ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிர் காக்கும் தோழன் சைக்கிள் !

3 posters

Go down

உயிர் காக்கும் தோழன் சைக்கிள் ! Empty உயிர் காக்கும் தோழன் சைக்கிள் !

Post by krishnaamma Tue Sep 22, 2015 10:19 am

உயிர் காக்கும் தோழன் சைக்கிள் ! 13tWrZVSk67yXntdsCjg+Tamil_News_large_1347236

நம்மிடையே தற்போது மறைந்து வரும் முக்கிய பழக்கம் சைக்கிள் ஓட்டுதல். பெரும்பாலான கல்லுாரிகளில் சைக்கிள் ஸ்டாண்டுகள், பைக் ஸ்டாண்டுகளாகவும், கார் ஸ்டாண்டுகளாகவும் மாறி விட்டன. வருங்காலத்தில் சைக்கிள் என்ற வாகனம், அருங்காட்சியகத்தில் மட்டும் இருக்கும் என்ற நிலை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் உள்ளது.

1839ல் மேக்மில்லன் என்பவரால் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் வெளாசிட்ட என்று பெயரிடப்பட்டு, பிற்காலத்தில் சைக்கிள் என மாறியது. பின்னர் டன்லப் என்பவரால் ரப்பர் சக்கரம் கொண்டதாக, சைக்கிள் மாற்றியமைக்கப்பட்டது.

ஐரோப்பிய நாடுகளில், முக்கியமாக சுவிட்சர்லாந்து, நெதர்லாந்தில் மக்கள் அலுவலகங்களுக்கு, பள்ளிகளுக்கு சைக்கிளில் செல்வதைத்தான் விரும்புகிறார்கள். சாலைகளில் இருபுறமும் சைக்கிள் செல்வதற்கு நேர்த்தியாக தளம் அமைத்து, சைக்கிளில் செல்வதை ஊக்குவிக்கிறார்கள்.

நமது நாட்டில் நிலைமை தலைகீழாக இருக்கிறது. அதிகமாக மோட்டார் வாகனங்களை பயன்
படுத்துவதால் சுற்றுப்புற சூழ்நிலை அசுத்தமாக மாறி, நுரையீரல் தொடர்பான நோய்கள் அதிகமாகி வருகிறது. மேலை நாடுகளில் பெரிய பதவிகளில் இருப்பவர்கள் கூட சைக்கிளில் செல்வதை விரும்பும் போது, நமது நாட்டில் அது தகுதி குறைவு என்ற நிலை வந்து விட்டது.

தொடரும்.....................


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உயிர் காக்கும் தோழன் சைக்கிள் ! Empty Re: உயிர் காக்கும் தோழன் சைக்கிள் !

Post by krishnaamma Tue Sep 22, 2015 10:20 am

உயிர் காக்கும் தோழன் சைக்கிள் ! Bp98SioURdqkafIlH56k+hero-cycles-trax-trance

தினமும் 8 கி.மீ., சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

* சைக்கிள் ஓட்டுவது உடலை வருத்தி செய்யக்கூடிய பயிற்சி அல்ல. எனவே மிகவும் மோசமான இதய நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களை தவிர, எல்லோருமே சைக்கிள் ஓட்டலாம்.

* சைக்கிள் ஓட்டும் போது உடம்பில் உள்ள அனைத்து தசைகளும் பயன்பட்டில் இருக்கின்றன.

* உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ப வேகமாகவும் ஓட்டலாம், மெதுவாகவும் ஓட்டலாம்.

* சைக்கிள் ஓட்டும் போது, நல்ல ஆரோக்கியமான ஆக்ஸிஜனை நாம் சுவாசிக்கிறோம்.

* நமது உடம்பில் உள்ள மூட்டுகளில் இறுகும் தன்மை மாறி, வலுவான மூட்டாக மாற்றுகிறது. எனவே மூட்டுகளை நன்றாக மடக்கி நீட்டி வேலை செய்ய முடியும்.

* எலும்புகளை பதப்படுத்தி, உறுதிப்படுத்துகிறது. உடல் கொழுப்பை குறைக்கிறது.

* சர்க்கரை வியாதி, ரத்த கொதிப்பு, மிகை கொழுப்பு தொடர்பான நோய் வராமல் பாதுகாக்கிறது.

* மார்பக புற்றுநோய், உடல் புற்றுநோய்கள், பக்கவாதம் வராமலும் தடுக்கிறது.

* மனநிம்மதியை கொடுக்கிறது. மன அழுத்தம் மற்றும் மனசோர்வு ஏற்படாமல் தடுக்கிறது.

* தினமும் சைக்கிள் ஓட்டும் பயிற்சி செய்வதால், இதயத்தில் புது ரத்த நாளங்கள் ஏற்படுகின்றன. இவை, இதயத்தசை நார்களில் அதிகமான ரத்தத்தை எடுத்து செல்கின்றன. இதனால் மாரடைப்பு வராமல் தடுக்கப்படுகிறது.

* சர்க்கரை நோயாளிகள் சைக்கிள் ஓட்டும் போது இன்சுலினுடைய வேலைத்திறன் அதிகமாகிறது. ஆதலால் குறைந்த அளவு இன்சுலினால் அதிக அளவு நன்மை கிடைக்கிறது.

* காலில் உள்ள அனைத்து தசைகளுக்கும் சைக்கிள் பயிற்சி வலுவைக் கொடுக்கிறது. முக்கியமாக பாதங்களில் உள்ள சிறிய தசைகள் வலுவாக மாறுகின்றன.

* சைக்கிள் பயிற்சி தசை நார்களை வலுவாக்குவதுடன் சிரை வீக்க நோய் வராமல் பாதுகாக்கின்றன.

* நமது கைகளில் உள்ள சிறிய தசை நார்களும் சைக்கிள் ஓட்டும் போது வலுவாகின்றன. இதனால் எழுதுவது போன்ற விரல்களால் செய்யப்படும் வேலைகளை துல்லியமாக செய்ய முடிகிறது.

* மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் அதிகமாவதுடன், சிறுமூளையின் வேலைத்திறன் அதிகமாகிறது.

* தோலுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதால் அரிப்பு, புண் வராமலும் தடுக்கிறது.

* தினமும் சைக்கிள் ஓட்டினால் மலச்சிக்கல் வராது.வேலைத்திறன் அதிகரிப்பு மேலை நாடுகளில், பள்ளி மாணவர்களிடையே இந்த பயிற்சியை கட்டாயமாக்கியதால், மாணவர்களின் வேலைத்திறன் அதிகமானது என ஆய்வுகள் கூறுகின்றன.

தொடரும்................


Last edited by krishnaamma on Tue Sep 22, 2015 10:23 am; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உயிர் காக்கும் தோழன் சைக்கிள் ! Empty Re: உயிர் காக்கும் தோழன் சைக்கிள் !

Post by krishnaamma Tue Sep 22, 2015 10:22 am

உயிர் காக்கும் தோழன் சைக்கிள் ! FU2x67I0TVO4lTUvYRdY+Pacific-Cycle-Boys-20--Evolution-Bicycle_20090621441

ஒரு தனிமனிதனின் உடல்நலக் குறைவு ஒரு குடும்பத்தை பாதிக்கும். ஒரு குடும்பத்தின் உடல்நலக் குறைவு தெருவை பாதிக்கும். தெருவின் உடல்நலக் குறைவு ஊரை பாதிக்கும். ஊரே உடல்நலக் குறைவாக இருந்தால், நிச்சயமாக அது நாட்டை பாதிக்கும். சற்றே கற்பனை செய்து பாருங்கள்.

மதுரையில் உள்ள அனைவரும் சைக்கிள்களிலேயே பள்ளி, அலுவலகம் செல்வதாக கற்பனை செய்து கொள்வோம்.

நிச்சயமாக, மோட்டார் வாகனத்தில் விழுந்து தலையில் காயம் ஏற்பட்டு இறந்து போகும், எத்தனையோ மாணவர்களின் உயிரை காப்பாற்றலாம். அது மட்டுமல்லாமல் நாம் சுவாசிக்கும் காற்றும் சுத்தமானதாக மாறும்.

தனிநேரம் தேவை இல்லை அன்றாட வேலைகளுக்கு சைக்கிளை பயன்படுத்துவதால், உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சிகளுக்கு தனியாக நேரம் ஒதுக்க தேவையில்லை. மிக அவசர வேலைகளுக்கு கார், இரு சக்கர வாகனம் பயன்படுத்தலாம்.

தினமும் சைக்கிள் ஓட்டுபவர்கள் அதிக நாள் வாழ்கின்றனர் என்கிறது ஒரு ஆய்வு. எனவே சைக்கிள் என்பது உயிர் காக்கும் தோழன்.ஏரோபிக் உடற்பயிற்சிகள், எடை உடற்பயிற்சிகள், நீட்டி மடக்கும் உடற்பயிற்சிகள் என உடற்பயிற்சிகளை மூன்று வகைகளாக பிரிக்கலாம்.

நடைப்பயிற்சி மட்டும் மேற்கொண்டால் நடப்பதற்கு பயன்படும் தசைகள் வலுப்படுமே தவிர, மற்ற தசை நார்களை வலுப்படுத்தாது. அதை போல் நீட்டி மடக்கும் பயிற்சிகள் உடம்பில் மூட்டை சுற்றியுள்ள தசை நார்களை வலுவுடையதாக்கும்.

சைக்கிள் ஓட்டுவதன் மூலம் இந்த மூன்று வகையான பயிற்சிகளையும், ஒரே பயிற்சியில் செய்ய முடியும்.

தொடரும்...............


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உயிர் காக்கும் தோழன் சைக்கிள் ! Empty Re: உயிர் காக்கும் தோழன் சைக்கிள் !

Post by krishnaamma Tue Sep 22, 2015 10:24 am

உயிர் காக்கும் தோழன் சைக்கிள் ! FnL68qxkQL6rwYWqwctU+JSCYC012+12-900x900

கலோரி கணக்கு

சைக்கிள் ஓட்டும் போது செலவழிக்கும் கலோரிகள் பற்றி அறிவோம்!

நாம் செலவழிக்கும் கலோரி அளவு உடல் எடை மற்றும் சைக்கிள் ஓட்டும் நேரம், வேகம் ஆகியவற்றை பொறுத்தது.

உதாரணமாக 60 கிலோ எடையுள்ள ஒருவர் மணிக்கு 18 கி.மீ., வேகத்தில் ஒரு மணி நேரம் சைக்கிள் ஓட்டினால் ஏறக்குறைய 480 கலோரிகள் செலவழிக்கலாம். 480 கலோரி அளவு என்பது 100 கிராம் உருளைக்கிழங்கில் உள்ள கலோரி அளவு ஆகும்.

* குறைந்தபட்சம் வாரத்தில் மூன்று நாட்கள் சைக்கிள் ஓட்டி அலுவலகத்திற்கு செல்லலாம். பெட்ரோல் செலவு குறையும்.

* அசையாத சைக்கிளில் தனி அறையில் ஓட்டுதலை விட, ஓடும் சைக்கிளில் திறந்த வெளியில் ஓட்டுதலே சிறந்தது.

ஆரம்ப நிலையில் சற்று மெதுவாக சைக்கிள் ஓட்டலாம்.நமது நாடு வளர்ந்து வரும் நாடு. வசதி படைத்த வளர்ந்த நாடுகளில் சைக்கிள் ஓட்டுதல், மக்களிடையே அன்றாட வாழ்க்கையில் ஒரு நிகழ்வாக இருக்கும் போது, வளரும் நாடான நாம் சைக்கிளை ஒதுக்கி கொள்ளுவது முறையாகுமா?

டாக்டர் ஜெ.சங்குமணிபொதுமருத்துவர், மதுரை.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உயிர் காக்கும் தோழன் சைக்கிள் ! Empty Re: உயிர் காக்கும் தோழன் சைக்கிள் !

Post by சசி Tue Sep 22, 2015 5:03 pm

மிதிவண்டியில் மிதந்த காலத்தை மறக்க முடியாது. இன்னும் வைத்து இருக்கிறேன். அம்மா நல்லதோர் நினைவுகள் நன்றி.


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

உயிர் காக்கும் தோழன் சைக்கிள் ! Empty Re: உயிர் காக்கும் தோழன் சைக்கிள் !

Post by T.N.Balasubramanian Tue Sep 22, 2015 5:47 pm

நீரில் சகல அவையதிற்கும் பயிற்சி தருவது நீச்சல் எனில் .
நிலத்தில் , சகல் அவையதிற்கும் பயிற்சி தருவது இரு சக்கிர வண்டியே .

நல்லத் தகவல்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உயிர் காக்கும் தோழன் சைக்கிள் ! Empty Re: உயிர் காக்கும் தோழன் சைக்கிள் !

Post by krishnaamma Wed Sep 23, 2015 12:28 am

நன்றி சசி, நன்றி ஐயா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உயிர் காக்கும் தோழன் சைக்கிள் ! Empty Re: உயிர் காக்கும் தோழன் சைக்கிள் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum