ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:52 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவராத்திரி விழா - தொடர் பதிவு

5 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

நவராத்திரி விழா - தொடர் பதிவு Empty மராட்டியத்தில் நவராத்திரி விழா இன்று கோலாகலமாக தொடங்குகிறது

Post by ayyasamy ram Tue Oct 13, 2015 7:53 am

நவராத்திரி விழா - தொடர் பதிவு KMAUMPbTQJaMahrDmSqP+navarathiri
-


மராட்டியத்தில், நவராத்திரி விழா இன்று தொடங்கி
9 நாட்கள் நடக்கிறது.

நவராத்திரி விழா
சிவனுக்கு ஒரு ராத்திரி சிவராத்திரி என்றும், அம்பிகைக்கு
9 ராத்திரி நவராத்திரி என்றும் இந்துக்களால் கொண்டாடப்பட்டு
வருகிறது. புரட்டாசி மாதத்தின் வளர்பிறையில் முதல் நாளிலிருந்து
தொடங்கி 9 நாட்கள் வரை நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.
9 நாட்கள் விழாவில் துர்கா, மகாலட்சுமி மற்றும் சரஸ்வதி ஆகிய
முப்பெரும்தேவிகளையும் தலா மூன்று நாட்களாக பிரித்து பூஜை
செய்வது வழக்கம்.

கொலு
தமிழகத்தில் கொலு அமைத்து நவராத்திரி விழா கொண்டாடப்
படுகின்றது. இதேபோன்று மும்பை, தானே, புனே, நவிமும்பை உள்ளிட்ட
மராட்டியத்தின் பிற பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் நவராத்திரி
விழாவினையொட்டி கொலு அமைத்து தேவியை வழிபடுவார்கள்.

மகிசாசூரனை அழிப்பதற்கு அம்பிகை அவதரித்தபோது தேவர்கள்
தங்கள் சக்திகளை ஸ்ரீதேவியிடம் கொடுத்துவிட்டு பொம்மைப்போல
நின்றதை குறிப்பிடும் வகையில் கொலு அமைத்து வழிபாடு
செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

நவராத்திரி விழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி வருகிற
21–ந் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மும்பை
நகர் மற்றும் புறநகர் பகுதிகள் மற்றும் தானே, நவிமும்பை பகுதிகளில்
பிரதான மண்டல்கள், அமைப்புகள் சார்பில் தேவி சிலைகள் பிரதிஷ்டை
செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற உள்ளன.

தாண்டியா நடனம்
இந்த பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பூஜை
செய்வார்கள். பின்னர் 9 நாட்கள் பூஜைக்குப்பின்னர் தேவி சிலைகளை
பக்தர்கள் ஊர்வலமாக எடுத்துச்சென்று நீர்நிலைகளில் கரைப்பார்கள்.
நவராத்திரியையொட்டி பெண்கள் தங்கள் வேண்டுதல்கள்
நிறைவேறுவதற்கு 9 நாட்களும் விரதம் இருந்து தேவியை வழிபடுவார்கள்.
தேவி சிலை பிரதிஷ்டை செய்யப்படும் 9 நாட்களும் மும்பையில் தினந்
தோறும் இரவு பாரம்பரிய முறைப்படி தாண்டியா நடனம் ஆடுவது வழக்கம்.

இதில் இளைஞர்கள், முதியவர்கள் என வயது பாரபட்சமின்றி பெண்களும்,
ஆண்களும் தாண்டியா நடனம் ஆடுவார்கள்.

மகாலட்சுமி கோவில்
நவராத்திரி திருவிழாவினையொட்டி மும்பையில் பிரசித்தி பெற்ற
மகாலட்சுமி கோவிலில் தினந்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது
வழக்கம். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து
மகாலட்சுமியை தரிசனம் செய்து செல்வார்கள்.

இதேபோன்று மும்பாதேவி கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் நவராத்திரி
விழாவினையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. கொலு அமைத்து
வழிபாடுகள் நடக்க உள்ளன.

செம்பூர் உள்ள முருகன் கோவிலில் நவராத்திரி விழா நடக்கிறது.
இதையொட்டி இன்று துர்காதேவிக்கு மாலை 5 மணிக்கு சிறப்பு அலங்காரம்
செய்யப்பட்டு பூஜை நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு நவசண்டி மகாயாகம்
வளர்க்கப்படுகிறது. இரவு கலாபிஷேகம் செய்யப்படுகிறது.
விழா நாட்களில் நவவரண பூஜை, நவகிரக கலசபூஜை, லலிதா சகஸ்ரநாம
அர்ச்சனை உள்ளிட்ட பூஜைகள் நடக்கின்றன.

செம்பூர் செட்டா நகரில் உள்ள ஆதிசக்தி மாரியம்மன் கோவிலில்
நவராத்திரியையொட்டி இன்று காலை மகாகணபதி ஹோமம், துர்காதேவி
ஹோமம் வளர்க்கப்படுகிறது. பின்னர் தினசரி விக்னேஸ்வர பூஜை,
துர்காதேவி, லெட்சுமி தேவி, வித்யாதேவி ஹோமம், சகஸ்ரநாம அர்ச்சனை
ஆகியவை நடக்கின்றன. காட்கோபர் காமராஜ் நகர் ஸ்ரீதேவி
முத்துமாரியம்மன் கோவில், பாண்டுப் பஜனை சமாஜ், தாராவி
கருமாரியம்மன், சந்தனமாரியம்மன் கோவில், மகமாயி மாரியம்மன் கோவில்,
முத்துமாலை அம்மன் கோவில் உள்பட தமிழர்கள் பகுதிகளில் உள்ள அம்மன்
கோவில்களில் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.
-
----------------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நவராத்திரி விழா - தொடர் பதிவு Empty நவராத்திரி விழா - தொடர் பதிவு

Post by ayyasamy ram Tue Oct 13, 2015 10:29 am

நவராத்திரி விழா - தொடர் பதிவு 0iuJevjJSFO3cswm3xWX+navarathiri
-

இந்த வருடம் 13-10-2015 முதல் 22-10-2015 வரை நவராத்திரி
கொண்டாடப்படுகிறது.
-
சிவனை வழிபடத் தகுந்த ஒரு ராத்திரி சிவராத்திரி.
சக்தியை வழிபடத் தகுந்த ஒன்பது ராத்திரி நவராத்திரி.
நவம் என்பது ஒன்பது. நவராத்திரி என்பது விரமிருந்து
வீட்டில் பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது.

இதனால் இந்த விழா வீடு என்ற கோயிலுக்கு ஒரு
'பிரம்மோற்சவம்' என்றும் கூறப்படுகிறது
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நவராத்திரி விழா - தொடர் பதிவு Empty Re: நவராத்திரி விழா - தொடர் பதிவு

Post by ayyasamy ram Tue Oct 13, 2015 10:34 am

நவராத்திரி விழா - தொடர் பதிவு 6TtQ4wGOT265AawGXbqD+navarathri681
-
சக்தி வடிவம்

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் பராசக்தி
ஒவ்வொரு தேவியின் வடிவில் ஒரு வயது முதல் பத்து வயது
கன்னிப்பெண் வடிவில் அவதாரம் செய்வதாக ஐதீகம்.

முதல் நாள் மஹேஸ்வரி பாலா
இரண்டாம் நாள் கௌமாரி குமாரி
மூன்றாம் நாள் வாராஹி கல்யாணி
நான்காம் நாள் மஹாலட்சுமி ரோகிணி
ஐந்தாம் நாள் வைஷ்ணவி சுபத்ரா
ஆறாம் நாள் இந்திராணி காளிகா
ஏழாம் நாள் சாமுண்டி சண்டிகா
எட்டாம் நாள் நரசிம்ஹி தருணி
ஒன்பதாம் நாள் சரஸ்வதி சுமங்கலி
-

மேற்கண்ட அட்டவணைப்படி கன்னியின் வயதிற்கேற்ப
ஒவ்வொரு நாளும் ஒரு கன்னிகையாக ஒன்பது நாட்களும்
ஒன்பது கன்னிகைகளையும் ஒன்பது சுமங்கலிகளையும்
பூஜை செய்வது அளவிட முடியாத புண்ணியம் ஏற்படும்.

கன்னிப் பெண்களுக்குப் புதிய ஆடை முதலியவை பரிசாக
அளிக்கப்படவேண்டும் என்பது நவராத்திரி விழாவின் முக்கிய
அம்சமாகும்.
--------------------------------------------------
-
ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நவராத்திரி விழா - தொடர் பதிவு Empty Re: நவராத்திரி விழா - தொடர் பதிவு

Post by ayyasamy ram Tue Oct 13, 2015 10:41 am

நவராத்திரி விழா - தொடர் பதிவு KN5Lkd3ySxmthg7xMy1c+navarathri-pooja

-
ஆனி மாதம் அமாவசைக்கு அடுத்து வரும் பிரதமை
முதல் ஒன்பது நாட்கள்
வாராஹி நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.

புரட்டாசி மாதம் அமாவசைக்கு அடுத்து வரும் பிரதமை
முதல் ஒன்பது நாட்கள்
சாரதா நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.

தை மாதம் அமாவசைக்கு அடுத்து வரும் பிரதமை
முதல் ஒன்பது நாட்கள்
சியாமளா நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.

பங்குனி மாதம் அமாவசைக்கு அடுத்து வரும் பிரதமை
முதல் ஒன்பது நாட்கள்
வசந்த நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நவராத்திரி விழா - தொடர் பதிவு Empty Re: நவராத்திரி விழா - தொடர் பதிவு

Post by ayyasamy ram Tue Oct 13, 2015 10:54 am

திருமலையில் நவராத்திரி பிரம்மோற்சவம்
-
நவராத்திரி விழா - தொடர் பதிவு Aa4LN1JcSx6cZz9PUkGj+bram_2577882a
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நவராத்திரி விழா - தொடர் பதிவு Empty Re: நவராத்திரி விழா - தொடர் பதிவு

Post by ayyasamy ram Tue Oct 13, 2015 11:17 am

இந்த கோலங்கள்
செப்டம்பர் 16 - 30, 2014 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தவை. .
-
நவராத்திரி விழா - தொடர் பதிவு 4uNgHgKFQsanIUJAM89x+KOLAM_0005
-
நவராத்திரி விழா - தொடர் பதிவு 0yaD2BwiR2SfK5yO3lsq+KOLAM_0005(1)
-
நவராத்திரி விழா - தொடர் பதிவு Oq268dpaST2xgMHWdnZL+KOLAM_0006
-
நவராத்திரி விழா - தொடர் பதிவு FIksLSmRTWjbCtG7ZFRQ+KOLAM_0006(1)
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நவராத்திரி விழா - தொடர் பதிவு Empty Re: நவராத்திரி விழா - தொடர் பதிவு

Post by krishnaamma Tue Oct 13, 2015 11:51 am

அருமையான பகிர்வு அண்ணா ! புன்னகை
.
.
.

.
இதையும் உங்களின் 'நவராத்திரி - தொடர் பதிவு' உடன், இணைத்து விடுகிறேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நவராத்திரி விழா - தொடர் பதிவு Empty Re: நவராத்திரி விழா - தொடர் பதிவு

Post by krishnaamma Tue Oct 13, 2015 11:53 am

ayyasamy ram wrote:திருமலையில் நவராத்திரி பிரம்மோற்சவம்
-
நவராத்திரி விழா - தொடர் பதிவு Aa4LN1JcSx6cZz9PUkGj+bram_2577882a

மிக்க நன்றி ராம் அண்ணா புன்னகை நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நவராத்திரி விழா - தொடர் பதிவு Empty Re: நவராத்திரி விழா - தொடர் பதிவு

Post by krishnaamma Thu Oct 15, 2015 2:53 pm

நவராத்திரி - கொலு வைப்பது குறித்து அறிய ஆசையா?

நவராத்திரி என்பதே, வீட்டில் நடக்கும் குட்டித் திருவிழா தான். வீட்டை அலங்கரித்து, கொலு படிக்கட்டுகளை அமைத்து, பொம்மைகளை அடுக்கி மாவிலை தோரணங்கள் கட்டி, அழகுபடுத்துவதே தனி கலை. அதை எல்லாருக்கும் சாத்தியம் ஆக்குகிறது, ஒரு அமைப்பு.

சென்னை, மயிலாப்பூரில் இயங்கி வரும், தி மயிலாப்பூர் ட்ரையோ என்ற அந்த அமைப்பு, நவராத்திரியின் சிறப்பு, கொலு வைப்பது எப்படி, அதன் அவசியம் என்ன என, எல்லோருக்கும் கற்றுக்கொடுக்கிறது. அந்த அமைப்பை, எஸ்.சுரேந்தர், எஸ்.அபர்ணா, எஸ்.அமர்நாத்,
எம்.சுகதன் ஆகியோர் வழிநடத்தி வருகின்றனர்.

ஆன்மிகம் பற்றிய புரிதலை...எஸ்.சுரேந்தர் கூறியதாவது:கொலு வைப்பதன் அடிப்படை தத்துவத்தை, இளம்பெண்களுக்கு தெரியப்படுத்த, 2003ல் இந்த அமைப்பை உருவாக்கினோம். மார்கழி உற்சவம், தியாகராஜ ஆராதனை, பால குருகுலம், பாலர் சித்திரை கலை விழா என்று, ஆண்டு முழுதும் விழாக்கள் நடத்திக் கொண்டிருக்கிறோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆன்மிகம் சார்ந்த பல கலை நிகழ்ச்சிகளையும் இவர்கள் நடத்தி வருகின்றனர். கொலுவில் எத்தனை படிகள் இருக்க வேண்டும், கொலு எப்படி வைக்க வேண்டும், எந்த மாதிரியான பொம்மைகள் இடம் பெற வேண்டும் என்பது துவங்கி, கொலு முடிந்து எப்படி பொம்மைகளை பாது

காப்பாக வைக்க வேண்டும் என்பது வரை கற்றுத் தருகின்றனர்.ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரிக்கு, இரண்டு வாரங்களுக்கு முன் இவர்கள் வீட்டிலேயே, சிறிய அளவில் ஒருநாள் பயிற்சி நடைபெறுகிறது.

கருத்தை மையமாக வைத்து...இந்த பகுதியில் நடக்கும் கொலு போட்டிகளுக்கு, நடுவராகவும் செயல்படுகின்றனர்.கடந்த, ௨009ல் சென்னை, கபாலீஸ்வரர் கோவிலில், மகாமேரு கொலு என்ற தலைப்பில் இவர்கள் நடத்திய கொலு கண்காட்சி எல்லாரையும் ஆச்சரியப்படுத்தியது.

கடந்த, 2010ல், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில், அல்லிக்கேணி அலங்கார கொலு என்ற தலைப்பில் கொலு அமைத்து இருந்தனர். ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு கோவிலில் கொலு அமைத்து, அந்த பகுதிவாசிகளுக்கு, கொலு குறித்து சொல்லிக் கொடுக்கின்றனர். தற்போது, மதுரையிலும், ஸ்ரீரங்கத்திலும், கொலு வைத்துஉள்ளனர்.


Last edited by krishnaamma on Thu Oct 15, 2015 2:56 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நவராத்திரி விழா - தொடர் பதிவு Empty Re: நவராத்திரி விழா - தொடர் பதிவு

Post by krishnaamma Thu Oct 15, 2015 2:55 pm

மதுரை மீனாட்சி கோவிலில் நாளை நவராத்திரி நான்காம் நாள்!

நவராத்திரி விழா - தொடர் பதிவு LzjffgeCRqq3g4l3H4UQ+LRG_20151015111145753556

மதுரை: நவராத்திரி நான்காம் நாளில், மதுரை மீனாட்சி ஊஞ்சல் அலங்காரத்தில் காட்சி தருகிறாள். திருமலை நாயக்கர் காலத்தில், குமரகுருபரர் மதுரை வந்தார். பிறக்கும் போதே பேச முடியாத அவர், திருச்செந்துார் முருகன் அருளால் பேசும் திறன் பெற்றதை மன்னர் கேள்விப்பட்டார். அவரிடம், மீனாட்சியம்மன் மீது பிள்ளைத்தமிழ் பாடும் படி வேண்டினார். மன்னரின் முன்னிலையில், குமரகுருபரர் பிள்ளைத்தமிழை அரங்கேற்றினார். அதன் இனிமையில் ஈடுபட்ட அம்பிகை, சிறுமி வடிவில் தோன்றினாள்.

மன்னரின் கழுத்தில் இருந்த முத்து மாலையைக் கழற்றி, குமரகுருபரருக்கு அணிவித்து சன்னிதிக்குள் சென்று மறைந்தாள். அன்னையின் அருளை எண்ணி அனைவரும் வியந்தனர்.
சிறுமியாக வந்த மீனாட்சி ஊஞ்சலில் ஆடும் அழகினை குமரகுருபரர் ஊசல்(ஊஞ்சல்) பருவ பாடலில் வர்ணித்து மகிழ்ந்தார். இக்கோலத்தை தரிசித்தால் மகிழ்ச்சியான வாழ்வைப் பெறலாம்.

நைவேத்யம்: அவல் கேசரி, பால் பாயாசம், கல்கண்டு சாதம், பட்டாணி சுண்டல்

பாடல்: ஆனந்தமாய் என் அறிவாய் நிறைந்த அமுதமாய்
வானந்த மான வடிவுடையாள் மறை நான்கினுக்கும்
தானந்த மான சரணார விந்தம் தவளநிறக்
கானந்தம் ஆடரங்காம் எம்பிரான் முடிக் கண்ணியதே.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நவராத்திரி விழா - தொடர் பதிவு Empty Re: நவராத்திரி விழா - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum