புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையில் தமிழ் மொழி - Page 4 I_vote_lcapஈகரையில் தமிழ் மொழி - Page 4 I_voting_barஈகரையில் தமிழ் மொழி - Page 4 I_vote_rcap 
91 Posts - 61%
heezulia
ஈகரையில் தமிழ் மொழி - Page 4 I_vote_lcapஈகரையில் தமிழ் மொழி - Page 4 I_voting_barஈகரையில் தமிழ் மொழி - Page 4 I_vote_rcap 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
ஈகரையில் தமிழ் மொழி - Page 4 I_vote_lcapஈகரையில் தமிழ் மொழி - Page 4 I_voting_barஈகரையில் தமிழ் மொழி - Page 4 I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஈகரையில் தமிழ் மொழி - Page 4 I_vote_lcapஈகரையில் தமிழ் மொழி - Page 4 I_voting_barஈகரையில் தமிழ் மொழி - Page 4 I_vote_rcap 
7 Posts - 5%
viyasan
ஈகரையில் தமிழ் மொழி - Page 4 I_vote_lcapஈகரையில் தமிழ் மொழி - Page 4 I_voting_barஈகரையில் தமிழ் மொழி - Page 4 I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
ஈகரையில் தமிழ் மொழி - Page 4 I_vote_lcapஈகரையில் தமிழ் மொழி - Page 4 I_voting_barஈகரையில் தமிழ் மொழி - Page 4 I_vote_rcap 
1 Post - 1%
sureshyeskay
ஈகரையில் தமிழ் மொழி - Page 4 I_vote_lcapஈகரையில் தமிழ் மொழி - Page 4 I_voting_barஈகரையில் தமிழ் மொழி - Page 4 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையில் தமிழ் மொழி - Page 4 I_vote_lcapஈகரையில் தமிழ் மொழி - Page 4 I_voting_barஈகரையில் தமிழ் மொழி - Page 4 I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
ஈகரையில் தமிழ் மொழி - Page 4 I_vote_lcapஈகரையில் தமிழ் மொழி - Page 4 I_voting_barஈகரையில் தமிழ் மொழி - Page 4 I_vote_rcap 
235 Posts - 37%
mohamed nizamudeen
ஈகரையில் தமிழ் மொழி - Page 4 I_vote_lcapஈகரையில் தமிழ் மொழி - Page 4 I_voting_barஈகரையில் தமிழ் மொழி - Page 4 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈகரையில் தமிழ் மொழி - Page 4 I_vote_lcapஈகரையில் தமிழ் மொழி - Page 4 I_voting_barஈகரையில் தமிழ் மொழி - Page 4 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஈகரையில் தமிழ் மொழி - Page 4 I_vote_lcapஈகரையில் தமிழ் மொழி - Page 4 I_voting_barஈகரையில் தமிழ் மொழி - Page 4 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
ஈகரையில் தமிழ் மொழி - Page 4 I_vote_lcapஈகரையில் தமிழ் மொழி - Page 4 I_voting_barஈகரையில் தமிழ் மொழி - Page 4 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
ஈகரையில் தமிழ் மொழி - Page 4 I_vote_lcapஈகரையில் தமிழ் மொழி - Page 4 I_voting_barஈகரையில் தமிழ் மொழி - Page 4 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
ஈகரையில் தமிழ் மொழி - Page 4 I_vote_lcapஈகரையில் தமிழ் மொழி - Page 4 I_voting_barஈகரையில் தமிழ் மொழி - Page 4 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஈகரையில் தமிழ் மொழி - Page 4 I_vote_lcapஈகரையில் தமிழ் மொழி - Page 4 I_voting_barஈகரையில் தமிழ் மொழி - Page 4 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
ஈகரையில் தமிழ் மொழி - Page 4 I_vote_lcapஈகரையில் தமிழ் மொழி - Page 4 I_voting_barஈகரையில் தமிழ் மொழி - Page 4 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையில் தமிழ் மொழி


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Nov 13, 2009 5:26 pm

First topic message reminder :

ஈகரை அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
உலகத் தமிழ் மாநாடு புதிதாகச் செம்மொழி மாநாடாக மாற்றி நடத்தப் பட உள்ளது அனைவரும் அறிந்ததே. மொழி கலாசாரத்தின் ஆணி வேர் என்பதனை அனைவரும் அறிவர். மொழி அரசியலாக்கப் படக் கூடாது என்பதில் கருத்து வேறுபாடு எனக்கில்லை, ஆனால் மொழியால் அரசியல் லாபம் தேடுவதும் தவறு என்பதை எடுத்து வைக்கவும் ஆசைப்படுகிறேன். தமிழ் மொழி அழிந்தால் தமிழர்களும் அழிவார்கள். அதே நேரத்தில் உலகத்தில் எங்காவது ஒரு மூலையில் தமிழர்களுக்கு இன்னல் ஏற்படுமானால் எதிர்த்துக் குரல் வராத எந்த மாநாட்டாலும் பயனில்லை என்பதும் உண்மை, அவைகள் எல்லாம் போகட்டும். தெய்வமாகப் போற்றப் படும் தமிழ் மொழி பற்றி ஈகரையில் ஓர் விவாதக் களம் ஆரம்பித்தால் என்ன என்ற வினா என்னை வருத்திக் கொண்டிருக்கிறது, தமிழ் அன்பர்கள் தமிழ் அறிஞர்கள் ஆர்வலர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்தால் மற்றவர்கள் பயனடைவார்கள் என்றே நம்புகிறேன்.
எல்லோருடைய கருத்தையும் அறிய ஆவல் உள்ளவளாக இருக்கிறேன்,
அன்புடன்
நந்திதா


avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Nov 19, 2009 7:53 pm

வணக்கம்
//அவர் வாழ்ந்த காலத்திலேயே புகழேந்திப் புலவர், கம்பர், ஒளவையார், திருவள்ளுவர் முதலானோர் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.//
கம்பர் காலத்தில் ஒட்டக் கூத்தர் புகழேந்தியார் வாழ்ந்ததாகத் தெரிகிறது, அவ்வையார் என்ற பெயரில் பலர் இருந்திருக்கின்றனர் என்கின்றனர் ஆய்வாளர்கள், ஆனால் திருவள்ளுவர் இவர்கட்குக் காலத்தால் முற்பட்டவர்.
அன்புடன்
நந்திதா

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Nov 19, 2009 10:13 pm

அதியமான் ஒருவர் "வஞ்சியர் குலபதி எழினி" எனக் கல்வெட்டொன்றில் கூறப்பட்டுள்ளார்.இதன் மூலம் வஞ்சியை ஆண்ட சேரர் அதியமான் மரபினரே என்பது தெரிய வருகிறது.சேரரும்,அதியரும் முறையே "மழவர் மெய்ம்மறை" என்றும் "மழவர் பெருமகன்" என அழைக்கப்பட்டனர்.இதன்மூலம் மழவர் என்பாரும் சேரர் குடியினர் என்பது விளங்கும்.

சேரர் வில் இலச்சினையைப் பெற்றவர். கொல்லி மழவரும் வில் இலச்சினையைக் கொண்டோர்.அதியமான்களும் வில் இலச்சினையைக் கொண்டோரே.வன்னியர்(பள்ளி) இனத்தவருடைய குலச் சின்னமும் வில் தான்.அதனால்தான் சிலை எழுபதில் வில்லின் சிறப்பு கூறப்படுகிறது.எனவே சேரர்,அதியர் என்பார் வன்னியர் இனத்தவர் எனக்கருதலாம்.



[You must be registered and logged in to see this link.]
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Nov 19, 2009 10:29 pm

வணக்கம்
எனது ஐயம் மூவேந்தர்களின் அரச சின்னங்கள் பற்றியது. விவாதம் திசை திரும்புகிறது என்று நினைக்கிறேன்
அன்புடன்
நந்திதா

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Nov 19, 2009 11:48 pm

1 சேரநாடு

தற்காலத்திய மேலைக் கடற்கரையை (அரபிக்கடல்) ஒட்டி
அமைந்துள்ள கேரள மாநிலமும், சேலம், கோவை மாவட்டங்கள்
அடங்கிய கொங்கு நாடும் சேரப் பேரரசர்களின் ஆட்சிக்கு
உட்பட்டுத் திகழ்ந்த பகுதிகளாகும். அந்நாட்டு ஆறுகளுள்
குறிப்பிடத்தக்க ஆறு பெரியாறு என்பதாகும்.
பெரியாறு கடலோடு கலந்த இடத்தில் வஞ்சி மாநகரம்
இருந்தது. தற்காலத்திய கருவூரும் சேரர்களின் வஞ்சி என்றே
அழைக்கப் பெற்றது. கருவூரே பண்டைய சேரர்களின் தலைநகரம்
என்பதை அண்மைக் கால ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.
நறவு, தொண்டி, முசிறி, வைக்கரை என்பன சேரநாட்டுத்
துறைமுகப் பட்டினங்களாக விளங்கின.

  • உள் நாடுகள்

  • சேரநாட்டை மலை நாடு என்றும் குறிப்பிடுவர். சேரநாடு
    குடநாடு, குட்டநாடு, வேணாடு, கற்காநாடு எனப் பல
    உள்நாடுகளைப் பெற்றிருந்தது. இச்சிறு நாடுகளை, பேரரசனுக்கு
    உட்பட்டு அவன் உறவினர்களே ஆண்டு வந்தனர். குட நாட்டை
    ஆண்டவன் ‘குடக்கோ’ என்றும், குட்ட நாட்டை ஆண்டவன்
    ‘குட்டுவன்’ என்றும் பெயர் பெற்றனர்.


  • சேர மன்னர்கள்
  • மலை நாடான சேரநாட்டினை நெடுங்காலமாகச் சேரமரபினர்
    ஆண்டு வந்தனர். இச்சேர மன்னர்கள் மேலைக் கடற்கரைப்
    பகுதியில் இருந்த கடற்கொள்ளையர்களை வென்று மேலை
    நாடுகளுடன் கடல் வாணிகம் செய்தனர். தேவை ஏற்பட்ட போது
    சோழ, பாண்டிய அரசர்களுடன் போரிட்டனர். சேரர்கள் வில்
    ஆற்றல்மிக்கவர் என்பதால் ‘வில்லவர்’ என்றும், வானளாவிய
    மலை முகடுகளைக் கொண்ட நாட்டினர் என்பதால் ‘வானவர்’
    என்றும் பெயர் பெற்றனர்.
  • இலச்சினை

  • சேரர்தம் கொடியாக வில் உருவம் பொறிக்கப் பெற்ற
    விற்கொடியும், மாலையாகப் பனம்பூ மாலையும் திகழ்ந்தன.
    மொழி

    சேர மன்னர்கள் தாய்மொழியாகிய தமிழைத் தம் உயிர்
    போல் பேணினர்.
  • இலக்கியச் சான்றுகள்

  • சங்கத் தமிழ் நூல்கள் வாயிலாக இருபத்தைந்து சேர
    அரசர்கள் பற்றிய செய்திகளை அறிய முடிகிறது. அவ்வரசர்களின்
    பெயர்களாக நாம் அறிய வருபவை :
    (1) அந்துவஞ்சேரல் இரும்பொறை
    (2) ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
    (3) இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
    (4) இளங்குட்டுவன்
    (5) இளஞ்சேரல் இரும்பொறை
    (6) உதியன் சேரலாதன்
    (7) கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்
    (8) கணைக்கால் இரும்பொறை
    (9) கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல்
    இரும்பொறை
    (10) கருவூர்ச் சாத்தன்
    (11) களé¢காய்க் கண்ணி நார்முடிச் சேரல்
    (12) குட்டுவன் கோதை
    (13) கோக்கோதை மார்பன்
    (14) கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை
    (15) செல்வக் கடுங்கோ வாழியாதன்
    (16) தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
    (17) நம்பி குட்டுவனார்
    (18) பல்யானைச் செல்கெழு குட்டுவன்
    (19) பாலை பாடிய பெருங்கடுங்கோ
    (20) மருதம் பாடிய இளங்கடுங்கோ
    (21) மாந்தரம் பொறையன் கடுங்கோ
    (22) மாரிவெண்கோ
    (23) முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்
    (24) யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
    (25) வஞ்சன்.
    ஆகியனவாம்.




    [You must be registered and logged in to see this link.]
    Tamilzhan
    Tamilzhan
    தலைமை நடத்துனர்

    பதிவுகள் : 8045
    இணைந்தது : 02/03/2009

    PostTamilzhan Thu Nov 19, 2009 11:50 pm

    2 சோழநாடு

    இன்றுள்ள தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம்,
    திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மாவட்டங்கள், கடலூர்
    மாவட்டத்தின் ஒருபகுதி, கரூர் மாவட்டத்தின் ஒருபகுதி,
    பெரம்பலூர் மாவட்டத்தின் ஒருபகுதி ஆகியவை அடங்கிய
    பகுதியே பழைய சோழநாடாகும்.
    சிறப்பு

    காவிரி நதியின் நீர் வளத்தால் சோழநாடு செழுமையடைந்தது.
    பூம்புகார் நகரமும், உறையூரும் சோழர் தலைநகரங்களாக
    விளங்கின. சோழ நாட்டிற்குப் பொன்னி நாடு என்ற பெயரும்
    இருந்தது. காவிரிப்பூம்பட்டினம் (பூம்புகார்) சிறந்த துறைமுகமாக
    விளங்கியது.
    இலச்சினை

    சோழர்க்குப் புலி இலச்சினையும் புலி உருவம் பொறித்த
    கொடியும் உரிமையுடையவையாகத் திகழ்ந்தன.
  • சோழ மன்னர்கள்

  • சோழர் ‘வளவர்’ எனப் பெயர் பெற்றனர். சேரர், பாண்டியர்
    போன்ற அரசர்களோடும் குறுநில மன்னர்களோடும்
    போர்தொடுப்பதும், நட்புக்கரம் நீட்டுவதும் சூழல்களுக்கு ஏற்ப
    அமைந்தன.
    இலக்கியச் சான்றுகள்

    சங்கத் தமிழ் நூல்கள் வாயிலாக இருபத்தியொரு சோழ
    மன்னர்களின் பெயர்கள் பற்றி அறிய முடிகிறது. அவ்வரசர்களின்
    பெயர்களாவன :
    (1) இராய சூயம் வேட்ட பெரு நற்கிள்ளி
    (2) இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி
    (3) உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி
    (4) ஏனாதி திருக்கிள்ளி
    (5) கரிகாற் பெரு வளத்தான்
    (6) குராப் பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்
    (7) குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்
    (8) கோப்பெருஞ்சோழன்
    (9) செங்கணான்
    (10) செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி
    (11) தித்தன்
    (12) துலை புக்க பெரியோன்
    (13) தூங்கெயில் எறிந்தோன்
    (14) நலங்கிள்ளி
    (15) நல்லுருத்திரன்
    (16) நெடுங்கிள்ளி
    (17) நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி
    (18) பேரவைக் கோப்பெருநற்கிள்ளி
    (19) மாவளத்தான்
    (20) முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி
    (21) வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி

    தமிழில் பொருள் காண முடியாத சொற்களில் "சோழ" என்பதும் ஒன்றாகும். 'நீர்
    சூழ்நாடு' என்பது நாளடைவில் 'சூழநாடு', பிறகு சோழநாடு என மாறியிருக்கலாமோ
    என்பது ஆராயத்தக்கது. உலக்கை - ஒலக்கையாக மாறலாம் என்றால் 'சூழ' - 'சோழ' வாக
    மாறியதில் வியப்பில்லை.
    தமிழ் பாதுகாப்பு அமைப்பு எவ்வளவு முக்கியம் என்று இப்போது தெரிந்திருக்கும்.
    சமஸ்கிருதத்தில் 'திருடன்' என்றும் சொல்லுவதுண்டு. சோழர்க்குறிய பெயர்களில்
    'கிள்ளி வளவன்' பிரபலமானது. ஆராய்ந்தால் "கிள், தோண்டு, வெட்டு" என்னும் பல
    பொருள்களைக் குறித்து "நிலத்தைத் தோண்டி வளம் செய்பவன்" என்பது கிள்ளி வளவன்
    என்று வந்திருக்கலாம்.
    காடே இல்லாத சோழ நாட்டில் சோழர்களின் சின்னம் புலி. புலிக்கொடி, புலி
    இலச்சினையாகியிருக்கிறது. ஏதோ ஒரு சோழரின் கொள்ளுத்தாத்தா ஒரு புலியை கொன்ற
    பெருஞ்செயலை மதித்து அதையே தங்களது சின்னமாக ஏற்றுக் கொண்டிருக்கலாம். பொடா
    சட்டம் இல்லாத அந்த காலத்தில் கூட. சோழர்கள் ஏன் 'புலி'ச் சின்னத்தைத்
    தேர்ந்தெடுத்தார்கள் என்ற குறிப்பு சங்க நூல்களில் இல்லை. அனால்,
    இடைக்காலத்தில் தெலுங்கு நாட்டின் ஒரு பகுதியை ஆண்ட சோழர் சிங்க இலச்சினையை
    பெற்றிருந்தனர்.(1) .
    சோழ நாட்டில் புளிய மரம் நிறைய உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. சோழர்
    காலத்தில் முத்தமிழ் வளர்ச்சியடைந்தது. புலவர்கள் ஐஸ் வைத்து பாடல் இயற்றியதால்
    இயற்றமிழ் வளர்ந்தது; பாணர்கள் பாடியதால் இசைத்தமிழ் வளர்ந்தது, அதற்கு
    மங்கைகள் ஆடியதால் நாடகத்தமிழ் வளர்ந்தது. போர் இல்லாத காலத்தில் அரசர்களுடைய
    பொழுதுபோக்கு இரண்டு, ஒன்று அந்தபுரம் மற்றொன்று புலவர்களின் ஜால்ராவை கேட்டுக்
    கொண்டிருப்பது. இராஜராஜ சோழனுக்கு பரந்த மனசு, நிறைய மனைவியர். ஆனால்
    கல்வெட்டில் 15 பேர் பெயர்தான் இருக்கிறது. தஞ்சாவூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் கற்பாறைகள் மிகவும் குறைவு. ஆகவே, ஆரம்ப
    காலத்தில் செங்கல் மற்றும் சுண்ணாம்புக் கலவையைப் பயன்படுத்தியே கோயில்கள்
    கட்டப்பட்டன. இதை மாற்றியமைத்தவர் கண்டராதித்த சோழரின் (ஆட்சி: கி.பி. 949
    -957) மனைவி செம்பியன் மாதேவியார்! .
    மனைவியின் சொல்லை யார் தான் தட்ட முடியும்? . பிறகே சோழமண்ணில் அற்புதமான
    கற்கோயில்களைக் கட்டத் துவங்கினார்கள். பெரியகோயில் மூலம் அதன் உச்சத்தைத்
    தொட்டான் இராஜராஜசோழன்! வீரசோழ குஞ்சர மல்லன், நித்த விநோத பெருந்தச்சன்
    மற்றும் குணவான் மதுராந்தகன் - இந்த மூவரும்தான் பெரிய கோயிலைத் திட்டமிட்டுக்
    கட்டிய தலைமை ஆர்க்கிடெக்ட் கள்!




    [You must be registered and logged in to see this link.]
    Tamilzhan
    Tamilzhan
    தலைமை நடத்துனர்

    பதிவுகள் : 8045
    இணைந்தது : 02/03/2009

    PostTamilzhan Thu Nov 19, 2009 11:52 pm

    3 பாண்டிய நாடு

    தற்போதைய மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை
    மாவட்டங்களும், புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒரு பகுதி,
    திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி,
    தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் அடங்கிய தென் தமிழகமும்
    பண்டைய பாண்டிய நாடாகும்.

    சிறப்பு

    வையையாறு, பொருநையாறு (தாமிரபரணி) ஆகிய ஆறுகள்
    பாண்டிய நாட்டை வளமுடையதாகச் செய்தன. தொண்டி,
    கொற்கை ஆகியவை துறைமுக நகரங்களாக விளங்கின.
    இலச்சினை

    பாண்டிய நாட்டின் தலைநகரமாக மதுரை விளங்கியது.
    பாண்டியர்களின் இலச்சினையாகவும் கொடியாகவும் மீன் (கயல்)
    சின்னம் திகழ்ந்தது.
  • பாண்டிய மன்னர்கள்

  • சங்கத் தமிழ் நூல்கள் வாயிலாக இருபத்தைந்து பாண்டிய
    மன்னர்களின் பெயர்களை அறிய முடிகிறது.
    (1) அண்டர் மகன் குறுவழுதி
    (2) அறிவுடை நம்பி
    (3) ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன்
    (4) இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்
    (5) ஏனாதி நெடுங்கண்ணன்
    (6) ஒல்லையூர் தந்த பூதபாண்டியன்
    (7) கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
    (8) கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி
    (9) கானப்பேர் எயில் கடந்த உக்கிரப்பெருவழுதி
    (10) கீரஞ்சாத்தன்
    (11) குறுவழுதியார்
    (12) கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி
    (13) சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறன்
    (14) தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
    (15) நம்பி நெடு்ஞ்செழியன்
    (16) நல்வழுதி
    (17) நிலந்தரு திருவின் நெடியோன்
    (18) பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி
    (19) பொற்கைப் பாண்டியன்
    (20) மதிவாணன்
    (21) மாலை மாறன்
    (22) மாறன் வழுதி
    (23) முடத்திருமாறன்
    (24) வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி
    (25) வெற்றி வேற் செழியன்

    வைவஸ்வத மனுவாகச் சொல்லப் படும் பாண்டிய அரசனுக்காக ஈசன் மச்சாவதாரத்தை
    எடுத்தார் எனச் சொல்லப் படுவதுண்டு. சத்தியவிரதன் என்னும் பாண்டியமன்னன்
    ஸ்ரீமந்நாராயணனிடம் பக்தி கொண்டு நீர் தவிர வேறு எதுவும் அருந்தாமல் கடும் தவம்
    இயற்றி வந்தான். அப்போது பாண்டிய நாட்டில் ஓடிய நதி கிருதமால் நதி எனப் பெயரில்
    ஓடியது. அந்த நதியில் இறங்கி மாலை நேரத்துக் கடமைகளைச் செய்து கொண்டிருந்த
    மன்னன் கையில் ஒரு மீன் குஞ்சு கிடைக்க, அதை மீண்டும் நீரிலேயே விட்டான்
    மன்னன்.
    ஸத்ய வ்ரதஸ்ய த்ரமிலாதிபர்த்து:
    நதீஜலே தர்ப்பயதஸ் ததாநீம்:
    கராஞ்சளெள் ஸஞ்ஜ்வலிதா க்ருதி:
    த்வமதுர்ஸ்யதா” கஸ்சந பால மீந:” (நாராயணீயம்)
    மீனோ மன்னனிடம் தான் சின்னக் குஞ்சாக இருப்பதால் மற்றப் பெரிய மீன்கள் தன்னைத்
    தின்றுவிடும் என்பதால் தன்னைக் காக்குமாறு சொல்ல மன்னன் அதை எடுத்துத் தம்
    கமண்டலத்தினுள் வைத்துக் கொள்ள மீன் உள்ளே பெரியதாய் வளர்ந்து விட்டது. மன்னன்
    அதை எடுத்துப் பெரிய பாத்திரத்தில் போட அங்கேயும் இடம் போதவில்லை மீனுக்கு.
    பின்னர் குளம், மடு எனப் போட எல்லாவற்றிலும் வளர்ந்து பெரியதாய் இருந்த மீனை
    ரதத்தில் ஏற்றிக் கொண்டோ, கையாலோ எடுக்க முடியாது எனக்கண்ட மன்னன் தன் யோக
    சக்தியால் அந்த மீனை சமுத்திரத்தில் விட மீன் பேசுகின்றது.
    மன்னன் நீ யார் என அதைக் கேட்க, நீர் சதா துதிக்கும் ஸ்ரீஹரி நான் தான்.
    இன்னும் ஏழு தினங்களில் பிரளயம் ஏற்பட்டு உலகம் அழியப் போகின்றது. அப்போது
    பெரிய படகு ஒன்றை நான் அனுப்புவேன். முக்கிய தானியங்கள், மூலிகைகள் போன்றவற்றை
    எடுத்துக் கொண்டு நீ அப்படகில் ஏறிக் கொள். உன்னுடன் சப்த ரிஷிகளும் ஏறிக்
    கொள்ளுவார்கள். கடலில் அந்தப் படகு பயமின்றி தானே பயணிக்கும். பின்னர் அப்படகு
    ஒரு பெரிய திமிங்கிலம் போன்ற தோற்றத்துடன் இருக்கும் என்னிடம் வந்து சேரும்.
    வாசுகியாகிய பாம்பைக் கயிறாய்க் கொண்டு நீ அப்படகை என் தந்தத்தில் கட்டிவிடு.
    பிரளயம் முடியும் வரையிலும் நீ என்னால் பாதுகாக்கப் படுவாய் அந்தப் படகிலேயே.”
    என்று சொல்கின்றது. ஒரு வாரம் பிரளயத்திற்காக மன்னன் காத்திருக்க வேண்டி அந்தக்
    கடற்கரை மணலிலேயே தர்ப்பைப் புல்லைப் பரப்பி விஷ்ணுவைத் தியானம் செய்து
    கொண்டிருந்தார்.
    “ப்ராப்தே த்வதுக்தேஹேநி வாரி தாரா
    பரிப்லுதே பூமிதலே முநீந்த்ரா:!
    ஸப்தர்சிஹிபி: ஸார்த்தம் அபார வாரிணி
    உத்கூர்ணமாந: ஸரணம் யயெள த்வாம்!!”(நாராயணீயம்)
    குறிப்பிட்ட காலம் வந்ததும் தாரையாக மழை பொழிய ஆரம்பித்தது. ஊழிக்கால மழை
    என்பது என்னவென அறிந்த மன்னன் பரம்பொருள் அனுப்பும் தோணிக்காகக்
    காத்திருந்தான். பூமியானது பிரளயத்தில் சுழன்று சுழன்று மறையும் நேரத்தில்
    பூமாதேவி உம் கட்டளையின் பேரில் ஒரு தோணியாக மாறி சப்தரிஷிகளையும்,
    சத்யவிரதனையும் ஏற்றிக் கொண்டாள். பிரளயத்தின் வேகத்தைத் தாங்க மாட்டாமால் ஆடி,
    அலைக்கழிந்த அந்தத் தோணியில் இருப்பவர்களைக் காக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்ட
    ஸ்ரீமஹாவிஷ்ணு ப்ரளய நீரில் இருந்து ஒரு பெரிய திமிங்கில வடிவ மீனாய்த் தோன்ற,
    அவரின் கட்டளைப் படியே அந்த மீனின் உயர்ந்த கொம்பில் தோணியாகிய பூமியைக்
    கட்டினார்கள். கல்பத்தின் முடிவில் ஸப்தரிஷிகள் முன்போலவே ஸ்தாபிக்கப் பட்டனர்.
    ஸத்யவ்ரதன் அடுத்த மன்வந்தரத்தின் மனுவானான். வைவஸ்வத மனுவானான்.
    ஆரம்பத்தில் வடக்கே சூரிய வம்சத்தினரும் தென்னாட்டில் சந்திர வம்சத்தினருமே
    ஆண்டு வந்ததாய்ச் சொல்கின்றனர். சேரர் முதலிலும் பின்னர் சோழர்களும்
    பாண்டியர்களில் இருந்தே பிரிந்ததாய்ச் சொல்லப் பட்டாலும் சோழர்கள் தங்களை சூரிய
    குலத்தினர் எனச் சொல்லிக்கொள்கின்றனர். இது பற்றிய உறுதியான சான்றுகள்
    தெரியவில்லை. பாண்டியர்கள் இந்த வைவஸ்வத மனுவின் வழி வந்தவர்கள் எனச் சொல்லப்
    பட்டார்கள். அரசனுக்காக மஹாவிஷ்ணுவே மீனாக அவதாரம் எடுத்து வந்து குலத்தையும்
    காப்பாற்றியதாலேயே பாண்டிய நாட்டுச் சின்னமும் மீனாகச் சொல்லப் படுகின்றது
    எனவும் தெரிய வருகின்றது. இந்தப் பாண்டியர்கள் ராமாயண காலத்திலேயும் இருந்ததாய்
    வால்மீகி தன் ராமாயணத்தில் சொல்லி இருக்கின்றார். மஹாபாரத காலத்திலேயும்
    இருந்திருக்கின்றனர். அனைவரும் பேதங்கள் இன்றி சிவனையும், விஷ்ணுவையும் சமமாகவே
    வணங்கி வந்திருக்கின்றனர். இவர்களுக்கு இந்திரனால் ஆசீர்வதிக்கப் பட்ட
    மணிமுடியும், ரத்தினஹாரமும் பரம்பரைச் சொத்தாக இருந்து வந்திருக்கின்றது.
    பாண்டிய அரசர்கள் அனைவரும் இந்திரனால் அளிக்கப் பட்ட ரத்தின ஹாரமும்,
    மணிமுடியுமே கொண்டு தம் முடிசுட்டுவிழாவை நடத்திக் கொள்வார்கள்.




    [You must be registered and logged in to see this link.]
    avatar
    nandhtiha
    தளபதி

    தளபதி
    பதிவுகள் : 1589
    இணைந்தது : 14/06/2009

    Postnandhtiha Fri Nov 20, 2009 6:28 am

    வணக்கம் திரு தமிழன் அவர்களே.
    தகவலுக்கு நன்றி. இந்தத்தகவல் எங்கிருந்து கிடைத்தது என்ற விவரம் இல்லை.

    //பாண்டியர்கள் இந்த வைவஸ்வத மனுவின் வழி வந்தவர்கள் எனச் சொல்லப்
    பட்டார்கள். அரசனுக்காக மஹாவிஷ்ணுவே மீனாக அவதாரம் எடுத்து வந்து குலத்தையும் காப்பாற்றியதாலேயே பாண்டிய நாட்டுச் சின்னமும் மீனாகச் சொல்லப் படுகின்றது//

    பாண்டியர்களுக்கு இணை கயல்கள் சின்னமாக இருந்தன. இறைவன் எடுத்த மச்சாவதாரமே பாண்டியர்களுக்குச் சின்னமாக ஆயிற்றெனில் ஒற்றை மீன் தானே சின்னமாக இருந்திருக்க வேண்டும். இறைவன் மச்ச அவதாரம் எடுத்த போது இறைவி பெண் மீனாக வந்தாள் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. மேலும் இறைவன் எடுத்த மற்ற அவதாரங்களான் கூர்ம வராஹ நரசிம்ம அவதாரங்களில் அந்த அந்த அவதாரங்களுக்கு ஏற்ப இறைவி அவதாரம் எடுத்ததாக எந்தக் குறிப்பும் இல்லையே? தாங்கள் குறிப்பிட்டுள்ள மற்ற தகவல் பற்றி மேலதிக விவாதத்தினைப் பிறகு வைக்கிறேன்
    அன்புடன்
    நந்திதா

    avatar
    nandhtiha
    தளபதி

    தளபதி
    பதிவுகள் : 1589
    இணைந்தது : 14/06/2009

    Postnandhtiha Fri Nov 20, 2009 12:12 pm

    வணக்கம்
    திரு தமிழனைத் தவிர மற்றவர்கள் இந்த விவாதத்தில் கலந்து கொள்ளவே இல்லையே? இந்த விவாதம் தொடரப் படாமலும் தொடப் படாமலும் இருப்பது வருத்தமளிக்கிறது.
    அன்புடன்
    நந்திதா

    Tamilzhan
    Tamilzhan
    தலைமை நடத்துனர்

    பதிவுகள் : 8045
    இணைந்தது : 02/03/2009

    PostTamilzhan Fri Nov 20, 2009 12:24 pm

    நான் விபரங்கள் Tamil Virtual University - Tamil Education on the webதளத்தில் இருந்து பெற்றேன் பிறதளங்களில் படித்த விரங்களும் தொகுத்து தந்தேன்.எனக்கு முடிந்த அளவு செய்து உள்ளோன்.இன்னும் விபரங்கள் விவாதித்தால் கிடைக்கும்.அன்பர்களே முயற்ச்சியுங்கள்...!



    [You must be registered and logged in to see this link.]
    அபிராமிவேலூ
    அபிராமிவேலூ
    வி.ஐ.பி

    வி.ஐ.பி
    பதிவுகள் : 2492
    இணைந்தது : 02/09/2009

    Postஅபிராமிவேலூ Fri Nov 20, 2009 1:09 pm

    அக்கா தங்களின் கேள்விகளுக்கு எனக்கு விடயாம் தெரியவில்லை அதனால் தான் நான் அமைதி காத்தேன்

    Sponsored content

    PostSponsored content



    Page 4 of 4 Previous  1, 2, 3, 4

    View previous topic View next topic Back to top

    மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

    ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

    உறுப்பினராக பதிவு செய்க

    ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


    பதிவு செய்ய

    உள்நுழைக

    ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


    உள்நுழைக