ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எத்தனை அழகு !!! எல்லாமே அழகு !!!

4 posters

Go down

எத்தனை அழகு !!! எல்லாமே அழகு !!! Empty எத்தனை அழகு !!! எல்லாமே அழகு !!!

Post by B.VENKATESAN Mon Oct 19, 2015 9:37 am


மனதை மயக்கும்
மழையின் ஓசை அழகு !
மழை நீரில் அரும்பும்
கணநேர நீர்க்குமிழி அழகு !
மஞ்சள் நீராடும்
அந்தி வானம்
மற்றுமோர் அழகு !!!

விழிகள் பேசும்
வினோதம் அழகு !
விழிதேடும் விடை அழகு !
விரல் கோதும் விதம் அழகு !!!

பகலவனைக் கண்டு
பதுங்கும் பனித்துளி அழகு !
பழம் கொறிக்கும் அணிலின்
சுறுசுறுப்பு அழகு !
புதுப்புத்தகப் பக்கங்களில்
நுகரும் புது வாசம்
இன்னுமொரு அழகு !!!

தலையணையில் கிட்டாத
தாய்மடி இதம் அழகு !
தீண்டுவது தெரியாமல்
தீண்டும் தென்றல் அழகு !
தீபாவளி வெடி முழக்கம் கூட
திகட்டாத ஓர் அழகு !!!

அன்னை பாடும்
தாலாட்டு அழகு !
ஆசிரியர் இடும்
அரைக்குட்டு அழகு !
அதிகாலை ஆழியில்
குளித்தெழும் ஆதவன்
அழகோ அழகு !!!

உழைத்து களைத்த பின்
உறக்கம் அழகு !
ஊஞ்சல் ஆடுகையில் வரும்
ஓயாத ஒலி அழகு !
விரும்பி வாங்கிய
குழந்தை உதை கூட
வினோத அழகு !!!

காலை நேர
பறவை ஒலிகள் அழகு !
கானகத்தே கவிபாடும்
குயிலோசை அழகு !
காதோரம் கடக்கும் போது
கொசு தரும் இம்சை கூட
ஓர் அழகு !!!

மலை நடுவில் ஒளியும்
மாலை நேர சூரியன் அழகு !
முட்டினாலும் வலிக்காத
நத்தையின் கொம்புகள் அழகு !
முற்றிய நெற்கதிர்கள்
முகம் சாய்க்கும் பணிவும்
முற்றிலும் அழகு !!!

காதலி தரும் முதல்
முத்தம் அழகு !
களைந்த ஆடையில்
மொத்தமும் அழகு !
காணுதற்கினிய கனவு
கலையும் வரை அழகு !!!

துணை தேடும் மழைக்கால
தவளை ஒலிகள் அழகு !
தூறலில் நின்று ஆடும்
துளிர்விட்ட இலைகள் அழகு !
தூவானம் வரையும்
கருவியற்ற அரைவட்டம்
அத்தனை அழகு !!!

வெண்மை குழைத்து
தண்மை பூசும்
வெண்ணிற இரவு அழகு !
வெற்றிடம் நுழையாத
ஒலியின் வெட்கம் அழகு !
வெட்டவெளி வாரி இறைத்த
விண்மீன்கள் விண்ணின் அழகு !!!

பிரிவின் பின் கூடுதலில்
பின்னிப் பிணைதல்
காதலுக்கு அழகு !
பின்னழகு போர்த்தும்
பின்னாத கூந்தல்
கன்னிக்கு அழகு !
பின்விளைவு அறியா வேகம்
இளமைக்கு என்றும் அழகு !!!

சக்கரத்தில் சரியாத
சரியான மண்பானை
குயவனின் கலையழகு !
சேம இலை உதிர்த்த
பாதரச நீர்த்துளிகள் அழகு !
செதுக்கிய சிலையில்
கல்லின் பொறுமை கூட
சிந்தனைக்கு ஓர் அழகு !!!

நீலம் குழைத்த வானில்
நீந்திச் செல்லும் மேகம் அழகு !
நீரோடை நடுவே
நின்றாடும் கொக்கின்
நீண்ட தவம் அழகு !
நிகழ்ந்த நிகழ்வுகள் மீண்டு(ம்)
நிகழும் நினைவுகள் என்றும்
நீங்காத அழகு !!!

தோல்வியில் நனைந்த
வெற்றி அழகு !
தோல்வியை நினையாத
நெற்றி அழகு !
தோல்வியில் துவளாத மனம்
தோல்விக்கே அழகு !!!

கடையாத தயிரின்
உடையாத நிலை அழகு !
கடையாணி மை போடும்
கச்சிதமான வட்டங்கள்
கூட்டு வண்டிக்கு
கூடுதல் அழகு !

காலத்தை வென்று நிற்கும்
கன்னித் தமிழ் என்
கவிதைக்கே அழகு !!!

- பா.வெ.


எண்ணம் போல் வாழ்வு
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்


பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

Back to top Go down

எத்தனை அழகு !!! எல்லாமே அழகு !!! Empty Re: எத்தனை அழகு !!! எல்லாமே அழகு !!!

Post by M.Jagadeesan Mon Oct 19, 2015 11:28 am

எத்தனைப் பேரழகு உன்கவிதைப் பாவரிகள்
அத்தனையும் கற்கண்டு தான் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

எத்தனை அழகு !!! எல்லாமே அழகு !!! Empty Re: எத்தனை அழகு !!! எல்லாமே அழகு !!!

Post by ayyasamy ram Mon Oct 19, 2015 12:17 pm

M.Jagadeesan wrote:எத்தனைப் பேரழகு உன்கவிதைப் பாவரிகள்
அத்தனையும் கற்கண்டு தான் .
மேற்கோள் செய்த பதிவு: 1170358
-
அருமையிருக்கு
-
ஒரு நகைச்சுவை கவிதை ஞாபகம் வருகிறது...!!
-
அதில் இப்படித்தான் எல்லாவற்றையும்
ரசிப்பான்...ஏனாம்?
-
கையில் நாலு காசிருந்ததாம்
-
கையில் காசில்லாத போது ....நிலைமையே வேற...
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82732
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எத்தனை அழகு !!! எல்லாமே அழகு !!! Empty Re: எத்தனை அழகு !!! எல்லாமே அழகு !!!

Post by B.VENKATESAN Mon Oct 19, 2015 12:39 pm

மிக்க நன்றி தோழரே!!!
ஆனால் தங்களது நகைச்சுவை வரிகளின் உவமை என் கவிதை வரிகளுக்கு உணர்த்தும் பொருத்தம் புரியவில்லை ...பணத்திற்கும் ரசனைக்கும் என்ன சம்பந்தம்?


எண்ணம் போல் வாழ்வு
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்


பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

Back to top Go down

எத்தனை அழகு !!! எல்லாமே அழகு !!! Empty Re: எத்தனை அழகு !!! எல்லாமே அழகு !!!

Post by B.VENKATESAN Mon Oct 19, 2015 12:58 pm

மிக்க நன்றி ஜகதீசன் அவர்களே!!!


எண்ணம் போல் வாழ்வு
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்


பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

Back to top Go down

எத்தனை அழகு !!! எல்லாமே அழகு !!! Empty Re: எத்தனை அழகு !!! எல்லாமே அழகு !!!

Post by ayyasamy ram Mon Oct 19, 2015 1:59 pm

கவிதை அருமை
-
எனது பின்னூட்டத்தில் இட்டிருந்த
நகைச்சுவை வரிகள்
இக்கவிதைக்கான பிரத்யேகமான
உவமை அல்ல...
-
பொதுவாக சொன்னதே....
-
அந்த வரிகளை நான் வாபஸ் பெறுகிறேன்...!!
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82732
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எத்தனை அழகு !!! எல்லாமே அழகு !!! Empty Re: எத்தனை அழகு !!! எல்லாமே அழகு !!!

Post by B.VENKATESAN Mon Oct 19, 2015 2:07 pm

மிக்க நன்றி தோழரே!!!


எண்ணம் போல் வாழ்வு
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்


பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

Back to top Go down

எத்தனை அழகு !!! எல்லாமே அழகு !!! Empty Re: எத்தனை அழகு !!! எல்லாமே அழகு !!!

Post by krishnaamma Mon Oct 19, 2015 6:42 pm

மிக அருமை வெங்கடேசன்...........நல்லா இருக்கு ! புன்னகை................... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எத்தனை அழகு !!! எல்லாமே அழகு !!! Empty Re: எத்தனை அழகு !!! எல்லாமே அழகு !!!

Post by B.VENKATESAN Mon Oct 19, 2015 8:05 pm

மிக்க நன்றி அம்மா !!!


எண்ணம் போல் வாழ்வு
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்


பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

Back to top Go down

எத்தனை அழகு !!! எல்லாமே அழகு !!! Empty Re: எத்தனை அழகு !!! எல்லாமே அழகு !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum