ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறுதி வரை உறுதி வேண்டும்!

Go down

 இறுதி வரை உறுதி வேண்டும்! Empty இறுதி வரை உறுதி வேண்டும்!

Post by ayyasamy ram Sun Nov 01, 2015 5:34 am

 இறுதி வரை உறுதி வேண்டும்! YRdd9eTnerRwJUH0zAfQ+helth
-
கடந்த வாரம் மூத்த நண்பர்கள் மூவரோடு கோல்ஃப் ஆடிக்
கொண்டிருந்தேன். மூவருமே 70 வயதைத் தாண்டியவர்கள்.
3 மணி நேரம் எனக்கு இணையாக ஆடிய அவர்களின் உடல்
மற்றும் மன வலிமையைக் கண்டு ஆச்சரியம் தெரிவித்தேன்
-
அந்த மூவரும் இணைந்து, குழந்தைகளால் கைவிடப்பட்ட,
ஒதுக்கித் தள்ளிய, அடித்து துரத்திய, வயோதிக
பெற்றோருக்காக ‘இலவச முதியோர் இல்லம்’ அமைத்து,
மாபெரும் சேவையை செவ்வனே செய்து வருகிறார்கள்
என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது!

எனது ஆச்சரியம் கண்ட அவர்களில் ஒருவர், ஒரு நீதிக் கதையோடு
ஆரம்பித்தார்... ‘‘தலைசிறந்த, ஒழுக்கம் வாய்ந்த, படிப்பறிந்த,
பணக்கார பெற்றோர் தங்களின் குழந்தைகளை சீரும் சிறப்புமாக
வளர்த்து ஆளாக்குகிறார்கள்.

அனைத்துச் செல்வங்களையும் வழங்கி, திருமணம் செய்து வைத்து,
சொத்துகள் அனைத்தையும் எல்லோருக்கும் சமமாக பிரித்து
கொடுத்து, பேரப்பிள்ளைகளைப் பார்த்து சந்தோஷம் அடைகிறார்கள்.
இனி தங்கள் இருவரையும் பிள்ளைகள் பார்த்துக் கொள்வார்கள்
என்ற நம்பிக்கை வந்த போதுதான் வயது முதிர்வு சைத்தானின்
தாண்டவம் தொடங்கியது.

நோய்கள் வந்தன. உடல்நலம் குன்றியது. இனி பெற்றோரால்
பயன் இல்லை என்று தெரிந்து கொண்ட பிள்ளைகளோ,
அவர்களை வைத்து காப்பாற்ற ஆர்வம் காட்டாமல், வெறுத்து
ஒதுக்கி, ஒரு சிறிய வீட்டில் தனியே விட்டு விட்டனர்.

கடைசியில் பெற்றோர் இருவரும் உடல் நொந்து, மனம் வெந்து,
வெம்பி இறந்து விட்டனர். அவர்களின் அடக்கம் முடிந்த பின்,
‘சனியன்களின் தொல்லை தீர்ந்தது’ என பிள்ளைகள்
சந்தோஷமாக இருக்கும் வேளையில், அந்த சிறிய வீட்டில் இருந்த
தாத்தா-பாட்டியின் பொருட்களை பேரப்பிள்ளைகள் சேகரிக்கத்
தொடங்கினார்கள்.

‘ஏன் இதையெல்லாம் எடுத்துக் கொண்டு இருக்கிறீர்கள்’
எனக் கேட்ட போது, குழந்தைகள் நிதானமாக கூறினார்கள்...
‘நீங்கள் தாத்தா-பாட்டியை ஒதுக்கி, தனியே வாழ வைத்தது
போல, நாளை உங்களையும் நாங்கள் தனியே விடும் போது,
இதையெல்லாம் கொடுக்கத்தான்!’- என்று’’
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84648
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 இறுதி வரை உறுதி வேண்டும்! Empty Re: இறுதி வரை உறுதி வேண்டும்!

Post by ayyasamy ram Sun Nov 01, 2015 5:35 am

-
இந்த நீதிக் கதையை முடித்துவிட்டு, முதியோர் இல்லத்தில்,
கொடுமைகள் பல கண்ட ஒரு பெற்றோர் எழுதிய உருக்கமான
கடிதத்தையும் கொடுத்தார். அதன் சாராம்சம்...
-
‘எங்களது பேரன்புக்குரிய பிள்ளைகளே!
நாங்கள் இருவரும் முதுமை அடைந்த பிறகு, முடிகள் பஞ்சு போல
வெளுத்து, விழுந்து, பார்வை மங்கி, பல் எல்லாம் கொட்டி, தோல்
சுருங்கி, அருவெறுப்பான தோற்றத்தோடு, கை, கால், உடல்,
மனவலிமை அனைத்தையும் இழந்து, ஒவ்வொரு நோயாக
எங்களை துவம்சம் செய்ததே... எங்களின் வயோதிகத்தை,
முதுமையின் முடிவை, குழந்தைகளாகிய நீங்கள் பொறுமையாக,
அன்பாக, இயற்கையின் உண்மையாக புரிந்து கொள்வீர்கள் என
நம்பிய எங்கள் நம்பிக்கை சுக்கு நூறாகி விட்டதே!
-
இப்போது வேளாவேளைக்கு முன்பு போல பசி வருவதில்லை.
அப்படி பசி வந்த நேரங்களில், நாங்கள் சாப்பிடும் போது கைகள்
நடுங்கி சிதறும் போதும், கழிவறைக்குப் போக முடியாமல்,
குளிக்கக்கூட தெம்பு இல்லாமல், உடை உடுத்த வலுவிழந்த போதும்,
உடை உடலில் நிற்காது விழுந்த போதும், நீங்கள் எங்களை திட்டி,
கத்திய வார்த்தைகள், இன்றும் காது கேட்காத காதில் ரீங்காரமிடுகிறது.

இதே நிலையில் நீங்கள் குழந்தையாக இருந்த காலகட்டத்தில்,
பேசத் தெரியாத உங்களை பேச வைத்தோம். சாப்பிடத் தெரியாத
உங்களை நிலவைக் காட்டி, இயற்கையைக் காட்டி, பஸ், கார்களை,
சைக்கிள்களை காட்டி ஒவ்வொரு வேளைக்கும் 2 மணி நேரம்
பொறுமையாக ஊட்டினோம்.

குளிக்க முடியாத, தெரியாத உங்களை வெதுவெது நீரில் குளிக்க
வைத்து, விதவிதமான உடைகள் உடுத்தி, பவுடர் அடித்து திருஷ்டிப்
பொட்டு வைத்து அழகு பார்த்தோம்.

உங்களுக்கு நலக்குறைவுகள் வரும் போது, அதிகாலை, மதியம்,
மாலை, நடு இரவு என எந்நேரமானாலும் டாக்டர்களிடம் ஓடி
பணத்தை இறைத்து உயிர் காத்தோம். உயர் கல்வி அளித்தோம்.

உங்களது அனைத்து உரிமைகளுக்காகவும் உண்ணாமல்,
உறங்காமல் உங்களின் முன்னேற்றம் ஒன்றே எங்களின் குறிக்
கோளாக கருதி, எங்களை உங்களுக்காக அர்ப்பணித்ததை
கொஞ்சமாவது நினைத்துப் பார்க்க கூடாதா?

உங்கள் குடும்ப வாழ்க்கையில், குழந்தை வளர்ப்பில் ஏதாவது
தவறு இருந்தாலோ, தினசரி வாழ்க்கையின் அணுகுமுறையில்
தவறுகள் செய்யும் போது, ‘இது பின்னால் பேரழிவை ஏற்படுத்துமே’
என பயந்து, அறிவுரை செய்தோம்...

‘வயசான காலத்தில், சும்மா தொண தொணத்து சொன்னதையே
சொல்லிக்கிட்டு எங்கள் உயிரை வாங்குகிறீர்கள்... எங்கேயாவது
போய் தொலைய வேண்டியதுதானே’ என்கிறீர்கள். நீங்கள்
குழந்தையாக இருந்தபோது, உங்களை தூங்க வைக்கும் நேரம்
சொன்ன கதையையே ஆயிரம் தடவை கேட்ட ஞாபகம் இல்லையா,
எங்களது அருமை குழந்தைகளே!நாங்கள் உங்களிடம்
வேண்டுவதெல்லாம்...

*எங்களை வெறுத்து ஒதுக்காதீர்கள்.

*எங்கள் மேல் கோபம் கொள்ளாதீர்கள்.

*உங்களுக்காகவே வாழ்ந்து, உடல்-மன வலிமை அனைத்தையும்
இழந்து, வாழ மனம் இல்லாமல், மரணத்துக்காகக் காத்திருக்கும்
வேளையில் ‘இதைச் செய், அதைச் செய்’ என கட்டாயப்படுத்தாதீர்கள்.

*எங்களின் முதுமைக்கு, வயதுக்கு மரியாதை தாருங்கள்.

*நாங்கள் உங்களோடு இருப்பதால் எங்களக் கண்டு கவலையோ,
பரிதாபமோ அடைய வேண்டிய அவசியம் இல்லை. எங்களை
புரிந்து கொண்டாலே போதும்.

*எங்களால் உங்களுக்கு இப்போது தர முடிவதெல்லாம் ஒன்றே
ஒன்றுதான்... அது ‘எங்களின் ஆசீர்வாதங்கள்!’

கடிதத்தை படித்த முடித்து என் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து
ஓடியது. எனது கண்ணீரை துடைத்து விட்ட நண்பர் மேலும் கூறிய
சில வார்த்தைகள்...‘50 வயதை நெருங்கும் போதும், 50 வயதை
தாண்டும் போதும், அனைவரும் உடல்நலத்தை அதிக அக்கறையுடனும்
கவனத்தோடும் பேணிக்காக்க வேண்டியது அவசியம்.

உங்கள் உடல்நலம் நன்றாக இருக்கும் பட்சத்தில், உங்கள் பிள்ளைகள்,
பேரக்குழந்தைகளை பார்த்துக் கொள்ள, பராமரிக்க, பள்ளிக்கு கூட
அனுப்பி பின்பு அழைத்து வர, சமைக்க, வீட்டுவேலைகள் செய்ய, காய்கறி,
மளிகைக்கடை செல்ல, அவர்கள் சினிமா, கல்யாணம், விசேஷம், வெளியூர்
செல்லும் போது வீட்டையும் குழந்தைகளையும் பார்த்துக் கொள்ள என
அனைத்து வேலைகளுக்காகவும் உங்களை வீட்டோடு வைத்துக் கொள்வார்கள்.

இதற்காக உங்கள் பிள்ளைகளிடையே ஒரு போட்டியே நடக்கும். உங்கள்
உடல்நலம் நன்றாக இல்லாவிட்டால் திண்ணையோ, வீட்டின் மூலையோ
முதியோர் இல்லமோதான்.அதனால், டாக்டரின் அறிவுரைக்குப் பிறகு
உடற்பயிற்சியை தொடங்காமல், இளமையில் தொடங்கி, நடுவயதில்
தொடர்ந்து, முதுமையில் உடற்பயிற்சியின் பளு அளவினை குறைத்து,
தொடர்ந்து கொண்டே இருந்தால், இறுதி நாள் வரை மகிழ்ச்சியாக
இருக்கலாம்’
எனக்கூறி எனது ஆச்சரியத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார் எனது
வயோதிக நண்பர்!
-
-------------------------------------------------

முனைவர் மு.ஸ்டாலின் நாகராஜன்
குங்குமம்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84648
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum