ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐங்கரனைத் தொழுவோம் – அச்சமின்றி வாழ்வோம்!

2 posters

Go down

ஐங்கரனைத் தொழுவோம் – அச்சமின்றி வாழ்வோம்! Empty ஐங்கரனைத் தொழுவோம் – அச்சமின்றி வாழ்வோம்!

Post by ayyasamy ram Wed Sep 16, 2015 4:04 pm

ஐங்கரனைத் தொழுவோம் – அச்சமின்றி வாழ்வோம்! YEc0uJRSWtTljsB08oow+pillaiyar_1
-
முதலாம் இராசராசனால் எடுக்கப்பட்ட தஞ்சை
இராசராசேச்சுரம் எனும் பெரியகோயிலில் காணப்படும்
தேவகோட்டச் சிற்பம் - விநாயகர்.
----------------------------------
-
வழிபாட்டில் மிகவும் சிறப்பானதும் இன்றியமையாததும் விநாயகர் வழிபாடே. ஓர் ஊரின் குளக்கரையிலும் ஏரிக்கரையிலும் நம் கண்ணுக்கு தெரிவது முதலில் விநாயகர் சிலைதான்.

இவ்விநாயகரைப் பற்றிக் கூறும்பொழுது, தன் தாயாரைப் போன்றே மனைவி தனக்கும் வேண்டும் என்பதற்காக, ஏரிக்கரையிலும் குளக்கரையிலும் அவர் காத்திருப்பதாகக் கூறுவர்.

இந்த விநாயகர் வழிபாடும், இவர் தமிழகத்துக்கு வந்த விதமும் ஒரு பெரிய வரலாற்றைக் கொண்டுள்ளது. இவரை காவல் தெய்வம் என்றும், கானகத் தலைவன் என்றும் குறிப்பர். தலைப்பகுதி யானை முகமும், உடல் பகுதி மனித வடிவமும் கொண்டு அமைந்த இவரை, விநாயக மூர்த்தி என்றே அழைப்பர்.

முழுமுதற் கடவுள் விநாயகர். இவர் இல்லாத ஊரே இல்லையென்று சொல்வது சரியாக இருக்கும். கணபதி என்பதற்குப் பூதகணங்களின் தலைவன் என்று பொருள். சிற்ப அமைதிப்படி, பதினெட்டுக்கும் மேற்பட்ட உருவ வேற்றுமைகளில் கணபதி காணப்படுகிறார்.
-
பொதுவாக, கணபதியின் இரண்டு கைகளில் இரண்டு ஆயுதங்கள் இருக்கும். அவை, பாசமும் அங்குசமும் ஆகும். இந்த அடையாளங்கள், தாருண கணபதி, வீர விக்னேஷ்வர கணபதி, லட்சுமண கணபதி, பிரசன்ன கணபதி, நிருத்த கணபதி ஆகிய உருவங்களில் காணப்படுகின்றன. இவரை, வேட்டுவர்களின் தலைவன், கடவுள் என்றும் சிலர் குறிப்பர்.

பிரம்ம வைவார்த்த புராணம், கணபதியின் பிற பெயர்களாகக் குறிக்கும்பொழுது ஏகதந்த, லம்போதரா, சூர்ப்பனா, கஜநான, குகராஜா எனக் குறிக்கின்றது. கணபதி என்ற சொல்லுக்குப் பொருள் கொள்ளும்பொழுது, முதல் எழுத்து மதிநுட்பத்தையும், இரண்டாம் எழுத்து தடங்கலுக்குப் பாதுகாப்பு அளிப்பவன் என்றும் ஏழைப் பங்காளன் என்றும், பதி என்ற இறுதி எழுத்துகள் இறைவனாகிய பரபிரம்மத்தையும் குறிப்பதாகும்.

கணபதி வரலாறு

விநாயகர் சிற்பத்தை, கி.பி. ஏழாம் நூற்றாண்டில், வாதாபியில் இருந்து சிறுத்தொண்டர் கொண்டுவந்த பிறகுதான், விநாயகர் வழிபாடு தமிழகத்துக்கு வந்தது என்று கருதியதால்தான், கணபதியைப் பற்றி பாடும்பொழுது வாதாபி கணபதியே எனப் பாடினர்.

அக்கருத்துக்கு மாறாக, தமிழகத்தில் காணப்படும் பிள்ளையார்பட்டி விநாயகர், காலத்தால் கி.பி. ஐந்தாம் நுற்றாண்டைச் சார்ந்தது என்பதை அங்குள்ள கல்வெட்டுகள் மற்றும் அதன் சிற்ப அமைதியும் தெளிவுபடுத்துகின்றன. பரஞ்சோதி முனிவருக்கு முன்பே தமிழகத்தில் பிள்ளையார் வழிபாடு இருந்து வந்துள்ளது என்பது இதன்மூலம் தெளிவாகிறது.

திருச்சி மலைக்கோட்டையின் கீழே காணப்படும் பல்லவர் காலக் குடவரையில், பாறையில் செதுக்கப்பட்டுள்ள விநாயகர் உருவம், பரஞ்சோதி முனிவருக்கு முன் வந்தது. அதாவது, நரசிம்ம பல்லவரின் தந்தை மகேந்திர பல்லவரின் காலத்தைச் சார்ந்தது.

ஆக, வாதாபி கணபதிக்கு முன்பே தமிழகத்தில் வழிபாட்டில் விநாயகர் இருந்துள்ளார் என்பதற்கு, திருச்சி குடவரையில் காணப்படும் விநாயகர் சான்றாகும். மேலும், சங்க காலச் சோர்களும் கணபதியை வழிபட்டுள்ளனர் என்பதற்குச் சான்றாக, காஞ்சிபுரத்தில் கரிகாலச் சோழப் பிள்ளையார் எனும் கோயில் இன்றும் வழிபாட்டில் உள்ளது. இது, கரிகாலச் சோழனால் எழுப்பப்பட்டதாக இருக்கலாம்.

வழிபாட்டில் முதலில் வணங்கப்படும் கடவுள் கணபதிதான். தனிவழிபாடாக இருப்பினும், கோயில் அமைப்பிலும், கணபதியையே முதலில் வழிபாடு செய்வது வழக்கம்.

உற்சவ மூர்த்திகளை அமைக்கும்பொழுது, பஞ்ச மூர்த்திகளை ஊர்வலமாக அமைப்பர். அவற்றிலும், விநாயகரே முதன்மை வகிப்பார். இவரை, சிவனின் 24 மூர்த்தங்களில் ஒன்றாகவே கருதுவர். புராணங்களிலும், பாடல்களிலும், நூல்களிலும், கணபதி பாடலையே முதலில் அமைத்து, அவரை வணங்கிய பிறகே காரியங்களைத் துவங்குவது வழக்கமாக இருந்து வருகிறது.
-
ஐங்கரனைத் தொழுவோம் – அச்சமின்றி வாழ்வோம்! NTar3QmnSCGmIbzGvJBl+pillaiyar_2
-
முதலாம் இராசேந்திர சோழன், தனது போரினால்
பெற்ற வெற்றிப் பரிசாக சாளுக்கிய நாட்டில்
இருந்து கொண்டுவந்து, தன்னால் நிறுவப்பட்ட
சோழர்களின் இரண்டாவது தலைநகரமான
கங்கைகொண்டசோழபுரத்தில் வைத்து வணங்கிய
பிள்ளையார்.
-----------------------------------------------------------------------------------------
-
‘ஓம், சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் பிரசன்ன வதனம் தியாயோத் சர்வ விக்னோப சாந்தேயத்’ – என்று, வைணவர்வளின் விஷ்ணு சகஸ்ரநாமம் துவங்குகிறது. எனவே, முழுமுதல் கடவுளாக கணபதிதான் உள்ளார்.

இலக்கியங்களில் கணபதி

சங்க இலக்கிய நூல்களில் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு இரண்டும் சிறப்பு பெற்றவை. அவற்றில், கணபதியை நேரடியாக குறிப்பவை எதுவும் இல்லை. இருப்பினும், பத்துப்பாட்டில் முதல் பாடலான திருமுருகாற்றுப்படையில் கணபதி பற்றிய குறிப்பு வருகிறது. ‘ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை’ என்று இருக்கிறது. இந்த ஐங்கரன் குறிப்பை பிற்சேர்க்கை என்பர்.

கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பின் வந்த இலக்கியங்களிலும், சைவ ஆசாரியர்களும், விநாயகர் துதி பாடியுள்ளனர். திருஞானசம்பந்தர், அப்பர், இவர்களின் பாடல்களில் விநாயகர் பற்றிய குறிப்புகளைக் காணலாம். நம்பியாண்டார் நம்பி அவர்கள், ‘விநாயகர் திரு இரட்டை மணிமாலை’ என்ற நூலைப் படைத்துள்ளார். சைவ ஆசாரியர்களான திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோர், நரசிம்ம பல்லவன், பாண்டியன் அரிகேசரி, மாறவர்மன் மற்றும் மகேந்திரவர்மன், ராஜசிம்மன் போன்ற பல்லவ, பாண்டிய மன்னர்கள் அரசு புரிந்த காலத்தில் வாழ்ந்தவர்கள்.

சம்பந்தர் பாடிய துதியில் மிகவும் சிறப்பு வாய்ந்த பாடல் –

‘படியதன் உரு உமைகொள மிக கரியது,
வடிகொடு, தனதடி வழிபடும் அவரிடம்
கடிகண பதிவர அருளினன் மிகு கொடை
வடிவினா; பயில்வலி வல முறை இறையே’

என்பது ஆகும். அப்பர், கணபதியைக் குறிக்கும்பொழுது, விநாயகர், விக்னேஷ்வரர், விக்னவிநாயகர் என்றே குறித்துள்ளார்.

விநாயகன் என்றால் தடைகளை நீக்குபவன். கணேசன் என்றால் தலைவன் என்று பவிஷ்ய புராணம், வாமன புராணம் போன்றவற்றில் விநாயகர் பற்றிய விளக்கத்தைக் காணமுடிகிறது.

நல்லோரைச் செம்மைப்படுத்தும் கருவியாகத் திகழ்பவன்; இத்தகு பெருமை வாய்ந்த விநாயகப் பெருமான், தமிழர்களுக்கு விநாயக சதுர்த்தித் திருநாளில் அனைத்தும் வழங்கி அருள வேண்டுகிறேன். இவன் திருவடிகளை நாமும் இந்த நன்நாளில் போற்றித் துதிப்போமாக.

===========================

By ச.செல்வராஜ், தொல்லியல் துறை

நன்றி- தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஐங்கரனைத் தொழுவோம் – அச்சமின்றி வாழ்வோம்! Empty Re: ஐங்கரனைத் தொழுவோம் – அச்சமின்றி வாழ்வோம்!

Post by krishnaamma Thu Sep 17, 2015 12:23 am

நல்ல பகிர்வு ராம் அண்ணாபுன்னகை..............இந்த இரண்டாவது பிள்ளையார் தான் 'வாதாபி கணபதியா' அண்ணா ?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum