ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 8:28 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு ஏற்பட்ட அனுபவம் --(எந்தன் 11111பதிவு)

+2
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
6 posters

Go down

எனக்கு ஏற்பட்ட அனுபவம் --(எந்தன்  11111பதிவு) Empty எனக்கு ஏற்பட்ட அனுபவம் --(எந்தன் 11111பதிவு)

Post by T.N.Balasubramanian Sat Aug 22, 2015 3:18 pm

எனக்கு ஏற்பட்ட அனுபவம் --(எந்தன் 11111 பதிவு )

ஜனவரி 20தேதி 1984. .

​காலை 630 மணி அளவில் , மும்பை vt ஸ்டேஷனில் ,பிளாட்பாரம் 1இல் எக்கச்சக்க  கூட்டம் .
பெங்களூர் போகும் உதயான் எக்ஸ்பிரஸ் இன்னும் பிளாட்பார்மிற்கே வரவில்லை. ​
நல்ல பனிமூட்டம் ​.​
​இது போதாது என்று மக்கள் குடித்து விட்ட சிகரெட் /பீடி புகை . புகைமண்டலம் மேலும் வலுபெற்றது .
அந்த காலத்து ஷோலே சினிமா படம் பார்த்து இருப்பீர்கள்.
சஞ்சீவ்குமார் , அமிதாப் ,தர்மேந்திரா ,ஹேமாமாலினி நடித்தது .
அதில் ,  டாக்கூர் என அழைக்கப்பட்ட, சஞ்சீவ்குமார் எப்போதும் தன்  உடலை  ​சுற்றி ஷால் பொத்திக்கொண்டு இருப்பாரே ,நினைவு இருக்கிறதா ?
அது மாதிரி உடை அலங்காரத்துடன் ஒருவர் .ஷால் உடல் பூராவும் சுற்றி இருக்க , இடது கையில் ,ஒரு vip சூட்கேசுடன் வந்து உயர்வகுப்பு பெட்டிகள் வந்து நிற்கின்ற இடத்தில்  நின்று கொண்டு இருந்தார். சரியாக வாரப்படாத சிகை . தூங்கி எழுந்தவுடன் தோன்றும் எண்ணெய் படிந்த முகம் .சரியாக தூங்காததின் அசதி முகத்தில் தெரிகிறது .
கூட்டம் மேலும் மேலும் கூட ,இவர் இடது கையால் ஷாலினுள் உள்ள வலது கையை பிடித்துக் கொண்டு இருந்தார்.
கால்களுக்கு நடுவே VIP சூட்கேஸ்
அப்போது ,அவர் பக்கத்தில் பின்பக்கத்தில் இருந்து வந்த  இருவர் நின்று கொண்டு ,இவரையே முறைத்து பார்த்துக் கொண்டு இருந்தனர் .அவர்கள் கையில் போலீஸ்காரர்கள் வைத்து இருக்கும் தடி இருந்தது .
ஷால் போர்த்திய அவரை , அணுகி ஹிந்தியில் உரையாட ஆரம்பித்தனர் .
தமிழில் நம் உறவுகளுக்கு .
--சாப், பெட்டியில் என்ன ? { கேட்டவர்கள் anti narcotic dept சேர்ந்தவர்கள் , என்று பின்னர் அறியவந்தது }
---கேட்கப்பட்ட ஆள் ,வேறு யாருமில்லை நாந்தான் .
-------------------------------------------------------------------------------------
சிறிது பின்னோக்கி செல்வோம் .
(பின்னோக்கி சென்றதால் வந்த பின் விளைவுகள் , பின்னுகிறேன் இப்போது .)
டிசம்பர் 25தேதி --கிறிஸ்துமஸ்  விடுமுறை --ஆபீசில் லீவு --ஆபீசில் உள்ளவர் யாவரும் சேர்ந்து 2 பெரிய பஸ்ஸில்  50 km தூரத்தில் உள்ள ஒரு பிக்னிக் இடத்திற்கு வந்து இருந்தோம் . வனபோஜன் எனும் மரங்கள் அடர்ந்த நடு காட்டில் , சமையல் ,விளையாட்டு என . பல விதமான பொழுது போக்குகள் . .
ஒரு பக்கம் சிறு குழந்தைகள் ரெண்டு பெற்றோர்கள் தலைமையில் விளையாடி கொண்டு இருந்தனர் .
சில பெண்மணிகள் பேசிக்கொண்டே , மும்முரமாக knitting இல் ஈடுபட்டு இருந்தனர் .
பெண்மணிகள்  ,சில ஆண்கள் breakfast /lunch தயார் செய்து கொண்டு இருந்தனர்..
சில ஆண்கள் தம்மடித்துக்கொண்டு சீட்டு ஆடிக் கொண்டு இருந்தனர் .

இன்னும் சில ஆண்கள் வீர தீர விளையாட்டுகள் விளையாடிக்கொண்டு இருந்தனர் ..
அதில் ஒரு விளையாட்டு Reverse Running என்கிற பின்னோக்கி ஓடும் விளையாட்டு .
ஓடிய பத்து பேரில் நானும் ஒருவன் மெதுவாக ஓட ஆரம்பித்து , வேகம் பிடித்து ,
வேகமாக பின்னேறும் போது ,நிலை தடுமாறி ,கீழே விழுந்து , எசகு பிசகாக கையை கீழே வைக்க ,
அம்மா என்று நான் அலறி , பூமியில்  பிறமுதுகிட்டு விழுந்தேன் . அலறல் கேட்டு என்னை சுற்றி 10 பேர் இல்லை ஒன்பது பேர் . சொல்லிட்டு விழக்கூடாதா ? காப்பாத்தி இருப்போமில்லே என்று ஜோக்கடித்தனர் .  பத்தாவதாக வந்தார் ,நடுவர் . புதுமுறையாக TNB தார்ணா செய்கிறார், என்று ஜோக் அடித்தார் .கை கொடுத்து எழுப்பி , கர்சீப்பால் கையை கட்டி , ஐஸ் கட்டிகளை வைத்துக் கட்டினார் ..என்ன கட்டி என்ன பண்ணறது . கையிலே fracture . 8 வாரம் கட்டு  
இப்போது அழகாக கிடைக்கிறதே ,foam packed forearm sling எல்லாம் அப்போதெல்லாம்கிடையாது . .கையிலே கட்டு .கழுத்திலே பட்டி . மடிக்கப்பட்ட கை வரை தொங்கும் . அதில் ஒடிந்த கை   ஊஞ்சல் ஆடும் ..
இந்த கோலத்துடன் தான் எந்தன் (பேஷன் பெரெட்) .fashion parade .  
குஜராத் மாநிலத்திலிருந்து , மகாராஷ்டிரா வழியாக கர்நாடகா பயணம் .--
இப்போ மும்பை  VT ஸ்டேஷனுக்கு ,போகலாம் வாங்க . எதுக்கா ?அனுபவத்தை தொடரத்தான் !
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------    
 
​அவர்கள் (போதை மருந்து தடுப்பு பிரிவு )சோகம்சாப் ,பெடிகே அந்தர் க்யா ஹை ?) --பெட்டியுனுள் என்ன உள்ளது ?​
நான் : (கமால் ஹை ? பெடிகே அந்தர் க்யா ஹோகா ? சோளிக்கே பீச்சே க்யா ஹை ,ஐஸா சவால் பூச்தே ஹோ ? பெட்டியுனுள் என்னங்க இருக்கும் . உங்க கேள்விய பார்த்த ​சோளிக்கு ..........மாதிரி இருக்கே
அவர்கள் : தமாஷ் பண்ணாதீங்க , பெட்டிக்கு உள்ளே என்ன இருக்கு ? பெட்டியே திறங்க !
நான் : (சிறிது சுதாரித்துக் கொண்டு , ) சரி , நீங்க யாரு ? எதுக்கு என் பெட்டியெ சோதனை பண்ணனும் ?
அவர்கள் : நாங்கள் போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் . போதைப் பொருள் கடத்துவதாக எங்களுக்கு தகவல்  வந்துள்ளது . அதான் பரிசோதிக்கிறோம் .
நான் :  மத்திய அரசின் பொது நிறுவனத்தில் , நான் ஒரு பொறுப்பான பதவியில் இருக்கிறேன் .ஐடியை பார்க்கிறீர்களா ? நான் இது மாதிரி போதை பொருள் கடத்தலில், ஈடுபடுவேன் என நினைக்கிறீர்களா ?
அவர்கள் : உங்கள் ஐடி வேண்டாம் ,சர் . எங்கள் கடமையை தான் செய்கிறோம் .  
நான் : நல்லது , என் பெட்டியை சோதிக்கும் முன் , உங்களுடைய ஐடியை நான் பார்க்கலாமா ?
அவர்கள் : (என் முகத்தை உற்றுப் பார்த்து , பிறகு தங்களது பையில் இருந்து ,அவர்களது ஐடியை காண்பித்துப் )பாருங்கள் அய்யா !
நான் அவர்களுடைய ஐடியை பார்த்தேன் . அட்டையுடன் உருவ ஒற்றுமை , அவர்கள் பதவி , etc பார்த்தேன் .போலி ஆட்கள் இல்லை என்று நிச்சயபடுத்திக் கொண்டு , ரொம்ப நல்லது நீங்கள் உங்கள் கடமையை செய்யுங்கள் .
ஆனால் எனக்கு நீங்கள் ஒரு உதவி செய்ய வேண்டும் . பெட்டியை என்னால் திறக்க முடியாது .
சாவி எந்தன் பேண்ட் பாக்கெட்டில் உள்ளது .நீங்களே எடுத்து நீங்களே பரிசோதிக்கலாம் என்று , எனது மேல் போர்த்தி இருந்த ஷாலை லாவகமாக நீக்கி , வலக்கையில் எடுத்துப் போட்டேன் .
அவர்கள் இருவரும் ஒரு முறை என்னைப் பார்த்து , சாப் , கை கை என்ன ஆச்சு ? ஏனிந்த கட்டு என்றனர்.?
நான் ,எலும்பு முறிவு , எந்தன் பையில் இருந்து சாவியை எடுத்து , பெட்டியை நன்றாக பரிசோதித்து விட்டு, திரும்பவும் பெட்டியை மூடி சாவியை பேண்டில் போட்டு விடுங்கள் என்றேன் . அப்பிடியே ஷாலை மேலே போர்த்திவிடுங்கள் . உங்கள் கடமையை ஆரம்பியுங்கள் .ஓரமாக போகலாம் .
பயணிகளுக்கு இடைஞ்சல் வேண்டாம் ,என்றேன் .
என்ன நினைத்தார்களோ அவர்கள் தெரியவில்லை .
சாப் , உங்களை கஷ்டப்படுத்தி விட்டோம் , தவறாக நினைக்கவேண்டாம் .மேலும் பரிசோதிக்க விரும்பவில்லை .என்று கூறி , ஷாலை போர்த்தி சரி செய்தனர் . மேலும் , வண்டி வந்ததும் உங்களை சௌகரியமாக ஏற்றி விடுகிறோம் என்றனர்.
நன்றி , நானே வண்டியில் ஏறிக்கொள்வேன் , கஷ்டமில்லை . நீங்கள் உங்கள் கடமை செய்து  இருந்தாலும் நான் சந்தோஷமே பட்டு இருப்பேன் என்றேன் .
வண்டிக்காக நான் காத்திருக்க , அவர்கள் அவர்களுடைய கடமையை செய்ய மேல் நோக்கி நடந்தனர் .

நான் ,இங்கே பதிவிடுவதின் முக்கிய காரணம் :
நமக்கு என சில உரிமைகள் இருக்கின்றன . சட்டங்கள் இருக்கின்றன .
சட்டத்தை அமல் படுத்த நினைக்கும் அரசாங்க அதிகாரிகள் ,நம்முடைய உடமைகளை பரிசோதிக்க நினைத்தால் ,அவர்கள் அது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தானா , அவர்களுக்கு சோதிக்கும் உரிமை இருக்கின்றதா என்பதை நாமும்  அறிந்து ,அதற்கு தக்க மாதிரி ஒத்துழைக்க வேண்டும் என்பதற்காக பதிவிடுகிறேன் .

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Sat Aug 22, 2015 3:20 pm; edited 1 time in total (Reason for editing : correction)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எனக்கு ஏற்பட்ட அனுபவம் --(எந்தன்  11111பதிவு) Empty Re: எனக்கு ஏற்பட்ட அனுபவம் --(எந்தன் 11111பதிவு)

Post by ஜாஹீதாபானு Sat Aug 22, 2015 5:11 pm

நல்ல விழிப்புணர்வு தகவல் ஐயா....

ரொம்ப சுவராசியமா எழுதி இருக்கீங்க... கைக்கட்டு எவ்ளோ நாளில் சரியாச்சு ?


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

எனக்கு ஏற்பட்ட அனுபவம் --(எந்தன்  11111பதிவு) Empty Re: எனக்கு ஏற்பட்ட அனுபவம் --(எந்தன் 11111பதிவு)

Post by T.N.Balasubramanian Sat Aug 22, 2015 5:44 pm

எப்போதும் எலும்பு முறிவுகளில் ,
மாவுகட்டு (POP ) 8 வாரம் என்றால் ,
பழைய நிலைமை வருவதற்கு 16 வாரம் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எனக்கு ஏற்பட்ட அனுபவம் --(எந்தன்  11111பதிவு) Empty Re: எனக்கு ஏற்பட்ட அனுபவம் --(எந்தன் 11111பதிவு)

Post by யினியவன் Sat Aug 22, 2015 7:13 pm

போதை தரும் வார்த்தைகளின் வித்தகர் ன்னு அவங்களுக்கு அப்பவே தெரிஞ்சிருக்கு - ஆனாலும் அவர்களும் விட்டவர்கள் தான் அய்யாவை சோதிக்காமல் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

எனக்கு ஏற்பட்ட அனுபவம் --(எந்தன்  11111பதிவு) Empty Re: எனக்கு ஏற்பட்ட அனுபவம் --(எந்தன் 11111பதிவு)

Post by T.N.Balasubramanian Sat Aug 22, 2015 8:35 pm

யினியவன் wrote:போதை தரும் வார்த்தைகளின் வித்தகர் ன்னு அவங்களுக்கு அப்பவே தெரிஞ்சிருக்கு - ஆனாலும் அவர்களும் விட்டவர்கள் தான் அய்யாவை சோதிக்காமல் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1158542

நன்றி யினி ! அன்பு மலர்  அன்பு மலர்

அப்போதைக்கு விட்டு விட்டார்கள் என்று கூறுகிறீர்கள் யினியவன்.
எப்போதைக்கும் , என்னை விட்டு விடுவார்கள் ,சோதித்த பிறகும் .
இப்போதைக்கும் எப் போதைக்கும் அடிமையல்ல  . புன்னகை புன்னகை புன்னகை
ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Sun Aug 23, 2015 7:16 am; edited 3 times in total (Reason for editing : addnl.words.)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எனக்கு ஏற்பட்ட அனுபவம் --(எந்தன்  11111பதிவு) Empty Re: எனக்கு ஏற்பட்ட அனுபவம் --(எந்தன் 11111பதிவு)

Post by ayyasamy ram Sun Aug 23, 2015 1:32 pm

புகழ் போதைக்கும் அடிமையல்ல...!!
-
எனக்கு ஏற்பட்ட அனுபவம் --(எந்தன்  11111பதிவு) 103459460 எனக்கு ஏற்பட்ட அனுபவம் --(எந்தன்  11111பதிவு) 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84184
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எனக்கு ஏற்பட்ட அனுபவம் --(எந்தன்  11111பதிவு) Empty Re: எனக்கு ஏற்பட்ட அனுபவம் --(எந்தன் 11111பதிவு)

Post by விமந்தனி Thu Nov 12, 2015 12:01 am

அதிர்ச்சி  அய்யாவுக்கே சோதனையா...?
.
.
.
.
.
.
.
அனுபவத்தின் opening நிஜமாகவே ஷோலே வை நியாபகப்படுத்துகிறது.புன்னகை  மாஸ்...! சூப்பருங்க


எனக்கு ஏற்பட்ட அனுபவம் --(எந்தன்  11111பதிவு) EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎனக்கு ஏற்பட்ட அனுபவம் --(எந்தன்  11111பதிவு) L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312எனக்கு ஏற்பட்ட அனுபவம் --(எந்தன்  11111பதிவு) EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

எனக்கு ஏற்பட்ட அனுபவம் --(எந்தன்  11111பதிவு) Empty Re: எனக்கு ஏற்பட்ட அனுபவம் --(எந்தன் 11111பதிவு)

Post by ராஜா Thu Nov 12, 2015 12:44 pm

எனக்கு ஏற்பட்ட அனுபவம் --(எந்தன்  11111பதிவு) 3838410834 சுவராஸ்யமாக இருக்கிறது ஐயா ....


நான் ,இங்கே பதிவிடுவதின் முக்கிய காரணம் :
நமக்கு என சில உரிமைகள் இருக்கின்றன . சட்டங்கள் இருக்கின்றன .
சட்டத்தை அமல் படுத்த நினைக்கும் அரசாங்க அதிகாரிகள் ,நம்முடைய உடமைகளை பரிசோதிக்க நினைத்தால் ,அவர்கள் அது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தானா , அவர்களுக்கு சோதிக்கும் உரிமை இருக்கின்றதா என்பதை நாமும் அறிந்து ,அதற்கு தக்க மாதிரி ஒத்துழைக்க வேண்டும் என்பதற்காக பதிவிடுகிறேன் .

ரமணியன்
உண்மை உண்மை , நாங்களும் கடைபிடிக்கிறோம் ஐயா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

எனக்கு ஏற்பட்ட அனுபவம் --(எந்தன்  11111பதிவு) Empty Re: எனக்கு ஏற்பட்ட அனுபவம் --(எந்தன் 11111பதிவு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum