ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குற்றம் கடிதல் ! இயக்கம் பிரம்மா ! திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி !

5 posters

Go down

குற்றம் கடிதல் !   இயக்கம் பிரம்மா !  திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி ! Empty குற்றம் கடிதல் ! இயக்கம் பிரம்மா ! திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Mon Sep 28, 2015 7:59 pm

குற்றம் கடிதல் !


இயக்கம் பிரம்மா !

திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி !

படத்தில் வெட்டுக் குத்து இல்லை ,குத்துப்பாட்டு இல்லை ,இரட்டை அர்த்த வசனங்கள் இல்லை .துப்பாக்கி சூடு இல்லை .ஆங்கிலம் கலந்த தமிங்கிலப் பாடல் இல்லை ஆபாச நடனம் இல்லை . கூத்து நடனம் உள்ளது .படத்தில் நல்ல பாடம் உள்ளது. அதனால் படம் வெற்றியும்,உலக விருதும் பெற்றுள்ளது .இன்னும் பல விருதுகள் கிடைக்கும் .

வசூலை மனதில் வைத்து மக்களை முட்டாளாக்கும் மசாலாப் படம் இயக்கும் இயக்குனர்களும் ,மக்களை முட நம்பிக்கையில் ஆழ்த்தும் பேய்ப்படம் எடுக்கும் இயக்குனர்களும் பார்த்து திருந்த வேண்டிய மிக நல்ல படம் இது .இயக்குனர் பிரம்மா சிற்பி சிலை செதுக்குவது போல காட்சிகளை செதுக்கி உள்ளார்

படத்தின் தலைப்பே திருக்குறளின் அதிகாரத் தலைப்பு .பெயர் சூட்டியமைக்கு முதல் பாராட்டு .படம் தொடங்கும்போது திருக்குறள் தெளிவுரை எழுதியவர்கள் திருக்குறளையும் எழுதி இருக்கலாம் .

குற்றம் கடிதல் !அதிகாரம் . திருக்குறள் எண் 434

குற்றமே காக்க பொருள் ஆகக் குற்றமே
அற்றம் தரூஉம் பகை !
.
குற்றம் செய்யாமல் இருப்பதே நன்மை தரும் .செய்த குற்றம் பகையை உருவாக்கும் .

ஆசிரியர் செய்த சிறு குற்றம் பெரிய பகையை உருவாக்கியதே கதை .பள்ளி மாணவர்களுக்கு உரிய வயதில் பாலியல் கற்பித்தல் அவசியம் .அப்படி கற்பித்தால் பாலியல் குற்றங்கள் நடக்காது என்பதே கதையின் கரு .காக்கா முட்டை படத்திற்கு அடுத்தபடியாக வந்துள்ள தரமான படம் குடும்பத்துடன் போய் பார்க்க வேண்டிய படம் .

இந்த படத்தில் ராதிகா பர்ஷித்தா ,சாய் ராஜ்குமார் ,பாவேல் நவகீதன், குலோத்துங்கன் ,துர்கா வேணுகோபால் ,நிகிலா கேசவன் மற்றும் கூத்துக் கலைஞர்கள் யாருமே நடிக்க வில்லை பாத்திரமாகவே மாறி விட்டனர் .திரைப்படம் பார்க்கிறோம் என்பதையை மறக்கடித்து நேரடியாக நிகழ்வுகளைப் பார்க்கும் உணர்வை ஏற்படுத்தி வெற்றி பெறுகின்றனர் .


மெர்லின் என்ற கிறித்தவ ஆசிரியர் இந்து மணமகனை காதலித்து மணமுடித்து விடுப்பு முடிந்து முதல் நாள் பள்ளிக்கு செல்கிறாள் .சக ஆசிரியர் அவரது கணவருடன் திரைப்படம் செல்கிறேன் .என் வகுப்பை நீ பார்த்துக் கொள் என்று ஒப்படைத்து செல்கிறார்

வகுப்பில் உள்ளே சென்றதும் ஒரு மாணவி மாணவன் பற்றி புகார் சொல்கிறாள. தோழி பிறந்த நாள் என்று சாக்லேட் கொடுத்ததற்கு சக மாணவன் முத்தம் தந்து விட்டான் .என்கிறாள் .உடன் அவனை அழைத்து கேட்கிறாள் .அவன் ஆமா முத்தம் கொடுத்தேன் .உங்களுக்கு பிறந்த நாள் என்றாலும் உங்களுக்கும் கொடுப்பேன் .என்கிறான் .உடன் கோபம் அடைந்த
மெர்லின் மாணவனை அறைந்து விடுகிறார் .மாணவன் மயக்கம் அடைந்து கிழே விழுகிறான் .மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றனர் .அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்கின்றனர் .கோமா நிலைக்கு போகவும் வாய்ப்பு உண்டு என்கின்றனர் மருத்துவர்கள் .


இதனை அறிந்த பள்ளி முதல்வர் மெர்லினை கணவருடன் கொள்ளி மலைக்கு சென்று விடுங்கள் இங்கு இருந்தால் ஆபத்து நிலைமை மோசமாகி விடும் என்று அனுப்பி வைக்கிறார் .மருத்துவச் செலவு முழுவதையும் ஏற்பதாகச் சொல்லி பணம் செலுத்தி விடுகிறார் .அவரது மனைவியும் பள்ளியில் ஆசிரியர் அவர் கணவருக்கு ஆறுதல் தருகிறார் .
அறை வாங்கி மயங்கி விழுந்த மாணவனுக்கு ஏற்கனவே மூளையில் கட்டி இருக்கின்றது.அறை வாங்குவதற்கு முன்பே ரத்தம் வடிந்த கைக்குட்டையை சக மாணவி எடுத்துத் தருகிறாள் .
மெர்லின் மாணவனை அடித்ததை நினது நினைத்து மாணவனுக்கு வாழ்த்துவது என்றால் கன்னத்தில் முத்தம் இடும் பழக்கம் இல்லத்தில் உள்ளது .அது தெரியாமல் முத்தம் என்பதை தவறாகப் புரிந்து குற்றம் செய்து விட்டோம் என்று மிகவும் வருதுகின்றால் .தன் கையையே ஒரு பகைவனைப் போல பார்க்கிறாள் .அவள் கணவன் அவளுக்கு ஆறுதல் சொல்லி பக்க பலமாக இருக்கிறான் .
அறை வாங்கி மயங்கி விழுந்த மாணவனுக்கு அப்பா இல்லை இறந்து விட்டார் .அம்மாதான் ஆட்டோ ஓட்டி இவனை வளர்க்கிறாள் .அவள் சகோதரன் மிகவும் கோபக்காரன் .அவன் கேள்விப்பட்டு உடன் மெர்லின் வீட்டுக்கு செல்கிறான் .வீடு பூட்டி உள்ளது .உடன் மெர்லின் அம்மா வீட்டிற்கு செல்கிறான் .

.
அங்கே அல்லோலுயா பிராத்தனை நடக்கின்றது முடியும் வரை காத்து இருந்து விட்டு முடிந்ததும் உள்ளே சென்று மகள் மெர்லினை அலைபேசியில் அழை அல்லது அவள் எண் கொடு என்கிறான் .எண் எதற்கு என்று கேட்டதும் உன் மகள் அடித்த என் மாப்பிள்ளை மருத்துவமனையில் உள்ளான் .என்கிறான் .அலைபேசியில் அழைக்கிறாள் கிடைக்கவில்லை .சீனம் கொண்டு செல்கிறான் .ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னம் காட்ட மோட்டோம் என்று சொல்லி செல்கிறான் .
மெர்லினும் அவளது கணவனும் கொல்லிமலை நோக்கி செல்லும்போது .அலைபேசியில் பேச முடியவில்லை என்று பொது தொலைபேசியில் பேசும்போது பேருந்து சென்று விடுகிறது .அதற்குள் சென்னைக்கு வந்து விடுங்கள் என்று காவல் அதிகாரி சொல்கிறார் .நிலைமை மிக மோசமாகி விட்டது .ஊடகங்கள் பெரிதாக்கி விட்டனர் .உடன் வந்து விடுங்கள் .என்கின்றனர் .லாரி பிடித்து சென்னைக்கு திரும்புகின்றனர் .வேறு பேருந்தில் ஏறி வரும்போது கணவன் தூங்கும் பொது மெர்லின் பேருந்தை விட்டு இறங்கி விடுகிறாள் .விழித்துப் பார்த்த கணவன் அதர்ச்சி அடைந்து பேருந்தை நிறுத்தச் சொல்லி இறங்கி தேடுகின்றான் .மெர்லின் தற்கொலை செய்ய தண்டவாளம் நோக்கி செல்கிறாள் .கணவன் காப்பாற்றி அழைத்து வருகிறான்
மருத்துவமனைக்கு செல்கின்றனர் மாணவனின் அம்மாவின் கால்களை பிடித்து அழுது அம்மாவின் கைகளால் தன்னை மாறி மாறி அறைந்து கொள்கிறாள் .உடன் அந்த அம்மா இவளை வாரி அனைத்துக் கொள்கிறாள் .இந்தக் காட்சியின் திரையரங கில் பலரும் கை தட்டினார்கள் .
பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவ மாணவியரும் அவசியம் பார்க்க வேண்டிய நல்ல படம் .கல்வி அதிகாரி ஊடங்களிடம் ஆசிரியர் மெர்லின் மீது தவறு இல்லை மாணவனுக்கு ஏற்கனவே கோளாறு உள்ளது எண்டு விளக்கம் சொல்லும் நேரம் .மெர்லின் வந்து நின்று நான் அடித்தது தவறுதான் மன்னியுங்கள் என்று மன்றாடும் இடம் நிகிழ்ச்சி .
மகாகவி பாரதியாரின் பாடல் வரிகளுக்கு ஏற்ப காட்சிகள் படமாக்கி விதம் சிறப்பு .ஒளிப்பதிவு மணிகண்டன் இவரை மற்றுமொரு பாலு மகிந்திரா எனலாம் அருமையான ஒளிப்பதிவு .இசையும் நன்று .
மாணவனின் மாமா இறுதியில் ஆசிரியர் மெர்லினுக்கு ' தாய் நாவலை எழுதி பரிசளிக்கு காட்சியோடு படம் முடிகின்றது .
படம் முடிந்து வெளிய வந்த பிறகும் படம் பற்றிய நினைவு அகலவில்லை .இயக்குனர் பிரம்மாவிற்கு பாராட்டுக்கள் நடித்த நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் பாராட்டுக்கள் .ஒட்டு மொத்த குழுவிற்கும் பாராட்டுக்கள்

படம் பார்த்த எல்லோருடைய மனதிலும் யாரையும் அடிக்கக் கூடாது என்ற கருத்து ஆழாமாக பதிந்து விடுகிறது .மிக நல்ல படம் பார்த்த மன நிறைவு .குடும்பத்துடன் திரையரங்கம் சென்று பாருங்கள் .
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1818
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

குற்றம் கடிதல் !   இயக்கம் பிரம்மா !  திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி ! Empty Re: குற்றம் கடிதல் ! இயக்கம் பிரம்மா ! திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி !

Post by Namasivayam Mu Tue Sep 29, 2015 9:15 am

நன்றி


http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

குற்றம் கடிதல் !   இயக்கம் பிரம்மா !  திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி ! Empty Re: குற்றம் கடிதல் ! இயக்கம் பிரம்மா ! திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Tue Sep 29, 2015 9:17 am

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1818
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

குற்றம் கடிதல் !   இயக்கம் பிரம்மா !  திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி ! Empty Re: குற்றம் கடிதல் ! இயக்கம் பிரம்மா ! திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி !

Post by கண்ணன் Tue Sep 29, 2015 10:44 am

விமர்சனம் படம் பார்க்க தூண்டுகிறது
குற்றம் கடிதல் !   இயக்கம் பிரம்மா !  திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி ! 1571444738
கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 17/10/2014

Back to top Go down

குற்றம் கடிதல் !   இயக்கம் பிரம்மா !  திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி ! Empty Re: குற்றம் கடிதல் ! இயக்கம் பிரம்மா ! திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி !

Post by ராஜா Tue Sep 29, 2015 11:20 am

விமர்சனத்திற்கு மிக்க நன்றி ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

குற்றம் கடிதல் !   இயக்கம் பிரம்மா !  திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி ! Empty Re: குற்றம் கடிதல் ! இயக்கம் பிரம்மா ! திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி !

Post by ayyasamy ram Tue Sep 29, 2015 1:39 pm

குற்றம் கடிதல் !   இயக்கம் பிரம்மா !  திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி ! 103459460 குற்றம் கடிதல் !   இயக்கம் பிரம்மா !  திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி ! 3838410834
-
படத்தின் ஆரம்பித்திலேயே செக்ஸ் கல்வி எத்தனை முக்கியம் என்று பேசும் அந்த ஆசிரியை கதாபாத்திரம் செம்ம போல்ட். எப்படி நான் பிறக்கிறோம் என கிளாஸ் எடுக்க வரும் போது, ஆசிரியை கிண்டல் செய்யும் மாணவனிடம், அவர் ஒரு எடுத்துக்காட்டு சொல்லி பாடம் எடுத்து, அதே மாணவனை கைத்தட்ட வைக்கும் காட்சி, ஒட்டுமொத்த திரையரங்கமும் கைத்தட்டலில் அதிர்கிறது.
-
நன்றி- சினி உலகம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குற்றம் கடிதல் !   இயக்கம் பிரம்மா !  திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி ! Empty Re: குற்றம் கடிதல் ! இயக்கம் பிரம்மா ! திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பரதேசி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . இயக்கம் பாலா .
» சைவம் ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி இயக்கம் : திரு. ஏ.எல். விஜய்
» மதுபானக் கடை இயக்கம் திரு .கமலக்கண்ணன் . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» தாண்டவம் ! நடிப்பு விக்ரம் . இயக்கம் விஜய் . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» நீர்ப் பறவை ! இயக்கம் சீனு ராமசாமி . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum