புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 பங்குனி மாத ராசி பலன்கள் :) Poll_c10 பங்குனி மாத ராசி பலன்கள் :) Poll_m10 பங்குனி மாத ராசி பலன்கள் :) Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
 பங்குனி மாத ராசி பலன்கள் :) Poll_c10 பங்குனி மாத ராசி பலன்கள் :) Poll_m10 பங்குனி மாத ராசி பலன்கள் :) Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
 பங்குனி மாத ராசி பலன்கள் :) Poll_c10 பங்குனி மாத ராசி பலன்கள் :) Poll_m10 பங்குனி மாத ராசி பலன்கள் :) Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
 பங்குனி மாத ராசி பலன்கள் :) Poll_c10 பங்குனி மாத ராசி பலன்கள் :) Poll_m10 பங்குனி மாத ராசி பலன்கள் :) Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
 பங்குனி மாத ராசி பலன்கள் :) Poll_c10 பங்குனி மாத ராசி பலன்கள் :) Poll_m10 பங்குனி மாத ராசி பலன்கள் :) Poll_c10 
4 Posts - 2%
Balaurushya
 பங்குனி மாத ராசி பலன்கள் :) Poll_c10 பங்குனி மாத ராசி பலன்கள் :) Poll_m10 பங்குனி மாத ராசி பலன்கள் :) Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
 பங்குனி மாத ராசி பலன்கள் :) Poll_c10 பங்குனி மாத ராசி பலன்கள் :) Poll_m10 பங்குனி மாத ராசி பலன்கள் :) Poll_c10 
2 Posts - 1%
prajai
 பங்குனி மாத ராசி பலன்கள் :) Poll_c10 பங்குனி மாத ராசி பலன்கள் :) Poll_m10 பங்குனி மாத ராசி பலன்கள் :) Poll_c10 
2 Posts - 1%
Manimegala
 பங்குனி மாத ராசி பலன்கள் :) Poll_c10 பங்குனி மாத ராசி பலன்கள் :) Poll_m10 பங்குனி மாத ராசி பலன்கள் :) Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 பங்குனி மாத ராசி பலன்கள் :) Poll_c10 பங்குனி மாத ராசி பலன்கள் :) Poll_m10 பங்குனி மாத ராசி பலன்கள் :) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பங்குனி மாத ராசி பலன்கள் :) Poll_c10 பங்குனி மாத ராசி பலன்கள் :) Poll_m10 பங்குனி மாத ராசி பலன்கள் :) Poll_c10 
432 Posts - 48%
heezulia
 பங்குனி மாத ராசி பலன்கள் :) Poll_c10 பங்குனி மாத ராசி பலன்கள் :) Poll_m10 பங்குனி மாத ராசி பலன்கள் :) Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
 பங்குனி மாத ராசி பலன்கள் :) Poll_c10 பங்குனி மாத ராசி பலன்கள் :) Poll_m10 பங்குனி மாத ராசி பலன்கள் :) Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
 பங்குனி மாத ராசி பலன்கள் :) Poll_c10 பங்குனி மாத ராசி பலன்கள் :) Poll_m10 பங்குனி மாத ராசி பலன்கள் :) Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
 பங்குனி மாத ராசி பலன்கள் :) Poll_c10 பங்குனி மாத ராசி பலன்கள் :) Poll_m10 பங்குனி மாத ராசி பலன்கள் :) Poll_c10 
29 Posts - 3%
prajai
 பங்குனி மாத ராசி பலன்கள் :) Poll_c10 பங்குனி மாத ராசி பலன்கள் :) Poll_m10 பங்குனி மாத ராசி பலன்கள் :) Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
 பங்குனி மாத ராசி பலன்கள் :) Poll_c10 பங்குனி மாத ராசி பலன்கள் :) Poll_m10 பங்குனி மாத ராசி பலன்கள் :) Poll_c10 
5 Posts - 1%
sugumaran
 பங்குனி மாத ராசி பலன்கள் :) Poll_c10 பங்குனி மாத ராசி பலன்கள் :) Poll_m10 பங்குனி மாத ராசி பலன்கள் :) Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
 பங்குனி மாத ராசி பலன்கள் :) Poll_c10 பங்குனி மாத ராசி பலன்கள் :) Poll_m10 பங்குனி மாத ராசி பலன்கள் :) Poll_c10 
4 Posts - 0%
ayyamperumal
 பங்குனி மாத ராசி பலன்கள் :) Poll_c10 பங்குனி மாத ராசி பலன்கள் :) Poll_m10 பங்குனி மாத ராசி பலன்கள் :) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பங்குனி மாத ராசி பலன்கள் :)


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 02, 2016 11:19 pm

மேஷம்

14.3.2016 முதல் 13.4.2016 வரை

கிடைக்கும் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தி சாதிப்பதில் வல்லவர்களான நீங்கள், மற்றவர்களை உற்சாகப்படுத்தி மகிழ்வீர்கள். சுக்கிரனும், புதனும் இந்த மாதம் முழுக்க உங்களுக்கு சாதகமான வீடுகளில் செல்வதால் தைரியம் கூடும். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள்.

கல்யாணம், காதுகுத்து, சீமந்தம் போன்ற சுபச் செலவுகளும் அதிகமாகும். நீண்ட நாட்களாக பார்க்க வேண்டுமென்று நினைத்திருந்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வீடு கட்டுவதற்கு வங்கிக் கடன் உதவி கிடைக்கும். ப்ளான் அப்ரூவலாகி வரும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். உங்களின் பூர்வ புண்யாதிபதி சூரியன் 12ல் நுழைந்திருப்பதால் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து போகும்.

அவர்கள் தேர்வை நன்றாக எழுத வேண்டுமே என்ற ஒரு பயமும் இருக்கும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். குரு 5ல் நீடிப்பதால் குழந்தை பாக்யம் கிடைக்கும். என்றாலும் ராகு 5ம் வீட்டிலேயே தொடர்வதால் கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம்.

மனஇறுக்கம், வீண் டென்ஷன் வந்து போகும். ராசிநாதன் செவ்வாய் 8ல் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் பேச்சில் கம்பீரம் தெரியும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். என்றாலும் 8ல் நிற்கும் சனியுடன் செவ்வாய் சேர்ந்திருப்பதால் தோலில் நமைச்சல், முன்கோபம், வீண் அலைச்சல்கள் வந்து செல்லும்.

அரசியல்வாதிகளே! கட்சிக்குள் நடக்கும் கோஷ்டி பூசலில் தலையிடாதீர்கள்.

கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பார்கள். மாணவ மாணவிகளே! நினைவாற்றல் அதிகரிக்கும். பெற்றோர் உங்களின் தேவைகளை நிறைவேற்றுவார்கள்.

வியாபாரத்தில் புது யுக்திகளை கையாண்டு லாபம் ஈட்டுவீர்கள். உணவு, மருந்து, வாகன உதிரி பாகங்களால் லாபம் கூடும். புகழ் பெற்ற நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங்கள் செய்வீர்கள். அஷ்டமத்துச் சனி தொடர்வதால் வேலையாட்களால் பிரச்னைகள் இருக்கும். பங்குதாரர்களை மாற்ற வேண்டி வரும். வியாபார விஷயமாக வழக்கு, நீதிமன்றம் செல்ல வேண்டாம். எதுவாக இருந்தாலும் பேசித் தீர்ப்பது நல்லது. முடிந்தவரை புதிய பங்குதாரரை சேர்க்கும் போது வழக்கறிஞரை ஆலோசித்து முடிவெடுக்கப்பாருங்கள்.

உத்யோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.

கலைத்துறையினரே! வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும்.

விவசாயிகளே! எதிர்பார்த்த பட்டா வந்து சேரும். பக்கத்து நிலத்துக்காரரை பகைத்துக் கொள்ளாதீர்கள். தன் பலம் பலவீனத்தை உணரும் மாதமிது.

ராசியான தேதிகள்: மார்ச் 15,16,17, 23, 24, 25, 26 மற்றும் ஏப்ரல் 2, 3, 4, 5, 11, 12, 13.

சந்திராஷ்டம தினங்கள்: மார்ச் 28, 29 மற்றும் 30ந் தேதி காலை 8.30 மணி வரை அலைச்சல் அதிகரிக்கும்.

பரிகாரம்: உங்கள் வீட்டிற்கு அருகேயுள்ள ஐயப்பனை தரிசித்து வாருங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 02, 2016 11:20 pm

ரிஷபம்

14.3.2016 முதல் 13.4.2016 வரை

பொதுவாக அமைதியாக இருக்கும் நீங்கள் போட்டியென வந்துவிட்டால் விஸ்வரூபம் எடுத்து மற்றவர்களை மிரள வைப்பீர்கள். சூரியனும், புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். புது சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். சாதூர்யமாக பேசும் சாமர்த்தியத்தை கற்றுக் கொள்வீர்கள். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு.

உறவினர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். நண்பர்களும் ஆதரவாக பேசுவார்கள். வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு வேலை அமையும். மகளுக்கும் நல்ல வரன் அமையும். மகனுக்கு வெளி நாடு செல்லும் வாய்ப்பு வரும். சப்தமாதிபதி செவ்வாய் 7ம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் மனைவி வழியில் உதவிகள் உண்டு. முன் பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள்.

சகோதர, சகோதரிகளால் பண உதவிகள் கிடைக்கும். சகோதரிக்கு தள்ளிப்போன திருமணம் கூடி வரும். ஆனால், 7ல் நிற்கும் சனியுடன் செவ்வாய் சேர்ந்திருப்பதால் மனைவிக்கு ரத்த சோகை, தைராய்டு பிரச்னை, சமைக்கும்போது சிறுசிறு நெருப்புக் காயங்கள் வந்து செல்லும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்களைப் பற்றிய இமேஜ் ஒருபடி உயரும். கல்யாணம், காது குத்து, சீமந்தம் என வீடு களைகட்டும். நவீன ரக ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். 4ல் குருவும், ராகுவும் நிற்பதால் அவ்வப்போது தூக்கமில்லாமல் போகும். அயல்நாட்டுப் பயணங்கள் வரும். பழைய கசப்பான சம்பவங்களையெல்லாம் யோசிப்பீர்கள். அந்தப் போக்கை விட்டுவிடுவது நல்லது. எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளை உட்கொள்ளுங்கள். முன்கோபத்தை தவிர்க்கப் பாருங்கள்.

அரசியல்வாதிகளே! கட்சியின் தலைமை உங்களை பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள்.

கன்னிப் பெண்களே! காதல் கசந்து இனிக்கும். பெற்றோரின் பாசமழை பொழிவார்கள்.

மாணவ மாணவிகளே! பழைய நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். கணக்கு, அறிவியல் பாடத்திலிருக்கும் சூத்திரங்களையெல்லாம் ஒருமுறைக்கு இருமுறை எழுதிப் பார்ப்பது நல்லது.

வியாபாரத்தில் புது சலுகைத் திட்டங்களை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை கவருவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். சிலர் புதிய கிளைகள் தொடங்குவீர்கள். கடையை நவீனமாக்குவீர்கள். வேலையாட்களிடம் கறாராக இருங்கள். பங்குதாரர்களால் மறைமுகத் தொந்தரவுகள் வந்து போகும். பூ, ஸ்டேஷனரி, மர வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்யோகத்தில் அலட்சியம் வேண்டாம். உங்களைவிட அனுபவம் குறைவானவர்கள், வயதில் சிறியவர்களிடமெல்லாம் நீங்கள் அடங்கிப் போக வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

கலைத்துறையினரே! உங்களின் கடின உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். விவசாயிகளே! மகசூல் பெருகும். நிலத்தகராறுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் சுமூக தீர்வு காண்பீர்கள். சகிப்புத் தன்மையால் சாதித்துக் காட்டும் மாதமிது.

ராசியான தேதிகள்: மார்ச் 17, 18, 19, 20, 21, 22, 26, 28, 29 மற்றும் ஏப்ரல் 4, 6, 7, 13.

சந்திராஷ்டம தினங்கள்: மார்ச் 30ந் தேதி காலை 8.30 மணி முதல் 31 மற்றும் ஏப்ரல் 1ந் தேதி மாலை 4 மணி வரை பேச்சால் பிரச்னைகள் வரக்கூடும்.

பரிகாரம்: தஞ்சாவூரிலிருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ள திருவையாறு ஐயாறப்பரை தரிசித்து வாருங்கள். தந்தையிழந்த பிள்ளைக்கு உதவுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 02, 2016 11:21 pm

மிதுனம்

14.3.2016 முதல் 13.4.2016 வரை

நாடி வந்தவர்கள் எல்லோருக்கும் நல்லது செய்யும் குணமுடைய நீங்கள், யாருக்கும் தீங்கு எண்ண மாட்டீர்கள். கடந்த ஒருமாத காலமாக உங்கள் ராசிக்கு 9ம் வீட்டில் அமர்ந்து கொண்டு உங்களின் சேமிப்புகளை கரைத்ததுடன், தந்தையாருடன் மனவருத்தங்களையும், ஆரோக்யக் குறைவையும் தந்து கொண்டிருந்த சூரியன் இப்போது 10ம் வீட்டில் நுழைந்திருப்பதால் வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்.

சவாலான காரியங்களையும் சர்வ சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். பழைய சிக்கல்கள், பிரச்னைகளிலிருந்து விடுபடுவீர்கள். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். செவ்வாயும் சாதகமான வீடுகளில் செல்வதால் மகிழ்ச்சி, பணவரவு உண்டு. எதிரிகளால் மறைமுக ஆதாயமடைவீர்கள். பார்த்தும் பார்க்காமல் போன சில உறவினர்கள், நண்பர்கள் வலிய வந்து பேசுவார்கள். ஷேர் மூலம் பணம் வரும்.

வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் - மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு இருந்து வந்த கோபம், கூடாப்பழக்க வழக்கங்கள் விலகும். பாகப்பிரிவினை சாதகமாக முடியும். வாகனத்தை சீர் செய்வீர்கள். தாயாரின் உடல்நிலை சீராகும். ராகு வலுவாக இருப்பதால் எதையும் திட்டமிட்டு செய்வீர்கள். ஆன்மிகப் பெரியோர்களின் நட்பு கிடைக்கும். வீட்டு விசேஷங்களில் முதல் மரியாதை கிடைக்கும். 3ல் குரு தொடர்வதால் சில நேரங்களில் எதையோ இழந்ததைப்போல மனவாட்டத்துடன் காணப்படுவீர்கள். யாரேனும் உங்களைப் பற்றி விமர்சித்தால் அதைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள். “காய்த்த மரம் தான் கல்லடிபடும் என்பதை மறந்து விடாதீர்கள்”.

அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள்.

கன்னிப் பெண்களே! பெற்றோருக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள்.

மாணவ மாணவிகளே! உங்களுடைய தனித்திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். அரசு தேர்விற்கு ஆயத்தமாவீர்கள்.

வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகளை தள்ளுபடி விலைக்கே விற்றுத் தீர்ப்பீர்கள். மெடிக்கல், மளிகை, தானிய வகைகளால் ஆதாயம் உண்டு. வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். பங்குதாரர்களின் தொல்லைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள்.

உத்யோகத்தில் கூடுதல் நேரம் ஒதுக்கி வேலைபார்க்க வேண்டி வரும் என்றாலும் உங்களின் மாறுபட்ட கலைத்துறையினரே! வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள்.

விவசாயிகளே! தரிசு நிலங்களையும் இயற்கை உரத்தால் பக்குவப்படுத்தி விளையச் செய்வீர்கள். பூச்சித் தொல்லை வெகுவாக குறையும். சமயோஜித புத்தியாலும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையாலும் வெற்றி பெறும் மாதமிது.

ராசியான தேதிகள்: மார்ச் 19, 20, 21, 22, 28, 29, 30, 31 மற்றும் ஏப்ரல் 6, 7, 8, 9,11.

சந்திராஷ்டம தினங்கள்: ஏப்ரல் 1ந் தேதி மாலை 4 மணி முதல் 2 மற்றும் 3ந் தேதி இரவு 9.15 மணி வரை பயணங்களின்போது கவனம் தேவை.

பரிகாரம்: மேல்மருவத்தூருக்கு அருகேயுள்ள அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரரை தரிசித்து வாருங்கள். கோயிலில் அன்னதானம் செய்யுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 02, 2016 11:22 pm

கடகம்

14.3.2016 முதல் 13.4.2016 வரை

கள்ளங்கபடமில்லாத வெள்ளையுள்ளம் கொண்ட நீங்கள், மற்றவர்களது தேவையறிந்து உதவும் இயல்பு உடையவர்கள். சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் புத்திசாலித்தனமாகப் பேசி முக்கிய காரியங்களை நீங்கள் முடித்துக் காட்டுவீர்கள். சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவது, வீடு மாறுவது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த மொபைல் போன், டி.வியை வாங்குவீர்கள்.

கல்யாணப் பேச்சு வார்த்தை நல்ல விதத்தில் முடியும். சகோதரிக்கு திருமணம் கூடி வரும். மகளுக்கும் நல்ல வரன் அமையும். அவ்வப்போது சிறு கதைகள், கவிதைகள் எழுதி உங்களுடைய படைப்புத் திறனை நீங்கள் அதிகப்படுத்திக் கொள்வீர்கள். சூரியன் இந்த மாதம் முழுக்க 9ம் வீட்டில் நுழைந்திருப்பதால் கொஞ்சம் டென்ஷன் குறையும்.

என்றாலும் தந்தையாருக்கு வீண் டென்ஷன், கை, கால் மற்றும் நெஞ்சுவலி வரக்கூடும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். கைமாற்றாகவும் வெளியில் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். யோகாதிபதி செவ்வாய் 5ம் விட்டிலேயே ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் குழந்தை பாக்யம் கிடைக்கும். பூர்வீகச் சொத்தில் மராமத்துப் பணிகளை மேற்கொள்வீர்கள்.

என்றாலும் சனியும் 5ல் தொடர்வதால் கர்ப்பிணிப் பெண்கள் எடைமிகுந்த பொருட்களை சுமக்க வேண்டாம். வாகனத்தை வேகமாக இயக்க வேண்டாம். ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால் கால், கழுத்து, முதுகு மற்றும் உடல் வலி வந்துபோகும். தூங்கும் இடத்தையும் அடிக்கடி மாற்ற வேண்டாம். பணப்பட்டுவாடா விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள். முக்கியமான விஷயங்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே நேரடியாக சென்று செய்து முடிப்பது நல்லது.

அரசியல்வாதிகளே! வீண் பேச்சில் காலம் கழிக்காமல் செயலில் ஆர்வம் காட்டுவது நல்லது.

கன்னிப் பெண்களே! தவறான எண்ணங்களுடன் பழகியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். புதுவேலை அமையும்.

மாணவ மாணவிகளே! கல்யாணம், திருவிழா என்று அலையாமல் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். கெட்ட நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள். குரு வலுவாக இருப்பதால் வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். பாக்கித் தொகைகள் வசூலாகும். இயக்கம், சங்கம் இவற்றில் பதவிகள் கிடைக்கும். வேலையாட்களால் வியாபாரத்தின் தரம் உயரும். செங்கல் சூளை, இரும்பு, பதிப்பகம் வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்யோகத்தில் உங்களுக்கு எதிராக இருந்த அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார். சக ஊழியர்கள் பக்கபலமாக இருப்பார்கள். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.

கலைத்துறையினரே! வருமானம் உயர வழி பிறக்கும்.

விவசாயிகளே! வற்றிய கிணற்றில் நீர் ஊற செலவு செய்து கொஞ்சம் தூர் வாருவீர்கள். வங்கிக் கடன் கிடைக்கும். அனுபவ அறிவை பயன்படுத்தி முன்னேறும் மாதமிது.

ராசியான தேதிகள்: மார்ச் 14, 15, 21, 22, 23, 24, 25, 30, 31 மற்றும் ஏப்ரல் 1, 2, 8, 9, 11.

சந்திராஷ்டம தினங்கள்: ஏப்ரல் 3ந் தேதி இரவு 9.15 மணி முதல் 4 மற்றும் 5ந் தேதிகளில் முன்கோபத்தால் பகை உண்டாகும்.

பரிகாரம்: திருச்சி - திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரியை தரிசித்து வாருங்கள். பசுவிற்கு அகத்திக்கீரை கொடுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 02, 2016 11:23 pm

சிம்மம்

14.3.2016 முதல் 13.4.2016 வரை

எதிரிக்கும் நல்லதே நினைக்கும் மனது படைத்த நீங்கள், எப்போதும் ஒற்றுமை உணர்வுக்கு உரம் அளிப்பவர்கள். உங்கள் ராசிக்கு சாதகமான வீடுகளில் சுக்கிரனும், புதனும் சென்று கொண்டிருப்பதால் அரைகுறையாக நின்ற வேலைகள் முடிவடையும். பிரபலங்களின் நட்பால் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். ஓரளவு பணவரவு உண்டு. கடந்த ஒரு மாத காலமாக உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டேயிருந்ததால் கொஞ்சம் கோபப்பட்டீர்கள்.

அவ்வப்போது டென்ஷனானீர்கள். இப்போது 8ம் வீட்டில் நுழைந்திருப்பதால் கோபம் குறையும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். நீங்கள் எதிர்பார்த்திருந்த தொகை தாமதமானாலும் எதிர்பாராத இடத்திலிருந்து பணம் வரும். ராசிக்குள் குருவும், ராகுவும் நிற்பதுடன் அர்த்தாஷ்டமச் சனியும் தொடர்வதால் உடல் நலம் பாதிக்கும். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம்.

பெயர், புகழ், கௌரவம் குறைந்து விடுமோ என்ற ஒரு பயம் வரும். அலை பேசியில் பேசிக் கொண்டு சாலைகளை கடக்கவோ, வாகனத்தை இயக்கவோ வேண்டாம். குடும்பத்தினருடன் வெளியூர் செல்வதாக இருந்தால் வீட்டு பத்திரங்கள், தங்க ஆபரணங்களை பத்திரப்படுத்தி வையுங்கள். கவனக் குறைவால் களவுபோக வாய்ப்பிருக்கிறது. உங்களுக்கு களங்கம் ஏற்படுத்த சிலர் முயற்சி செய்வார்கள் அல்லது உங்கள் பெயரை தவறாக சிலர் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது. அதனால் யாரையும் தாக்கிப் பேசுவதோ, தூக்கிப் பேசுவதோ வேண்டாம். உங்களின் யோகாதிபதியான செவ்வாய் கேந்திரத்தில் ஆட்சிபெற்று அமர்ந்திருப்பதால் உடன்பிறந்தவர்களின் பாசமான விசாரிப்புகள் ஆறுதலாக இருக்கும். ஒரு சொத்தை விற்று மறுசொத்து வாங்குவீர்கள். அரசியல்வாதிகளே! கோஷ்டிச் சண்டையிலிருந்து ஒதுங்குங்கள்.

கன்னிப் பெண்களே! பெற்றோரின் ஆலோசனையை ஏற்பது நல்லது. புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம்.

மாணவ மாணவிகளே! சாதித்துக் காட்ட வேண்டுமென்ற வேகம் இருந்தால் மட்டும் போதாது அதற்கான உழைப்பு வேண்டும். அன்றன்றைய பாடங்களை அன்றே படியுங்கள்.

வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். புது முதலீடுகளோ, முயற்சிகளோ வேண்டாம். மற்றவர்களை நம்பியும் முக்கிய காரியங்களில் ஈடுபடாதீர்கள். பங்குதாரர்களால் பிரச்னைகள் வரும். அரசாங்கத்தை எதிர்த்துக் கொள்ளாதீர்கள். வழக்கில் அவசரம் வேண்டாம். கமிஷன், உணவகம், ஏற்றுமதி, இறக்குமதி வகைகளால் ஆதாயமடைவீர்கள். வேலையாட்களை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நல்லது.

உத்யோகத்தில் பணிகளை போராடி முடிக்க வேண்டியது வரும். விரும்பத்தகாத இடமாற்றம் வரும். நீங்கள் செய்து முடித்த வேலைக்கு சக ஊழியரோ அல்லது மூத்த அதிகாரியோ உரிமை கொண்டாடுவார்கள்.

கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களால் ஆதாயமடைவீர்கள்.

விவசாயிகளே! பம்பு செட் பழுதாகி சரியாகும். எலி மற்றும் பூச்சித் தொல்லை அதிகமாகும். நாலும் தெரிந்த நல்லவர்களின் வழிகாட்டுதலால் இலக்கை தொடும் மாதமிது.

ராசியான தேதிகள்: மார்ச் 14, 15, 16, 17, 24, 25, 26 மற்றும் ஏப்ரல் 1, 2, 3, 4, 5, 11, 12, 13.

சந்திராஷ்டம தினங்கள்: ஏப்ரல் 6, 7 ஆகிய தேதிகளில் எதிலும் நாவடக்கத்துடன் செயல்படப்பாருங்கள்.

பரிகாரம்: சுசீந்திரம் அனுமனை தரிசித்து வாருங்கள். வறியவர்களுக்கு ஆடை தானம் கொடுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 02, 2016 11:24 pm

கன்னி

14.3.2016 முதல் 13.4.2016 வரை

விருப்பு வெறுப்பின்றி அனைவரிடமும் நடுநிலையோடு பழகும் குணமுடைய நீங்கள், எதிரிக்கு நல்லதையே செய்யக் கூடியவர்கள். சனியும், செவ்வாயும் வலுவாக 3ம் வீட்டில் நிற்பதால் மனோபலம் கூடும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சகோதர வகையில் நன்மை உண்டாகும். கேது 6ம் வீட்டில் நிற்பதால் எங்கு சென்றாலும் முதல் மரியாதை கிடைக்கும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். ஹிந்தி, தெலுங்கு பேசுபவர்களால் உதவிகள் உண்டு.

வெளிவட்டாரத்தில் பெருமையாகப் பேசப்படுவீர்கள். 1ந் தேதி வரை சுக்கிரன் 6ல் மறைந்திருப்பதால் சளித் தொந்தரவு, கணவன்-மனைவிக்குள் விவாதங்கள், வாகனப் பழுது வந்து நீங்கும். 2ந் தேதி முதல் சுக்கிரன் 7ம் வீட்டில் உச்சம் பெற்று அமர்ந்து உங்கள் ராசியையும் பார்க்க இருப்பதால் பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். கணவன் - மனைவிக்குள் இருந்து வந்த பிணக்குகள் நீங்கும். அடிக்கடி தொல்லை தந்த வாகனம் சரியாகும்.

பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். வீடு மாறுவீர்கள். நல்ல காற்றோட்டம், குடிநீர் வசதியுள்ள வீடு அமையும். தந்தையாருடன் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். உங்கள் ராசிநாதன் புதனும் சாதகமாக இருப்பதால் வீடு கட்டுவதற்கு சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ அப்ரூவல் கிடைக்கும். வங்கிக் கடன் உதவியும் கிட்டும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள்.

நட்பு வட்டம் விரியும். உங்கள் ராசியை சூரியன் பார்த்துக் கொண்டிருப்பதாலும், 12ல் குருவும், ராகுவும் நிற்பதாலும் ஓய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். தூக்கம் குறையும். முடிந்தால் யோகா, தியானம் செய்யப் பாருங்கள். மனைவிக்கு சிறுசிறு நெருப்புக் காயங்கள், மாதவிடாய் கோளாறு வந்துபோகும்.

அரசியல்வாதிகளே! தலைமையைப் பற்றி விமர்சனம் செய்து கொண்டிருக்காமல், தொகுதி மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பாருங்கள்.

மாணவ, மாணவிகளே! மதிப்பெண் உயரும். சக மாணவர்களின் சந்தேகங்களை தீர்த்து வைப்பீர்கள்.

கன்னிப் பெண்களே! இந்த மாதம் நல்ல செய்தி வரும். உங்கள் மனதிற்கேற்ப நல்ல வரன் அமையும். வேற்று மதத்தை சேர்ந்தவர்கள் நண்பர்களாவார்கள்.

வியாபாரத்தில் ராஜதந்திரமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். வேலையாட்கள் மதிப்பார்கள். கன்ஸ்ட்ரக்‌ஷன், கட்டிட உதிரி பாகங்கள், பதிப்பகம் வகைகளால் லாபம் அதிகரிக்கும். புதிய முதலீடுகள் செய்து தொழிலை விரிவுபடுத்துவீர்கள். அக்கம் பக்க கடைக்காரருடன் இருந்து வந்த சண்டை, சச்சரவுகள் நீங்கும். விலகிச் சென்ற பங்குதாரர் மீண்டும் வந்து இணைவார்.

உத்யோகத்தில் சில சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். எல்லா நேரமும் கறாராகப் பேசாமல் கொஞ்சம் கலகலப்பாகவும் பேசக் கற்றுக் கொள்ளுங்கள்.

கலைத்துறையினரே! பெரிய வாய்ப்புகள் தேடி வரும்.
விவசாயிகளே! எதிர்பார்த்த பட்டா வந்து சேரும். ஊரில் மதிப்பு, மரியாதைக் கூடும். அதிரடி முன்னேற்றங்களை சந்திக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்: மார்ச் 17, 18, 19, 20, 26, 27, 29, 30, 31 மற்றும் ஏப்ரல் 4, 5, 6, 7, 13.

சந்திராஷ்டம தினங்கள்: ஏப்ரல் 8, 9 ஆகிய தேதிகளில் வேலைச்சுமை அதிகரிக்கும்.

பரிகாரம்: திருவண்ணாமலையிலுள்ள சேஷாத்ரி சுவாமிகளின் ஜீவசமாதியை தரிசித்துவிட்டு வாருங்கள். ரத்ததானம் செய்யுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 02, 2016 11:24 pm

துலாம்

14.3.2016 முதல் 13.4.2016 வரை

தோல்வி கண்டு துவளாமல், விசையுறு பந்தைப்போல் மீண்டும் எழும் நீங்கள், கடின உழைப்பாளிகள். உங்களையும் அறியாமல் சில நேரங்களில் உணர்ச்சி வசப்படுவீர்கள். கடந்த ஒருமாத காலமாக 5ம் வீட்டில் அமர்ந்துகொண்டு உங்களுக்கு வீண் குழப்பங்களையும், பிள்ளைகளால் பிரச்னைகளையும் தந்த சூரிய பகவான் இப்போது 6ல் நுழைந்திருப்பதால் எதிர்ப்புகள் அடங்கும்.

நாடாளுபவர்களின் தொடர்பு கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருந்த உங்கள் மகனுக்கு வேலை அமையும். 30ந் தேதி முதல் புதன் 7ல் அமர்ந்து உங்கள் ராசியை பார்க்கயிருப்பதால் சோர்வு, களைப்பு நீங்கி உற்சாகமடைவீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். நண்பர்களுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். 1ந் தேதி வரை சுக்கிரன் சாதகமாக இருப்பதால் தடைபட்ட வேலைகள் முடியும்.

ஆனால், 2ந் தேதி முதல் உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 6ம் வீட்டில் சென்று மறைவதால் வாகனத்தில் செல்லும் போது மறவாமல் தலைக்கவசம் அணிந்து செல்லுங்கள். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். கணவன் மனைவிக்குள் மனஸ்தாபங்கள் வந்து போகும்.

வீண் சந்தேகத்தை தவிர்க்கப் பாருங்கள். மின்சார சாதனங்கள் பழுதாகும். ஏழரைச்சனி நடைபெறுவதால் எதிர்பாராத அடுத்தடுத்து செலவுகளால் பணப்பற்றாக்குறை ஏற்படும். கடன் பிரச்னையால் கௌரவம் குறைந்து விடுமோ என்றெல்லாம் பயம் வந்துபோகும் ராசிக்கு 2ல் செவ்வாய் நிற்பதால் சகோதர வகையில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். மனைவி வழியிலும் அடுத்தடுத்து சுபச் செலவுகள் வந்து செல்லும். ராகு லாப வீட்டில் நிற்பதால் ஷேர் மூலம் பணம் வரும். நண்பர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

அரசியல்வாதிகளே! கட்சி மேலிடம் உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்கும்.

கன்னிப் பெண்களே! உங்களின் நீண்ட நாள் கனவுகள் நனவாகும். மாணவ

மாணவிகளே! படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். வகுப்பறையில் சந்தேகங்களை ஆசிரியரிடம் உடனுக்குடன் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். குரு லாப வீட்டில் நிற்பதால் வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் சம்பாதிப்பீர்கள். புது சரக்குகளும் கொள்முதல் செய்வீர்கள். கல்வித் தகுதியில் சிறந்த அனுபவமிக்க வேலையாட்களை பணியில் சேர்ப்பீர்கள். ஸ்டேஷனரி, பெட்ரோகெமிக்கல், ரியல் எஸ்டேட் வகைகளால் லாபம் அதிகரிக்கும். பங்குதாரர்கள் கொஞ்சம் ஏடாகூடமாகப் பேசுவார்கள்.

உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். அலுவலகம் சம்பந்தமாக சிலர் அயல்நாடு செல்வீர்கள்.

கலைத்துறையினரே! பெரிய வாய்ப்புகளுக்காக காத்திருக்காமல் சின்னதாக இருந்தாலும் பயன்படுத்திக் கொள்ளப் பாருங்கள்.

விவசாயிகளே! பருப்பு, எண்ணெய் வித்துக்களால் ஆதாயமடைவீர்கள். பம்பு செட் பழுதாகும். அக்கம்பக்கம் பார்த்துச் செயல்பட வேண்டிய மாதமிது.

ராசியான தேதிகள்: மார்ச் 19, 20, 21, 22, 28, 29, 30, 31 மற்றும் ஏப்ரல் 2, 6, 7, 8, 9.

சந்திராஷ்டம தினங்கள்: மார்ச் 14, 15ந் தேதி மற்றும் ஏப்ரல் 10, 11, 12ந் தேதி காலை 9 மணி வரை அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்: திருக்கோவலூர் திருவிக்ரமப்பெருமாளை தரிசித்து வாருங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 02, 2016 11:25 pm

விருச்சிகம்

14.3.2016 முதல் 13.4.2016 வரை

அடக்குமுறைக்கும், ஆணவத்துக்கும் அஞ்சாத நீங்கள், அன்புக்கு அடிமையாகிவிடுவீர்கள். யதார்த்தமாகப் பேசி அனைவரையும் வசீகரிப்பீர்கள். உங்கள் ராசிக்கு சாதகமான வீடுகளில் சுக்கிரன் சென்று கொண்டிருப்பதால் போராட்டங்களை சமாளிக்கும் பக்குவம் உண்டாகும். ராசிநாதன் ராசியிலேயே ஆட்சிபெற்று அமர்ந்திருப்பதால் எதிர்ப்புகள் ஓரளவு குறையும். சொத்து வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும். வழக்கு சாதகமாகும்.

என்றாலும் சனியுடன் சேர்ந்து நிற்பதால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறையக்கூடும். எனவே, இரும்புச் சத்து, நார்ச் சத்துள்ள காய், கனிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். சாலைகளை கவனமாகக் கடந்து செல்லுங்கள். சிறுசிறு காயங்கள் ஏற்படக்கூடும். சூரியன் 5ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் பிள்ளைகளால் அலைச்சல் இருக்கும்.

அவர்களால் மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். அவர்களிடம் எதிர்மறையாக பேசாதீர்கள். அவர்கள் உங்களிடம் எதிர்மறையாக கேள்வி கேட்டாலும் நீங்கள் பொறுத்துக் கொள்வது நல்லது. கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்துபோகும்.

உறவினர், நண்பர்களைப் பற்றி வெளியில் விமர்சித்துப் பேசவேண்டாம். 10ல் குருவும், ராகுவும் தொடர்வதால் உங்கள் திறமை மீது உங்களுக்கே சந்தேகம் வரும். அண்டை மாநிலப் புண்ணியத் தலங்களுக்கு சென்று வருவீர்கள். திடீரென்று அறிமுகமாகும் நபர்களை நம்பி பெரிய காரியங்களில் ஈடுபட வேண்டாம். யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையொப்பமிட வேண்டாம்.

30ந் தேதி முதல் புதன் ராசிக்கு 6ல் மறைவதால் தொண்டைப் புகைச்சல், காய்ச்சல், நரம்புச் சுளுக்கு, கழுத்து வலி வந்து போகும். உறவினர், நண்பர்கள் விஷயத்தில் அத்துமீறி தலையிட வேண்டாம்.

அரசியல்வாதிகளே! எந்த கோஷ்டியிலும் சேராமல் நடுநிலையாக இருக்கப் பாருங்கள்.

கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தில் தள்ளியிருங்கள். பெற்றோருக்கு எதிராக எதுவும் செய்து கொண்டிருக்க வேண்டாம்.

மாணவ, மாணவிகளே! நண்பர்களுடன் வீண் அரட்டை பேச்சை தவிர்த்து தேர்வில் கவனம் செலுத்துங்கள். கடைசி நேரத்தில் படித்துக் கொள்ளலாம் என அலட்சியமாக இருந்து விடாதீர்கள்.

வியாபாரம் சுமார்தான் போட்டிகளால் விழிபிதுங்குவீர்கள். நயமாகப் பேசி பழைய பாக்கிகளை வசூலிக்கப் பாருங்கள். வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த முடியாமல் திணறுவீர்கள். வேலையாட்கள் அவ்வப்போது விடுப்பில் செல்வார்கள். எனவே, நீங்களே எல்லாவற்றையும் பார்க்க வேண்டி வரும். மூலிகை, சிமெண்ட், கன்சல்டன்சி, மர வகைகளால் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களில் ஒருசிலர் அவர்களின் வீழ்ச்சிக்கு நீங்கள் காரணம் என்று தவறாகப் புரிந்து கொள்வார்கள். உங்களுக்கு இருக்கும் மூத்த அதிகாரிகளின் நெருக்கம் சிலரின் கண்ணை உருத்தும்.

கலைத்துறையினரே! உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.

விவசாயிகளே! விளைச்சல் குறையும். கடனை நினைத்து அவ்வப்போது அச்சம் வரும். எதிர்நீச்சல் போட்டு கரையேறும் மாதமிது.

ராசியான தேதிகள்: மார்ச் 14,15, 21, 22, 23, 24, 30 மற்றும் ஏப்ரல் 1, 2, 3, 8, 9, 11.

சந்திராஷ்டம தினங்கள்: மார்ச் 16, 17ந் தேதி மற்றும் ஏப்ரல் 12ந் தேதி காலை 9 மணி முதல் 13ந் தேதி வரை எதிர்பார்த்தவை தாமதமாக முடியும்.

பரிகாரம்: திருத்தணி முருகனை தரிசித்து வாருங்கள். வயதானவர்களுக்கு செருப்பும் குடையும் வாங்கிக் கொடுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 02, 2016 11:26 pm

தனுசு

14.3.2016 முதல் 13.4.2016 வரை

விடாப்பிடியாக செயல்பட்டு தடைபட்ட காரியங்களை தாமதமின்றி முடிக்கும் நீங்கள் எப்போதும் தனிமையையே விரும்புவீர்கள். உங்கள் ராசிக்கு 9ம் வீட்டில் குருவும், 3ல் கேதுவும் வலுவாக அமர்ந்திருப்பதால் வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். தொழிலதிபர்களின் நட்பு கிடைக்கும். பங்குச் சந்தை மூலமாக பணம் வரும். உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். உங்களின் பிரபல யோகாதிபதியான சூரியன் 4ம் வீட்டில் நிற்பதால் எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வரும். தந்தையாரின் உடல் நிலை சீராகும்.

கௌரவப் பதவிகள் வரும். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். செவ்வாய் ராசிக்கு 12ம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் பூர்வீகச் சொத்தில் உங்கள் ரசனைக்கேற்ப சில மாற்றங்கள் செய்வீர்கள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். அதிக வட்டிக் கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். சகோதர வகையில் பாசப்பிணைப்பு அதிகரிக்கும்.

புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் பணவரவு உண்டு. புது வேலை அமையும். மனைவியுடன் மனம் விட்டு பேசுவீர்கள். தள்ளிப்போன திருமணம் கூடி வரும். சிலர் அயல்நாடு சென்று வருவீர்கள். மனைவிவழி உறவினர்களால் இருந்த பிரச்னைகள் தீரும். வெள்ளிப் பொருட்கள் வாங்குவீர்கள். ராகு 9ல் நிற்பதால் முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும்.

குடும்பத்துடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். எதிர்மறை எண்ணங்கள் தலைதூக்கும். ஏழரைச் சனி தொடர்வதால் ஆத்திரத்தில் எதிலும் அவசரப்பட வேண்டாம். சில நேரங்களில் எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாததுபோல ஆழ்மனதில் ஒரு வெறுமை, வெறுப்பு வந்துசெல்லும்.

அரசியல்வாதிகளே! பொதுக்கூட்டம், போராட்டங்களில் முன்னிலை வகிப்பீர்கள்.

மாணவ, மாணவிகளே! உங்களுடைய பொது அறிவுத்திறன் வளரும். படிப்பிலும் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள்.

கன்னிப் பெண்களே! காதல் கனியும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். பாக்கிகளில் ஒன்று, இரண்டு வசூலாகும். வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கு கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். ஒத்துவராத பங்குதாரரை நீக்கிவிட்டு புதியவரை சேர்ப்பீர்கள். கடையை வேறு இடத்திற்கு மாற்றுவீர்கள். கமிஷன், கெமிக்கல், ரியல் எஸ்டேட் வகைகளால் ஆதாயமடைவீர்கள்.

உத்யோகத்தில் உயரதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சம்பள பாக்கி கைக்கு வரும்.

கலைத்துறையினரே! உங்கள் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். விவசாயிகளே! காய்கறி, பழ வகைகளால் லாபமடைவீர்கள். அடகிலிருந்த வீட்டுப்
பத்திரத்தை மீட்பீர்கள். தொடர்முயற்சியால் விட்டதைப் பிடிக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்: மார்ச் 14, 15, 23, 24, 25, 26, 27 மற்றும் ஏப்ரல் 2, 3, 4, 10, 11, 12.

சந்திராஷ்டம தினங்கள்: மார்ச் 18, 19 மற்றும் 20ந் தேதி மதியம் 1.30 மணி வரை உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லது.

பரிகாரம்: கும்பகோணத்திற்கு அருகேயுள்ள திருபுவனத்தில் அருளும் சரபேஸ்வரரை தரிசித்து வாருங்கள். கட்டிடத் தொழிலாளிகளுக்கு மோர் அல்லது பானகம் கொடுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 02, 2016 11:27 pm

மகரம்

14.3.2016 முதல் 13.4.2016 வரை

உழைப்பவர்களுக்காக உரத்துக் குரல் கொடுக்கும் நீங்கள், முதலாளித்துவத்தை வெறுப்பவர்கள். அவ்வப்போது நீங்கள் கோபப்பட்டாலும், அதில் நியாயம் இருக்கும். கடந்த ஒருமாத காலமாக 2ம் வீட்டில் அமர்ந்துக் கொண்டு சேமிப்புகளை கரைத்து, வேகமாகவும், கோபமாகவும் பேச வைத்து, குடும்பத்திலும் சண்டை, சச்சரவுகளை ஏற்படுத்திய சூரியன் இப்போது 3ம் வீட்டில் நுழைந்திருப்பதால் எங்கு சென்றாலும் வெற்றி கிடைக்கும்.

உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அறிவு, ஆற்றல் பெருகும். அனுபவ அறிவையும் பயன்படுத்துவீர்கள். திடீர் பணவரவு உண்டு. செவ்வாயும் சாதகமாக இருப்பதால் சகோதரர்களின் அரவணைப்பு அதிகரிக்கும்.

அவர்கள் உங்களின் முக்கிய எதிர்பார்ப்பையும் நிறைவேற்றுவார்கள். உங்களின் பிரபல யோகாதிபதிகளான சுக்கிரனும், புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் குடும்ப வருமானத்தை உயர்த்த வழி கிடைக்கும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

வாகன வசதி பெருகும். உறவினர், நண்பர்கள் வீட்டு கல்யாணம், காதுகுத்து போன்ற விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். முதல் மரியாதையும் கிடைக்கும். அரசியலில் செல்வாக்கு உயரும். உங்கள் ராசிநாதன் சனிபகவான் வலுவாக காணப்படுவதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். வேற்றுமதம், மாற்றுமொழியினரால் நன்மை உண்டாகும்.

நீண்ட காலமாக பார்க்க நினைத்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். சர்ப்ப கிரகங்கள் மற்றும் குரு உங்களுக்கு சாதகமாக இல்லாததால் சோர்வு, களைப்பு, தோலில் அலர்ஜி வந்து செல்லும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். அரசியல்வாதிகளே! சகாக்கள் உங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொள்வார்கள்.

கன்னிப் பெண்களே! உங்களின் தனித்திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு வரும்.

மாணவ-மாணவிகளே! நினைவாற்றல் அதிகரிக்கும். சக மாணவர்களும் தேர்வு சம்பந்தமாக உங்களை கலந்தாலோசிப்பார்கள்.

வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து அதற்கேற்ப செயல்படுவீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வாடிக்கையாளர்களின் தேவையறிந்து செயல்படுவதால் லாபம் அதிகரிக்கும். ஸ்பெக்குலேஷன், துணி, மூலிகை, செங்கல் சூளை வகைகளால் லாபமடைவீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாகும். உயரதிகாரிகளால் மறைமுகத் தொந்தரவுகள் இருக்கும். சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

கலைத்துறையினரே! பொது நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்குமளவிற்கு பிரபலமாவீர்கள்.

விவசாயிகளே! கடனாக கேட்ட இடத்தில் பணம் கிடைத்து புது நிலம் கிரயம் செய்வீர்கள். புது பம்பு செட் வாங்குவீர்கள். வளைந்து கொடுத்து வாகை சூடும் மாதமிது.

ராசியான தேதிகள்: மார்ச் 18, 19, 26, 27, 28, 29 மற்றும் ஏப்ரல் 4, 5, 6, 7, 8, 9, 13.

சந்திராஷ்டம தினங்கள்: மார்ச் 20ந் தேதி மதியம் 1.30 மணி முதல் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் பழைய சிக்கல்கள் தலைத்தூக்கும்.

பரிகாரம்: வேதாரண்யம் மறைக்காடரை தரிசித்துவிட்டு அங்கிருக்கும் துர்க்கையை தரிசித்து விட்டு வாருங்கள். சாலையோரம் வாழும் சிறார்களுக்கு முடிந்தளவு உதவி செய்யுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக