ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்…

4 posters

Go down

அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… Empty அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்…

Post by ayyasamy ram Mon Oct 12, 2015 5:39 am

அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… I8eO6Ys6Qz2Zo40mQ9RX+nrsimha3
-
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம்
திருத்தலம், வைணவ திவ்யதேசம் நூற்றியெட்டில் முதன்மையானது.
ஏழு பிராகாரங்கள் கொண்ட இத்தலத்தில் ஒவ்வொரு பிராகாரமும்
சிறப்பு மிக்கது.

அந்த வகையில் வடக்கு வாசல் வழியில் உள்ள ஐந்தாம் பிராகாரத்தில்
அமைந்துள்ள தாயார் சந்நதிக்கு எதிரில், அழகிய சிங்கர் கோயிலுக்கு
அருகில் உள்ள நாற்கால் மண்டபம் மிகவும் போற்றப்படுகிறது.

இங்குதான் கம்பர் இயற்றிய ராமாயணம் அரங்கேறியது என்பதால்
இந்த மண்டபத்தை கம்பர் மண்டபம் என்று அழைக்கின்றனர்.

கம்பர் பிறந்த ஊர் தேரழுந்தூர். அவ்வூர் காவிரி தங்கும் ஊர்,
கும்பமுனி சாபம் குலைத்த ஊர், திருவெழுந்தூர் என்றெல்லாமும்
அழைக்கப்படுகிறது. கம்பர் இயற்கையிலேயே கவிபாடும் திறன்
படைத்தவர். ஆசுகவி எனும் சிறப்புடைய இவர், காளியின் அருள்
பெற்றவர்.

அவரது கவிபாடும் திறமையை அறிந்த திருவெண்ணெய்நல்லூர்
சடையப்ப முதலியார் என்ற செல்வந்தர், கம்பரை ஆதரித்து வந்தார்.
கம்பரின் கவித்திறமையை அறிந்த குலோத்துங்க சோழன்,
கவிச்சக்ரவர்த்தி என்றும் சிறப்புப்பட்டம் கொடுத்து தன் அரசவையில்
தலைமைப் புலவராக அமர்த்திக் கொண்டான். சடையப்ப வள்ளலின்
ஆலோசனைப்படி குலோத்துங்க சோழன் கம்பரை ராமாயணம்
இயற்றும்படி வேண்டினான்.

கம்பர் ராமாயணத்தை கவிதை நடையில் பாட, அவரது
மாணாக்கர்கள் சுவடியில் எழுத, காளிதேவியே தீப்பந்தம்
பிடித்ததாக ஒரு செவிவழிச் செய்தியும் உண்டு.

கம்பர் ராமாயணம் முழுவதையும் இயற்றியபின், அதனை
அரங்கேற்ற பல இடையூறுகள் வந்தன. இறுதியாக கம்பரது
ராமாயணம் திருவரங்கம் கோயிலில் அரங்கேறியது.

கம்பர், தனது ராம காவியத்தில் இரண்ய சம்ஹாரத்தை மிக
அருமையாகப் படைத்திருந்தார். அதனை சில அறிஞர்களும்
பெரியோர்களும் ஏற்றுக் கொள்ளாமல் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
ஆனால், ‘திசை திறந்(து) அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்’
என்ற சொற்களை கம்பர் வாசித்தபோது கோயில் கோபுரத்திலிருந்த
நரசிம்ம மூர்த்தியின் திருவுருவம் அம்மண்டபம் முழுவதும்
எதிரொலிக்குமாறு சிரித்ததோடு நில்லாமல் கம்பருடைய
பேரறிவுடைமையைப் போற்றுவது போல் தன் தலையையும்
ஆட்டியதாம்! ஆகவே,

இதற்கு கம்பர் மண்டபம் என்ற பெயரும் உண்டு.
இந்த ராமாயணம் அரங்கேறிய காலம் சாலிவாஹன சகம் 807
என்றும், கி.பி. 807 என்றும் கூறுவர்.

கம்பர் நரசிம்ம உபாசகர். கம்பத்திலிருந்து தோன்றியதால்
நரசிம்ம சுவாமிக்கு கம்பர் என்ற பெயரும் பொருந்தும்.
நரசிம்மரை உபாசனை செய்ததாலேயே கவிஞர், கம்பர் ஆனார்.

–தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… Empty Re: அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்…

Post by M.Jagadeesan Mon Oct 12, 2015 12:52 pm

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்திலே கம்பராமாயண அரங்கேற்று மண்டபம் தெரியும்.  அங்கே கம்பர் யுத்த காண்டம் ஆரம்பிக்கும்போது இரணியன்  வதைப்படலத்தைச் சொன்னாராம்.  விபீஷணன் ராவணனுக்கு  பண்ணுகிறான்:   "இப்படி எல்லாம் தீமை செய்யாதே!  இரணியனை அழித்த நரசிம்ஹன் தான் ராமனாக அவதரித்திருக்கிறான். அவனை எதிர்த்து அழிவைத் தேடிக் கொள்ளாதே" என்று நரசிம்ஹ அவதார கதையைச் சொல்கிறான்...
அரங்கேற்று மண்டபத்தில் இருந்த மகான்கள், பண்டிதர்களெல்லாம் ஆட்சேபித்தார்களாம்.  வால்மீகியின் மூலத்திலே இரணியன் வதைப் படலம் கிடையாது. எனவே, கம்பராமாயணத்திலும் அது இருக்கக் கூடாது.  அதை நீக்கி விட்டு கம்பர் தம் ராமாயணத்தை  அரங்கேற்றலாம் என்றார்களாம்.

கம்பனுக்கு ஒன்றுமே தோன்றவில்லை.  அப்போது  வித்வான்கள், "இந்த புராணத்தின் தெய்வீக அம்சம் என்ன என்பதைக் காட்டினால் இதை ஒப்புக் கொள்கிறோம்" என்றார்கள்.
கம்பர், அழகிய சிங்கர் சன்னதிக்கு எதிரிலே போய் நின்று கொண்டார்.  "ஒன்றை உரைக்கில் ஒன்றேயாம்" என்ற செய்யுளில் ஆரம்பித்துப் பாட ஆரம்பித்தார். "ஆரடா சிரித்தாய்? என்ற சொல் வந்த  கட்டத்திலே, உள்ளுக்குள்ளே விக்ரஹ ரூபியாய் இருக்கும் பெருமான்  சிரித்து, தலையை ஆட்டி, இருகைகளையும் தூக்கி, "நான் ஏற்கிறேன்" என்று இரணியன் வதைப் படலத்தை ஏற்றானாம்.  ஆகையினாலே, இரணியன் வதைப் படலம் கம்பராமாயணத்திலே இடம்பெற்று அரங்கேறியது.  பகவானே அங்கீகரித்த அவதாரமாகிறது நரசிம்ஹ அவதாரம்.


நன்றி : இணையம்


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… Empty Re: அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்…

Post by சசி Mon Oct 12, 2015 10:25 pm

அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… 3838410834 அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… 103459460
இரு ஐயாவிற்கும் மிகவும் நன்றி. அருமையான பதிவு ஐயா கற்றுக் கொண்டேன்.


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… Empty Re: அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்…

Post by krishnaamma Tue Oct 13, 2015 12:57 pm

அருமையான பதிவு ராம் அண்ணா புன்னகை................அருமையான பதிவு ஐயா புன்னகை.....மிக்க நன்றி !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… Empty Re: அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்…

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum