புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாமதத்திற்கு வேடிக்கை காரணங்கள் சொல்பவர்கள்! I_vote_lcapதாமதத்திற்கு வேடிக்கை காரணங்கள் சொல்பவர்கள்! I_voting_barதாமதத்திற்கு வேடிக்கை காரணங்கள் சொல்பவர்கள்! I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen
தாமதத்திற்கு வேடிக்கை காரணங்கள் சொல்பவர்கள்! I_vote_lcapதாமதத்திற்கு வேடிக்கை காரணங்கள் சொல்பவர்கள்! I_voting_barதாமதத்திற்கு வேடிக்கை காரணங்கள் சொல்பவர்கள்! I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாமதத்திற்கு வேடிக்கை காரணங்கள் சொல்பவர்கள்! I_vote_lcapதாமதத்திற்கு வேடிக்கை காரணங்கள் சொல்பவர்கள்! I_voting_barதாமதத்திற்கு வேடிக்கை காரணங்கள் சொல்பவர்கள்! I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
தாமதத்திற்கு வேடிக்கை காரணங்கள் சொல்பவர்கள்! I_vote_lcapதாமதத்திற்கு வேடிக்கை காரணங்கள் சொல்பவர்கள்! I_voting_barதாமதத்திற்கு வேடிக்கை காரணங்கள் சொல்பவர்கள்! I_vote_rcap 
27 Posts - 11%
mohamed nizamudeen
தாமதத்திற்கு வேடிக்கை காரணங்கள் சொல்பவர்கள்! I_vote_lcapதாமதத்திற்கு வேடிக்கை காரணங்கள் சொல்பவர்கள்! I_voting_barதாமதத்திற்கு வேடிக்கை காரணங்கள் சொல்பவர்கள்! I_vote_rcap 
10 Posts - 4%
prajai
தாமதத்திற்கு வேடிக்கை காரணங்கள் சொல்பவர்கள்! I_vote_lcapதாமதத்திற்கு வேடிக்கை காரணங்கள் சொல்பவர்கள்! I_voting_barதாமதத்திற்கு வேடிக்கை காரணங்கள் சொல்பவர்கள்! I_vote_rcap 
5 Posts - 2%
Balaurushya
தாமதத்திற்கு வேடிக்கை காரணங்கள் சொல்பவர்கள்! I_vote_lcapதாமதத்திற்கு வேடிக்கை காரணங்கள் சொல்பவர்கள்! I_voting_barதாமதத்திற்கு வேடிக்கை காரணங்கள் சொல்பவர்கள்! I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தாமதத்திற்கு வேடிக்கை காரணங்கள் சொல்பவர்கள்! I_vote_lcapதாமதத்திற்கு வேடிக்கை காரணங்கள் சொல்பவர்கள்! I_voting_barதாமதத்திற்கு வேடிக்கை காரணங்கள் சொல்பவர்கள்! I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
தாமதத்திற்கு வேடிக்கை காரணங்கள் சொல்பவர்கள்! I_vote_lcapதாமதத்திற்கு வேடிக்கை காரணங்கள் சொல்பவர்கள்! I_voting_barதாமதத்திற்கு வேடிக்கை காரணங்கள் சொல்பவர்கள்! I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
தாமதத்திற்கு வேடிக்கை காரணங்கள் சொல்பவர்கள்! I_vote_lcapதாமதத்திற்கு வேடிக்கை காரணங்கள் சொல்பவர்கள்! I_voting_barதாமதத்திற்கு வேடிக்கை காரணங்கள் சொல்பவர்கள்! I_vote_rcap 
2 Posts - 1%
nahoor
தாமதத்திற்கு வேடிக்கை காரணங்கள் சொல்பவர்கள்! I_vote_lcapதாமதத்திற்கு வேடிக்கை காரணங்கள் சொல்பவர்கள்! I_voting_barதாமதத்திற்கு வேடிக்கை காரணங்கள் சொல்பவர்கள்! I_vote_rcap 
1 Post - 0%
Tamilmozhi09
தாமதத்திற்கு வேடிக்கை காரணங்கள் சொல்பவர்கள்! I_vote_lcapதாமதத்திற்கு வேடிக்கை காரணங்கள் சொல்பவர்கள்! I_voting_barதாமதத்திற்கு வேடிக்கை காரணங்கள் சொல்பவர்கள்! I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாமதத்திற்கு வேடிக்கை காரணங்கள் சொல்பவர்கள்!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 01, 2015 5:41 pm

ஏன் லேட்டு?'
'லேட் ஆயிடுச்சு சார்!'
இந்தப் பள்ளிக்கூடத்து வசனங்களை, வளர்ந்த பின்பும் பலர் தொடர்வர்!

'லேட்டாக்கிட்டேன்... தப்பு தான்...' என்பது தானே சரியான பதில்! நான், இனி என்னை திருத்தி கொள்வேன் என்று உத்தரவாதம் தரப்பட்டதாக அமையும்!

பொருளாதார வளர்ச்சியடைந்த நாடுகள் மட்டுமல்லாமல், வளராத நாடுகளான லாவோஸ் மற்றும் கம்போடியா போன்ற நாட்டினர் கூட, குறித்த நேரம் என்பதற்கு அபார முக்கியத்துவம் தருகின்றனர். ஒரு நிகழ்ச்சிக்கு தாமதமாக செல்வதை, வெட்கக்கேடான செயலாகக் கருதுகின்றனர்.

இந்(திய)த மண்ணில் மட்டும் தான், தாமதமாக ஒரு கூட்டத்திற்கு வருவோரை, 'நீங்க கெட்டிக்காரர்; சரியா ஆரம்பிக்கிற நேரத்துல நுழையுறீங்க...' என்று பாராட்டி, மகிழ்கிறோம்.

தமிழகத்தில், பல நேரங்களில் தாமதமாக வருபவர்கள் நுழைந்ததும் தான் கூட்டமே ஆரம்பிக்கிறது. நேரம் கடந்தாலும், சபை நிறைந்ததும் தான், நாடகத்திற்கு பூஜை மணி அடிக்கப்படுகிறது.

ஒரு முறை, ஈரோட்டில் உள்ள ராணா அரங்கில், ஒரு குறிப்பிட்ட அமைப்பின் கூட்டம் நடந்தது. தாமதமாக வருபவர் எவராக இருப்பினும், பின் வரிசையில் தான் அமர வேண்டும் என்பதும், தாமதமாக வருகிற எவருக்கும், எந்த முன்னுரிமையும் கிடையாது என்பதையும் அங்கு கண்டேன்.

நேர உணர்வு வளராத அக்காலத்திலேயே, குறித்த நேரத்தில் கூட்டத்தை துவங்கும் பண்பை கடைபிடித்தவர், கம்பன் அடிப்பொடி, சா.கணேசன்!

ஒருமுறை, அப்போது முதல்வராக இருந்தவர் குறித்த நேரத்திற்கு வராமல் போக, 'கம்பன் அடிப்பொடி இன்று என்ன செய்யப் போகிறார் பாப்போம்...' என்று, கூட்டத்தினர் ஆவலுடன் எதிர்பார்த்திருக்க, 'ஆரம்பியுங்கள் கூட்டத்தை...' என்றார்.

'விழாத் தலைவர்... அதுவும் முதல்வர்! அவர் வராமல் எப்படி...' என, விழாக் குழுவினர் திகைக்க, 'பரவாயில்ல; நமக்கு குறித்த நேரம் தான் முக்கியம்...' என்று சொன்ன, துணிச்சல் மனிதர், சா.கணேசன்.

சமூகத் தொண்டு நிறுவனங்களாக, உலக அளவில் சிறந்து விளங்கும் சில சங்கங்களின் தமிழகக் கிளைகள் கூட, அரசியல் கூட்டங்கள் போல் ஆகிவிட்டன. நூற்றுக்கு, 90 கூட்டங்கள் தாமதமாகவே ஆரம்பிக்கப்படுகின்றன; நடத்தப்படுகின்றன.

உலகச் சங்கங்களின் அங்கங்கள் என்கிற போது, நாமும் உலகோடு ஒட்டொழுக வேண்டாமா... உள்ளூர் அரசியல் கூட்டங்கள் போலவா நடத்துவது!

'மணி, 7:00 தானே ஆகுது... 7:30க்குத் தான் ஆரம்பிப்பர்...' என்கிற தவறான உணர்வை, உறுப்பினர்கள் மத்தியில் பதித்தால், அது யாருடைய குற்றம்?

போதுமான உறுப்பினர்கள் வந்துவிட்டால் கூட்டத்தை ஆரம்பித்துவிட வேண்டியதுதானே... சபை நிறைய வேண்டும் என்று காத்திருக்க வேண்டியதில்லையே!

தாமத வருகைக்கு பெரும்பாலும், நம்மவர்கள் சொல்லும் காரணம், 'ஏகப்பட்ட, 'டிராபிக்ஜாம்' என்னை என்ன செய்ய சொல்றீங்க...' என்பர். மோசமான போக்குவரத்தை எதிர்பார்த்து, கூடுதல் நேரம் ஒதுக்கிப் புறப்பட வேண்டியது தானே!

வண்டி பஞ்சர், ரயில்வே கேட் மூடுதல் என, எதிர்பாராததை எல்லாம் எதிர்பார்த்து, அதற்கும் நேரம் ஒதுக்கியல்லவா, புறப்பட்டிருக்க வேண்டும்!

'கிளம்புற நேரத்துல ஒருத்தர் வந்து தொலைச்சுட்டார்... என்ன செய்ய சொல்றீங்க...' என்பர் ஒரு சிலர்.
நம்மிடம் முன் அனுமதி பெறாமல், தகவல் தெரிவிக்காமல் வருவோருக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டியதில்லையே... 'அவசரமாக் கிளம்புறேன்; நீங்களும் என்னுடன் வருகிறீர்களா?' என்று கேளுங்கள், அவரே நழுவி விடுவார்.

காபி கலந்து கொண்டிருக்காமல், பச்சைத் தண்ணீரோடு ஆளைக் கை கழுவுங்கள்; நீண்ட உரையாடலும் வேண்டாம்; உங்கள் அவசரத்தை அவசியம் புலப்படுத்துங்கள்.

வருகிற வழியில் வேறு வேலைகளை வைத்துக் கொள்ள கூடாது. வழியில் வைத்துக் கொள்ளும் எந்த ஒரு வேலையும், தறிகெட்டு ஓடும் வாகனத்தின் போக்கிற்கு சமம். நேரே இலக்கு தான்; இலக்கு முடிந்ததும் தான் வழிப் பணிகள்.

தாமதக்காரர்களிடம் ஒன்று கேட்கிறேன்... நம் முதல்வருடன் அப்பாயின்மென்ட் என்றால் தாமதம் செய்வீர்களா... முன்னதாகவே போய் விட மாட்டீர்கள்?

ஒப்புக்கொள்கிற ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் முக்கியத்துவம் தாருங்கள். 'லேட்டாப் போனா என்ன, தலையை சீவிடுவாங்களா...' என்கிற தத்துவத்தை மூட்டை கட்டுங்கள்.

ஜேம்ஸ் ஹெச்.வேல்ஸ் என்கிற அமெரிக்கப் பணக்காரர், 'நான் வருகிறேன் என்று சொன்ன நேரம் கடந்து விட்டதா... ஜேம்ஸ் செத்துப் போயிட்டான் என்கிற முடிவிற்கு வந்து விடுங்கள்...' என்று கூறினார்.
இதுவன்றோ குறித்த நேரத்திற்கு முக்கியத்துவம் தரும் அழகு!

லேனா தமிழ்வாணன்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 01, 2015 5:47 pm

நிஜம், அது தான் அர்னால்டு பார்த்தார்....'இது வேலைக்கு ஆகாது' என்று விழாவை புறக்கணித்து விட்டு கிளம்பி விட்டார்........அதை பார்த்தும் நம் ஆட்கள் திருந்தலை சோகம் ................. ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Sep 01, 2015 8:50 pm

ரொம்ப சரி கிருஷ்ணம்மா . இங்கு நான் பார்த்த வரை அனைவரும் ஒரு 10 நிமிடங்கள் முன்பாகவே வந்து விடுகிறார்கள் . appointment டைம் க்கு 10..15 நிமிடங்கள் முன்பாகவே வந்து கையில் புத்தகமோ , லேப்டாப் , போன் ,அல்லது நாளிதழ்கள் பார்த்து பொழுதை நல்ல முறையில் கழிகிரார்கள் . யாரும் போனில் கேம்ஸ் விளையாடி பார்த்ததில்லை .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 02, 2015 12:56 am

shobana sahas wrote:ரொம்ப சரி கிருஷ்ணம்மா . இங்கு நான் பார்த்த வரை அனைவரும் ஒரு 10 நிமிடங்கள் முன்பாகவே வந்து விடுகிறார்கள் . appointment டைம் க்கு 10..15 நிமிடங்கள் முன்பாகவே வந்து கையில் புத்தகமோ , லேப்டாப் , போன் ,அல்லது நாளிதழ்கள் பார்த்து பொழுதை நல்ல முறையில் கழிகிரார்கள் . யாரும் போனில் கேம்ஸ் விளையாடி பார்த்ததில்லை .
மேற்கோள் செய்த பதிவு: 1160157

எங்காத்தில் கூட இந்த பழக்கம் உண்டு..நாங்க எங்க போகணும் என்றாலும், யார் வீட்டு பங்க்ஷனோ , flight அல்லது train பிடிக்கணுமோ, எதுவானாலும் 'முறை வாசல்' செய்யவே கிளம்பிவிடுவோம் ஜாலி ஜாலி ஜாலி...எங்க அப்பாவின் பழக்கம் இது..............பஞ்சுவாலிட்டி ரொம்ப முக்கியம் அப்பாக்கு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 02, 2015 8:42 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Wed Sep 02, 2015 12:06 pm

மிகவும் நல்ல பதிவு

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Sep 02, 2015 2:09 pm

நல்ல பதிவு கிருஷ்ணாம்மா பகிர்வுக்கு நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 02, 2015 3:20 pm

நன்றி நண்பர்களே ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக