ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புலி (2015) விமர்சனம் - (Puli Movie Review)

+4
krishnaamma
ayyasamy ram
M.M.SENTHIL
ராஜா
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

புலி (2015) விமர்சனம் - (Puli Movie Review) Empty புலி (2015) விமர்சனம் - (Puli Movie Review)

Post by ராஜா Thu Oct 01, 2015 1:08 pm

நடிகர் : விஜய்
நடிகை : ஸ்ருதிஹாசன்
இயக்குனர் : சிம்புதேவன்
இசை : தேவிஸ்ரீ பிரசாத்
ஓளிப்பதிவு : நட்டி நடராஜ்
வேதாளக் கோட்டைக்கு ராணியாக இருக்கிறார் ஸ்ரீதேவி. இவருடைய அரசவையில், தளபதியாக இருக்கும் சுதீப், அந்நாட்டு மக்களை எல்லாம் அடிமைப்படுத்தி, கொடூரமாக நடத்தி வருகிறார். வேதாளக் கோட்டையில் வசிக்கும் அனைவரும் ஒருவித மூலிகையை சாப்பிட்டு, உயிர் வாழ்ந்து வருகிறார்கள். இந்த மூலிகையை சாப்பிட்டால் மனிதனை விட பல மடங்கு சக்தி அவர்களுக்கு கிடைக்கும். அதுமட்டுமில்லாமல், ராட்சத பல் வளருவது, குறிப்பிட்ட தூரம் வரை பறக்கும் சக்தி என அனைத்தும் இருக்கும். இவர்கள் தங்களை வேதாளங்கள் என்று அழைத்துக் கொள்கிறார்கள்.

இந்நிலையில், கிராமத்தில் வசிக்கும் பிரபு, நாட்டு மக்களை அடிமைத்தனத்தில் விடுவிக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு, தன்னுடைய ஆட்களை அழைத்துக் கொண்டு, சுதீப் குறித்து ராணியிடம் முறையிட செல்கிறார். அப்போது, ராணியின் கெட்டப்பில் இருக்கும் சுதீப்பிடம் எல்லாவற்றையும் கூறிவிடுகிறார். இதனால், சுதீப் அனைவரையும் அடித்து துவம்சம் செய்துவிட்டு, பிரபுவின் கையையும் வெட்டி விடுகிறார்.

அன்றுமுதல், வேதாளங்களுடன் நேரடியாக மோதல் போக்கில் ஈடுபடாமல், அவர்களை எதிர்க்க சரியான தருணத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார் பிரபு. இந்நிலையில், ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்படும் ஒரு குழந்தையை எடுத்து, வளர்த்து வருகிறார் பிரபு. அந்த குழந்தைதான் விஜய். வளர்ந்து பெரியவனாகும் விஜய், அந்த கிராமத்தில் தம்பி ராமையா, சத்யன் ஆகியோருடன் சேர்ந்து கூத்தும் கும்மாளமுமாக இருந்து வருகிறார். அத்துடன், சிறுவயதில் இருந்து பழகும் ஸ்ருதிஹாசன் மீது காதலும் கொள்கிறார்.

இந்நிலையில், ஸ்ருதிஹாசன் வெளியூருக்கு படிக்க செல்லவே, வேதாளங்களான சுதீப்பின் படை வீரர்கள் வரி வசூல் செய்ய இவர்களது கிராமத்திற்கு வருகிறார்கள். அவர்களிடம் பிரச்சினை செய்யாமல், அனைவரும் அடிபணிந்து வரி கொடுக்கின்றனர். இந்த விஷயம் ஸ்ருதிக்கு தெரியவந்ததும், அனைவர் மீதும் வெறுப்பு கொள்கிறார். எனவே, அவளை சமாதானப்படுத்துவதற்காக, பிரபு தனது கூட்டாளிகளை வேதாளங்களின் படை வீரர்கள் போல் தயார் செய்து, அவர்களை விஜய் அடித்து துவம்சம் செய்வதுபோல் நாடகம் நடத்துகிறார். இது எதுவுமே தெரியாத ஸ்ருதி, விஜய் மீது காதலில் விழ, இருவருக்கும் திருமணம் நடக்கிறது.

இந்நிலையில், விஜய்யின் ஆட்கள் வேதாளங்கள் போல் வேஷம் போட்டு நாடகம் நடத்துவதை அறியும் சுதீப்பின் படை வீரர்கள் ஊருக்குள் புகுந்து, விஜய் கிராமத்து மக்களை அடித்து துவம்சம் செய்து விட்டு, பிரபுவையும் கொன்று விடுகின்றனர். இறுதியில், ஸ்ருதிஹாசனையும் கடத்தி சென்று விடுகின்றனர். அவளை மீட்கவும், மக்களை அடிமைத்தனத்தில் இருந்து மீட்டெடுக்கவும், விஜய் வேதாள கோட்டையை நோக்கி புறப்பட தயாராகிறார். அப்போது, அந்த ஊர் வைத்தியரான ஜோ மல்லூரி, தான் கண்டுபிடித்து வைத்திருக்கும் மூலிகையை உண்டால், 8 நிமிடங்கள் வரை வேதாளமாக இருக்கமுடியும். அந்த சக்தியை வைத்து அவர்களை எதிர்க்கலாம் என்று கூறி விஜய்யை வழியனுப்பி வைக்கிறார்.

விஜய் வேதாளக் கோட்டையை நோக்கி செல்லும் வழியில் ஏகப்பட்ட பிரச்சினைகளை சந்திக்கிறார். அந்த பிரச்சினைகளையெல்லாம் தாண்டி, வேதாளக் கோட்டையை அடைந்து ஸ்ருதியை மீட்டாரா? விஜய்யின் பின்புலம் என்ன? என்பதை பிற்பாதியில் விளக்கியிருக்கிறார்கள்.

விஜய் இந்த படத்தில் இதுவரை நடித்திராத ராஜா காலத்து உடையணிந்து புதிய கெட்டப்புடன் நடித்திருக்கிறார். இவருக்கு அந்த கெட்டப் சரியாக பொருந்தியிருக்கிறது என்றே சொல்லலாம். படத்திற்கு படம் இளமையாக காட்சியளிக்கும் விஜய், இந்த படத்திலும் ரொம்பவும் இளமையாக காட்சியளிக்கிறார். பாடல் காட்சிகளில் வழக்கம்போல், அதிரடியான நடனங்களை ஆடி ரசிக்க வைத்திருக்கிறார். சண்டை காட்சிகளிலும் அசர வைத்திருக்கிறார். குறிப்பாக, சுதீப், விஜய் வேதாளம்தானா என்பதை அறிய அவருக்கு சில பரீட்சைகள் வைக்கிறார். அந்த காட்சிகளில் எல்லாம் கிராபிக்ஸ் எல்லாம் தாண்டி விஜய் போடும் சண்டைக் காட்சி ரொம்பவுமே ரசிக்க வைக்கிறது.

ஸ்ருதி படம் முழுக்க கவர்ச்சியை வாரி இறைத்திருக்கிறார். தன்னுடைய ஆட்கள், வேதாளங்களுக்கு அடிபணிந்து விட்டார்களே என்று குமுறும் காட்சிகளில் எல்லாம் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஹன்சிகா, இளவரசியாக கொள்ளை அழகுடன் அனைவரையும் கவர்கிறார். அளவான கவர்ச்சியுடன் இவருடைய நடிப்பு ரொம்பவுமே ரசிக்க வைக்கிறது.

ராணியாக வரும் ஸ்ரீதேவி, வயதானாலும் அவருடைய நடிப்பில் இன்னமும் இளமை பளிச்சிடுகிறது. அரியணையில் இருந்து இவர் இறங்கி வரும் காட்சிகளில் எல்லாம் ராணியாகவே நம் கண்களுக்கு தெரிகிறார். கொஞ்சம் மேக்கப்பை குறைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். தளபதியாக வரும் சுதீப், பார்வையாலேயே மிரட்டுகிறார். தளபதி கெட்டப் இவருக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறது. ‘நான் ஈ’க்கு பிறகு இந்த படமும் அவருக்கு சிறந்த வில்லன் என்ற பெயரை பெற்றுக் கொடுக்கும் என நம்பலாம்.

நாம் நிஜத்தில் நடத்திக் காட்ட முடியாத விஷயங்களையெல்லாம் கோர்வையாக எடுத்து இந்த படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் சிம்புதேவன். மிகப்பெரிய நட்சத்திரங்களை கையில் வைத்துக் கொண்டு அவர்களை அழகாக வேலை வாங்கியிருக்கிறார். படத்திற்கு பிரம்மாண்டம் கூட்டுவதற்காக கிராபிக்ஸ் காட்சிகளை அதிகம் கையாண்டிருக்கிறார். நிறைய காட்சிகள் ரசிக்க வைத்தாலும், ஒரு சில காட்சிகள் அவை கிராபிக்ஸ்தான் என்பதை சுட்டிக்காட்டி விடுகின்றன. அதேபோல், படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் பேசும் வசனங்கள் நன்றாக இருந்தாலும், அவர்கள் அதை உச்சரிக்கும் விதத்தில் இயக்குனர் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். அதேபோல், செட் அமைத்த விதத்திலும் கொஞ்சம் கவனித்திருக்கலாம்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் ‘புலி புலி’, ‘ஜிங்கிலியா ஜிங்கிலியா’ ஆகிய பாடல்கள் ரசிகர்களை துள்ளி ஆட்டம் போட வைத்திருக்கிறது. ‘ஏண்டி ஏண்டி’ பாடல் அழகான மெலோடி. அதை காட்சிப்படுத்திய விதமும் அருமை. நட்டி நடராஜ், ஒளிப்பதிவு படத்திற்கு மற்றொரு பெரிய பலம். அரண்மனை காட்சிகள், பாடல் காட்சிகள், சண்டை காட்சிகளெல்லாம் இவருடைய கேமரா கண்கள் அழகாக பதிவு செய்திருக்கிறது.

மொத்தத்தில் ‘புலி’ சீறிப் பாயும். -maalaimalar
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

புலி (2015) விமர்சனம் - (Puli Movie Review) Empty Re: புலி (2015) விமர்சனம் - (Puli Movie Review)

Post by M.M.SENTHIL Thu Oct 01, 2015 1:24 pm

புலி (2015) விமர்சனம் - (Puli Movie Review) 1571444738 தல


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

புலி (2015) விமர்சனம் - (Puli Movie Review) Empty Re: புலி (2015) விமர்சனம் - (Puli Movie Review)

Post by ராஜா Thu Oct 01, 2015 1:26 pm

M.M.SENTHIL wrote:புலி (2015) விமர்சனம் - (Puli Movie Review) 1571444738 தல
மேற்கோள் செய்த பதிவு: 1165653விமர்சனம் படித்தால் , படம் ஒருமுறை தைரியமா பார்க்கலாம் போல இருக்கு செந்தில் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

புலி (2015) விமர்சனம் - (Puli Movie Review) Empty Re: புலி (2015) விமர்சனம் - (Puli Movie Review)

Post by ayyasamy ram Thu Oct 01, 2015 1:31 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி
-
புலி (2015) விமர்சனம் - (Puli Movie Review) QucFdS3Ql6Z9vYxM9iBj+puli141
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

புலி (2015) விமர்சனம் - (Puli Movie Review) Empty Re: புலி (2015) விமர்சனம் - (Puli Movie Review)

Post by krishnaamma Thu Oct 01, 2015 4:38 pm

பகிர்வுக்கு நன்றி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

புலி (2015) விமர்சனம் - (Puli Movie Review) Empty Re: புலி (2015) விமர்சனம் - (Puli Movie Review)

Post by M.M.SENTHIL Fri Oct 02, 2015 4:55 pm

ராஜா wrote:
M.M.SENTHIL wrote:புலி (2015) விமர்சனம் - (Puli Movie Review) 1571444738 தல
மேற்கோள் செய்த பதிவு: 1165653விமர்சனம் படித்தால் , படம் ஒருமுறை தைரியமா பார்க்கலாம் போல இருக்கு செந்தில் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1165654

அப்படி நம்பி போய் விடாதீர்கள் தல, என் நண்பன் ஒருவன் விஜயின் தீவிர ரசிகன் இந்த படத்தை பார்த்து விட்டு வந்ததில் இருந்து, இனி விஜய் படமே பார்க்க மாட்டேன் என்று சத்தியம் செய்திருக்கிறான் புன்னகை புன்னகை புன்னகை

ஓவர் பில்டப்..... ஓவர் கிராபிக்ஸ்....

தற்போது தனி ஒருவன் படம் ஓ.கே.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

புலி (2015) விமர்சனம் - (Puli Movie Review) Empty Re: புலி (2015) விமர்சனம் - (Puli Movie Review)

Post by ராஜா Fri Oct 02, 2015 5:53 pm

M.M.SENTHIL wrote:
ராஜா wrote:
M.M.SENTHIL wrote:புலி (2015) விமர்சனம் - (Puli Movie Review) 1571444738 தல
மேற்கோள் செய்த பதிவு: 1165653விமர்சனம் படித்தால் , படம் ஒருமுறை தைரியமா பார்க்கலாம் போல இருக்கு செந்தில் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1165654

அப்படி நம்பி போய் விடாதீர்கள் தல, என் நண்பன் ஒருவன் விஜயின் தீவிர ரசிகன் இந்த படத்தை பார்த்து விட்டு வந்ததில் இருந்து, இனி விஜய் படமே பார்க்க மாட்டேன் என்று சத்தியம் செய்திருக்கிறான் புன்னகை புன்னகை புன்னகை

ஓவர் பில்டப்..... ஓவர் கிராபிக்ஸ்....

தற்போது தனி ஒருவன் படம் ஓ.கே.
மேற்கோள் செய்த பதிவு: 1165985ஐயையோ .... நல்ல வேளை புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

புலி (2015) விமர்சனம் - (Puli Movie Review) Empty Re: புலி (2015) விமர்சனம் - (Puli Movie Review)

Post by soplangi Fri Oct 02, 2015 11:20 pm

புலிக்கு பதில் போகோ.. கார்ட்டூன் நெட்வொர்க் போன்றவற்றில் டோம் & ஜெர்ரி போன்றவற்றை பார்த்து ரசிக்கலாம்
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

புலி (2015) விமர்சனம் - (Puli Movie Review) Empty Re: புலி (2015) விமர்சனம் - (Puli Movie Review)

Post by விமந்தனி Sat Oct 03, 2015 12:23 am

ராஜா wrote:
M.M.SENTHIL wrote:
ராஜா wrote:
M.M.SENTHIL wrote:புலி (2015) விமர்சனம் - (Puli Movie Review) 1571444738 தல
மேற்கோள் செய்த பதிவு: 1165653விமர்சனம் படித்தால் , படம் ஒருமுறை தைரியமா பார்க்கலாம் போல இருக்கு செந்தில் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1165654

அப்படி நம்பி போய் விடாதீர்கள் தல, என் நண்பன் ஒருவன் விஜயின் தீவிர ரசிகன் இந்த படத்தை பார்த்து விட்டு வந்ததில் இருந்து, இனி விஜய் படமே பார்க்க மாட்டேன் என்று சத்தியம் செய்திருக்கிறான் புன்னகை புன்னகை புன்னகை

ஓவர் பில்டப்..... ஓவர் கிராபிக்ஸ்....

தற்போது தனி ஒருவன் படம் ஓ.கே.
மேற்கோள் செய்த பதிவு: 1165985ஐயையோ .... நல்ல வேளை புன்னகை


அடக்கடவுளே! நானும் கூட இந்த படம் பார்க்கலாம்னு இருந்தேனே! நல்லவேளை .... 120X3 ரூபா மிச்சம். புன்னகை


புலி (2015) விமர்சனம் - (Puli Movie Review) EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபுலி (2015) விமர்சனம் - (Puli Movie Review) L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312புலி (2015) விமர்சனம் - (Puli Movie Review) EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

புலி (2015) விமர்சனம் - (Puli Movie Review) Empty Re: புலி (2015) விமர்சனம் - (Puli Movie Review)

Post by உதயசுதா Sat Oct 03, 2015 11:04 am

விஜய் படத்துக்கு படம் முன்னேறிக்கொண்டு இருக்கிறார். இந்த படத்துக்கு இவரோட முந்தின படம் எவ்வளவோ தேவலை என்று நினைக்கும் அளவுக்கு.
குழந்தைகள் பார்க்க வேண்டிய கதை. ஆனா கவர்ச்சி நடிகை ஸ்ருதிஹாசன் இருப்பதால் குழந்தைகளையும் இந்த படம் பார்க்க அழைத்து செல்ல முடியாது.ஸ்ருதிஹாசன் அவரோட பங்கை சரியா செய்து இருக்கிறார். பாவம் ஸ்ரீதேவி. அவரை இந்த அளவுக்கு எந்த இயக்குநராலும் கேவேலபடுத்த முடியாது. இத்தனை வருசத்துக்கு அப்புறம் அவர் இந்த மாதிரி மொக்கை படத்தில் நடித்து இருப்பது வேதனைதான்.


இப்படி எந்த வயதினரையும் படம் பார்க்க விடாமல் செய்துவிட்டார் இயக்குனர். இந்த மொக்கை படத்துக்கு விஜய் தேவையில்லை.


புலி (2015) விமர்சனம் - (Puli Movie Review) Uபுலி (2015) விமர்சனம் - (Puli Movie Review) Dபுலி (2015) விமர்சனம் - (Puli Movie Review) Aபுலி (2015) விமர்சனம் - (Puli Movie Review) Yபுலி (2015) விமர்சனம் - (Puli Movie Review) Aபுலி (2015) விமர்சனம் - (Puli Movie Review) Sபுலி (2015) விமர்சனம் - (Puli Movie Review) Uபுலி (2015) விமர்சனம் - (Puli Movie Review) Dபுலி (2015) விமர்சனம் - (Puli Movie Review) Hபுலி (2015) விமர்சனம் - (Puli Movie Review) A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

புலி (2015) விமர்சனம் - (Puli Movie Review) Empty Re: புலி (2015) விமர்சனம் - (Puli Movie Review)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» Airaa Review: யமுனாவை கொல்லத்துடிக்கும் பவானி... கருப்பு வெள்ளை படம் காட்டும் ஐரா... விமர்சனம்!
» 12-7-2015- நாணயம் விகடன் + 14-7-2015- சினிக்கூத்து + 27-7-2015-புதிய தலைமுறை கல்வி + 11-7-2015- டைம் பாஸ் விகடன்
» கடிக்காத புலி, கால் இல்லாப் புலி, உறுமாத புலி...(விடுகதைகள்)
» 28-7-2015 - அவள் விகடன் + 22-7-2015- ஆனந்த விகடன் + 25-7-2015- டைம் பாஸ் விகடன்
» 15-7-2015- ஆனந்த விகடன் + 16-7-2015 - ஆன்மிகம் பலன் இதழை டவுன்லோட் செய்ய

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum