ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணத்திற்கும் விலை உண்டு !

3 posters

Go down

மரணத்திற்கும் விலை உண்டு ! Empty மரணத்திற்கும் விலை உண்டு !

Post by seltoday Sat 5 Sep 2015 - 14:39

இயற்கையில் மரணம் என்பது எப்போதும் எங்கேயும் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது.மனிதன் ஒரு அறிவுள்ள சுயநல விலங்காக இருப்பதால் தன் இனமான மனிதர்களின் மரணங்களை மட்டுமே பெரும்பாலும் கணக்கில் கொள்கிறான்.மற்ற உயிரினங்களின் மரணங்கள் குறித்து அலட்டிக் கொள்வதில்லை; புள்ளிவிவரங்களுடன் கணக்கை முடித்து விடுகிறான்.உலகவணிகமயமாக்கலின் தாக்கமும் , விளம்பரமயமாதலின் தாக்கமும் இந்த மனிதர்களின் மரணத்தையும் விட்டு வைக்கவில்லை .

மரணம் என்பது இயல்பான ஒன்றாக இருந்தாலும் , குடும்பம் என்ற அமைப்பிலிருந்து நிகழும் மரணங்கள் அந்ததந்த குடும்பங்களுக்கு இழப்பு தான் . அது யானைக் குடும்பமாக இருந்தாலும் சரி , பறவைக்  குடும்பமாக இருந்தாலும் சரி , பட்டாம்பூச்சிக்  குடும்பமாக இருந்தாலும் சரி , மனிதக் குடும்பமாக இருந்தாலும் சரி , மற்ற எந்த உயிரினக் குடும்பமாக இருந்தாலும் இழப்பு இழப்பு தான். நாம் மனித மரணங்களை மட்டுமே கணக்கில் கொள்வோம் என்றாலும் அவையும்  சமமாக மதிப்பிடப்படுவதில்லை.

மனித மரணம் நிகழ்கின்ற இடமும் , அது பெறுகிற விளம்பர வெளிச்சமும் பொது சமூகத்தின் , ஆட்சியாளர்களின் கவனத்தைப் பெறுகிறது. எந்தவித கவனமும் பெறாத மனித மரணங்கள் பொது சமூகத்தாலோ , ஆட்சியாளர்களோ கண்டு கொள்ளப்படுவதில்லை. பல மரணங்கள் உறவுகளால் கண்டுகொள்ளப் படுகின்றன; சில மரணங்கள் யாராலும் கண்டுகொள்ளப் படுவதில்லை.

விபத்தால் நிகழும் திடீர் மரணங்களுக்கு அரசுகளால் இழப்பீடு வழங்கப்படுகின்றன. இந்த இழப்பீடுகளும் சமமாக இருப்பதில்லை. ஐம்பதாயிரம் ,ஒரு இலட்சம் , இரண்டு இலட்சம் , ஐந்து இலட்சம் , பத்து இலட்சம் என்று நிர்ணயம் செய்கிறார்கள். எதன் அடிப்படையில் இழப்பீடை நிர்ணயம் செய்கிறார்கள் என்பது புதிராகவே உள்ளது. ஊடக வெளிச்சமும் , சமூக கவனமும் பெறுகின்ற மரணங்களுக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்கப்படுகிறது. மற்றவற்றுக்கு சொற்பம் தான்.பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களில் இதயநோய் , இரத்த அழுத்தம் , புற்றுநோய் மற்றும் வேறுவிமான நோய்களின் காரணமாக நிகழும் திடீர் மரணங்களுக்கு கூட இழப்பீடு வழங்கப்படுவதில்லை. எதிலாவது அடிபட்டு துடிதுடித்து நிகழும் மரணங்கள் மட்டுமே இழப்பீட்டுக்குத் தகுதியுள்ளவை என்று எப்படி முடிவு செய்கிறார்கள் , நம் ஆட்சியாளர்கள்.முட்டாள்கள். இழப்பு என்பது எல்லோருக்கும் பொது தானே.

விமான விபத்தால் நிகழ்ந்த மரணத்திற்கு ஒரு விலை , ரோட்டில் அடிபட்டதால் நிகழ்ந்த மரணத்திற்கு ஒரு விலை , போராட்டத்தால் நிகழ்ந்த மரணத்திற்கு ஒரு விலை , குண்டடி பட்டதால் நிகழ்ந்த மரணத்திற்கு ஒரு விலை , மற்ற தீடீர் மரணங்களுக்கு எந்த விலையுமில்லை. இங்கு நிகழும் மனிதர்களின் மரணங்கள் ஒரே மாதிரியாக மதிப்பிடப்படுவதில்லை ;ஒரே மாதிரியான விலையும் நிர்ணயிக்கப்படுவதில்லை. பல மரணங்களுக்கு விலையே கிடைப்பதில்லை.  " மரணத்தின் முன்  எல்லோரும் சமம் " என்று இனியும் சொல்ல முடியுமா ?

நம் நவீன வாழ்வில் மரணத்திற்கும் சமமில்லாத விலை உண்டு . விலையில்லா மரணங்களுக்கும் இடமுண்டு . ஆனாலும் மரணம் என்பது எல்லோருக்கும் நிச்சயம் என்று மட்டும் இயற்கை சொல்கிறது !



Last edited by T.N.Balasubramanian on Sat 5 Sep 2015 - 22:54; edited 1 time in total (Reason for editing : deletion of blog address)
seltoday
seltoday
பண்பாளர்


பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013

http://jselvaraj.blogspot.in/

Back to top Go down

மரணத்திற்கும் விலை உண்டு ! Empty Re: மரணத்திற்கும் விலை உண்டு !

Post by T.N.Balasubramanian Sat 5 Sep 2015 - 22:53

seltoday wrote:இங்கு நிகழும் மனிதர்களின் மரணங்கள் ஒரே மாதிரியாக மதிப்பிடப்படுவதில்லை ;ஒரே மாதிரியான விலையும் நிர்ணயிக்கப்படுவதில்லை. பல மரணங்களுக்கு விலையே கிடைப்பதில்லை. " மரணத்தின் முன் எல்லோரும் சமம் " என்று இனியும் சொல்ல முடியுமா ?

முற்றிலும் உண்மை ,செல்வராஜ் அவர்களே !

இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம்!
என்பதற்கிணங்க , உங்கள் வலைபக்க சுட்டி நீக்கப்படுகிறது .

வேண்டுமெனில் ,இதை நீங்கள் உங்கள் "signature " போட்டுக்கொள்ளலாம்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மரணத்திற்கும் விலை உண்டு ! Empty Re: மரணத்திற்கும் விலை உண்டு !

Post by சிவா Sat 5 Sep 2015 - 23:44

நம் ஆட்சியாளர்கள் முட்டாள்கள்

உண்மை காதில் தேனாகப் பாய்கிறது!

மரணத்தின் முன் எல்லோரும் சமம்

நிச்சயம் மரணத்திற்கு முன் அனைவரும் சமம் தான்! ஆனால் அந்த மரணத்திற்கான மரியாதை நாம் வாழும் காலத்தில் எப்படி வாழ்ந்தோம் என்பதை அடிப்படையாக வைத்து நிர்ணயிக்கப்படுகிறது!

இழப்பீட்டு தொகையை வைத்து மரணத்தில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பாகுபாடு காணமுடியாது!


மரணத்திற்கும் விலை உண்டு ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மரணத்திற்கும் விலை உண்டு ! Empty Re: மரணத்திற்கும் விலை உண்டு !

Post by seltoday Mon 7 Sep 2015 - 11:39

// இழப்பீட்டு தொகையை வைத்து மரணத்தில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பாகுபாடு காணமுடியாது! //

ஆனால் , சட்டத்தின் முன் மக்கள் அனைவரும் சமம் என்று இருக்கிற ஒரு ஜனநாயக நாட்டை ஆள்கின்ற அரசு இழப்பீடில் பாகுபாடு காட்டுகிறதே ஏன் ? என்பது தான் எனது ஆதங்கம்.
seltoday
seltoday
பண்பாளர்


பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013

http://jselvaraj.blogspot.in/

Back to top Go down

மரணத்திற்கும் விலை உண்டு ! Empty Re: மரணத்திற்கும் விலை உண்டு !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum