புதிய பதிவுகள்
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கந்தர் அலங்காரம் பாடல் 6 Poll_c10கந்தர் அலங்காரம் பாடல் 6 Poll_m10கந்தர் அலங்காரம் பாடல் 6 Poll_c10 
60 Posts - 74%
heezulia
கந்தர் அலங்காரம் பாடல் 6 Poll_c10கந்தர் அலங்காரம் பாடல் 6 Poll_m10கந்தர் அலங்காரம் பாடல் 6 Poll_c10 
10 Posts - 12%
Dr.S.Soundarapandian
கந்தர் அலங்காரம் பாடல் 6 Poll_c10கந்தர் அலங்காரம் பாடல் 6 Poll_m10கந்தர் அலங்காரம் பாடல் 6 Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
கந்தர் அலங்காரம் பாடல் 6 Poll_c10கந்தர் அலங்காரம் பாடல் 6 Poll_m10கந்தர் அலங்காரம் பாடல் 6 Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கந்தர் அலங்காரம் பாடல் 6 Poll_c10கந்தர் அலங்காரம் பாடல் 6 Poll_m10கந்தர் அலங்காரம் பாடல் 6 Poll_c10 
225 Posts - 76%
heezulia
கந்தர் அலங்காரம் பாடல் 6 Poll_c10கந்தர் அலங்காரம் பாடல் 6 Poll_m10கந்தர் அலங்காரம் பாடல் 6 Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
கந்தர் அலங்காரம் பாடல் 6 Poll_c10கந்தர் அலங்காரம் பாடல் 6 Poll_m10கந்தர் அலங்காரம் பாடல் 6 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
கந்தர் அலங்காரம் பாடல் 6 Poll_c10கந்தர் அலங்காரம் பாடல் 6 Poll_m10கந்தர் அலங்காரம் பாடல் 6 Poll_c10 
8 Posts - 3%
prajai
கந்தர் அலங்காரம் பாடல் 6 Poll_c10கந்தர் அலங்காரம் பாடல் 6 Poll_m10கந்தர் அலங்காரம் பாடல் 6 Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
கந்தர் அலங்காரம் பாடல் 6 Poll_c10கந்தர் அலங்காரம் பாடல் 6 Poll_m10கந்தர் அலங்காரம் பாடல் 6 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கந்தர் அலங்காரம் பாடல் 6 Poll_c10கந்தர் அலங்காரம் பாடல் 6 Poll_m10கந்தர் அலங்காரம் பாடல் 6 Poll_c10 
3 Posts - 1%
Barushree
கந்தர் அலங்காரம் பாடல் 6 Poll_c10கந்தர் அலங்காரம் பாடல் 6 Poll_m10கந்தர் அலங்காரம் பாடல் 6 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கந்தர் அலங்காரம் பாடல் 6 Poll_c10கந்தர் அலங்காரம் பாடல் 6 Poll_m10கந்தர் அலங்காரம் பாடல் 6 Poll_c10 
2 Posts - 1%
nahoor
கந்தர் அலங்காரம் பாடல் 6 Poll_c10கந்தர் அலங்காரம் பாடல் 6 Poll_m10கந்தர் அலங்காரம் பாடல் 6 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கந்தர் அலங்காரம் பாடல் 6


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Sat Sep 05, 2015 1:34 am

பெரும்பைம் புனத்தினுட் சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை
விரும்பும் குமரனை மெய்யன்பி னால்மெல்ல மெல்லவுள்ள
அரும்புந் தனிப்பர மானந்தத் தித்தித் தறிந்தவன்றே
கரும்புந் துவர்த்துச் செந்தேனும் புளித்தறக் கைத்ததுவே. ... 6

பெரிய அடர்ந்த வனமாகிய உலகம் கவர்ச்சிகரமான பல விசயங்களை தன்னகத்தே வைத்துள்ளது . அனுபவிக்க அனுபவிக்க குறையாத இன்பங்களை வாரி வாரி வழங்குகிறது . ஆனால் அதில் ரெம்ப ரெம்ப சாதாரணமான தினையை காவல் காக்கிராளாம் இந்த வள்ளி .

உலகம் நாளுக்கு நாள் எவ்வளவோ அறிவியல் முன்னேற்றங்களை அனுபோகங்களை வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் போது ; அதில் அக்கறை காட்டாமல் ஆன்மிகம் தியானம் தவம் வேதம் என்று அலைகிற கிராக்குகள் அங்கொன்றும் இங்கொன்றும் எப்போதும் சிறிய அளவில் இருந்து கொண்டுதான் இருப்பார்கள் . அதனால்தான் சிற்றே நெல் காக்கின்ற பேதைகள் என்கிறார் .

ஆனால் இந்த கிராக்குகளுக்கு வாய்த்த அதிர்ஷ்டம் என்னவென்றால் இவர்களையும் நேசிக்கும் ஒருவன் இருக்கிறான் ; அவனே ஆன்மீக சற்குரு . அனைத்து குருமார்களுக்கும் தத்துவங்களுக்கும் வேதங்களுக்கும் சத்தியங்களுக்கும் ரகசியங்களுக்கும் ஞானங்களுக்கும் அதிபதி முருகன் .

இந்த கிராக்குகளின் நற்குணங்கள் நல்லியல்புகள் மனித நேயங்கள் பரோபகாரங்கள் பக்திகள் வேண்டுதல்கள் ஆகியவற்றை வேறு அவன் விரும்பி அவர்களை பாராட்டி சீராட்டி கைதுக்கியும் விடுகிறவனாம் . பசுவின் பால் அதன் அமிர்தம் அல்லவா ? அப்படித்தான் ஆராவாரமற்ற இறை மனிதர்கள் இவ்வுலகத்திற்கு பைத்தியம் எனப்பட்டாலும் ஓரங்கட்டப்பட்டவர்களாக இருந்தாலும் உலக வாழ்வில் சாதுர்யமாக வாழாதவர்களாகவும் இருந்தாலும் இவர்கள் மீதுள்ள இறை அருளும் அன்பும் நேயமும் அவர்கள் வசிக்கும் இடங்களை மேன்மையுறச்செய்யும் . நல்லோருக்கு பெய்யும் மழை எல்லோருக்கும் பெய்யும் . அவர்கள் எந்த நெறியில் இருந்தாலும் எந்த குருகுலத்தில் இருந்தாலும் அவர்கள் அனைவரையும் தாங்கி தொடர்ந்து அன்பும் ஆதரவும் செய்து முன்னேற்றி விடும் சற்குருநாதர் முருகனே . நீங்கள் அறியாத ஒருவர் உங்களுடனே நிற்கிறார் என பைபிளிலும் கூட இவரைப்பற்றியே சொல்லப்பட்டுள்ளது

கிருதயுகத்தில் சிவனார் பூமியில் இருந்தபோதே இனி வரும் யுகங்களில் யுகங்கள் தோறும் பூமிக்கு அவதாரமாக வரும் சிவகுமாரனை குருவாக ஏற்று நடவுங்கள் என குருகீதையில் முன்னறிவிக்கப்பட்டவர் இவரே

அவர் வானவராக – தேவராக இருந்தும் தன் நிலையை மாற்றி பூமியில் மனிதனாக முருகி வருவதால் அவன் முருகன் என்று அடையாளப்படுத்தப்பட்டார் . அவன் அடிப்படையில் நாராயணன் ஆக இருந்தாலும் பூமியில் மனிதனாக சிவனுக்கு குமாரனாக வருவதால் அவன் ஹரிஹரன் . இந்த ஹரிஹரா என்பதுவே காலப்போக்கில் அரோகரா அரோகரா என கோஷம் போடுவதாக மாறிவிட்டது .

சிவனார் முன்னறிவித்தபடி திரேதாயுகத்தில் ராமராகவும் துவாபாரயுகத்தில் கிரிஷ்ணராகவும் கலியுகத்தில் யேசுவாகவும் வந்தவரே முருகன் .

அப்படி யுகங்கள் தோறும் பாமரர்களை நேசித்து அவதாரங்கள் காட்டிய அன்பை சாதனைகளை கதை கதையாக பக்தர்கள் கேட்டும் படித்தும் உணர்ந்தும் தங்கள் பக்தியை விருத்தி செய்துகொள்கின்றனர்

தங்களின் மெய் அன்பினால் அந்த அவதாரங்களை (குரானால் மலக்கு தூதர்கள்) அவர்களின் பின்தொடர்பாக மனிதனாக இருந்து கடவுளை நெருங்கியதால் இறைவனால் பயன்படுத்தப்பட்ட இறைதூதர்களை மெல்ல மெல்ல உள்வாங்குகிறார்கள் . குருகுலமும் குரு பாராம்பரியமும் எப்போதும் பக்தர்களை அரவனைத்துக்கொண்டுதான் உள்ளன . ஆவிமண்டல சக்திகளும் தங்கள் தங்கள் குருகுலத்திலுள்ள மனிதர்களை எப்போதும் போஷித்தே வருகின்றன

இந்த உள்ளார்ந்த அன்பு மெல்ல மெல்ல பரலோகத்தின் பரமானந்தத்தை ஒவ்வொரு பக்தர்களையும் ருசி பார்க்கவைக்கிறது . கடவுளின் பேரன்பு பரமானந்தமாக வளர வளர ஆத்மா முழுமையை நெருங்குகிறது .

உலக சிற்றின்பங்கள் அரக்கைத்து விடும் . அதாவது அது அவசியமற்றதாக மாறிவிடுகிறது ; அல்லது அதன் மாயைகளால் பாதிப்படையாத நிர்வாண நிலை – நிர்மால்யம் – நிஷ்களங்கம் – பரிசுத்தம் – நிலைத்ததன்மை உண்டாகும் .

விடுதலை பெற்ற ஆத்மா உலகின் கட்டுகளை அறுத்தெறிந்து வீடுபேறடைகிறது .

இங்கு ஒரு ரகசியம் மறைபொருளாக உள்ளது . பட்டினத்தடிகள் அநுபூதி அடைந்ததற்கு அடையாளம் சுட்டப்படுகிறது . அவர் அநுபூதி அடையும் நாள் கரும்பு துவர்க்கும் செந்தேன் புளிக்கும் என முன்னறிவிக்கப்பட்டது .

முன்னொருகாலத்தில் சோழ நாட்டு தலைநகரம் காவிரிப்பூம்பட்டினத்தில் சிவநேசர், ஞானகமலாம்பிகை என்னும் சிவபக்த தம்பதியர் வசித்து வந்தனர். இவர்களுக்கு சிவனருளால் ஒரு மகன் பிறந்தார். திருவெண்காடர் என்று அழைக்கப்பட்ட இவரும் சிறந்த சிவபக்தர். கடல் கடந்து வாணிபம் செய்யும் பணி செய்து வந்த இவர், தனது 16ம் வயதில் சிவகலை என்பவரை மணந்து கொண்டார். திருமணமாகி பல்லாண்டுகளாக இத்தம்பதியருக்கு குழந்தை இல்லை. திருவெண்காடர் சிவனை வழிபட்டு, புத்திரப்பேறு அருளும்படி வேண்டினார்.

இதனிடையே சிவசருமர், சுசீலை என்னும் மற்றொரு சிவபக்த தம்பதியினருக்கு சிவனே மகனாக பிறந்தார். குழந்தைக்கு மருதவாணர் என பெயரிட்டு சீரும், சிறப்புமாக வளர்த்தனர். சிவனுக்கு சேவை செய்தே வறுமையில் வாடிய இத்தம்பதியரால், ஒருகட்டத்தில் குழந்தையை சரியாக வளர்க்க முடியவில்லை. திருவெண்காடர், சிவசருமர் தம்பதிக்கு அருள் செய்ய எண்ணம் கொண்டார் சிவன். சிவசருமரின் கனவில் தோன்றிய சிவன், மருதவாணரை திருவெண்காடருக்கு தத்து கொடுத்து, பதிலாக பொருள் பெற்றுக்கொள்ளும்படி கூறினார். அதேசமயம் திருவெண்காடரின் கனவில் தோன்றிய சிவன், மருதவாணரை வளர்க்கும்படி கூறினார். அதன்படி திருவெண்காடர், மருதவாணரை தத்தெடுத்து வளர்த்தார்.

மருதவாணரும் தந்தையின் தொழிலையே செய்தார். ஒருசமயம் மருதவாணர், கடல் கடந்து வாணிபம் செய்துவிட்டு ஊர் திரும்பினார். தாயாரிடம் ஒரு பெட்டியை மட்டும் கொடுத்த அவர், ஒன்றும் சொல்லாமல் வீட்டை விட்டு சென்றுவிட்டார். இதனிடையே வெளியே சென்றிருந்த திருவெண்காடர், மகன் சம்பாதித்து வந்திருப்பதை காண பெட்டியைத் திறந்தார். அதில் தவிட்டு உமிகளைக் கொண்டு செய்யப்பட்ட எரு மட்டும் இருந்தது. கோபம் கொண்ட அவர், எருவை வீசியெறிந்தார். அதற்குள், ""காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே'' என்று எழுதப்பட்ட காகிதத்தைக் கண்டார்.

திருவெண்காடருக்கு ஏதோ சுரீர் என்று உரைத்தது. ""மனிதன் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் கடைசியில் பயனில்லாத காதற்ற ஊசியைக்கூட கையில் கொண்டு செல்ல முடியாது,'' என்று உணர்ந்தார். உடன் இல்லற வாழ்க்கையை துறந்த அவர், சிவனை வணங்கி முக்தி கொடுக்கும்படி வேண்டினார். அவருக்கு காட்சி தந்த சிவன், தகுந்த காலத்தில் முக்தி கிடைக்கும் என்றார். அதன்பின் சிவத்தல யாத்திரை சென்ற திருவெண்காடர். காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்தவர் என்பதால், "பட்டினத்தார்' என்றழைக்கப்பட்டார். காசியை ஆட்சி செய்த பத்ரகிரியார் என்னும் மன்னனை தனது சீடனாக ஏற்றுக்கொண்டார். திருவிடைமருதூர் தலத்தில் இருவரும் சிலகாலம் தங்கியிருந்தனர். சிவன் பத்ரகிரியாருக்கு முதலில் காட்சி கொடுத்து முக்தி கொடுத்தார். பட்டினத்தார் தனக்கும் முக்தி வேண்டவே ஒரு கரும்பை கொடுத்து, அதன் நுனி இனிக்கும் இடத்தில் முக்தி தருவதாக கூறினார். அதன்பின் பல தலங்களுக்குச் சென்ற பட்டினத்தார் திருவெற்றியூர் தலத்திற்கு வந்தபோது நுனிக்கரும்பு இனித்தது. இங்கிருந்த சிலரை அழைத்த அவர், தன்னை ஒரு பாத்திரத்தால் மூடும்படி கூறினார். அவர்களும் அவ்வாறு செய்யவே, லிங்க வடிவமாக மாறி முக்தி பெற்றார்.

பட்டினத்தடிகள் கப்பல் வாணிபம் செய்து வெற்றிகரமாக பெரும்பொருளீட்டியவர் . அந்த வாழ்வில் எவ்வளவு பணம் இருந்தாலும் அது பயனற்றது என்ற ஞானம் அவருக்கு உண்டாயிற்று . காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே என்ற வாசகத்தால் ஆட்கொள்ளப்பட்டார் . ஆதி மூன்று ஆசைகளான மண்ணாசை பொன்னாசை பெண்ணாசை – இவைகளில் ஒன்றை கடந்து விட்டால் அதுவும் ஒரு முக்திதான் . ஆனால் முழுமையல்ல இம்மூன்றையும் கடரும் போதே மரணமில்லாபெருவாழ்வு கிட்டும் . ஒளி சரீரமும் உண்டாகும் . இரண்டாம்கட்ட நிலைதான் ஜீவசமாதி என்பது . தற்காலிகமானது .

பட்டினத்தடிகளாக மண்ணாசை பொன்னாசையை கடந்த ஆத்மாவே பெண்ணாசையை கடர அருணகிரியாராக பிறவியெடுத்தது . அவருக்கு பரலோக பாக்கியம் உண்டானது என்பதை உணர்த்த மன்னன் மூலமாக ஒரு நிகழ்வு உண்டானது . பரலோகத்திலுள்ள பாரிஜாத மலரை கொண்டுவர மன்னன் வற்புறுத்தியபோது கிளியாக மாறி அவர் பரலோகம் சென்று பாரிஜாத மலரை கொண்டும்வந்தார் .

அப்புறம் சற்குருவுக்கு நன்றி செலுத்தவும் ; பின்னடியார்களுக்கு ஞானம் புகட்டவும் முருகனது ஆணையால் அண்ணாமலை கோவிலில் உள்ள முருகனது தோளில் கிளியாக அமர்ந்து கொண்டு கந்தர் அலங்காரம் என்ற 1௦௦ கவிகள் பாடப்பட்டன .

இந்தப்பாடல்கள் அவர் மனித சரீரத்தில் இருந்து பாடியவை அல்ல ஒளி சரீரத்தில் இருந்து பாடியவை ; கடைசி பாடல்கள் என்பதை நிதானித்தால் இவை அருளில் விளைந்த ஞானப்பொக்கிஷம் என்பது விளங்கும் .

அருணகிரியார் காலத்தில் அஞ்ஞானம் மிகுந்து சைவவைணவ சண்டைகள் உச்சத்தில் இருந்தன . ஆனால் முருகன் பரலோகத்தில் ஹரி பூமியிலோ சிவக்குமாரன் ஹரிஹரன் என்ற சமரச வேதத்தை முன்னெடுத்து சமாதானத்தை உண்டாக்கியவர்

இவர் சமரச வேதத்தின் பரம்பரையில் வந்தவர் என்பதாலேயே அதே பரம்பரையில் வந்திருக்கும் அடியேனும் அவர் பாடல்களுக்கு விளக்கம் எழுதும்படியாக இறைவன் செய்விக்கிறார் .


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 05, 2015 11:48 am

வரிசையாக ஒரே திரி இல் தந்தால், அனைவருக்கும் படிக்க வசதியாக இருக்கும் கிருபா........இணைத்து விடவா திரிகளை? புன்னகை .....பிறகு எல்லா பாடல்களும் முடிந்ததும் ஒரு PDF ஆக போட்டுவிடலாம்............ஓகே வா? புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Mon Sep 14, 2015 8:50 pm

நல்லது கிரிஷ்ணம்மா உதவி செய்யுங்கள் ஒரே திரியில் போடுங்கள் . ஆனால் எப்போது முழுமையடையும் என்பது என் கையில் இல்லை . எப்போது இறைவன் உள்ளுணர்வு அளிக்கிறாரோ அப்போதே பதிவிடுவேன்

அதுபோல கீதை விளக்கவுரை முன்னுரையுடன் 17 யோகங்கள் வந்துள்ளது இன்னும் ஒன்று மட்டுமே பாக்கி உள்ளது

இதையும் ஒரு தனி திரியாக்கினிர்களானால் நலம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக