ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையில் தமிழ் மொழி

+6
கா.ந.கல்யாணசுந்தரம்
பாலாஜி
மீனு
Tamilzhan
அபிராமிவேலூ
nandhtiha
10 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

ஈகரையில் தமிழ் மொழி - Page 3 Empty ஈகரையில் தமிழ் மொழி

Post by nandhtiha Fri Nov 13, 2009 5:26 pm

First topic message reminder :

ஈகரை அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
உலகத் தமிழ் மாநாடு புதிதாகச் செம்மொழி மாநாடாக மாற்றி நடத்தப் பட உள்ளது அனைவரும் அறிந்ததே. மொழி கலாசாரத்தின் ஆணி வேர் என்பதனை அனைவரும் அறிவர். மொழி அரசியலாக்கப் படக் கூடாது என்பதில் கருத்து வேறுபாடு எனக்கில்லை, ஆனால் மொழியால் அரசியல் லாபம் தேடுவதும் தவறு என்பதை எடுத்து வைக்கவும் ஆசைப்படுகிறேன். தமிழ் மொழி அழிந்தால் தமிழர்களும் அழிவார்கள். அதே நேரத்தில் உலகத்தில் எங்காவது ஒரு மூலையில் தமிழர்களுக்கு இன்னல் ஏற்படுமானால் எதிர்த்துக் குரல் வராத எந்த மாநாட்டாலும் பயனில்லை என்பதும் உண்மை, அவைகள் எல்லாம் போகட்டும். தெய்வமாகப் போற்றப் படும் தமிழ் மொழி பற்றி ஈகரையில் ஓர் விவாதக் களம் ஆரம்பித்தால் என்ன என்ற வினா என்னை வருத்திக் கொண்டிருக்கிறது, தமிழ் அன்பர்கள் தமிழ் அறிஞர்கள் ஆர்வலர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்தால் மற்றவர்கள் பயனடைவார்கள் என்றே நம்புகிறேன்.
எல்லோருடைய கருத்தையும் அறிய ஆவல் உள்ளவளாக இருக்கிறேன்,
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down


ஈகரையில் தமிழ் மொழி - Page 3 Empty Re: ஈகரையில் தமிழ் மொழி

Post by மீனு Sat Nov 14, 2009 7:23 pm

Kraja29 wrote:தாராளமாக விவாதிக்கலாம் , அப்போது தானே எங்களை மாதிரி உள்ளவர்கள் கொஞ்சமாவது தமிழை பற்றி தெரிந்து கொள்ள முடியும்.

[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஈகரையில் தமிழ் மொழி - Page 3 Empty Re: ஈகரையில் தமிழ் மொழி

Post by ராஜா Sat Nov 14, 2009 7:41 pm

மீனு wrote:
Kraja29 wrote:தாராளமாக விவாதிக்கலாம் , அப்போது தானே எங்களை மாதிரி உள்ளவர்கள் கொஞ்சமாவது தமிழை பற்றி தெரிந்து கொள்ள முடியும்.

[You must be registered and logged in to see this image.]

எவ்வளவு சந்தோசத்தை பாரேன்,

என்னை போல தானே என் தங்கையும் இருப்பாள் , [You must be registered and logged in to see this image.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரையில் தமிழ் மொழி - Page 3 Empty Re: ஈகரையில் தமிழ் மொழி

Post by nandhtiha Sat Nov 14, 2009 8:00 pm

வணக்கம்
மதிப்புக்குரியசிவா அவர்கள் தாய் நாடு சென்றிருக்கும் வேளயில் நாம் ஒரு முடிவு எடுப்பதற்கு முன்னால் நடத்துனர் இணை நடத்துனர், சிறப்புப் பதிவாளர்கள் அனவரும் ஒன்று கூடி வரைமுறை வகுத்து திரு சிவா அவர்களின் அனுமதி பெற்றுத் தொடங்கலாம் என்று நினைக்கிறேன். பெரியவர் திரு கா ந க அவர்களோ அல்லது தகுதி வாய்ந்த யாராவது ஒருவர் தலைமை ஏற்று நடத்தலாம் என்றும் நினைக்கிறேன்
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

ஈகரையில் தமிழ் மொழி - Page 3 Empty Re: ஈகரையில் தமிழ் மொழி

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Sat Nov 14, 2009 8:25 pm

[You must be registered and logged in to see this image.]



தமிழ் பற்றிய ஆய்வுச் சிந்தனைகள், கட்டுரைகள் படைப்பது, அவ்வப்போது தகுந்தவாறு வரலாற்று உண்மைகளை எடுத்துக்கூறுவது சகோதரி நந்திதா அவர்களுக்கு கை வந்த கலை மற்றும் நல்ல திறனும் அவருக்கு உள்ளது. எனவே நந்திதா அவர்கள் முதன் முதலில் விவதமேடையின் தலைமை ஏற்று
பின்வரும் தலைப்புகளில் ஒன்றை தேர்வு செய்து விரைவில் விவாதமேடை அமைக்கட்டும். வாழ்த்துக்கள்!

1. தற்போதைய தமிழ் கவிதைகள் மனிதநேயத்துடன் திகழ்கிறதா?
2. தமிழ் வளர்ச்சி அரசு சார்ந்துதான் இருக்கிறதா?
3. தமிழ் வழி கல்வி புதிய தலைமுறைக்கு பொருந்துமா?

அன்புடன்,
கா.ந.கல்யாணசுந்தரம்.

(இவை என்னுடைய சில கருத்துக்கள், மேலும் உங்களுடைய ஆலோசனைகளையும் தெரிவயுங்கள்).


Last edited by Kaa Na Kalyanasundaram on Sat Nov 14, 2009 8:29 pm; edited 2 times in total (Reason for editing : word correction)
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

ஈகரையில் தமிழ் மொழி - Page 3 Empty Re: ஈகரையில் தமிழ் மொழி

Post by nandhtiha Sat Nov 14, 2009 9:02 pm

வணக்கம்
ஐயா தங்கள் கருத்துக்கு நன்றி. ஆனால் பல்வேறு விதமான சிக்கல்களில் உழ்ன்று கொண்டிருப்பதாலும் என்னுடைய திறைமை மீது எனக்கிருக்கும் ஐயத்தாலும் என்னைத் தவிர்த்து வேறு யாராவது ஏன் தாங்களே தலைமை ஏற்கலாமே?
தங்கள் கருத்துடன்
சினிமாவால் சீரழியும் தமிழ் (தமிழில் தலைப்பு வைத்தால் வரிச் சலுகை என்ன கொடுமை இது?) எங்கு போய்க் கொண்டிருக்கிறது திரை உலகம்?
சமீபத்தில் ஒருபடத்தில் வந்த பாடல்
தில்லயாடி வள்ளியம்மா
தில்லிருந்தா வாடியம்மா
தில்லாலங்கடி ஆடுவோமா
திருட்டுத் தனம் பண்ணுவோமா?

கேட்டதற்கு அந்தக் கவிஞர் சொன்னது சந்தத்துக்குப்பாடினேன் என்பதாகும்
யார் இந்தத் தில்லையாடி வள்ளியம்மை? போற்றிப் புகழவேண்டிய மகளிர் குல மாணிக்கமல்லவா? அவர்களுக்கு இருந்த தில் (மனத்திண்மை) இன்று எவருக்காவது இருக்கிறதா? இவருக்கு வித்தகக் கவிஞர் என்ற ஒரு பட்டம். ஏதோ சில பேர் எதிர்ப்புத் தெரிவித்ததால் அந்த வரி மாற்றப் பட்டது.
இது கொடுமை அல்லவா?
இறைத்தமிழில் மாபெரும் உண்மைகள் மறைந்து கிடக்கின்றன. இன்றையச் சூழ்நிலையில் அமைதியற்று தறிகெட்டுப் போகும் இளைஞர் சமுதாயத்துக்கு நல்ல அறவழியைக் கூறும் அற்புதமான் பாடல்கள் இருக்கின்றன, மேலும் நவீன விஞ்ஞானக் கருத்துக்களும் ஏராளாமக இருக்கின்றன.

உதாரணத்துக்கு இப்பொழுது பேசப்பட்டு வரும் பிக் க்ரன்ச் என்ற மகா பிரளயம் பற்றி விஞ்ஞானம் கூறுவது சூரியன் தன்னுடைய எரிபொருள் தீர்ந்து விசாலிக்க ஆரம்பிக்கும்.அப்பொழுது அசுர வேகத்தில் மற்ற கோள்களைத் தன்பால் ஈர்த்து விடும், என்பதாகும். வைணவ ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வார் இதனைப் பற்றி ஒரு குறிப்புத் தருகிறார்,
அந்த வரிகள் சிறிய திருமடல் என்ற அவருடைய பிர்பந்தத்தில் வருகிறது
அந்த வரிகள் ; தேரார் நிறைகதிரோன் மண்டலத்தைக் கீண்டு புக்கி ஆராவமுதம் அங்கெய்தி அதனின்றும் வாராதொழிவது மற்றுண்டே என்பதாகும்" நிறைகதிரோன் - சூரியன்,
இன்னும் பல அரிய செய்திகள் இருக்கின்றன
அவைகளைப்பற்றியும் ஆய்ந்தால் வருங்கால சந்ததிகள் த்மிழின் பெருமையை உணர முடியும்
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

ஈகரையில் தமிழ் மொழி - Page 3 Empty Re: ஈகரையில் தமிழ் மொழி

Post by udayarr Sat Nov 14, 2009 9:35 pm

தமிழில் கலந்துரையாடல் தமிழைப்பற்றி..ஈகரைக்கு வாழ்த்துகள்!! நான் ஒரு வானொலியில் கடந்த 60 வாரங்களாக 'செந்தமிழ் அமுதம்' என்ற போட்டி நிகழ்வை நடத்தி வருகிறேன். இந்நிகழ்வு தமிழில் கலந்துள்ள பிறமொழிச்சொற்களை பிறித்தறியும் நிகழ்வு. தமிழ் குறித்த கலந்துரையாடல் என்பதால் நானும் இதில் கலந்துகொள்ள விழைகிறேன். கலக்கலாமா??
avatar
udayarr
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 354
இணைந்தது : 07/11/2009

http://tamilpanpalai.blogspot.in

Back to top Go down

ஈகரையில் தமிழ் மொழி - Page 3 Empty Re: ஈகரையில் தமிழ் மொழி

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Sat Nov 14, 2009 9:38 pm

Smt.Nanditha telling:

இறைத்தமிழில் மாபெரும் உண்மைகள் மறைந்து கிடக்கின்றன. இன்றையச் சூழ்நிலையில் அமைதியற்று தறிகெட்டுப் போகும் இளைஞர் சமுதாயத்துக்கு நல்ல அறவழியைக் கூறும் அற்புதமான் பாடல்கள் இருக்கின்றன, மேலும் நவீன விஞ்ஞானக் கருத்துக்களும் ஏராளாமக இருக்கின்றன.

[You must be registered and logged in to see this image.]
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

ஈகரையில் தமிழ் மொழி - Page 3 Empty Re: ஈகரையில் தமிழ் மொழி

Post by nandhtiha Sat Nov 14, 2009 10:01 pm

வணக்கம்
இதிலென்ன தடை? எல்லோரையும் ஏற்கும் ஈகரை
வருக வருக
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

ஈகரையில் தமிழ் மொழி - Page 3 Empty Re: ஈகரையில் தமிழ் மொழி

Post by nandhtiha Thu Nov 19, 2009 7:25 pm

ஈகரை அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
திரு UDAYARR அவர்கள் முதலில் தமது பதிவினை இங்கு இட்டுத் தொடங்கி வைப்பார் என்று காத்திருந்தேன்.
முதன் முதலாக நான் ஒரு விடயத்தை முன்னிறுத்த விழைகின்றேன்.
தமிழகத்தை முப்பெரும் அரசர்கள் ஆண்டிருக்கின்றனர். அவர்களுடைய அரச சின்னங்கள் பற்றிய ஓர் ஐயம் எனக்குள்ளது,
1. பாண்டிய நாடு - மதுரை திருநெல்வேலி உள்ளடக்கிய கரிசல் பூமி. பெரும்பாலும் வானம் பார்த்த நிலம். அவர்களுக்கு இணை கயல்கள் சின்னம் ஏன்?
2.சோழ மன்னர்கள் ஒரு காலைத்தூக்கிய நிலையில் உள்ள புலியினைக் கொண்டிருந்தனர், காடுகளற்ற சோழ நாட்டில் ஏன் புலிச் சின்னம்?
3.சேரலர் (இன்றைய கேரளம்) வானத்தை நோக்கிக்குறி வைக்கப் பட்ட வில்லும் அம்பும். இருப்பதை விட்டுப் பறப்பதைக் குறிபார்ப்பார்களா? ஏன் இச்சின்னம் சேரலர்க்கு.
அன்பர்கள் முன் இவைகளை வைக்கிறேன்.தங்கள் கருத்துக்களைப் பெற விழைகிறேன்
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

ஈகரையில் தமிழ் மொழி - Page 3 Empty Re: ஈகரையில் தமிழ் மொழி

Post by Tamilzhan Thu Nov 19, 2009 7:41 pm

[You must be registered and logged in to see this link.]

ஒட்டக்கூத்தர் குலோத்துங்க சோழ மன்னனின் குருவாகவும் அவைக்களப் புலவராகவும் இருந்தவர். அவர் வாழ்ந்த காலத்திலேயே புகழேந்திப் புலவர், கம்பர், ஒளவையார், திருவள்ளுவர் முதலானோர் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களுக்குள் அடிக்கடி நிகழ்ந்த சந்திப்புக்களும் கவிதைப் போட்டிகளும் மிகவும் ஸ்வாரஸ்யமானவை.

ஒட்டக்கூத்தர் ஒரு நாள் தன் சீடனான குலோத்துங்க சோழ மன்னனுக்குப் பெண் கேட்டுப் பாண்டிய நாட்டுக்குச் சென்றார். அப்போது பாண்டிய மன்னன் அவரை நோக்கி, "எங்கள் பாண்டிய நாட்டுடன் சம்பந்தம் செய்து கொள்வதற்க்கு உங்கள் சோழ நாட்டுக்கு என்ன தகுதி இருக்கிறது?" என்று வினவ, ஒட்டக்கூத்தர் பின்வரும் பாடலைக் கூறினார்.

ஆருக்கு வேம்பு நிகராகுமோ அம்மானே?
ஆதித்தனுக்கு நிகர் அம்புலியோ அம்மானே?
வீரர்க்குள் வீரனொரு மீனவனோ அம்மானே?
வெற்றிப் புலிக் கொடிக்கு மீனமோ அம்மானே?
ஊருக்குறந்தை நிகர் கொற்கையோ அம்மானே?
ஒக்குமோ சோணாட்டைப் பாண்டி நாடம்மானே?


இப்பாடலின் பொருள்:

சோழ மன்னர் அணியும் ஆல மலர் மாலைக்குப் பாண்டிய மன்னர் அணியும் வேப்ப மலர் மாலை ஈடாகுமோ? சோழர்களின் குலச் சின்னமான சூரியனுக்குப் பாண்டியர்களின் குலச் சின்னமான சந்திரன் ஈடாகுமோ? வீரர்களுக்குள் சிறந்த வீரன் புலிக்கொடி தரித்த சோழனேயல்லாது மீன் கொடி தரித்த பாண்டியன் ஆவானோ? வெற்றியின் சின்னமான புலிக் கொடிக்கு மீன் கொடி நிகராகுமோ? ஊர்களில் சிறந்த சோழர்களின் உறந்தை நகருக்குப் பாண்டியர்களின் கொற்கை நகர் ஈடாகுமோ? சோழ நாட்டுக்குப் பாண்டிய நாடு ஈடாகுமோ?.

இதனக் கேட்ட பாண்டிய மன்னனனின் அவைக்களப் புலவரான புகழேந்திப் புலவர் இதனை மறுக்கும் வகையில் பின்வரும் பாடலைக் கூறினார்.

ஒரு முனிவன் நேரியிலோ உறைதெளித்த தம்மானே?
ஒப்பறிய திருவிளையாட் டுறந்தையிலோ அம்மானே?
திரு நெடுமாலவதாரஞ் சிறுபுலியோ அம்மானே?
சிவன் முடியிலேறுவதுஞ் செங்கதிரோ அம்மானே?
கரையெதிரல் காவிரியோ வையையோ அம்மானே?
கடிப்பகைக்குத் தாதகியங்கண்ணியோ அம்மானே?
பரவை பரந்ததுஞ் சோழன் பதந் தனையோ அம்மானே?
பாண்டியனார் பராகிரமம் பகர்வறிதே அம்மானே?


இப்பாடலின் பொருளாவது:

அகத்திய முனிவன் தமிழைப் படைத்தது சோழ நாட்டின் நேரி மலையிலா? அல்லவே. பாண்டிய நாட்டின் பொதிகை மலையிலல்லவா படைத்தான்? சிவபெருமானுடைய திருவிளையாடல்கள் நிகழ்ந்தது சோழ நாட்டின் உறந்தை நகரிலா? அல்லவே. பாண்டிய நாட்டின் மதுரை நகரிலல்லவா நிகழ்ந்தது! திருமால் பாண்டியர்களின் சின்னமான மீனாகத்தான் அவதரித்தாரே தவிர சோழர்களின் சின்னமான புலியாகவா அவதரித்தார்? புலவர்களின் படைப்புக்களைத் தாங்கிய சங்கப் பலகை நீரோட்டத்தை எதிர்த்து வந்து அவற்றை அங்கீகரித்தது பாண்டிய நாட்டின் வைகை ஆற்றிலேதானே நிகழ்ந்தது? சோழ நாட்டின் காவிரி ஆற்றிலா நிகழ்ந்தது? பேய் பிசாசுகளை விரட்டப் பயன்படுவது வேப்பிலை தானே? ஆலிலை அல்லவே. கடல் ஒரு முறை பாண்டியரைப் பணிந்தது. அது சோழரைப் பணிந்ததா? பாண்டியர்களின் வீரம் சொல்வதற்கு அரிது.

இதனைக் கேட்ட ஒட்டக் கூத்தருக்கு பதில் சொல்லத் திணறிவிட்டார். எப்படியோ, இவர்களின் சச்சரவில் நமக்கு நல்ல தமிழ்ப் பாடல்கள் கிடைத்தனவே!

- ஏ.கே.ராஜகோபாலன்


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஈகரையில் தமிழ் மொழி - Page 3 Empty Re: ஈகரையில் தமிழ் மொழி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum