புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 4 Poll_c10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 4 Poll_m10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 4 Poll_c10 
92 Posts - 61%
heezulia
இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 4 Poll_c10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 4 Poll_m10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 4 Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 4 Poll_c10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 4 Poll_m10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 4 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 4 Poll_c10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 4 Poll_m10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 4 Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 4 Poll_c10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 4 Poll_m10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 4 Poll_c10 
1 Post - 1%
eraeravi
இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 4 Poll_c10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 4 Poll_m10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 4 Poll_c10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 4 Poll_m10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 4 Poll_c10 
284 Posts - 45%
heezulia
இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 4 Poll_c10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 4 Poll_m10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 4 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 4 Poll_c10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 4 Poll_m10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 4 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 4 Poll_c10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 4 Poll_m10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 4 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 4 Poll_c10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 4 Poll_m10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 4 Poll_c10 
19 Posts - 3%
prajai
இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 4 Poll_c10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 4 Poll_m10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 4 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 4 Poll_c10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 4 Poll_m10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 4 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 4 Poll_c10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 4 Poll_m10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 4 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 4 Poll_c10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 4 Poll_m10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 4 Poll_c10 
7 Posts - 1%
mruthun
இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 4 Poll_c10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 4 Poll_m10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 4 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலக்கிய ஈடுபாடு மூன்று ஆண்டுகள்தான்

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Sep 11, 2015 11:54 am

First topic message reminder :

1980--82 காலகட்டத்தில் மார்க்சிய கலை இலக்கிய அன்பர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. தாகம் என்ற கையெழுத்துப் பத்திரிக்கை நடத்தினோம். மாதம் ஒரு இதழாக பத்து இதழ்கள் வெளிவந்தன. ஆர்வம் மிகுதியால் அதில் நான் எழுதிய பத்து சிறுகதைகள் வந்தன. சிலர் அக்கதைகளை படித்து பாராட்டினார்கள். தாமரை மற்றும் செம்மலர் ஆகிய பத்திரிக்கைகளுக்கு அனுப்பி வைத்தேன். அவை திரும்பி வந்துவிட்டன. அப்புறம் என்ன ? சிறுகதைகள் எழுதுவதை நிறுத்தி விட்டேன்.

எழுத்தாளர் வண்ண நிலவன் அவர்களின் அறிமுகம் கிடைத்தது . எனது ஒரு சிறுகதையை படித்துப் பார்த்து பாராட்டினார். முடிந்தால் அதை குமுதத்தில் வெளிவருவதற்கு முயற்சிக்கின்றேன் என்று சொன்னார். அவ்வளவுதான்.

எழுதிய கை எழுத்துப்பிரதிகளை வெகுகாலம் வைத்து இருந்தேன்.பிறகு அவைகளைக் கிழித்து குப்பையில் போட்டு விட்டேன். பிறகுதான் புரிந்து கொண்டேன். மனம் ஒரு குப்பைத்தொட்டி என்பதை.

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Wed Oct 14, 2015 4:45 am

பேட்டில்ஷிப் பொட்டம்கின்  தொடர்கிறது

இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 4 QMmF8Oh3SNO9stWsBiFg+download

ஒடேசா படிக்கட்டுகள். மக்கள் சாரி சாரியாகக் குழுமுகிறார்கள். பலர் கைகளில் பலவிதமான பொருட்கள் உள்ளன. மக்கள் முடிவில்லாமல் வந்து கொண்டே உள்ளனர். துறைமுகத் தளத்திலிருந்து படகுகள் கப்பலை நோக்கி நகர்கின்றன. மக்கள் அப்படகுகளில் தாவி ஏறுகிறார்கள். தாங்கள் கொண்டுவந்த பொருள்களைப் படகுகளில் ஏற்றுகிறார்கள். பன்றிகள், வாத்துகள், முட்டைகள் என பலவிதமான பொருள்களுடன் மக்கள் படகுகளில் உற்சாகமாகப் போர்க்கப்பல் பொட்டம்கினை நோக்கிச் செல்கிறார்கள். கடல் உற்சாகமாக அவர்களை வரவேற்கிறது. படகுகளில் வந்தவர்கள் கப்பல்களில் ஏறுகிறார்கள். போர்க்கப்பல் பொட்டம்கினில் உள்ள மாலுமிகளும், வீரர்களும் அவர்களை வரவேற்கிறார்கள். அவர்களது பரிசுப் பொருட்களை மகிழ்ச்சியுடன் ஏற்கிறார்கள். கடற்கரையில் குழுமியுள்ள மக்களும் கையசைத்துத் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறார்கள். எங்கும் மகிழ்ச்சி. திடீரென... ஜார் அரசின் துப்பாக்கிப் படை ஒடேசா படிக்கட்டுகளில் மக்களை நோக்கி விரைகிறார்கள்.

அஞ்சலி செலுத்துவதற்காக ஒடேசா படிகளில் முதல் ஆளாகப் பாய்ந்து தாவிவந்த, இரண்டு கால்களுமற்ற ஊனமுற்ற இளைஞன் விசையுற்ற பந்தைப்போல் தாவித் தாவி ஓடுகிறான். மக்களும் சிதறியடித்து ஒடேசா படிக்கட்டுகளில் சிதறி இறங்கி ஓடுகின்றனர். அவர்களோடு தனது மகனைத் தூக்கிக் கொண்டு ஒரு நவீனப் பெண் ஓடுகிறாள். இவள் கப்பலில் செங்கொடி ஏற்றப்பட்டபோது அதை நோக்கித் தானும் கையசைத்துத் தன் குழந்தையையும் கை அசைக்கச் செய்தவள். துப்பாக்கிப்படை இப்போது துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்குகிறது. நவீனப் பெண் கையிலிருந்த குழந்தை கீழே விழுகிறது. தாய் அதிர்ச்சி அடைகிறாள். மக்கள் கீழே இறங்கிக் கொண்டே இருக்கிறார்கள். அந்த நவீனப் பெண் குழந்தையைக் கைகளில் ஏந்திப் படிகளின் மேலேறுகிறாள். மக்கள் கீழே இறங்கி கொண்டே இருக்கிறார்கள். துப்பாக்கிக் குண்டு பட்டவர்கள் படிகளில் சாய்கிறார்கள். அவள் குழந்தையுடன் ஏறிக்கொண்டே இருக்கிறாள். படிகளில் மக்கள் விழுந்து கிடக்கின்றனர். மக்கள் தொடர்ந்து படிகளில் இறங்கி ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Wed Oct 14, 2015 4:48 am

பேட்டில்ஷிப் பொட்டம்கின் தொடர்கிறது

இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 4 S2OooWWdRDCUqbQ7vslJ+images(3)

அவள் மீதும் துப்பாக்கிக் குண்டு பாய்கிறது. குழந்தை கீழே விழுகிறது. அவள் இறக்கிறாள். இப்போது குதிரைப்படையும் சேர்கிறது. மக்கள் இன்னும் வேகமாகச் சிதறி ஓடுகிறார்கள். ஒரு தள்ளுவண்டியில் தனது கைக்குழந்தையை வைத்துத் தள்ளிக் கொண்டு போகும் பெண் மீது குண்டு பாய்கிறது. தன் குழந்தையைக் காப்பாற்ற இயலாத அவள் வண்டி மீதே சாய்கிறாள். வண்டி... படிகளில் இறங்கித் தறிகெட்டு ஓடி அதிலிருந்து குழந்தை தூக்கி வீசப்படுகிறது. முடிவே இல்லாமல் வன்முறை தொடர்கிறது. அப்போது போர்க்கப்பல் பொட்டம்கினின் பீரங்கி முழங்குகிறது. ஜார் அரசனின் ஒடேசா அரங்கு தகர்க்கப்படுகிறது. ராணுவ வளாக முகப்பில் உள்ள சிங்கம் கர்ஜிக்கிறது.

போர்க்கப்பல் பொட்டம்கினைப் பலி வாங்க ஜார் அரசு மற்றொரு போர்க்கப்பலை அனுப்புகிறது. யுத்தம் தவிர்க்க முடியாதது. பீரங்கிகள் எதிரிக் கப்பலைக் குறிவைக்கின்றன. கடைசி நொடியில் ‘சகோதரர்களே’ என்ற குரல் எழுகிறது. சகோதரப் போராளிகள் மீது சுட மறுக்கிறார்கள்.

வரலாற்றில் நடந்த ஒரு நிகழ்ச்சியைக் குறித்து ஒரு அரசு தயாரிப்பாக உருவான இப்படம் கடந்த 80 ஆண்டுகளாகப் பாராட்டப் பெற்று வருகிறது. ஐன்ஸ்டீன் உருவாக்கியதாகக் கூறப்படும் மாண்டேஜ் படத்தொகுப்பு முறை, அதற்கு அடித்தளமாகக் கூறப்படும் பாவ்லோவ் உளவியல் கொள்கை, தங்கக் கூறுகள் அம்சம் ஆகியவை முக்கிய சினிமாக் கோட்பாடுகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. ஹாலிவுட் உலகமே ஐன்ஸ்டீனைத் தழுவி எடுத்துக் கொண்டது. ஒரு அரசு தயாரிப்பாக உருவாக்கப்பட்ட ஒரு பிரச்சாரப்படம் இன்று உலகு தழுவிய கலைப் படைப்பாக ஏற்றுக் கொள்ளப்பட்டது எதனால்?

இதற்கு ஐன்ஸ்டீன் வார்த்தைகளில் கூறினால், “இன்னும் ஒரு கேள்வி எஞ்சியுள்ளது. ஒரு கலைஞன் இவ்வளவு வடிவமைப்புக் கோட்பாடுகளை எவ்வாறு வந்தடைவது? முற்றிலும் அவலம் நிறைந்த எந்த ஒரு படைப்பிலும் இவ்வடிவமைப்புக் கோட்பாடுகளைக் காணலாம். ஆனால் இவை எதுவும் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட வடிவமைப்புகளால் வந்தடைந்தவை அல்ல. தொழில்நுட்பத் திறன் மட்டுமோ, கோட்பாடு மட்டுமோ, முழுமையான திறமை மட்டுமோ கூட அதற்குப் போதுமானதல்ல.”

இந்த வார்த்தைகள் சினிமாக்கலை மாணவர்களுக்கு ஒரு அபூர்வமான வேத வாக்கு. தொழில்நுட்பமோ, கோட்பாடுகளோ கலை அல்ல. “படைப்பின் ஒரு, உள்ளடக்கம், சிந்தனை ஆகிய அனைத்தும் கதாசிரியரின் சிந்தனைகளுடன், உணர்வுகளுடன் அவரின் மூச்சோடு மூச்சாக உயிரோட்டமாகவும், தொடர்ச்சியாகவும், முழுமையுடன் தொடர்ந்தும் ஒன்றிணையும் போதுதான் படைப்பு உயிரோட்டம் பெறுகிறது. உண்மையான அவல உணர்வின் உச்சத்தை எட்டுகிறது” என்கிறார்கள். இந்த உண்மையை மாணவர்கள் உணர வேண்டுமானால் இப்புத்தகத்தில் ரோகாந்த் மேற்கொண்டுள்ள ‘ஒடேசா படிக்கட்டுகள் காட்சிக்கோவை - ஒரு படிநிலை ஆய்வு’ என்ற கட்டுரையை நுட்பமாகப் படிக்க வேண்டும். மொத்தம் ஐந்து அங்கங்கள் உள்ள இப்படத்தில் இடம்பெறும் நான்காவது அங்கமான ‘ஒடேசா படிக்கட்டுகள்’ காட்சியை இவர் ஆய்வுக்கு எடுத்துள்ளார். படத்தில் இக்காட்சி 11 நிமிடங்கள், 50 நொடிகள் இடம் பெறுகின்றது. இதற்காக ஐன்ஸ்டீன் 240 ஷாட்டுகள் பயன்படுத்தியுள்ளார். இதைப் படிமங்களாகப் பிரித்தபோது 17,753 படங்கள் வந்து விழுந்தன என்கிறார் ரோகாந்த். இவற்றை ஆய்வு செய்து ஷாட் வாரியாகப் பிரிப்பது என்பது கடும் வேலை. இதனை மேற்கொண்டு இந்தக் கட்டுரையை எழுதியுள்ளார்.

“ஒடேசா படிக்கட்டைப் பற்றி இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. ஒன்று படம் சம்பந்தப்பட்டது. இரண்டு வரலாறு சம்பந்தப்பட்டது. ஒட்டுமொத்த படத்தில் இருந்து ஒடேசா அங்கத்தை வெட்டி எடுத்துவிட்டுப் பொட்டம்கின் கதையைப் பார்த்தால், அது எந்த விதத்திலும் குறைபட்ட ஒன்றாக இருக்காது. ஒரு கதையாக ஒரு திரைக்கதையாக ஒரு காட்சி அனுபவமாகப் பார்வையாளர்களின் உணர்வு ஒன்றலில் ஒரு முழுமையை நான்கு அங்கங்களுமே கொடுத்துவிடும்.

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Wed Oct 14, 2015 4:51 am

பேட்டில்ஷிப் பொட்டம்கின் தொடர்கிறது

இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 4 U4rVnUdVS1eBpfvM1z78+bronenosets-potyomkin-battleship-potemkin-1925

இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 4 EgeNy5h5ScGWLLA3QPPF+images

அதே போல மற்ற அங்கங்களின் முதலும் முடிவும் இல்லாமல் ஒரு ஒற்றை அங்கமாகவே ஒடேசா படிக்கட்டுகள் ஒட்டு மொத்தப் படத்தின் முழுமைச் சுருக்கத்தை ஒரு கதையாக, ஒரு திரைக்கதையாக, ஒரு காட்சி அனுபவமாகப் பார்வையாளர்களுக்குக் கொடுத்து விடும். ஏற்கனவே படம் பார்த்தவர்கள் ‘ஒடேசா படிக்கட்டு அங்கம்’ இல்லாத பொட்டம்கின் படத்தைக் கற்பனை செய்து பார்ப்பதே இயலாத காரியமாக இருக்கும்....” (பக். 104)

இரண்டாவது “உண்மையில் 1905 இல் நடந்த பொட்டம்கின் கப்பல் போராட்டத்தில் ஒடேசா படிக்கட்டுகளில் எந்தப் படுகொலைகளும் நடக்கவில்லை. முழுக்க முழுக்கக் கற்பனையான சித்திரிப்பு. ஆனால் ஒடேசா படிக்கட்டுகளின் ஊடாக நிகழ்த்திய அவலத்தின் ஊடாகத்தான் ஜார் அரசினது அடக்குமுறையின் தீவிரம் காட்சிப்படுத்தப்படுகிறது.” (பக். 181) என்று ரோகாந்த் கூறுகிறார். பொட்டம்கின் படத்தைப் பொறுத்தவரை ஐன்ஸ்டீன் கூறுவதுபோல அதன் வடிவமைப்பின் ‘உயிரோட்டமான ஒற்றுமையும் அதன் அவலச் சுவையும்’ (பக் 12) முதலாவது முக்கிய அம்சமாகும். அதாவது இதனை ‘முரண்பாடுகளின் ஒற்றுமை’ என்று இதனை விளக்கலாம். இதுவே ஐன்ஸ்டீனின் திரைமொழி. இது ஒடேசா படிக்கட்டுகளில் ஐன்ஸ்டீன் என்ற கலைஞனின் கற்பனை ஊற்றின் வழி பீறிடுகிறது. பொட்டம்கின் என்ற போர்க்கப்பலில் என்ன நடந்தது என்பதைவிட ஒடேசா படிக்கட்டுகள் ஐன்ஸ்டீன் என்ற கலைஞனின் ‘உணர்வுகளுடன், அவரின் மூச்சோடு மூச்சாக உயிரோட்டமாகவும், தொடர்ச்சியாகவும், முழுமையுடன் தொடர்ந்தும் ஒன்றிணைகிறது.

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Wed Oct 14, 2015 4:54 am

பேட்டில்ஷிப் பொட்டம்கின் தொடர்கிறது

இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 4 UGuzeqywQz6CMQNFx25A+maxresdefault

இந்த நான்காவது அங்கமான ஒடேசா படிக்கட்டுகள் குறித்த படிநிலை ஆய்வை ரோகாந்த் மேலே கூறிய பக்கங்கள் 104-181 இடையே விளக்கியுள்ளார். திரைக்கலையின் ஆதாரமான திரைமொழி குறித்து மாணவர்கள் பயில இது ஒரு காட்சி வழிப் பாடமாக இருக்கும்.

நன்றி ---இணையம்

சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்  இந்த திரைப்படத்தை நான் சென்னையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் பார்த்தேன். சுமார் நாற்பத்து ஐந்து நிமிடங்கள்  ஓடக்கூடிய இப்படம் 1925ம் ஆண்டு எடுக்கப்பட்டது.ஆரம்ப காலத்தில் அமெரிக்க  ஐரோப்பிய நாடுகளில்  இந்தப்படம் திரையிட தடை விதிக்கப்பட்டிருந்தது.ஓசையில்லாமல்  எடுக்கப்பட்ட இந்த மௌனப்
படத்துக்கு  பின்னாளில் பின்னணி இசை சேர்க்கப்பட்டது.
ஜார் மன்னரின் பனிக்கால அரம்மனையை நோக்கி மக்கள் கூட்டம் ஏறுவதும் காசாக்கிய  படையினர்  மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவதும்  ஒரு குழந்தை தள்ளுவண்டியில் படிக்கட்டுகளில் உருண்டோடி வருவதும் அற்புதமாகப் படமாக்கப்பட்டிருக்கும்.

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக