ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்யாண கலாட்டா

2 posters

Go down

கல்யாண கலாட்டா  Empty கல்யாண கலாட்டா

Post by கார்த்திக் செயராம் Fri Nov 06, 2015 11:49 am

ஒரு கல்யாணத்துக்குள்ள நுழைஞ்சிட்டோம்னா, பொண்ணு மாப்ளைய மட்டும் படக்குன்னு கண்டுபுடிச்சிடலாம். ஆனா, மத்த எல்லாரையும் யார் யாருன்னு அவங்க செய்கைகள வச்சே எப்படி கண்டுபுடிக்கிறதுங்குறதத் தான் இப்போ பாக்கப் போறோம்.


1. கல்யாண மேடையில, ஃபுல் மேக்கப்புல பாத்த உடனே பளிச்சின்னு தெரியிறது பொண்ணுதான். ஆனா அந்தப் பொண்ண விட அதிகமா மேக்கப் போட்டுக்கிட்டு ஒண்ணு அந்த ஸ்டேஜ்ல சுத்திக்கிட்டு இருந்தா அது தான் பொண்ணோட தங்கச்சி.


2. கல்யான வீடியோ கவரேஜ்ல எல்லா ஃப்ரேம்லயும் பொண்ணும் மாப்ளையும் இருப்பாங்க. அவங்களுக்கு அடுத்த படியா, எல்லா ஃப்ரேம்லயும் ரெண்டு மூணு தங்க சங்கிலிகள் தெரியிறமாதிரி நிக்கிற ஒரு பொண்ணு இருக்கும். அது வேற யாரும் இல்லை. பையனோட அக்கா.


3. ஆளுக்கும் போட்டுருக்க ட்ரஸ்ஸுக்கும் சம்பந்தமே இல்லாம, ஆனா மாப்ளைக்கு ஈக்குவலா ஒருத்தன் கோட் சூட்டெல்லாம் போட்டுக்கிட்டு டம்மியா, ஸ்டேஜ்ல நின்னுகிட்டு இருப்பான். அது வேற யாரும் இல்லை. மாப்ளையோட அக்கா புருஷன். அந்தக் கோட்ட, அவர் கல்யாண ரிஷப்ஷனுக்கு அப்புறம் இப்பதான் போட்டுருப்பாரு.


4. இன்னொருத்தன் மாப்ள மாதிரியே வேஷ்டி சட்டையெல்லாம் போட்டுக்கிட்டு, ஸ்டேஜ்ல நிக்காம, டான் மாதிரி அங்க இங்க ஓடுறது உடியாருறது வர்றவங்கள கவனிக்கிறது, ஸ்டேஜ்ல ஏறுறது இறங்குறதுன்னுரொம்ப ஆக்டிவா ரொம்ப சந்தோஷமா திரிஞ்சிட்டு இருப்பான். அவந்தான் மாப்ளையோட தம்பி. ரூட்டு கிளியரான சந்தோஷத்துல தலைகால் புரியாம சுத்திக்கிட்டு இருப்பான்.


5. மாப்ளைக்கு லைட்டா வேர்த்தாலோ, வாழ்த்த வர்றவங்க கூட்டத்துல பொட்டுவைக்கும் போது லைட்டா அங்க இங்க அப்பிட்டாலோ, மின்னல் மாதிரி ஒருத்தன் ஒரு கர்ச்சீப்ப வச்சிக்கிட்டு மாப்ள மூஞ்ச தொடைச்சிட்டே இருப்பான். அவன் மாப்ளையோட ஸ்கூல் ஃப்ரண்டா இருக்கும். மொதநாள் நைட்டு பேச்சிலர் பார்ட்டில மூச்சுத் தெணறத் தெணறக் குடிச்சவனும் அவனாத்தான் இருக்கும்.


6. கல்யாணம் முடிஞ்சி ஒரு பத்து நிமிஷம் கழிச்சி, “இய்ய்ய்யாய்…எவண்டா அவன் நா வர்றதுக்கு முன்னால தாலியக் கட்டுனது..” ன்னு மண்டபத்தோட வாசல்ல ஒருத்தன் ஃபுல் போதையில கத்திக்கிட்டு இருப்பான். அவனை யாருமே மதிக்காம, ஆனா ஒரே ஒரு அம்மா மட்டும் போய் அவன உள்ள கூப்டாங்கன்னா அவன் தான் மாப்ளையோட தாய் மாமன். பத்து மணி கல்யானத்துக்கு பதினொன்னே முக்காலுக்கு வருவாரு. ஆனா கல்யாணம் அவர் வந்ததுக்கப்புறம் தான் நடக்கனும்னு வேற எதிர்பாப்பாறு. அப்போ அவனப் போய் கூப்டுறது யாருன்னு உங்களுக்கே தெரியும்.


7. கூட்டத்துல உக்காந்துருக்க எல்லாரும் “எப்பப்பா… கல்யாணம் முடியும்.. எப்பப்பா சோறு போடுவாய்ங்க” ன்னு ஒரே ஆவலோட உக்கார்ந்திருக்கும்போது, ஒரே ஒரு அம்மா மட்டும் வச்ச கண்ணு வாங்காம கல்யாணப் பொண்ணையே மொறைச்சி பாத்துகிட்டு இருக்கும். அப்டி இருந்தா. அது பொண்ணோட அப்பா வழி அத்தைன்னும், அவங்க பையனுக்கு இந்தப் பொண்ணை கேட்டு, பொண்ணு வீட்டுல இல்லைன்னு சொல்லிட்டாங்கன்னும் நீங்களே கண்டுபுடிச்சிடலாம்.


8. மேமாசம், பீக் அவர்ல சென்னை சிட்டி பஸ்ல ட்ராவல் பண்ண மாதிரி ஒரு களைப்போட, ஒரு நிமிஷம் கூட உக்காராம, ஸ்டேஜ்ல கல்யாணம் முடிஞ்சிருச்சா இல்லையான்னு கூட கவனிக்காம எல்லாரையும் போய், “வாங்க வாங்க.. சாப்டு போங்க” ன்னு ஒருத்தர் கூப்டுட்டு இருந்தா அவர்தான் பொண்ணோட அப்பா.



9. பொண்ணுக்கு எத்தனை சவரன் நகை போட்டுருக்காய்ங்க, யார் யார் என்ன செய்றாங்கங்குற விஷயத்த, பையனோட அம்மா அப்பாவ விட, இன்னொரு முக்கியமான கேரக்டர் ரொம்ப கூர்மையா, திருட்டுப்பய நகைய கவ்வ போறப்போ பாக்குற மாதிரி ஒண்ணு பாத்துக்கிட்டு இருக்கும். அதுவேற யாரும் இல்லை. பையனோட அண்ணி.. எங்க நம்மள விட அதிகமாகிதிகமா நகையப் போட்டுவிட்டு நம்மள டம்மி ஆக்கிறப்போறாய்ங்களோங்குற பீதியிலயே இருக்கும்.


10. அந்த கல்யாணக் கூட்டத்துலயே, ஒரே ஒரு குரூப்பு மட்டும், அந்த கல்யணத்துக்கும் அவங்களுக்கும் எந்த சம்பந்தமுமே இல்லாத மாதிரி, தனியா ஒரு மீட்டிங் போட்டுக்கிட்டு இருக்கும். அதுதான் பொண்ணோட அப்பாவோட சொந்தக்காரய்ங்க.


11.கல்யாணமெல்லாம் முடிஞ்ச உடனே அரக்க பரக்க ஒரு கும்பல், வீங்கிப்போண மூஞ்சோட, ஒழுங்கா சீவாத தலையோட வேக வேகமா வந்து மாப்ளைக்கும் பொண்ணுக்கும் வெறும் கைய மட்டும் குடுப்பாய்ங்க. அவிங்க வேற யாரும் இல்லை.மாப்ளையோட ஆஃபீஸ் மேட்ஸோ இல்லை காலேஜ் மேட்ஸோ. ரூம்போட்டு விடியகாலம் வரைக்கும் குடிச்சிட்டு இப்பதான் எழுந்து வர்றாய்ங்கன்னு அர்த்தம்.


12. அதே கல்யாணத்துல, யாரு கூடவும் பேசாம, ஒரு young, Husband & wife, அவங்க குழந்தைய விளையாட விட்டுட்டு, அதுக்கு ஐஸ்கிரீம் வாங்கி சாப்ட குடுத்துகிட்டு, கையில் ஒரு கேமராவ வச்சிகிட்டு சீட்டுல உக்காந்த படியே ஸூம் பண்ணி மாப்ளைய ஃபோட்டோ எடுக்குறதும், அப்பப்போ மாப்ளைய பாத்து கைகாட்டுறதுமா இருப்பாய்ங்க. அவனும் வேற யாரும் இல்லை. மாப்ளையோட காலேஜ் ஃப்ரண்டாத்தான் இருப்பான். அவசரப்பட்டு அவிய்ங்க பேட்ச்லயே மொதல்ல கல்யாணம் பண்ணிக்கிட்டு, குழந்தை குட்டின்னு ஆயிட்டதால இப்டி பேச்சிலர் பார்ட்டில கலந்துக்க முடியாம சோகத்துல இருக்கவன்.


13. கடைசியா கல்யாணம் முடிஞ்சி, எல்லாரும் ஃபோட்டோ எடுக்க வரும்போது,பொண்ணோட ஃப்ரண்ட்ஸ பாத்து “இவ்வளவு நாளா நீங்கல்லாம் எங்கம்மா இருந்தீங்கன்னு” மைண்டுல நினைக்கிறான் பாருங்க. அவந்தான் நம்ம மாப்ள.
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

கல்யாண கலாட்டா  Empty Re: கல்யாண கலாட்டா

Post by Hari Prasath Fri Nov 06, 2015 12:28 pm

ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர்.....
கார்த்திக் செயராம் wrote:கடைசியா கல்யாணம் முடிஞ்சி, எல்லாரும் ஃபோட்டோ எடுக்க வரும்போது,பொண்ணோட ஃப்ரண்ட்ஸ பாத்து “இவ்வளவு நாளா நீங்கல்லாம் எங்கம்மா இருந்தீங்கன்னு” மைண்டுல நினைக்கிறான் பாருங்க. அவந்தான் நம்ம மாப்ள.
சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum