புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி? Poll_c10கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி? Poll_m10கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி? Poll_c10 
73 Posts - 77%
heezulia
கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி? Poll_c10கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி? Poll_m10கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி? Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி? Poll_c10கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி? Poll_m10கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி? Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி? Poll_c10கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி? Poll_m10கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி? Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி? Poll_c10கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி? Poll_m10கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி? Poll_c10 
238 Posts - 76%
heezulia
கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி? Poll_c10கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி? Poll_m10கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி? Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி? Poll_c10கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி? Poll_m10கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி? Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி? Poll_c10கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி? Poll_m10கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி? Poll_c10 
8 Posts - 3%
prajai
கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி? Poll_c10கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி? Poll_m10கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி? Poll_c10கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி? Poll_m10கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி? Poll_c10கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி? Poll_m10கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி? Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி? Poll_c10கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி? Poll_m10கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி? Poll_c10 
2 Posts - 1%
Barushree
கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி? Poll_c10கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி? Poll_m10கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி? Poll_c10கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி? Poll_m10கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி?


   
   

Page 1 of 2 1, 2  Next

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Nov 12, 2015 1:43 pm

முருகன் ஒரு தமிழ்க் கடவுள்.” என்று சொல்லப் படுகின்றது.
சுப்பிரமணியன்,ஸ்கந்தன், என்று சம்ஸ்கிருத மொழியில் அழைக்கப் பட்டாலும், வட இந்திய இந்துக்களுக்கு முருகன் வழிபாட்டுக்கு உரிய தெய்வமல்ல. வட நாட்டிற்கு மாறாக, தமிழகத்தில் ஊருக்கொரு முருகன் கோயில் காணப் படுகின்றது. அதை வைத்துக் கொண்டு, முருகன் தமிழர்க்கே உரிய தெய்வம் என்ற முடிவுக்கு அவ்வளவு எளிதில் வந்து விட முடியாது. அது எந்தளவிற்கு சரியானது?முருகன் வழிபாடு தமிழகத்திற்கு மட்டுமே உரிமையானதல்ல. பிற திராவிட இனங்களான மலையாளிகள், கன்னடர், தெலுங்கர்கள் கூட முருகக் கடவுளை வழிபடுகின்றனர். (http://en.wikipedia.org/wiki/Murugan) இலங்கையில், ஈழத் தமிழர் மட்டுமல்லாது, சிங்களவர்களும் முருகனை தமது விருப்பத்திற்கு உரிய தெய்வமாக கருதுகின்றனர். ஆகவே, முருகன் ஒரு “தமிழ்க் கடவுள்” என்பதற்கு அப்பால், “திராவிடக் கடவுள்” என்று வரையறுக்கலாமா? அது கூட அத்தனை சுலபமானதல்ல. கம்போடியா, வியட்நாம் ஆகிய தூர கிழக்காசிய நாடுகளில், பௌத்த மதத்தின் வருகைக்கு முன்னர் முருக வழிபாடு நிலவியது. அங்கெல்லாம், கைவிடப் பட்ட கோயில் கல்வெட்டுகளில் முருகனின் உருவம் தெளிவாகத் தெரிகின்றது. அதற்கும் அப்பால்? “இந்துக்களின் தாயகமான” சீனா, திபெத் ஆகிய நாடுகளில்? மத்திய கிழக்கு நாடுகளில்? முருகனுக்கும், கிறிஸ்தவ மதத்திற்கும் என்ன தொடர்பு?வட சீன மாநிலமான மஞ்சூரியாவில், ஒரு குகைக்குள் இருந்து பண்டைய கால ஓவியங்கள் கண்டுபிடிக்கப் பட்டன. பௌத்த மதத்தின் வருகைக்கு முந்திய, புராதன சீன மக்களின் தெய்வங்கள் அவை. அவற்றில் ஒரு தெய்வம், ஆறு முகத்துடன், மயிலுடன் காணப் பட்டது. அதைக் கண்ட அகழ்வாராய்ச்சியாளர்கள் சிலருக்கு, மயிலை வாகனமாகக் கொண்ட ஆறுமுகக் கடவுள் நினைவுக்கு வந்தார். ஆயினும், அந்த உருவம் சீனக் கடவுளான மஞ்சுசிறி உடையது. (பார்க்கவும் : An Illustration of Iconographic Contact between Karttikeya and Manjusri in China) மஞ்சு சிறிக் கடவுள் இன்றைய சீனர்களுக்கும் நன்கு பரிச்சயமானவர். இருப்பினும், நமக்குத் தெரிந்த முருகனின் உருவத்துடன் ஒத்துப் போகவில்லை. மஞ்சு சிறி தெய்வத்தைப் பற்றிய கதைகளும், முருகனைப் பற்றிய புராணக் கதைகளுடன் ஒத்துப் போகவில்லை. ஆனால், திபெத்தில் நிலவும் மஞ்சு சிறி பற்றிய கதை ஒன்று, நமது புருவத்தை உயர்த்த வைக்கும்.





திபெத்திய பௌத்த மதமானது, இந்தியாவின் தாந்திரிய மதக் கூறுகளை உள்வாங்கியுள்ளது என்பதை முன்னர் பார்த்தோம். அது இன்றைக்கும், சாமிப் படங்களாக, மங்கள சின்னங்களாக, புராணக் கதைகளாக நிலைத்து நிற்கின்றது. மஞ்சு சிறிக் கடவுள் பற்றிய புராணக் கதை ஒன்று, சூர சம்ஹாரத்தை நினைவு படுத்துகின்றது. ஆனால், திபெத்தில் சூரனின் இடத்தில் யமனை வைத்து சொல்லப் படுகின்றது. யமன் என்ற மரண தேவதை, இந்து சமயத்தில் மட்டுமே காணப்படும் சிறப்பம்சமல்ல. சீனாவிலும், ஈரானிலும், “மனிதர்கள் இறந்த பின்னர் தீர்ப்பு வழங்கும் யம தர்மன்” பற்றிய நம்பிக்கை நிலவுகின்றது. அந்த நாடுகளில், யமனுக்கு எதிரான போரை, தத்துவார்த்த அடிப்படையில் இருந்தே நோக்கினார்கள். இந்திய உப கண்டத்தை ஆண்ட ஆரியர்கள், அந்தக் கதையை தமது அரசியல் நலன்களுக்கு சார்பாக பயன்படுத்திக் கொண்டார்கள். இந்தியாவில் ஒரு பகுதியை ஆண்ட சூரன் என்ற அரசனை அழித்த கதையை சூர சம்ஹாரம் என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். அவ்வாறு சூரனை அழித்த ஆரியக் கடவுளான சுப்பிரமனியனும், முருகனும் ஒருவரா?



அடிமைப் படுத்தப் பட்ட மக்களை, வென்றவர்களின் கலாச்சாரத்திற்குள் உள்வாங்கிய வரலாறு தான், பிற்கால இந்து மதத்தின் வரலாறு ஆகும். தென்னிந்தியர்களின் நாட்டார் தெய்வங்களை எல்லாம், இந்து மதத்திற்குள் உள்வாங்கினார்கள். அவற்றிற்கு, சமஸ்கிருதப் பெயர்கள் சூட்டப் பட்டன. உலக வரலாறு நெடுகிலும், ஆக்கிரமிப்பாளர்கள் கடைப்பிடிக்கும் யுக்தி அது. அண்மைய உதாரணத்திற்கு, லத்தீன் அமெரிக்காவை எடுத்துக் கொள்ளலாம்.







பூர்வீக மக்களான செவ்விந்தியரின் கடவுளரும், வழிபாட்டு முறைகளும் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தினால் உள்வாங்கப் பட்டன. இன்றைக்கும் அந்த நாடுகளில் நடைபெறும் மத வழிபாட்டு விழாக்களில் அதனை அவதானிக்கலாம். தென்னிந்தியாவிலும் அது போன்றே, தமிழரின் நாட்டார் தெய்வமான முருகன், சுப்பிரமணியன் என்று பெயர் மாற்றி இந்து மதக் கடவுளர்களில் ஒருவரானார். அதனால் தான், தமிழரை விட அதிகமாக ஆரிய மயப் பட்ட, மலையாளிகளும், கன்னடர்களும், “சுப்பிரமணியக் கடவுள்” என்றே அழைக்கின்றனர். முருகனும், சுப்ரமணியனும் வேறு வேறு என்பதை, தமிழ் இந்துக்களும் உணர்வதில்லை. ஆரியரின் கலாச்சார ஆதிக்கம் எந்தளவிற்கு வெற்றி பெற்றுள்ளது என்பதற்கு, இது ஒரு சான்றாகும்.



தமிழில் உள்ள, முருகன், வள்ளிக் கதையானது, குறவர்கள் போன்ற பழங்குடி இனத்தவருக்கு உரியதாகத் தெரிகின்றது. இன்றைய “நாகரீகமடைந்த தமிழர்கள்”, குறவர்கள் போன்ற “நாகரீகமடையாத” பழங்குடியினரை தமது மூதாதையர் என்று சொல்லிக் கொள்ள விரும்ப மாட்டார்கள். “குறவர்களின் தெய்வமான முருகனை கடவுளாக கும்பிடுவோம். ஆனால் குறவர்களை சக மனிதர்களாக மதிக்காமல் ஒதுக்கி வைப்போம். ஏனென்றால் நாங்கள் நாகரீகமடைந்து விட்டோம்.”



முருகனை தமிழ்க் கடவுள் என்று அழைக்கலாம் என்றால், முருகனை “குறக் கடவுள்” என்றும் அழைக்கலாம் அல்லவா? இவ்விரண்டு எடுகோள்களும் சரியானவை அல்ல. உண்மையில், தமிழ்ப் பழங்குடி இனங்கள் முருகன் வழிபாட்டை கைவிடாமல் காப்பாற்றி வந்துள்ளன. இன்றைக்கும் தாழ்த்தப்பட்ட சாதியினர் மத்தியில் முருகன், வள்ளி போன்ற பெயர்கள் பிரபலமாக உள்ளன. உயர் சாதியினர், அதற்கு மாறாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன் என்று சமஸ்கிருதப் பெயர்களை வைத்துக் கொள்கின்றனர். நமது காலத்தில் உள்ள ஆங்கில மோகம் போன்று, பல நூறு வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த தமிழர்கள், சம்ஸ்கிருத மோகம் கொண்டிருந்ததையும் மறுப்பதற்கில்லை. அன்றிருந்த வசதி படைத்த பிரிவினர், ஆக்கிரமிப்பாளர்களின் கலாச்சாரத்தை விரும்பி ஏற்றிருந்தனர்.



சைவ சித்தாந்த மதத்தை வளர்த்த நாயன்மார்களும், சமஸ்கிருதமயப் பட்டிருந்ததை காணக் கூடியதாக உள்ளது. முருகக் கடவுளுக்காக இயற்றப் பட்ட பக்திப் பாடல்கள் எல்லாம், “கந்தர் அலங்காரம், கந்த சஷ்டிக் கவசம்” போன்ற பெயர்களில் உள்ளன. சுப்பிரமணியன் என்பதை விட, கந்தன் என்பது முருகனுக்கு நெருக்கமான பெயர். (முருகன் என்பதும் சமஸ்கிருதப் பெயராக இருக்கலாம். இது குறித்து பின்னர் பார்ப்போம்.) ஆச்சரியப் படத் தக்கவாறு, “ஸ்கந்தன்” என்ற பெயர் இந்து மதத்தில் மட்டும் அறியப் பட்ட ஒன்றல்ல.



பௌத்த மதத்திலும் ஸ்கந்தன் என்ற பெயர் வருகின்றது. ஆனால், பௌத்த மதம் புத்தரை முதன்மைப் படுத்தியதால், ஸ்கந்தனை காவல் தெய்வமாக தரம் தாழ்த்தி விட்டது. இன்றைக்கும், இலங்கையில் உள்ள புராதன பௌத்த விகாரைகளை

பார்வையிடும் ஒருவர், காவல்தெய்வமான ஸ்கந்தன் சிற்பத்தை நேரில் காணலாம். சீனாவிலும், பௌத்த கோயில்களின் முன்பு ஸ்கந்தன் சிலைகள் காணப் படுகின்றன. சில அறிஞர்கள், ஸ்கந்தன் என்ற சொல்லை, கந்தா என்ற பௌத்த தத்துவத்துடன் சேர்த்துப் பார்க்கின்றனர். சமஸ்கிருதத்தில் ஸ்கந்தா, அல்லது பாளி மொழியில் கந்தா என்பது, மனிதர்கள் அனுபவிக்கும் துன்பங்கள், வேதனைகளின் தொகுப்பு பற்றிய தத்துவம் ஆகும்.



இந்த இடத்தில் ஒரு வரலாற்றுக் குறிப்பை சேர்க்க வேண்டியுள்ளது. சரித்திரத்தில் ஆரியர்களின் படையெடுப்பு நடக்கவில்லை என்று வாதிக்கும் அறிஞர்கள், சம்ஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட வேதங்களை அதற்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர். சம்ஸ்கிருத மொழியும், தேவநாகிரி எழுத்து வடிவமும் இந்தியாவுக்கு உரியது என்பது உண்மை தான். ஆனால், சமஸ்கிருதத்திற்கு முன்னரும், பழமையான மொழிகள் இந்தியாவில் இருந்துள்ளன. பிராமி, பாளி, சமஸ்கிருதம், தமிழ் ஆகியவற்றிற்கு இடையிலான தொடர்பு தனித்து ஆராயப் பட வேண்டியது. இத்தகைய பொதுவான சர்வதேச மொழிகளின் ஊடாகத் தான், மதங்களும், தத்துவங்களும் பரவியுள்ளன. இல்லாவிட்டால், ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத மொழிகளைப் பேசும், சீனர்களும், தமிழர்களும் எவ்வாறு கலந்துரையாடி இருப்பார்கள்? சித்த வைத்திய அறிவியலை கற்றுக் கொள்வதற்காக இலங்கை வந்த சீன தேச அகத்தியரும், தமிழ்க் கடவுளான முருகனும் எந்த மொழியில் பேசியிருப்பார்கள்?



அகத்தியர் ஒரு ஆரிய உளவாளி என்று கருதப் படுகின்றது. உளவாளிகள் சேகரிக்கும் தகவல்கள் சில நேரம், உலக ஒழுங்கை மாற்றியமைக்கின்றன. கடல் கொண்ட பாண்டிய நாட்டில் நிலவிய முருக வழிபாடு, அகத்தியர் உதவியால் இன்றைய தமிழகத்தின் பொதிகை மலையில் மீளுயிர்ப்பு கண்டது. திருவள்ளுவர் என்பது ஒருவரைக் குறிக்குமா, என்ற சர்ச்சை போன்று தான், அகத்தியர்கள் பலராக இருக்கலாம் என்று கருதப் படுகின்றது. அதாவது, பண்டைய காலங்களில், சீனாவில் இருந்து வருகை தந்த அறிஞர் பெருமக்கள் எல்லோரும், பிற்காலத்தில் அகத்தியர் என்று ஒரு நபராக கருதப் பட்டிருக்கலாம். சித்த மருத்துவம் மட்டுமல்ல, வான சாஸ்திரம் போன்ற பிற அறிவியல் துறைகளிலும், சீனர்-தமிழர் கூட்டுறவு இருந்துள்ளது. முருகனின் பூர்வீகத்தை பற்றிய இரகசியம் அதனை நிரூபிக்கின்றது.



முருகன் என்பது கடவுளைக் குறிக்கும் சொல்லா, அல்லது பழந்தமிழரின் அறிவியல் கண்டுபிடிப்பா? தமிழர்கள் மட்டுமல்லாது, உலகின் பிற பாகங்களில் வாழ்ந்த மக்களும் முருகனை வழிபட்டனரா? யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களின் தோற்றத்திற்கு முன்னர், மத்திய கிழக்கு நாடுகளில் முருக வழிபாடு பரவியிருந்ததா? அப்படியானால், பண்டைய நாகரீகங்களில் முருக வழிபாடு பல்வேறுபட்ட இனங்களுக்கு பொதுவான மதமாக இருந்துள்ளதா? உலகில் மறைந்து போன நாகரீகத்திற்கும், முருகனுக்கும் தொடர்புண்டா? முருகக் கடவுளின் பூர்வீகம் என்ன? எங்கே உள்ளது?



சர்வதேசியத்தை கொள்கையாக வரித்துக் கொண்ட பண்டைத் தமிழன் உலகம் போற்ற வாழ்ந்தான். இனத் தேசியவாதத்தால் மதி மயங்கிய இன்றைய தமிழன், இழி நிலைக்கு தள்ளப் பட்டான். முருகன் தமிழ் இனத்திற்கு மட்டுமே சொந்தமான கடவுள் அல்ல. மாறாக, தமிழ் சர்வதேசியவாதிகளுக்கு உரிமையான கடவுள்.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 12, 2015 1:55 pm

முருகன் இது வரை நம் கடவுளாக இருந்தார் என்று எண்ணிருந்தேன் ஆனால் இது கூட மாறி விட்டதோ?
கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி? 3838410834 கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி? 103459460 கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி? 1571444738

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Nov 12, 2015 2:17 pm

இது உங்களின் சொந்த கட்டுரையா ?!

உங்களின் பதிவுகள் மற்ற தளங்களில் இருந்து காப்பி செய்து போடுகிற பதிவுகளாக இருந்தால். ஈகரை விதிமுறைகளை ஒருமுறை படித்து பார்த்துவிட்டு தொடரவும்.



கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Nov 12, 2015 2:37 pm

திரு . ராஜா அவர்களுக்கு , நன்றி , இக்கட்டுரை எனக்கு வந்த மின் அஞ்சல் எனது நண்பன் அனுப்பியது ...அதில் இணைப்புகள் இல்லை ..ஆகவே அதை அப்படியே பதித்தேன் ..தவறுக்கு மன்னிக்கவும் ..நன்றி



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Nov 12, 2015 4:18 pm

தமிழகத்தில் இருப்பவர்கள் இந்து மதம் என்ற சொல்லாடலை பயன்படுத்துவதே பாரம்பரியமானதல்ல என்பது என்னுடைய கருத்து. சைவம் ,வைணவம் ,சாக்தம் ,காணாதிபத்தியம்,கௌமாரம், சௌரம் என்ற 6 சமயங்களில் கௌமாரம் என்கிற சமயம் எங்கெல்லாம் பரவி இருந்ததோ அங்கெல்லாம் ஸ்கந்த வழிபாடு இருந்திருக்கும்.





கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி? Thank-you015
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Nov 12, 2015 6:02 pm

கார்த்திக் செயராம் wrote:திரு . ராஜா அவர்களுக்கு , நன்றி , இக்கட்டுரை எனக்கு வந்த மின் அஞ்சல் எனது நண்பன் அனுப்பியது ...அதில் இணைப்புகள் இல்லை ..ஆகவே அதை அப்படியே பதித்தேன் ..தவறுக்கு மன்னிக்கவும் ..நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1174359நன்றி , யாரோ ஒருவர் எழுதிய பதிவுகளை நாம் அவருக்கு ஒரு நன்றியாவது சொல்லிட்டு பகிர்ந்தால் அவருக்கும் மகிழ்ச்சியாக இருக்குமே என்று தான் சொன்னேன் புன்னகை



கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Nov 12, 2015 6:31 pm

நான் தவறாக நினைக்கவில்லை , என்னுடைய தவறை சுட்டி காட்டி உள்ளீர்கள் ...நன்றி




எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 12, 2015 7:20 pm

மேற்கோள் செய்த பதிவு: 1174397
கார்த்திக் செயராம் wrote:நான் தவறாக நினைக்கவில்லை , என்னுடைய தவறை சுட்டி காட்டி உள்ளீர்கள் ...நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1174397

இதற்காகத்தான் , பதிவர்களை , விதிமுறைகளை படித்து ,அனுசரிக்க கூறுகிறோம் .
விதி எண் 6 ஐ பாருங்கள் .
6. மற்றவர்களின் படைப்புக்களையோ அல்லது பிற தளங்களில் இருந்தோ எடுத்து இங்கு பதியும் பொழுது அதை எழுதியவருக்கோ அல்லது, எடுத்த இணைய தளத்திற்கோ கண்டிப்பாக நன்றி சொல்ல வேண்டும். நன்றி தெரிவிக்கும் போது கொடுக்கப்படும் இணையதள முகவரி, உறுப்பினர்களை மற்ற இணைய தளங்களுக்கு கொண்டு செல்லாமல் இருக்குமாறு பதிய வேண்டும். சொந்தமாக வலைப்பூ (Blog) வைத்திருப்பவர்கள், இணைப்புடன் கூடிய  தங்கள் வலைபக்கத்தின் இணைய முகவரியை தங்கள் கையெழுத்து பகுதியில் மட்டும் வைத்திருக்க அனுமதி உண்டு.  மற்ற நண்பர்களின் வலைப்பூவாக (Friends Blog) இருந்தால் இணைப்பு சுட்டி இருக்கக்கூடாது.



ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Nov 12, 2015 7:46 pm

நன்றி ஐயா, இனிவரும் பதிப்புகளில் கன்டிப்பாக விதி முறைகள் சரியா க பின்பற்றப்படும்.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Nov 13, 2015 1:48 pm

கார்த்திக் செயராம் wrote:நன்றி ஐயா, இனிவரும் பதிப்புகளில் கன்டிப்பாக விதி முறைகள் சரியா க பின்பற்றப்படும்.
மிக்க நன்றி கார்த்திக் , கடுமையாக பேசிவிட்டேனே என்று எனக்கும் கொஞ்சம் மனசு சங்கடபட்டுகொண்டிருந்தது. தங்கள் புரிதலுக்கு நன்றி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக