரிகள் அவனை ஒன்றுமே செய்ய முடியவில்லை. அவன் பெருமைக்காகப் படையெடுக்கவில்லை. அந்த நாட்டின் மானம் காப்பாற்றப்பட வேண்டும் என்கிற எண்ணம் ஒவ்வொரு வீரனின் உள்ளத்தில் ஏற்பட்டதாலும், பொருளாதாரம் மேம்படும் பொது நோக்கமிருந்ததாலும் அவன் வெற்றியைத் தவிர வேறெதையும் சந்திக்கவில்லை.

நன்றி :- முதலில் ஈகரை கலை களஞ்சியத்திற்கு - என்னை ஒரு தமிழ் தேடன் ஆக்கியதற்கு ( தமிழ் வரலாற்று நிகழ்வுகளை தேடுவதால் தேடன் என்று குறிப்பிட்டு உள்ளேன் சரியான சொல் தெரியவில்லை ) மற்றும் என் நண்பனுக்கு எனக்கு மின் அஞ்சல் மூலம் அனுப்பியதால்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 17, 2015 4:54 pm

கார்த்தி இத்தனை தகவல்களை டைப் செய்திட எப்படி சாத்தியப்படுகிறது,நன்றி அருமை.

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Nov 17, 2015 5:11 pm

நல்ல பதிவு. நீங்கள் எதிலிருந்து இந்த தகவலை பகிர்ந்து உள்ளீர்கள் என்பதை பதிவு செய்யவும். மேலும் வேற தகவல்கள் தேவை படுவோர்க்கு உங்கள் பதிவுகள் மூலம் உதவலாம் இல்லையா.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Nov 17, 2015 5:17 pm




நன்றி :- முதலில் ஈகரை கலை களஞ்சியத்திற்கு - என்னை ஒரு தமிழ் தேடன் ஆக்கியதற்கு ( தமிழ் வரலாற்று நிகழ்வுகளை தேடுவதால் தேடன் என்று குறிப்பிட்டு உள்ளேன் சரியான சொல் தெரியவில்லை ) மற்றும் என் நண்பனுக்கு எனக்கு மின் அஞ்சல் மூலம் அனுப்பியதால் [/quote] மேற்கோள் செய்த பதிவு: 1175165

என் நண்பன் திரு . ச . சத்தியமூர்த்தி மின் அஞ்சல் மூலம் எனக்கு அனுப்பியதன் பதிவே ...



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue Nov 17, 2015 5:46 pm

ராஜராஜன், ராஜேந்திர சோழன் இருவரது வரலாறும் நம்மை தமிழர் என்ற முறையில் பெருமை கொள்ள வைக்கின்றன . நன்றி கார்த்திக்.



மெய்பொருள் காண்பது அறிவு
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Nov 17, 2015 5:52 pm

நம் முன்னோர்கள் நம்மை விட திறமைசாலிகள் ,,அவர்கள் விட்டு சென்ற கலை செல்வங்களையும் , தமிழையும் நாம் பாதுகாக்கவேண்டும் ...ஒரு தமிழனாய் எனது வேண்டுகோள்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Nov 17, 2015 6:03 pm

தமிழனும் அவன் பெருமைகளும்
************************************
1)சினிமாவில் நடித்தவன் மட்டுமே நம்மை ஆள தகுதியானவன் என்று உறுதியாக நம்புவனே மறத்தமிழன் .

2)நடிகனை தலைவன் என்று ஏற்று அவன் உளரும் ‘பன்ச் டயலாக்’கை கொள்கை என்று ஏற்கும் மனப்பக்குவம் உள்ளவனே முழுத்தமிழன் .

3) சினிமாக்காரனும் அரசியல்வாதியும் ஒருத்தனுக்கொருத்தன் (அ)அவனுக்கவனே சூட்டிக்கொள்ளும் பட்ட பெயரை சொல்லி சொல்லி பெருமை படுபவனே அறத்தமிழன் .

4) தன் பேருக்கு முன்னால் சினிமாக்காரன் பேரை வைத்து ......... என வைத்து அலைபவனே சுத்தத்தமிழன் .

5) சுனாமி வந்தாலும் , பாகிஸ்தான் குன்டு போட்டாலும் , தன் குழந்தை பாலுக்கு அழுதாலும் சினிமாக்காரன் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் பண்ணுபவனே பச்சை தமிழன்

6) தான் விரும்பும் சினிமா நடிகந்தான் மற்ற நடிகனை விட நல்லவன், கொடை வள்ளல் என எங்கிலும் சண்டை போடுபவனே வீரத்தமிழன்.

7)வீட்டுல எந்த மொழியிலாவது பேசிட்டு வெளியே தமில் தமில் என மாருல அடித்து திரிபவனே 'மாடர்ன்' தமிழன் .

இது எனது சமுதாய கோபமே,வார்த்தைகளால் வசைபாடிவிட்டோம் என்ற வருத்தம் எனக்குள் உள்ளது ..அனால் தமிழினம் என்ற பேரினத்தில் பிறந்த இத்தமிழ் சமுதாயத்தின் வாரிசுகளை பார்க்கும்போது போது ,நான் வசை பாடுவதில் தவறில்லை என்று தோன்றியது ...மன்னிக்கவும் ..நான் யாரையும் புண்படுத்தும் நோக்கில் பதியவில்லை ...என்னை போன்ற சமுதாய அக்கறை உள்ளவர்களின் மனகுமுரல்களே ...நன்றி



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue Nov 17, 2015 6:05 pm

நாம் அனைவரும் முயற்சி செய்வோம் . முயற்சி திருவினையாக்கும்.. கடாரம் வென்ற சோழன் கப்பல் சென்ற கடல்!! 1571444738

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Tue Nov 17, 2015 6:33 pm

நன்று




http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக