புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலக்ஷ்மி விரதம் ! - 28 ஆகஸ்ட் ! Poll_c10வரலக்ஷ்மி விரதம் ! - 28 ஆகஸ்ட் ! Poll_m10வரலக்ஷ்மி விரதம் ! - 28 ஆகஸ்ட் ! Poll_c10 
6 Posts - 46%
heezulia
வரலக்ஷ்மி விரதம் ! - 28 ஆகஸ்ட் ! Poll_c10வரலக்ஷ்மி விரதம் ! - 28 ஆகஸ்ட் ! Poll_m10வரலக்ஷ்மி விரதம் ! - 28 ஆகஸ்ட் ! Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
வரலக்ஷ்மி விரதம் ! - 28 ஆகஸ்ட் ! Poll_c10வரலக்ஷ்மி விரதம் ! - 28 ஆகஸ்ட் ! Poll_m10வரலக்ஷ்மி விரதம் ! - 28 ஆகஸ்ட் ! Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
வரலக்ஷ்மி விரதம் ! - 28 ஆகஸ்ட் ! Poll_c10வரலக்ஷ்மி விரதம் ! - 28 ஆகஸ்ட் ! Poll_m10வரலக்ஷ்மி விரதம் ! - 28 ஆகஸ்ட் ! Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
வரலக்ஷ்மி விரதம் ! - 28 ஆகஸ்ட் ! Poll_c10வரலக்ஷ்மி விரதம் ! - 28 ஆகஸ்ட் ! Poll_m10வரலக்ஷ்மி விரதம் ! - 28 ஆகஸ்ட் ! Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலக்ஷ்மி விரதம் ! - 28 ஆகஸ்ட் ! Poll_c10வரலக்ஷ்மி விரதம் ! - 28 ஆகஸ்ட் ! Poll_m10வரலக்ஷ்மி விரதம் ! - 28 ஆகஸ்ட் ! Poll_c10 
372 Posts - 49%
heezulia
வரலக்ஷ்மி விரதம் ! - 28 ஆகஸ்ட் ! Poll_c10வரலக்ஷ்மி விரதம் ! - 28 ஆகஸ்ட் ! Poll_m10வரலக்ஷ்மி விரதம் ! - 28 ஆகஸ்ட் ! Poll_c10 
239 Posts - 32%
Dr.S.Soundarapandian
வரலக்ஷ்மி விரதம் ! - 28 ஆகஸ்ட் ! Poll_c10வரலக்ஷ்மி விரதம் ! - 28 ஆகஸ்ட் ! Poll_m10வரலக்ஷ்மி விரதம் ! - 28 ஆகஸ்ட் ! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
வரலக்ஷ்மி விரதம் ! - 28 ஆகஸ்ட் ! Poll_c10வரலக்ஷ்மி விரதம் ! - 28 ஆகஸ்ட் ! Poll_m10வரலக்ஷ்மி விரதம் ! - 28 ஆகஸ்ட் ! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
வரலக்ஷ்மி விரதம் ! - 28 ஆகஸ்ட் ! Poll_c10வரலக்ஷ்மி விரதம் ! - 28 ஆகஸ்ட் ! Poll_m10வரலக்ஷ்மி விரதம் ! - 28 ஆகஸ்ட் ! Poll_c10 
25 Posts - 3%
prajai
வரலக்ஷ்மி விரதம் ! - 28 ஆகஸ்ட் ! Poll_c10வரலக்ஷ்மி விரதம் ! - 28 ஆகஸ்ட் ! Poll_m10வரலக்ஷ்மி விரதம் ! - 28 ஆகஸ்ட் ! Poll_c10 
6 Posts - 1%
sugumaran
வரலக்ஷ்மி விரதம் ! - 28 ஆகஸ்ட் ! Poll_c10வரலக்ஷ்மி விரதம் ! - 28 ஆகஸ்ட் ! Poll_m10வரலக்ஷ்மி விரதம் ! - 28 ஆகஸ்ட் ! Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
வரலக்ஷ்மி விரதம் ! - 28 ஆகஸ்ட் ! Poll_c10வரலக்ஷ்மி விரதம் ! - 28 ஆகஸ்ட் ! Poll_m10வரலக்ஷ்மி விரதம் ! - 28 ஆகஸ்ட் ! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
வரலக்ஷ்மி விரதம் ! - 28 ஆகஸ்ட் ! Poll_c10வரலக்ஷ்மி விரதம் ! - 28 ஆகஸ்ட் ! Poll_m10வரலக்ஷ்மி விரதம் ! - 28 ஆகஸ்ட் ! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
வரலக்ஷ்மி விரதம் ! - 28 ஆகஸ்ட் ! Poll_c10வரலக்ஷ்மி விரதம் ! - 28 ஆகஸ்ட் ! Poll_m10வரலக்ஷ்மி விரதம் ! - 28 ஆகஸ்ட் ! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலக்ஷ்மி விரதம் ! - 28 ஆகஸ்ட் !


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 27, 2015 8:11 pm

வரலக்ஷ்மி விரதம் ! - 28 ஆகஸ்ட் !

வரலக்ஷ்மி விரதம் ! - 28 ஆகஸ்ட் ! OC8WlM2WRPKx0wZ6k6dK+lakshmi1

வரலட்சுமி விரதம் என அழைக்கப்படும் இவ் விரதத்தை விவாகமாகி சுமங்கலியாக வாழும் சுமங்கலிப் பெண்களும், கன்னிப் பெண்களும் மகாவிஷ்ணுவின் தேவியான இலட்சுமி தேவியைக் குறித்துச் அனுஷ்டிக்கும் மிகச் சிறப்பான விரதமாகும்.

ஆடி மாத பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.  இவ் விரதம் இவ் வருடம் 28.08.2015 வெள்ளிக்கிழமை அமைவதாக சோதிடம் கணித்துள்ளது.

சகல சௌபாக்கியங்களையும் தரும் லக்ஷ்மியை (அஷ்டலக்ஷ்மியை) வணங்குவதால் வரலக்ஷ்மி விரதம் (வரம் தரும் இலக்ஷ்மி விரதம்) என்றழைக்கப்பெறுகின்றது. மிகவும் பக்தி சிரத்தையோடும், மடியோடும் (ப்ரம்மசர்யம், விரதம், சைவ சாத்வீக உணவு, அஹிம்ஸை, சுத்தம், அழகு, இனிமை, ஒரு முகப்பட்ட மனது எல்லாம் கலந்தது) இந் நாளில் நோன்பிருந்து வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் பெற்று சுமங்கலியாக வாழலாம் என்பது ஐதீகம்.

இவ் விரதத்தை நியம விதிப்படி வீட்டினில் அனுஷ்டிப்பதனால் இலக்குமிதேவி வீட்டினுள் வாசஞ்செய்வாள். இயலாதவர்கள் ஆலயங்களிலும் இவ் விரதத்தை அனுஷ்டிக்கலாம்.
இவ் வரலட்சுமி விரதம், பெரும்பாலும் எல்லா அம்பிகை ஆலயங்களிலும், இலக்குமி தேவியை பரிவார தெய்வங்களாக கொண்ட மற்றைய ஆலயங்களிலும் வெகு சிறப்பாக அனுஷ்டிக்கப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் அனேகமாக எல்லோரும் ஆலயங்களில் இவ் விரதத்தை அனுஷ்டிக்கின்றனர். அங்கே குத்துவிளக்கேற்றி இலக்குமியை ஆவகணம் செய்து பூஜித்து வழிபட்ட பின்னர் அதனை அணையாது வீட்டிற்கு எடுத்துச் சென்று சுவாமி அறையில் வைத்து வழிபடடுகின்றனர். (இலக்குமி தேவியை ஆலயத்தில் இருந்து வீட்டிற்கு அழைத்து வருவதாக அமைகின்றது.)

உள்ளத் தூய்மையுடனும் உடல் தூய்மையுடனும் ஆசாரசீலர்களாக அஷ்ட இலக்குமியாக விளங்கும் அம்பிகையை வழிபட்டால்; அம்பிகையின் அருள் கிடைத்து மகிழ்ச்சியான வாழ்க்கை அமைந்துவிடும். இந்த விரதத்தை அனுஷ்டிப்பதனால்,  இல்லத்தில் செல்வம் கொழித்துக் களித்தோங்கும்.

கணவன் நீண்ட ஆயுழுடன் வாழ்வதால் மனைவியர் தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியம் கிடைக்கப் பெறுகின்றனர். அத்துடன் பிள்ளைப் பேறு இல்லாதவர்கள் "பாக்கிய இலட்சுமியின்" அருளினால் மக்கள்பேறு பெறுகின்றனர். அதனால் இந்த விரதத்தை சுமங்கலிப் பெண்கள் (குடும்பப் பெண்கள்) எல்லோரும் விரும்பிப் அனுஷ்டிக்கின்றனர்.

கன்னிப் பெண்கள் இவ்விரதத்தை அனுஷ்டிப்பதால் செல்லவச் சிறப்போடு வாழும் சிறந்த கணவன் கிடைக்கப் பெற்று சிறப்பான குடும்ப வாழ்க்கை அமையப் பெறுவர் என ஆகமங்கள் கூறுகின்றன.

மகாலட்சுமியை தனலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தானலட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என அஷ்டலட்சுமிகளாகப் பிரித்துள்ளனர்.

இலட்சுமிதேவி எட்டு வகை செல்வங்களை வாரி வழங்குபவளும் என்றும், பொறுமை மிக்கவள் என்றும். அவள் அனைவருக்கும் நன்மையே செய்வாள் என அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக பெண்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் அவளால் பொறுத்துக் கொள்ள முடியாது.

அவள் நித்திய சுமங்கலி. மஞ்சள் பட்டு உடுத்தி காட்சி தருபவள். கணவரான திருமாலின் மார்பில் குடியிருப்பவள். பெண்களுக்கே உரித்தான கருணை உள்ளம், அழகு, வெட்கம், அன்பு, புத்தி ஆகியவற்றிற்கு அதிபதியும் அவளே. வரலட்சுமி விரதம் இருந்து அவளைப் பூஜித்தால் எல்லா எல்லாப் பலன்களும் கிடைக்கும் என ஆகமங்கள் கூறுகின்றன.

விரத அனுஷ்டிக்கும் முறை: இந்த விரதம் அனுட்டிப்பதற்கு வீடு அல்லது கோயில்களில் தென்கிழக்கு மூலையில் ஒரு சிறு மண்டபம் எழுப்ப வேண்டும். அதில் சந்தனத்தால் செய்யப்பட்ட வரலட்சுமியின் முகத்தை வைக்க வேண்டும். வசதி மிக்கவர்கள் வெள்ளி சிலை வைக்கலாம். சிலையை தாழம்பூவால் அலங்கரித்து அதை ஒரு பலகையில் வைக்க வேண்டும்.

சிலை முன் வாழை இலை போட்டு அதில் ஒரு படி பச்சரிசியை பரப்ப வேண்டும். அரிசியின் மீது தேங்காய், மாவிலை, எலுமிச்சை, பொன், பழங்கள் ஆகியவற்றை வைத்து சிலைக்கு மஞ்சள் ஆடை அணிவிக்க வேண்டும். ஒரு கும்பத்தை எடுத்து அதில் புனித நீர் நிறைத்து, சந்தனம் குங்குமம் வைத்து, மாவிலையுடன் தேங்காய் வைத்து அரிசியின் நடுவில் வைக்க வேண்டும்.பின் ஐந்து வகையான ஆரத்தி தட்டுகளால் பூஜை செய்ய வேண்டும்.

அஷ்டலட்சுமிகளுக்கும் விருப்பமான அருகம்புல்லை சிலையின் மீது தூவி பூஜை செய்வது நல்லது. பூஜையின் போதுஅஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம் ஆகியவற்றை படிக்கலாம். வீட்டிற்கு வந்திருக்கும் பெண்களுக்கு தேங்காய், மஞ்சள்கயிறு, குங்குமம் கொடுக்க வேண்டும்.நைவேத்யமாக கொழுக்கட்டை படைக்கலாம்.

பின் கலசத்தை அரிசி பானையில் வைத்துவிட வேண்டும். இதனால் அன்னபூரணியின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சந்தனத்தில் செய்யப்பட்ட லட்சுமி வடிவங்களை மறுநாள் நீர்நிலையில் கரைத்துவிட வேண்டும்.இந்த விரதம் இருப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். செல்வ வளம் சேரும். மங்கள வாழ்க்கை அமையும். கன்னிப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.

சுமங்கலிப் பெண்கள் இந்த விரதத்தின்போது தாலிக் கயிற்றை வைத்து பூஜை செய்து, அதனை அணிந்து கொள்வார்கள். இதனால் அவர்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பார்கள். இந்த வரலட்சுமி விரதத்தை கடைபிடிக்கும் குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு உயர்ந்த ஞானம் கிட்டும்.

சுமங்கலிப் பெண்களுக்கு மங்கள வாழ்க்கை அமையும். மாங்கல்ய பாக்கியம் நிலைத்து நீடிக்கும். குடும்பத்திற்கு எட்டுவித ஐஸ்வரியங்கள் உண்டாகும். இந்த விரதம் மேற்கொள்வோர் விரும்பிய நலன்கள் எல்லாம் கிட்டும்.

தொடரும்..............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 27, 2015 8:16 pm

தனியாக வீட்டில் விரதம் அனுஷ்டிக்க இயலாதவர்கள் அயலில் உள்ள ஆலயங்களில் நடைபெறும் வரலக்ஷ்மி பூசைககளில் கலந்தும் விரதம் அனுஷ்ட்டிக்கலாம். பெரும் பாலான இந்தியநாட்டவர்கள் வீட்டில் கும்பம் வைத்து வழிபடுகின்றனர்.

வரலக்ஷ்மி விரதம் ! - 28 ஆகஸ்ட் ! QcYfwUeQ4i9r1eDT5wdw+ashtalakshmi

ஆனால் இலங்கையில் அனேகமானோர் அம்பிகை ஆலயங்களுக்குச் சென்று அங்கு நடைபெறும் விசேஷச பூசைகளில் பங்குபற்றி தம் விரதத்தை நிறைவேற்றுகின்றனர். உள்ளத்தூய்மையுடனும் உடல் தூய்மையுடனும் ஆசாரசீலர்களாக அஷ்ட இலக்குமியாக விளங்கும் அம்பிகையை வழிபட்டால் அம்பிகையின் அருள் கிடைத்து மகிழ்ச்சியான வாழ்க்கை அமைந்துவிடும்.

உங்கள் இல்லத்துக்கு மகாலட்சுமி குடி கொள்ள வேண்டுமா?  முதலில் உள்ளத்தையும், வீட்டையும் சுத்தமாக வைத்திருங்கள்.

மனிதவாழ்க்கையில் தெய்வீகமும், ஆசார, அனுஷ்டானமும் சேர்ந்திருப்பது உத்தமம். ஆசார, அனுஷ்டானங்கள் முறையாக இருந்தாலே, அங்கு தெய்வீகமும் ஏற்பட்டு விடும். முன்னோரது ஆன்மிக வாழ்க்கை, ஆசார, அனுஷ்டானங்களுடன் கூடியது.

காலையில் பல் தேய்த்து, குளித்து, நெற்றியில் திலகம் இட்டு தெய்வ வழிபாடு செய்த பிறகே உணவு எடுத்துக் கொள்வர். விவசாயம் மற்றும் வெளி வேலைகள் சம்பந்தமாக வெளியே போகிறவர்கள் கூட எவ்வளவு காலதாமதமாக வீடு திரும்பினாலும், குளித்து, நெற்றிக்கு விபூதி, பொட்டு வைத்துக் கொண்டு, சுவாமி படத்துக்கு பூ போட்டு விட்டுத்தான் உணவு எடுத்துக் கொள்வர்.

இதுவே, ஆசார, அனுஷ்டானமுள்ள குடும்பம். அப்படிப்பட்டவர்களையும், அந்த வீடுகளையும் பார்க்கும் போதே ஒரு தெய்வீக களை இருக்கும். பெண்கள் எழுந்ததும், குளியல், வாசல் தெளித்து கோலம் போடுதல், பூஜைக்கு வேண்டியவற்றை தயார் செய்தல் என, இவைகளையும் கவனித்த படியே சமையலையும் செய்து முடிப்பர். இவர்களும் இந்த ஆசார, அனுஷ்டான விஷயத்தில் சிரத்தையோடு இருப்பர்.

விடியற்காலையில் மகாலட்சுமி வந்து கொண்டே இருப்பாளாம். எந்த வீட்டு வாசலில் சாணம் தெளித்து, கோலம் போட்டு, தீபம் ஏற்றி வைக்கப்பட்டுள்ளதோ, அந்த வீட்டுக்குள் வந்து விடுவாள் என்பது ஐதீகம். இதுபோன்ற வீடுகளில் சுபிட்சத்துக்கும், ஷேமத்துக்கும் குறைவே இராது. தூய்மையில்லாத வீடுகளிலும், மனத்தூய்மையில்லாதவர்கள் வாழும் இடங்களிலும் இலட்சுமி தேவி வாசஞ்செய்ய மாட்டாள். பதிலாக மூதேவிதான் குடிகொள்வாள் என்பது ஆன்றோர் வாக்கு.

இப்போது எல்லாமே இயந்திர, நாகரிக வாழ்க்கையாகி விட்டது. காலையில் படுக்கையில் இருந்தபடியே காபி, பிறகு டிபன், பிறகு, எங்கேயாவது ஓடுவது, உழைப்பது; சினிமா, டிராமா, பொழுதுபோக்கு, இரவு வீடு திரும்பியதும் சாப்பாடு, தூக்கம். ஆண்கள் தான் இப்படியென்றால், பெண்கள் கூட ஆசார, அனுஷ்டானத்தில் சிரத்தை காட்டுவதில்லை.

ஒரு இடத்தில் குப்பை இருந்தால், அதே இடத்தில் மேலும், மேலும் குப்பையைக் கொண்டு வந்து கொட்டுவர். அந்த இடம் குப்பை மேடாகி விடும். ஆசார, அனுஷ்டானக் குறைவு குடும்பத்தில் யாரிடமாவது இருந்தாலும் போதும், மற்றவர்களுக்கு அதில் சிரத்தை இல்லாமல் போய் விடும்.

"தாத்தா குளிக்காமலே சாப்பிடுகிறாரே! நான் மட்டும் ஏன் குளிக்க வேண்டும்?' என்று பேரன் கேட்டால், ஆச்சரியப்பட வேண்டியதில்லை. அப்பாவோ, தாத்தாவோ, பூஜை செய்தால், பேரனும் பக்கத்தில் உட்கார்ந்து, மந்திரம் சொல்வான், மணியடிப்பான், ஊதுவத்தி ஏற்றி வைப்பான்.

இப்படி, புத்தி அவனுக்கும் செல்லும். நாம் தான் வழிகாட்ட வேண்டும். ஆசார, அனுஷ்டானத்தோடு இருப்பது கவுரவக் குறைச்சல் என்று எண்ணினால், அந்த வீட்டில் மகாலட்சுமி தங்க மாட்டாள்; அவளுடைய "அக்கா' (மூதேவி)தான் சந்தோஷமாக வாசம் செய்வாள்!வரலட்சுமி விரதம் பற்றிய புராணக் கதைகளை காண்போம்:

1. பத்ரச்ரவா என்னும் சவுராட்டிர மன்னனின் மனைவி கசந்திரிகா. மன்னன் எப்பொழுதும் மங்கலச் சொற்களையே பேசுபவன், கேட்பவன். குணம், கல்வி, தர்மம், கற்பு ஆகிய நற்பண்புகள் கொண்ட கசந்திரிகா நிலவைப் பழிக்கும் அழகு கொண்டவள்; சினத்தை ஒழித்து எப்பொழுதும் குளிர்ந்த சாந்தமான முகத்தை உடையவள். இவர்கட்கு 7 ஆண் மகவுகளும் ஒரு பெண் குழந்தையும் பிறந்தன. பெண் குழந்தையை சியாமா எனப் பெயரிட்டு வளர்த்து வந்தனர்.

கசந்திரிகாவின் நற்குணங்களும், நற்செயல்களும் கண்டு மகாலட்சுமி அவளிடம் கருணை கொண்டாள். ஒரு வெள்ளிக்கிழமை துவாதசி திதியன்று மகாலட்சுமி ஒரு பழுத்த சுமங்கிலி உருவெடுத்து அந்தப்புறத்தில் நுழைந்தாள். வயிறார உண்டு வாய்நிறையத் தாம்பூலம் தரித்து அமர்ந்திருந்த அரசி, “தாயே! சுமங்கிலியே! தாங்கள் யார்? எதற்க்காக வந்தீர்கள்?” என் வினவினாள். அவளை நோக்கி மகாலட்சுமி,”கசந்திரிகா! நீ நல்லவள்.

உத்தமி. ஆனால், லட்சுமி தேவியின் அவதார தினமான இன்று வயிறார உண்டு தாம்பூலம் தரித்துக் கொண்டுள்ளாயே! இது நியாயமா?” எனக் கேட்டாள். செய்த தவறைச் சுட்டிக் காட்டியவுடன் கோபமே கொள்ளாத கசந்திரிகாவுக்கு சினம் கொப்பளித்து வந்தது. உடனே மகாலட்சுமியின் கன்னத்தில் அறைந்து, ”இங்கிருந்து போய்விடு” என்றாள்.

கண்கள் கலங்கி கண்ணீர் தளும்பிய முகத்துடன் வெளியேறிய மகாலட்சுமியைக் குழந்தை சியாமா கண்டு, ”அம்மா! ஏன் அழுகிறீர்கள்? என்ன வேண்டும்?” என்றாள். கண்களைத் துடைத்துக்கொண்டு மகாலட்சுமி, ”பெண்ணே! உன் தாயாருக்கு நல்லது சொன்னேன். அதற்க்காக என்னை அடித்து அவமானப்படுத்தித் துரத்தி விட்டாள். அதனால்தான் திரும்பிப் போகிறேன்” என்றாள்.

உடனே சியாமா மகாலட்சுமியை உபசரித்து, அமரவைத்து, “அந்த நல்லதை எனக்குச் சொல்லிக்கொடுங்களேன்” என்றாள். மனம் குளிர்ந்த மகாலட்சுமி, சியாமாவுக்கு வரலட்சுமி விரதம் கொண்டாடவேண்டிய வழிமுறைகளை உபதேசித்தாள்.

தொடரும்......................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
lotus73
lotus73
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 06/05/2015

Postlotus73 Thu Aug 27, 2015 8:17 pm

எளிமையாக உரைத்திருக்கிறீர்கள் .... நன்றி நாளை பூஜைக்கு இன்றே ஏற்பாடுகள் துவங்க வேண்டும். நான் அறியாமலேயே மஞ்சள் புது துணி தான் எடுத்து வந்தேன் கலச வழிபாட்டிற்கு ...
lotus73
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் lotus73



லக்ஷ்மி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 27, 2015 8:19 pm

வரலக்ஷ்மி விரதம் ! - 28 ஆகஸ்ட் ! 3V2CtboUQEi8ENQDPUy3+Maha

அன்று முதல் சியாமா, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தவறாது வரலட்சுமி விரதத்தைக் கடைப்பிடித்தாள். லட்சுமிதேவியை அவமதித்ததால் பத்ரச்ரவா மன்னனிடமிருந்த செல்வங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கின. மனம் நொந்த மன்னன் இராச்சியம் கையைவிட்டுப் போவதற்குள் மகளுக்குத் திருமணம் செய்ய எண்ணி மாலாதரன் என்ற மன்னனுக்கு மணமுடித்துக் கொடுத்தான்.

புகுந்த வீடு சென்றபின்னும் சியாமா விரதத்தைத் தொடர்ந்தாள். மாலாதரனுக்கு செல்வம் குவிந்தது. பத்ரச்ரவாவும் கசந்திரிகாவும் பகைவர்களால் விரட்டப்பட்டு காட்டுக்கு ஓடி உணவுக்கு வழியற்று ஊர் ஊராகத் திரிந்தனர். செய்தியறிந்த சியாமா வருந்தி, அவர்களைத் தன் நாட்டிலேயே தங்கவைத்துத் தன் சேவகன் மூலம் உணவளித்துக் காத்து வந்தாள். நாட்கள் கழிந்தன.

ஒருநாள், நிறையத் தங்க நாணயங்களை ஒரு பாத்திரத்தில் போட்டு மூடிக் கொடுத்து, “இதை வைத்துக்கொண்டு எங்காவதுபோய்ப் பிழைத்துக் கொள்ளுங்கள்” என்றாள். சியாமா அவ்விடத்தை விட்டு அகன்றதும், மூடிய பாத்திரத்தைத் திறந்து பார்த்த பத்ரச்ரவா, பொன்னுக்குப் பதில் கரித்துண்டுகளைக் கண்டு அதிர்ந்து போனான்.

இதை சியாமாவுக்குத் தெரியப்படுத்தினர். உடனே, சியாமாவுக்குத் தன் தாய் மகாலட்சுமியை அவமதித்தது நினைவுக்கு வந்தது. தன் அம்மாவை அழைத்து நடந்தவைகளை நினைவுபடுத்தி, அவள் செய்த தவறைச் சுட்டிக்காட்டி, விரதமிருக்கும் வழிமுறைகளையும் சொல்லிக் கொடுத்தாள். அவ்வாறே கசந்திரிகா வரலட்சுமி விரதமிருந்துவர நாளுக்கு நாள் நல்லவைகள் நடந்தன.

பத்ரச்ரவாவுக்கும் மனதில் தைரிய லட்சுமி குடியேரியதால், தன் ஆதரவாளர்களைத் திரட்டிப் படையெடுத்து வந்து தன் நாட்டை மீட்டான். பெற்றோர் நல்ல நிலையை அடைந்ததைக் கண்ட சியாமா மகிழ்ந்தாள்.

தொடரும்...............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 27, 2015 8:20 pm

வரலக்ஷ்மி விரதம் ! - 28 ஆகஸ்ட் ! JEwpiz1SB2eIKHhKTHDF+large_120632919

2. சித்திரநேமி என்ற தேவகுலப் பெண் நீதிபதியாக இருந்தாள்.

அவள் தேவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு நடுவராக இருந்து தீர்ப்பு வழங்குவாள். ஒருமுறை அவள் பாரபட்சமாக நடந்துகொண்டதால் அன்னை பார்வதி அவளை குஷ்டரோகியாகும்படி சாபம் கொடுத்தாள்.சித்திரநேமி சாபவிமோசனம் கேட்டு பார்வதியில் காலில் விழுந்தாள்.

வரலட்சுமி விரதத்தை கடைபிடித்தால் நோய் நீங்கும் என பார்வதி அருள் செய்தாள். அவள் பூலோகம் வந்து, ஒரு குளக்கரையில் அமர்ந்து வரலட்சுமி பூஜை செய்து சாபம் நீங்கப்பெற்றாள். புண்ணிய நதிகளில் தீர்த்தமாடுவது, வரலட்சுமி விரதம் இருந்ததற்கு ஒப்பானதாகும்.

குறிப்பாக கங்கை, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, காவிரி, தாமிரபரணி ஆகிய புண்ணிய தீர்த்தங்களில் நீராடினால் காலம் முழுவதும் வரலட்சுமி விரதம் இருந்த பலன் கிடைக்கும். நாளை பெண்கள் புண்ணிய நதிகளில் தீர்த்தமாடியும் வரலாம்.மாமனார் மற்றும் மாமியாருக்கு பணிவிடை செய்யும் மருமகள்களுக்கும், வரலட்சுமி விரதம் அனுஷ்டித்த பலன் கிடைக்கும்.

மகத நாட்டில் வசித்த சாருமதி என்ற பெண் தனது கணவன், மாமனார், மாமியார் மற்றும் உறவினர்களை கடவுளின் வடிவமாக கருதி அவர்களுக்கு பணிவிடை செய்ததால் வரலட்சுமி விரதம் இருந்ததின் பலன் முழுவதும் கிடைத்து கணவனுடன் நீண்டநாள் வாழ்ந்தாள்.2. பத்ரசிவன் என்ற மன்னன் சிறந்த விஷ்ணு பக்தன். அவன் மனைவி கரசந்திரிகா. இவர் களது ஒரே மகள் சியாமபாலா.

அவளைத் திருமணம் செய்து கொடுத்தபின் தாய் துயருற்றாள். அவளது கவலையைத் தீர்த்து அவளுக்கு ஒரு ஆண் மகவு பிறக்க அருள் செய்ய எண்ணினாள் மகாலட்சுமி. அதனால் வரலட்சுமி விரதம் பற்றி எடுத்துக்கூற வயதான சுமங்கலி வடிவில் அவளிடம் சென்றாள். ஆனால் வந்திருப்பது லட்சுமிதேவி என்று அறியாத கரசந்திரிகா அவளை அவமானப் படுத்தி அனுப்பி விட்டாள்.

அங்கிருந்து சியாமபாலாவிடம் சென்ற மகாலட்சுமி நடந்தவற்றைக் கூறி, தான் போனால் எல்லா யோகங்களும் அரண்மனையை விட்டுப் போய்விடும் என்று கூறினாள். தன் தாயின் தவறுக்காக வருந்தி மன்னிப்புக் கோரிய சியாமபாலா, வரலட்சுமி விரதத்தைப் பற்றிக் கேட்டறிந்து சிரத்தையுடன் அதைக் கடைப் பிடித்து வரத் தொடங்கினாள்.

அதன் பிறகு அவளுக்குச் சுபிட்சம் பொங்கிய அதே நேரத் தில் அவளது பெற்றோர் அனைத்து செல்வங் களையும் இழந்தனர்.தன் பெற்றோரது வறுமையை அறிந்த சியாமபாலா ஒரு குடம் நிறைய பொற்காசுகளை அவர்களுக்கு அனுப்பி வைத்தாள். அக்குடத் தில் கரசந்திரிகா கை வைத்ததும் பொற்காசுகள் கரியாகி விட்டன.

இதையறிந்த மகள் அந்த ஆண்டு தன் தாயுடன் வரலட்சுமி விரதம் மேற் கொண்டாள். விரதத்தின் மகிமையால் கர சந்திரிகா தன் முந்தையை சுபிட்ச நிலையை எய்தியதோடு ஆண் வாரிசும் பெற்றாள். வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்கள் அஷ்ட போக பாக்கியங்களைப் பெறுவார்கள் என்பதை இவ்வரலாறு எடுத்துரைக்கிறது.

விரத தினத்தன்று லட்சுமி துதி, லட்சுமி வரலாறு போன்றவற்றைச் சொல்லி தங்களை முழுமையாக வழிபாட்டில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அன்று மாலை சுமங்கலிப் பெண்களை வீட்டிற்கு அழைத்து, பூஜை முடிந் ததும் மங்கலப் பொருட்களுடன் தட்சணையும் வைத்துக் கொடுத்து அனுப்ப வேண்டும்.

அனைத்து வளங்களையும் வாரி வழங்கும் வரலட்சுமியை வழிபட்டு நலம் பெறுவோமாக. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

நன்றி : முகனூல் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 27, 2015 8:21 pm

lotus73 wrote:எளிமையாக உரைத்திருக்கிறீர்கள் .... நன்றி நாளை பூஜைக்கு இன்றே ஏற்பாடுகள் துவங்க வேண்டும். நான் அறியாமலேயே மஞ்சள் புது துணி தான் எடுத்து வந்தேன் கலச வழிபாட்டிற்கு ...
மேற்கோள் செய்த பதிவு: 1159223

நன்றி லக்ஷ்மி புன்னகை...............உங்களுக்கு என் அன்பான வரலக்ஷ்மி விரத வாழ்த்துகள் !...... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 27, 2015 9:55 pm

மிகவும் விவரமான தகவல்கள் .அனுஷ்டிக்கும் முறை etc etc .

இந்த வ்ரதம் ஸ்மார்த்தர்கள் வீட்டில் அனுஷ்டிக்க கண்டுள்ளேன் . எங்கள் வீட்டிலும் உண்டு .
சில ஸ்மார்த்தர்கள் ,புக்ககத்தில் வழக்கம் இல்லை என கொண்டாடுவது இல்லை .
ஆனால் வைஷ்ணவர்கள் வீட்டில் இதை கொண்டாடி பார்த்ததே இல்லை .
காரணம் என்னவாக இருக்கும் ? யாருக்காவது தெரியுமா ?
இவ்வளவிற்கும் மகாவிஷ்ணுவின் பத்தினி மகாலட்சுமி ?
விஷயம் தெரிந்து கொள்வதற்காகத்தான் இந்த சந்தேகத்தைக் கேட்கிறேன் .
தெரிந்தவர்கள் கூறலாம் .

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 27, 2015 10:34 pm

T.N.Balasubramanian wrote:மிகவும் விவரமான தகவல்கள் .அனுஷ்டிக்கும் முறை etc etc .

இந்த வ்ரதம் ஸ்மார்த்தர்கள் வீட்டில் அனுஷ்டிக்க கண்டுள்ளேன் . எங்கள் வீட்டிலும் உண்டு .
சில ஸ்மார்த்தர்கள் ,புக்ககத்தில் வழக்கம் இல்லை என கொண்டாடுவது இல்லை .
ஆனால் வைஷ்ணவர்கள் வீட்டில் இதை கொண்டாடி பார்த்ததே இல்லை .
காரணம் என்னவாக இருக்கும் ? யாருக்காவது தெரியுமா ?
இவ்வளவிற்கும் மகாவிஷ்ணுவின் பத்தினி மகாலட்சுமி ?
விஷயம் தெரிந்து கொள்வதற்காகத்தான் இந்த சந்தேகத்தைக் கேட்கிறேன் .
தெரிந்தவர்கள் கூறலாம் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1159233

நிஜம் ஐயா, எங்காகங்களில் வழக்கம் இல்லை............ஆனால் விரும்பியவர்கள் எடுத்துக்கொண்டு செய்து பார்த்திருக்கிறேன்.........எனக்கும் காரணம் தெரியலை....தெரிந்தவர்கள் சொன்னால் கேட்டுக்கொள்வேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Aug 28, 2015 4:55 am

நல்ல பகிர்வு க்ரிஷ்ணாம்மா . நன்றி .

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 28, 2015 12:07 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:மிகவும் விவரமான தகவல்கள் .அனுஷ்டிக்கும் முறை etc etc .

இந்த வ்ரதம் ஸ்மார்த்தர்கள் வீட்டில் அனுஷ்டிக்க கண்டுள்ளேன் . எங்கள் வீட்டிலும் உண்டு .
சில ஸ்மார்த்தர்கள் ,புக்ககத்தில் வழக்கம் இல்லை என கொண்டாடுவது இல்லை .
ஆனால் வைஷ்ணவர்கள் வீட்டில் இதை கொண்டாடி பார்த்ததே இல்லை .
காரணம் என்னவாக இருக்கும் ? யாருக்காவது தெரியுமா ?
இவ்வளவிற்கும் மகாவிஷ்ணுவின் பத்தினி மகாலட்சுமி ?
விஷயம் தெரிந்து கொள்வதற்காகத்தான் இந்த சந்தேகத்தைக் கேட்கிறேன் .
தெரிந்தவர்கள் கூறலாம் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1159233

நிஜம் ஐயா, எங்காகங்களில் வழக்கம் இல்லை............ஆனால் விரும்பியவர்கள் எடுத்துக்கொண்டு செய்து பார்த்திருக்கிறேன்.........எனக்கும் காரணம் தெரியலை....தெரிந்தவர்கள் சொன்னால் கேட்டுக்கொள்வேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1159241

ரெண்டு மூணு பேரை விசாரித்து விஷயம் அறியலாம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக