ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

நிகழ்நிலை நிர்வாகிகள்

கந்தர் அலங்காரம் 20 , 22 ,23

4 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கந்தர் அலங்காரம் 20 , 22 ,23 - Page 2 Empty கந்தர் அலங்காரம் 20 , 22 ,23

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா Sat 22 Aug 2015 - 2:57

First topic message reminder :



பாடல் 20 ... கோழிக்கொடியன்

கோழிக் கொடிய னடிபணி யாமற் குவலத்தே
வாழக் கருது மதியிலி காளுங்கள் வல்வினைநோய்
ஊழிற் பெருவலி யுண்ணவொட்டாது உங்களத்தமெல்லாம்
ஆழப் புதைத்துவைத் தால்வருமோ நும் மடிப்பிறகே.

பாடல் 22 ... மொய் தார் அணி

மொய்தா ரணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால்
வைதா ரையுமங்கு வாழவைப் போன்வெய்ய வாரணம்போற்
கைதா னிருப துடையான் தலைப்பத்துங் கத்தரிக்க
எய்தான் மருகன் உமையாள் பயந்த இலஞ்சியமே.

பாடல் 23 ... தெய்வத் திருமலை

தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழுஞ் செழுஞ்சுடரே
வைவைத்த வேற்படை வானவ னேமற வேனுனைநான்
ஐவர்க் கிடம்பெறக் காலிரண் டோட்டி யதிலிரண்டு
கைவைத்த வீடு குலையுமுன்னே வந்து காத்தருளே.

ஏன் வேதங்கள் முருகனை கொழிக்கொடியோன் என்கின்றன . கோழியை அவர் ஏன் கொடியாக வைத்திருக்கவேண்டும் ?

உடனே புராணக்கதையை சொல்லிவிடுவார்கள் . சூரன் என்ற கொடிய அரக்கனை முருகன் அழித்தார் . உடனே அவன் என்னை உங்கள் கொடியாக வைத்துக்கொள்ளுங்கள் என்று கெஞ்சியதால் அவனை சேவலாக மாற்றி கொடியாக வைத்துக்கொண்டார்

புராணங்கள் எதிலும் உண்மையில்லாமல் இல்லை ; ஆனால் கோளாறு எதில் வருகிறது என்றால் புராணங்கள் அனைத்தும் அப்படியே உண்மை என நம்பிக்கொள்வதுதான்

சேவல் என்ன செய்யும் ? .சேவல் கூவி உலகத்தை தூக்கத்தில் இருந்து விழிப்படைய செய்யும் . அதுபோல மனித ஆத்மாக்களை விழிப்படைய செய்து உலக மாயைகள் ; பந்தங்கள் ; இருளிலிருந்து விடுவிக்கும் ஞான சற்குரு முருகனே . இன்று உலகில் எத்தனையோ வகையான குருமார்கள் இருந்தாலும் அவர்கள் அனைவரும் முருகனின் வியாபகங்களே. ஆகவேதான் அவர் தனது பணியான ஞான உபதேசம் என்பதை கோழிக்கொடியாக வைத்திருக்கிறார் .

அதுசரி . ஆனால் இந்த துஷ்ட்டன் கொடுமைக்காரன் அரக்கன் சூரன் எதற்காக சேவலானான் ?

அவனா ஞானம் அறிவிக்கிறான் ? இந்த மகான்கள் ஞானிகள் அனைவரும் அரக்கர்களா ? அது ஒருவகையில் உண்மைதான் . யார் இன்றைக்கு ஆன்மீக நாட்டமுள்ளவர்கலாக மாறி ஞானம் பயிலத்தொடங்குகிரார்கள் ?

மிகுந்த பாவத்தில் விழுந்து உலக மாயைகளை அனுபவித்து கெட்டழிந்து துன்பத்திற்கு மேல் துன்பத்தை வினையாக அறுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்களோ ; அவர்களே கோவில் குளம் என்று அலைந்து கொஞ்சம் கொஞ்சமாக ஞானமடைகிரார்கள் .

இன்னும் கொஞ்சம் பாவம் செய்துகொள்ளலாம் ; பாவம் முற்றவில்லை என்பதுவரை மனிதன் பாவம்தான் செய்வானே ஒழிய அவன் இறைவனை நோக்கி திரும்புவதில்லை . பாவங்கள் முற்றி அடிஉதை மட்டுமே அனுபவிக்கும் பிறவி எடுத்த பிறகுதான் கொடுமையே கொடுமையே என்று மனிதன் கோவிலுக்கு போவான்

அப்படி கொஞ்சம் ஆன்மீகம் பயின்றவுடனேயே ; என்னமோ பெரிய புண்ணிய ஆத்மா போலும் சாட்சாத் தெய்வமே பிறவியெடுத்து வந்துவிட்டதுபோலும் தன்னை கருதிக்கொள்ளவும் தொடங்குவான் .

ஒரு ஆத்மா எவ்வளவு பாவங்களை உணர்ந்து கடந்து தெளிந்து விட்டதோ அவ்வளவு அந்த ஆத்மா ஞானமுள்ளதாகவும் இறைவனின் ஆசி உள்ளதாகவும் இருப்பதால் அந்த நபர் குருத்துவமும் உள்ளவராக இருப்பார் .

பெரிய மகான்கள் கூட இன்னும் எவ்வளவு பாவத்தை கடராமல் செத்துப்போனார்கள் ; அடுத்த பிறவியில் என்னென்ன பாடுபடப்போகிறார்கள் என்பது தெரியாது . அவர் என்ன பிறவி எடுத்தார் என்பதே தெரியாமல் செத்துப்போன அவரை ஒரு கூட்டம் ஆகா ஓகோ என துதி பாடிக்கொண்டு திரியும்

யார் முற்றிய பாவியோ அவன் திருந்தி அடைந்த அனுபவத்தை ஞானமாக உபதேசிப்பான் ; ஆனாலும் அவன் முழுமையடையும் வரை கோழி மட்டுமே

இந்த கோழிகளை அவரவர் தரம் தகுதியுடையோறுக்கு பயன்படுத்துபவர் முருகனே . அவரே ஞான சற்குரு

அருணகிரியார் என்ன சொல்கிறார் ; சாமிகளா நீங்கள் உலக வாழ்வை தாராளமாக நன்கு அனுபவியுங்கள் ஆனால் கொஞ்சம் உங்களுக்கு வரும் உபதேசங்களையும் கற்று தேருகிறவர்களாக இருங்கள் . சற்குருவுக்கும் உபகுருக்களுக்கும் அடிபணியுங்கள் இல்லாவிட்டால் பல பிறவிகளாக நீங்கள் சேர்த்துவைத்துள்ள வலிய வினைகள் யுக முடிவில் வரும் ஊழி காலத்து பேரழிவு சாப்பிட போதுமானதல்ல . நீங்கள் பணம் பணம் என்று பணத்தை சேர்த்து வைக்கிறீர்களே . அது நீங்கள் சாகும்போது உங்கள் கூடவே அடுத்த பிறவிக்கு வருவதில்லையே . ஆனால் உங்கள் பாவமூட்டைகள் உங்கள் ஆத்மாவோடு கூட வந்துகொண்டுதான் உள்ளன . ஆகவே ஞான சற்குருவை சார்ந்து ஞானமடைய முயலுங்கள் .

உடனே நாங்கள் அவ்வளவு புண்ணியம் செய்யவில்லையே ; பல வகையான தவறுக்குள் அல்லவா வாழ்ந்துகொண்டுள்ளோம் ; நாங்கள் எப்படி அந்த முருகனை சார்ந்துகொள்வது ?

அருணகிரியார் சொல்கிறார் ; அந்த முருகன் எப்படிப்பட்டவன் என்றால் குரத்தியை தேடி வருகிறவன் குற்றம் குறை இல்லாத மனிதர்களே இருக்கமுடியாது . ஆனால் அந்த குறைகளை உணர்ந்து அவற்றை கடர வேண்டும் என்ற பக்குவத்தை அடையாமல் முழுமை அடைய முடியாது குற்றம் குறைகளை கடந்து முழுமையடைந்தவர்கள் மட்டுமே தேவராக மாறி பரலோக பிரஜைகளாக அங்கு செல்ல முடியும் பரலோகத்தில் குடும்பமோ பிள்ளை பெற்றுக்கொள்வதோ கிடையாது . பூமியிலிருந்து தேரிய ஆத்மாக்கள் சென்றால்தான் உண்டு

ஆகவேதான் தன்னை உணரத்தொடங்கிய அளவு மொய்தார் அணிகுழல் வள்ளி என மெய்யடியார்களை அழைக்கிறார் அருணையார் . முத்தமிழால் ஒருவரை நாம் வைதால் அம்மொழி வையப்பட்டவரின் பாவங்களை குத்தி கிளறி புரிய வைத்து அவர்கள் திருந்தி வாழ செய்துவிடுமாம் . பெரிய யானை போன்றவனும் கைகள் இருபதும் உடைய ராவணனின் தலைகள் பத்தும் கத்தரித்து விழும்படியாக அம்பெய்த ராமர் வேறு யாரோ அல்ல முருகனே என்கிறார் அருணையார் . சமரச வேதாந்திகள் மட்டுமே ஆதியிலிருந்து ஒரு உண்மையை உணர்ந்தும் சொல்லியும் வருகிறார்கள் . முருகன் என்பவன் மாலோனின் மருகன் அதாவது தேவர் என்ற நிலையை மருக்கி பூமியில் மனிதனாக வரும் பெருமாளின் அவதாரங்களே முருகன் . அவன் பூமியில் மனிதனாக வருவதால் முதல் மனிதனான சிவனுக்கு மகன் அதாவது சிவபாலன் . அருணையார் சொல்கிறார் முருகன் என்பவன் மாலோனின் மருகன் மன்றாடி மைந்தன் .அதாவது ராமர் ; கிரிஷ்ணர் ; இயேசு ஆகியோரே முருகன்

ஆரம்ப நாட்களில் சைவர்களும் வைணவர்களும் சண்டையிட்டு ரத்தக்களறி உண்டாக்கிய காலம் உண்டு . அப்போது வந்த சமரச வேதாந்திகளே இரண்டையும் இணைத்த முருகன் என்ற வழிபாட்டை முன்வைத்தார்கள் . முருகனை ஹரிஹரா ஹரிஹரா என்று கோசம் போட்டு ஊர்சுற்றி வருவார்கள் . இந்த ஹரிஹரா தான் காலப்போக்கில் அரோஹரா அரோஹரா என்று ஆகிவிட்டது ஐயப்பனும் சமரச வேதத்தின் வெளிப்பாடே ஆகும் .

அருணகிரியாரின் திருப்புகழ் பாடல்கள் ஒவ்வொன்றும் முருகா என ஆரம்பித்து பெருமாளே பெருமாளே என்றுதான் முடியும் .

தெய்வத்திருமலை திருச்செங்கோடு என்கிறார் அருணையார் . அவர் ஊரூருக்கு ஏவப்பட்ட ஸ்தலங்களுக்கேல்லாம் ஷேத்ராடனம் செய்து பாடியவர் . அவர் திருச்செங்கோடு வரும்போது இரண்டு ஆதிஷேசனின் மத்தியில் இம்மலை அவருக்கு தெரிந்ததாம் . ஆதிஷேசனின் இரண்டு வியாபகங்களே செங்கோடன் கார்க்கோடன் . செங்கோடன் முருகன் என்றால் கார்க்கோடன் கணபதி .

இம்மலையின் அடிவாரத்தில் கார்க்கோடனும் உச்சியில் செங்கோடனும் அருள்பாளிப்பார்கள் . இவர்களை தரிசித்தே முருகன் சந்நிதிக்குள் செல்லமுடியும் . வைவைத்த வேற்படை யுடைய வானவன் முருகன் . அதேனென்றால் தேவலோகத்தில் ஞானம் என்ற கூர்மையான வேலால் அசுரர்களை அடக்கிய தேவசேனாதிபதி முருகனே . அதுவேறு யாருமல்ல சாட்சாத் ஆதிசேஷனே . வை என்றால் விஷம் வைத்த கூர்மையான வேற்படை வானவன் . இவரே ஞானகாரகன் . சகல யோக சூத்திரங்களுக்கும் அதிபதி

மேலும் சொல்கிறார் .ஐவருக்கு அதாவது பஞ்சபாண்டவருக்கு இடம் கேட்டு தூதுவன் என்ற பட்டயத்தை கழுத்தில் மாட்டிக்கொண்டு கிரிஷ்ணன் காலால் அஸ்தினாபுரத்தில் நடந்து சென்றவனல்லவா அவனும் நீதான் என்பதை அறிவேன் என்பது சிலேடை அர்த்தம்

இன்னொரு அர்த்தம் வேண்டுதல் . மனித ஆத்மா பஞ்சேந்திரியம் உடையது . ஐந்து உணர்வுகள் கொண்டது . அது பூமியில் இயங்கவேண்டுமானால் கள் இரண்டும் கை இரண்டும் கொண்ட மனித உடல் அழியாது இருக்கும்வரை இயங்கும் . உடம்பார் அழியின் உயிர் அகல்வாரே என்ற முதுமொழி உண்டு . உடம்பு அழிந்தால் உயிர் அகன்றுவிடும் ; பின்னர் இந்த ஆத்மா இயங்க முடியாமல் ஒரு நித்திரை நிலைக்கு சென்றுவிடும் . மீண்டும் ஒரு கர்ப்பத்தில் இறைவன் நுழைவிக்கும் வரை சிறையில் இருந்து மீண்டும் அடுத்த பிறவியில் ஒரு மனித உடம்பை பெற்று இயங்கமுடியும்

ஆக மரணமில்லா பெருவாழ்வு பெறும்வரை ஒரு ஆத்மா பூமியில் மீண்டும் மீண்டும் பிறந்தே ஆகவேண்டும் . அப்படிப்பட்ட மனித உடம்பு பஞ்ச உறுப்புகள் கொண்டுள்ளது . அது அழியாமல் நான் இப்பிறவியிலேயே முக்தி அடையும் வரை காத்தருள்க என்பது அருணகிரியாரின் விண்ணப்பம்

நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணனாய

ஆதிசேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ ஆதிசேஷாய

நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணியாய

சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சிவாய

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 604
இணைந்தது : 29/12/2011

http://kirubarp.blogspot.com

Back to top Go down


கந்தர் அலங்காரம் 20 , 22 ,23 - Page 2 Empty Re: கந்தர் அலங்காரம் 20 , 22 ,23

Post by krishnaamma Sat 5 Sep 2015 - 12:51

கிருபானந்தன் பழனிவேலுச்சா wrote:பார்த்துவிட்டேன் கிரிஷ்ணமா ஆனால் அதில் 1௦௦ பாடல்களும் இல்லை ஆனாலும் சொற்களை பிரித்து அவர் உணர்வு பொங்க உச்சரித்து பாடியுள்ளார்

உண்மையில் சீர்காழியும் தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம்தான்
மேற்கோள் செய்த பதிவு: 1160830

25 x 4 என்று இருக்கும் பாருங்கள் கிருபா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum