ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாம் இழந்த பழமை ,அவை எங்கே?

+6
M.Jagadeesan
Dr.S.Soundarapandian
Namasivayam Mu
உதயசுதா
ராஜா
பழ.முத்துராமலிங்கம்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நாம் இழந்த பழமை ,அவை எங்கே? Empty நாம் இழந்த பழமை ,அவை எங்கே?

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Oct 03, 2015 9:44 am

எங்கே? எங்கே? எங்கே?

இயற்கை எங்கே?

பனையோலை விசிறி எங்கே?

பல்லாங்குழி எங்கே?

கிச்சுகிச்சு தாம்பாளம் எங்கே?

கோகோ விளையாட்டு
 எங்கே?

சாக்கு பந்தயம் எங்கே?

கில்லி எங்கே?

கும்மி எங்கே?

கோலாட்டம் எங்கே?

திருடன் போலீஸ் எங்கே?

ஆலமர விழுது ஊஞ்சல் எங்கே?

மரப்பாச்சி கல்யாணம் எங்கே

 மட்டை ரெயில் எங்கே?

கமர்கட் மிட்டாய் எங்கே?

குச்சி மிட்டாய் எங்கே?

குருவி ரொட்டி எங்கே?

இஞ்சி மரப்பா எங்கே?

கோலி குண்டு எங்கே?

கோலி சோடா எங்கே?

பல் துலக்க 
 ஆலங்குச்சி 
 எங்கே

 எலந்தை பழம் எங்கே?

சீம்பால் எங்கே?

பனம் பழம் எங்கே?

பழைய சோறு எங்கே?

நுங்கு வண்டி எங்கே?

பூவரசன் பீப்பி எங்கே?

கைகளில் சுற்றிய பம்பரங்கள் எங்கே?

நடைபழக்கிய 
 நடை வண்டி 
 எங்கே ?

அரைஞான் கயிறு எங்கே?

அன்பு எங்கே?

பண்பு எங்கே?

பாசம் எங்கே?

நேசம் எங்கே?

மரியாதை எங்கே?

மருதாணி எங்கே?

சாஸ்திரம் எங்கே?

சம்பரதாயம் எங்கே?

விரதங்கள் எங்கே ?

மாட்டு வண்டி எங்கே?

மண் உழுத எருதுகள் எங்கே?

செக்கிழுத்த காளைகள் எங்கே?

எருமை மாடுகள் எங்கே?

பொதி சுமந்த கழுதைகள் எங்கே?

பொன் வண்டு எங்கே?

சிட்டுக்குருவி எங்கே?

குயில் பாடும் பாட்டு எங்கே?

குரங்கு பெடல் எங்கே?

அரிக்கேன் விளக்கு எங்கே?

விவசாயம் எங்கே?

விளை நிலம் எங்கே?

ஏர்கலப்பை எங்கே?

மண் வெட்டி எங்கே?

மண்புழு எங்கே?

வெட்டுமண் சுமந்த 
 பின்னல் கூடை 
 எங்கே ?

பனை ஓலை குடிசைகள் 
 எங்கே ?

தூக்கனாங் குருவி கூடுகள் 
 எங்கே ?

குளங்களில் குளித்த 
 கோவணங்கள்
 எங்கே?

அந்த குளங்களும் எங்கே?

தேகம் வளர்த்த 
 சிறுதானியம் 
 எங்கே?

அம்மிக்கல் எங்கே?

ஆட்டுக்கல் எங்கே?

மோர் மத்து ?

கால்கிலோ கடுக்கன் 
 சுமந்த காதுகள் 
 எங்கே ?

நல்லது கெட்டது 
 சுட்டிக்காட்டும்
 பெரியவர்கள் 
 எங்கே?

தோளிலும் இடுப்பிலும் 
 சுமந்த 
 பருத்தி துண்டு
 எங்கே ?

பிள்ளைகளை சுமந்த 
 அம்மாக்களும்
 எங்கே ?

தாய்பாலைத் தரமாய் 
 கொடுத்த தாய்மை 
 எங்கே ?

மங்கலங்கள் தந்த 
 மஞ்சள் பை 
 எங்கே ?

மாராப்பு சேலை 
 அணிந்த பாட்டிகள்
 எங்கே?

இடுப்பை சுற்றி சொருகிய 
 சுருக்கு பணப்பையும்
 எங்கே?

தாவணி அணிந்த இளசுகள் 
 எங்கே ?

சுத்தமான நீரும் 
 எங்கே ?

மாசு இல்லாத காற்று எங்கே ?

நஞ்சில்லாத காய்கறி எங்கே?

பாரம்பரிய நெல் ரகங்களும் 
 எங்கே?

எல்லாவற்றையும் விட
 நம் முன்னோர்கள்
 வாழ்ந்த முழு 
 ஆயுள் நமக்கு 
 எங்கே?

இதற்கு பாமரனாலும்,
மெத்தபடித்தவனாலும்,
விஞ்ஞானியாலும்,
ஏன் கணினியாலும்
 கூட பதில்
 சொல்ல முடியாது.

ஏனென்றால் நிம்மதியான வாழ்வை மறந்து பணம் எனும்
 காகித்தை தேடி இந்த
 உலகம் ஓடிக்கொண்டு இருக்கிறது.

அதுசரி அடுத்த
 தலைமுறையை பற்றி சிந்திக்க நமக்கு 
 நேரம் தான்
 எங்கே? எங்கே
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நாம் இழந்த பழமை ,அவை எங்கே? Empty Re: நாம் இழந்த பழமை ,அவை எங்கே?

Post by ராஜா Sat Oct 03, 2015 10:25 am

நாம் இழந்த பழமை ,அவை எங்கே? 3838410834

எங்கள் தலைமுறையாவது இதையெல்லாம் ஓரளவுக்கு பார்த்துவிட்டோம் , இப்ப நினைத்தாவது பார்க்க முடிகிறது.

ஆனால் என் குழந்தைகளுக்கு இவையெல்லாம் google image searchil தான் காமிக்கணும் சோகம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நாம் இழந்த பழமை ,அவை எங்கே? Empty Re: நாம் இழந்த பழமை ,அவை எங்கே?

Post by உதயசுதா Sat Oct 03, 2015 11:25 am

இதுல பாதி நம்ம காலத்துலேயே மறைஞ்சு போச்சு. நமக்கு அடுத்த தலைமுறைக்கு இதெல்லாம் என்ன என்றே தெரியபோவதில்லை. ராஜா சொன்ன மாதிரி google லில் தான் இதெல்லாம் காமிக்கணும்.


நாம் இழந்த பழமை ,அவை எங்கே? Uநாம் இழந்த பழமை ,அவை எங்கே? Dநாம் இழந்த பழமை ,அவை எங்கே? Aநாம் இழந்த பழமை ,அவை எங்கே? Yநாம் இழந்த பழமை ,அவை எங்கே? Aநாம் இழந்த பழமை ,அவை எங்கே? Sநாம் இழந்த பழமை ,அவை எங்கே? Uநாம் இழந்த பழமை ,அவை எங்கே? Dநாம் இழந்த பழமை ,அவை எங்கே? Hநாம் இழந்த பழமை ,அவை எங்கே? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நாம் இழந்த பழமை ,அவை எங்கே? Empty Re: நாம் இழந்த பழமை ,அவை எங்கே?

Post by Namasivayam Mu Sat Oct 03, 2015 12:02 pm

பட்டியலில் உள்ளவைகளில் பெரும்பாலானவை இன்னும் இருக்கின்றன.
நாம்தான் அவைகளை விட்டு வெகுதூரம் தள்ளி நிற்கிறோம்


http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

நாம் இழந்த பழமை ,அவை எங்கே? Empty Re: நாம் இழந்த பழமை ,அவை எங்கே?

Post by Dr.S.Soundarapandian Sat Oct 03, 2015 12:41 pm

நாம் இழந்த பழமை ,அவை எங்கே? 3838410834 நாம் இழந்த பழமை ,அவை எங்கே? 3838410834


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

நாம் இழந்த பழமை ,அவை எங்கே? Empty Re: நாம் இழந்த பழமை ,அவை எங்கே?

Post by M.Jagadeesan Sat Oct 03, 2015 4:53 pm

ஐயா ! முத்து இராமலிங்கம் அவர்களே ! தங்கள் ஆதங்கத்தைக் கவிதையாக வடித்துள்ளீர்கள் ! மிகவும் அருமை !  ஆனாலும் என்னுடைய எண்ணங்களையும் படித்திட வேண்டுகிறேன்.


இங்கே ! இங்கே ! இங்கே !
செயற்கை இங்கே இருக்கிறது .

பனை ஓலை விசிறி எதற்கு
மின் விசிறி இருக்கையிலே !

கில்லி விளையாட்டு எதற்கு
கிரிக்கெட் வந்த பின்னே !

திருடன் போலீஸ் எதற்கு
போலீஸ் திருடன் ஆன பின்னே !

இஞ்சி முரப்பா எதற்கு
ஈனோ சால்ட் வந்த பின்னே !

கோலிகுண்டு சோடா எதற்கு
கோககோலா வந்த பின்னே !

குளோசப் பேஸ்ட் இருக்கையிலே
குச்சியைத் தேடி ஓடுவானேன் !

ATM வந்த பின்னே
எதற்கு சுருக்குப் பை ?

மனிதன் தங்க இடமில்லை
இதிலே
அம்மிக்கல் எங்கே வைப்பீர்?
ஆட்டுக்கல் எங்கே வைப்பீர் ?

பாடங்கள் சுமக்கும் சிறுவனுக்குப்
பம்பரங்கள் விடுவதற்கு நேரம் ஏது ?

மெட்ரோ இரயில் வந்தபின்னே
மாட்டு வண்டி நத்தையன்றோ !

டிராக்டர் வந்த பின்னே
எருதுக்கு என்ன வேலை ?

புறாக்காலில் செய்தி அனுப்பியது ஒருகாலம்
பொத்தானில் SMS அனுப்புவது இக்காலம் !

காதுகள் கால்கிலோ  சுமந்தால்
பாதுகாப்பு இருக்குமா பகன்றிடுவீர் !

பனைஓலைக் குடிசை எல்லாம்
கன மழைக்குத் தாங்கிடுமா?
அடுக்கு மாடிக் கட்டிடத்தில்
அழகான அபார்ட்மெண்டில்
மிடுக்குடன் வாழ்வதே உத்தமமாம் !

அடுப்பு ஊதியே கண்கள்
அவிந்து போனது அந்தக்காலம் !
எரிவாயு வந்த பின்னே
எளிதான சமையல் இந்தக்காலம் !

இறைவன் இன்றியே இவ்வுலகு இயங்கும் !
ஆனால்
கணினி இன்றேல் கடுகளவும் இயங்காது .

பழையன எல்லாம் தீயது அல்ல !
புதியன எல்லாம் நல்லவை அல்ல !
எல்லாவற்றிலும் நல்லவை கொண்டு
நில்லா உலகில் வாழ்வது நன்று !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

நாம் இழந்த பழமை ,அவை எங்கே? Empty Re: நாம் இழந்த பழமை ,அவை எங்கே?

Post by ராஜா Sat Oct 03, 2015 5:40 pm

அட ... நல்லா இருக்கே இந்த பதில் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நாம் இழந்த பழமை ,அவை எங்கே? Empty Re: நாம் இழந்த பழமை ,அவை எங்கே?

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Oct 03, 2015 6:58 pm

M.Jagadeesan wrote:ஐயா ! முத்து இராமலிங்கம் அவர்களே ! தங்கள் ஆதங்கத்தைக் கவிதையாக வடித்துள்ளீர்கள் ! மிகவும் அருமை !  ஆனாலும் என்னுடைய எண்ணங்களையும் படித்திட வேண்டுகிறேன்.


இங்கே ! இங்கே ! இங்கே !
செயற்கை இங்கே இருக்கிறது .

பனை ஓலை விசிறி எதற்கு
மின் விசிறி இருக்கையிலே !

கில்லி விளையாட்டு எதற்கு
கிரிக்கெட் வந்த பின்னே !

திருடன் போலீஸ் எதற்கு
போலீஸ் திருடன் ஆன பின்னே !

இஞ்சி முரப்பா எதற்கு
ஈனோ சால்ட் வந்த பின்னே !

கோலிகுண்டு சோடா எதற்கு
கோககோலா வந்த பின்னே !

குளோசப் பேஸ்ட் இருக்கையிலே
குச்சியைத் தேடி ஓடுவானேன் !

ATM வந்த பின்னே
எதற்கு சுருக்குப் பை ?

மனிதன் தங்க இடமில்லை
இதிலே
அம்மிக்கல் எங்கே வைப்பீர்?
ஆட்டுக்கல் எங்கே வைப்பீர் ?

பாடங்கள் சுமக்கும் சிறுவனுக்குப்
பம்பரங்கள் விடுவதற்கு நேரம் ஏது ?

மெட்ரோ இரயில் வந்தபின்னே
மாட்டு வண்டி நத்தையன்றோ !

டிராக்டர் வந்த பின்னே
எருதுக்கு என்ன வேலை ?

புறாக்காலில் செய்தி அனுப்பியது ஒருகாலம்
பொத்தானில் SMS அனுப்புவது இக்காலம் !

காதுகள் கால்கிலோ  சுமந்தால்
பாதுகாப்பு இருக்குமா பகன்றிடுவீர் !

பனைஓலைக் குடிசை எல்லாம்
கன மழைக்குத் தாங்கிடுமா?
அடுக்கு மாடிக் கட்டிடத்தில்
அழகான அபார்ட்மெண்டில்
மிடுக்குடன் வாழ்வதே உத்தமமாம் !

அடுப்பு ஊதியே கண்கள்
அவிந்து போனது அந்தக்காலம் !
எரிவாயு வந்த பின்னே
எளிதான சமையல் இந்தக்காலம் !

இறைவன் இன்றியே இவ்வுலகு இயங்கும் !
ஆனால்
கணினி இன்றேல் கடுகளவும் இயங்காது .

பழையன எல்லாம் தீயது அல்ல !
புதியன எல்லாம் நல்லவை அல்ல !
எல்லாவற்றிலும் நல்லவை கொண்டு
நில்லா உலகில் வாழ்வது நன்று !
மேற்கோள் செய்த பதிவு: 1166187
அற்புதமான பதில்
அடி பிறலாத அருமை அன்பரே ....
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நாம் இழந்த பழமை ,அவை எங்கே? Empty Re: நாம் இழந்த பழமை ,அவை எங்கே?

Post by T.N.Balasubramanian Sat Oct 03, 2015 9:33 pm

பழ முத்துராமலிங்கம் ஆதங்கப்பட ,
Jagadeesan அதற்கு சப்பைக்கட்ட ,
சரியானப் போட்டி
ரெண்டுமே ரசிக்கும் படியாக இருந்தது .
நன்றி நன்றி

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நாம் இழந்த பழமை ,அவை எங்கே? Empty Re: நாம் இழந்த பழமை ,அவை எங்கே?

Post by விமந்தனி Sun Oct 04, 2015 12:34 am

எங்கே, எங்கே...? அனைத்தும் இங்கே, இங்கேயே தான் இருக்கிறது....! சூப்பருங்க கவிதைக்கு, பதில் கவிதை அருமை.


நாம் இழந்த பழமை ,அவை எங்கே? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநாம் இழந்த பழமை ,அவை எங்கே? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நாம் இழந்த பழமை ,அவை எங்கே? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நாம் இழந்த பழமை ,அவை எங்கே? Empty Re: நாம் இழந்த பழமை ,அவை எங்கே?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum