ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 11:47 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:49 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 9:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 9:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 9:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:42 pm

» புன்னகை
by Anthony raj Today at 4:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 4:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:35 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:31 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:37 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 2:37 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 2:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:53 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 12:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:50 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 9:48 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 9:39 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 9:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 9:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 9:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 9:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:53 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:37 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu Jul 04, 2024 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றில் இன்று - நவம்பர்

+6
Hari Prasath
கார்த்திக் செயராம்
Aathira
ayyasamy ram
SK
விமந்தனி
10 posters

Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

வரலாற்றில் இன்று - நவம்பர்  - Page 6 Empty வரலாற்றில் இன்று - நவம்பர்

Post by விமந்தனி Sat Oct 31, 2015 12:59 am

First topic message reminder :

வரலாற்றில் இன்று - நவம்பர்  - Page 6 MUTpUYHSRI6qmnWtpwRX+November-0


Last edited by விமந்தனி on Sun Nov 01, 2015 12:50 am; edited 1 time in total


வரலாற்றில் இன்று - நவம்பர்  - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - நவம்பர்  - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - நவம்பர்  - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Back to top Go down


வரலாற்றில் இன்று - நவம்பர்  - Page 6 Empty Re: வரலாற்றில் இன்று - நவம்பர்

Post by விமந்தனி Tue Nov 17, 2015 1:38 am

வரலாற்றில் இன்று - நவம்பர்  - Page 6 BtUNZmVLR8epOg8T2Sqy+November-17

1869 - எகிப்தில் சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டது.

சுயஸ் கால்வாய் எகிப்தில் உள்ள செயற்கைக் கால்வாய் ஆகும். இது மத்தியதரைக் கடலையும் செங்கடலையும் இணைக்கிறது. 163 கி.மீ நீளமும் 300 மீ அகலமும் கொண்ட இக்கால்வாய் 1869 இல் திறக்கப்பட்டது.

இக் கால்வாய் வெட்டப்பட்டமையால் ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்குமிடையிலான கப்பற்போக்குவரத்து மிக இலகுவானது. அதன்முன்னர் கப்பல்கள் ஆப்பிரிக்காவைச் சுற்றியே பயணிக்க வேண்டியிருந்தது.

ஃபிரெஞ்சு நிறுவனம் ஒன்றால் 1859 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கால்வாய் வெட்டும் பணி பத்தாண்டு காலமாகத் தொடர்ந்து நடந்து, 1869 ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது.

இந்தக் கால்வாயை வெட்டியவர் பிரெஞ்சுப் பொறியியல் நிபுணர் ஃபெர்டினார்ட் டி லெஸ்ஸிப்ஸ்[1] இக்கால்வாயின் வெற்றி பிரான்சு நாட்டினரை பனாமா கால்வாயை அமைக்கத் தூண்டியது.

ஓராண்டில் ஏறக்குறைய 15,000 கப்பல்கள் இக்கால்வாயைக் கடக்கின்றன. ஒவ்வொரு கப்பலும் இக்கால்வாயைக் கடக்க 16 மணி நேரம் வரை ஆகிறது.


வரலாற்றில் இன்று - நவம்பர்  - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - நவம்பர்  - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - நவம்பர்  - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Back to top Go down

வரலாற்றில் இன்று - நவம்பர்  - Page 6 Empty Re: வரலாற்றில் இன்று - நவம்பர்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Nov 17, 2015 9:37 am

இந்த கால்வாய் பின்பு ஆங்கிலேயரால் வாங்கப்பட்டதோ
அல்லது ஆக்கிரமிக்கப்பட்டதோ என்ற வரலாறு தொடருகிறது,
உண்மையாகில் அதை பகிரவும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

வரலாற்றில் இன்று - நவம்பர்  - Page 6 Empty Re: வரலாற்றில் இன்று - நவம்பர்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Nov 17, 2015 9:38 am

வரலாற்றில் இன்று - நவம்பர்  - Page 6 3838410834 வரலாற்றில் இன்று - நவம்பர்  - Page 6 103459460 வரலாற்றில் இன்று - நவம்பர்  - Page 6 1571444738
விமந்தனி wrote:

1945 - யுனெஸ்கோ நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
மேற்கோள் செய்த பதிவு: 1175083
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

வரலாற்றில் இன்று - நவம்பர்  - Page 6 Empty Re: வரலாற்றில் இன்று - நவம்பர்

Post by விமந்தனி Thu Nov 19, 2015 2:37 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:இந்த கால்வாய் பின்பு ஆங்கிலேயரால் வாங்கப்பட்டதோ
அல்லது ஆக்கிரமிக்கப்பட்டதோ என்ற வரலாறு தொடருகிறது,
உண்மையாகில் அதை பகிரவும்.

உண்மை தான் ஐயா. இது குறித்து தேடியதில் கிடைத்த விவரம் இதோ.

ஒரு கால்வாய்க்கு என்ன பெரிய சரித்திரம் இருந்துவிட முடியும்?

வரலாற்றில் இன்று - நவம்பர்  - Page 6 Shutterstock_48466570

ஆச்சர்யமாகத்தான் இருக்கும். சூயஸின் பெயர்தான் கால்வாயே தவிர, உண்மையில் அது ஒரு சிறிய கடல் என்றுதான் சொல்லவேண்டும். அத்தனை நீளம். அத்தனை ஆழம். பிரும்மாண்டமான கப்பல்களெல்லாம் மிக அநாயாசமாக வரும். யுத்த தளவாடங்களை, போர் விமானங்களை ஏற்றிக்கொண்டு ராணுவக் கப்பல்கள் அங்கே அணிவகுக்கும். வெள்ளம் வரும். எல்லாம் வரும்.

மத்தியத் தரைக்கடலையும் செங்கடலையும் இணைப்பதற்காக உருவாக்கப்பட்ட கால்வாய் இது. இன்று நேற்றல்ல. கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே இப்படியொரு கால்வாய்க்கான சாத்தியத்தையும் அவசியத்தையும் அந்நாளைய எகிப்து மன்னர்கள் யோசித்திருக்கிறார்கள்.

முதலில் நேரடியாக இரு கடல்களை ஒரு கால்வாய் வெட்டி இணைக்கலாம் என்று யாருக்கும் தோன்றவில்லை. மாறாக, ஒரு கால்வாயை வெட்டி எகிப்தின் அங்கவஸ்திரம் மாதிரி தேசமெங்கும் ஓடும் நைல் நதியில் எங்காவது இணைத்துவிட்டால், நைல் நதி கடலுக்குப் போகும் பாதை வழியே கப்பல்கள் செல்லலாம் என்றுதான் யோசித்தார்கள். இந்த யோசனை, கி.மு. ஆறாம் நூற்றாண்டில் எகிப்தை ஆண்ட மன்னர்கள் துத்மோசிஸ் 3 (Thuthmosis III), பராநெகோ (Pharaoh Necho) ஆகியோருக்கு இருந்திருக்கிறது. சில சில்லறை முயற்சிகளையும் அவர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள்.

வரலாற்றில் இன்று - நவம்பர்  - Page 6 6000-workers-sit-in-as-the-first-suez-canal-strike-has-begun

அதற்குச் சில காலம் கழித்து (எத்தனை காலம் என்று துல்லியமாகத் தெரியவில்லை) ஈரானியர்கள் (அப்போது பெர்சியர்கள்) எகிப்தின் மீது ஒரு சமயம் படையெடுத்து வென்றிருக்கிறார்கள். அப்போது எகிப்தின் ஆட்சிப்பீடத்தில் ஏறிய மன்னர் டேரியஸ் 1 (Darius I) இந்தக் கால்வாய்த்திட்டத்தை உடனே செய்துமுடித்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டதாகத் தெரிகிறது.

அப்போது ஒரே கால்வாயாக அல்லாமல் இரண்டு தனித்தனி கால்வாய்களை வெட்டி, இரு எல்லைகளில் இணைத்து, நடுவே ஒரு பொதுச் சரடாக நைல் நதியை இணைத்திருக்கிறார்கள். சிலகாலம் இந்தக் கால்வாய் ஒழுங்காக இருந்திருக்கிறது. இடையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கைச் சீற்றங்களால் நாசமாகி, மீண்டும் கால்வாய் சரி செய்யப்பட்டு, மீண்டும் நாசமாகி, ஒரு கட்டத்தில் கால்வாய்த் திட்டத்தையே கைவிட்டுவிட்டார்கள். சூயஸ் கால்வாய் என்பது கற்பனையில் மட்டுமே சாத்தியம் என்கிற முடிவுக்கு அப்போதைய எகிப்து மன்னர்கள் வந்துவிட்டார்கள்.

சூயஸ் கால்வாய்த் திட்டத்துக்கு மறுபிறப்பு அளித்தவர் நெப்போலியன். அவர் பிரான்சின் சக்கரவர்த்தியாக இருந்தபோதுதான் (கி.பி. 1800 காலகட்டம்) ஐரோப்பாவையும் இந்தியாவையும் கடல் மூலமாக இணைப்பதற்கு இந்தக் கால்வாய்த்திட்டத்தைச் சரியாகப் பயன்படுத்தினால்தான் முடியும் என்று சொன்னார்.

வரலாற்றில் இன்று - நவம்பர்  - Page 6 SuezCanal_ElBallah

சொன்னதோடு மட்டுமல்லாமல், தன்னுடைய பொறியாளர்களையும் அங்கே அனுப்பி வேலையை உடனே ஆரம்பிக்கச் செய்தார். (நெப்போலியன் அப்போது எகிப்து மீது படையெடுத்து வெற்றி கண்டிருந்தார் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.)

நெப்போலியன் அனுப்பிய பிரெஞ்சு பொறியாளர்கள், எகிப்துக்கு வந்து பார்த்து முதலில் சர்வே எடுத்தார்கள். நிலப்பரப்பின் மீதான ஆய்வைத் தொடர்ந்து நடத்தி முடித்தவர்களுக்கு, அப்படியொரு கால்வாய் கட்ட சாத்தியமே இல்லை என்றுதான் முதலில் தோன்றியது. ஏனெனில், அவர்கள் கணக்குப்படி மத்திய தரைக்கடலுக்கும் செங்கடலுக்கும் பத்து மீட்டர் உயர இடைவெளி இருந்தது.

அதை மீறி கால்வாய் வெட்டுவதென்றால் ஏகப்பட்ட நிலப்பரப்பு நீரில் மூழ்கி நாசமாகிவிடும். பரவாயில்லை என்றால் கால்வாய் வெட்டலாம் என்று சொன்னார்கள். நெப்போலியன் யோசித்தார். இறுதியில் அவரும் பின்வாங்கிவிட்டார்.

ஆனால், அந்தப் பொறியாளர்களின் கணக்கு தவறு என்று சிறிதுகாலம் கழித்து வேறொரு பிரெஞ்சு பொறியியல் வல்லுநர் நிரூபித்தார். அவர் பெயர் ஃபெர்டினாண்ட் (Ferdinond de Lesseps). இவர் வெறும் பொறியாளர் மட்டுமல்ல. கெய்ரோவுக்கான பிரெஞ்சு தூதரும் கூட.

ஃபெர்டினாண்ட் வகுத்தளித்த வரைபடம் மிகவும் சுத்தமாக இருந்தது. கால்வாய் கட்டுவதில் பெரிய பிரச்னை ஏதும் இருக்காது என்றே ஆட்சியாளர்கள் நினைத்தார்கள்.

ஆகவே 1859-ம் ஆண்டு எகிப்து அரசு கால்வாய் வெட்டத் தொடங்கிவிட்டது. ஆப்பிரிக்காவிலிருந்து ஆயிரக்கணக்கான அடிமைகள் தருவிக்கப்பட்டார்கள். இரவு பகலாக வேலை பார்க்க உத்தரவிடப்பட்டது. உண்மையிலேயே ஒரு வேள்வி போலத்தான் அந்த வேலையை எடுத்துக்கொண்டார்கள்.

இறுதியில் 1867-ல் சூயஸ் கால்வாய் கட்டிமுடிக்கப்பட்டது. எட்டு வருடங்கள்! மிகப்பெரிய விழாவெல்லாம் எடுத்து, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்ய மன்னர்களையெல்லாம் அழைத்து, ஊரைக்கூட்டிக் கொண்டாடினார்கள். அன்றுமுதல் சர்வதேசக் கடல் வாணிபம் சூடுபிடிக்கத் தொடங்கியது. ஐரோப்பாவிலிருந்து இந்தியாவுக்கெல்லாம் மாநகரப் பேருந்துகள் மாதிரி கப்பல்கள் அடிக்கடி வந்துபோகத் தொடங்கின. ஆப்பிரிக்காவை அணுகுவது சுலபமானது. மத்தியக்கிழக்கின் வர்த்தகமே முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சூடு பிடிக்க ஆரம்பித்தது.

இருபதாம் நூற்றாண்டில் இந்த வர்த்தகப் பாதைக்கு இன்னும் கணிசமான மவுசு உண்டானது. சூயஸ் கால்வாய் இல்லாத ஒரு சூழலை யாரும் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது என்கிற நிலை ஏற்பட்டது. குறிப்பாக இஸ்ரேலுக்கு.

புதிதாகத் தோன்றிய தேசமான இஸ்ரேல், தன்னுடைய உள்கட்டுமானத்தை வலுப்படுத்திக்கொள்ள வர்த்தக வருமானத்தையே பெரிதும் நம்பியிருந்த காலம் அது. இயந்திரங்கள், பேரீச்சம்பழங்கள், ஆயுத உதிரிபாகங்கள் ஆகியவைதான் அப்போது இஸ்ரேலின் பிரதானமான ஏற்றுமதிச் சரக்குகள். சூயஸ் கால்வாய் பக்கத்திலேயே இருந்தபடியால் இஸ்ரேலின் இவ்வர்த்தக நடவடிக்கைகள் மிகவும் சூடுபிடித்தன. நல்ல வருமானமும் இருந்தது. ஆப்பிரிக்கா, ஆசியா போன்ற கண்டங்களில் வலுவான வர்த்தகத் தளங்களை நிறுவும் முயற்சியில் அவர்களுக்குக் கணிசமான பலன் கிடைக்கத் தொடங்கியிருந்தது.

வர்த்தக ரீதியில் மட்டுமல்லாமல் வேறு சில காரணங்களுக்காகவும் இந்தக் கால்வாய், மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்பட்டது. முதல் உலகப்போரின் போது பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் படைகள் சூயஸ் கால்வாயை மூடி, எதிரிக்கப்பல்கள் நகர முடியாதபடி செய்து திக்குமுக்காட வைத்தது சரித்திரத்தில் மிகப்பெரியதொரு சம்பவம். இரண்டாம் உலகப்போரிலும் சூயஸ் கால்வாயின் பங்கு இதே போல குறிப்பிடத்தக்கதொரு அம்சமாகவே விளங்கியிருக்கிறது. முசோலினியின் படைகள் (ஹிட்லரின் கூட்டணி நாடான இத்தாலியினுடைய படைகள்) ஆப்பிரிக்காவுக்குப் போவதைத் தடுக்கிற விஷயத்தில் இந்தக் கால்வாய்தான் ஒரு கதாநாயகன் போலச் செயல்பட்டிருக்கிறது!

இந்தப் பின்னணியில்தான் நாம் நாசர் சூயஸ் கால்வாயை தேசியமயமாக்க முடிவு செய்ததை அணுக வேண்டும்.

புவியியல் படி நாசர் முடிவெடுத்தது சரிதான். சூயஸ் கால்வாய் என்பது முழுக்க முழுக்க எகிப்து நாட்டுக்குள் ஓடும் ஒரு கால்வாய். இரண்டு கடல்களை இணைக்கிற படியால் அது பொதுச்சொத்தாக இருந்ததே தவிர, எகிப்து அதைத் தன் தனிச்சொத்து என்று சொன்னால் சட்டப்படி யாரும் எதுவும் செய்யமுடியாது என்பதுதான் உண்மையும் கூட.

ஆனால், இந்தக் கால்வாயை எகிப்து மட்டுமே தன் கைக்காசைப் போட்டு வெட்டவில்லை அல்லது கட்டவில்லை. நிறைய வெளியார் உதவிகள் அதில் இருக்கிறது. குறிப்பாக சூயஸ் கால்வாய்த் திட்டத்துக்கு பிரான்ஸ் அளித்த உதவிகள் சாதாரணமானதல்ல. பின்னால் பிரிட்டனும் ஏகப்பட்ட நிதியுதவிகள் செய்திருக்கிறது. வேறு பல நாடுகளும் தம்மாலான உதவிகளைச் செய்திருக்கின்றன. கால்வாய்க் கட்டுமானப்பணிகள் நடந்துகொண்டிருந்தபோது எழுந்த பல்வேறு தொழில்நுட்பச் சிக்கல்கள், அரசியல் பிரச்னைகள், பொருளாதார நெருக்கடிகள் அனைத்தையும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள்தான் முன்வந்து தீர்த்துவைத்திருக்கின்றன.

இப்படி சூயஸ் கால்வாய்த் திட்டத்தில் பல தேசங்கள் சம்பந்தப்பட்டதால், பங்குபெற்ற ஒவ்வொரு தேசத்துக்கும் அந்தக் கால்வாயைப் பயன்படுத்துவதில் பங்கு உண்டு என்று ஒப்பந்தம் ஆனது. ‘பங்கு’ என்றால் நிஜமாகவே பங்கு. Share என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்களே, அந்தப் பங்கு. பத்திர வடிவில் எழுதிக் கொடுக்கப்பட்ட பங்கு. சூயஸ் கால்வாயில் எப்படிப் பிற தேசங்களுக்குப் பங்கு உண்டோ, அதே போல எகிப்துக்கும் ஒரு பங்கு மட்டும்தான் முதலில் இருந்தது. தனது தேசத்தின் வழியே அந்தக் கால்வாய் செல்ல அனுமதியும் இடமும் அளித்ததற்கான பங்கு.

என்ன பிரச்னை ஆனது என்றால், 1875-ம் ஆண்டில் எகிப்தை ஆண்டுகொண்டிருந்த மன்னர் இஸ்மாயில் பாஷா என்பவர் தாங்கமுடியாத பொருளாதாரப் பிரச்னைகள் காரணமாக, தனது தேசத்துக்கான பங்குகளை பிரிட்டனிடம் விற்றுவிட்டார். சூயஸ் கால்வாயில் தனக்கிருந்த பங்கை விற்று அவர்கள் கடனை அடைத்தார்களா, அல்லது புதிய நிதி உதவிகள் ஏதும் அப்போது பெறப்பட்டதா என்பது பற்றிய தெளிவான விவரங்கள் ஏதும் இப்போது கிடைக்கவில்லை. (கிடைக்கும் தகவல்கள் எதுவும் முழுவதுமாக நம்பக்கூடியவையாகவும் இல்லை.)

ஆகவே, எகிப்திலேயே ஓடும் சூயஸ் கால்வாயைச் சொந்தம் கொண்டாட எகிப்துக்கு உரிமை கிடையாது என்று ஆகிவிட்டது.

இதெல்லாம் பத்திர அளவில் நிகழ்ந்த விஷயங்கள். அதற்காக எகிப்து கப்பல்கள் எதுவும் சூயஸ் கால்வாயைப் பயன்படுத்தாமலெல்லாம் இல்லை! ஆனால், கால்வாயின் கட்டுப்பாடு முழுவதுமாக அப்போது பிரிட்டன் வசம் போய்விட்டது. எப்படி ஒரு நிறுவனத்தின் பங்குகள் ஒரு நபரிடம் அதிகமாக இருந்தால், அந்நிறுவனம் அவரது முழுக்கட்டுப்பாட்டின்கீழ் வருமோ அப்படி!

உடனே பிரிட்டன் சூயஸ் கால்வாயைப் பாதுகாக்கவென்று ஒரு தனி படைப்பிரிவு ஏற்படுத்தி, எகிப்துக்கு அனுப்பிவிட்டது.

இதெல்லாம் மன்னர்கள் காலத்தில் நடந்தது! அவர்கள் காலமெல்லாம் ஒரு முடிவுக்கு வந்து, நாசரின் சர்வாதிகார ஆட்சி வந்தபோது இந்தப் பழைய ஏற்பாடுகளையெல்லாம் முதலில் தூக்கி அதே சூயஸ் கால்வாயில் விட்டெறிந்துவிட்டார். சூயஸை நாட்டுடைமை ஆக்குவதாகவும் அறிவித்தார்.

அதனால்தான் உடனே அனைத்து நாடுகளும் வெகுண்டெழுந்து எகிப்துக்கு எதிராகப் போர் முரசு கொட்டின.

இஸ்ரேல் ஏற்கெனவே கடும் கோபத்தில் இருந்தது. என்னதான் உதட்டளவில் அமைதி, அமைதி என்று பேசினாலும் எகிப்து எல்லையில் இஸ்ரேலுக்கு எப்போதும் பிரச்னைதான். இவர்கள் அந்தப் பக்கம் ஊடுருவுவது, அவர்கள் இந்தப் பக்கம் துப்பாக்கிச் சூடு நடத்துவது என்று ஒரு நாள் தவறாமல் ஏதாவது சம்பவம் நடந்தபடிதான் இருந்தது. தவிரவும் 1948 யுத்தத்தின் இறுதியில் காஸா பகுதி எகிப்து வசம் போனதிலும் இஸ்ரேலுக்கு மிகவும் வருத்தம்.

வாகான ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் எகிப்தின் மீது போர் தொடுத்து, இழந்த பகுதியை மீட்டுவிடமாட்டோமா என்றுதான் அவர்கள் ஆசைப்பட்டுக்கொண்டிருந்தார்கள். இந்தமாதிரியான சந்தர்ப்பத்தில்தான் நாசர் சூயஸ் கால்வாயை நாட்டுடைமை ஆக்கி, யுத்தத்தை வெற்றிலை பாக்கு வைத்து வரவேற்கத் தயாரானார்.

ஒரு பக்கம் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாட்டுப் படைகள் இஸ்ரேலுடன் கைகோத்துப் போரிடத் தயாராக இருந்தன. எதிர்ப்பக்கம் எகிப்து.

இதில் பிரிட்டனுக்கும் பிரான்ஸுக்கும் சூயஸ் கால்வாய்ப் பிரச்னை மட்டும்தான் போரிடக் காரணம். இஸ்ரேலுக்கு நில ஆக்கிரமிப்பு ஆசையும் உடன் சேர்ந்து இருந்தது. இரண்டு பெரிய தேசங்களின் துணை இருப்பதால் எப்படியும் எகிப்தை யுத்தத்தில் வீழ்த்தி, ஓரளவுக்காவது நிலங்களைப் பிடிக்கலாம் என்பது இஸ்ரேலின் கனவு.

பிரிட்டனுக்கு இஸ்ரேலின் இந்த எண்ணம் தெரியாமல் இல்லை. ஆனால் அரபு மண்ணில் பிரிட்டன் போன்ற முதலாளித்துவ தேசம் கூட்டணி வைக்க இஸ்ரேலை விட்டால் வேறு நாதி கிடையாது என்பதையும் கவனிக்க வேண்டும்.

1956-ம் ஆண்டு அக்டோபர் 26-ம் தேதி அது நடந்தது. இஸ்ரேல் ராணுவம் எகிப்தின் வடகிழக்கு எல்லைப்பகுதியான சினாய்க்குள் அத்துமீறி நுழைந்தது. அங்கிருந்த எகிப்து ராணுவத்தினரை சூயஸ் கால்வாய் வரை ஓடஓட விரட்டிக்கொண்டே போகத் தொடங்கியது.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்


வரலாற்றில் இன்று - நவம்பர்  - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - நவம்பர்  - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - நவம்பர்  - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Back to top Go down

வரலாற்றில் இன்று - நவம்பர்  - Page 6 Empty Re: வரலாற்றில் இன்று - நவம்பர்

Post by ayyasamy ram Thu Nov 19, 2015 2:56 pm

வரலாற்றில் இன்று - நவம்பர்  - Page 6 103459460 வரலாற்றில் இன்று - நவம்பர்  - Page 6 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82806
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வரலாற்றில் இன்று - நவம்பர்  - Page 6 Empty Re: வரலாற்றில் இன்று - நவம்பர்

Post by T.N.Balasubramanian Thu Nov 19, 2015 3:14 pm

விளக்கமான வில்லங்கம் அற்றப் பதிவு மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வரலாற்றில் இன்று - நவம்பர்  - Page 6 Empty Re: வரலாற்றில் இன்று - நவம்பர்

Post by விமந்தனி Thu Nov 19, 2015 3:31 pm

வரலாற்றில் இன்று - நவம்பர்  - Page 6 QISvW5DGTXyK7rDicfBU+November-18

1903 - பனாமா கால்வாய்க்கு தனிப்பட்ட உரிமையை ஐக்கிய அமெரிக்காவுக்கு வழங்கும் உடன்பாடு பனாமாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டது.

இருபதாம் நூற்றாண்டின் உன்னதப் பொறியியல் படைப்புகளில் ஒன்றாகப் பனாமா கால்வாய் கருதப்படுகிறது. அலாஸ்காவிலிருந்து டெக்ஸஸ் வர பனாமா கால்வாய் வழியாகக் கப்பல் பயணம் செய்தால் 16 நாட்கள் ஆகின்றன. அவ்வித மின்றி கப்பல் தென்னமெரிக்காவின் ஹோர்ன் முனையைச் [Cape Horn] சுற்றி வந்தால் 40 நாட்கள் எடுக்கும்! பனாமா கால்வாய் இல்லாவிட்டால், நியூ யார்க்கிலிருந்து கடல் மார்க்கமாகத் தென்னமெரிக்க முனையைச் சுற்றி, ஸான் ஃபிரான்சிஸ்கோவை அடைய 9000 மைல் மிகையாக 18,000 மைல் தூரமும், நீடித்த நாட்களும் எடுக்கும்! உலக வணிகப் பணிகளுக்குக் கடல் மார்க்கக் கதவுகளைத் திறந்து விட்ட பனாமா கால்வாய், கடந்த 90 ஆண்டுகளாக கோடான கோடி டாலர் மதிப்புள்ள வாணிபப் பண்டங்களையும், கார் வாகனங்களையும் இருபுறமும் பரிமாறி வந்துள்ளது! அனுதினமும் கடக்கும் சுமார் 32 கப்பல்கள் சராசரி ஒவ்வொன்றும் 28,000 டாலர் பயணக் கட்டணம் செலுத்துகின்றன!

சூயஸ் கால்வாய் உலகத்திலே நீளமானது! பனாமா கால்வாயைப் போல் இருமடங்கு நீளமானது! 1869 ஆம் ஆண்டு நவம்பர் 17 இல் கட்டி முடித்துத் திறந்து விடப்பட்ட 100 மைல் நீளமான சூயஸ் கால்வாய் [Suez Canal] இயங்கி வரும் போது, சூயஸ் கால்வாயைப் பூர்த்தி செய்த பிரென்ச் நிபுணர் ஃபெர்டினென்ட் தி லெஸ்ஸெப்ஸ் [Ferdinand De Lesseps] பிரென்ச் அரசின் ஆணையில் பனாமா கால்வாயைக் கட்ட முன்வந்தார். அடிப்படை வேலைகளை ஆரம்பித்து ஏழாண்டுகள் உழைத்து, பலவித இன்னல்களால் முடிக்க இயலாமல் பிரென்ச் அரசாங்கம் திட்டத்தைக் கைவிட்டது! பின்னர் அமெரிக்க அரசு கால்வாய்த் திட்டத்தை வாங்கி அமெரிக்க எஞ்சினியர் மேஜர் ஜெனரல் கோதல்ஸ் [Goethals] 1914 இல் பூர்த்தி செய்தார்.

அமெரிக்க அரசாங்கம் பனாமா அல்லது நிகராகுவா நாட்டின் வழியாகக் கால்வாய் ஒன்றை அமைக்க 1887 இல் முடிவு செய்து, 1889 இல் காங்கிரஸ் 'மாரிடைம் கால்வாய்க் கம்பெனி ' என்னும் ஒரு குழுவைத் தயாரித்தது. அப்போது நியமனமாகிய அமெரிக்க ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட் [26th American President, Theodore Roosevelt (1858-1919)] பனாமா புதுக் குடியரசுடன் தொடர்பு கொண்டு, பிரான்ஸிடமிருந்து கால்வாய்த் திட்டத்தை வாங்க ஏற்பாடுகள் செய்தார். பிரான்ஸ் பனமா கால்வாய்த் திட்ட வேலைகளை 100 மில்லியன் டாலருக்குக் குறைவாக விற்கப் போவதில்லை என்று அறிவித்தது! அதே சமயம் நிகாராகுவாவில் கால்வாய் கட்டி முடிக்க 40 மில்லியன் டாலரே (1900 நாணய மதிப்பு) தேவைப்பட்டது! இறுதியில் 40 மில்லியன் டாலருக்கே பிரான்ஸ் பனாமா கால்வாயின் திட்டப் பணிகளையும் உரிமையையும் [ஆபீஸ், தளவாடங்கள், கருவிகள், உபகரணம், ரயில் வண்டிகள், தளப்படங்கள், தளவியல் ஆய்வுகள், 50 மில்லியன் குயூபிக் மீடர் தோண்டல் கால்வாய்] அமெரிக்காவுக்கு விற்றது! பனாமா குடியரசுக்குச் சொந்தமான குறுக்குத் தளத்தில் [Isthmus] 43 மைல் நீளமும் 10 மைல் அகண்ட கால்வாய் அரங்கம் [Canal Zone] அமெரிக்க அரசின் பொறுப்பில் 100 வருடத் தொடர் ஒத்திக்கு [100 Year Perpetual Lease] விடப்பட்டது.

பனாமா நாடு 1900 ஆண்டுகளில் கொலம்பியா அரசின் ஆணைக்குக் கீழிருந்தது. முதல் ஒப்பந்தப்படி [Hay-Herran Treaty], அமெரிக்கா கொலம்பியாவுக்கு முன்பணம் ஒரு மில்லியன் டாலரும், ஆண்டு தோறும் 250,000 டாலரும் அளிக்க வேண்டும். கொலம்பியா நூறாண்டுகளுக்கு கால்வாயை நெருங்கிய ஆறு மைல் அகற்சி நிலப்பகுதியை அமெரிக்காவுக்கு ஒப்பந்த வாடகைக்கு விட வேண்டும். டிசம்பர் 31, 1999 இல் அமெரிக்கா பனாமா கால்வாயை, பனாமா நாட்டுக்கு முடிவில் ஒப்படைத்து விட வேண்டும். கொலம்பியா அந்த உடன்படிக்கைக்கு ஒப்புக் கொள்ளா விட்டாலும், பனாமா அரசு நில உரிமையை அமெரிக்காவுக்கு விற்க விழைந்தது.

ஒவ்வொரு ஆண்டும் 140 மில்லியன் டன் வணிகச் சுமைகள் [Commercial Cargoes] பனாமா கால்வாய் மூலமாகக் கடந்து செல்கின்றன. அவற்றில் 22% பெட்ரோலியம், பெட்ரோலியம் சம்பந்தப்பட்ட பண்டங்கள் 16% தானியங்கள் குறிப்பிடத் தக்கவை. எல்லாவற்றிலும் மேலாக 2.4 மில்லியன் டன் கார் வாகனங்கள், கால்வாய் வழியாகக் கொண்டு செல்லப்பட்டு, புதுக்கார் வணிகம் பெருகி வளர்கிறது. அமெரிக்கா கட்டி முடித்து பூர்வ ஒப்பந்தம் எழுதி 96 ஆண்டுகள் உரிமை கொண்டாடி 1999 டிசம்பர் 31 ஆம் தேதி, பனாமா கால்வாய் ஆட்சி உரிமையை, பனாமா குடியரசின் கைவசம் அளித்தது.


வரலாற்றில் இன்று - நவம்பர்  - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - நவம்பர்  - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - நவம்பர்  - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Back to top Go down

வரலாற்றில் இன்று - நவம்பர்  - Page 6 Empty Re: வரலாற்றில் இன்று - நவம்பர்

Post by விமந்தனி Thu Nov 19, 2015 3:32 pm

வரலாற்றில் இன்று - நவம்பர்  - Page 6 CGUIFs4ESZ6obBZdYgzG+November-19

1835 - ராணி லட்சுமிபாய், இந்திய இராணி பிறந்த தினம் இன்று.

இராணி இலட்சுமிபாய் அல்லது சான்சி இராணி வடமத்திய இந்தியாவின் சான்சி நாட்டின் இராணி.

1857 இந்தியக் கிளர்ச்சியில் பெரும்பங்காற்றி இந்தியாவில் பிரித்தானியரின் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தோர்களின் முன்னோடியாகக் கணிக்கப்படுகின்றவர்.


வரலாற்றில் இன்று - நவம்பர்  - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - நவம்பர்  - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - நவம்பர்  - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Back to top Go down

வரலாற்றில் இன்று - நவம்பர்  - Page 6 Empty Re: வரலாற்றில் இன்று - நவம்பர்

Post by விமந்தனி Thu Nov 19, 2015 3:33 pm

ayyasamy ram wrote:வரலாற்றில் இன்று - நவம்பர்  - Page 6 103459460 வரலாற்றில் இன்று - நவம்பர்  - Page 6 3838410834
வரலாற்றில் இன்று - நவம்பர்  - Page 6 1571444738


வரலாற்றில் இன்று - நவம்பர்  - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - நவம்பர்  - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - நவம்பர்  - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Back to top Go down

வரலாற்றில் இன்று - நவம்பர்  - Page 6 Empty Re: வரலாற்றில் இன்று - நவம்பர்

Post by விமந்தனி Thu Nov 19, 2015 3:34 pm

T.N.Balasubramanian wrote:விளக்கமான வில்லங்கம் அற்றப் பதிவு மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்
நன்றி ஐயா. நன்றி


வரலாற்றில் இன்று - நவம்பர்  - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - நவம்பர்  - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - நவம்பர்  - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Back to top Go down

வரலாற்றில் இன்று - நவம்பர்  - Page 6 Empty Re: வரலாற்றில் இன்று - நவம்பர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum