புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சித்தர் பாடல்கள் I_vote_lcapசித்தர் பாடல்கள் I_voting_barசித்தர் பாடல்கள் I_vote_rcap 
10 Posts - 43%
ayyasamy ram
சித்தர் பாடல்கள் I_vote_lcapசித்தர் பாடல்கள் I_voting_barசித்தர் பாடல்கள் I_vote_rcap 
9 Posts - 39%
Sindhuja Mathankumar
சித்தர் பாடல்கள் I_vote_lcapசித்தர் பாடல்கள் I_voting_barசித்தர் பாடல்கள் I_vote_rcap 
1 Post - 4%
mohamed nizamudeen
சித்தர் பாடல்கள் I_vote_lcapசித்தர் பாடல்கள் I_voting_barசித்தர் பாடல்கள் I_vote_rcap 
1 Post - 4%
Guna.D
சித்தர் பாடல்கள் I_vote_lcapசித்தர் பாடல்கள் I_voting_barசித்தர் பாடல்கள் I_vote_rcap 
1 Post - 4%
mruthun
சித்தர் பாடல்கள் I_vote_lcapசித்தர் பாடல்கள் I_voting_barசித்தர் பாடல்கள் I_vote_rcap 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சித்தர் பாடல்கள் I_vote_lcapசித்தர் பாடல்கள் I_voting_barசித்தர் பாடல்கள் I_vote_rcap 
85 Posts - 51%
ayyasamy ram
சித்தர் பாடல்கள் I_vote_lcapசித்தர் பாடல்கள் I_voting_barசித்தர் பாடல்கள் I_vote_rcap 
54 Posts - 33%
mohamed nizamudeen
சித்தர் பாடல்கள் I_vote_lcapசித்தர் பாடல்கள் I_voting_barசித்தர் பாடல்கள் I_vote_rcap 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
சித்தர் பாடல்கள் I_vote_lcapசித்தர் பாடல்கள் I_voting_barசித்தர் பாடல்கள் I_vote_rcap 
4 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சித்தர் பாடல்கள் I_vote_lcapசித்தர் பாடல்கள் I_voting_barசித்தர் பாடல்கள் I_vote_rcap 
3 Posts - 2%
Karthikakulanthaivel
சித்தர் பாடல்கள் I_vote_lcapசித்தர் பாடல்கள் I_voting_barசித்தர் பாடல்கள் I_vote_rcap 
3 Posts - 2%
Guna.D
சித்தர் பாடல்கள் I_vote_lcapசித்தர் பாடல்கள் I_voting_barசித்தர் பாடல்கள் I_vote_rcap 
2 Posts - 1%
மொஹமட்
சித்தர் பாடல்கள் I_vote_lcapசித்தர் பாடல்கள் I_voting_barசித்தர் பாடல்கள் I_vote_rcap 
2 Posts - 1%
manikavi
சித்தர் பாடல்கள் I_vote_lcapசித்தர் பாடல்கள் I_voting_barசித்தர் பாடல்கள் I_vote_rcap 
2 Posts - 1%
mruthun
சித்தர் பாடல்கள் I_vote_lcapசித்தர் பாடல்கள் I_voting_barசித்தர் பாடல்கள் I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்தர் பாடல்கள்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Oct 08, 2015 9:55 pm

எண்சீர் விருத்தம்-சித்தர் பாடல்கள்

சிறந்தபரா பரமாகிய யெங்குந் தானாய்த்
தீர்க்கமுடன் ரவிமதியுஞ் சுடர்மூன்றாகிப்
பரந்தருளும் ஐம்பூத மாயை தோன்றிப்
பல்லாயிரங் கோடிஅண்டம் படைத்த போதம்
வரம்பெருகி அனந்தஅனந்தம் உயிரு மாகி
மதபேத மாகவுந்தான் வடிவைக் காட்டிச்
சரம்பெருக அண்டத்தி லெழுந்தே நின்ற
சச்சிதா னந்தம்அதைப் பணிகு வோமே.


-காக புசுண்டர் சித்தர்
பராபரமாக எங்கும் சிறந்து தானே எங்குமாய் நின்று,சூரிய சந்திர விண்மீன்கள் ஆகிய மூன்று ஒளியுமாகி, ஐம்பூதங்கள் கொண்ட மாயையும் ஆகி, பல்லாயிரம் கோடி உலகுகளைப் படைத்த அறிவுடைப் பொருளாகி, எண்ணற்ற உயிர்களுமாகி, மதங்களை நீக்கி, தன் உண்மை வடிவைப் புலப்படச் செய்து, எங்கும் சஞ்சரித்து நின்ற சத்சித் ஆனந்தம் ஆகிய கடவுளைப் பணிகுவோமே.

நன்றி-தெளிவுரை
முனைவர் அ.அறிவொளி ,வர்த்தமானன் பதிப்பகம்.

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Oct 09, 2015 12:02 am

பாடலுக்கான விளக்கத்துடன் மிகவும் அருமையான பதிவு. தொடர்ந்து சித்தர் பாடல்களை அறியத்தாருங்கள்.
விமந்தனி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விமந்தனி



சித்தர் பாடல்கள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசித்தர் பாடல்கள் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சித்தர் பாடல்கள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Oct 09, 2015 6:13 pm

மாளாத சக்தியடா மனித சக்தி
மலிவாகக் கிடைக்குதடா கணத்துக்கு உள்ளே
மீளாத மார்க்கமடா மின்னாத் தாளை
மேவியுனக்கு உட்காணும் வேதை மார்க்கம்
ஆளாக வென்றேனும் எப்போ தேனும்
அனைவர்க்கும் கிட்டுமடா ஞானப் பேறு
தூளாகக் காமத்தைத் துரத்தி விட்டே
துணையாகக் கம்பத்தே தூங்கு வாயே.


-காரைச் சித்தர்

மனித சக்தி மாளாத பெரிய சக்தி.ஒரு கணம் உணர்வால் எளிதில் அதை அடையலாம். மின்னல் போலும் பராசக்தி உள்ளேயே காணும் மார்க்கம் மீளாத்து ஆகும். ஆளாக வேண்டும் என்று எப்போதாவது நினைப்பவர்க்கு ஞானப் பேறு கிட்டும். காமத்தை தூளாகத் தூக்கி எறிந்து சுழு முனையாகிய தீப கம்பத்தை உணர்ந்து தியானம் செய்க.

நன்றி-தெளிவுரை
முனைவர் அ.அறிவொளி ,வர்த்தமானன் பதிப்பகம்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Oct 10, 2015 10:26 am

மூலவட்ட மானகுரு பாதங் காப்பு
முத்திக்கு வித்தான முதலே காப்பு
மேலவட்ட மானபரப் பிரமங் காப்பு
வேதாந்தங் கடந்துநின்ற மெய்யே காப்பு
காலவட்டந் தங்கிமதி யமுதப் பாலைக்
கண்டுபசி யாற்றிமனக் கவடு நீக்கி
ஞாவட்டம் சித்தாடும் பெரியோர் பாதம்
நம்பினதால் உரோம னென்பேர் நாயன் தானே.


-உரோமரிஷி ஞானம்

மூலாதாரப் பகுதியும் குரு பாதமாகும் எனது நூலைக் காக்க. முத்திக்கு வித்தாகிய இறைவனாகிய முதல்வனும், தலைக்கு மேல் உள்ள பகுதியில் வெளிப்படும் பரப்பிரம்மமும்,(தலைக்கு மேல் சுடராக விளங்கும் பகுதியாம்) என் நூலைக் காக்க.
வேத முடிவுக்கு அப்பாலும் விளங்கும் மெய்ப்பொருள் காக்க. காலத்தைக் காட்டும் சூரிய சந்திரர் இயக்கத்துக்குட்பட்ட மதி மண்டலத்தில் ஊறும் அமுதமாகிய பாலை உண்டு, ஞானப் பசியாறி, மனக் கவலை நீங்கி, இவ்வுலகில் சித்தினால் பல சாதனை செய்யும் பெரியோர் பாதங்களை வணங்கியதாலும் நம்பியதாலும் உரோமன் என்று இந்த நாயேனை அழைப்பர். இது கடவுள் வாழ்த்து.நூல் நன்கு முடிவுறவும் தன் பெயர் கூறவும் பயன் கொண்டார்.
(வேடு-கவலை. ஞால வட்டம்-தலைக்கு மேல் உள்ள பகுதியில் வெளிப்படும் பரப்பிரம்மம்)


நன்றி-தெளிவுரை
முனைவர் அ.அறிவொளி ,வர்த்தமானன் பதிப்பகம்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 11, 2015 11:45 am

முன் ஞானம் நூறு

அகண்டபரி பூரணமாம் உமையாள் பாதம்
அப்புறத்தே நின்றதோர் ஐயர் பாதம்
புகன்றுநின்ற கணேசனொடு நாதாள் பாதம்
புகழ்பெரிய வாக்குடைய வாணி பாதம்
நாகன்றெனவே யெனையாண்ட குருவின் பாதம்
நிறைநிறையாய்ச் சொரூபத்தில் நின்றோர் பாதம்
முகன்றெனையீன் றெடுத்தசின் மயத்தின் பாதம்
மூவுலகும் மெச்சுதற்குச் காப்புத் தானே.


--கைலாயக் கம்பளிச் சட்டைமுனி நாயனார்

எங்கும் பரவிய உமாதேவியின் பாதம். அதை அடுத்து அப்படி நின்ற சிவனார் பாதம். கனேசர் நாதாள், கலைவாணி, குரு சொருபத்தில் நின்றோர், சின்மயம் ஆகியோர் பாதங்கள் என் நூலை மெச்சும்படி காப்பாராக.
(நாதாள்-நாதர்கள். பரிபூரணம்-எங்கும் நீக்கம்அற நிறைந்திருக்கும் பொருள்)

நன்றி-தெளிவுரை
முனைவர் அ.அறிவொளி ,வர்த்தமானன் பதிப்பகம்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Oct 12, 2015 7:49 pm

எண்சீர் விருத்தம்

அண்டம்பிண்டம் நிறைந்துநின்ற அயன்மால் போற்றி!

அகண்டபரி பூரணத்தின் அருளே போற்றி!

மண்டலஞ்சூழ் இரவிமதி சுடரே போற்றி!

மதுரதமி ழோதும் அகத்தியரே போற்றி!

எண்டிசையும் புகழுமென்றன் குருவே போற்றி!

இடைகலையின் சுழுமுனையின் கமலம் போற்றி!

குண்டலிக்குள் அமர்ந்துநின்ற குகனே போற்றி!

குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி!


--திருவள்ளுவ ஞானம்

அண்டங்கள்,அவற்றிலுள்ள உடல்கள் ஆகிய யாவற்றிலும் நிறைந்து நிற்கும் பிரமன் திருமால் போற்றி!
இவர்களை இப்படி நிற்கச் செய்த விரிந்த பிரபஞ்சம் முழுதும் நீக்கமற இருக்கும் பரிபூரணமான அருள் போற்றி!
பூமண்டலத்தைச் சூழ்ந்து ஒளி சிறக்க செய்யும் சூரிய சந்திரர் நட்சத்திர ஒளிகள் போற்றி! இனிய தமிழை ஓதும் அகத்தியன் போற்றி!
எட்டுத் திசைகளும் புகழும் சிறப்புக்குரிய என் குருவே போற்றி!
இடைகலையால் மாற்றப்படும் சுழுமுனை சென்று இணையும் கமலம்(ஆதார கமலம்) போற்றி!
குண்டலியின் உள்ளே அமர்ந்திருக்கும் குகனே போற்றி! குருமுனிவன் இரு பாதங்களையும் எப்போதும் போற்றி!

நன்றி-தெளிவுரை
முனைவர் அ.அறிவொளி ,வர்த்தமானன் பதிப்பகம்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Oct 13, 2015 10:18 pm

எண்சீர் விருத்தம்

சத்தியே பராபரமே ஒன்றே தெய்வம்

சகலவுயிர் சீவனுக்கு மதுதா னாச்சு

புத்தியினா லறிந்தவர்கள் புண்ணி யோர்கள்

பூதலத்தில் கோடியிலே யொருவ ருண்டு

பத்தியினால் மனமடங்கி நிலையில்

பாழிலே மனத்தை விடார் பரமஞானி

சுத்தியே யலைவதில்லை சூட்சஞ் சூட்சம்

சுழியிலே நிலையறிந்தால் மோட்சந் தானே


--அகத்தியர்


என்றுமுள்ளது சத்தியம்.
எங்கும் நிறைந்த்து பராபரம்.
இதுவே தெய்வம்.
எல்லா உயிர்களிலும் சீவனாக அதுவே உள்ளது.
இதை அறிவால் புண்ணியர்கள் அறிவர்.
அப்படி அறிபவர் கோடியில் ஒருவரே இவ்வுலகில் உண்டு.
அப்படி அறிந்ததால் பக்தி மிகுந்து மனம் அடங்கி ஒரே நிலையில் நிற்பர்.
பாழானவற்றில் மனத்தை விட மாட்டார்கள்.
அவர்கள் பரம ஞானி ஆவர்.
எங்கும் சுற்றி இதை அலைந்து தேட வேண்டாம்.
சூக்குமமான ஒரு சுழியிலேயே இதன் நிலையை அறிந்தால் அவர்களுக்கு மோட்சமுண்டு.

நன்றி-தெளிவுரை
முனைவர் அ.அறிவொளி ,வர்த்தமானன் பதிப்பகம்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 13, 2015 11:45 pm

நல்ல திரி ஐயா புன்னகை..மிக்க நன்றி ! ............... நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Oct 14, 2015 8:34 am

krishnaamma wrote:நல்ல திரி ஐயா புன்னகை..மிக்க நன்றி ! ............... நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1168780
நன்றி வணக்கம் அம்மா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Oct 14, 2015 6:29 pm

எண்சீர் விருத்தம்


அடியாகி அண்டரண்டத் தப்பால் ஆகி

அகாரமெனு மெழுத்ததுவே பாதமாகி

முடியாகி நடுவாகி மூலந் தன்னில்

முப்பொருளுந் தானாகி முதலுமாகிப்

படியாய்முப் பாழற்றுப் படிக்கு மப்பாற்

படிகடந்து பரஞ்சோதிப் பதியு மாகி

அடியாகு மூலமதே அகார மாகி

அவனவளாய் நின்றநிலை யறிவ தாமே.



--திருமூல நாயனார் சித்தர்


அடியிலிருந்து அண்டங்களும் அதில் வாழ்வோரும் ஆகி, அகாரம் என்ற எழுத்தொலியுமாகி, அதுவே ஓம் என்பதில் முதல் (படி) பாதமாகியது. ஓம் என்பது அடி, நடு,முடி என்று மூலாதார முதல் செல்வதாகி, மும் மூர்த்திகளும் தானே ஆகி,அவர்களுக்கு முதலும் ஆகி, படிமுறையால் ஒளி உச்சியில் முப்பாழும் நீங்கி, அதற்கும் அப்பால் உள்ளவற்றைக் கடந்தால் பரஞ்சோதி ஆகிய பரம்பொருளைக் காணலாகும். அடியாகிய மூலாதாரமே அகரமாகக் கொண்டு உயர்ந்தால் அவனும், அவளும் ஓரணுவில் ஒன்றியிருப்பது அறியலாகும்.

நன்றி-தெளிவுரை
முனைவர் அ.அறிவொளி ,வர்த்தமானன் பதிப்பகம்


Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக