புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆக.,16 ஆடிப்பூரம் ! Poll_c10ஆக.,16 ஆடிப்பூரம் ! Poll_m10ஆக.,16 ஆடிப்பூரம் ! Poll_c10 
165 Posts - 76%
heezulia
ஆக.,16 ஆடிப்பூரம் ! Poll_c10ஆக.,16 ஆடிப்பூரம் ! Poll_m10ஆக.,16 ஆடிப்பூரம் ! Poll_c10 
27 Posts - 12%
mohamed nizamudeen
ஆக.,16 ஆடிப்பூரம் ! Poll_c10ஆக.,16 ஆடிப்பூரம் ! Poll_m10ஆக.,16 ஆடிப்பூரம் ! Poll_c10 
9 Posts - 4%
prajai
ஆக.,16 ஆடிப்பூரம் ! Poll_c10ஆக.,16 ஆடிப்பூரம் ! Poll_m10ஆக.,16 ஆடிப்பூரம் ! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஆக.,16 ஆடிப்பூரம் ! Poll_c10ஆக.,16 ஆடிப்பூரம் ! Poll_m10ஆக.,16 ஆடிப்பூரம் ! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஆக.,16 ஆடிப்பூரம் ! Poll_c10ஆக.,16 ஆடிப்பூரம் ! Poll_m10ஆக.,16 ஆடிப்பூரம் ! Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஆக.,16 ஆடிப்பூரம் ! Poll_c10ஆக.,16 ஆடிப்பூரம் ! Poll_m10ஆக.,16 ஆடிப்பூரம் ! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஆக.,16 ஆடிப்பூரம் ! Poll_c10ஆக.,16 ஆடிப்பூரம் ! Poll_m10ஆக.,16 ஆடிப்பூரம் ! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
ஆக.,16 ஆடிப்பூரம் ! Poll_c10ஆக.,16 ஆடிப்பூரம் ! Poll_m10ஆக.,16 ஆடிப்பூரம் ! Poll_c10 
1 Post - 0%
Guna.D
ஆக.,16 ஆடிப்பூரம் ! Poll_c10ஆக.,16 ஆடிப்பூரம் ! Poll_m10ஆக.,16 ஆடிப்பூரம் ! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆக.,16 ஆடிப்பூரம் !


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 16, 2015 1:39 am

ஆக.,16 ஆடிப்பூரம் !

இவ்வுலகில் எவ்வளவோ பேர் பிறக்கின்றனர்; இறக்கின்றனர். ஆனால், மனதில் நிற்பவர்கள் சொற்பமே! அத்தகையோரில் ஆண்டாளும் ஒருவள். அன்றும், இன்றும், என்றும் நம் மனதில் நிலைத்திருப்பவள்.

ஆக.,16 ஆடிப்பூரம் ! VkQam3EjRf2C2c8tW8fS+andal-ranga-mannar-4

அவளின், மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் என்ற பாடலை பாட ஆரம்பித்தால், காதுகளில் தேன் பாயும். மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத என பாடினால், எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் நமக்கு நடந்த திருமணக்காட்சி இன்பமாய் ஊற்றெடுக்கும். கன்னியருக்கோ நாளை நடக்கப் போகும் திருமணக் காட்சி, கண் முன் விரியும்.

பக்தியால், பாடலால் மனித இதயங்களை கொள்ளை கொண்ட, அந்த இதயக்கனிக்கு இன்று பிறந்த நாள். ஆடி மாதம் பூர நட்சத்திரத்தில் அவதரித்தாள் ஆண்டாள். அவள் இதயத்தில் கண்ணன் என்னும் மன்னனைத் தவிர, வேறு யாருமே ஏன்... வேறு ஏதுமே இல்லை. அவனே தன் உலகம் என வாழ்ந்து வந்தாள்.

சிலர் தான், பிறக்கும் போதே தெளிந்த சிந்தையுடன் பிறக்கின்றனர். ராமாயணத்தில் ராமன் பிறப்பு பற்றி வால்மீகி எழுதும்போது, ராமனை பெருமைப்படுத்தி சொல்லவில்லை. ஆனால், பரதன் பிறப்பை குறிப்பிடும் போது, 'தெளிந்த மனதைக் கொண்டவனாய் அவன் அவதரித்தான்...' என்று பெருமைப்படுத்துகிறார்.

ஆக.,16 ஆடிப்பூரம் ! VoI3wbuTYGgIUZ0QgwDg+E_1439532345

அவனது மனதை மாற்ற யாராலும் முடியவில்லை.ராமன் காட்டுக்குப் போய் விட்டான்; அப்போது பரதன், கோசலையிடம்,'அம்மா... அண்ணன் காட்டுக்குப் போனதற்கு கூனி செய்த சதியோ, கைகேயியின் வரமோ, தந்தையின் சொல்லுக்கு ராமன் கட்டுப்பட வேண்டிய நிர்பந்தமோ காரணம் அல்ல; நான் செய்த பாவமே காரணம். நான் கைகேயியின் வயிற்றில் பிறந்ததால் தானே, எனக்காக ஆட்சிப் பொறுப்பை அவள் கேட்டாள்... அதனால் தானே அண்ணன் காட்டுக்கு அனுப்பப்பட்டார்...' என்று தன் மீதே பழியைப் போட்டுக் கொள்கிறான்.

இதுபோல் தெளிந்த சிந்தனை உடையவள் ஆண்டாள்.

ஸ்ரீவில்லிபுத்தூரை கண்ணன் வளர்ந்த ஆயர்பாடியாகவும், இவ்வூர் பெண்களை கோபியராகவும், இங்குள்ள கோவிலை, கண்ணனின் வளர்ப்புத் தந்தை நந்தகோபரின் மாளிகையாகவும், அந்தக் கோவிலில் அருளும் வடபத்ரசாயியை, கண்ணனாகவும் மனதிற்குள் கற்பனை செய்து, அவனே கதி என இருந்தாள்.

கண்ணனை அடைவதைத் தவிர, வேறு எந்த சிந்தையும் தன்னிடம் இல்லை என்று வைராக்கியமாக வாழ்ந்து, கடைசியில், அந்தப் பெருமாளுடனே ஜோதியில் கலந்தாள். இத்தகைய வைராக்கியம் தான் பக்திக்கு தேவை. வைராக்கியம் இருந்தால் தான் இறைவனை அடைய முடியும்.

திரேதாயுகத்தில், ஜனக மகாராஜா மிதிலையில் கலப்பையால் உழுத போது, ஸ்ரீதேவியின் அம்சமான சீதை கிடைத்தாள். கலியுகத்தில், பெரியாழ்வார் நந்தவனத்தை சீர்படுத்தும் போது, துளசி மண்ணின் கீழே கோதை ஆண்டாள் கிடைத்தாள். 'கோதை' என்றால், நல்வாக்கு அருள்பவள் என்று பொருள்.

நமக்கெல்லாம் நல்வாக்கான திருப்பாவை அருளியவள் ஆண்டாள். வாழ்வுக்கு தேவையான அனைத்துக் கருத்துகளையும், 30 பாடல்களில் அடக்கியவள். அவளது பிறந்த நாளில் இங்கிருந்தபடியே அவளை நினைப்போம். இறைவனைச் சரணடைவதே இறுதியானது என்பதை அறிவித்த அவளது திருவடிக்கு, வணக்கம் சொல்வோம்.

நன்றி தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Mon Aug 17, 2015 1:09 am

நல்ல பதிவு ... இப்போ தான் பார்த்தேன் ..

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 17, 2015 1:12 am

நன்றி ஷோபனா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 17, 2015 9:44 am

பூமி பிராட்டியின் அவதாரமாக ஸ்ரீ வில்லிபுத்தூரில் உள்ள வடபத்ரசாயி பெருமாளுக்கு புஷ்பக் கைங்கரியம் செய்து கொண்டிருந்த பெரியாழ்வாரின் தோட்டத்தில், திருஆடிப்பூர நாளில் துளசிச் செடியின் கீழ், சின்னஞ்சிறு பெண் குழந்தையாய் ஆண்டாள் தோன்றினாள். நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாய் பெரியாழ்வாரிடம் கண்ணன் கதைகளைக் கேட்டும், பக்த பிரபாவத்தில் மூழ்கியும் ஆண்டாள் வளர்ந்தாள். பேதைப் பருவப் பெண்ணான ஆண்டாள், ஸ்ரீ வில்லிபுத்தூரை பிருந்தாவனமாக நினைக்கத் துவங்கினாள்.

துவாபர யுகத்தில் வடமதுரையில் வாழ்ந்து லீலைகள் புரிந்த கண்ணனை, கலியுகத்தில் தென்மதுரைக்கு அருகில் வாழ்ந்த ஆண்டாள் தன் மனதில் வரித்தாள். தன்னைச் சிறிதுசிறிதாக, ஆய்ச்சியர் குலப் பெண்ணாகவே உணரத் துவங்கினாள். நடை, உடை, பாவனை எல்லாம் கண்ணனின் அணுக்கமான ஆயர் குலப்பெண்ணாகவே மாறியது. இதனாலேயே ஆண்டாள் தனது கேசத்தைக் கொண்டையாக முடிந்திருப்பாள். இன்றும் திருக்கோயில்களில் நாம் அதைக் காண முடியும்.

கண்ணனை மணவாளனாய் வரித்ததால், பெரியாழ்வார் தொடுத்த பூமாலையைத் தான் அணிந்து அழகு பார்த்து, சூடிக் கொடுத்த நாச்சியார் என்றும் புகழ் பெற்றாள். பெரியாழ்வார் அபச்சாரம் எனக் கருதி, வேறு மாலை தொடுத்து பெருமாளுக்கு அளித்தபோது, ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையே தனக்கு விருப்பம் என்று பெருமான் தெரிவித்தார். ஆண்டாள் பூமாலை அணிந்ததோடு நில்லாமல், பக்தியால் பாமாலையும் சூட்டினாள்.

பாமாலையின் பெருமை

ஹிரண்யாக்ஷன் என்னும் அசுரன், சமுத்திரத்துக்குள் மறைத்து வைத்த பூமி பிராட்டியை வெளியே கொண்டு வர பெருமான் வராக அவதாரம் எடுத்தது போலவும், யது குலத்தைப் பெருமை கொள்ளச் செய்ய பெருமான் கண்ணனாக அவதரித்ததைப் போலவும், சம்சாரம் எனும் சாகரத்தில் மூழ்கியுள்ள நம்மைக் கைதூக்கிவிட ஆண்டாள் திருப்பாவையும், நாச்சியார் திருமொழியையும் அருளிச் செய்தாள்.

30 பாசுரங்களைக் கொண்ட திருப்பாவை மார்கழி மாதத்தில் பிரபலமாகப் பாடப்படுகிறது. கோதையின் உபநிடதம் என்றும் பெயர் பெற்றது.

கோதை தமிழ் ஐயைந்தும் ஐந்தும்

அறியாத மானிடரை

வையம் சுமப்பதும் வம்பு

என்று சொல்லக்கூடிய அளவுக்கு திருப்பாவையின் சிறப்பு, வைணவ உலகில் முக்கியத்துவம் வாய்ந்தது.

ஆறாம் திருமொழியான வாரணமாயிரம், என்று தொடங்கும் பதிகத்தில், மாயவன் தன்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கண்ட கனவைத் தோழிக்கு உரைக்கிறாள். இன்றளவும் பல திருமணங்களில் இப்பாசுரங்கள் சீர்பாடல் என்ற நிகழ்ச்சியாக நிகழ்த்தப்படுகிறது.

வாரணம் ஆயிரம் சூழவ லம்செய்து

நாரன் நம்பி நடக்கின்றான் என்றெதிர்

பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்

தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழி நான்

வீதிகள் முழுக்க தோரணங்கள் கட்டப்பட்டு விழாக் கோலம் பூண்டுள்ளது. ஆணழகனான நாரண நம்பி ஆயிரம் யானைகள் புடைசூழ கம்பீரமாக நகர் வலம் வருகிறான் என்று ஒவ்வொரு காட்சியாக விவரிக்கிறாள். ஒவ்வொரு பாசுரத்திலும் திருமண நிகழ்ச்சிகளை விவரித்துப் பின் அத்தனையும் கனவு என்று கூறுகிறாள்.

ஆயனுக்காகத் தான் கண்ட கனாவினை

வேயர் புகழ் வில்லி புத்தூர்க் கோன் கோதை சொல்

தூய தமிழ் மாலை ஈரைந்தும் வல்லவர்

வாயும் நன்மக்களைப் பெற்று மகிழ்வரே

என்று இந்தப் பத்துப் பாசுரங்களைப் படித்துணர்ந்து மனம் ஒன்றிப்போய் நிற்பவர்கள் நற்குணம் அமைந்த நன்மக்களைப் பெறுவார்கள் என்று சொல்லப்படுகிறது.

ஆண்டாளுக்கு அண்ணன் ஆனவர்

பிற்காலத்தில் அவதரித்த வைணவப் பெருந்தகையான இராமானுஜர் திருப்பாவையின் பெருமையினை அனுபவித்தார். ஒன்பதாம் திருமொழியில், திருமாலிருஞ்சோலை எம்பெருமானை வழிபட்டு,

நாறு நறும் பொழில்மா லிருஞ்சோலை நம்பிக்கு நான்

நூறு தடாவில் வெண்ணெய் வாய் நேர்ந்து பராவி வைத்தேன்

நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்

ஏறு திருவுடையான் இன்று வந்திவை கொள்ளுங்கொலோ?

என்று நாரணன் நம்பியை ஆண்டாள் ஆவலுடன் எதிர்பார்ப்பதாக அமைந்துள்ளது.

ஆண்டாள் சொல்லிச் சென்றதை வைபவமாக்க வேண்டும் என்று ஒரு எண்ணம் இராமானுஜர் மனதில், தோன்றியது. அதைச் செயலிலும் நிகழ்த்தினார். ஒரு பெண்ணின் எண்ணத்தை நிறைவேற்றி வைப்பது சகோதரனே அன்றி, வேறு யாராக இருக்க முடியும்? எனவே, ஸ்ரீ ராமானுஜர் ஆண்டாளுக்கு அண்ணனானார்.

நன்றி தி ஹிந்து




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 17, 2015 9:48 am

//ஆண்டாள் சொல்லிச் சென்றதை வைபவமாக்க வேண்டும் என்று ஒரு எண்ணம் இராமானுஜர் மனதில், தோன்றியது. அதைச் செயலிலும் நிகழ்த்தினார். ஒரு பெண்ணின் எண்ணத்தை நிறைவேற்றி வைப்பது சகோதரனே அன்றி, வேறு யாராக இருக்க முடியும்? எனவே, ஸ்ரீ ராமானுஜர் ஆண்டாளுக்கு அண்ணனானார்.//

ஆண்டாள் ஆசைப்பட்டதை நிறைவேற்றிய ஸ்ரீ ராமானுஜர், அது தொடரவும் வழி செய்திருக்கிறார்........ஆமாம், இன்றும் இந்த கைங்கர்யம் நடக்கிறது...100 கங்காளம் 'அக்கார அடிசல்' நைவேத்தியம் நடக்கிறது இன்றும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Aug 18, 2015 2:16 am

ரொம்ப நல்ல பதிவு க்ரிஷ்ணாம்மா .. நன்றி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 19, 2015 6:14 pm

shobana sahas wrote:ரொம்ப நல்ல பதிவு க்ரிஷ்ணாம்மா .. நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1157951

நன்றி ஷோபனா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Aug 20, 2015 1:05 am

krishnaamma wrote:
shobana sahas wrote:ரொம்ப நல்ல பதிவு க்ரிஷ்ணாம்மா .. நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1157951

நன்றி ஷோபனா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1158099
எனக்கு ஆண்டாள் ன்ன ரொம்ப பிடிக்கும் அம்மா . இந்த பதிவை படித்த போது ஸ்ரீரங்கம் கோவிலில் ஆண்டாள் சன்னதிக்கும்(அலங்காரம் அருமையாக பண்ணி இருப்பார்கள் ) , தாயார் சன்னதிக்கும்(மஞ்சள் பிரசாதம் ) போகும் ஞாபகம் வருகிறது .... அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 20, 2015 1:18 am

shobana sahas wrote:
krishnaamma wrote:
shobana sahas wrote:ரொம்ப நல்ல பதிவு க்ரிஷ்ணாம்மா .. நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1157951

நன்றி ஷோபனா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1158099
எனக்கு ஆண்டாள் ன்ன ரொம்ப பிடிக்கும் அம்மா . இந்த பதிவை படித்த போது ஸ்ரீரங்கம் கோவிலில் ஆண்டாள் சன்னதிக்கும்(அலங்காரம் அருமையாக பண்ணி இருப்பார்கள் ) , தாயார் சன்னதிக்கும்(மஞ்சள் பிரசாதம் ) போகும் ஞாபகம் வருகிறது .... அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை
மேற்கோள் செய்த பதிவு: 1158155

எனக்கும் ஆண்டாள் என்றால் உயிர், ஆர்த்தி பூரம் என்றதும் எனக்கு ரொம்ப சந்தோஷமாய் இருந்தது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Aug 20, 2015 1:19 am

krishnaamma wrote:
shobana sahas wrote:
krishnaamma wrote:
shobana sahas wrote:ரொம்ப நல்ல பதிவு க்ரிஷ்ணாம்மா .. நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1157951

நன்றி ஷோபனா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1158099
எனக்கு ஆண்டாள் ன்ன ரொம்ப பிடிக்கும் அம்மா . இந்த பதிவை படித்த போது ஸ்ரீரங்கம் கோவிலில் ஆண்டாள் சன்னதிக்கும்(அலங்காரம் அருமையாக பண்ணி இருப்பார்கள் ) , தாயார் சன்னதிக்கும்(மஞ்சள் பிரசாதம் ) போகும் ஞாபகம் வருகிறது .... அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை
மேற்கோள் செய்த பதிவு: 1158155

எனக்கும் ஆண்டாள் என்றால் உயிர், ஆர்த்தி பூரம் என்றதும் எனக்கு ரொம்ப சந்தோஷமாய் இருந்தது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1158166
ஓஓஹோ அப்படியா .... கிருஷ்ணா என்ன நட்சத்திரம் அம்மா ?

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக