புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
கொல்லும் கொசுக்கள்... வெல்லும் வழிகள் : இன்று உலக கொசுக்கள் தினம்! I_vote_lcapகொல்லும் கொசுக்கள்... வெல்லும் வழிகள் : இன்று உலக கொசுக்கள் தினம்! I_voting_barகொல்லும் கொசுக்கள்... வெல்லும் வழிகள் : இன்று உலக கொசுக்கள் தினம்! I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கொல்லும் கொசுக்கள்... வெல்லும் வழிகள் : இன்று உலக கொசுக்கள் தினம்! I_vote_lcapகொல்லும் கொசுக்கள்... வெல்லும் வழிகள் : இன்று உலக கொசுக்கள் தினம்! I_voting_barகொல்லும் கொசுக்கள்... வெல்லும் வழிகள் : இன்று உலக கொசுக்கள் தினம்! I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
கொல்லும் கொசுக்கள்... வெல்லும் வழிகள் : இன்று உலக கொசுக்கள் தினம்! I_vote_lcapகொல்லும் கொசுக்கள்... வெல்லும் வழிகள் : இன்று உலக கொசுக்கள் தினம்! I_voting_barகொல்லும் கொசுக்கள்... வெல்லும் வழிகள் : இன்று உலக கொசுக்கள் தினம்! I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
கொல்லும் கொசுக்கள்... வெல்லும் வழிகள் : இன்று உலக கொசுக்கள் தினம்! I_vote_lcapகொல்லும் கொசுக்கள்... வெல்லும் வழிகள் : இன்று உலக கொசுக்கள் தினம்! I_voting_barகொல்லும் கொசுக்கள்... வெல்லும் வழிகள் : இன்று உலக கொசுக்கள் தினம்! I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கொல்லும் கொசுக்கள்... வெல்லும் வழிகள் : இன்று உலக கொசுக்கள் தினம்! I_vote_lcapகொல்லும் கொசுக்கள்... வெல்லும் வழிகள் : இன்று உலக கொசுக்கள் தினம்! I_voting_barகொல்லும் கொசுக்கள்... வெல்லும் வழிகள் : இன்று உலக கொசுக்கள் தினம்! I_vote_rcap 
21 Posts - 4%
prajai
கொல்லும் கொசுக்கள்... வெல்லும் வழிகள் : இன்று உலக கொசுக்கள் தினம்! I_vote_lcapகொல்லும் கொசுக்கள்... வெல்லும் வழிகள் : இன்று உலக கொசுக்கள் தினம்! I_voting_barகொல்லும் கொசுக்கள்... வெல்லும் வழிகள் : இன்று உலக கொசுக்கள் தினம்! I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கொல்லும் கொசுக்கள்... வெல்லும் வழிகள் : இன்று உலக கொசுக்கள் தினம்! I_vote_lcapகொல்லும் கொசுக்கள்... வெல்லும் வழிகள் : இன்று உலக கொசுக்கள் தினம்! I_voting_barகொல்லும் கொசுக்கள்... வெல்லும் வழிகள் : இன்று உலக கொசுக்கள் தினம்! I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
கொல்லும் கொசுக்கள்... வெல்லும் வழிகள் : இன்று உலக கொசுக்கள் தினம்! I_vote_lcapகொல்லும் கொசுக்கள்... வெல்லும் வழிகள் : இன்று உலக கொசுக்கள் தினம்! I_voting_barகொல்லும் கொசுக்கள்... வெல்லும் வழிகள் : இன்று உலக கொசுக்கள் தினம்! I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
கொல்லும் கொசுக்கள்... வெல்லும் வழிகள் : இன்று உலக கொசுக்கள் தினம்! I_vote_lcapகொல்லும் கொசுக்கள்... வெல்லும் வழிகள் : இன்று உலக கொசுக்கள் தினம்! I_voting_barகொல்லும் கொசுக்கள்... வெல்லும் வழிகள் : இன்று உலக கொசுக்கள் தினம்! I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கொல்லும் கொசுக்கள்... வெல்லும் வழிகள் : இன்று உலக கொசுக்கள் தினம்! I_vote_lcapகொல்லும் கொசுக்கள்... வெல்லும் வழிகள் : இன்று உலக கொசுக்கள் தினம்! I_voting_barகொல்லும் கொசுக்கள்... வெல்லும் வழிகள் : இன்று உலக கொசுக்கள் தினம்! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
கொல்லும் கொசுக்கள்... வெல்லும் வழிகள் : இன்று உலக கொசுக்கள் தினம்! I_vote_lcapகொல்லும் கொசுக்கள்... வெல்லும் வழிகள் : இன்று உலக கொசுக்கள் தினம்! I_voting_barகொல்லும் கொசுக்கள்... வெல்லும் வழிகள் : இன்று உலக கொசுக்கள் தினம்! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொல்லும் கொசுக்கள்... வெல்லும் வழிகள் : இன்று உலக கொசுக்கள் தினம்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 20, 2015 8:21 pm

கொல்லும் கொசுக்கள்... வெல்லும் வழிகள் : இன்று உலக கொசுக்கள் தினம்! BE9MLed1TAGJjKjitmfD+Tamil_News_large_1322298

மனிதர்களைக் கொல்லும் உயிரினப் பட்டியலில் கொசுக்களுக்கு சிறப்பிடம் தரலாம். கொசுக்கள் மூலம் மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா, மூளைக்காய்ச்சல், யானைக்கால் நோய்களால் உயிரிழப்புகள் நிறைய ஏற்பட்டுள்ளன.

தட்ப வெப்ப சூழ்நிலை உள்ள ஆசிய நாடுகள் குறிப்பாக தென்கிழக்காசிய நாடுகளில் கொசுக்கள் பரவலாக உள்ளன. உலக சுகாதார நிறுவனம் இதற்காக பிராந்திய அளவில், தென்கிழக்காசியத்திற்கான அலுவலகத்தை டில்லியில் அமைத்துள்ளது.இந்தியா முழுவதிலும் உள்ள கொசுக்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக, தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் மத்திய பூச்சியியல் ஆராய்ச்சி நிறுவனம் 1985 மே 1ம் தேதி அமைக்கப்பட்டது.

எந்தெந்த பகுதிகளில் கொசுக்களால் காய்ச்சல், உயிரிழப்பு ஏற்படுகிறதோ அந்த பகுதிகளுக்கு விஞ்ஞானிகள் நேரடியாக சென்று ஆய்வுகள் செய்து, இழப்புகள், கொசுக்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை அரசுக்கு தெரிவிக்கின்றோம்.

பீகாரில் முஜபூர் நகர், மேற்குவங்கத்தில் ஜல்பகிரி, குஜ்பீகார், தக்ஷின் தினஜ்பூர், டார்ஜிலிங், உத்தரபிரதேசத்தில் கோரக்பூர், கேரளத்தில் குட்டநாடு, ஆந்திராவில் கர்னூல், தமிழகத்தில் கடலூரில் கொசுக்கள் குறித்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது. கொசுக்களின் மாதிரிகள், சேகரித்த ரத்த மாதிரிகள், அவற்றின் மூலக்கூறுகளை ஆய்வு செய்து கட்டுப்படுத்தும் நடைமுறைகள் அரசுக்கு அனுப்பப்படுகிறது.

எத்தனை கொசுக்கள்: மதுரையில் உள்ள மத்திய பூச்சியியல் ஆராய்ச்சி நிறுவன அருங்காட்சியகத்தில் 240 வகையான கொசுக்களின் மாதிரிகள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. அவ்வப்போது புதிய கொசுக்கள் கண்டறியப்பட்டு, அவை குறித்த தகவல்களும் பதிவு செய்யப்படுகின்றன. அவற்றின் இனப்பெருக்கம் குறித்த ஆராய்ச்சிகளும் நடந்துவருகின்றன.இறப்புப் பட்டியலில் மலேரியாவால் ஏற்பட்ட உயிரிழப்பு தான் அதிகம்.

1920 மற்றும் 1930களில் இந்தியாவில் பல லட்சம் மக்களை தாக்கியது. இக்காய்ச்சலுக்கு பத்து லட்சம் மக்கள் இறந்தனர். தேசிய மலேரியா ஒழிப்பு திட்டம் 1958 ல் துவங்கப்பட்டது. தொடர் கண்காணிப்பு, மருத்துவ சிகிச்சையின் மூலம் மலேரியா கட்டுப்படுத்தபட்டது.அதன்பின் அவ்வப்போது மலேரியா காய்ச்சல் வந்தாலும், இறப்புகளின்றி சிகிச்சை அளிக்கப்பட்டது.

மலேரியா கட்டுப்படுத்தப்பட்டாலும் இன்னமும் அதுகுறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடக்கின்றன.நன்னீர், தேங்கியுள்ள மழைநீரில் இனப்பெருக்கம் செய்யும். சிலநேரங்களில் ஆற்றின் கரையோரங்களிலும் இனப்பெருக்கம் செய்யும். அனாபிலிஸ் வகை கொசுக்கள் 58 இருந்தாலும் ஆறு வகைகள் மட்டுமே மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

பைலேரியா: மருந்து கண்டுபிடிக்கவில்லை. கடற்கரை பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் குயிலெக்ஸ் கொசுக்களால், 'பைலேரியா' எனப்படும் யானைக்கால் நோய் உருவாகும். இக்கொசுக்கள் இரவில் கடிக்கும். இவை சாக்கடை, வயல்வெளி சகதிகளில் இனப்பெருக்கம் செய்கின்றன.

டெங்கு: 'ஏடிஸ் எஜிப்டே' வகை கொசுக்களால் டெங்கு வைரஸ் மூலம் காய்ச்சல் பரவுகிறது. மழைக்காலத்தில் ரோட்டில் கிடக்கும் தேங்காய் சிரட்டை, இளநீர் மட்டை, பிளாஸ்டிக் டம்ளர், பாட்டில், ரப்பர் கழிவுகளில் தண்ணீர் தேங்கினால், கொசுக்கள் உற்பத்தியாகிறது. வீடுகளில் மூடப்படாத பாத்திரங்கள், திறந்தநிலை மேல்நிலைத் தொட்டிகளின் மூலம் வீடுகளைச் சுற்றி கொசுக்கள் உற்பத்தியாகும். பகலில் கடிக்கும்.

சிக்குன் குனியா: 'ஏடிஸ் எஜிப்டே, ஏடிஸ் ஆல்போபிக்டஸ்' கொசுக்களால், 'ப்ளேவி' வைரஸ் மூலம் சிக்குன்குனியா காய்ச்சல் பரவுகிறது. இதுவும் நன்னீர், மழைநீரில் உற்பத்தியாகும்.

ஜப்பானிய மூளைக்காய்ச்சல்: குயிலெக்ஸ் வகையைச் சேர்ந்த 18 வகை கொசுக்களால் பரவுகிறது. இவை பன்றி மற்றும் எக்ரெட் பறவைகளில் காணப்படும் வைரஸ். இக்கொசுக்கள் விலங்குகளை தான் கடிக்கும். அதிக இனப்பெருக்கத்தால், சிலநேரங்களில் மனிதர்களை கடிக்கும் போது, ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பரவுகிறது.

தமிழகத்தில் உள்ள மையங்கள்: தமிழகத்தில் ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் 1985களில் உயிரிழப்புகள் நிகழ்ந்தன. அதுகுறித்த ஆராய்ச்சிக்காக, மத்திய பூச்சியியல் நிறுவனம் சார்பில் கடலூர் விருத்தாச்சலத்தில் சிறப்பு ஆய்வு மையம் அமைக்கப்பட்டது. 1988 முதல் தற்போது வரையான ஆய்வுகள் அங்கு சேகரிக்கப்பட்டு வருகின்றன.

விழுப்புரம், திருக்கோயிலூரில் யானைக்கால் தடுப்பு ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கொசுக்களை ஆராய்ச்சி செய்வதோடு, அதன் டி.என்.ஏ., மாதிரியை சேகரிக்கும் வகையில், கோவையில் ஒரு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

அழிப்பது எப்படி?: கொசுக்களை கட்டுப்படுத்துவது ஒன்றே மிகச்சிறந்த வழி. அவற்றின் இனப்பெருக்கத்தை குறைப்பதற்கு வீடுகளில் தண்ணீர் தேங்கக்கூடாது. ஜன்னல்களில் கொசுவலை, படுக்கையில் கொசுவலை அவசியம். சுற்றுப்புறம் தூய்மையாக இருக்க வேண்டும். உற்பத்தித் தளங்களை கட்டுப்படுத்தினாலே, கொசுக்களால் பரவும் நோய்களை எளிதில் தடுக்கலாம், என்றார்.

-விஞ்ஞானி பி.கே. தியாகி,
இயக்குனர், மத்திய பூச்சியியல் ஆராய்ச்சி நிறுவனம், மதுரை.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 20, 2015 8:22 pm

கொல்லும் கொசுக்கள்... வெல்லும் வழிகள் : இன்று உலக கொசுக்கள் தினம்! UENG1O4SQP21R5wXefxE+Tamil_News_large_1049989

உருவத்தில் சிறியதாக இருக்கும் கொசு, மனிதர்களுக்கு பல நோய்களை பரப்புவதில் முதல்வனாக இருக்கிறது. கொசுக்களில் 3000 வகை இருந்தாலும், மலேரியாவை உருவாக்கும் "அனாபெலஸ்', டெங்குவை உருவாக்கும் "ஏடிஸ்', யானைக்கால் நோய், மூளைக்காய்ச்சலை உருவாக்கும் "குளக்ஸ்' ஆகிய மூன்றும் தான் கொடியவை.

இதன் பாதிப்புகள் மற்றும் தடுக்கும் முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஆக.,20ம் தேதி உலக கொசு ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இங்கிலாந்து டாக்டர் ரொனால்டு ரோஸ் என்பவர், 1897ம் ஆண்டு, "அனாபெலஸ்' என்ற பெண் கொசுக்கள் தான், மனிதர்களுக்கு மலேரியாவை பரப்புகிறது என்ற உண்மையை கண்டுபிடித்தார். "பிளாஸ்மோடியம்' என்ற ஒட்டுண்ணி "அனோபிலிஸ்' எனும் பெண் கொசுவின் வயிற்றில் தொற்றிக் கொள்கிறது.

இந்த கொசு ஒருவரை கடிப்பதன் மூலம், மலேரியா பரவுகிறது. இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவக் கூடியது. இது உடலில் கல்லீரலை தாக்குகிறது. பின் ரத்த சிவப்பு அணுக்களை தாக்கி அழிக்கிறது.
மரணத்தை விளைவிக்கும் அளவு பயங்கரமானது. இவரது கண்டுபிடிப்பை அங்கீகரிக்கும் விதமாக, ஆக. 20ம் தேதி இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இவரது கண்டுபிடிப்பிற்காக, 1902ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

ரொனால்டு ரோஸ், 1857ல் பிரிட்டிஷ் இந்தியாவில் பிறந்தார். இவரது தந்தை ஒரு ஆங்கிலேய ராணுவ அதிகாரி. பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை லண்டனில் நிறைவு செய்தார். படிப்பை முடித்து இந்தியா திரும்பிய பின், மலேரியாவை பற்றிய ஆராய்ச்சியில் 1882 முதல் 1899 வரை ஈடுபட்டார்.

பிரிட்டன் சார்பில் நோபல் பரிசு வென்ற முதல் நபர் என்ற பெருமை பெற்றார்.கொசுக்கள் நீர்நிலைகளில் தான் முட்டையிட்டு உருவாகின்றன. எனவே வீடுகளின் அருகில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

மலேரியாவை பற்றி...:


* ஆண்டுதோறும் 7,81,000 பேர் பலியாகின்றனர். இதில் 90 சதவீதம் ஆப்ரிக்க நாடுகளில் ஏற்படுகிறது.

* காய்ச்சல், தலைவலி, வாந்தி எடுத்தல் போன்றவை மலேரியா கொசு கடித்த 10 முதல் 15 நாட்களுக்குள் ஏற்பட்டால், மலேரியா நோய் தாக்கியுள்ளது என தெரிந்து கொள்ளலாம். ஆரம்ப கட்டத்தில் சிகிச்சை மேற்கொள்ளவில்லை எனில், நோய் முற்றி உடலுறுப்புகளுக்கான ரத்த ஓட்டம் தடைபட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது.

* இதை முற்றிலுமாக தடுக்க முடியாவிட்டாலும், மலேரியாவின் வீரியத்தை குறைப்பதற்கு சில தடுப்பு மருந்துகள் உள்ளன.

* ஆப்பிரிக்காவில் 30 நாடுகள், ஆசியாவில் 5 நாடுகள் என 35 நாடுகளில் தான் 98 சதவீத மலேரியா உயிரிழப்பு ஏற்படுகிறது.

* உலகில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் நோய்களில் மலேரியா 5வது இடத்தில் உள்ளது. அதே போல, ஆப்ரிக்காவில் எச்.ஐ.வி., / எய்ட்ஸ் நோய்க்கு அடுத்து 2வது இடத்தில் மலேரியா உள்ளது.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 20, 2015 8:23 pm

இரவும் பகலும் மனிதர்களை பாடாய்படுத்தும் கொசுக்களை அழித்தொழிக்கும் வழி மட்டும் இன்னும் தென்படாதது ஏனென்று தெரிய வில்லையே... ஆங்கே தெருக்கோடியில் ஒரு புலம்பல் கேட்கிறது.நாம் சொல்கிறோம். முடியும்... நம்மால் முடியும். ஆமாம் சார்... நாம் ஒவ்வொருவரும் முழு ஈடுபாட்டுடன் முயற்சி செய்தால் அந்த கொசுக்களை அழித்து நோய்களிலிருந்து விடுபட
நிச்சயம் முடியும்.

தொற்று நோய்களைப் பரப்பும் கொசுக்களை அழிக்க பெரிய ரிஸ்க் எல்லாம் தேவையில்லை போதிய விழிப்புணர்வுடன், நமது அன்றாட வழக்கமான வேலைகளில் ஒன்றாக இதையும் சேர்த்துக் கொண்டால் எந்தவிதமான கொசுவும் நம்மை அண்டாது. இந்த இடத்தில், ஒரு நிகழ்வை குறிப்பிட்டுக்காட்டினால் நல்லது என நினைக்கிறேன்.

சில மாதங்களுக்கு முன்பு, ராமநாதபுரம் புறநகர் பகுதியில் மூன்று வயது குழந்தை டெங்கு அறிகுறியுடன் மதுரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நமக்கு தகவல் கிடைக்கவும், நோய் தாக்குதலுக்கு உள்ளான குழந்தையின் வீட்டுக்குச் சென்றோம். அந்த வீட்டினுள், கொசுக்கள் உற்பத்தி செய்யும் காரணிகளை நாலாபுறமும் தேடினோம். வீட்டை சுற்றிலும் ஆய்வு செய்த போது எதுவும் தென்படவில்லை.

கடைசியாக வீட்டின் உள்பகுதியில் ஆய்வு செய்த போது, குளிர்சாதனப்பெட்டியின் அடியில் இருந்த ஒரு தட்டில் நீர் தேங்கியிருந்தது. அதில் கொசுக்களின் முட்டைகளும், லார்வா நிலையிலுள்ள கொசுப்புழுக்களும் இருந்தது. இதில் இருந்து கூடவா கொசு உற்பத்தியாகப் போகிறது என்ற கவனக்குறைவால், இன்று பலர் இந்த விஷயத்தில் விழிப்புணர்வு பெறாமல் பாதிப்புக்குள்ளாவது வேதனையளிக்கிறது.

இதே போல் கிராமப்புறங்களில் உள்ள வீடுகள் தோறும் பயன்பாடில்லாத ஆட்டு உரல்களை கவிழ்த்து வைக்காமல் போட்டிருப்பார்கள். எப்பொழுதோ பெய்த மழைநீர் அதில் தேங்கி கொசுக்களை உற்பத்தியாக்கும். வீட்டில் உள்ளவர்கள் அதை கண்டுகொள்ளாததன் விளைவு, தொடர் காய்ச்சலுக்கு அவர்கள் ஆட்பட நேரிடுகிறது.

பொதுமக்களின் விழிப்புணர்வு

பொது சுகாதாரத்துறையினர் என்னதான் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் பொதுமக்கள் தகுந்த விழிப்புணர்வு பெறாதவரை கொசுக்களை முற்றிலும் ஒழிப்பது கடினமானது.
சுகாதாரத்துறையின் மூலம் புகை மருந்து அடிப்பது, அபேட் (டெமிபாஸ்) மருந்து தெளிப்பது எல்லாம் தற்காலிக தடுப்பு நடவடிக்கைகள் தான். நிரந்தரமான தீர்வு என்பது கொசுக்கள் உற்பத்தியாகும் காரணிகளை வீட்டுக்கு வீடு அடியோடு அழித்துவிடுவது தான்.

வீட்டை சுற்றிலும் பயன்பாடற்ற மழை நீர் தேங்கி நின்றாலோ, கழிவுநீர் கால்வாய் இருந்தாலோ 'ஆயில்பால்' தயாரித்து தேங்கிய நீரின் மேற்பரப்பு, கழிவுநீர் பரப்பில் போட வேண்டும்.
இந்த 'ஆயில்பால்' என்பது, வாகனப் பயன்பாட்டிற்கு பின் கிடைக்கும் கழிவு ஆயிலில், துணியால் தயாரிக்கப்பட்ட மரத்துாள் பந்துகளை ஊறவைத்து பயன்படுத்துவது.

இந்த 'ஆயில்பால்களை' பயன்பாடற்ற நீர் நிலைகள், கழிவுநீரில் மிதக்க விடுவதன் மூலம் அதன் எண்ணெய் படலங்கள் நீர் பரப்பில் பரவி கொசுக்கள் உற்பத்தியை முற்றிலும் அழித்து விடும். சாதாரணமாக நம்மை கடிக்கும் கொசுக்களாக இருந்தாலும் அல்லது தொற்று நோய்களை பரப்பும் எந்த கொசுக்களாக இருந்தாலும் இந்த 'ஆயில்பால்' படலங்கள், கொசு முட்டைகள் மற்றும் அதன் 'லார்வா' நிலையிலுள்ள புழுக்களையும் கூண்டோடு அழித்துவிடும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 20, 2015 8:24 pm



வீட்டை சுற்றிலும் ஈரப்பதம் காணப்பட்டால், பிளீச்சிங் பவுடர் தெளித்து விட வேண்டும். நாம் அன்றாடம் பயன்படுத்தும் பாத்ரூம், டாய்லெட் ஆகியவற்றை நாள்தோறும் கிருமி நாசினி (டெட்டால், பினாயில்) கொண்டு கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பிளாஸ்டிக் டப்பாக்கள், பாத்திரங்களில் நீர் தேங்கியுள்ளதா என கவனித்து, எந்த ஒரு பொருட்களிலும் நீர் தேங்க விடாமல் கவிழ்த்தி விடுவதை தினசரி வழக்கமாக கொள்ள வேண்டும்.

ஆடு மாடுகள் வளர்ப்பவர்கள் தினமும் அதற்கான இடத்தை சுத்தப்படுத்தி, 'பிளீச்சிங் பவுடர்' தெளித்து வரவேண்டும். செல்லப்பிராணிகள், பறவைகளை வீட்டில் வளர்ப்பவர்கள் தினசரி அதற்கான கூடுகளை சுத்தப்படுத்துவதோடு, அதன் கழிவுகளை அகற்றி தண்ணீர் வைக்கும் பாத்திரங்களை, தினமும் கழுவியபின் மீண்டும் பயன்படுத்த வேண்டும்.

வீட்டின் சுற்றுப்புறத்தை அன்றாடம் ஆய்வு செய்து பயன்பாட்டுக்குப் பின் போடப்பட்டுள்ள தண்ணீர் பாட்டில்கள், கூல்டிரிங்ஸ் பாட்டில்கள், பேப்பர் கப்கள், தேங்காய் நார் மற்றும் இளநீர் குடுவைகளை முற்றிலுமாக அப்புறப்படுத்திவிட வேண்டும். வீட்டின் சுற்றுப்புறத்தில்
எந்தவிதமான டயர்களையும் வைத்திருக்க கூடாது.

வீடுகளில் திறந்த நிலை தொட்டிகள் இருந்தால், வாரம் ஒரு முறை தண்ணீரை காலிசெய்து, சுத்தம் செய்து காய வைத்துவிட வேண்டும். மீண்டும் நிரப்பும் போது, அதை தேக்கி வைக்க முற்பட்டால், சிறிதளவு தேங்காய் எண்ணெயை அத்தொட்டியின் நீர்பரப்பில் ஊற்றிவிட வேண்டும். அந்த எண்ணெய் படலங்கள் மூலம் நீர்பரப்பில் கொசுக்கள் உற்பத்தியாவது தடுக்கப்படும்.

மூடியில்லாத கிணறு என்றால், மேற்பரப்பை வலையால் மூடி வைத்திருக்க வேண்டும். வீட்டில் ஸ்பிலிட் 'ஏசி' யிருந்தால் அதில்இருந்து வடியும் நீரை ஒவ்வொரு நாளும் கவனித்து அப்புறப்படுத்தி விட வேண்டும்.கொல்லைப்புறத்தில் வாழை மரங்கள் இருந்தால், அதன் கிளை பிரியும் இடங்களில் பட்டைகளில் நீர் தேங்கியுள்ளதா என கவனித்து அகற்றி விட வேண்டும்.
நம்மால் முடியும்.

இது போன்ற எளிதான நடவடிக்கைகளை, தினமும் கடைபிடித்தால் நமது வீடும் ஒரு 'பிரான்ஸ்' நாடு தான் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை (கொசுக்களே இல்லாத நாடு பிரான்ஸ்).

நோயற்ற ஆரோக்கியமான வாழ்க்கை அமைய நமது பிரதமரின் 'துாய்மை
இந்தியா' திட்டத்தை ஒவ்வொருவரும் தினசரி கடைபிடித்தால் நலம் காணலாம் என்றென்றும்.

வீட்டை சுற்றிலும் தண்ணீர் வேண்டாம்
வேதனை தரும் நோய்கள் வேண்டாம்
தேங்கும் நீர் வீட்டுக்குள் வேண்டாம்
தேகம் நோகும் காய்ச்சல் வேண்டாம்
நலமான வளமான இந்தியாவை
உருவாக்குவோம்!

-எம்.முகம்மது அனீஸ்

சிறப்பு நிலை மேற்பார்வையாளர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம்
உச்சிப்புளி.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Aug 20, 2015 9:11 pm

நல்ல பதிவு க்ரிஷ்ணாம்மா . நன்றி.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 21, 2015 2:49 am

shobana sahas wrote:நல்ல பதிவு க்ரிஷ்ணாம்மா . நன்றி.
மேற்கோள் செய்த பதிவு: 1158332

நன்றி ஷோபனா,......நமக்கு விழிப்புணர்வு தேவை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 21, 2015 8:19 am

கொல்லும் கொசுக்கள்... வெல்லும் வழிகள் : இன்று உலக கொசுக்கள் தினம்! 103459460

கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 17/10/2014

Postகண்ணன் Fri Aug 21, 2015 12:16 pm

கொல்லும் கொசுக்கள்... வெல்லும் வழிகள் : இன்று உலக கொசுக்கள் தினம்! 3838410834

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 22, 2015 1:57 am

நன்றி ராம் அண்ணா புன்னகை ................நன்றி கண்ணன் புன்னகை ................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக